Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 65

"எதுக்கு இப்படி அரையும் குறையுமா நின்னுட்டு இருக்கறப்ப என்னைய உள்ள இழுத்துட்டு வந்த? உன் ரூமுக்குள்ள இருந்தா எப்படி வேணும்னாலும் இருப்பியா?" என்று கேட்ட படி அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி அமர்ந்து கொண்ட கவிப்ரியாவின் அருகில் சென்று பெருமூச்சுடன் அவளை கட்டிலில் அமர்த்திய ஜீவா,

"இப்படி ஓவர்டூ பண்ணாதன்னு உனக்கு அப்பப்போ சொல்லிட்டே இருக்கணுமா? நம்ம ரூம்ல எப்பவும் நான் இப்படித் தான் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுட்டு இருப்பேன். இனிமே நைட் டைம்ஸ்ல இந்த ரூம்ல என் கூடத் தான் இருக்கப்போற, ஸோ என் காஷுவல் வியர்ஸை எல்லாம் நீ ரெஸ்ட்ரிக்ட் பண்ணக் கூடாது. இதுக்கெல்லாம் போய் இப்படித்தான் பே ன்னு கத்தி கண்ணை மூடிக்குவியா?" என்று கேட்டான். கவிப்ரியா தன் கணவனிடம் அவசரமாக,

"நான் உன் கூட இருக்க மாட்டேன் போடா; ரிஷப்ஸன் முடிஞ்சதும் அப்படியே ஊருக்கு கிளம்பிப் போயிடுவேன். நீ தான் என்னை இங்க இருன்னு சொல்லவேயில்லயே..... கிளம்பிப் போன்னு சொல்லிட்டல்ல; நீயும் என்னை திட்டுற! அம்மாவும் என்னை திட்டுறாங்க....... என் கூட பேச மாட்டேங்குறாங்க. என்னை மடியில படுக்க வச்சுக்க மாட்டேங்குறாங்க. நான் உன்னை ரொம்ப டாமினேட் பண்றேனாம். டிஸ்டர்ப் பண்றேனாம்..... ஜீவாக்குட்டிய வருத்தப்பட வச்சன்னா உன்னை கொன்னுடுவேன்னு சொல்றாங்க. இப்படியெல்லாம் அம்மா என்னை திட்டுனதேயில்ல, அப்பாவும் அவங்க பேசறதையெல்லாம் கேட்டுட்டு சும்மா தான் நிக்குறாங்க!" என்று உதடு பிதுக்கி அவனிடம் குறை சொன்ன தன் மனைவியை சிறு புன்னகையுடன் அழைத்த ஜீவா,

"இங்க வா அம்முலு..... நீ இன்னும் மீரு அத்தை மடியில படுத்துக் கொஞ்சிட்டு இருக்க முடியுமா? அதுக்கு தான் மச்சான் இருக்கேனே..... உங்க அண்ணன் நெருப்புக்கோழி மாதிரியே நீ கூட என் பக்கத்துல இருக்கும் போது மட்டும் தரைய பார்த்துட்டே இருக்காதடீ கேப்ஸி; எனக்கு கஷ்டமா இருக்கு. நீயா சொல்லாம நான் உன்னைய ஹக் பண்ணக் கூட மாட்டேன். டேக் யுவர் டைம் டூ ரெகவர் ஃப்ரம் யுவர் ஃபீல்.....!" என்று சொல்லி கையை பிடித்தவனிடம் இருந்து கைகளை உருவிக் கொண்டு,

"டோண்ட் லை நந்து.... அன்னிக்கு என்னை கேக்காம தானே என்னை ஃபோர்ஸ் பண்ணி வந்து....... கி கி கிஸ் பண்ணின! இப்போ நான் சொல்லாம எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்ற? நான் ராகவ் கூட கிளம்புனா வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் கஷ்டப்படுவாங்க. உன் கூடவே இருந்தாலும் நீ ரொம்ப கஷ்டப்படுவன்னு தோணுது. நான் என்ன தான் செய்யறது? நீயே சொல்லு!" என்று கேட்ட தன் மனைவியை தன் மார்பில் கிடத்தி கொண்டு,

"உன்னை நான் கிஸ் பண்ணினது நீ என் பொண்டாட்டிங்கிற விஷயத்தை அப்பப்போ குழப்பத்துலயே இருக்கிற உனக்கு தெளிவா உணர்த்தணும்ங்கிறதுக்காக தான்; பட் அதுக்கு உன்ட்ட ஸாரியும் சொல்லிட்டேனே; அண்ட் இப்போ ஒரு தேங்க்ஸ் அம்முலு...... யூஸ்யுவலாவே சிங்கிளா சுத்திட்டு இருக்கற எங்கள மாதிரி பசங்களுக்கு கல்யாணம்ங்கிற ஒரு பிக் ரெஸ்பான்ஸிபிளிட்டிய கையில குடுத்த உடனே நாங்க கொஞ்சம் கஷ்டப்படுவோம் தான்...... பட் என் கேஸ்ல அத நீயே கண்டுபிடிச்சு சொல்ற பார்த்தியா? அதுக்கு தான் உனக்கு தேங்க் பண்ணேன். யார் என்ன பேசுறாங்கன்னு எல்லாம் நீ ரொம்ப யோசிக்காத. நான் உன்கிட்ட வந்து என்னை விட்டுட்டு போயிடாத அம்முலுன்னு சொல்லாதது தான் கோபம்னா இதோ சொல்லிட்டேன்...... "ப்ளீஸ் டாலி ஸ்டே வித் மீ பார்எவர் அண்ட் எவர்!" உன் டார்லிங் இருக்கார்ல அவரோட பிஸினஸ் லைஃப், அப்புறம் லவ் லைஃப் ரெண்டும் எப்படி இவ்வளவு சக்ஸஸ்புல்லா போயிட்டு இருக்கு தெரியுமா? மிஸஸ் நிர்மலா ஜெய்நந்தன் அவர் கூடவே இருக்கிறதுனால தான்; அவர் ஒரு எஃபிஷியண்டான வொர்க்கர்; ஆனா எஃபெக்டிவான வொர்க்கர் கிடையாது..... கிட்டத்தட்ட அவரை மாதிரியே தான் நானும்! எந்த கமிட்மெண்ட்லயும் தோத்தாலும் ஜெயிச்சாலும் எனக்கு எல்லாம் ஒண்ணு தான், ஆனா என் லைஃப்ல முதல் முதல்ல பண்ணையில எல்லா ப்ராப்ளமும் சரி ஆகி, நான் எடுத்துகிட்ட வேலை எல்லாம் நல்லா நடந்து முடியணும்னு பயந்துட்டு இருக்கேன். ஏன்னா கவிப்ரியாவோட புருஷன் வேலை வெட்டி இல்லாம சுத்திட்டு இருக்கறவன்னு நாளைக்கு உன் பிரெண்ட்ஸ் சர்க்கிள்ல ஒருத்தர் கூட பேசிடக் கூடாது. அப்பாவுக்கு அம்மாவ அவரோட 25 ஆவது வயசுல இருந்து தான் தெரியும்..... அவரே அம்மா மேல இவ்வளவு லவ் அண்ட் அபெக்ஷன் வச்சிருக்காருன்னா எனக்கு உன்னை குழந்தையில இருந்து தெரியும். அப்போ நான் உன் மேல எவ்வளவு லவ் வைக்கறது அம்முலு? என்ன தயக்கம் இருந்தாலும், பயம், வருத்தம் எல்லாம் வந்தாலும் என் பக்கத்துல இருந்து சட்டையை பிடிச்சு என்னை ரெண்டு அறை வச்சு கூட சரி பண்ணிக்கோ மூக்கி..... அத விட்டுட்டு உன் கஷ்டத்தை தனியா எங்கயோ ஓடிப் போய் தீர்த்துக்குறேன்னு கிளம்பாத; ஏன்னா ஜீவா இல்லாம கவியும் கவி இல்லாம ஜீவாவும் அவங்க இயல்புல இருக்கவே முடியாது. நம்ம லவ் லைஃப் பத்தியெல்லாம் ஒண்ணும் கவலையே படாம ரிலாக்ஸ்டா இரு டாலி..... ஏன்னா நான் ஒரு ட்ரை வுட்; நீ ஒரு சார்மிங் ஃபயர்; நம்ம ரெண்டு பேரும் பத்திக்க உன் சைடுல இருந்து ஒரு சின்ன ஸ்பார்க் தான் வேணும். ஐ வில் பீ வெயிட்டிங் ஃபார் தி ஸ்பார்க்! அப்புறம் இன்னோரு முக்கியமான விஷயம் அம்முலு நீ உன் "அவள் பேஷன்ஸை" இங்க கொண்டு வந்து செட் பண்ண இன்னும் மூணு மாசம் டைம் தர்றியா? ஏன்னா உனக்கான ட்ரீமை நான் க்ரியேட் பண்ணி தரணும்னு எனக்கு ஆசையா இருக்கு. சரி எதுக்கோ வரிஞ்சு கட்டிட்டு ரூமுக்குள்ள வந்தியே..... எதுக்கு வந்த?" என்று கேட்ட தன் கணவனின் அணைப்பில் இருந்து விலகாத கவிப்ரியா,

"உன் கூட சண்டை போடுறதுக்கு தான் வந்தேன்டா மலைமாடு, நீ பேச ஆரம்பிச்சாலே எனக்கு எல்லாம் மறந்து போயிடுது. மூணு மாசம் சும்மா இருக்கறதெல்லாம் கஷ்டம் நந்து, அந்த டைம்ல எனக்கு இங்க வேலை ஏதாவது குடுக்க சொல்லி டார்லிங்ட்ட கேக்குறேன். காஃபி குடிக்கிறியா? நானே போய் போட்டு கொண்டு வர்றேன்!" என்று கேட்ட கவிப்ரியாவிடம் குறுஞ்சிரிப்புடன்,

"உங்க டார்லிங்ட்ட வேலை கேக்குறதெல்லாம் ஓகே தான் சின்ன மேடம்! ஆனா நீங்க எல்லாம் வொர்க்கஹாலிக் டைப் ஆச்சுங்களே; விவேக் சித்தப்பான்னு உன்னை மாதிரியே ஒரு மான்ஸ்டர் இருக்காங்க, அவங்க கிட்ட கொஞ்சம் உஷாரா இரு. ரொம்ப நல்லா வேலை செஞ்சு உன் புருஷனையும் ரொம்ப வேலை செய்யற மாதிரி வைக்காத. சரி காஃபி குடிக்கிறியான்னு சீரியஸாவே கேட்டியா? அப்போ இனிமே
டெய்லி காலையில ரெப்ரெஷ்மெண்ட் ட்ரிங்க் பொண்டாட்டி கையால கிடைக்கும்னு எதிர்பார்க்கலாமா என்ன?" என்று தன் கண்களில் தெரிந்த மொத்த ஆவலையும் தன் மனைவி கண்டு கொள்ளாமல் மறைக்க முயன்று கொண்டிருந்த ஜீவானந்தனை தன்னருகில் இழுத்து மூச்சு திணறும் வகையில் அவனை அணைத்து அவன் கன்னத்தில் அழுத்தமான ஒரு முத்தம் பதித்த கவிப்ரியா,

"ம்ம்ம் கண்டிப்பா! உன்னை இங்க ஜாலியா இருக்க விட்டுட்டு நான் ஊருக்கு போயிட்டன்னா அப்புறம் நீ விட்டதுடா இம்சைன்னு நினைச்சு என்னைய மறந்து போய்ட்டா என்ன பண்றது? ஆனா நிஜமாவே உன்னை இன்னும் கொஞ்ச நாளைக்கு வெயிட் பண்ண வக்கிறதுக்கு எனக்கு கில்டியா...... ம்ம்ம் ம்ஹூம்!" என்று பேசிக் கொண்டிருந்தவள் மேலும் பேச முடியாமல் திணறிய படி அவள்
வாயை கைகளால் இறுக்கமாக பொத்திய படி பக்கவாட்டில் அமர்ந்து கொண்டு இருந்தான் ஜீவானந்தன். இரண்டு நிமிடங்கள் கழித்து மெதுவாக அவள் வாயில் இருந்து கைகளை தளர்த்தியவனை இரண்டு அடிகள் வைத்து விட்டு கவிப்ரியா,

"ஏன்டா இப்படி அரெகென்டா பிஹேவ் பண்ற..... ஹல்க்!" என்று தன் கணவனை  திட்டினாள்.

"உன் கில்ட்டி, பால்டீ, ப்ளாக் டீ இப்படி எந்த புடலங்காயும் எனக்கு வேண்டாம்னு தானடீ அப்போலேர்ந்து சொல்லிட்டு இருக்கேன்..... இன்னும் ஒருதடவை இப்படி என்னை டென்ஷன் ஆக்குற மாதிரி பேசுன...... ஏன்டா இந்த ஹல்க் கிட்ட வச்சுக்கிட்டோம்னு ரொம்ப ஃபீல் பண்ணுவ. நீ என் கூட இருக்கேன்னு சொன்னதுக்கு உனக்கு ஒரு கிப்ட் குடுக்கட்டுமா கேப்ஸி?" என்று கேட்ட தன் கணவனிடம் மறுப்பாக தலையசைத்தாள் கவிப்ரியா. நாளெல்லாம் அவன் அவளுடன் பேசினாலும் வெகுவான சில நேரங்களில் அவனது மயக்கம் நிறைந்த குரல் அவளை பேச்சில்லாமல் கட்டிப் போடத் தான் செய்தது.

"கிப்ட் தர்றேன்னு சொன்னா அத வேண்டாம்னு சொல்லக் கூடாது. அப்புறம் மச்சான் தரையில உருண்டு அழுவேன், ஓகே சொல்லு அம்முலு!" என்று அவள் காதருகில் குழைந்த அவன் குரலைக் கேட்டு காதுகளைப் பொத்திக் கொண்டாள் கவிப்ரியா.

"நான் பக்கத்துல வந்தா உன் ப்ளட் வெஸல்ஸ் எல்லாம் புல் டைம் வொர்க் பண்ண ஆரம்பிச்சுடுமாடீ? இப்போ நிஜமாவே உன் மூக்கு ரெட் கேப்ஸிகம் மாதிரி தான் இருக்கு. கன்னம் ரெட் ஆப்பிள் மாதிரி இருக்கு. அப்புறம் லிப்ஸ் செர்ரி ஃப்ரூட் மாதிரி இருக்கு, பாவம் இதையெல்லாம் விட்டுடலாம்..... நம்ம பேவரைட் ப்ளேஸ் ஒண்ணு இருக்கே, அங்க ஒரு கிஸ் பண்ணிட்டு போயிடுறேன். நல்லா நியாபகம் வச்சுக்க, கிப்ட் குடுக்கட்டுமான்னு கேட்டதுக்கு நீ தான் அப்ஜெக்ட் பண்ணாம இருந்த. அதுனால தான் இதுவும்......" என்று சொல்லி மூடியிருந்த அவள் கண்களில் தன் உதட்டை ஒற்றி எடுத்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு தலையை உதறிக் கொண்டு அறையில் இருந்து விரைவாக வெளியே சென்று விட்டான் ஜீவானந்தன்.

தன் கணவனின் முத்தம் தந்த கிறக்கத்தில் இருந்து வெளியே வந்த கவிப்ரியா கட்டிலில் இருந்து உடனடியாக எழ விரும்பாமல் சற்று நேரம் உருண்டு கொண்டு இருந்தாள். அவளது மனநிலையின் விசித்திரத்தை அவளாலேயே முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படியும் அவனருகில் இருந்தால் அவன் சொல்லும் கருத்தை மட்டுமே தன்னை ஏற்றுக் கொள்ள செய்து விடுகிறான் என்று எண்ணி சிரித்துக் கொண்டாள். ஜீவானந்தனை பிரிவதெல்லாம் அவ்வளவு எளிதில் நடக்க கூடிய காரியமாக அவளுக்கு தெரியவில்லை. பிரிந்து போயே தீர வேண்டும் என்று ராகவிடம் அந்த குதி குதித்து விட்டு இப்போது எஸ்டேட்டில் எந்த வேலையை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வது என்று நினைத்துக் கொண்டு இருப்பதை பற்றி நினைத்து மேலும் சிரித்த படியே ஜீவாவின் அறைக்கதவை சாற்றி விட்டு வந்து கொண்டு இருந்தவளை வழிமறித்தான் இசக்கி ராசு.

"எத்தா கவிப்ரியா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்தா!" என்றவனிடம் சிறு புருவத் தூக்கலுடன் "சொல்லுங்க மிஸ்டர் ராசு. உட்கார்ந்து பேசுவோமா?" என்று கேட்ட கவியிடம்,

"கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்தா ஆனா நா பேசப்போறது சௌரியமா உக்காந்து அம்புட்டு நேரமெல்லாம் பேச வேண்டிய விஷயமெல்லாம் இல்ல...... ஜீவா மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையன். எங்க ஊர்பக்கமெல்லாம் நான் தூக்குன மாதிரி பொண்ண தூக்கியிருந்தா ஒண்ணு அருவா வெட்டு நடந்திருக்கும், இல்ல பஞ்சாயத்து, போலீஸ்ன்னு பெரிய உரண்டையாயிருக்கும், ஆனா இனியாவ தூக்குனப்ப என்னதேன் என் மேல கோபம் இருந்தாலும் எனக்காக எம்பக்கம் நின்ன ஒரே ஆள் ஜீவா மாப்பிள்ளை தான்...... அவன் வொறவுகள காப்பாத்திக்கணும்னு நெனக்கிறவன்தா, உங்களுக்குள்ளர ஏதோ சரியில்லன்னு எனக்கும் இனியா புள்ளக்கும் தோணுச்சு. மத்தவுகளெல்லாம் உன் மேல விசனப்படுறாங்கன்னு சொல்லிட்டு நீ ஜீவா மாப்பிள்ளைட்ட உன் கோபத்தை காட்டாதத்தா....... இதே நீ என் கூடப் பொறந்த பொறப்பா இருந்தா இவ்வளவு நல்ல மாப்பிளை கிட்ட ஏழரைய கூட்டுறதுக்கு உன் சில்லு மூக்கை பேத்திருப்பேன்! ஆனா நீங்க நமக்கு நம்ப மாப்பிள்ளையோட பொஞ்சாதி தங்கச்சி தானே......?" என்று கேட்ட ராசுவின் சட்டையை கொத்தாக பற்றியிருந்தாள் கவிப்ரியா.

"நானும் இனியா ஹஸ்பெண்ட் ஆச்சேன்னு பொறுமையா போனா என்னடா ஓவரா பேசிட்டு இருக்க...... நீ எவனா இருந்தாலும் எனக்கு கவலையில்லை, நான் மிஸஸ். ஜீவானந்தன் தெரியும்ல? அண்ணன்னு சொல்லிட்டு இனிமே எவனாவது என் மேல கையை வச்சு பாருங்க, நந்து கிட்ட சொல்லி உங்கள கொல்ல சொல்றேன். உங்கள விட ஹைட் கம்மியா இருந்தா ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவீங்களாடா? எங்க லைஃப் அ நாங்க பார்த்துக்குவோம். மரியாதையா டார்லிங் தர்ற கிப்ட்டை எல்லாம் வாங்கி அடுக்கி வச்சுகிட்டு உன் ஊரப் பார்த்து ஓடிப் போயிடு. மூக்கை உடைப்பானாம்ல, நீ உடைக்குறதுக்கு தான் நான் மூக்க வளர்த்து வச்சிருக்கேன் பாரு, நீயும் உன் ஸ்லாங்கும்...... ப்ளடி இரிடேட்டிங் மேன்!" என்று பலவிதமாக அவனுக்கு அர்ச்சனை நடத்தி கொண்டு இருந்தவளை ஓடி வந்து தடுத்தான் ஜீவானந்தன்.

"அம்முலு என்னம்மா இது? என்ன நடக்குது இங்க? பிக் பாய் சட்டையை விடு, இனியா பார்த்தா தப்பா எடுத்துக்க போறாம்மா......!" என்று கெஞ்சிய படி ராசுவின் சட்டையை அவள் கையில் இருந்து விடுவித்து கொண்டு இருந்தவனிடம் கோபம் குறையாத குரலில்,

"நந்து இந்த பையன அவன் லிமிட்ல நிக்க சொல்லு. மறுபடி என் கிட்ட அட்வைஸ்ங்குற பேர்ல ஏதாவது உளறுனான்..... செம அடி வாங்குவான் சொல்லிட்டேன்!" என்று சொல்லி விட்டு ராசுவை முறைப்பான ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள் கவிப்ரியா.

அவள் சென்ற பிறகு ஜீவா இசக்கி ராசுவிடம், "ஏன்டா பிக்பாய் தேவையில்லாம அவ கிட்ட போயிட்டு இப்படி திட்டு வாங்கிட்டு...... இப்போ தான் ஒரு பிரச்சனைய முடிச்சிட்டு கொஞ்சம் நார்மல் மோடுக்கு வந்தா, மறுபடியும் அவ உன் மேல விழுந்து புடுங்குற மாதிரி என்னத்தடா பேசி வச்ச?" என்று கேட்ட ஜீவாவிடம் சிரிப்புடன்,

"எலேய் நானும் உன் தங்கச்சியும் பயந்த மாதிரி ஒண்ணுமில்லலே..... கவிப்புள்ள சும்மா ஒரு வார்த்தையில கூட உன்னைய விட்டு குடுக்காம சேர்த்து தான் பேசுறாவ, என்னைய ஓங்கி ரெண்டு அறை வச்சிருந்தாலும் வாங்கிட்டு பேசாமதேன் நின்னிருப்பேன். இந்தப் புள்ளயும் நீயும் சந்தோஷமா இருந்தீகன்னா போதும். அதுவும் என் தங்கச்சி மாதிரி தான, நீ எதுவும் தப்பா நினைச்சுக்காதலே 
யப்பா இப்பத்தேன் நிம்மதியா இருக்கு!" என்றவனிடம் ஜீவா ஒரு பொறுமையற்ற பெருமூச்சுடன்,

"ஆளாளுக்கு அறை வாங்கியும் குடுத்தும் டெஸ்ட் பண்ணி விளையாட என் லைஃப் தானாடா கிடைச்சது? நீ எங்கூட வா. பண்ணைய டெவலப் பண்றதுல உன்னோட சஜஷன்ஸ் கொஞ்சம் வேணும்!" என்று சொல்லி விட்டு இசக்கி ராசுவை தன்னுடன் அழைத்து சென்றான் ஜீவானந்தன்.

ஹாலில் இருவரும் அமர்ந்து இருக்க இசக்கிராசுவிடம் ஜீவா பண்ணையின் தற்போதைய நிலைமையை விவரித்து விட்டு அதை லாபகரமாக மீட்டெடுக்க ஏதாவது உதவ முடியுமா என்று கேட்டான்.

"எலேய் நீ செய்ய நினைக்கிறது ஒண்ணும் கருப்பு கோட்ட போட்டுகிட்டு கைய ஆட்டிகிட்டு இருக்கிற வேலை மாதிரி சூளுவானதில்ல..... என்ன வந்தாலும் இறங்கி நின்னு வேலை பாப்பியாலே மக்கா?" என்று கேட்ட தன் தங்கை கணவனிடம்,

"ஐ'ம் டேம் ஷ்யூர் டா பிக்பாய்..... பண்ணைய ப்ராபிட்டபிளா ரன் பண்ற வரைக்கும் நான் பேக் அடிக்க மாட்டேன்.  ஐ ப்ராமிஸ் யூ! பட் மொத்த கவுண்ட்ல ஒன் போர்த் தான் மில்க் ப்ரொடெக்ஷன் தருதுன்னு சித்தப்பா சொல்றாங்க. இத சரி பண்ண என்னடா செய்றது?" என்று சற்று கவலையுடன் கேட்ட ஜீவானந்தனிடம் புன்னகையுடன்,

"அடிக் கோட்டிக்காரப் பயபுள்ள..... உன் பண்ணை பால் குடுக்காம இருக்கிற மாடுகளால தான்டா எங்கையோ போகப் போகுது. உன் பண்ணைய கொஞ்சம் மாத்தி அமைச்சு பல்லுயிர் பண்ணையா ஆக்கிக்க. விவசாயத்தை பொறுத்த மட்டில ஒரே ஒரு டைமண்ஷன்ல கவனம் செலுத்தாம மல்ட்டி டைமண்ஷனலா பார்த்தா நம்ம லாபமும் அதிகமாகும். முதல் வேலையா காய்கறி, பழக் கழிவுகளை ருசி, உன்னதம்ல இருந்தும், உங்கிட்ட வேலை பார்க்குற ஆளுங்க எல்லோரோட வீட்ல இருந்தும் தனித் தனியா கலெக்ட் பண்ணிக்க. நம்ம கிட்ட இருக்கிற கறவை முடிஞ்ச பசுக்கள தனியா பிரிச்சு அதுங்களுக்கு ஃபீடிங் மட்டும் குடுத்துட்டு இரு. சராசரியா ஒரு 50 கிலோ காய்கனி கழிவுகள்ல கால் பங்கு 8 மணி நேரத்துல உனக்கு சாணமா கிடைச்சிடும். அதை ஒரு பயோ டீ க்ரேடபிள் காஸ் ப்ளாண்ட் மூலமா 99% மீத்தேன் இல்லாத சாணமா மாத்தி மண்புழு குழியில போட்டன்னா நம்ம கையில ப்ளாக் கோல்டு ரெடி. ஒரு கிலோ ப்ளாக் கோல்டை இருபது ரூபாய்க்கு விக்கலாம். மாடு சாப்பிட முடியாத சின்ன பாகம் கழிவுகளை கம்போஸ்ட் பெட்ல போட்டு வச்சன்னா அதுல இருந்து வர்ற சின்ன சின்ன மேகட்ஸை கோழி சாப்பிடும். கொஞ்சம் பரப்பளவுல மீன் வளர்ப்புக்கு ஒதுக்குனோம்னா மீனையும் காசாக்கலாம், மீன் கழிவுகளை வாத்துக்களுக்கு குடுத்தா அதோட முட்டை விகிதம் ரெண்டு மடங்கா இருக்கும். இதுல எதெல்லாம் உன் பண்ணையில சாத்தியம்னு பார்த்து கரெக்டா செஞ்சன்னா மூணு மாசத்துக்குள்ள பண்ணையோட லாபம் ரெண்டு மூணு மடங்கு அதிகமாகியிருக்கும். பத்து கிராம பஞ்சாயத்துக்கு ஒரு டிஆர்டிஏ இருக்கு. உனக்கு என்ன அஸிஸ்டென்ஸ் வேணும்னாலும் நீ அவங்க கிட்ட கூட கேட்டுக்கலாம்லே!" என்று சொல்லி விட்டு ஜீவாவின் முகத்தை பார்த்தான்  இசக்கி ராசு.

இசக்கி ராசுவை பிரமிப்பு கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஜீவானந்தன், "டேய் பிக்பாய், என்னடா ஒரு ஐடியா கேட்டா ஐடியா மூட்டைய அவுத்து கொட்டுற..... எல்லா பாஸிபிளிட்டீஸையும் எக்ஸிக்யூட் பண்ணி பார்த்துட வேண்டியது தான்...... உன் ப்ளான் மட்டும் சக்ஸஸ் ஆகிடுச்சுன்னா என் மருமகப் புள்ளைக்கு டபுள் ட்ரீட் வைக்கிறேன். பைடா!" என்று சொல்லி இசக்கிராசுவின் கன்னத்தில் முத்தமிட்டு சென்ற ஜீவானந்தனை பார்த்தவாறு,

"கெரகம் பிடிச்சவனே ஐடியாவ என் கிட்ட இருந்து வாங்கிட்டு ட்ரீட் எம்புள்ளைக்கு வப்பியா? சக்தி முத்து மாதிரி இதுவும் சந்தோஷத்துல மொகரைய நக்கிட்டு போகுது பாரு பக்கி!" என்று சொல்லி தன் கன்னத்தை துடைத்த படி தன் மனைவியை தேடி சென்றான் இசக்கி ராசு.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro