Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 63

"என்ன பேசுறோம்னு புரிஞ்சு தான் பேசிட்டு இருக்கியா நீ? நம்ம ரெண்டு பேரோட கல்யாணத்தை வீட்ல எல்லாரையும் அக்செப்ட் பண்ண வச்சதுக்கே அவ்வளவு போராட வேண்டியதா போச்சு. இப்போ தான் பிரச்சனை எல்லாம் நார்மலாகி நிம்மதியா உன் ஹெல்ப்போட அடுத்த வேலைய பார்ப்போம்னு நினைச்சா இப்போ பிடிச்சு "ஐ'ம் லீவிங்.....!" ன்னு சொன்னா என்ன அர்த்தம்? நீ என் பொண்டாட்டி, அதாவது நியாபகத்துல  இருக்கா? இல்ல நீ என்ன சொன்னாலும் தலையாட்டி கேக்குறதுக்கு நான் கிறுக்கன்னு நினைச்சியா..... நீ இங்கயே என் பக்கத்துல தான் கவி இருக்கணும்! உன் பைத்தியகாரத் தனமான ஐடியாலஜி, உன் கில்ட்டினெஸ் எல்லாத்தையும் மொத்தமா தூக்கி போடு. நான் இதுவரைக்கும் உனக்கு செஞ்ச பேஃவர் எல்லாம் எனக்காகவும் சேர்த்து செஞ்சிக்கிட்டது தான்னு எத்தன தடவ உன் மூளைக்கு புரிய வைக்கிறது? நீ சந்தோஷமா இருந்தா தான் நானும் நிம்மதியா இருக்க முடியும்! தேவையில்லாம பிரச்சனைய க்ரியேட் பண்ணி நம்ம ரெண்டு பேரையும் எல்லாரும் தப்பா நினைக்குற ஒரு சான்சை குடுத்துடாதடா. இப்பவே வீட்ல பெரியவங்க எல்லாம் கல்யாணம்னா உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டா போயிடுச்சான்னு கேட்டுட்டு இருக்காங்க. நீ என்னை விட்டுட்டு போகப்போறேன்னு சொல்றதெல்லாம் கேட்டா ரொம்ப வருத்தப்படுவாங்க. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறப்போ கூட உன் நந்து வேலை வெட்டி இல்லாதவன் தானே? ஆனா இனிமேல் இப்படி பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்க மாட்டேன் அம்முலு.... விவேக் சித்தப்பா பர்டனை குறைக்குறதுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்றேன். அரவிந்த்ட்ட கேட்டு ஏதாவது கேஸ்ல கூட அவனுக்கு அஸிஸ்ட் பண்றேன். நாளைக்கு நீயோ நம்ம குழந்தையோ அப்பா பணத்தையோ, அஜு மாமா பணத்தையோ கையால தொட்டு செலவு பண்ற நிலைமை வராத மாதிரி பார்த்துக்குறேன். ஆனா நீயில்லாம இதெல்லாம் யோசிக்க கூட முடியாது கேப்ஸி, என்னை புரிஞ்சுக்க முயற்சியாவது பண்ணு ப்ளீஸ்.......!" என்று கோபத்துடன் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்த ஜீவானந்தனிடம் முகத்தை பொத்திக் கொண்டு,

"ஜீவா என்னால முடியலடா, நீ ரொம்ப நல்ல பையன், நல்ல புருஷன்! பட் ஒரு பொண்டாட்டியா நான் உன்னை மாதிரி ஒரு நல்ல பையன டிஸர்வ் பண்ணல, நீ எவ்வளவு ஈஸியா உன் கில்ட்டினெஸை தூக்கி போடுன்னு சொல்லிட்ட! அது உன் முகத்தை பார்க்க விடாம என்னை கொல்லுதே..... நான் என்ன செய்யட்டும்? இப்படி கூட இருந்துட்டு கொஞ்சம் கொஞ்சமா உன்னை கொல்றதுக்கு பதிலா கொஞ்ச நாள் உங்கிட்ட இருந்து தள்ளியிருக்கலாம்னு நினைச்சு தான் ராகவ் கூட சிங்கப்பூர் போயிடலாம்னு முடிவெடுத்தேன். ராகவ் சொன்ன மாதிரி நான் உன்ன யூஸ் பண்ணிக்கத் தான் பாக்குறேனா ஜீவா? உன் மேல நான் வச்சிருக்கிற லவ் உன் லவ்வை மாதிரி ப்யூரானதான்னு எனக்கு தெரியல. உன்னை முழுசா நெருங்கி வரவும் முடியல. முழுசா உன்னை விட்டு விலகிப் போயிட முடியுமான்னும் தெரியல. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி சித்ரவதை செய்றதுக்கு பதிலா நான் செத்துப்........" என்று தன் மனதை அவனிடம் புரிய வைத்து விடுவோம் என்று அவசரமாக பேசிக் கொண்டிருந்தவளை

"போதும் நிப்பாட்டு கவிப்ரியா.....!" என்ற ஜீவாவின் கர்ஜனை வாயை மூடிக் கொள்ள செய்தது. இரண்டு நிமிடங்கள் அமைதியாக சென்ற பின் கவிப்ரியா அவனிடம்,

"கோ....கோபமா ஜீவா?" என்று கேட்க தன் மனைவியிடம் விரக்தியான ஒரு புன்னகையை தந்தவன்,

"கோபமா உங்க மாமாவோட ஏஞ்சல் உன் மேலயா..... உன் கிட்ட  கோபப்படுறதுக்கெல்லாம் எனக்கு  சான்சாவது குடுப்பாங்களாம்மா? ச்ச்சே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. ஆனா நீ இப்படி கண்டபடி உளறிட்டு இருக்கறதுக்கெல்லாம் முழுசா உன்னையும் தப்பு சொல்லக் கூடாது. உன்னோட பொம்மைடா, உன்னோட பாப்பாடா நீ தான் இவள பத்திரமா பார்த்துக்கணும்னு சொல்லி  என்னையும் வளர்த்து அவங்களும் உனக்கு செல்லம் குடுத்து தடவி தடவி வளர்த்ததுக்கான பலன் இன்னிக்கு என் தலையில வந்து விடிஞ்சுருக்கு. நீ செய்றது தப்புன்னு யாராவது சொன்னா தானே அத நீ திருத்திக்க முயற்சி பண்ணுவ, உனக்கு தான் அதுக்கான ஆப்ஷனே யாரும்  குடுக்கவேயில்லையே...... என்னோட ஃபேட் எப்படின்னா நான் எப்போ எல்லாம் சந்தோஷமா இருக்கேனோ அப்போ எல்லாம் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கும். ஆனா இந்த தடவை நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு, பேமிலி கூட செட்டிலும் ஆகிட்டோம், இனிமே என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு நினைச்சு மிதந்து போய் நாளைக்கு ரிஷப்ஸன், நம்ம ப்ரைவேட் மொமண்ட்ஸ், அதுக்கப்புறம் ஒரு கலர்புல்லான லைஃப்னு யோசிச்சுட்டே கொஞ்சம் திமிரா தான் இருந்துட்டேன்.  இப்போ தெரிஞ்சது பார்த்தியா.... உன்னோட கனவெல்லாம் வெறும் கனவா தான்டா இருக்கப்போகுதுன்னு! உன்னால என்னோட தொடுதலை இப்போ அக்செப்ட் பண்ணிக்க முடியல, கல்யாணம் ஆகிடுச்சு, ஆனா மேரேஜ் லைஃப் ஐ ஸ்டார்ட் பண்றதுக்கு இன்னும் நீ ரெடியாகலைங்கிற ஒரு காரணத்துக்காக நீ என்னைக் கூட கன்சல்ட் பண்ணாம தனியா சிங்கப்பூர் போறேன்னு இவ்வளவு பெரிய முடிவை எடுத்தது சரியான முடிவு தான்னு சொன்னன்னா ஐ'ம் ஸாரி நீ பைத்தியகாரத்தனம் பண்றன்னு தான் நான் சொல்லுவேன். ஆனா நீ நினைக்கிற அளவுக்கு என்னோட தொடுதல் உனக்கு பிடிக்காம இருக்கா? உன்னோட கில்டினெஸை எல்லாம் உனக்கு நியாபகப் படுத்துதான்னு எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும்!" என்று சொல்லி விட்டு அவள் எதிரில் வந்து நின்றான் ஜீவானந்தன்.

"ப்ளீஸ் ஜீவா.... பக்கத்துல வராத! நான் உனக்கு நிறைய தப்பு பண்ணிட்டேன். உன் லைஃப வேற காம்ப்ளிகேட் பண்ணி வச்சுட்டேன். நான் உன்கூட இல்லாம இருந்தா நீ ரொம்ப ஹாப்பியா இருப்ப, நிறைய அச்சீவ் பண்ணுவ;அதெல்லாம் நடக்கணும்னா நான் இப்போ.......ம்ம்ம் விடு நந்து ம்ஹூம் விடு ப்ளீஸ்!" என்று திமிறி அவன் முரட்டுப் பிடியிலிருந்து விடுபட முயற்சி செய்து கொண்டு இருந்தவளை கட்டிப் பிடித்த படி,

"அம்முலு ஐ'ம் ரியலி ஸாரி.... உன்னை இப்படி ஃபோர்ஸ் பண்ற நிலைமை வரும்னு நான் நினைச்சு பார்த்ததேயில்ல. ஆனா இதுக்கப்புறம் எப்போன்னு எனக்கு தெரியல. இந்த நிமிஷம் நான் உன்னோட ஹஸ்பெண்ட், நீ என்னோட வொய்ப்! நமக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப்பை நீ மறந்துடாம இருக்க இந்த முத்தமாவது ஒரு சாட்சியா இருக்கட்டும். ஒன்ஸ் அகெய்ன் ஸாரி அம்முலு!" என்று சொல்லி விட்டு தன் இருகைகளால் ஏந்தியிருந்த அவள் முகத்தை சற்று வளைத்து அவள் இதழ்களில் தன் இதழ்களை பொருத்தினான் ஜீவானந்தன்.

இந்தமுறை கவிப்ரியாவின் மறுப்பை எல்லாம் அவன் சிறிதளவும் மதிக்கவில்லை. இவ்வளவு வருடங்கள் சேர்த்து வைத்திருந்த அவள் மீதான அன்பையும், காதலையும் இந்த ஒரு முத்தத்தில் அவளுக்கு உணர்த்தி விட வேண்டும் என்று முயன்று கொண்டிருந்தான். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீருடன் விலகியவன்,

"என்னை இப்படி மனசு வலிக்குற மாதிரி அடிச்சா உனக்கு கஷ்டமா இல்லையா அம்முலு? நான் உன் கூட இல்லாம நீ மட்டும் தனியா வாழுற உனக்கு ரொம்ப கொடுமையான தண்டனையா தான் இருக்கப் போகுதுடீ, உனக்கு அது இப்போ புரியல! நீ தனியா வாழும் போது தான் புரியும். எப்போ நீ என் கிட்ட திரும்பி வந்தாலும் உனக்கான காதல் அளவில்லாம கிடைக்கும். ஆனா இந்த தடவை நான் உன் கிட்ட வந்து கெஞ்சிட்டு நிக்க மாட்டேன். ஏன்னா தப்பு செஞ்சுட்டு என்னை தனியா விட்டுட்டு போகப் போறது நீ தான்..... நாளைக்கு பங்ஷன் முடிஞ்சவுடனே அப்படியே கிளம்பிடு. டேக் கேர். உன்னை அனுப்பி வச்சுட்டு இங்க நான்  தனியா உட்கார்ந்து வருத்தப்பட தான் போறேன், பரவாயில்லை பார்த்துக்குறேன்..... ஐ லவ் யூ ட்ரூலி; ஸோ நீ பாடுன மாதிரி என்ன குறையோ என்ன நிறையோ எல்லாத்துக்கும் நான் ரெடியா இருந்து  உன்னோட ஃபீலிங்க்கு ரெஸ்பெக்ட் தர முயற்சி செய்றேன். பை நாளைக்கு காலையில பார்ப்போம்!" என்று சொல்லி விட்டு புறப்பட்டு போன ஜீவானந்தனை பார்த்த கவிப்ரியா மனதில் பெரும் சோர்வுடன் அயர்ந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

################################

"தேங்க்யூ சோ மச் வினு, எப்பவும் போல என் ரூம் எந்த விதமான எக்ஸ்ட்ரா பிட்டிங்கும் இல்லாம என் ரூமாவே இருக்கட்டும்னு பர்மிஷன் குடுத்ததுக்கு..... எப்படிப்பா
உன் கை ரொம்ப ஸாப்டா இருக்கு. ஒரு பையன் கை மாதிரியே இல்ல. ரொம்ப நல்லா இருக்கு. ச்சை நாலு மணி நேரம் நிக்க வச்சு காலை உடைச்சுட்டாங்க. உனக்கு நிஜமாவே கால் வலிக்கலையா வினு..... வேணும்னா நீ செய்ற மாதிரி நானும் உனக்கு புட் மசாஜ் செஞ்சு விடட்டுமாப்பா?" என்று கேட்டு அவன் தலையை வருடிய ஷைலுவை பார்த்து புன்னகைத்த பவின்,

"ஐ'ம் ஆல்ரைட் வித் திஸ் செட்டப் ஷை பேபி..... உனக்கு கம்பர்டபிளா இருக்கணும், அது தான் முக்கியம். அப்புறம் உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் உன்னை ஒரு பிரின்ஸஸ் மாதிரி பார்த்துக்குறாங்க. ஸோ நானும் என்னோட வொய்ப ஒரு குட் கேர் எடுத்து பார்த்துக்கணும்ல, ஆனாலும் நீ கேட்டன்னு உங்கப்பா உனக்கு செஞ்சு குடுத்த பன்ஜி ஜம்ப்பிங் எல்லாம் ரொம்ப ஓவர்மா!" என்று சொன்ன தன் கணவனை பார்த்து வெட்க சிரிப்புடன்,

"ஆமால்ல.....அப்பாவும், லட்டுவும் மேரேஜ்க்கு இப்படி ஒரு கிப்ட் குடுப்பாங்கன்னு நானும் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்ல வினு.... ஆனா கொஞ்சம் ஜாலியா தான் இருந்தது, நீ தான் யார் கூடயும் ரொம்ப பேசாம அமைதியா நின்னுட்டு வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்த; நம்ம பேமிலியில எல்லார் கிட்டயும் மிங்கிள் ஆகி ஜாலியா பேசு வினு, எனக்கு உன் தாத்தா பாட்டியை எல்லாம் தெரியவே தெரியாது. இன்னிக்கு தான் முதல் தடவை பார்த்தேன். ஆனா அவங்க கூட ஈஸியா ப்ரெண்டு ஆகிட்டேன் பார்த்தியா? நீயும் என்னோட மெத்தடை பாஃலோ பண்ணு, அப்புறம் எல்லார் கூடவும் ஈஸியா ப்ரெண்டு ஆகிடலாம்! மசாஜ் போதும் பௌல்ல இருக்குற தண்ணிய கொட்டிட்டு வந்துடட்டுமா?" என்று கேட்டவளிடம்,

"நீ இரு. நான் செய்றேன்!" என்று சொல்லி தண்ணீரை கொட்டி விட்டு அவள் வந்து அவளருகில் அமர்ந்து கொண்டான் பவின்.

"ஸாரி ஷை..... நம்ம வீட்ல முன்னாடி மூணு பேர் இருந்தோம், ஆனா அதுலயும் மோஸ்ட் ஆஃப் த டைம்ஸ் நானும், அப்பா அம்மா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்னு மொத்தமே ரெண்டு பேர் தான் இருப்போம். உங்க வீட்ல எப்பவுமே பத்து பதினைஞ்சு பேர் இருக்கீங்களா? யார் என்ன பேசுறாங்க; பதிலுக்கு யார் கவுண்ட்டர் குடுக்குறாங்கன்னு பார்த்துட்டு இருக்குறதுக்கே நேரம் சரியா போயிடுது, ஆனாலும் இந்த  லைவ்லினெஸ் ஒரு ப்ரெஷ் ஃபீலிங் குடுக்குது போ.... அம்மாவும், அப்பாவும் தாத்தா பாட்டி கூட சேர்ந்துட்டதால ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்காங்க பேபி! அவங்க மருமகளுக்கு அவங்க சார்புல பெரிய கிப்ட் குடுத்துட சொன்னாங்க. என் லவ்லி அன்பெய்டு கெஸ்ட்க்கு என்ன கிப்ட் குடுக்கலாம்?" என்று கேட்ட படி அவளை கட்டிலில் இருந்து எழுப்பி தன்னுடன் அணைத்துக் கொண்டவனிடம்,

"ஏய் லூசு துரியன்.... நம்ம பேமிலி மெம்பர்ஸ பேமிலியில ரெண்டு சண்டை போட்டு சேர்த்து விட்டாச்சு, இதுக்கெல்லாம் போய் தேங்க்ஸ் சொல்லுவாங்களா, இல்ல கிப்ட் குடுப்பாங்களான்னு யோசிச்சுட்டு.... ஃப்ரீயா விடு வினு!" என்று சொல்லி விட்டு அவன் அறியா வண்ணம் மெதுவாக நகர்ந்து அணைப்பில் இருந்து விடுபட்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள் ஷைலஜா.

"ஓ ஃப்ரீயா விடணுங்களா அம்மணி, விட்டுட்டா போச்சு, என்னை துரியன்னு கூப்பிடாதன்னு நான் ஏற்கனவே உன்னை வார்ன் பண்ணியிருக்கேன். சொன்ன பேச்சை கேக்காம இருந்தா அதுக்கு ரியாக்ஷன் எப்படி வரும்னு உன் கிட்ட காட்டணும்!" என்று சொல்லி விட்டு தன் சட்டையை கழற்றி கொண்டிருந்தான் பவின்.

"அய்யோ வினு ப்ளீஸ் நான் உன் முன்னாடி உட்கார்ந்து இருக்கேன், ஷர்ட்டை கழட்டாத! இனிமே துரியன்னு ப்ராமிஸா கூப்பிட மாட்டேன்!" என்று சொல்லி விட்டு தன் கைகளால் முகத்தை மறைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் ஷைலஜா.

புன்னகையுடன் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தியவன் சிறிது நேரம் அவளை தன் அணைப்பில் வைத்திருந்தான். "தூங்கலாமா வினு.....?" என்று கேட்ட தன் மனைவியின் காதில் மெல்லிய குரலில்,

"இதோட எட்டாவது தடவை தூங்கலாமான்னு கேட்குற, இன்னும் ஒரு தடவ கேட்டன்னா அப்படியே உன்னை வாஷ்ரூமுக்கு தூக்கிட்டு போய் பாத்டப்புல கோல்டு வாட்டர்ல முக்கி எடுத்துட்டு வந்துடுவேன் பார்த்துக்க. இன்னொரு தடவ ஜாலியா குளிச்சுட்டு வரலாம். சரி சொல்லு.... ஆம் ஐ ஸ்டிங்க்கிங் நௌ?" என்று கேட்ட தன் கணவனிடம் "போடா நீ எப்படி இருந்தாலும் துரியன் தான்..... நிக் நேமை எல்லாம் மாத்த முடியாது!" என்று சொல்லி விட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ஷைலஜா.

"ம்ம்ம்.... ஓகே இட்ஸ் யுவர் விஷ்! சரி மேட்டருக்கு வருவோம். இப்போ நீ என்னை பேச விடாம செய்றியா? இல்ல நான் உன்னை பேச விடாம உன் வாயை மூடட்டுமா?  "யூ ஷட் அப் மை மவுத்" அது உன் பேவரைட் டயலாக் ஆச்சே அந்த அக்கஷேனை நினைச்சு நினைச்சு எத்தனை தடவ தனியா  சிரிச்சுருக்கேன் தெரியுமா? உன்னை நினைச்சாலே உன் க்யூட்னெஸ் தான் நியாபகத்துல வந்துடும்! நீ என்னை விட்டு சாத்துன அந்த பாலைக் கூட ஒரு கப் ஹோல்டர்ல போட்டு நம்ம காதல் நினைவுச்சின்னமா நான் ஆக்கி வச்ச விஷயம் எல்லாம் நம்ம லைஃப் ஹிஸ்டரில இடம் பிடிச்சிருக்கும்!" என்று பேசிய படி அவளை வருடிக் கொண்டு இருந்தான் பவின்.

"வினு நாளைக்கு லட்டுவை விட்டுட்டு உன் கூட சென்னைக்கு வரணும்ல.... எனக்கு அத நினைச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு......!" என்று மெய்யான கவலையை தன் முகத்தில் காட்டிய ஷைலுவை சிறு புன்னகையுடன்,

"விடு பேபி இனிமேலாவது இனியா சிஸ்டர் உன் தொல்லையில்லாம மிஸ்டர் ராசு கூட ஜாலியா ஹாப்பியா இருக்கட்டும்..... எவ்வளவு நாளைக்கு தான் உன் இம்சைய சமாளிச்சுட்டு வலிக்காத மாதிரியே நடிப்பாங்க..... இனிமே ஷிப்ட் போட்டு டார்ச்சர் பண்ணு, கொஞ்ச நாள் நான், கொஞ்ச நாள் அவங்க..... ஸோ ரெண்டு பேருக்கும் கஷ்டமா இருக்காது!" என்று சொன்ன தன் கணவனை முறைப்புடன் உதைத்து கீழே உருட்டி விட தயாராக இருந்தவளை சுலபமாக தன் வசம் கொண்டு வந்த பவின்,

"ஏய் லேஸி டர்ட்டிள் ஏதோ அன்னிக்கு உதைச்சு உருட்டி விட்ட..... அப்போ நீ ஜெய் அங்கிளோட டாட்டர், ஸோ நல்ல பையனா உன் அடியெல்லாம் வாங்கிக்கிட்டேன். ஆனா இப்போ வீணா ட்ரை பண்ணாத, ஏன்னா இப்ப நீ என் வொய்ப்..... டூ மீ ஒன் ஃபேவர் உங்க அத்தான்ட்ட கேட்டு தீராஸ் அட்ரஸ் வாங்கி குடேன். எல்லாருக்கும் அங்க மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் ஃப்ரீயா தான் சொல்லி தர்றாங்களாமே..... ஐ வான்ட் டூ ஜாய்ன் தேர்!" என்றான் அவன் காரியத்தில் ஒரு கண் வைத்து கொண்டே.

"ம்ப்ச் கையை எடு வினு..... எனக்கு இதுல நிறைய டவுட்ஸ் இருக்கு. ராகினி ஆன்ட்டிட்ட என் டவுட்ஸ் எல்லாம் க்ளியர் பண்ணிட்டு அப்புறம் தான் எல்லாம்.....!" என்று சொன்ன தன் மனைவியை முறைத்து தன் தலையில் அடித்து கொண்டவன்,

"இவ்வளவு பெரிசா உன் பக்கத்துல ஒரு ஹேண்ட்ஸம் புருஷன் படுத்துட்டு இருக்கான்ல, உன் டவுட்ஸ் எல்லாம் க்ளியர் பண்றதுக்கு தான் உன்னை அவனுக்கு மேரேஜ் செஞ்சு வச்சுருக்காங்களாம், ஸோ ஸுட் யுவர் கொஸ்ட்டீன்ஸ் ஒன் பை ஒன்.....!" என்று கண்சிமிட்டி சிரித்தவனிடம் கை உயர்த்தி பெரிய கும்பிடாக போட்டு விட்டு,

"மிஸ்டர் பவி நீங்க லெக்சர் குடுக்க ஆரம்பிச்சீங்கன்னா அஞ்சாறு மணி நேரம் என்ன வச்சு செய்வீங்க, ஆள விட்டுருங்க......" என்று சொன்ன ஷைலுவை ஒரு பொறைமையற்ற அணைப்புடன் இழுத்தவன்,

"சரி ஓகே பேசிட்டே இருந்தா வேலைக்காகாது ஷை பேபி ..... உன் டவுட்ஸை எல்லாம் ப்ராக்கட்டிலாவே க்ளியர் பண்ணிட்டா போச்சு!" என்று சொல்லி விளக்கை அணைத்து அவள் இதழ்களையும் அணைத்துக் கொண்டான் பவின். பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தேவைப்படாமல் அவர்கள் இருவரின் திருமண வாழ்வு கூடல் எனும் அடுத்த நிலையை நோக்கி இனிதாக நகர்ந்து போய் கொண்டிருந்தது.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro