💟 ஜீவாமிர்தம் 60
ஜீவானந்தன் தன் தந்தையின் முகபாவத்தை பார்த்து விட்டு அவரருகில் மண்டியிட்டு அமர்ந்தான். "இந்த விஷயத்தை யார் சொன்னாங்கங்கறது முக்கியம் இல்லப்பா! ஆனா அதுக்கான பதில் தான் ரொம்ப முக்கியம். கவிப்ரியா இல்லாம நம்ம வீட்டுக்குள்ள வந்திருந்தா என்னை ஏத்துட்டு இருந்துருப்பீங்களா மாட்டீங்களாப்பா?" என்று கண்களில் வழக்கத்திற்கு மாறான சிறு பதட்டத்துடன் கேட்ட தன் மகனிடம்,
"ஆனந்த் நீ எம் புள்ளடா தம்பி! தப்பு செஞ்சது நான், ஆனா தண்டனை குடுத்தது உனக்கு; கவியோட தான் நீ இங்க வரணும்னு சொன்னது உன் மேல அவளுக்கும், அவ மேல உனக்கும் எந்த கோபமோ, வருத்தமோ இருந்தாலும் இப்படி ஒரு காரணத்தால சரியாகிடணும்ங்கிற எண்ணத்துல தான்! தேவையில்லாம ஏதாவது உளருறவங்களுக்கெல்லாம் நம்ம பதில் சொல்லிட்டு இருக்கணும்ங்கிற அவசியம் இல்ல. ஏஞ்சல் நீ உன் புருஷனை நம்புறேல்லடா; ஆனந்த ஸாகரத்துல ஒவ்வொரு இன்ச்சும் இவனுக்கு உரிமைப்பட்ட இடம்டா, தான் தப்பு செய்யலன்னும் அவனுக்கு தெரியும். இவன் மேல தப்பு இல்லன்னு எனக்கு தெரியும்ங்கிறதும் அவனுக்கு தெரியும். அவன் நினைச்சிருந்தா ஒரு மாசத்துல மலைக்கு திரும்பி வந்திருக்க முடியாதா? இத்தனைக்கும் பார்த்து பார்த்து அவனோட அம்மா தடவிக் குடுத்து வளர்த்த பையன்..... ஏன் நாங்கல்லாம் வேண்டாம்னு சொல்லி சென்னையில இருந்தான்.......? அது உனக்காக தான்டா கண்ணா! என்னவோ தெரியல. லைஃப்ல எனக்கு கிடைச்ச மாதிரி எதுவுமே அவனுக்கு ஈஸியா கிடைக்க மாட்டேங்குது. ஆனா அவனோட இத்தன வருஷ போராட்டத்துக்கு நீ அவன் கூட சந்தோஷமா இங்க வரணும்ங்கிற எண்ணம் தான் ஒரே காரணமா இருந்திருக்கும் ஏஞ்சல்! நீ இல்லாம அவன் இங்க வந்திருந்தாலும் சந்தோஷத்தோட அவனை வெல்கம் பண்ணி அவன் கிட்ட நான் மன்னிப்பு கேட்டுருப்பேன். என் பையன் என் மருமகள ஒரு நாளும் எந்த விஷயத்துக்காகவும் யூஸ் பண்ணிக்கிற அவசியம் எல்லாம் அவனுக்கு வராது. உன்ன லவ் வேணும்னா நிறைய பண்ணுவானே தவிர யூஸ்.... ச்சே ச்சே சான்ஸே இல்லடா!" என்று தன் மருமகளிடம் ஜெய் நந்தன் தீர்க்கமாக பேசி முடித்த போது பார்கவ், ராசு இருவரும் விசிலடித்து கை தட்டினர்.
"டேய் பாகி கொஞ்சம் சும்மா இருடா!" என்று பார்கவை திட்டி விட்டு கவிப்ரியாவை தான் அமர்ந்திருந்த சேரில் ஒரு புறமாக அமர்த்தி கொண்டு, "மாமா எதுவும் தப்பா பேசிடலையே ஏஞ்சல்? உன்னோட ஒபபீனியனும் இதே தானே?" என்று கேட்டவரிடம் முயன்று வரவழைத்த சிரிப்புடன் "ஆமா டார்லிங், நீ சொன்னா கரெக்டா தான் இருக்கும்!" என்று சொல்லி தலையசைத்து விட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்து விட நினைத்த கவிப்ரியாவை ஜீவாவின் இறுக்கமான கைப்பிடி எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. பார்கவ், ராசுவின் காட்டு கத்தல் தாங்காமல்
"அடச்சை..... மாமா முக்கியமா பேசிட்டு இருக்காங்கல்ல, கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா நின்னு தொலைங்களேன்!" என்று தன் அண்ணனையும், ராசுவையும் அதட்டினான் ராகவ்.
"இந்த மண்டை வீங்கி வேற..... சும்மா நொய் நொய்ன்னுட்டு உனக்கு இன்னும் நடந்த எதுவும் முழுசா தெரியலடா, அங்க பாரு என் தங்கை குலம், என்னைய எத்தனை தடவ நெருப்புக்கோழின்னு கேலி பண்ணி சிரிச்சுருப்பா, இப்போ விட்டா மண்ணுக்குள்ள புதைஞ்சிடுவா போலிருக்கு, முடி தான் தெரியுது. முகத்தையே காணுமேடா?" என்று கிண்டல் செய்த பார்கவிடம்,
"உனக்கு தெரிஞ்ச எல்லா விஷயமும் எனக்கும் தெரியும். கவிம்மா ஃபீலை பத்தி உனக்கு என்னடா தெரியும்?
மரியாதையா வாயைத் தொறக்காம நில்லு. இல்ல அண்ணன்னு பார்க்க மாட்டேன், அண்ணிக்காகவும் பாவம் பார்க்க மாட்டேன். சங்குல ஏறி நின்னு சோலிய முடிச்சுடுவேன்!" என்று சொல்லிய ராகவையும் பார்கவையும் ஏற இறங்க பார்த்த இசக்கிராசு ஏதோ தவறாக இருக்கிறது என்று மட்டும் தெரிந்து அவர்கள் இருவரையும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.
இனியா தன் கணவனிடம் கைக்கடிகாரத்தை குறிப்பாக காட்ட அவன் ஜெய் நந்தனிடம் சென்று அனைவரையும் பவின் ஷைலு திருமண விளையாட்டுக்களை ஆரம்பிக்க அழைத்து வந்தான்.
அர்ஜுன், மீரா, பலராம், கீதா, ஜெயந்தன், பத்மா, கௌதமன், ராகினி, அபிநயா, விவேக் இவர்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்து இனியா அவர்களிடம் தந்த குட்டி பானைகளில் உள்ளே என்ன பொருள் இருக்கிறது என்று தெரியாமல் துணியால் கட்டி எடுத்து வந்தனர்.
"கீது இதுங்க என்னம்மா பண்ண போதுங்க?" என்று ஆர்வமாக கேட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சரஸ்வதியிடம், "தெரியலம்மா, ரூபியும் மாப்பிள்ளையும் ஏதோ விளையாடப் போறாங்கன்னு நினைக்கிறேன்!" என்றபடி சரஸ்வதிக்கு பழங்களை சாப்பிட கொடுத்தவாறு அவர் கேள்விக்கு பதில் சொன்னார் நிர்மலா.
பவின் மற்றும் ஷைலஜாவை பச்சைமுத்துவும் விண்ணரசியும் கண்களை கட்டி விட்டு கைபிடித்து அழைத்து வந்தனர்.
இனியா தன் தோழியின் கணவனிடமும் அவளிடமும் சென்று பவினும் ஷைலுவும் ஐந்து ஐந்து பானைகளை தேர்ந்தெடுத்துக்கலாம் என்றும் மொத்தமுள்ள பத்து பானைகளில் இரண்டில் மட்டும் ஒரே பொருள் இருக்கிறது, அதை கண்டுபிடியுங்கள் என்றும் சொல்லி விட்டு அமர்ந்து கொண்டாள்.
அர்ஜுனும் மீராவும் கொண்டு வந்த
முதல் செட் பானையை திறந்து முகர்ந்து கைகளால் பரிசோதனை செய்து விட்டு பவின் வாசனையோட குளிருது ஸோ சந்தனம் என்றான், ஷைலு தடவி ஆராய்ந்து விட்டு "அடப்பாவிகளா மீராத்தை பானைக்குள்ள போட உங்களுக்கு வேற எந்த பொருளும் கிடைக்கலையா..... சக்தியோ முத்துவோ ரெண்டுல எந்த பேபியோ என் கையில இருக்கு!" என்றாள். ஜெய் நந்தன் தன் செல்லப் பிள்ளைகளில் ஒருவன் பெயரை கேட்டதும் அடித்து புரண்டு ஓடி வந்து முத்துவை கையில் வாங்கி கொண்டார்.
"சும்மா துணிய பொத்திதான்ணா வச்சிருந்தேன். குட்டி முத்து ரொம்ப ஒபிடியண்டா இருக்கான்!" என்று சொல்லி சிரித்த தங்கையிடம் இருந்து, "தேங்க்ஸ்டா மீரு! இதுங்கள பார்த்தா உங்க அண்ணி ஒருத்திக்கு மட்டும் தான் பிடிக்கல. சச் அ நைஸ் பாய்!" என்று சொல்லி தடவிக் கொடுக்க முத்து ஜெய்யின் கையில் நாவால் நக்கி தன் அன்பை வெளிப்படுத்தியது.
பலராம் கீதா வைத்திருந்த
இரண்டாவது செட் பானையை சோதித்து விட்டு அவன் "மண் இருக்கு" என்றான். அவள் "நார் மாதிரி தெரியுது" என்றாள்.
மூன்றாவது செட் பானைகளில் பவினிடம் வெல்லத்தை ஜெயந்தன் கட்டி வைத்திருக்க பத்மா நீட்டிய ஷைலுவின் பானையில் முட்டைகோஸும் இருந்தன.
நான்காவது செட் பானைகளில் தன் அப்பா கொடுத்ததில் பவினிடம் பூக்களும் ஷைலுவிடம் ராகினியின் முதலுதவி பெட்டியும் கிடைத்தன.
ஐந்தாவது செட் பானைகளில் ஷைலு அபிநயாவின் மார்க்கர் பேனாவை உருவத்தால் அனுமானம் செய்ய பவின் புன்னகையுடன் "ஏதோ ஸம் க்ராசரி ஐயிட்டம், என்னதுன்னு சரியா கண்டுபிடிக்க முடியல ஸாரி!" என்று சொல்லி தோள் குலுக்கவும் விவேக் தன் பானையில் இருந்த காராமணியை காட்டினார்.
ஷைலு குழப்பத்துடன் இனியாவிடம், "லட்டு ரெண்டு பானையில காமனா ஏதோ ஒரு அயிட்டம் இருக்குதுன்னு சொன்ன.... அப்படி ஒண்ணும் இருக்குற மாதிரி தெரியலயே?" என்று கேட்டாள்.
"உனக்குத் தான் தெரியலடா ஷைலு.... கெளதம் மாமாட்ட அப்புறம் கீதா அத்தை பானையிலயும் மாலை இருக்கு. இனியா மாலைய நீங்க ஈஸியா கண்டுபிடிச்சுட கூடாதுங்கிறதுக்காக அத பூவாலயும், நாராலயும் கவர் பண்ணி வைச்சிருக்கா, பூவும் நாரும்ங்கிற லிங்க்கை பிடிச்சு நீங்க மாலைன்னு யோசிச்சு இருக்கணும்னு நினைச்சு இருப்பா போலிருக்கு. இனியா சூப்பர் கேம்டா!" என்று புன்னகையுடன் பாராட்டினான் ஜீவானந்தன். அனைவரும் இனியாவின் ஏற்பாட்டிற்காகவும், ஷைலு பவினின் முயற்சிகளுக்காகவும் கை தட்டினர்.
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க கவிப்ரியா மட்டும் உதட்டில் ஒட்டி வைத்த செயற்கை புன்னகையுடன் ஜீவானந்தனின் அருகில் பசை போட்டது போல் ஒட்டிக் கொண்டிருந்தாள்.
"டேய் ஹல்க்.... கைய விடுடா, எனக்கு வலிக்குது!" என்று இதுவரை நான்கைந்து முறை இதே வார்த்தைகளை கேட்டு விட்ட தன் மனைவியிடம் "விட்டா ஓடிடுவியே.... ஸோ நே வே!" என்று சொல்லி
கண்சிமிட்டி, கைகளை கிள்ளி, உதடு குவித்து காட்டி அவளை முடிந்த அளவு வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.
ஜெய் நந்தன் தன் மகள் ஷைலுவுக்கு திருமணப் பரிசாக தனது எஸ்டேட்டில் சிற்றருவி அருகே பன்ஜி ஜம்ப்பிங் ஒன்றை அமைத்து கொடுத்திருந்தார். எஸ்ஜேஎன்னிலும் கவி, இனியா ஷைலு மூவரையும் ஒரு பங்குதாரராக அறிவித்து அவர்களுக்கு அவர்களுடைய லாபம் சென்று சேர்வது போல் ஏற்பாடு செய்திருந்தார். தனது தங்கைகளுக்கு எவ்வாறு பார்த்து பார்த்து செய்வாரோ அதைப் போல் மகள்களுக்கும் மருமகளுக்கும் நிறைவாக சீர் தந்து விட வேண்டும் என்பது ஜெய் நந்தனின் விருப்பம்.
ஷைலு தனக்கு கிடைத்த பரிசை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து தன் தோழியை கட்டிக் கொண்டு குதித்து கொண்டு இருந்தாள். ஆம்! ஷைலுவின் விருப்பத்தை ஜெய்யிடம் சொல்லி அதை செய்து கொடுத்தது இனியாவின் வேலை தான்!
"ஏய் ரூபிம்மா என்னை இப்படி நசுக்காதடீ, அடுத்த தடவை இங்க வரும் போது போய் உன் பன்ஜி ஜம்ப்பிங் ட்ரை பண்ணு. இதே ஹாப்பியோட பவின் ப்ரதருக்கு மாலைய போட்டுடுமா!" என்று சொன்ன அவள் தன் தோழியிடம் "மாட்டேன் நானும் வினுவும் இந்த கேம்ல ஜெயிக்கல, ஜீவா அண்ணாவையும், கவி அக்காவையும்....." என்று அவள் பாட்டில் பேசிக் கொண்டு இருந்தவள் தன் அண்ணனின் முறைப்பில் பம்மி,
"அண்ணியையும் மாலை போட்டுக்க சொல்லு!" என்று சொல்லி விட்டு பவினுடன் சென்று நின்று கொண்டாள்.
"ஜீவா உன் பொண்டாட்டிய கூட்டிட்டு முன்னாடி வா. ரெண்டு பேரும் மாலை மாத்திக்கோங்க! கல்யாணத்தை தான் ஊரு மெச்சுற மாதிரி செஞ்சு பார்க்க முடியல, இதையாவது எல்லாரும் பார்த்து சந்தோஷப்பட்டுக்குறோம்!" என்று சொன்ன ஜெயந்தனிடம் அடக்கப்பட்ட புன்சிரிப்புடன்,
"நான் டெய்லி கூட இவளுக்கு மாலை போடறதுக்கு ரெடி தான்..... என் மகாராணி அதே மூடுல இருக்காங்களான்னு தெரியலயே தாத்தா?" என்று தோள் குலுக்கி உதடு பிதுக்கினான்.
"கவிம்மா போடா போய் ஜீவா பக்கத்துல நின்னு அவனுக்கு மாலை போடு!" என்று பத்மா சொல்ல சரஸ்வதி தன் பேத்தியின் கைகளில் கீதாவின் பானையில் வைத்திருந்த மாலையை எடுத்து கொடுத்தார்.
"மச்சி தங்கச்சி உனக்கு மாலை போடறதுக்கு வாகா நாங்க வேணும்னா அவள ஷோல்டர்ல வச்சு தூக்கிட்டு வரட்டுமா?" என்று கேட்ட பார்கவிடம் ஒரு விசித்திர புன்னகையை தந்தான் பார்கவ்.
"ஐயயோ இந்த மாடுலேஷன்ல சிரிச்சான்னா அடுத்து தனியா சிக்கும் போது என்னைய சூப் வச்சு குடிச்சிடுவானே..... நமக்கு எதுக்கு வம்பு? அபிம்மா நீயா இந்த பானைக்கெல்லாம் கலர் குடுத்த?" என்று கேட்ட படி அபிநயசரஸ்வதியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான் பார்கவ்.
"என்ன ஒரு கோ இன்ஸிடென்ட்ஸ் பார்த்தியா ஜீவா? கவிப்ரியாவுக்கு நீ போடப் போற மாலை நீ அங்கிள்னு கூப்பிடுற என் கையில கிடைச்சிருக்கு. ரொம்ப வருஷத்துக்கு காதலோட சந்தோஷமா வாழணும். ஹாப்பி மேரீட் லைஃப்!" என்று வாழ்த்தி ஜீவாவின் கையில் மாலையை தந்து விட்டு சென்றார் கௌதமன்.
"இன்னும் ஏதோ மிஸ் ஆகுதே..... கீத்தும்மா உன் வயலின்ல ஏதாவது ஸாங் ப்ளே பண்ணேன்! நல்லா இருக்கும்ல.... ராகவ் ப்ளீஸ் வீட்டுக்குள்ள ஓடிப் போய் வயலினை தூக்கிட்டு வாடா!" என்று ஜீவா ராகவிடம் கோரிக்கை வைக்கவும் ராகவ் "டன் மச்சி!" என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் நிஜமாகவே ஓடினான்.
"ஜீவாக்குட்டி கேட்டு அத்தை முடியாதுன்னு சொல்லுவேனா..... இன்னிக்கு ரொம்ப ஸ்பெஷலா நிறைய விஷயம் வேற நடக்குது! என்ன பாட்டு வேணும்னு சொல்லு ஜீவாம்மா!" என்று சொல்ல ஜீவானந்தன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
"கண்டேன் என் ஜீவாமிர்தம்!
கொண்டேன் மனக் காதல் முழுவதும்!
லாலாலா லாலா ல லலலலா
லாலாலா லாலா ல லலலலா
உனதிதய மாடத்தில் எனை இருத்தி
அதை ஆளும் இளவரசி நீதான்......
என் நிலை கண்டு உருகாயோ
உன் மனம் சிறிதேனும் தான்!
சிறிதேனும் உருகாமல்
சிறுதேனும் பருகாமல் இன்னும்
எத்தனை நாள் வாழ்வதோ
என் நாட்கள் வீணாவதோ.......
வெகுளியான கொழுநன் மேல் உன்
வெகுளி விடுப்பாய் கவிதை நீ
வாழலாம் ஆயிரம் பிறை சேர
சொர்க்கம் தான் வா தலைவி
கண்டேன் என் ஜீவாமிர்தம்!
கொண்டேன் மனக் காதல் முழுவதும்!
லாலாலா லாலா ல லலலலா
லாலாலா லாலா ல லலலலா!!
என்று ஜீவா ஒரு சிறிய பாட்டையே பாடி முடித்து விட அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர்.
"டேய் சரியான அமுக்குணிடா நீ; உங்க அத்தை என்ன பாட்டு வேணும்னு கேட்டா நீ உன் பாட்டுக்கு ஒரு பாட்டை பாடுவியோ?" என்று கேட்ட தன் மாமனிடம், "கோபிச்சுக்காத ராம்!" என்று சொல்லி சமாதானம் செய்தான் ஜீவானந்தன்.
"ஸ்ரீ நம்ம பையன் ரொம்ப டெவலப் ஆகிட்டான்ல....?" என்று கேட்டு தன்னருகில் வந்து கைகளைப் பிடித்து கொண்ட நிர்மலாவின் தோளைப் பற்றிக் கொண்டு, "ஆமாம்மா கல்யாணம் ஆனா பசங்க கவிஞனாகிடுவாங்களா என்ன.... எய்ட்த் வரைக்கும் உன் பையன் தமிழ்ல அரைபெடல் தானே அடிச்சான்.... ஒரு வேள சென்னை செந்தமிழ் படிச்சு இப்படி ஆகிட்டானோ!" என்று சொல்லி சிரித்தார்.
சுற்றுப்புறம் மறந்து அனைவரும் என்ன பேசுவார்கள் என்றெல்லாம் மறந்து மாலையில் மாலையை ஏந்திக் கொண்டு தன்னவன் பாடலை கேட்டு உருகி நின்றவளை சற்று பட்டும் படாமலும் அணைத்தவாறு நின்று,
"நீங்க மட்டும் தான் ஜீனி பூதம் மாதிரி குடைஞ்சு எங்களுக்கு வெரைட்டி கிப்ட் குடுப்பீங்களா மேடம்.... நாங்களும் குடுப்போம். கோபம் போயிடுச்சா? வில் யூ பி மை லைஃப் பார்ட்னர் அஃபிஷியலி?" என்று கேட்ட தன் கணவனிடம் கவிப்ரியாவின் மூளையின் அனுமதி கேட்காமல் "யெஸ் ஐ வில்!" என்ற வார்த்தை அவளது மனதின் உதவியுடன் உதடுகளில் இருந்து வெளிப்பட்டது. உதட்டில் சிறு புன்னகையுடன் அவளது உதடு நோக்கி குனிந்தவனிடம் பார்கவ்,
"மச்ச்ச்ச்ச்ச்ச்சி பப்ளிக்! மாலைய மட்டும் மாத்திட்டு சாப்பிட வாங்க ராசா.....!" என்று ஜீவாவின் கைக்கெட்டாத தூரத்திற்கு சென்று சொன்னான்.
"பொழச்சு போ சைத்தானே!" என்று முணங்கிய ஜீவா கவியின் மாலைக்காக கழுத்தை குனிந்தான். கவிப்ரியா ஜீவானந்தனுக்கு மாலை அணிவிக்க, ஜீவானந்தன் கவியின் கழுத்தில் மாலை அணிவித்து அவளது கைகளை பற்றிக் கொண்டான்.
"லட்டு உன் கேம் ஐடியாவால எங்க எல்லாருக்கும் உங்கண்ணன் அண்ணி மாலை மாத்திக்குறத பார்க்க முடிஞ்சிடுச்சு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா....." என்று சொன்ன தன் பெரியப்பாவை தேற்றி புது மணமக்களையும் மற்ற அனைவரையும் உள்ளே அழைத்து சென்றாள் இனியா.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro