Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 59

"பாருடா ராகவ் பாகியே என்னைப் பார்த்து எப்படி பேசுறான்னு...... ஜீவாவை நான் எவ்வளவு லவ் பண்றேன்னு இவனுக்கும் புரியல, அத ஜீவாக்கு கூட இனியா ஹஸ்பெண்ட் தான் வந்து விளக்க வேண்டியதிருக்கு, அது தான் என் கோபம், நான் கோபத்துல கொஞ்சம் வார்த்தைகளை தப்பா பேசிட்டேன் தான்..... ஆனா ஜீவா சொன்ன மாதிரி என்னோட குற்ற உணர்வால ஒண்ணும் இல்லாத அவனுக்கு வாழ்க்கை குடுத்தேனெல்லாம் நான் சத்தியமா நினைக்கல. இனியா கல்யாணத்தன்னிக்கு மனசுல ஏதோ ஒரு தவிப்பு! எங்க கல்யாணம் கூட அன்னிக்கே நடந்துடுச்சுன்னா நிம்மதியா இருக்கும்னு தோணுச்சு. ஆனா மாமா அத்தைய தவிர அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி, பாகி, ஏன் ஜீவா கூட என் கிட்ட பேச மாட்டேங்குறான். இப்படியெல்லாம் என்கிட்ட யாரும் இதுவரைக்கும் முகத்தை தூக்கி வச்சுட்டு இருந்ததே இல்ல. எனக்கு இது பிடிக்கல. எங்கையாவது தனியா போய் உட்கார்ந்துக்கணும் போல இருக்கு!" என்று சொல்லி விட்டு கண்கலங்கிய தன் அக்காவின் தோளை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்த ராகவ்,

"ஒரு வார்த்தைய பேசறதுக்கு முன்னால இதை பேசினா என்ன பின்விளைவு வரும்னு யோசிச்சுட்டு பேசினா எந்த பிரச்சனையுமே இல்ல கவி, நீ ஜீவாட்ட இவ்வளவு ஹார்ஷான வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணினா மச்சானுக்கு அவர் யோசிச்ச மாதிரி தாட் வரத்தான் செய்யும். சின்ன வயசுல இருந்து கூடவே இருந்த நம்ம அத்தை பொண்ணு தானே, எப்போ கல்யாணம் பண்ணிகிட்டா என்னன்னு நீ கேட்டவுடனே உன்னை கல்யாணம் பண்ணிகிட்ட உன் ஹஸ்பெண்ட்டுக்கு நீ இன்னும் கொஞ்சம் ஸ்பேஸ் குடுத்து உன் மனசுல இருக்கிற விஷயத்தை சொல்லி இருக்கணும். ஒருத்தர் மேல காதல முரட்டுத்தனமா காட்டலாம்மா. பட் கோபத்தை ரொம்ப ரொம்ப கவனமா காட்டணும், எனக்கு பெரியப்பா வாங்கி குடுத்த புரபொஸர் வேலை செட் ஆகல கவி, இன்னும் பத்து நாள்ல நான் சிங்கப்பூருக்கு கிளம்பறேன். மாலிக்குலர் பயாலஜில ரிசர்ச் அனெலிஸ்ட் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணியிருந்தேன். அவங்கட்ட இருந்து கால் லெட்டர் வந்திருக்கு. ஸோ நான் கிளம்பணும். இப்போ நீ இருக்கிற மூடுக்கு உனக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா நீயும் என் கூட வா. பதினைஞ்சு நாள் இல்ல ஒன் மன்த் அங்க இரு, தப்பு உங்க ரெண்டு பேரு மேலயும் தான் இருக்கு, பெரியவங்க ஒண்ணும் முட்டாள் இல்ல கவி. பொதுவா எந்த வீட்லயும் தராத சுதந்திரத்தை அவங்க நமக்கு குடுத்திருந்தாங்க, விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து எந்த வித வித்தியாசமும் காட்டாம ஒண்ணாவே இருக்க அலவ் பண்ணியிருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு ஒரு முடிவை எடுத்துட்டு திடீர்னு அதுலயும் பிரச்சனை வந்தா எல்லாரும் எப்படி தாங்குவாங்க? பெரியவங்க கோபத்துல எல்லாம் தப்பே இல்ல, நிர்மலா அத்தை வந்து என்னத்த பொண்ணு வளர்த்து வச்சிருக்கே மீரான்னு பெரியம்மாவ பார்த்து கேட்டிருந்தாலோ, இல்ல பெரியம்மா ஜீவா மச்சான என்ன வேலை பண்ணி வச்சிருக்கன்னு கை நீட்டியிருந்தாலோ இவ்வளவு நாள் குடும்பத்துல காப்பாத்தி வச்சிருந்த யூனிட்டி காணாம போயிருக்கும், நல்ல வேளை எல்லாரும் அடுத்தவங்கள படுத்திடக் கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருக்காங்க...... ஜெய் மாமாட்ட நான் பேசட்டுமா கவி?" என்றவனிடம் பதில் சொல்ல முடியாமல் கவிப்ரியாவிற்கு பொங்கி பொங்கி அழுகை தான் வந்தது.

"கவி ப்ளீஸ்டா நீ அழுதா ஜீவாவுக்கு மட்டுமில்ல, எனக்கும் தான் வலிக்குது!" என்று சொன்ன தன் தம்பியை பார்த்து தன் கண்ணீரை துடைத்து கொண்டு பெருமூச்சு விட்ட கவிப்ரியா,

"எப்படிடா என்னை விட சின்னவனா இருந்துட்டு உன்னால இவ்வளவு மெச்சூர்டா பேச முடியுது? வயசுக்கும் மெச்சூரிட்டிக்கும் எந்த கனெக்ஷனும் இல்லையோ? ஏன் எதுக்குன்னு தெரியாம பண்ணி தான் பார்ப்போமேன்னு நினைச்சு அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா கல்யாணத்துக்கு தேவையான புரிதலோ, விட்டு கொடுக்கற தன்மையோ இன்னும் எனக்குள்ள வரவேயில்ல போல.... ஆல்ரைட்!
நான் ஜீவாவை எவ்வளவு லவ் பண்றேன், அவனை எவ்வளவு மிஸ் பண்றேன்னு நானே செல்ஃப் அசெஸ் பண்ணிக்குறதுக்கு இந்த கேப் எனக்கு கண்டிப்பா வேணும்னு தோணுது. இதனால அவனோட காம்ப்ளக்ஸும், என்னோட கில்ட்டி ஃபீலும் எங்கள விட்டு போகும்னா ஐ'ம் ரெடி ராகவ்! வீட்ல எல்லார்ட்டயும் நானே பேசுறேன்......!" என்று சொல்லி விட்டு தான் எடுத்த முடிவில் எப்போதும் தெளிவாக இருப்பேன் என்று மானசீகமாக சொல்லும் வகையில் நிமிர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றாள் கவிப்ரியா.

"அவர விட்டு போறதுக்கு நீ ரெடியாகிட்ட! உன்ன அனுப்பி வைக்கிறதுக்கு அவர் ஒத்துக்கணுமே கவிம்மா?" என்று நினைத்த வண்ணம் ராகவ் தன் நெற்றிப்பொட்டை அழுத்திக் கொண்டிருந்தான்.

மாலை வேளையில் இனியா பூக்களை மாலையாக கோர்த்து கொண்டு இருந்த போது ராசு தன் மனைவியின் அருகில் வந்து அமர்ந்தான்.

"சிட்டுக்குருவி மாமனுக்காக மால கட்டிக்கிட்டு கிடக்குதீகளாக்கும்? இப்போ எதுக்குட்டீ இந்த மாலை?" என்று கேட்ட தன் கணவனிடம் அவசரமாக

"இந்த மாலை ஒண்ணும் உங்களுக்கு இல்ல. ரூபிக்கும் அவளோட மாமாவுக்கும் வைக்க போற டாஸ்குக்காக ரெடி பண்ணிட்டு இருக்கேன். நான் இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் அப்பத்தாட்ட பேசுனேன். அவசரப்படாம நிதானமா இங்கிருந்து
கிளம்பி வர சொன்னாங்க. நான்
சொல்ல சொல்ல கேக்காம அப்பத்தாவ அம்பைக்கு அனுப்பிச்சு வச்சுட்டீங்க! நாளைக்கு ரூபி ரிஷப்ஸன் முடிஞ்சதும் நம்ம கிளம்பிடணும். தனியா கடைக்கு போயிட்டு வர்றதுக்கு, மில்லை பார்த்துட்டு வர்றதுக்கு எல்லாம் அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல ராசு?" என்று கேட்ட தன் மனைவியிடம் கோப அக்னியை வெளியிட்ட இசக்கிராசு,

"எங்கப்பத்தா கெழவி ஊர ரெண்டா மடிச்சு அவ சுருக்குப்பையில சொருகிக்கிடுவா.... என்னைய கூட எவனாவது அசந்து மறந்து ஏய்ச்சுபுட முடியும். அவ கிட்ட ஒரு கோணக்களியும் பண்ண முடியாது, நான் பாட்டுக்கு ஒம் பக்கத்துல உட்கார்ந்து உன் முகத்தை வாய பொளந்துகிட்டு பார்த்திகிட்டு கிடக்கேன். அவுகளும் இங்கண இருந்தா பொழப்ப எவமுலே பார்க்கறது? கல்யாணம் ஆகி இத்தன நாளுல என்னைய மாமான்னு கூப்பிடுற வழிய காணும், நான் உங்கிட்ட கெஞ்சி கெஞ்சி கூப்பிட வைக்க வேண்டியதா கிடக்கு, இதுல மாலை ரூபிக்கும் அவுக மாமனுக்குமா...... உன் ஸ்நேகிதிக்கு இவ்வளவெல்லாம் செஞ்சியே, உங்கண்ணனை பத்தி நெனைச்சு பாத்தியா?" என்று கேட்டவனிடம் பயத்துடன்,

"வீட்ல எல்லாரும் அண்ணா, கவி அக்கா மேல ரொம்ப கோபமா இருக்காங்க. அதான் எதுவும் செய்றதுக்கு பயமாயிருக்குங்க!" என்று சொன்ன இனியாவிடம் எரிச்சல் குரலில்,

"ஏட்டீ கோட்டிக்காரி, முதல்ல உங்கண்ணன் பொஞ்சாதிய அண்ணின்னு கூப்பிட்டு பழகு. அவன் பாவமுடி...... எல்லா இருந்தும் ஒண்ணுமே இல்லாம நிக்குதான். சட்டுபுட்டுன்னு பேசி கவிப்ரியா புள்ளைய உங்கண்ணன் கூட சேர்த்து வக்கிற வழியை பாருங்க!" என்று சொன்ன ராசுவிடம்,

"இல்ல ரூபி தான் நம்ம ரெண்டு பேரும் இந்த விஷயத்துல ஒண்ணும் பேச வேண்டாம், தாத்தாவுக்கு கோபம் வரும் லட்டுன்னு எங்கிட்ட......!" என்று மேலும் பேச தயங்கிய படி பேச்சை நிறுத்திய இனியாவிடம் கண்சிமிட்டலுடன்,

"இப்போ என் கண்ணாட்டி ரூபி சொல்றத கேக்கப் போறீகளா? இல்ல மாமன் சொல்றத கேக்கப் போறீகளான்னு பாப்பமா?" என்று அவள் பக்கத்தில் வந்து உரசிய படி நின்றவனை தடுக்க நினைத்த படி,

"தள்ளிப் போங்க மிஸ்டர் இசக்கி, மாலை கஷ்டப்பட்டு கோர்த்து வச்சது! கசக்கிடாதீங்க!" என்று சொன்ன தன் மனைவியின் கைகளில் இருந்த மாலையை பத்திரமாக வாங்கி பாதுகாப்பாக வைத்தவன், அவள் தோள்களை பற்றி "வாங்க நம்ம ரூமுக்குள்ளார ஒண்ணா போய் ஃபங்ஷன்க்கு விரசா ரெடியாகிட்டு வருவோம்!" என்று சொல்லி அவள் மறுப்பை காதில் போட்டு கொள்ளாமல் அழைத்து சென்று கொண்டிருந்தான்.

ஜெய் நந்தனும், நிர்லாவும் இனியா அனைவரையும் லானில் அசெம்பிள் ஆக சொன்னதற்கிணங்க தயாராகி அறையில் இருந்து வெளியே வரவிருந்த நேரம் அர்ஜுனும் மீராவும் அவர் அறைக்கு வெளியே தயங்கிய படி நின்று கொண்டு இருந்தனர்.

"வாடா அஜு, மீரு உள்ள வாடா!" என்று புன்னகையுடன் இருவரையும் அழைத்த ஜெய் நந்தனின் அறைக்குள் வந்து கணவன் மனைவி இருவரும் அமர்ந்தனர்.

"கவி இப்படி திடீர்னு ஜீவாக்குட்டிய ஃபோர்ஸ் பண்ணினது ரொம்ப தப்பு தான் அண்ணா. அதுக்காக நாங்க ரெண்டு பேரும் உங்கட்டயும், அண்ணி கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறோம். ஜீவாக்குட்டியும், கவியும் ஒரு மாதிரி ஃஸ்டிப்னெஸோட இருக்குதுங்கண்ணா. நம்ம மனசுல இருக்கிற கோபத்தால பிள்ளைங்க கஷ்டப்பட வேண்டாம். எப்படி எப்படியோ நடத்தி பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டது தான். ஆனா இப்போ இப்படி ஒரு சிச்சுவேஷன்ல கொண்டு வந்து நிறுத்திடுச்சுங்க, அப்பா அவங்க விஷயத்துல நான் தலையிட மாட்டேன்னு ஒதுங்கிட்டாங்க. அதான் பொண்ணோட அப்பா அம்மாங்கிற முறையில நாங்க வந்தோம். ஜீவாக்குட்டிக்கு சீர் செய்ய உங்க பெர்மிஷன் குடுத்தீங்கன்னா......" என்று சொல்லி விட்டு தன் அண்ணியின் முகத்தை பார்த்த மீராவிடம் சிரிப்புடன்,

"பார்றா.... என் பூனைக்குட்டி என் சம்பந்தியா மாறி என்ன சீர் செய்யணும்னு கேட்டு வந்திருக்கா, நீ ஏன்டா எதுவும் பேசாம அமைதியா நின்னுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க? உன் பங்குக்கு நீ எதுவும் பேசலையா? மீரு உன் மாப்பிள்ளைக்கு சீர் குடுக்கறது உன்னோட இஷ்டம்டா, ஆனா தாய்மாமனா ஏஞ்சல் கல்யாணத்துக்கு அவளுக்கு சீர் குடுக்கறது இந்த மாமனோட கடமை. நீ குடுக்கறத ஆனந்த் வாங்கிப்பான். நான் குடுக்கறத நீ வாங்கிக்கணும். நம்ம லட்டுவும், ரூபியும் கிளம்பினாலும் ஏஞ்சல் நம்ம வீட்ல இருப்பா. சித்தப்பா கிடக்குறாரு, என்னத்தயாவது சொல்லிட்டு போகட்டும் விடு. ஆனந்தும், ஏஞ்சலும் ஹாப்பியா இருக்கணும். பெரியவங்க எல்லாரும் முகத்தை தூக்கி வச்சுட்டு இருந்தா அதை பார்த்து அவனும் கவியும் டென்ஷன் ஆகத்தான் செய்வாங்க. ரிலாக்ஸ்டா இருங்க. எல்லாம் சரியாகிடும்!" என்று சொல்லி விட்டு அர்ஜுனையும் மீராவையும் நிர்மலாவையும் தன்னுடன் கூட்டி சென்றார் ஜெய்நந்தன்.

வீட்டினர் அனைவரும் சேர்ந்து வீட்டுக்கு வெளியே கூடியிருந்த போது அர்ஜுன் பலராமிடம், "ராம் இப்போதைக்கு ஒரு ஃப்ராப்ளமும் இல்லடா, ஜெய்க்கு கவி மேல கொஞ்சம் கூட வருத்தமே இல்ல. நான் தர்றேன்டா என் மருமகளுக்கு சீர்னு வழக்கம் போல பல்லை காட்டுறான்!" என்று சொல்ல கீதாவும் பலராமும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

"டேய் நீயும் உன் பொண்டாட்டி பக்கத்துல போக மாட்டேங்குற, போய் தொலடா நானாவது கிளம்புறேன்னு சொன்னா என்னையும் விட மாட்டேங்கிற, மரியாதையா எழுந்திரிச்சு இப்போ கவி பக்கத்துல போய் உட்கார்றியா இல்லையா?" என்று மிரட்டிய பார்கவை ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு கவிப்ரியாவின் அருகில் சென்று அமர்ந்தான் ஜீவானந்தன்.

"அழகு ரூபிணி ஒரு பாட்டுடா!" என்று கேட்ட ஜெய் நந்தனிடம்

"அப்பா நான் நாளைக்கு வினு கூட சென்னைக்கு போயிடுவேன். ஸோ இப்போலேர்ந்து கவி அக்கா பாட்டு பாடுவா, ப்ளீஸ் கிவ் ஹெர் அ பிக்ஹேண்ட்! கவி அக்கா ஸ்டார்ட்!" என்று கவிப்ரியாவை சியர் அப் செய்து கோர்த்து விட்டு தான் தன் வாடிக்கையில் இருந்து கழண்டு கொண்டாள் ஷைலஜா.

கவிப்ரியாவிற்கு தன் அருகில் அமர்ந்திருந்த ஜீவானந்தனிடம் தன் மனதில் இருந்ததை சொல்லி விட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது போல் தோன்றவே மெதுவாக எழுந்து இரண்டெட்டு முன்னால் எடுத்து வைத்து நின்றாள்.

என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்
நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டு போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்!
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளே
புது ஒளி விதைப்பான்
அந்த கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே......
என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்!" என்று கண்மூடி பாடலில் உருகிக் கொண்டிருந்தவள் குரலில் லயித்திருந்த ஜீவா அவள்
கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்து விட்டு அவள் கைகளை பற்றி அழைத்து சென்று ஜெய்நந்தன் முன்னால் நின்றான்.

"ஏஞ்சல் மனச அப்படியே கரைச்சு உருக்கிட்டடா! எக்ஸ்ட்ராடினரி!" என்று சொல்லி வாழ்த்தியவரிடம்,

"அப்பா உங்க கிட்ட நான் ஒரு கேள்வி கேக்கணும். நான் நம்ம பேமிலியில வந்து சேர்றதுக்காக என் பொண்டாட்டிய யூஸ் பண்ணிக்கிட்டேனான்னு ஒரு கேள்வி என் முன்னால வந்து என் நிம்மதிய கெடுத்துட்டு நின்னுட்டு இருக்கு! இவள கூட்டிட்டு வந்ததுல தான் என்னைய நம்ம வீட்டுக்குள்ள விட்டீங்களா? நான் கவிப்ரியாவ யூஸ் பண்ணிக்க தான் செஞ்சுட்டனாப்பா?" என்று கேட்ட தன் மகனிடம் எரிச்சலுடன்,

"எந்த முட்டாப்பயடா உன் கிட்ட இப்படி ஒரு கேள்விய கேட்டது?" என்று கோபத்துடன் பதில் கேள்வி கேட்டார் ஜெய் நந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro