Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 55

"ஜீவாம்மா இப்போ எதுக்கு நீ பார்கவை முறைச்சுட்டு இருக்க..... என்னடா இப்படி ஒரு வேலை பண்ணிட்ட! நம்ம வீட்லயே நீ தான் ரொம்ப பொறுப்பான பையன்னு நினைச்சுட்டு இருக்கோம், இப்போ நீ செஞ்ச காரியத்தால நிர்மலா கோபப்பட்டு தனியா போய் உட்கார்ந்துட்டு இருக்கா, என்னப்பா இதெல்லாம்?" என்று கேட்ட பத்மாவின் கைகளைப் பற்றியவன் தன் கீதா அத்தையின் முறைப்பை பார்த்து விட்டு சிரித்துக் கொண்டான்.

"பாட்டி எல்லோரோட லுக்லயே தெரியுது, எல்லாரும் எம்மேல ரொம்ப கோபமா இருக்கீங்கன்னு..... ஆனா ஜீவானந்தன் ரொம்ப பொறுப்பான பையன், அதனால இப்படி அவன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணியிருக்க கூடாதுன்னு நீங்க என்னை தப்பு சொல்லக் கூடாது. நான் திரும்ப திரும்ப சொல்றேன். அப்பா எப்படியோ, புள்ளையும் அப்படித்தானே இருப்பான்?" என்று கேட்டு ஜெய் நந்தனை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் ஏறிட்டவன் அருகே வந்து அவன் தோள்பட்டை சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டார் ஜெய் நந்தன்.

"டேய் நான் பண்ணினது தப்புன்னு என்னைய குறை சொன்ன உன்னைப் பிச்சிடுவேன் பிச்சு......" என்று அவனிடம் ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருந்த தன் தந்தையின் கைகளை சட்டையில் இருந்து விடுவித்த ஜீவானந்தன்,

"கூல் டாடி..... கூல்; முதல்ல எல்லாரும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க, அப்புறம்   பொறுமையா எல்லாரும் உட்கார்ந்து பேசலாம்! அதுக்கப்புறம் எனக்கு நீங்க எல்லாரும் என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாலும் நான் அத அக்செப்ட் பண்ணிக்குறேன்! ம்ம்ம்?" என்று கேட்டு அனைவரையும் இருக்கைகளில் அமர செய்து அபிநயா மற்றும் ஷைலுவிடம் அனைவரும் குடிக்க ஏதாவது பானம் எடுத்து வர சொன்னான்.

"ஐயோ இப்போ தானே அண்ணா பெரியப்பா அவரோட டீ டைமை முடிச்சுருப்பாரு.....?" என்று கேட்ட இனியாவிடம் புன்னகையுடன்,

"இது எப்பவும் குடிக்கிற மார்னிங் ட்ரிங்க் இல்லடா இனியா, கண்ட்ரோல்டா இருக்கணும், கத்திடக் கூடாதுன்னு பெரியவங்க எல்லாரும் அவங்க அவங்க மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு சிச்சுவேஷனுக்கு ரெடி ஆகுறதுக்கான ஒரு ஸ்டெப்லைசர்; ஸோ ஷைலு போய் ட்ரிங்க் ஏதாவது எடுத்துட்டு வருவா!" என்று சொன்னான் ஜீவானந்தன்.

"டேய் அண்ணா நீயெல்லாம் நல்லா வருவடா; ஆல் த பெஸ்ட் டா, எதுவும் சண்டைய போட்டு தொலைஞ்சுடாதீங்க, அப்புறம் எங்க கல்யாணத்துல எல்லாரும் அழுது வடியப் போறாங்க, இல்ல வினு......?" என்று பவினையும் தனக்கு கூட்டு சேர்த்து கொண்டவளிடம் கேலிச் சிரிப்புடன்,

"உங்க வீட்ல தான் ஷை நிறைய அட்வென்சர் எல்லாம் செஞ்சு மேரேஜ் பண்ணிக்குறாங்க, எங்க மாமனார் ஒரு டைப், ராசு இனியா ஒரு டைப், இப்போ நம்ம மச்சான் ஒரு டைப்......... கேக்குறதுக்கே ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு. கங்க்ராட்ஸ் ஃபார் யுவர் சக்ஸஸ் ஜீவா மச்சான்!" என்று சொல்லிய பவினிடம், "தேங்க்யூ சோ மச் வினு, நீங்க இத தப்பா எடுத்துக்கிட்டா ஷைலு லைஃப்ல ஏதாவது குழப்பம் வந்துடுமோன்னு தான் கொஞ்சம் கவலையா இருந்தது. இப்போ ஓகே. ஜீவானந்தன் இஸ் ரெடி ஃபார் ஆல் த அட்டாக்ஸ்....!" என்று சொன்னவனை கவலையாக பார்த்த அபிநயா,

"ஜீவாண்ணா கவிய அடிச்சுட்டாங்கன்னு பார்கவ் மேல கோபப்படாதீங்க அண்ணா! பத்தே பத்து நிமிஷம் எல்லாருக்கும் சூப் ரெடி பண்ணிடுறேன்!" என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குள் செல்ல ஜீவானந்தன் ஒரு மர்மச் சிரிப்புடன் அவளை சமாதானம் செய்து விட்டு ராசு, மற்றும் பவினுடன் வந்து அமர்ந்து கொண்டான்.

அனைவரும் ஒரு இறுக்கத்துடன் அபிநயா கொடுத்து விட்டாளே என்ற காரணத்திற்காக சூப்பை குடித்து முடிக்கவும் ஜீவானந்தன் நடுஹாலில் தொண்டையை செருமிக் கொண்டு "இப்போ பேசலாமா?" என்று கேட்ட படி நின்றான்.

"தாத்தா எனக்கு தண்டனை குடுத்து ஆகணும்ங்கிற முடிவுல இருந்தா அதுக்கு முன்னாடி எங்கப்பாவுக்கும், இந்த வீட்டு மாப்பிள்ளை இசக்கி ராசுவுக்கும் தண்டனை குடுத்துட்டு மூணாவதா எனக்கு என்ன பனிஷ்மெண்ட்னு யோசிக்கட்டும்.
பர்ஸ்ட் பாயிண்ட் என்னன்னா எங்கப்பா எங்கம்மாவ இங்கிருந்து சென்னைக்கு கிட்டத்தட்ட கடத்திட்டு போனாரு, செகண்ட் பாயிண்ட் ஸாகரி க்ரானி மட்டும் இடையில ப்ரேக் போடாம இருந்திருந்தா அவரும் இப்போ நான் செஞ்சிருக்கிற மாதிரி யாருமே இல்லாம ஏதாவது ஒரு கோவில்லயோ இல்ல ரிஜிஸ்டர் ஆஃபிஸ்லயோ தான் வச்சு கல்யாணம் பண்ணியிருப்பார். உன் கல்யாணத்துக்கு யாருடா தடை சொன்னா? நாங்கெல்லாம் உங்க கிட்ட எவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருந்தோம்? இப்படி ஒரே நாள்ல முடிவெடுத்து கல்யாணம் பண்ணிக்குறதுக்கு உனக்கு என்ன திமிருன்னு நீங்கல்லாம் கேள்வி கேட்டா...... யெஸ் அப்கோர்ஸ் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் எப்படியும் நடக்கப் போகுது.... அத எங்களுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சுக்கணும்னு நினைச்சேன். அவ்வளவு தான்! இன்னும் நீங்க எல்லாரும் சேர்ந்து ப்ளெஸ் பண்ணி நிறைய பேர் கல்யாணத்துக்கு வர்றப்போ தீம் மேரேஜ் பண்ணிக்கலாம்னும் யோசிச்சுட்டு இருக்கேன். அத அப்புறம் பார்க்கலாம்! அப்புறம் இதுல இன்னோரு ஆங்கிளும் இருக்கு, என்னதான் இசக்கி ராசு விவேக் சித்தப்பாவோட ரிலேஷன்னாலும் அவன் இனியாவை கடத்திட்டு போய் கல்யாணம் செஞ்சது ரொம்ப தப்பு..... அதுக்கெல்லாம் நீங்க இவ்வளவு பெரிசா ரியாக்ட் பண்ணலையே, போனீங்க, பேசினீங்க, மறுபடியும் எல்லார் முன்னாடியும் கல்யாணம் பண்ணி குடுத்துட்டீங்க! அவ்வளவுதானே; விஷயம் ஒண்ணு தான்...... அத ஜெய் நந்தன் பண்ணினா ஒரு மாதிரி ட்ரீட் பண்றீங்க, ராசு செஞ்சா அதுக்கு ஒரு சொல்யூஷன் கண்டுபிடிக்கிறீங்க! ஜீவானந்தனும் கவிப்ரியாவும் செய்றத மட்டும் மேக்னிஃபையிங் க்ளாஸ் வச்சு பார்த்தா என்ன அர்த்தம்? இந்த கல்யாணத்தை செஞ்சுகிட்டதுக்கு நான் ஸாரி கேக்கணும்னா அது மூணு பேர்ட்ட தான், ஐ'ம் ஸாரி அஜு, ஐ'ம் ஸாரி பவின், மூணாவது எங்கம்மா!
அவங்க மேரேஜை பத்தி எங்களுக்கு கத கதையா சொன்னாங்க,  அதெல்லாம் ஏன் சொன்னோம்னு இப்போ ஃபீல் பண்ணிட்டு உட்கார்ந்து இருப்பாங்க, தாத்தா நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடிச்சுட்டேன், இனிமே நீங்க தான் எனக்கும் கவிக்கும் ஒரு ஃபேர் ஜட்ஜ்மெண்ட் குடுக்கணும்!" என்று சொல்லி விட்டு தன் தாத்தாவை பார்த்துக் கொண்டு நின்றான் ஜீவானந்தன்.

"இப்ப என்ன பண்றது சித்தப்பா......?" என்று கேட்ட ஜெய் நந்தனை ஏறிட்ட ஜெயந்தன்,

"அத நீங்க எல்லாரும் தான் தம்பி சொல்லணும், சொன்னா மூணு பேருக்கும் ஒண்ணா சொல்லுங்க, இல்லன்னா சொல்லாதீங்கன்னு சின்னவர் சொல்றாரு, எத்தன தடவ தான் முதல்ல இருந்து முதல்ல இருந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கறது? சென்னையில கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிட்டு இங்க ரிஷப்ஸன் வச்சாலும் சரி, இல்ல இங்கேயோ சென்னையிலயோ மறுபடியும் கல்யாணம் வச்சாலும் சரி.... சின்னவங்க எல்லாம் கலந்து பேசிட்டு ஒரு முடிவு எடுங்க!" என்று சொல்லி விட்டு "பத்மா கொஞ்சம் வேலை இருக்கு, என் கூட வா!" என்று சொல்லி தன் மனைவியையும் தன்னுடன் அழைத்து கொண்டு அறைக்கு சென்று விட்டார் ஜெயந்தன்.

"டேய் அஜு என்னடா இவர் பாட்டுக்கு பொறுப்பை நம்ம தலையில தள்ளி விட்டுட்டு சித்திய கூட்டிட்டு எழுந்திரிச்சு போயிட்டாரு...... நீயும் ராமும் வேற வந்ததுல இருந்து யாருக்கு வந்த விருந்தோன்னு கன்னத்துல கைய வச்சுட்டு உட்கார்ந்து இருக்கீங்க, எம் பொண்டாட்டி என்னடான்னா கோவிச்சுகிட்டு உள்ள வர மாட்டேன்னு சொல்லிட்டா, இப்போ என்ன தான்டா பண்றது?" என்று கேட்டவரிடம் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு கவிப்ரியா,

"முதல்ல ரூபி பவின் கல்யாணத்த நல்லபடியா முடிங்க டார்லிங்..... இன்னும் யாருக்கும் என் மேல இருக்குற கோபம் தீரலன்னு நினைக்கிறேன், அத்தை, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணா, சித்தி, சித்தப்பா ஏன் உங்களுக்கு கூட என் மேல கோபம் தானே..... பரவாயில்ல. எப்போ உங்க கோபம் எல்லாம் போகுதோ அதுக்கப்புறம் எங்க லைஃப் ஐ செட்டில் பண்றத பார்த்து குடுங்க!" என்று சொன்னவளை, "அய்யோ அபியை ஏன் எல்லாரும் இப்படி அழ விடுறீங்க; பிடிச்சவனை கல்யாணம் பண்ணிகிட்டா, செஞ்சா செஞ்சுட்டு போகட்டுமே...... ஏய் இங்க வாடா இவ உன்னைய தான கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்புறம் அவ அழுறப்போ நீ பாட்டுக்கு வேடிக்கை பார்த்துட்டு இருக்க......?" என்று ஜீவானந்தனிடம் கேட்டவரிடம் புன்னகைத்த ஜீவா,

"நான் என்ன செய்வேன் சரஸ்வதி பாட்டி? எந்தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் சாவகாசமா எங்க லைஃப் ஐ பார்த்துக்கறோம்னு எம் பொண்டாட்டி சொல்றா. அவ அண்ணன் காரன் என்னடான்னா என் தங்கச்சிடீ நீ எப்படி இப்படியெல்லாம் பண்ணலாம்னு கேட்டு எம் பொண்டாட்டிய கன்னத்துல அறையுறான், ஜெயந்தன் தாத்தாட்ட ஒரு நல்ல பதில் சொல்லுங்கன்னு கேட்டா உள்ளுக்குள்ள ஓடிப் போயிட்டாரு. எங்கப்பாவும், மாமாவும் இதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்குறாங்க யோசிக்குறாங்க, யோசிச்சுட்டே இருக்காங்க. மீரு, கீது, இந்த மண்டை வீங்கி, எந் தங்கச்சிங்க, மாப்பிள்ளைங்க எல்லாம் என்ன சொன்னாலும் பிரச்சனை வந்துரும், அதனால அமைதியா நின்னுட்டு வேடிக்கை மட்டும் பார்ப்போம்னு எல்லாத்தையும்  ஆ......ன்னு பார்த்துட்டு இருக்குங்க...... இன்னும் உங்க பேத்தி கையப் பிடிச்சு யாரும் எங்கையில தரவேயில்லையே..... இப்போ நீங்க தர்றீங்களா? நான் அவள பத்திரமா பார்த்துப்பேன்!" என்று கேட்டவனிடம்,

"இவ்வளவு தானே..... இந்தா இவ கைய பிடிச்சுக்கோ, என் ராஜேஷ் மாதிரியே நீயும் இவள ரொம்ப லவ் பண்ணனும், ரெஸ்பெக்ட் பண்ணனும், உங்க ரிலேஷன்ஷிப் லாங் லாஸ்ட்டிங்கா இருக்கணும், ப்ராமிஸ் பண்ணு!" என்று தன் கையை நீட்டிய சரஸ்வதியின் கையில் தன் கையை வைத்து அழுத்திக் கொண்டவன் கையில் கவிப்ரியாவின் கையைப் பிடித்து கொடுத்தார் சரஸ்வதி.

"ஹலோ மிஸ்டர் பண்ணையார், சரஸ் பாட்டி பர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வச்சுட்டாங்க; இப்பவாவது சொல்லுங்க நான் கவிப்ரியாவை கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று கேட்ட தன் மகனிடம் உடனே ஒன்றும் பதில் பேசாமல் அர்ஜுன், மீரா, கீதா, பலராம், விவேக் அனைவரையும் கலந்து ஆலோசித்து விட்டு,

"இங்க பாரு ஆனந்த், உங்க கல்யாணம்  எப்போ நடக்கும், அத எவ்வளவு கிராண்டா நடத்தி பார்க்கணும்ன்னு வீட்ல எல்லாரும் ஆசைப்பட்டோம், அது உங்களுக்கும் தெரியும். இன்னிக்குல இருந்து மூணாவது நாள் காலையில நீங்க ரெண்டு பேரும் சிம்பிளா வீட்ல வச்சு மாலை மாத்திக்க போறீங்க, அன்னிக்கு ஈவ்னிங் ஷைலு பவின் ரிஷப்ஸனோடவே உங்களுக்கும் ரிஷப்ஸன் வச்சுடலாம், என்ன கேக்குறவங்களுக்கு பதில் சொல்றது கொஞ்சம் கஷ்டம்.... ஆனா என்னைப் பார்த்து தான் நீயும் உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்ன பார்த்தியா, அதுக்காக இது எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். இருக்கிறது இன்னும் ரெண்டு நாள் தான், அதுக்குள்ள உங்கம்மாவையும், வீட்ல இருக்கிறவங்க எல்லாரையும் பழையபடி நார்மலாக்குறது உன்னோட வேலை, ஏன்னா தப்புல பாதி நீயும் பண்ணியிருக்க..... ஏஞ்சல் மாமா உன் மேரேஜ்க்கு என்னடா கிப்ட் தரட்டும்?" என்று கேட்ட தன் மாமனிடம்,

"நீ என் மேல நிஜமாவே கோபமா இல்லன்னா கல்யாணத்தன்னிக்கு என்னைய கன்னுக்குட்டி மாதிரி தூக்கி சுத்தணும்! ப்ளீஸ் டார்லிங்?" என்று கேட்டு அவர் கழுத்தை கட்டிக் கொண்ட தன்னவளை உடனடியாக தன் தந்தையிடம் இருந்து பிரித்து நிறுத்தியவன்,

"கன்னுக்குட்டி மாதிரி சைஸ்ல இருக்கிறவங்கள தான் அப்படி எல்லாம் தூக்கி சுத்த முடியும், இவர் உன்னைய அப்படியெல்லாம் தூக்கினா பண்ணையாரம்மாவுக்கும், எனக்கும் ரொம்ப கோபம் வரும்...... அதனால மாமனார் கிட்ட வேற ஏதாவது கிப்ட் கேட்டு வாங்கிக்க! இனிமே உன் மூச்சுக் காத்து கூட எனக்கு தான் சொந்தம்........." என்று சொல்லி விட்டு வெளியே அமர்ந்திருந்த தன் அன்னையை சமாதானம் செய்ய சென்றான் ஜீவானந்தன்.

அவன் பின்னாலேயே வந்த ராகவை பார்த்து விட்டு நின்றவன், "என்னடா? எதுவும் வேணுமா?" என்று கேட்டான்.

"இல்ல.... உங்க ரெண்டு பேரு மேலயும் எல்லாரும் கோபமா இருந்தாங்கன்னு தெரிஞ்சதுனால முதல் ஆளா பார்கவ களத்துல இறக்கி விட்டுட்டீங்க போல, என்னிக்கும் இல்லாம கவி மேல அவனுக்கு திடீர்னு இப்படி கோபம் வருதுன்னு ரொம்ப நேரமா யோசிச்சுட்டு இருந்தேன், அதுல தான் ரெண்டு பேரும் சேர்ந்து அண்டர்ப்ளே பண்ணியிருப்பீங்கன்னு தோணுச்சு. இது உங்க ஐடியா தானே மச்சி.....?" என்று கேட்ட ராகவிடம் சிரிப்புடன்,

"உன்னைய ஏன் எல்லாரும் மண்டைவீங்கின்னு கூப்பிடுறோம்னு இப்போ உனக்கு தெரியுதா? எதுவும் பேசாம குறுகுறுன்னு நீ எல்லாத்தையும் பார்க்குறப்பவே எனக்கு கொஞ்சம் பயமா இருந்ததுடா, நல்ல வேளை எல்லார் முன்னாடியும் நீ எதுவும் கேட்டு வைக்கல......
ராம் மாமாவுக்கு விஷயம் தெரிஞ்சவுடனே ரெண்டு பேரும் சேர்ந்து ப்ளான் பண்ணிட்டோம்டா..... ஆனா அவன நான் உங்க அக்காவ அடிக்குற மாதிரி நடின்னு தான் சொன்னேன். அவன் தான் உண்மையிலேயே கோபப்பட்டு நிஜமாவே அடிச்சுட்டான்..... கவிய அழ வச்சதுக்கு அவனுக்கு ஒரு நாள் இருக்கு, இந்த மேரேஜ்ல உனக்கு எதுவும் அப்ஜெக்ஷன் இல்லலடா?" என்று கேட்டவனை புன்னகையுடன் ஏறிட்டவன்,

"என்ஓசி எல்லாம் மேரேஜ்க்கு முன்னால வாங்கணும், மேரேஜ் முடிச்சிட்டு ஒவ்வொருத்தரையா கன்வின்ஸ் பண்ணிட்டு இருக்க கூடாது. கவி எந்த அளவுக்கு லவ்விங் நேச்சரோ அந்த அளவுக்கு ஸ்டபர்ன் காரெக்டர் கூட, இப்போலேர்ந்து நீங்க அவளுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதிருக்கும். பார்த்துக்கோங்க! விஷ் யூ சக்ஸஸ்புல் மேரேஜ்!" என்று சொல்லி வாழ்த்திய ராகவிடம் கைகுலுக்கி விட்டு தன் அன்னையிடம் சென்றான் ஜீவானந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro