💟 ஜீவாமிர்தம் 53
கவிப்ரியா தன் சித்தப்பாவின் முகத்தில் தெரிந்த இறுக்கமான பாவத்தை பார்த்து சற்று மிரண்டு போய் தான் நின்று விட்டாள். இன்று இப்போது இல்லா விட்டால் இனி எப்போதும் இல்லை என்று அவள் மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றத் தான் அவனிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டாள், ஆனால் அப்படிக் கேட்கும் போதும் சரி பின் திருமணம் செய்து கொண்ட போதும் சரி பின்விளைவுகளைப் பற்றி எல்லாம் பெரிதாக இருவருமே யோசிக்கவில்லை. ஜீவானந்தன் எதற்கும் கலங்காமல் தைரியமாக இருக்க தன் திருமணத்தால் கவிப்ரியா தான் நெஞ்சில் பாரத்தை ஏற்றி வைத்தது போல் எவரையும் நிமிர்ந்து எதிர்நோக்க கூட தைரியமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். பலராமிற்கும் விஷயம் தெரிந்து விட அவளது பயம் இரு மடங்காகி விட்டது.
அறைக்கதவை சாற்றிய பலராம் கவிப்ரியாவை அழைத்து தன் எதிரில் நிறுத்தி, "கவிம்மா இத்தன வருஷத்துல நீயோ பாகி, ராகியோ எங்கட்ட எதுவும் வேணும்னு கேட்டு நானோ, இல்ல அப்பாவோ உனக்கு அது வேண்டாம்ன்னு எந்த விஷயத்துக்காவது அப்ஜெக்ஷன் சொல்லியிருக்கமா?" என்று கேட்ட தன் சித்தப்பாவிடம் கரம் கூப்பி, "ஸாரி சித்தப்பா; எல்லாரையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு தான் ஜீவாவும் என்கிட்ட சொன்னான். நான் தான் இப்பவே பண்ணிக்கலாம்னு அவன்ட்ட அடம் பிடிச்சேன், இப்போ உங்களையெல்லாம் பார்த்த பிறகு ஃபீலிங்கா இருக்குன்னாலும் அந்த நேரம் நீங்க யாரும் எங்களுக்கு நியாபகமே வரல சித்தப்பா. சச் அ லவ்லி மொமெண்ட், அவர் மேரேஜ் ஜஸ்ட் ஹேப்பண்ட் லைக் அ ட்ரீம்! இதுக்கு நீங்க பனிஷ்மெண்ட் குடுத்தாலும் எனக்கு தான் சித்தப்பா குடுக்கணும், ஏன்னா முழுக்க முழுக்க ஜீவாவை கம்பெல் பண்ணி சம்மதிக்க வச்ச தப்பு என்னோடதுதான்!" என்று சொல்லி விட்டு பலராமின் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றாள் கவிப்ரியா.
அடக்க முடியாத கோபத்துடன், "என்னது ஜஸ்ட் ஹேப்பண்டா? வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் சந்தோஷமா எதிர்பார்த்து காத்துட்டுருக்குற கல்யாணம்...... உனக்கு சின்னப்புள்ள விளையாட்டு மாதிரி விளையாட்டா போச்சா? இல்ல நீ என்ன சொன்னாலும் அதுக்கு வீட்ல எல்லாரும் தலையாட்டிடுவாங்கன்ற திமிராகிடுச்சா? எவனோ ஒருத்தனுக்கு கல்யாணம்னு கேட்டு தாலி செஞ்சு வச்சுட்டு, ப்ளான் பண்ணி நீங்க ரெண்டு பேர் மட்டும் இருக்குற நேரம் கல்யாணம் பண்ற அளவுக்கு என்ன இப்போ அவசரம் வந்துடுச்சு..... வீட்ல பெரியவங்க எல்லாரும் உயிரோட தானே இருக்கோம்? அப்புறம் என்ன இந்த ஜஸ்ட் ஹேப்பண்ட், இப்பவே பண்ணிக்கலாம் இப்படி பேத்தல் எல்லாம்...... கவிப்ரியா?" என்று கேட்ட பலராம் தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் கவிப்ரியாவின் கன்னத்தை நோக்கி கைகளை உயர்த்தியிருந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கண்களை மூடிக்கொண்டு பயத்துடன் நின்ற தன் மனைவியை தன் கைப்பிடிக்குள் இழுத்துக் கொண்ட ஜீவானந்தன், பலராமின் அறையை தான் வாங்கியிருந்தான்.
"யப்பா...... காதுல கொய்ங்ங்ங்குது மாம்ஸ்; என்னா அடி! இந்த கவிப்ரியாவை நீ சும்மா தொட்டாலே நாலு நாளைக்கு சொல்லிக் காமிப்பா, இவ்வளவு பலமா அறையுறியே... அவளுக்கு வலிக்காது? இந்த மாதிரி முரட்டு அடியெல்லாம் தாங்குவாளா......
பேபி நீ கிச்சன்ல போய் ஒரு டம்ளர்ல ஒரே ஒரு டம்ளர்ல பால் எடுத்துட்டு வா! இனியாவும் பிக்பாயும் குடிச்ச மாதிரி நாம ரெண்டு பேரும் குடிக்கவேயில்லையே.....?" என்று கேட்ட ஜீவானந்தனை வெறித்த பலராம் "டேய் இன்னொரு அறை வேணுமா உனக்கு? உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க?" என்று கேட்டார்.
"கூல் மாம்ஸ்! கவிப்ரியா கூட சேர்ந்து நீ பாதி நான் பாதின்னு ஷேர் பண்ணி பால் குடிக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன். அவ்வளவு தான், அவ்வளவே தான்.... அதுக்கு அப்புறம் நீ அவளை கூட்டிட்டு போ! ஏய் நீ என்னடீ எங்க வாயைப் பார்த்துட்டு நின்னுட்டு இருக்க... கிளம்பு!" என்று சொல்லி அவளுக்கு கதவை திறந்து விட்டான் ஜீவானந்தன்.
"ஏதோ இந்த அளவுக்கு அறிவாவது ரெண்டு பேருக்கும் இருந்தா பரவாயில்லை..... ஆனா ஏன்டா ஜீவாம்மா? உங்க கல்யாணத்தை பத்தி எல்லாருக்கும் என்னென்ன கனவு இருக்கு தெரியுமா...... உன் கல்யாணத்துக்கு ஒரு வாரம் நம்ம வொர்க்கர்ஸ் எல்லாருக்கும் பேமிலியோட இங்க வர வச்சு விருந்து போடணும்ன்னு மச்சான் ஆசைப்பட்டாரு. நானும் அஜுவும் கூட எங்க பொண்ணை தங்க பல்லாக்குல வச்சு உங்கிட்ட தாரை வார்த்து குடுக்கணும்ன்னு ஆசைப்பட்டோம்!" என்று பலராம் சொல்லிக் கொண்டு இருக்கையில் ஜீவானந்தன் கைகளை தட்டினான்.
"சூப்பர்..... ஆளாளுக்கு ஐடியால்லாம் பின்னுறீங்க போல; ஆனா எனக்கும் கவிக்கும் நீங்க கல்யாணம் பண்ணப் போறீங்களா? இல்ல உங்க ஸ்டேட்டஸ் எக்போஷர் காட்டப் போறீங்களா..... ப்ராமிஸா சொல்றேன் ராம்; அப்பா அம்மா எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணும் போது ஸாகரி க்ரானியோட செயினை அம்முலுவுக்கு ஒரு ரெஹக்னிஷனா, கிப்டா குடுக்கணும்ன்னு நினைச்சு தான் உங்கிட்ட செஞ்சு தர சொல்லி கேட்டேன். ஆனா எங்க கல்யாணம் நடக்குறதுக்கு அரைமணி நேரம் முன்னாடி வரைக்கும் எங்களுக்கே இன்னிக்கு எங்க கல்யாணம் நடக்கப் போகுதுன்னு தெரியல. மாணிக்கம் தாத்தா எங்கிட்ட என்னன்னமோ சொல்லி சும்மாவே நான் பயந்து போயிருந்தேன், பார்த்தா இவ வேற கூட கொஞ்சம் பயமுறுத்துறா; இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ எனக்கு கல்யாணம் ஆகத்தானே போகுது? இல்ல கவி சொல்ற மாதிரி அதுக்கான வாய்ப்பு ஒருவேள வராமலே போய்ட்டான்னு நினைக்கும் போதே பயமாகிடுச்சு, இவள வாழ்நாள் முழுக்க சந்தோஷமா பார்த்துக்கணும்ற பயத்தோட தான் ரகுபாட்டா முன்னாடி போய் நின்னேன், ஆனா இப்போ எனக்கு எந்த பயமும், குற்ற உணர்ச்சியும் இல்ல, என் பொண்டாட்டி தான் பாவம் ரொம்ப நடுங்கிட்டு இருக்கா.... பெரியவங்களோட ஆசையெல்லாம் எங்களுக்கு புரியாம இல்ல, பட் நாங்க ரெண்டு பேரும் எங்க கல்யாணத்தை விளையாட்டா செய்யல; அத மட்டும் புரிஞ்சுக்கோயேன் ராம்!" என்று சொன்னவன் கண்களில் தெரிந்த வலி பலராமை சற்று அசைத்தது.
"இப்பவும் நான் முழுசா கன்வின்ஸ் ஆகல, ஆனா அடுத்து என்ன பண்ணப் போறீங்க ரெண்டு பேரும்.....?" என்று கேட்ட தன் மாமனிடம் சிரிப்புடன் நிமிர்ந்தவன்,
"நீ பாதி கன்வின்ஸ் ஆகிட்டல்ல, அது போதும்..... நானோ கவியோ எங்களுக்கு கல்யாணம் ஆனத நாங்களா போய் யார்ட்டயும் சொல்லமாட்டோம்னு டிஸைட் பண்ணியிருக்கோம், ஸோ இப்போ நீ வீட்ல எல்லார்ட்டயும் முதல்ல போய் அனௌன்ஸ் பண்றதுனாலும் பண்ணலாம், இல்ல எங்களை மாதிரியே அமைதியா இருக்கறதுனாலும் இருக்கலாம், உன் முடிவு என்னவா இருந்தாலும் நீங்க எல்லாரும் சேர்ந்து ஃப்ளெஸ் பண்ணி அவளை என் கிட்ட குடுக்கற வரைக்கும் நான் என்னோட லிமிட்ஸ் தாண்ட மாட்டேன், ஏன்னா கவிப்ரியாவை அவளோட செல்ஃப் ரெஸ்பெக்டோட சேர்த்து நான் லவ் பண்றேன்! த ஆப்ஷன் இஸ் யுவர்ஸ்!" என்று சொன்ன ஜீவானந்தனை தழுவி அணைத்து விட்டு,
"கல்யாணத்துக்கு முன்னாடி உன் லவ்வை காப்பாத்திக்கிட்டது பெரிசில்ல ஜீவாம்மா, இனிமேலும் உங்களோட லவ்வை காப்பாத்திக்கணும்...... ஆல் த பெஸ்ட்! நான் உங்க மேட்டர்ல ஏதாவது பிரச்சனை வந்தா வாயை திறக்கறேன். அது வரைக்கும் எல்லாம் ஸ்மூத்தா போகட்டும்..... குட்நைட் ஜீவாக்குட்டி!" என்று சொன்னவரிடம்,
"ராம் பால் இன்னும் வரல...!" என்றான் ஜீவானந்தன் புன்னகையுடன்.
"வாய மூடிட்டு படுறா..... அதெல்லாம் உன் பர்ஸ்ட் நைட் அன்னிக்கு குடிச்சுக்க, இப்போ குப்புற படுத்து தூங்கு!" என்று திட்டி விட்டு அவனது அறையில் இருந்து வெளியே சென்றார் பலராம்.
லேக் வ்யூ ரெஸ்டாரெண்டுக்கு சரஸ்வதியை அழைத்துச் சென்று அவரது விருப்ப உணவுகளை ஆர்டர் செய்த ராகவ் இப்போது அவருடன் போராடி ஓய்ந்திருந்தான்.
"மணியாச்சு சரஸ்.... வா வீட்டுக்கு போகலாம்!" என்று சொல்லிக் கொண்டிருந்தவனிடம்,
"அஜு ராஜேஷ் எங்க? இங்க வருவாருன்னு சொன்னேல? ஏன் இன்னும் வரல? அவர் வர்ற வரைக்கும் இங்கயே வெயிட் பண்ணலாம்!" என்று சொல்லி விட்டு தன் பேரனை சற்றும் கண்டுகொள்ளாமல் ஏரியைப் பார்த்து கொண்டு அமர்ந்து விட்டார் சரஸ்வதி.
ரெஸ்டாரெண்ட்டின் மேலாளர் வசுந்தரா ஐந்தாவது முறையாக அவன் முன்பு வந்து நிற்கவும் அவன் "ஹாய் மிஸ் வசுந்தரா!" என்றான்.
அவள் சலிப்புடன், "ஸார் எத்தன தடவை ஸார் ஹாய் சொல்லிட்டே இருப்பீங்க? தயவு செஞ்சு கிளம்புங்க ஸார்...... ரெஸ்ட்டாரண்ட் க்ளோஸிங் டைம் ஸார்!" என்று சொல்லி கடிகாரத்தை பார்க்க அவன் புன்னகையுடன்,
"ஸாரி டூ பாதர் யூ மிஸ் வசுந்தரா.... உங்கள இம்சை பண்றேன்னு நல்லாவே தெரியுது, பட் எங்க பாட்டி கிளம்ப மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டு உட்கார்ந்து இருக்காங்க, ஒரு சின்ன ஹெல்ப் பண்றீங்களா.... இப்போ என் பாட்டி மொபைலுக்கு ஒரு கால் வரும். ராஜேஷ்னு ஒருத்தர் கூப்பிடுவாரு, அவங்க கொஞ்சம் எக்ஸைட் ஆகி எங்கயும் போயிடாம இங்கயே இருக்கற மாதிரி பார்த்துக்கிட்டீங்கன்னா இன்னொரு பைஃவ் மினிட்ஸ்ல ரெண்டு பேரும் கிளம்பிடுறோம்!" என்று ராகவ் சொல்ல வசுந்தரா வேறு வழியின்றி தலையாட்டி வைத்தாள்.
சரஸ்வதியின் எதிரில் அமர்ந்து அவரைப் பார்த்து கொண்டு இருந்தவளிடம் அந்த பாட்டியின் முகத்தில் தெரிந்த ஏக்கமும் பூரிப்பும் கண்டு மொபைலை ஸ்பீக்கரில் போட்டு இருவரது உரையாடலையும் ஒரு காதல் திரைப்படம் பார்ப்பது போல் உற்சாகத்துடன் இருபுறமும் கன்னத்தில் கைவைத்து கொண்டு அவர் பேச்சை ரசித்துக் கொண்டு இருந்தாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்த ராகவ் அவளிடம் கைகுலுக்கி "தேங்க்யூ சோ மச் மிஸ் வசுந்தரா!" என்றான் புன்னகையுடன்.
"நான் இல்ல சார் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்..... மோஸ்ட்லி இப்பல்லாம் யாரும் அப்பா அம்மாவை கூட ரெஸ்டாரெண்டுக்கு கூட்டிட்டு வர மாட்டேங்குறாங்க ஸார், அப்படி வந்தா ஒண்ணு பிறந்த நாள், கல்யாண நாள் அந்த மாதிரி ஏதாவது ஸ்பெஷல் டேயா இருக்கும். உங்கள மாதிரி பாட்டியோட வர்றவங்க எல்லாம் ம்ஹும் எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் வந்ததேயில்ல. அதுலயும் உங்க தாத்தா யப்பா லவ்ல பின்னுறாரே ஸார்...... இப்படி ஒருத்தர் நம்மளை காதலிச்சா எவ்வளவு நல்லா இருக்கும். எனக்கு எப்படியாவது உங்க தாத்தாவை ஒரு தடவ மீட் பண்ணனும் ஸார்!" என்று கேட்டவளிடம் ஒரு முறைப்பை தந்தவன்,
"மிஸ் வசுந்தரா நான் உங்க கிட்ட என் பாட்டியை பத்திரமா பார்த்துக்கோங்கன்னு மட்டும் தான் சொன்னேன், அவங்க கான்வர்ஷேஸனை கேக்க சொல்லல. உங்களுக்கு என்ன ஒரு 20 வயசு இருக்குமா? க்ராஜீவேஷன் கூட கம்ப்ளீட் பண்ணுனீங்களான்னு தெரியல. அதுக்குள்ள காதல் பத்தி பேச்சு.... போங்க லைஃப்ல உருப்படியா சாதிக்க நிறைய விஷயம் இருக்கு. அத முதல்ல செய்ங்க, அதுக்கப்புறம் பாடலாம் காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல்ன்னு!" என்று சொல்லி விட்டு சரஸ்வதியை அழைத்து கொண்டு சென்றவனை ஓட்டமாக ஓடி அவன் காரில் ஏறுமுன் வழிமறித்து நின்றாள் வசுந்தரா.
"வாட் அகெய்ன்......?" என்று எரிச்சலுடன் முகம் சுளித்த ராகவிடம்,
"உங்களுக்காக என் டியூட்டி முடிஞ்சதுக்கப்புறமா கிட்டத்தட்ட நாற்பது நிமிஷம் உட்கார்ந்து இருந்து உங்க பிரச்சனையை சரி பண்ணி குடுத்துருக்கேன், நீங்க பாட்டுக்கு ஸ்டைலா ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என்னை திட்டிட்டு வேற போனா என்ன அர்த்தம் மிஸ்டர்?" என்று இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை முறைத்தவளிடம்,
"உங்க கிட்ட கேட்ட ஹெல்ப் முடிஞ்சது, இனிமே நீங்க உங்க வழியில போகலாம்ன்னு அர்த்தம், வழியை விடுங்க!" என்று சொல்லி அவளை நகர்த்தி விட்டு காரில் ஏறியவனை பார்த்து,
"மறுபடியும் நான் உன்னை கண்டிப்பா எங்கயாவது மீட் பண்ணனும், அப்போ இருக்கு உனக்கு மூஞ்சிய பாரு மூஞ்சுறுவுக்கு டூப் போட்ட மாதிரி.....!" என்று சொல்லி கழுத்தை நொடித்து கொண்டு சென்றாள் வசுந்தரா.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro