💟 ஜீவாமிர்தம் 52
ஹாலில் அனைவரும் ஒன்றிணைந்து அமர்ந்திருந்த போது பார்கவ் அவனுடைய காதல் கதையை அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்க ஜீவானந்தன் வந்து தன் தந்தையின் அருகே அமர்ந்து கொண்டான்.
இனியாவும் ராசுவும் ஒருவருக்கொருவர் கையைக் கோர்த்து கொண்டும், ஏதோ ரகசியமாக பேசிச் சிரித்துக் கொண்டும் இருக்க அர்ஜுனின் அருகில் சென்று அமர்ந்து கொண்ட தன் மனைவியைப் பார்த்து அவனுக்கு எரிச்சல் வந்தது.
இவ்வளவு தூரம் அவளுக்கு புரிய வைத்தும் இன்னும் கவிப்ரியாவின் முகத்தில் முழுதாக தெளிவு வராத காரணத்தால் ஒரு பெருமூச்சை வெளியேற்றி தலையை குலுக்கி கொண்டான்.
"பாகி அத்தான், அண்ணா வந்துட்டான்..... நீ உன் லவ் ஸ்டோரிய சீக்கிரம் சொல்லி முடிச்சன்னா கேமை ஸ்டார்ட் பண்ணலாம்!" என்று ஷைலஜா பார்கவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்க கௌதமனும் ராகினியும் அனைவரிடமும் சொல்லி விட்டு சென்னைக்கு கிளம்பினர். தன் கணவரை மட்டும் இந்த திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று சொல்லி வருந்திய சரஸ்வதியை அழைத்து கொண்டு ராகவ் வெளியே சென்றிருந்தான்.
அபிநயா தன் கணவனை ரசித்தபடி தனது பள்ளிப் பருவ நாட்களை அசைபோட்டுக் கொண்டிருக்க ஜீவானந்தன் ஒரு பொறுமையற்ற எரிச்சலுடன் பார்கவின் அருகில் வந்து நின்றான்.
"வா மச்சி நீயும் வந்து என் லவ் ஸ்டோரிய சொல்றதுக்கு ஹெல்ப் பண்ணு, இந்த அபியை கூப்பிட்டா வெட்கப்பட்டுட்டு வர மாட்டேங்குறா! என் லவ் ஸ்டோரிய நம்ம வீட்ல இருக்கிறவங்க யாரும் கேக்கவேயில்லயே.... அதான் எல்லார்ட்டயும் சொல்லிட்டு இருக்கேன்!" என்று சொன்ன தன் மாமன் மகனிடம்,
"பாகி உன் லவ் ஸ்டோரிய சூப்பரா நான் சொல்லட்டுமா?" என்று ஜீவா பார்கவிடம் கேட்க ஜீவானந்தன் பேச ஆரம்பித்தால் இன்னும் கால் மணி நேரம் தன்னுடைய காதலைப் பற்றி விலாவாரியாக சொல்லுவான் என்று நினைத்த பார்கவ் மைக்கை அவனிடம் நீட்டினான்.
"அதாகப்பட்டது மக்களே இந்த பாகியும், அபியும் சேர்ந்து படிச்ச ஸ்கூல்ல கல்ச்சரல்ஸ் வர, அபிநயா கல்ச்சரல்ஸ் செகரட்டரியா இருக்க, ஒரு மொக்கை ஈவெண்ட் ஆர்கனைஸரை தெரியாம அவங்க செலக்ட் பண்ணி கடைசி நேரத்தில் சொதப்பிடுச்சு, நம்ம ஹீரோ ஸார் அபிநயசரஸ்வதி கைய பிசைஞ்சுட்டு இருக்கிறத பொறுக்க முடியாம அவரோட அம்மாவை கொண்டு போய் ஸ்டேஜ்ல ஏத்தி அவர் பாடி, கீத்துவும் வயலின் வாசிச்சு ப்ரோக்ராம் லாஸ்ட் மினிட் தம் பிரியாணி மாதிரி சும்மா கும்முன்னு க்ளாப்ஸ் அள்ளிடுச்சு, அதுக்கப்புறம் அண்ணலும் நோக்க அவங்களும் நன்றி சொல்ல இப்படி ஆரம்பிச்ச அவங்க நட்பு கொஞ்ச நாள் லவ்வாகி, அப்புறம் நிறைய நாள் ஒன் சைட் லவ்வாகி, இப்போ கல்யாணத்துல முடிஞ்சு இன்னும் ஜெகஜோதியா கன்டினியூ ஆகிட்டு இருக்கு, மச்சி கதை முடிஞ்சுடுச்சு, சீக்கிரம் இந்த செலிபரேஷனை முடிச்சிங்கன்னா அதுக்கப்புறம் டின்னர முடிக்கலாம், ஏன்னா பாகிக்கு பசிக்கும், அதான் சொல்றேன், ஷைலு இந்தாடா மைக், ஏதோ கேம் வைக்கணும்னு சொன்னியே?" என்று கேட்டு தன் தங்கையை அழைத்த ஜீவானந்தனை சாவடிக்கும் தோரணையில் பார்த்த பார்கவ்,
"ஏன்டா உன் லவ்வை பத்தி சொல்லுன்னு சொன்னா ஒரு புக் போடுற அளவுக்கு டெவலப் பண்ணுவ, அதே எங்க லவ்வை பத்தி சொல்லுன்னு சொன்னா என்னமோ ஒரு பாராஃக்ராப்ல கதை சொல்ற!" என்று ஜீவானந்தனை பார்த்து திட்டிக் கொண்டு இருந்தவன் அருகில் இடுப்பில் கை வைத்து கொண்டு வந்து நின்றார் கீதா.
"நான் ஹீரோடா..... ரெண்டு வயசுல இருந்து ஸ்டார்ட் பண்ணின லவ்வை புக் போடற அளவுக்கு சொல்லுவேன் தான்..... நீயெல்லாம் சைடு பார்ட் உனக்கெல்லாம் அரைப்பக்கம் பேசினாலே அதிகம். வகையா வந்து நீயா மாட்டுன என் நண்பா
கம் ஆன் கீத்து..... சார்ஜ்!" என்று சொல்லி விட்டு ஜீவானந்தன் விசிலடிக்க, பார்கவ் தன் அன்னையை பயத்துடன் பார்த்து, "மாம் ஐ வில் எக்ஸ்ப்ளைன் தி சிச்சுவேஷன்!" என்று சொல்லி அவர் தாடையைப் பற்றி கெஞ்சிக் கொண்டிருந்தான்.
"ஐ லவ் யூ அம்மான்னு நீங்கல்லாம் சொன்னாலே அதுக்கு பின்னால என்ன இருக்குன்னு நாங்க ரொம்ப யோசிக்கணும் போலிருக்குடா, உன் அப்பாவுக்கு அப்புறம் நீ கேட்டுத் தான் உன் ஸ்கூல் பங்ஷன்ல வந்து வாசிச்சேன், ஆனா என் டேலண்ட்க்காக இல்லாம அபிட்ட நல்ல பேரு வாங்கணும்ன்னு தான் என்னைய நீ
அங்கே கூட்டிட்டு போயிருக்க..... இனிமே கீத்துன்னு கூப்பிட்டு ஏதாவது ஹெல்ப் வேணும்னு பின்னாடி வா, பிச்சுப்புடுறேன்!" என்று சொல்லி விட்டு கோபத்துடன் முறைத்துக் கொண்டு நின்ற தன் தாயைக் கட்டிப் பிடித்து கொண்ட பார்கவ்,
"நீ உன் வயலின் டேலண்டை ஒளிச்சு வச்சுருக்கன்னு எனக்கு அப்பாவுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் அம்மா, ப்ரோக்ராம் மொக்கையா இருக்கணும்னா நான் மட்டும் பாடி கல்லடி வாங்குறதுனாலும் வாங்கியிருப்பேனே...... சூப்பரா இருக்கணும்னு நினைச்சு தானே உன்னையும் கூட்டிட்டு போனேன்; இன்பாக்ட் உன் மருமக என் கிட்ட முத முதல்ல பேசினதே உன் வயலின் மியூசிக் ரொம்ப நல்லா இருக்கு. அவங்க டேலண்டை வேஸ்ட் பண்ணாதீங்க, இன்னும் நிறைய பேருக்கு ஸ்ப்ரெட் பண்ணுங்கன்னு தான்.... நீ உன் மருமக மெச்சின ஒரு மாமியார் தெரியுமா கீத்து செல்லம்!" என்று அவன் அன்னையை பார்கவ் சமாதானம் செய்து விட "ச்சை பிட்டைப் போட்டு தப்பிச்சுட்டான்டா!" என்று ஜீவா வருத்தப்பட்டான்.
அனைவரையும் வரிசையில் உட்கார வைத்த ஷைலஜா அனைவர் முன்பும் ஒரு டப்பாவை நீட்டினாள். "இதுல இருந்து உங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒரு கலர் பென்சிலை எடுங்க!" என்று அவள் அனைவரிடமும் சொல்ல அனைவரும் ஒவ்வொரு வண்ண பென்சிலை எடுத்துக் கொண்டு வரிசையில் அமர்ந்தனர்.
வயலட், இண்டிகோ,ப்ளூ, க்ரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் என்னும் ஏழு வானவில் நிறங்களும் ஜெயந்தன், பத்மா, ஜெய் நந்தன், மீரா, பலராம், கீதா, விவேக், கவிப்ரியா, பார்கவ், அபிநயா, பவின், ஷைலஜா, இனியா, இசக்கி ராசு ஆகிய பதினான்கு பேரிடத்தில் இருக்க ஜீவா, அர்ஜுன் மற்றும் நிர்மலா மூன்று பேர் கைகளில் மட்டும் வழக்கமான பென்சில்கள் இருந்தன.
"லேய் பவினு உங்கையில மஞ்சக் கலரு இருக்குதுல்ல.....அத எனக்கு குடுவேன்!" என்று பவினிடம் கேட்டு தன் கையில் இருந்த ஊதா நிற பென்சிலை அவனிடம் மாற்றிக் குடுத்து விட்டு இனியாவுடன் சென்று அவள் பச்சை நிறத்திற்கு அடுத்து அமர்ந்து கொண்டான் ராசு. அவன் அந்த வேலையை ஆரம்பித்தவுடன் அனைவரும் அவரவர் பென்சிலை மாற்றும் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
"அண்ணா, அம்மா, மாமா மூணு பேரும் அவுட்.... மூணு பேரும் வெளிய வாங்க!" என்று ஷைலு சொல்ல ஜெய்நந்தன், ஜெயந்தன், விவேக் மூவரும் பதறிப் போய் அவரவர் பென்சிலை உடைத்துக் கொண்டு இருந்தனர்.
"ஜீவாம்மா கவி ஆரஞ்சு கலர் ஸோ நீ சித்தப்பாட்ட இருக்குற ரெட் கலரை வாங்கிக்குறியா?" என்று விவேக் கேட்டுக் கொண்டிருக்கையில் ஷைலஜா கோபத்துடன் அனைவர் அருகிலும் வந்து, "என்ன நடக்குது இங்க? யாராவது ஒருத்தர் கேம்ல அவுட் ஆகணும்ல? ஆளாளுக்கு சீட்டீங் பண்ணிட்டு இருக்கீங்க..... தாத்தா நீங்க கூடவா?" என்று கேட்டு அவள் ஜெயந்தனை பார்க்க அவர் புன்னகையுடன் தனது மருமகள் கையில் ஒரு பாதி பென்சிலை கொடுத்து விட்டு,
"ரூபிக் கண்ணு.... இது சீட்டீங் இல்லம்மா; ஷேரிங்! தனியா இருக்கும் போது அடிச்சுக்கலாம், புடிச்சுக்கலாம்; ஆனா மொத்தமா விளையாடிட்டு இருக்கும் போது மூணு பேரை மட்டும் தனியா ஒதுக்கி வச்சா நல்லாவே இல்லடா! உங்கப்பனை பாரு அவன் பொண்டாட்டிய கூட மறந்துட்டு ப்ரெண்டு கையில பென்சில் இல்லன்னு சொல்லி உங்க அஜு மாமாட்ட நீட்டுறான்!
நீயும் வந்து பவின் கிட்ட உட்கார்ந்துக்கோ!" என்று சொல்ல ஷைலு புன்னகையுடன் பவின் பக்கத்தில் ஸோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்து அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு ரிமோட்டை அழுத்தவும் இனியா இசக்கிராசுவின் போட்டோக்கள் திரையில் ஒளிர்ந்தது.
இனியாவும், ஷைலுவும் இதுவரை எடுத்திருந்த புகைப்படங்களை, இனியாவும் ராசுவும் அவ்வப்போது எடுத்து இருந்த புகைப்படங்களுடன் சேர்ந்து ஸ்லைட் ஷோ செய்திருந்தாள் ஷைலு. தோழிகளின் படமும், தம்பதியர் படமும் மாறி மாறி வந்தது.
"லட்டு இது தான் உன் கல்யாணத்துக்கு என்னோட கிப்ட். இந்த பிக்ஸ்ல இருந்து நான் என்ன சொல்ல வர்றேன்னா..... உனக்கு கல்யாணம் ஆகிட்டாலும் நம்மளோட ப்ரெண்ட்ஷிப்பை என்னிக்கும் மறந்து......" என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசிக் கொண்டு ஷைலஜா திடீரென்று உடைந்து அழ இனியா தன் தோழியிடம் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டு,
"நம்ம ப்ரெண்ட்ஷிப் மறந்து போற அளவுக்கு ட்ரையின் ப்ரெண்ட்ஷிப் கிடையாது. லூசாடீ நீ? வாரம் ஒரு நாள் கண்டிப்பா நீ அம்பைக்கு வரணும், இல்ல நான் சென்னைக்கு வர்றேன், உன் லைஃப்ல என்னோட இடத்தை வேற யாருக்கும் நீ குடுக்கக் கூடாது. இது என் ஆர்டர்னு வச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. கண்ணைத் துடைச்சுக்கோ ரூபிம்மா, நீ அழுதா எனக்கும் அழுகை வருது!" என்று தோழியர் ஒருவரை ஒருவர் அவர்களே சமாதானம் செய்து கொண்டு விட்டனர்.
"ஏய் முடிச்சுட்டீங்களாடீ வயிறு பசிக்குது..... எல்லாரும் வரலைன்னா டின்னர் எடுத்து வைக்க மாட்டாங்க, ரெண்டு பேரும் சாப்பிட்டு வந்து கட்டிப் பிடிச்சுக்கிட்டு கன்டினியூ பண்ணுங்க பக்கிகளா!" என்று இருவரையும் அழைத்த பார்கவிடம்,
"நல்லா போய் கொட்டிக்கோ மலை முழுங்கி.... அபி அக்காவுக்கும் கொஞ்சம் சாப்பாட்டை விட்டு வை, பாவம் அவங்க உன்னைய போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு...... சரியா சாப்பிடக் கூட முடியலையாம்!" என்று போகும் போக்கில் பார்கவை வாரி விட்டு சென்றாள் ஷைலஜா.
"என்ன வார்த்தை சொல்லிட்டு போறா பாரு குட்டை கொக்கு, நா என் பொண்டாட்டிக்கு ஊட்டி விட்டுட்டு அப்புறமா எல்லாத்தையும் சாப்பிடுவேன்டீ..... இல்லடா வாணிம்மா?" என்று தன் மனைவியின் கையைப் பற்றி அழைத்து சென்றவன் கையை சொறிந்த அபிநயா,
"கவி ரூபி கரெக்டா தான் சொல்றா..... சில நேரம் நீங்க டீவி பார்த்துட்டு இருக்கறப்போ என்னோட ஷேரையும் சேர்த்து சாப்பிட்டுடுறீங்க!" என்று குற்றம் சொன்ன தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தவன்,
"நான் உங்க கிட்ட இருந்து எடுத்து சாப்பிடுற வரைக்கும் நீங்க என்ன செய்றீங்க? ப்ளேட்ல வக்கிற ஐயிட்டத்த வேகமா சாப்பிட கத்துக்கோங்க மேடம்!" என்று சொல்லி அவளுடன் இரவு உணவிற்கு சென்றான் பார்கவ்.
அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு இனியா இசக்கிராசுவை பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்து அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு அவளை கேலி செய்து சிரித்த படி வந்து கொண்டிருந்த கவிப்ரியா, ஷைலஜாவின் வழியை மறித்துக் கொண்டு நின்றார் பலராம்.
"என்ன மாமா இன்னும் தூங்க போகலையா?" என்று கேட்ட ஷைலுவிடம்,
"கவிட்ட ஒரு விஷயம் தனியா பேசணும்டா. நீ போய் படுத்துக்கோ! குட்நைட், கவிம்மா நீ வா!" என்று சொல்லி தன்னுடன் அவளை தனியாக அழைத்து சென்று கொண்டிருந்தார் பலராம்.
ஐந்தாறு எட்டுகள் தான் எடுத்து வைத்திருப்பார், எங்கிருந்தோ ஓடி வந்து அவர்கள் இருவர் வழியையும் மறைத்து கொண்டு, "என்னைய விட்டுட்டு போனா எப்டீ மாம்ஸ்?" என்று கேட்ட வண்ணம் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.
"ரெண்டு பேரும் பாஸ்கெட் பால் க்ரௌண்டுக்கு வாங்க!" என்று சொன்ன தன் மாமனிடம், "ம்ஹூம் வெளியே எல்லாம் வேண்டாம். அம்முலுவுக்கு குளிரும் மாமா, நீ வா நம்ம ரூம்ல போய் பேசலாம்!" என்று சொல்லி விட்டு கவிப்ரியாவை அழைத்துக் கொண்டு பலராமுடன் அவனறைக்கு சென்றான் ஜீவானந்தன்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro