💟 ஜீவாமிர்தம் 49
"நந்து யார்ட்டயும் சொல்லாம என்னைய வீட்டுக்கு இழுத்துட்டு வந்துட்ட... மண்டபத்துல நம்ம ரெண்டு பேரையும் காணும்னு தேடப் போறாங்கடா!" என்று சற்று கவலையுடன் அவனிடம் சொல்லி கையைப் பிசைந்து கொண்டிருந்த கவிப்ரியாவின் மடியில் படுத்திருந்த ஜீவானந்தன் அவளை தலைதூக்கி பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்தான்.
"ஒருத்தி இங்க டென்ஷன்ல கத்திட்டு இருக்கேன். நீ ஒண்ணுமே பதில் பேசாம சிரிச்சன்னா என்ன அர்த்தம்?" என்று கேட்டு முறைத்தவளிடம்,
"மண்டபத்துல யாராவது நம்மள காணும்னு தேடுனாங்கன்னா அதை சமாளிக்க வேண்டியது ஹெச்ஓடி ஸாரோட பொறுப்பு, உன்னைய நான் ஒழுங்கா கவனிச்சுக்க மாட்டேங்குறனாம், என் மகள கூட்டிட்டு கண்காணாம எங்கேயாவது போய் தொலடான்னு வாழ்த்தி தான் அனுப்பி வச்சாரு. ஆனா நீ இனிமே பங்ஷன்க்கு எல்லாம் ஸாரி கட்டாத அம்முலு, எவனாவது எனக்கு போட்டிக்கு வந்து உன்னைய தூக்கிட்டு போயிடுவானோன்னு ரொம்ப பயப்பட வேண்டியதிருக்கு. யூ ஆர் லூக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் ஸாரி..... ஒரு ட்ரெஸ் டிஸைன் பண்ண ஆரம்பிக்கும் போதே உனக்கு எது அழகா இருக்கும்னு யோசிச்சு தான் அத செய்வியாடீ?" என்று கேட்டவன் தலையில் ஒரு குட்டு வைத்து விட்டு,
"காலையில இருந்து பக்கத்துலயே வராம எரிச்சல் படுத்திட்டு இப்போ வந்து ஸாரி நல்லாயிருக்கு, நீ நல்லாயிருக்கன்னு சொல்லி எரிச்சலை கிளப்பாத மாடு..... நான் டிஸைன் பண்ற எந்த அவுட்பிட்டையும் நான் ட்ரை பண்ணி பார்த்தேயில்ல. என்னோட காஸ்ட்யூமை நானே போட்டுக்கிறது இது தான் பர்ஸ்ட் டைம் தெரியுமா? அங்க இங்கன்னு தூரத்துல நின்னு முறைச்சுட்டு இருக்கிறதுக்கு பதிலா பக்கத்துல வந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டு நின்னா ஒரு அடி குறைஞ்சா போயிடுவ?" என்று கேட்டு அவன் கன்னத்தின் மேல் தன் கன்னத்தை ஒட்டி தலையை சாய்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள் கவிப்ரியா.
"தூரத்துல நின்னுகிட்டு நீ என்னைய தேடுறத பார்க்குறப்போ மச்சானுக்கு உள்ளுக்குள்ள ஜிவ்வுன்னு இருக்கும்டா செல்லக்குட்டி! ஆனா இப்போ உன் மூச்சு உரசுற மாதிரி படுத்துக் கிடக்கும் போது இன்னும் என்னன்னமோ பண்ணுது, அம்முலு தண்ணி குடிக்கணும் போலிருக்கு. கொஞ்சம் எழுந்திரிச்சுக்கோ கண்ணா!" என்று கேட்ட ஜீவானந்தன் இதழ்களை ஒரு முன்னறிவிப்பும் தராமல் திடீரென அவள் இதழ்களால் மூடியிருந்தாள் கவிப்ரியா.
காலையில் இருந்து கண்களால் மட்டுமே தன் காதலியின் அழகைப் பருகிக் கொண்டிருந்த ஜீவானந்தன் இப்படி ஒரு முத்தத்தை கவிப்ரியாவிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் ஏற்கனவே பறக்க துடித்துக் கொண்டு இருக்கும் ஹாட் ஏர் பலூனில் ஃப்ளேமையும் கொடுத்து அதை கிளப்பி விட்டது போல கவியின் முத்தம் ஜீவாவை கட்டுப்பாடு இழக்க செய்தது.
சில நிமிடங்கள் கழித்து, "போதும் நந்து.... விடு!" என்று சொல்லி கவிப்ரியா அவனிடம் இருந்து விலக, அவன் பெரிதாக மறுத்து, "எனக்கு இன்னும் நிறைய்ய்ய்ய வேணும் அம்முலு! இப்போ நோ சொல்லாத!" என்று சொல்லி விட்டு மறுபடியும் அவள் பின்கழுத்தை தன் முகத்திற்கு நேராக திருப்பிக் கொண்டான்.
இனியாவின் திருமணத்தில் ஜீவானந்தன் கண்களில் தென்பட்ட சிரிப்பு, அவன் இத்தனை ஆண்டுகளாக தொலைத்த குதூகலத்தை மொத்தமாக மீட்டுக் கொண்டான் என்று அனைவருக்கும் உணர்த்தியது, கவிப்ரியாவிற்கு அவனது உள்ளார்ந்த மகிழ்ச்சி குற்ற உணர்வை தந்தது, என்ன இருந்தாலும் இத்தனை வருடங்களாக அவன் இழந்தது அனைத்தும் உன் சிறுபிள்ளைத்தனத்தினால் ஏற்பட்ட தவறு தானே என்று கேட்டு அவளது மனசாட்சி அவளை இடித்துரைத்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி அவளால் பாதிக்கப்பட்டவன் அவளைத் தான், அவளை மட்டும் தான் கண்களில் காதலுடன் வருடிக் கொண்டு இருந்தான். கவிப்ரியாவின் இதயம் ஒவ்வொரு முறை அவன் பார்வை அவள் மேல் படும் பொழுதும் அவன் மேல் சாய்ந்து கொண்டு இருந்தது.
ஜீவாவின் விருப்பத்திற்கு ஏற்ப சிறிது நேரம் அவனுடன் ஒத்துழைத்த கவிப்ரியா அவனிடம் இருந்து சிரமப்பட்டு ஒருவழியாக பிரிந்து அமர்ந்தாள்.
"ஏ............ன்டீ!" என்று வெகுவாக சலித்து கொண்டவனிடம், "உன் கிட்ட பேசணும் ஜீவா!" என்று சொல்லி விட்டு முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்தாள் கவிப்ரியா.
"பேசறதுக்கு நல்ல நேரம் பார்த்த மூக்கி! இங்க வா!" என்று சொல்லி கட்டிலின் தலைப்பாகத்தில் இரண்டு தலையணைகளை சாய்ந்து கொள்ள ஏதுவாக போட்டு விட்டு, "உட்கார்ந்து பேசுங்க ஏஞ்சல்!" என்று கட்டிலின் புறம் கைகாட்டினான்.
அவன் கைகளைப் பற்றி அவனை அருகில் அமர்த்தி அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் கவிப்ரியா.
"என்னடா அம்முலு...... ஏதோ பேசணும்னு சொல்லிட்டு ஒரே ரோசனை?" என்று கேட்டு சிரிப்புடன் அவள் மூக்கில் சுண்டினான் ஜீவா.
"இன்னிக்கு நீ ரொம்ப ஹாப்பியா இருந்தல்ல.... அதைப் பார்த்து எனக்கு ரொம்ப வருத்தமாகிடுச்சு நந்து!" என்று சொல்லியவள் முகத்தை அவன் புறம் நிமிர்த்தியவன்,
"எப்படிடா இந்த ஜீவாப்பையன் இவ்வளவு சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சியா கேப்ஸி....?" என்று கிண்டல் குரலில் கேட்டவன் அவளது முறைப்பில் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு, "ஓகே ஓகே டோண்ட் கெட் அப்செட்!" என்று சொல்லி அவளை தட்டிக் கொடுத்து அவள் தோளில் கையைப் போட்டு அமர்ந்து கொண்டான்.
"அம்முலு கிண்ட்சுகின்னு ஒரு ஜாப்பனீஸ் ஆர்ட்டை பத்தி உனக்கு எதாவது ஐடியா இருக்கா?" என்று கேட்ட ஜீவானந்தனிடம் குழப்பமாக உதடு பிதுக்கி மறுப்பாக தலையசைத்தாள் கவிப்ரியா.
"நம்ம ரொம்ப பத்திரமா பார்த்துக்கிட்ட இல்ல மிஸ் பண்ண விரும்பாத ஒரு களிமண் பாத்திரத்தை தெரியாம போட்டு உடைச்சுட்டோம்னு வையேன்... அதை ரீவொர்க் பண்ற ப்ராஸஸோட பேரு தான் கிண்ட்சுகி. தங்கத்துகளை வச்சு களிமண் பாத்திரத்தை அவங்க மறுபடியும் ஒட்ட வைப்பாங்க தெரியுமா? ஸோ அதுக்கப்புறம் அந்த க்ளே பாட் ரொம்ப வொர்த்தபிள் ப்ராடெக்ட் ஆகிடும்! அதே மாதிரி தான் ஜீவாவும் உன் கையில வச்சிருந்த க்ளே பாட், என்னை எப்பவோ நீ இங்க கூட்டிட்டு வந்து கிண்ட்சுகி ப்ராடெக்ட் ஆக்கிட்ட.... நான் வெறும் களிமண் தான், பட் நீ என்னை குடும்பத்தோட பைண்ட் பண்ணின தங்கம்டா அம்முலு!" என்று சொன்னவனை இறுகக் கட்டிக் கொண்ட கவிப்ரியா அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்தாள்.
"அய்யய்யோ ப்ளீஸ் அம்முலு..... அழாதடீ! நீ அழுதன்னா உன் மூக்கு ரெட் கேப்ஸிகம் மாதிரி ஆகிடும், அப்புறம் பார்க்கறதுக்கு ரொம்ப கண்றாவியா இருப்ப!" என்று சொல்லிக் கொண்டே அவள் கண்ணீரை துடைத்து கொண்டு இருந்தவனிடம்,
"நந்து என்னை கல்யாணம் பண்ணிக்குறியா? இங்கயே இப்பவே!" என்று கேட்டவளை கேவலமாக முறைத்து விட்டு,
"ஏன் உங்கண்ணன், இனியா கல்யாணத்துக்கெல்லாம் அட்டென்டென்ஸ் போட்டு உனக்கு இன்னும் கல்யாண மூடும் எஃபெக்டும் மாறலையாக்கும்..... எனக்கும் உனக்கும் தான் பர்ஸ்ட் கல்யாணம்னு சொன்னாங்க, இப்போ எல்லாருக்கும் முடிஞ்சதுக்கப்புறமா நமக்கு தான் லாஸ்ட் கல்யாணம் பண்ணி வப்பாங்க போலிருக்கு, பொண்ணு, மாப்பிள்ளை தாலியெல்லாம் கூட கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டாங்க, ஆனா வீட்ல இருக்கிறவங்க யாரும் ரெடி ஆக மாட்டேங்குறாங்களே? வாட் ட்டூ டூ?" என்று தோள் குலுக்கியவனிடம்,
"நம்ம கல்யாணத்துக்கு தாலி கூட ரெடி பண்ணிட்டியாடா? என் கிட்ட சொல்லவேயில்ல! எனக்கு அதைப் பார்க்கணும், என் கிட்ட காட்டு!" என்று கேட்டாள் கவிப்ரியா.
"ஏய் மூக்கி அவ்வளவு சீக்கிரமா எல்லாம் நம்ம வெட்டிங் செயினை உங்கிட்ட காட்ட முடியாது, எவ்வளவு தில்லாலங்கடி வேலை பார்த்து அதை ராம் கிட்ட இருந்து செஞ்சு வாங்கியிருக்கேன் தெரியுமா? அதுல கேஜேங்கிற இனிஷியல் போட சொன்னேன்டீ..... மாமா அதை ரொம்ப யுனிக்கா அழகா பண்ணியிருக்காரு தெரியுமா, அவருக்குள்ள இருக்கிற வொர்க்மென்ஷிப்ப பாராட்டியே ஆகணும். ஸோ கொஞ்சம் வெயிட் பண்ணு; நம்ம கல்யாணத்தன்னிக்கு காட்டுறேன்!" என்றவனிடம்
"ம்ஹூம், அதெல்லாம் முடியாது, நான் இப்பவே அதைப் பார்க்கணும். நீ எப்படியும் அத ஆனந்த் தாத்தா ரூம்ல தானே வச்சுருப்ப? நானே அங்க போய் பார்த்துக்குறேன்!" என்று சொல்லி விட்டு கதவருகில் சென்றவளை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் பார்த்து விட்டு படுக்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டான் ஜீவானந்தன்.
"டேய் மாடு, கதவை ஓப்பன் பண்ண முடியல, கோட் நம்பர் இப்போ உள்ள வரும் போது தானே சொன்ன? அதுக்குள்ள ராங் கோட்னு காட்டுது?" என்று கேட்ட கவிப்ரியாவிடம் உல்லாசமான குரலில்,
"உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் ரொம்ப தேவைப்படும்னு தான் மச்சான் ரூமுக்கு சவுண்ட் ஃப்ரூப், செக்யூரிட்டி லாக் எல்லாம் போட்டு வச்சுருக்கேன் டார்லிங்..... ஸோ நீ ரூமுக்குள்ள வந்துட்டு இங்க இருந்து வெளியே போகணும்னா நான் நினைச்சா மட்டும் தான் நீ வெளியே போக முடியும், யாராவது ஒருத்தருக்கு தெரிஞ்சா தானே அது சீக்ரெட் நம்பர்... நீயும் மச்சானை ரூமுக்குள்ள ஹோல்ட் பண்ணணும்னு நினைச்சன்னா இதே டெக்னிக்கை யூஸ் பண்ணிக்கலாம், இப்போ நீ கண்டிப்பா வெளியே போகணுமா அம்முலு?" என்று கேட்ட ஜீவாவின் அருகில் சென்று "நம்பர் ஒன் க்ரிமினல்டா நீ, பண்றது எல்லாம் ஃப்ராடு வேலை, கதவைத் திறந்து விடு இடியட்!" என்று சொல்லி விட்டு
அவன் முதுகில் குத்திக் கொண்டிருந்தாள் கவிப்ரியா.
அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அதற்கு முத்தமிட்டவன், "கை வலிக்கப் போகுதுடீ..... இதெல்லாம் கனவா நிஜமான்னு சந்தேகமா இருக்கு கேப்ஸி!" என்றான் ஒரு ஆச்சரிய பாவத்தை முகத்தில் காட்டி.
"நிஜமா தான் நம்ம சண்டை போட்டுட்டு இருக்கோம் மச்சான், ஒரு சாம்பிள் வேணும்னா பாக்குறியா?" என்று கேட்ட படி அவன் தோள்களில் சாய்ந்து அவள் பல் தடத்தை பதித்தாள் கவிப்ரியா. அவளிடமிருந்து கடி வாங்கியவன் அதற்கெல்லாம் அசந்தது போல் தெரியவில்லை. சிரிப்புடன் அவளைக் கூட்டிக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான். அவனது முகம் சற்று குழப்பத்துடனே இருக்கவும் கவிப்ரியா அவனிடம்,
"என்னை சொல்லிட்டு இப்போ நீ என்ன யோசிச்சுட்டு இருக்க நந்து?" என்று கேட்டாள்.
"மாணிக்கம் தாத்தா டெத் பெட்ல இருக்கும் போது என் கிட்ட உன் வாழ்க்கையில எந்த விஷயத்தையும் நீயா மாத்தணும்னு நினைக்காதன்னு சொன்னாங்க; நீ இப்போ என் கிட்ட கல்யாணம் பண்ணிக்குவோம்னு கேட்டதும் அந்த விஷயம் எனக்கு திடீர்னு ஸ்ட்ரைக் ஆகுது. ஒரு வேளை என்னோட ப்யூச்சரை பத்தின அவங்களோட இன்ஸ்டிக்ண்ட் கரெக்டா இருக்குமோ? எல்லாரும் இல்லாமலே நம்ம கல்யாணம் நடந்துடுமோ? நீ கல்யாணத்தை பத்தி சீரியஸாவே தான் கேட்டியா அம்முலு? வீட்ல எல்லார்ட்டயும் சொல்லிக்காம நம்ம கல்யாணம் பண்ணிக்குறது தப்பும்மா!" என்று அவளிடம் வாதம் செய்தான் ஜீவா. ஒரு புறம் கவிப்ரியாவின் வார்த்தைக்கிணங்கி அவளை திருமணம் செய்து விடுவோமோ என்ற பயமும், மறுபுறம் அவள் சொல்வது போல் இன்றே இப்போதே அவர்களது திருமணம் நடந்து விடாதா என்ற ஏக்கமும் அவனை மாறி மாறி அலைக்கழித்தன. மொத்தத்தில் இப்போது இந்த அவசர கல்யாணம் வேண்டாம் என்ற தன் நிலைப்பாட்டை தானே எங்கே உடைத்து எறிந்து விடுவோமோ என்று பயந்து தவித்துக் கொண்டிருந்தான்.
ஆனந்தனது அறைக்குள் அவளை அழைத்து வந்தவன் ஒரு பீரோவை தன்னிடம் வைத்திருந்த சாவியின் உதவியுடன் திறந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தான். ஒரு கசங்கிய வெள்ளைத்துணியை அவளிடம் நீட்டியவனை கோபமாக முறைத்த கவிப்ரியா, "பக்கி நான் உங்கிட்ட என்னத்த கேட்டா நீ என்னத்த நீட்டுற? ஒழுங்கு மரியாதையா நம்ம வெட்டிங் செயினை காட்டு!" என்றாள் கோபம் அடங்காத குரலில்.
"ம்ப்ச்! எந்த விஷயத்துலயும் பொறுமையே இல்லையா உனக்கு? நீ எனக்கு குடுத்தியே நிறைய வொர்த்தி கிப்ட்ஸ்..... அந்த மாதிரி உன் கையில வச்சிருக்கிறது ஒரு வொர்த்தி கன்ஃபஷன் லெட்டர்! பேப்பர்ல எழுதி வச்சா கிழிஞ்சுடும்னு நினைச்சு க்ளாத்ல எழுதி வச்சது.... இத்தன வருஷமா எப்பவுமே என் கூடவே வச்சுருந்தது! இங்க வந்த பிறகு தான் தாத்தா ரூம்ல கொண்டு வந்து வச்சுட்டேன். படிச்சு பாரு!" என்று சொல்லி அந்த துணியை அவள் கைகளில் இருந்து வாங்கி விரித்து அவள் முன் பிடித்து கொண்டு நின்றான்.
மை டியர் லிட்டில் டாலி,
இன்னிக்கு உன்னை ரொம்ப வலிக்குற மாதிரி அடிச்சிட்டேன்டா, ஐ'ம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி! உன்னை பத்திரமா பார்த்துக்கறதுக்கு நான் எப்பவும் உன் பக்கத்துலயே இருக்கணும், இனிமே உன்னை நான் அடிக்கிற ஒரு சூழ்நிலை எப்பவும் வர வேண்டாம்னு நினைக்கிறேன், தப்பை ராகவ் செஞ்சுருந்தாலும் அத நான் என்னோடதுன்னு சொல்லிடுறேன், உன்னை ஹர்ட் பண்ணினதுக்கு பனிஷ்மெண்டா மாமாவும், அப்பாவும் என்ன தண்டனை குடுத்தாலும் அதை அக்செப்ட் பண்ணிக்குறேன், உனக்கு சும்மாவே என்னை பிடிக்காது, நான் செஞ்ச இந்த ஒரு தப்புக்காக லைஃப் லாங் என்னை பிடிக்கலன்னு சொல்லி வெறுத்துடாதடீ ப்ளீஸ்.....!" என்று எழுதி அந்த கடிதத்தை முடித்திருந்தான்
ஜீவானந்தன்.
அவன் முன் வந்து நின்ற கவிப்ரியா, "பீரோ என் மேல விழுந்த அன்னிக்கு இத எழுதி வச்சியாக்கும்..... என்னைய இனிமே அடிக்கவே மாட்டேன்னு எழுதியிருக்க; ஆனா அடிச்சல்ல?" என்று கோபமாக கேட்டவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டு,
"அது அறியாத வயசுல எழுதுனது கேப்ஸி; நீ என்னைய படுத்துற பாட்டுக்கெல்லாம் உன்னைய தூக்கி போட்டு மிதிக்கவே செய்யலாம், கடுப்பேத்துற மாதிரி ஏதாவது உளறினன்னா எங்கிட்ட கண்டிப்பா அறை வாங்கத்தான் செய்வ; இப்போ ஜீவாவை நீ லவ் பண்றியா? ஹேட் பண்றியா? அந்த கேள்விக்கு ஆன்ஸர் சொல்லு முதல்ல.....!" என்று கேட்டவன் முன் கையை நீட்டினாள் கவிப்ரியா.
"அம்முலு.....ப்ளீஸ்! ரிஸ்க் எல்லாம் எடுக்க வேணாம்டா, சொன்னா கேளும்மா, அப்பாட்ட ரொம்ப சீக்கிரமா ஒரு பத்து பதினைஞ்சு நாள்ல கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்க சொல்லிடுவோம். அதுவரைக்கும் செயினை வெளியே எடுக்க வேண்டாமே?" என்று ஒரு அவசரக்குரலில் பேசியவனிடம்,
"இப்போ அத வெளிய எடுத்தா எங்க என் கழுத்துல கட்டிடுவியோன்னு உனக்கு பயமா இருக்கா நந்து? ஆனா இப்போ நமக்கு கல்யாணம் நடக்கலைன்னா அப்புறம் எப்பவுமே நடக்காதோன்னு எனக்கு பயமாயிருக்கு நந்து.....இப்போ என்ன செய்யலாம்?" என்று கேட்ட கவிப்ரியாவிடம்,
"கவி நீ என்னை எமோஷனல் ப்ளாக்மெயில் பண்ற! இதெல்லாம் சரியில்ல, எல்லாரோட ஃப்ளசிங்ஸும் இல்லாம எப்படிடீ கல்யாணம் பண்ணிக்குறது?" என்று கேட்டவன் எதிரில் வந்து இடுப்பில் கை வைத்து கொண்டு நின்றவள்,
"நம்ம வீட்ல பார்கவ், இனியா, ஷைலுவுக்கு எல்லாம் எல்லாரோட ப்ளசிங்ஸோட தான் பூஜை எல்லாம் வச்சு தாலி செஞ்சாங்க, நீ என்ன அந்த மாதிரியா செஞ்ச?" என்று அவனை மடக்கியவளிடம் எரிச்சலுடன்,
"ஏய் நான் ராம் கிட்ட அந்த வெட்டிங் செயினை போட்டுக்க போறவளும், போடப் போறவணும் நல்லா இருக்கணும்னு ப்ளெஸ் பண்ணி தான் செய்ய சொன்னேன்டீ, அதெல்லாம் நம்ம இன்னிக்கு மேரேஜ் பண்ணிக்கிட்டா கூட நல்லா தான் இருப்போம்!" என்று சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டான்.
"யா தட்ஸ் த பாயிண்ட்! எனக்கும் உனக்குமான ரிலேஷன் ராம் சித்தப்பா, அவரே தான் நம்ம மேரேஜ் பாண்டிங்க்கான ஐடென்டிட்டிய ரெடி பண்ணியிருக்கார். ஸோ உனக்கு மேரேஜ் ஓகேன்னா செயினை எடுத்துட்டு ஆனந்த் தாத்தா போட்டோ முன்னால....... டேய் டேய் எங்கடா ஓடுற?" என்று கேட்ட படி அவனை கைப்பிடித்து நிறுத்தியவளிடம்,
"நம்ம மேரேஜ்க்கு பெஸ்ட்மேன் வேணும்ல அம்முலு..... முத்துவை தூக்கிட்டு வர்றேன்!" என்று சொன்னவனை சிரிப்புடன் ஆமோதித்து அனுப்பி வைத்தாள் கவிப்ரியா.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆனந்த ஸாகரத்தில் ஜீவானந்தன் கவிப்ரியா திருமணம் வெகு எளிதாக ஆனந்தன் ஸாகரியின் புகைப்படம், மற்றும் மொத்த குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்துடன், சக்தி முத்துவின் சாட்சியுடன், பலராம் ஆசி வழங்கி செய்து கொடுத்த திருமாங்கல்யத்தை ஜீவா கவியின் கழுத்தில் அணிவிக்க
இனிதான முறையில் நிகழ்ந்தது.
"கங்க்ராட்ஸ் மச்சான், கவிப்ரியா புருஷனாகிட்டீங்க...... இப்போ உங்க முகத்துல ஏதாவது சேன்ஜன்ஸ் தெரியுதான்னு பாக்கணுமே, ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?" என்று கேட்டவள் கையில் இருந்த அலைபேசியை பறித்துக் கொண்டவன்,
"தயவு செஞ்சு கொஞ்ச நேரம் சும்மாயிருங்க பொண்டாட்டி! இந்த திடீர் கல்யாணம், வெட்டிங் செயின் மேட்டர் எல்லாம் வீட்ல தெரிஞ்சது...... அம்புட்டு பேரும் சேர்ந்து கும்மியெடுத்துருவாய்ங்கன்னு
நினைச்சு நான் வெடவெடன்னு ஆடிட்டு உட்கார்ந்து இருக்கேன், நீ வேற சேன்ஜா இருக்கா, நோட்டா இருக்கான்னு கேட்டுட்டு!" என்று அவன் இயல்புக்கு மாறாக சற்று பதட்டப்பட்டான் ஜீவா.
"இப்போ என்ன உனக்கு? நமக்கு கல்யாணம் ஆனது வீட்ல யார்ட்டயும் சொல்லக்கூடாது, அவ்வளவு தானே..... நானா போய் யார் கிட்டயும் நம்ம கல்யாண விஷயத்தை சொல்ல மாட்டேன், அதே மாதிரி நமக்கு வீட்ல கல்யாணம் பண்ணி வக்கிற வரைக்கும் நீயும் யார் கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லாத, பிரச்சனை முடிஞ்சிடுச்சு! இப்போ டென்ஷன் ஆகாம இருப்பியா?" என்று கவிப்ரியா கேட்க ஜீவானந்தன் நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினான்.
"கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க கவிம்மா, மேக்ஸிமம் டென் டேஸ்ல இனியா ஷைலு விருந்து முடிச்சு அனுப்புற அன்னிக்கு கூட நம்ம மேரேஜ் வீட்லயே சிம்பிளா வச்சுக்கலாமான்னு அஜுவை கேட்டு அவரை அப்பாட்ட பேசச் சொல்றேன்!" என்று தன் மனைவியிடம் சொல்லி அவளை அழைத்துக் கொண்டு, சக்தி முத்துவுடன் தனது அறைக்கு சென்றான் ஜீவானந்தன்
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro