💟 ஜீவாமிர்தம் 45
"ஏன் ஷைலு என் வயித்துல உதைச்ச...... இட்ஸ் பெய்னிங்!" என்று முணங்கியவாறு பவின் கட்டிலில் உருண்டு கொண்டு இருந்தான். பவின் அவளைக் கட்டிக் கொண்டது பிடிக்காமல் ஷைலு அவன் காலில் ஒரு மிதி மிதித்து விட்டு சற்று வாகாக இடம் கிடைக்கவும் அவனது வயிற்றில் தன் முழங்காலால் ஒரு உதை வேறு விட்டு கையில் இல்லாத தூசியை தட்டிக் கொண்டு இருந்தாள்.
"ஏய் நான் உன்னைத் தான் வாயை மூடிட்டு இருக்கச் சொன்னேன்டா, சின்னதா ஒரு வார்த்தை மாறிட்டா அட்வான்டேஜ் எடுத்துட்டு பக்கத்துல வருவியா? வருவியாடா?" என்று கேட்டு பின்புறத்தில் வேறு நான்கு உதைகள் அவனுக்கு விழுந்தது.
பவின் சற்று நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து அவளருகில் வந்து, "இந்த மாதிரி உங்க பார்கவ் அத்தான் உங்கிட்ட பிஹேவ் பண்ணியிருந்தா என்ன செஞ்சிருப்ப ஷைலு?" என்று கேட்டவனை மேலும் கீழும் பார்த்தவள்,
"லூசா நீ? எங்க பாகி அத்தான் என் பக்கத்துல உட்கார்ந்தா கூட எப்பவும் இரண்டடி தள்ளி தான் உட்காருவாங்க.
அவங்களை போய்.... எப்படி தப்பா பேசிட்டு இருக்க, இன்னும் ரெண்டு அறை வேணுமா உனக்கு?" என்று கேட்டு கையை முறுக்கினாள்.
அவளருகில் அவன் மூச்சுக்காற்று உரசும் அளவுக்கு பக்கத்தில் வந்து நின்றவன், "நான் அவரை தப்பா பேசல, தப்பு பார்கவ் மேல இல்லன்னு சொல்றேன். அவரோட லெவல்ல அவர் கரெக்டா தான் இருந்துருக்காரு. தப்பு முழுக்க முழுக்க உன் மேல தான். எனக்கு ஒரு டவுட் ஷைலு..... உங்க வீட்ல எல்லாரும் ரூபி அப்படி, ரூபி இப்படின்னு பயங்கரமா பில்டப் குடுக்குறாங்களே...... அப்படி அவங்க பில்டப் குடுக்கற அளவுக்கு உங்கிட்ட ஸ்பெஷலா ஒண்ணுமே இல்ல போலிருக்கே......." என்றவன் மார்பில் கை வைத்து தன்னிடமிருந்து சற்று தூர நகர்த்தியவள்,
"மிஸ்டர் பவின், ஒருத்தரை பாயிண்ட் அவுட் பண்ணி அவங்க தப்பை சொல்லிடுறது ரொம்ப ஈஸி. பட் அத சொல்றதுக்கு நீ தகுதியானவனான்னு முதல்ல யோசிக்கணும். அப்படி
எங்கிட்ட ஸ்பெஷலா என்ன இல்ல? கொஞ்சம் நீயே சொல்லிடேன் கேப்போம்!" என்று அவனிடம் கேட்டு விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டவளிடம்,
"எதிர்ல நிக்குறவன் என்ன சொல்ல வர்றான்னு கேக்குற பொறுமை இல்ல, சிச்சுவேஷனை ஹாண்டில் பண்ற மெச்சூரிட்டி இல்ல, என் இன்டென்ஷன் என்னன்னு தெரிஞ்சுக்கற அளவுக்கு புத்தியும் இல்ல! இதுக்குதான் உங்கப்பா, அண்ணா, பாகி அத்தான்ல இருந்து ரூபி புராணம் பாடுறாங்கன்னா அவங்களுக்கும் மூளை இல்ல!" என்று முடித்தவனிடம் கொஞ்சம் கூட பொறுமை இல்லாமல்,
"என்னைப் பத்தி கம்ப்ளையிண்ட் சொல்றதுனா கூட ஒண்ணுமில்ல, ஏதாவது உளறிட்டு போ! ஆனா என் பேமிலி மெம்பர்ஸை பத்தி ஏதாவது பேசுன மாடிப்படியில காலால இறங்கி போக மாட்ட, ஒரு மிதி மிதிச்சு உருட்டி விட்டுடுவேன் பார்த்துக்கோ துரியன்!" என்று கோபத்தில் அவனிடம் கத்தி விட்டு மூக்கு விடைக்க நின்று கொண்டு இருந்தாள் ஷைலு.
"நான் உன்னை ஹக் பண்ணி கிஸ் பண்ண வந்தேன்னு என் மேல கோபப்பட்ட; ஒரு வேளை உங்க பார்கவ் அத்தான் என்னை மாதிரியே உன் கிட்ட நடந்துக்கிட்டா என்ன ஆகியிருக்கும்னு உன்னால யோசிக்க கூட முடியல. அப்புறம் எந்த தைரியத்துல அவங்க கிட்டே போய் என்னை கல்யாணம் பண்ணிக்குறீங்களான்னு கேட்ட..... ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப் ரிலேஷன்ஷிப்னா என்னன்னு முழுசா தெரிஞ்சுட்டு தான் அந்த கேள்வியை கேட்டியா?" என்று புருவம் தூக்கியவனை பார்த்துக் கொண்டு தலையின் பக்கவாட்டில் இருபுறமும் கைகளைப் பற்றிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள் ஷைலஜா. அவள் யோசனைக்கு சில நிமிடங்களை விட்டவன்
சிறு சிரிப்புடன் அவளைப் பார்த்து, "சொன்ன விஷயம் மூளை வரைக்கும் ரீச் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். இனிமேலாவது உங்க பார்கவ் அத்தானை ஏதோ ஷோரூம்ல மிஸ் பண்ணின டைமண்ட் ஜ்வல்லரிய பார்க்குற மாதிரி பாக்காம கொஞ்சம் அவங்கட்ட இயல்பா நடந்துக்க முயற்சி பண்ணு, நீ அவருக்காக ஃபீல் பண்றது தெரிஞ்சா அவரோட பெர்சனல் லைஃப்ல உன்னால ஏதாவது குழப்பம் வரலாம்!" என்று சொன்னவனிடம் இல்லையென தலையசைத்தாள் ஷைலஜா.
குறுஞ்சிரிப்புடன் கைகளை கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தவன், "இப்பவாவது ஸாரி கேக்கலாம்ல...... உதைச்சு உருட்டி விட்டு என்னென்ன அட்டகாசம் பண்ண முடியுமோ அவ்வளவையும் பண்ணியாச்சு!" என்று அவளிடம் அலுத்துக் கொண்டான்.
"ஸாரியெல்லாம் கேக்க முடியாது மிஸ்டர் பவின்..... என்னைய கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னப்பவே நீ இதுக்கு எல்லாம் ரெடியா தான் இருந்திருக்கணும், நம்ம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆகிடலாமா? உன்னைப் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதே..... நம்ம நிறைய பேசிக்கணும் போலிருக்கே?" என்று கேட்டவளிடம் சிறு புன்னகையுடன்,
"தேவையில்ல ஷைலு, உன்னைப் பத்தி நீ என் கிட்ட சொல்லாத விஷயம் எனக்கு தெரியுது இல்லையா...... அதே மாதிரி நீயும் என்னைப் பத்தி என் காரெக்டர் என்ன? என் ப்ரொஃபஷன் என்ன? எனக்கு பிடிச்ச விஷயம் என்னென்னன்னு நீயா அனலைஸ் பண்ணி கண்டுபிடி! அன்னிக்கு உங்க வீட்ல என்னைப் பத்தி சொல்றேன்னு சொன்னப்ப வேண்டாம்ன. இப்போ என்னைப் பத்தி எந்த டீடெய்லும் நானா உங்கிட்ட சொல்ல மாட்டேன். இந்தப்பூ கீழே இருந்து உனக்காக குடுத்து விட்டாங்க, வேணும்னா வச்சுக்கோ, பட் கண்டிப்பா வைக்கணும்னு கம்பெல்ஷன் கிடையாது!" என்று சொல்லி டேபிளில் வைத்திருந்த பூவை அவள் கைகளில் கொடுத்தான் பவின்.
"உன் கிட்ட ஒரு டவுட் கேட்டுக்கலாமா? அடிக்கடி துரியன்னு ஒரு வேர்டு யூஸ் பண்ணி என்னை திட்டுறியே..... அப்படின்னா என்ன?" என்று கேட்டவன் குரலில் சற்றே தூக்கலாக ஆர்வம் தெரிந்து விட்டது.
ஷைலு தன் தலையில் பூவை சூடிக் கொண்டே, " அய்யே எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச நிக் நேம்; உனக்கு அவ்வளவு ஈஸியா அர்த்தம் சொல்லிடுவாங்களாக்கும்..... எங்கப்பா எனக்கு குடுக்கற எல்லாமே பெஸ்டா தான் இருக்கும். பட் நான் தான் அதையும் குறை சொல்லி, நல்லா இல்லன்னு சண்டை போட்டு, நாலு திட்டு திட்டி அதுக்கப்புறம் ரியலைஸ் பண்ணி.......ச்சூ அதை விடு. துரியனுக்கு அர்த்தம் சொல்லணும்னா நீ எங்க வொர்க் பண்றங்கிற டீடெய்ல் குடு பார்ப்போம்...... (சமூகவளைத் தளங்கள் நான்கின் பெயரை சொல்லி) இந்த ஐடீஸ்லாம் குடு உன் லேட்டஸ்ட் ஆக்டீவிட்டீஸை செக் பண்ணணும்!" என்றவளிடம்,
"நீ.......... லயும் பார்க்க வேண்டாம், ஒரு வாளியிலயும் தேட வேண்டாம், பவின் அவ்வளவு ஈஸியா உன் கையில சிக்க மாட்டான் பேபி, சீக்கிரம் கீழ வா.... எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க!" என்று சொல்லி விட்டு கதவருகில் சென்றவன் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஷைலஜா.
முறைப்புடன் அவளை நோக்கியவன், "இப்போ நான் விட்டு சாத்தட்டுமா உன்ன?" என்று கேட்டவனிடம்,
"ஏய் இல்ல உனக்கு தேங்க்ஸ் சொல்லத்தான் கைய புடிச்சேன். தேங்க்யூ சோ மச் பவின்! நீ எனக்கு புரிய வைக்கலைன்னா இன்னும் அத்தான்ட்ட என்னென்ன பிரச்சனை பண்ணியிருப்பேனோ தெரியல, இதெல்லாம் லட்டு கிட்ட கூட பேசறதுக்கு எனக்கு தயக்கமா இருந்தது தெரியுமா...... ஒரு ட்ரீம் ஹீரோ ரேன்ஜ்ல அவங்களை வச்சு பார்த்துட்டதுனால அவ்வளவு ஈஸியா மனசுல இருந்து வெளியே தூக்கி போட்டுடவும் முடியல, பண்றது பைத்தியக்காரத்தனம்னு
அறிவுக்கு புரியுது. ஆனா மனசு சொன்ன பேச்சை கேக்க மாட்டேங்குது நான் என்ன பண்றது பவின்?" என்று கேட்ட தன் வருங்கால மனைவியிடம்,
"வேற ஏதாவது விஷயத்தை வச்சு பார்கவ்ட்ட இருந்து கொஞ்ச நாளைக்கு டைவர்ட் ஆகு! எனிவேஸ் உன் தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்! யார் கிட்ட பேச தயங்குன விஷயம்னாலும் எங்கிட்ட பேசலாம்! நீ என்னை டிஸ்டர்ப் பண்றன்னா என் கிட்ட உரிமை எடுத்துக்குறன்னு அர்த்தம். அது எனக்கு ஹாப்பியா இருக்கு!" என்றான் பவின் புன்சிரிப்புடன்.
"அப்போ உன்னை இன்னும் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணலாமே? பவின் எனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல எக்ஸாம்ஸ் வந்துடும், ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை மலைக்கும் இங்கயும் அலைஞ்சதுல புக்கை தொடவேயில்ல, அட்டென்டென்ஸ் கூட பார்டர்ல தொத்திக்கிட்டு நிக்குது, இன்டெர்னல்ஸ்ல மொத்தமா காலியாகிடும், ஸோ எப்படியாவது எக்ஸாம்ஸ் உருப்படியா செஞ்சா தான் அரியர் விழாம எஸ்கேப் ஆகலாம். கல்யாணத்துக்கு அப்புறமும் புக்கை தூக்கி படிச்சுட்டுலாம் இருக்க முடியாது. நீ உன் அகாடமிக்ஸ்ல என்ன மாதிரின்னு எனக்கு தெரியல, பட் இருக்குற ஷார்ட் பீரியட்ல அவ்வளவு ஸிலபஸையும் கவர் பண்ணி கௌளரவமா வெளிய சொல்லிக்கிற மாதிரி மார்க்ஸ் வாங்கணும். இதுக்கு உன்னால ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கேட்டவளை பார்த்துக் கொண்டு இரண்டு நிமிடங்கள் பேசாமல் நின்று கொண்டு இருந்தவன்,
"உன் இந்த டெர்முக்கான சப்ஜெக்ட் ஸிலபஸ் எனக்கு வேணும், நான் உன் சப்ஜெக்ட்ல ரெஃபர் பண்ணி ரெடி ஆகிக்க எனக்கு மூணு நாலு நாள் வேணும், உனக்கு ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பிச்சதும் நீ நம்ம வீட்டுக்கு வந்துடு, பத்து நாள் லீவ்னு வச்சுக்கிட்டாலும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படிச்சா சப்ஜெக்ட்ஸ்ல ஜீனியஸ் ஆகிடலாம்!" என்று சொன்னவனை விசித்திரமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவனிடம்,
"தூங்கறதுக்கு ஆறு மணி நேரம் குடுத்துருக்க போல...... ரொம்ப வள்ளல்டா நீ!" என்றாள் ஷைலஜா
"நோ ஷைலு யூ ஆர் ராங்! ஒரு அடல்ட் டீப் ஸ்லீப் எடுக்கறதற்கு அஞ்சு மணி நேரம் போதும், மத்த ஒரு மணிநேரம் மூணு டைம் நீ சாப்பிடணும்ல அதுக்கு!" என்று சொன்னவனிடம் கை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டு, "விட்டுடு பவின்! நீ சொல்ற ரூல் எனக்கு செட் ஆகும்ன்னு தோணல, ப்ரெண்ட்லி அட்வைஸ் குடுப்பான்னு பார்த்தா ஆள லூசாக்குறதுக்குள்ள ப்ளான் குடுக்குது பக்கி!" என்று முணகிக் கொண்டு கீழே ஓடி விட்டாள் ஷைலஜா.
"டேய் கௌ ஊருக்குப் போனதும் லட்டு ரூபி மேரேஜ்க்கு இன்விடேஷன் ரெடி பண்ணிட்டு எல்லாருக்கும் குடுக்க ஆரம்பிக்க வேண்டியது தான்..... நீயும் ரெடி பண்ணணும்லடா, உனக்கும் சேர்த்து நானே இன்விடேஷன் ரெடி பண்ணிடட்டுமா?" என்று தன் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ஜெய் நந்தன்.
"பிஸினஸ் ஹாஸ்பிட்டல் ப்ரெண்ட்ஸ் தான்டா ஜெய். மொத்தமா ஐநூறு பேர் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அவ்வளவுதான் வேற ரிலேஷன்ஸ்க்கெல்லாம் சொல்லலடா ஜெய்..... ராகிய வேண்டாம்ன்னு சொல்ற எந்த ரிலேஷன்ஷிப்பும் எனக்கும் வேண்டாம், என் பையனுக்கும் வேண்டாம்!" என்று இறுகிய குரலில் சொன்னவரின் கைகளைப் பற்றிக் கொண்டு,
"ஒரு தடவ ரெண்டு பேர் அப்பா அம்மா கிட்டயும் போய் பேசிப் பாருடா கௌ! ரெண்டு தனி தனி மனுஷங்களை சேர்த்து வைக்கிறது இல்ல கல்யாணம்...... அவங்களோட ரெண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்கிறது தான் கல்யாணம்! ரெண்டு பேர் வீட்டுக்கும் வினுவையும் முடிஞ்சா ரூபியையும் கூட கூட்டிட்டு போய் கல்யாணத்துக்கு வரச் சொல்லி கூப்பிடு, பெரிசுங்க பாசத்தை எல்லாம் மறைச்சு கெத்தா இருக்குற மாதிரி தான் வெளிய தெரியும், ஆனா நம்ம இல்லாம அவங்களோட வலி பெரிசுடா! எங்கம்மாலாம் ரகுட்ட என்னைய தான் உளுந்தவடையா வச்சு அவரை பொறியில அடைச்சாங்க, நீயும் அதே மெத்தட் ட்ரை பண்ணு, உங்க வீட்ல கூட விழுந்துடுவாங்க!" என்று அறிவுரை சொன்ன தன் நண்பனிடம் யோசனை நிறைந்த குரலில் "பாக்குறேன்டா ஜெய்!" என்று தலையாட்டினார் கௌதமன்.
"தொட்டாச்சிணுங்கி போல தொட்டா சிணுங்குறாளே சிட்டான சிட்டுக்குருவி!" பாடலை பாடி விட்டு தன் மனைவியை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான் ராசு.
"உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை!" பாடலை அபிநயாவுடன் சேர்ந்து பாட தன் பைக்கை வீட்டிற்குள் எடுத்து வருவேன் என்று அடம் பிடித்து ஜீவாவிடம் திட்டு வாங்கி விட்டு அமர்ந்து இருந்தான் பார்கவ்.
"கேட்டுக்கோடீ உருமி மேளம்!" பாடலை போட்டு விட்டு கவிப்ரியா "டார்லிங் கம் ஆன் லெட்ஸ் சிங்!" என்று ஜெய் நந்தனை கூப்பிட அவர் எச்சில் விழுங்கிக் கொண்டு நிர்மலாவின் கண் அசைவுக்கு காத்திருந்தார்.
"டேய் அந்த லூசு ஓவரா ஆட்டம் போட்டுட்டு இருக்கு, நீ ஒரு ஓரமா சேர்ல உட்கார்ந்து அவள சைட் அடிச்சுட்டு இருக்க.... போடா மச்சி!" என்று பார்கவும், ராகவும் ஜீவாவை நெட்டித் தள்ள அவன் எழுந்து வந்து அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டு,
"கண்கள் ரெண்டை காதல் வந்து சந்திப்பதேன்; இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்!" என்று பாடியவாறு கவிப்ரியாவை பார்த்து கண்சிமிட்ட அவள் "உள்ளம் உன்னை ஏந்திக் கொள்ள சிந்திப்பதேன்.... கொள்ளை கொண்டு போன பின்பும் மன்னிப்பதேன்!" என்று பாடி விட்டு அவன் புறம் திரும்பி அவன் அணைப்பில் நின்று கொண்டாள்.
ஜெய் நந்தன் கவிப்ரியாவிடம் மெதுவான குரலில், "ஏஞ்சல் இன்னும் நிலாப்பாட்டு போடவேயில்லையே....." என்று கேட்டது கவிப்ரியாவின் காதில் விழுந்தது போல் தெரியவில்லை.
பார்கவ் தன் மாமனிடம், "மாம்ஸ் உங்க மகன் எப்போ ட்ரீம்ல இருந்து வெளிய வருவான்னு தெரியல. இன்னும் பவினும் ஷைலுவும் சாப்பிட வேற செய்யல, ஸோ பெரியவங்க எல்லாம் உங்க பேவரைட் ஸாங்ஸ நாங்க போனதுக்கப்புறம் ஸ்டார்ட் பண்ணுங்க, அபிம்மா மாமாவுக்கு இன்னும் லைட்டா பசிக்குற மாதிரி இருக்கு. பவின் ஷைலுவை கவனிக்கும் போது அப்படியே நமக்கும் சைடுல ஒரு ப்ளேட் வச்சுடு!" என்று சொன்னவனிடம் புன்னகையுடன் தலையாட்டி விட்டு,
"ராகவ், ப்ரியா, ஜீவாண்ணா, இனியா, ராசுண்ணா, மாமா அத்தை, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி யார் யாருக்கு செகண்ட் ரவுண்ட் சாப்பிடணுமோ வாங்க, டான்ஸ் ஆடினது கொஞ்சம் பசிக்கத் தான் செய்யுது! சாப்பாடு எடுத்து வக்கிறேன் அத்தை!" என்று மீரா கீதாவிடம் சொல்லி விட்டு உள்ளே சென்றாள் அபிநயசரஸ்வதி.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro