💟 ஜீவாமிர்தம் 43
பார்கவின் திருமணம் முடிந்து இரண்டாவது நாள் மாலையில் சென்னையில் பலராமின் இல்லம் ஜீவானந்தனின் வருகையால் சந்தைக் கடை போல் மாறியிருந்தது. அவனைப் பார்த்ததும் பார்கவும், ராகவும் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டனர்.
"டேய் மண்டை வீங்கி, வீடியோ சாட்ல பாக்குறதை விட அழகா இருக்கடா! யூ ஆர் லூக்கிங் ஹேண்ட்சம் மேன்!" என்று அவனுடன் ஹைஃபைவ் கொடுத்து கொண்டான் ஜீவா. பின் தன் நண்பன் பார்கவிடம் சென்று,
"கங்க்ராட்ஸ்டா பாகி அபி உனக்கும் தான்மா, ஹாப்பி மேரீட் லைஃப்!" என்று ஜீவானந்தன் அவர்கள் இருவரையும் வாழ்த்தி விட்டு அபிநய சரஸ்வதியிடம் புன்னகையுடன், "அபிநயா வெல்கம் டூ அவர் பேமிலி; ஹோப் யூ வில் என்ஜாய் திஸ் எண்விரோண்மெண்ட்..... இல்லன்னாலும் வேற வழியில்ல, ஜோதியில ஐக்கியமாயிடுங்க!" என்று சொன்னவனிடம் அவள் "எனக்கு நம்ம வீடு ரொம்ப பிடிச்சிருக்குண்ணா!" என்றாள். அவன் புன்சிரிப்புடன் தன் கையில் வைத்திருந்த ஒரு பத்திரத்தை பார்கவிடம் நீட்டினான்.
"மேரேஜ் கிப்டா.....என்னடா இது? ஏதோ டாக்குமெண்ட் மாதிரி இருக்கு?" என்று கேட்ட தன் நண்பனிடம்,
"உங்க மாமா கல்யாணத்துக்கு ரகு பாட்டா கொடுத்த கிப்டை அவர் அப்படியே உனக்கு ரிட்டர்ன் பண்றாருப்பா. நம்ம பூம்பாறை ப்ராப்பர்ட்டீஸ் எல்லாம் உனக்கும், ராகவ்க்கும், உங்க வீட்ல இன்னொரு அராத்து இருக்குமே அதுக்கும் பிரிச்சு எழுத சொல்லிட்டாங்க. உங்க கல்யாணத்துக்கு வராததால டாக்குமெண்ட்டை கொண்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. வட்டி எல்லாம் கேக்காதீங்கப்பா, அதெல்லாம் குடுக்க முடியாது! தாத்தா பாட்டி என்ன பார்த்துட்டு இருக்கீங்க..... வாங்க வந்து கப்பிள்ஸை ஆசிர்வாதம் பண்ணி இதை குடுங்க!" என்று ஜெயந்தனையும் பத்மாவையும் அழைத்தான் ஜீவானந்தன். ஜெயந்தன் பத்மா இருவரும் பத்திரத்தை பார்கவிடம் கொடுக்க பார்கவ் அபிநயாவுடன் சேர்ந்து அதைப் பெற்றுக் கொண்டான். ஜெய் நந்தன் நடக்கும் அனைத்தையும் சிறு சிரிப்புடன் நின்று பார்த்துக் கொண்டு இருந்தார். முன்பெல்லாம் அவ்வப்போது பேச்சுவாக்கில் தன் மனைவியிடம் சொல்வது தான்..... பூம்பாறை நிலங்கள் வீடு அனைத்தும் மீரா கீதாவின் பிள்ளைகளுக்கு தான் என்று; அதை நினைவில் வைத்து இருந்து சரியாக பார்கவின் திருமணப் பரிசாக மூவருக்கும் உரிமை உள்ள சொத்து என்று முத்தாய்ப்பாக சொல்லி தன் மகன் பார்கவ் கைகளில் சேர்த்தும் விட்டானே என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
"ஜீவாக் குட்டி பூம்பாறை சொத்து
ரகுப்பாட்டா அண்ணாவுக்கு குடுத்ததும்மா...... அதைப் போய் ஏன்டா திருப்பி குடுத்துட்டு.....வேற ஏதாவது வாங்கி குடுத்துருக்கலாம்ல?" என்று கேட்ட கீதாவிடம் கிண்டல் குரலில்,
"மொத்த மலைய தான் கிப்டா குடுத்துடலாம்னு நினைச்சேன் கீது செல்லம்..... ஆனா தனியா என்னால தூக்க முடியல; அதான் சின்னதா ஒரு டாக்குமெண்ட் மட்டும் கொண்டு வந்துட்டேன். டேய் மச்சி உனக்கு ஓகே தானே?" என்று கேட்ட தன் நண்பனை கட்டிக் கொண்டு,
"உன்னை கல்யாணத்தன்னிக்கு ரொம்ப தேடுனேன்டா..... ஏன்டா வரல? எப்படியாவது மேனேஜ் பண்ணி ஈவ்னிங் ஆவது வந்துடுவன்னு நினைச்சேன்! இப்போ வந்த மாதிரி அப்போ வர்றதுக்கென்ன எருமை.....!" என்று முகம் திருப்பிக் கொண்டவனை பார்த்து விட்டு புன்னகையுடன் தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான் ஜீவானந்தன்.
"எல்லாருக்கும் நீயே சொல்லிடு ஆனந்த்!" என்று அவனிடம் சொல்லி விட்டு பெருமூச்சுடன் தன் பேண்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக் கொண்டார் ஜெய் நந்தன்.
"எல்லாரும் நான் சொல்றத ஒரு டீப் ப்ரெத் எடுத்துட்டு கேளுங்க. மாணிக்கம் தாத்தா இஸ் நோ மோர்! அவங்க லாஸ்ட் ரிச்சுவல்ஸை முடிக்கிறதுக்காக தான் நான் மலையில ஹோல்ட் ஆகிட்டேன். இனியாவும், ராசுவும், அப்பத்தாவும் எனக்கு ரொம்ப ஸப்போர்ட்டா இருந்தாங்க. யேய் ராசு என்னடா அங்கயே உட்கார்ந்துட்டு...... பாகியோட ப்ரசெண்ட்ட அவனுக்கு குடுத்துடு!" என்றான் பேச்சை மாற்றும் முயற்சியில் ராசுவை உள்ளே இழுத்து.
மீராவும், கீதாவும் கலங்கிய கண்களுடன் சென்று ஜெய்யை அணைத்துக் கொண்டு, "என்ன அண்ணா இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லாம மறைச்சுட்டீங்க..... சொல்லியிருந்தா கல்யாணத்தை வேணும்னா கொஞ்சம் தேதி மாத்தி வச்சிருக்கலாமே!" என்று கேட்டவர்களிடம் பலராமும், அர்ஜுனும்,
"அதனால தான் ஜெய் சொல்லியிருக்க மாட்டான். மாணிக்கம் அண்ணா ரொம்ப அமைதியா நிறைவா போய்ட்டார், ஸோ நாம அவர் காரியத்துக்கு போய் கலந்துக்கலாம்!" என்று இரு பதில்கள் சொல்லி ஆறுதல் படுத்தினார்கள்.
"டேய் மச்சி ஸாரிடா எவ்வளவு பெரிய விஷயத்துக்காக அங்க இருந்துருக்க..... எல்லாரையும் அனுப்பி விட்டுட்டு தனி ஆளா லட்டுவையும் ராசுவையும் மட்டும் வச்சுட்டு......தேங்க்யூ ஸோ மச் டா! லட்டு உனக்கும் ராசுவுக்கும் தான். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!" என்று கைகூப்பிய பார்கவை ஒன்றும் பேசாமல் அணைத்துக் கொண்டு நின்றான் ஜீவானந்தன்.
அனைவரும் சற்று இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக ஜெயந்தன் அவர்களிடம்,
"டேய் போதும்டா கண்ணீர்லாம்..... யார் போனாலும் இதே கண்ணீர் தான்..... போறப்போ கூட இந்த மாதிரி யாருக்கும் தொந்தரவு குடுக்காம போய் சேரணும், அந்த நல்ல மனுஷரோட ஆத்மா கடவுள் பாதத்துக்கு போயிருக்கும். இந்த பேச்சை இதோட விடுங்க! எல்லாரும் ஒண்ணா சேர்ந்துருக்கோம், ஏதாவது பாட்டு பாடுங்க. நீங்க குதிக்குற குதியில என் பேத்தி மேல இருந்து கீழே இறங்கி வரணும்!" என்றார்.
தன் கையில் அவள் கைகளை கோர்த்து அவள் தோளில் தலைசாய்த்து இருந்த ரூபியிடம் இனியா "ரூபிச் செல்லம் தாத்தா டான்ஸ் பண்ண சொல்றாங்க, நானும் உன் கூட ஜாய்ன் பண்ணிக்கலாமா? எனக்கு தெரியாது, பட் உன் கூட வந்து நிக்குறேன்!" என்று சமாதானம் செய்து அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைக்கவும் ஷைலஜா சமாதானம் ஆகி விட்டாள்.
"மிஸ்டர் மொக்கை ராசு.....உங்க பொண்டாட்டிய கொஞ்ச நேரத்துக்கு நான் வச்சுக்கறேன்!" என்று அவனிடம் ஷைலஜா கேட்க அவன் குறுஞ்சிரிப்புடன், "நான் உன் அண்ணன் காருல வந்தப்ப உன் கூட்டாளி கூட பேசிகிட்டேதேன் வந்தேன்தா! அதுவே இன்னும் பத்து நாளைக்கு தாங்கும். இப்போ நீ அவுகள நல்லா வச்சுக்க!" என்று சொல்லி அவன் தன் மனைவியை பார்த்து புருவம் உயர்த்த அவள் மௌன சிரிப்புடன் தலை கவிழ்ந்து கொண்டாள். பின்னே காரில் வரும் போது என்னென்ன சேட்டைகள் செய்து அவளை ஒருவழியாக்கி விட்டான்...... ஒரு கட்டத்துக்கு மேல் ஜீவாவே அவனது இம்சை தாள முடியாமல் ஒரு ஓரத்தில் காரை நிறுத்தி
"அடேய் அப்பத்தா தூங்கிட்டாங்கடா, முன்னால உட்கார்ந்து ஒருத்தன் கார் ட்ரைவ் பண்ணிகிட்டு இருக்கான்ற நெனைப்பு இருக்கா உனக்கு; நானும் மனுஷன் தானே..... என்ன டிஸ்ட்ராக்ட் பண்ணாத பிக்பாய் ப்ளீஸ்!" என்று அவனிடம் வாய் விட்டு கேட்டே விட்ட பிறகு தான் ராசு சற்று அமைதியாக தன்னவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு அவள் தலையில் தன் தாடையை வைத்து அவளிடம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டு இருந்தான். இவ்வளவு நேரம் அவன் பண்ணிய சேட்டைகளே பரவாயில்லை என்று இனியாவிற்கு தோன்றியது. அந்த அளவுக்கு அவன் பேச்சு அவளிடம் எல்லைமீறி இருந்தது.
பார்கவ், அபிநயா, இனியா, ராசு
ஷைலு, ஜீவா, ராகவ் அனைவரும் சேர்ந்து பாடலுக்கு ஆடுகிறோம் என்று சொல்லி விட்டு மொத்தமாக குதித்து முடித்தனர். ராசு மணமக்களுக்கு தன் கையில் இருந்த பணத்தை பரிசளித்தான்.
"லேய் பார்கவு மன்னிச்சிகிடுலே.... இனியா புள்ள கூப்பிட்டதால அப்படியே உங்க வீட்டுக்கு வந்துட்டேன். ஒனக்கு கல்யாணப்பரிசு ஒண்ணும் வாங்கிட்டு வர முடியல. மறுக்கா வாரப்போ கண்டிப்பா ஏதாச்சு வாங்கிட்டு வர்றேன்!" என்று சொல்ல அப்பத்தாவும் மணமக்களை "மகராசனா மகராசியா இருக்கணும்!" என்று வாழ்த்தி விட்டு அமர்ந்தார்.
பார்கவ் ராசுவிடம் பேசிக் கொண்டு இருக்க இனியா தன் தந்தையிடம் சென்று,
"அப்பா எஸ்.ஜே.என் ஜிஎம்ட்ட பேசிட்டு வந்துட்டேன்ப்பா..... அங்க எப்படியாவது மாறி மாறி யாராவது ஒருத்தராவது இருப்போம், இது பர்ஸ்ட் டைம் யாரும் இல்லாம விட்டுட்டு வந்திருக்கிறது; நம்ம கையில இப்போ
ரெண்டு ப்ராஜெக்ட் தான் இருக்காம்...... வொர்க் கொஞ்சம் ஸ்மூத்தா தான் போயிட்டு இருக்கு. அதனால பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாங்க. பண்ணையில பால் குடுக்கப் போற ரெண்டு ஷிப்ட்க்கு அண்ணாங்கள வேலைக்கு வரச் சொல்லி இருக்கு. காய்கறிக்கு நம்ம மல்லிகா அத்தை பொறுப்பில விட்டுருக்கேன். துரியனும், கிராம்பும் நம்ம போன பிறகு எடுத்துக்கலாம். ஆனா காரட்டும் உருளைக்கிழங்கும் நாளைக்கே எடுத்துரணும்ப்பா. அதுக்கும் வழக்கமா வர்ற அண்ணாங்க வருவாங்க. அத்தை பக்கத்துல இருந்து கவனிச்சுக்குவாங்க, ஆனா எஸ்டேட்ல, உன்னதம்ல தான் எப்படி வேலை நடக்குதுன்னு தெரியலப்பா.....அந்த வேலையை நீங்க எனக்கு சொல்லல. ஆனாலும் கரெக்டா அப்டேட் பண்ணிட்டீங்களாப்பா?" என்று கேட்ட தன் மகளை வாஞ்சையுடன் தலை கோதியவர்,
"அங்க எல்லா வேலைக்கும் வொர்க்கர்ஸ் போட்டு சூப்பர்விஷனுக்கும் அரேன்ஜ் பண்ணிட்டேன்டா இனுக்குட்டி! ரெண்டு நாள் அப்பா இல்லாம வீட்ல தனியா படுத்துக்கிட்டியாடா?" என்று கேட்ட தன் தந்தையிடம் அப்பத்தாவுடன் பெரியப்பா வீட்டிலேயே படுத்துக் கொண்டதாக சொன்னாள் இனியா.
"மா.....மாப்பிள்ளை என்ன செஞ்சாரு?" என்று தயக்கத்துடன் கேட்ட விவேக்கிடம் நக்கல் சிரிப்புடன் அருகில் வந்து இனியாவின் தோளைப் பற்றி நின்று கொண்டு,
"ஆங்......மாடு மேய்ச்சுட்டு இருந்தாரு. என்னய்யா விவேக்கு மாமா மரியாதையெல்லாம் மானாவாரியா கொட்டுது.... என்ன சங்கதி?" என்று கேட்டான் ராசு.
"நீங்க இனுக்குட்டிட்ட பேசிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம் அண்ணா கிட்ட வேலை இருக்கு. இதோ வந்துடுறேன்!" என்று சொல்லி நழுவி விட்டார் விவேக்.
"கைய எடுங்க மிஸ்டர் மொக்கை......!" என்று அவனிடம் சொல்லி ஒரு பக்கமாக சாய்ந்து ஓரக்கண்ணால் அவனை பார்த்தவளிடம்,
"இசக்கி, ராசு, மொக்கைன்னு தோதுபடுற நேரம் வாயில வாரத கூப்புட வேண்டியது.... மாமான்னு கூப்புடுறின்னா அதுக்கு மட்டும் வலிக்குது....... என்னடீ ஆச்சு உங்கொப்பனுக்கு? மாப்பிள்ளைங்காக, வாங்க போங்கன்னு சும்மா மரியாத அள்ளி தெளிக்குறாக ..... என்னவாம்!" என்று கேட்டவனிடம் குறுஞ்சிரிப்புடன்,
"அத உங்க மாமனார் கிட்டயே போய் கேளுங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல பவின் அண்ணா வந்துடுவாங்க. இன்னிக்கு காலையில வர இருந்தவங்கள அண்ணா வர்றாங்கன்னு ஈவ்னிங் வரச் சொல்லிட்டாளாம் அந்த ரூபி பிசாசு, அதுக்கு வேற என்ன சொல்லப் போறாங்களோ தெரியல.... நான் அவ கிட்ட ரெண்டு நாள் கதையெல்லாம் பேசணும்! விடுங்க.....!" என்று சொன்னவளிடம்,
"காருல நடந்த கதையையும் பேசு. ஆனா வெக்கப்படாம பேசு, நா அப்படியே கிளம்பட்டாடீ!" என்று கேட்டவன் மனதிற்குள் "இப்ப கிளம்ப வேண்டாம்ன்னு சொல்லுடீ சிட்டு" என்று சொல்லிக் கொண்டு அவள் முகத்தை பார்த்தான்.
"அப்பத்தாவையும் கூட்டிட்டு
இந்த நேரத்துல எப்படி போவீங்க.....காலையில கிளம்புங்க. பாகி அத்தான்ட்ட சொல்லி வண்டி அரேன்ஜ் பண்ணிக்கலாம்!" என்று சொன்னவளிடம் நமுட்டுச் சிரிப்புடன்,
"நம்ப புல்லட்தேன் நம்ப பின்னாடியே வந்துடுச்சே.....உங்க தொரையண்ணன் தேன் ஓட்டிட்டு வந்தாரு......நீ பாக்கலையா அழகி?" என்று கண்சிமிட்டியவனிடம் கோபம் கொண்டு பல்லைக் கடித்த இனியா,
"உங்கள........ வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு பொய் சொல்லி பக்கத்துல உட்கார்ந்து என்னை உரசிட்டு வர்றதுக்கு ப்ளான் போட்டீங்களா..... நில்லுங்க ஓடாதீங்க!" என்று சொல்லி தன் கணவனை துரத்தி கொண்டு இருந்தாள் இனியா.
ஜீவா ஜெய் நந்தனிடம் சென்று, "அப்பா எனக்கு ஒரு சின்ன ஃபேவர்.....!" என்று அவர் முன் தயங்கி நிற்க அவர் புன்னகையுடன் அவன் தோளில் கையைப் போட்டு கொண்டார்.
"என்ன ஆனந்த்.... ஃபேவர் அது இதுன்னு கேட்டுட்டு! உனக்கு என்ன வேணும்னு கேளுப்பா!" என்றார் ஜெய்.
தன் கழுத்தில் கிடந்த ஒரு செயினை அவரிடம் காட்டி, "இது நம்ம ஸாகரி க்ரானியோட செயின்ப்பா..... அழகா இருந்தது, இத நான் வச்சுக்கட்டுமா?" என்று கேட்டான்.
"இதுக்கு எதுக்கு ஆனந்த் இவ்வளவு தயக்கம்...... பட் இது கேர்ள்ஸ் செயின் மாதிரி இவ்வளவு பெரிசா இருக்கே..... வேற ஏதாவது எடுத்துருக்க வேண்டியது தானே?" என்று கேட்டவரிடம்,
"இதுவே ஓகேப்பா!" என்று சொல்லி விட்டு நேராக தன் மாமனிடம் சென்று நின்றான்.
"ராம் இந்த செயினை புதுசாக்கி இதுல ஒரு மாங்கல்யம் சேர்த்து குடுக்கணும், யாருக்கு என்னன்னு அப்புறம் சொல்றேன். உன்னால இத எத்தனை நாள்ல செஞ்சு தர முடியும்?" என்று கேட்டவனை முறைத்தவர்,
"திருட்டு கல்யாணமா..... நீ தான் தலைமையாக்கும்! அடி வாங்கிட்டு வராம இருந்தா சரி தான்..... 2,3 நாள் ஆகும்டா. ஆனா தாலில நிறைய கேட்டகிரி இருக்குடா; எதைன்னு நான் இப்ப போடுறது?" என்று கேட்ட தன் மாமனின் கேள்விக்கு சலிப்புடன் தலையைக் கோதிக் கொண்டவன்,
"ம்ப்ச்.... நான் அதெல்லாம் கேக்கல ராம். நம்ம வீட்ல கல்யாணத்துக்கு எப்படி செய்வியோ அதையே செய்!
இந்த செயினை போட்டுக்க போற பொண்ணும், பொண்ணு கழுத்தில போடப் போற பையனும் ரொம்ப நாள் உன்னை மாதிரி காதலோட சந்தோஷத்தோட வாழணும்னு ஃப்ளஸ் பண்ணிட்டு குடு, உனக்கு ஏதாவது டௌட்ஸ் இருந்தா கீத்ஸ்ட்ட கன்சல்ட் பண்ணிக்க அண்ட் மேக் இட் கான்ஃபிடென்ஷியல்!" என்று சொல்லி அவரின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சென்றான் ஜீவானந்தன்.
அவரவர் வேலைகளை அவரவர் பார்த்து கொண்டு இருக்க ஜீவானந்தன்
தன் வேலையை பார்க்க மாடிக்கு போய் விட்டான்.
"அம்முலுக் குட்டி...... மச்சான் கதவுக்கு பின்னால நின்னுட்டு இருக்காக, கீழ எல்லாம் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காக, ரொம்ப ஆட்டிடியூட் காட்டாம கொஞ்சம் கதவை திறந்து வெளிய வர்றீங்களா செல்லம்?" என்று கிண்டல் குரலில் அழைத்த ஜீவாவிடம் உள்ளிருந்த படியே,
"போடா இப்ப மட்டும் எதுக்கு இங்க வந்த..... உன்னைய யாரும் இங்க தேடி தவிச்சு அழுதுட்டு இல்ல..... நான் வர மாட்டேன். கீழ போ!" என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த போது மீரா ஜீவாவின் பக்கத்தில் வந்து நின்றார்.
"ஏய் கவிம்மா ஜீவாக்குட்டி வந்ததும் ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டு என்னடீ அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்க.......வெளியே வா! இல்லன்னா ரெண்டு நாளைக்கு உனக்கு சோறு கிடையாது!" என்று மிரட்டிய மீராவிடம் முகம் சுளித்த ஜீவா,
"மீரு ப்ளீஸ்.....என் முன்னால எப்பவும் அம்முலுவை திட்டாத! எனக்கு கஷ்டமா இருக்கு. அவ கீழே வரணும்; அவ்வளவுதானே...... காம்ப்ரமைஸ் பண்ணி நான் கூட்டிட்டு வர்றேன். நீ போ!" என்றான் தன் அத்தையை சமாதானம் செய்து.
"ரெண்டு பேரும் ரொம்ப இம்சை பண்றீங்கடா! இப்படி அவள கொஞ்சிட்டே இருக்குறதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்!" என்று முறைத்த மீராவின் தோளில் சாய்ந்து கொண்டு,
"எம் பொண்டாட்டிய நான் அப்படித்தான் கொஞ்சுவேன், மிஸ்டர் பவினுக்காக கீழ ஏதோ ஸ்வீட்ஸ் ரெடியாகியிருக்கு போலிருக்கு! எங்களுக்கும் கொஞ்சம் எடுத்து வை செல்லம், டென் மினிட்ஸ்ல வர்றோம்!" என்று சொல்லி மீராவை கீழே அனுப்பி வைத்தான் ஜீவா.
"ஏய் குடமிளகா கடைசியா கேக்குறேன். இப்போ கதவை திறக்க முடியுமா முடியாதா....... திறக்க மாட்டேன்னு ஸ்ட்ரைக் பண்ணின லண்டன் ஐ பாக்கணும்னு சொன்னியே; அங்க கூட்டிட்டு போக மாட்டேன்டீ! பாகி, உங்கப்பா, சித்தப்பா, உன் டார்லிங், மண்டவீங்கி யாரும் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க. உன் விஷ்ஷை நிறைவேத்த நந்து மச்சான் தான் கூட வரணும் பார்த்துக்க!" என்று சொல்லி விட்டு அவளறைக்கு முன் இருந்த ஹாலில் ஒரு மேகஸினுடன் அமர்ந்து விட்டான் ஜீவானந்தன்.
சற்று நேரத்தில் அறைக்கதவை திறந்து வைத்து அவளாக அவனருகில் வந்து நெளிந்து கொண்டு நின்றவளை அருகில் அமர்த்தி கொண்டு,
"நம்ம தோட்டத்துல நிறைய குட்டி குட்டி ஃப்ளைஸ் வருது அம்முலு! அதோட லைஃப் ஜஸ்ட் மணிக்கணக்குல தான்; பட் அதுக்குள்ள அந்த குட்டி ஜீவா என்ன பண்றான்னா அவனோட கவியை தேடிப் பிடிச்சு லவ் பண்ணிட்டு செத்துப் போயிடுவோம்னு பாக்குறான். பட் நான் அப்படியில்லாம் ஈஸியா செத்துப் போயிட மாட்டேன் அம்முலு....... உன்னைய லவ் பண்றதுக்கு எனக்கு ரொம்ம்ம்ம்ப பெரிய லைஃப் வேணும். நீ எவ்வளவு கோபப்பட்டாலும், சண்டை போட்டாலும், கண்ணை உருட்டி முறைச்சாலும், மூளையில்லாம எதையாவது உளறி வச்சாலும் ஏன்டீ உன்னை என்னால என் வாழ்க்கையில இருந்து நகர்த்தி எடுக்க முடியல? அவ்வளவு பெரிய மேக்னெட்டா நீ? எங்கே போனாலும் பரவாயில்ல கடைசியில எங்கிட்ட வந்து ஒட்டிக்கோன்னு இழுத்துட்டு வந்துடுறியே மை ஸ்வீட் லிட்டில் டாலி!" என்று அவள் கண்களை பார்த்து தன் மன உணர்வுகளை கொட்டிக் கொண்டிருந்தவனை குறுகுறுவென பார்த்து விட்டு,
"என்னாச்சு ஜீவா உனக்கு? காரை ரேஷா ஓட்டி எங்கயாவது இடிச்சுக்கிட்டியா என்ன? எப்போ பாரு நான் ஏன் பிறந்தேன்னு பாட்டு பாடி ஒப்பாரி வைப்ப; இன்னிக்கு கவிதையே தெரியுமாங்கிற ரேன்ஜ்ல என்னன்னமோ ஃபீல் பண்ற...... ஆர் யூ ஆல்ரைட்?" என்று கேட்டவளை ரௌத்ர பார்வை பார்த்தவன்,
"ஏன்டீ மூக்கி எவ்வளவு ஃபீல் பண்ணி என் எமோஷன்ஸை எக்போஸ் பண்ணிட்டு இருக்கேன்...... என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா உனக்கு? கோர்ட்ல தான் வாங்கல, இட்ஸ் ஓகே வீட்ல வாய்தா கேட்டு வாங்கிக்க வேண்டியது தான்!" என்று சொல்லி அவளை நெருங்கியவனை சிரிப்புடன் தடுத்தவள்,
"நான் இன்னும் உங்கூட பழம் விடல. பழம் விட்டதுக்கப்புறம் எத்தன வாய்தா வேணும்னாலும் வாங்கிக்க.... கிட்ட வா" என்று அவனை அழைத்தவள் தன் பெருவிரல் மற்றும் சுண்டுவிரலை இதயத்தின் ஒரு பாதி வடிவம் போல் நீட்ட ஜீவானந்தன் சிரிப்புடன் அவன் விரல்களை அவள் விரல்களுடன் இணைத்து அவள் விரல்களை முத்தமிட்டான். சற்று நேரத்தில் இருவர் விரல்களும் விலகிக் கொள்ள இதழ்கள் இணைந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தன.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro