💟 ஜீவாமிர்தம் 40
திருமண மண்டபத்தில் கூட்டம் எல்லாம் குறைந்து மணமக்கள் சாப்பிட்டு வந்து சாவகாசமாக சற்று நேரம் அமர்ந்த பிறகு கடைசி ஆளாக வந்து திருமண வாழ்த்து தெரிவித்து தன் அத்தை மகன் பார்கவ் மற்றும் அபியிடம் கைகுலுக்கிய ஷைலஜா அவனிடம் ஒரு கவரை நீட்டினாள்.
முறைப்புடன் அவளை நோக்கி, "என்னதுடீ இது?" என்று கேட்டவனிடம்
"நீ எனக்கும் இனியாவுக்கும் அப்பப்போ குடுத்த பாக்கெட் மணி பாகி அத்தான்; என்னைய உனக்கு பிடிக்காத மாதிரி நான் குடுக்கற கிப்டையும் உனக்கு பிடிக்காம போயிடுச்சுன்னா..... அது தான் அப்பாட்ட கேட்டு பணம் வாங்கிட்டு வந்தேன். எவ்வளவு இருக்குன்னு தெரியல. ஜீவா அண்ணாவும் உனக்கு எதுவும் செய்ய முடியலையே.... அதனால இதை வச்சுக்க; ஹேப்பி மேரீட் லைஃப் அத்தான் & அபி அக்கா ஒன்ஸ் அகெயின்!" என்று சொன்னவளிடம்,
"விஷ் பண்றேன்னு வந்து நின்னு கிறுக்குத்தனமா உளறிட்டு இருந்தன்னா நான் உங்க அப்பாட்ட அறை வாங்கினாலும் பரவாயில்லைன்னு உனக்கு ரெண்டு அறை வைப்பேன் பார்த்துக்க. உன்னை பிடிக்காதுன்னு நான் உங்கிட்ட சொன்னதா எனக்கு நியாபகம் இல்ல ரூபி, உன்னை கல்யாணம் பண்ணிக்குறத யோசிக்க முடியாதுன்னு தான் சொன்னேன். ஆனா அதை உன் மனச ஹர்ட் பண்ற மாதிரி சொல்லிட்டேன். ரொம்ப ஸாரி! கவி, நீ, இனியா மூணு பேரும் என்ன கிப்ட் வாங்கி தந்தாலும் ஓகே..... எனக்கு ரொம்ப பிடிக்கும், நீங்க மூணு பேரும் நம்ம பேமிலிக்கே கிடைச்ச சந்தோஷம் ரூபிம்மா....... மொய் எழுறத அளவுக்கு நீ இன்னும் பெரிய மனுஷி ஆகல. நான் குடுத்த பாக்கெட் மணியை திருப்பிக் குடுக்குறாளாம், லூசு.... உன் அத்தானுக்கு இந்த பணத்தை வாங்குற மாதிரி சில்லறை ப்ராப்ளம் வரல, நல்ல கிப்டா வாங்கி நாங்க மலைக்கு வரும் போது ப்ரசெண்ட் பண்ணு, சாப்பிட்டியா?" என்று கேட்டவனிடம் சாப்பிட்டேன் என்று தலையை ஆட்டினாள் ஷைலஜா.
"இன்னிக்கு ராகினி ஆன்ட்டிக்கு ஏதோ ஆப்பரேஷன் இருக்காம் ஸோ ஈவ்னிங் பவின் நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னார், இப்படி அழுது வடிஞ்சுட்டு இருக்காதடா செல்லம், ஒரு ஹெல்ப் பண்றியா விவேக் மாமா ரொம்ப நேரமா எல்லாரையும் பார்த்து பார்த்து கவனிச்சுட்டு இருக்காங்க..... அவங்கட்ட ப்ளசிங்ஸ் கூட வாங்கிக்கல. நான் அவரை இங்க கூப்பிட்டேன்னு சொல்றியா?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன்,
"சித்தப்பாவை அனுப்பி வைக்கிறேன் அத்தான்!" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் ஷைலஜா.
"என்ன கவி...... ஷைலுட்ட இவ்வளவு கோபமா பேசணுமா? சொல்றதை கொஞ்சம் ஸ்மைலிங் பேஸோட சொல்லலாமே?" என்று கேட்ட தன் மனைவியை மேலும் கீழும் பார்த்தவன்,
"திட்டுறப்போ முகத்தை கோபமா தான் வச்சுக்க முடியும். சிரிச்சுட்டே திட்டினா எல்லாரும் லூசும்பாங்க. உன் அம்மா அப்பாட்ட பேச நினைச்சதெல்லாம் பேசிட்டியா? உங்க மாமனார், மாமியார் கால்ல விழுங்க கவின்னு எதுவும் சொல்லிடாத. கண்டிப்பா என்னால முடியாது!" என்றான் பார்கவ்.
"அவங்கட்ட ஆசிர்வாதம் வாங்கணும்ன்னு எனக்கே தோணல, அப்புறம் உங்களை எப்படி கவி நான் அதெல்லாம் செய்ய சொல்லுவேன்? ராகவ் இனிமே பலராம் மாமா தான் என்னை பொண்ணு மாதிரி பார்த்துக்க போறாங்கன்னு அவங்கட்ட
சொல்லிட்டாங்க தெரியுமா?" என்று சொன்ன தன் மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு புன்னகைத்தவன்,
"அப்பாவுக்கு பொண்ணுன்னா ரொம்ப பிடிக்கும் வாணிம்மா..... எனக்கு பொண்ணு பெத்து தராம போயிட்டன்னு அம்மாவை அப்பப்போ திட்டிட்டு இருப்பார், அப்பாவுக்கு நம்ம வேணும்னா சீக்கிரம் ஒரு பொண்ணு பெத்து குடுத்துடுவோமே வாணிம்மா?" என்று கேட்டவனுக்கு பதில் தராமல் தலை கவிழ்ந்து கொண்டாள் அபிநயா.
"பதில் சொல்லாம கீழே குனிஞ்சு கால் விரல எண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று காதருகே ரகசியம் பேசியவனிடம்,
"கை நல்லா க்யூராகுற வரைக்கும் என் பக்கத்துல வரமாட்டேன்னு சொன்னீங்க? இப்போ என் கிட்ட பதில் கேட்டா நான் என்ன சொல்றதாம்? நான் இத்தன வருஷமா நம்மள பத்தி நிறைய இமாஜினேஷன் போயிட்டு வந்துட்டேன். நம்ம ரெண்டு பேருக்கும் லவ் டூயட் முடிஞ்சு கல்யாணம் முடிஞ்சு நம்ம பையனுக்கு அஞ்சு வயசாகி பர்ஸ்ட் ஸ்டாண்டர்டு போயிட்டாரு, செல்லக்குட்டிக்கு இன்னும் பேரு தான் வக்கலை. உங்களை கன்சல்ட் பண்ணிக்காம எப்படி பேரு வைக்கிறதுன்னு செல்லம், ராஜான்னு கொஞ்சிக்குவேன்.
ஆனா நீங்க இப்ப பொண்ணு வேணும்னு கேக்குறீங்களே கவி" என்று கேட்ட தன் மனைவியின் பேச்சை கேட்டு அதிர்ந்து நின்றான் பார்கவ்.
"கமிட்மெண்ட்டை முடிச்சிட்டு ஒரு நாள் கூட வேஸ்ட் பண்ணாம ஜ்வல்ஸ் வாங்க வந்தா எவ்வளவு கோபம் வந்தது உங்களுக்கு? அப்படி கோபப்பட்டவர் ஏன் என் போட்டோவை கபோர்டில் வச்சிருந்தீங்க? நல்ல வேளை கையில அடிபட்டப்போ ஒரு வாரத்துல வந்துட்டீங்க; இல்லன்னா எனக்கு உங்க மேல ரொம்ப கோபம் வந்துருக்கும்...... நீங்க ஊருக்கு போயிட்டு வந்ததுனால அந்த எக்ஸ்க்யூஸ் கூட!" என்று சொன்னவளிடம்,
"எப்படி மேடம் உங்களுக்கு எங்க மேல கோபம் வந்துருக்குமா? எனக்கு ஆல்ரெடி வந்துடுச்சுடீ...... கொஞ்சம் அதிகமாக படிச்சுட்டா லூசாயிடுவியா நீ? எட்டு வருஷம் தனியா போராடிட்டு இருந்ததுக்கு பதிலா என் கிட்ட உன் பிரச்சினையை சொல்லியிருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து ட்ரை பண்ணி இன்னும் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிருக்கலாம்ல..... என் பெர்மிஷன் இல்லாம எப்படிறீ நீ குழந்தை பெத்துக்கிட்ட.... பையன் யார் மாதிரி இருப்பான்?" என்று கேட்டவன் தோளில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டு,
"ஆக்சுவலி நான் 10 வருஷம் டார்கெட் வச்சிருந்தேன் கவி; அக்கா தங்கச்சிங்களை செட்டில் பண்ணிட்டு அம்மா அப்பாவுக்கு மாசம் மாசம் ஒரு அமௌண்ட் கிடைக்குற மாதிரி இன்வெஸ்ட் பண்ணிட்டு தான் உங்க கிட்ட வரணும்ன்னு நினைச்சேன், ஆனா இதுக்கு மேல நீ பட வேண்டாம்; மரியாதையா கவிட்ட போன்னு எனக்கு நானே சொல்லிட்டு 8 வருஷத்துல ஓடி வந்துட்டேன். நான் உங்களை நினைச்சு நினைச்சு உருகிட்டு இருந்தா நீங்க பாட்டுக்கு கெனடியன் ப்ளேயர், பாப் சிங்கர், உங்க க்ளையண்ட்ஸ், சாரா ஜ்வல்லர்ஸ், கொடைக்கானல் மலைன்னு ஜாலியா சுத்திட்டு இருந்துருக்கீங்க..... நம்ம பையன் பார்க்குறதுக்கு உங்கள மாதிரி, பிஹேவியர்ல என்னை மாதிரி இருப்பான்.....இதுக்கு அப்புறம் என்ன சொல்றது?" என்று யோசித்தவளிடம்,
"கவிய இவ்வளவு வருஷமா அலைய விட்டதுக்கு தண்டனையா அவர் என்ன ரியாக்ட் பண்ணினாலும் எனக்கு ஓகே; நான் இனிமே சிங்கிளா இல்லாம அவரோட மிங்கிள் ஆகிடறேன்னு சொல்றது........" என்றான் குதூகலக் குரலில்.
"கவி நம்ம படிச்சுட்டு இருக்கும் போது ஒரு மூவி போவோம்னு சொல்லி டிக்கெட் எல்லாம் எடுத்துட்டு வந்து என்னை கம்பெல் பண்ணுனீங்களே..... அந்த மூவியை நான் இன்னும் பார்க்கவேயில்ல!" என்றாள் குரலில் ஏக்கத்துடன்.
"ஏய்.... என் வாயில நல்லா வந்துடுடும்டீ.... ப்ரேக்ல உன்னைய கூப்பிட்டா லன்ச்க்குள்ள உடம்பு தூக்கி தூக்கி போடற அளவுக்கு காய்ச்சலை இழுத்து வச்சு வீட்டுக்கு ஓடிட்டு, இப்போ ஏன்டீ நீ அதெல்லாம் பேசுற; என் பதினாறு வயசு பர்ஸ்ட் லவ் உன் கூட சேர்ந்து ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாம செத்தே போச்சு. இப்போ புதுசா மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்!" என்று சொன்னவன் குரலில் சிறிதாக என்றாலும் ஒரு வலி நிறைந்திருந்தது.
"கவி எனக்கு இன்னிக்கு நைட் நம்ம ரெண்டு பேரும் தியேட்டர்ல போய் அந்த படம் பார்க்கணும், படம் இல்லைன்னா மிங்கிளாகுற கதையெல்லாம் கிடையாது!" என்று சொல்லி விஷமமாக சிரித்தவளிடம் கடுப்புடன்,
"இதெல்லாம் ரொம்ப ஓவர்டீ, இன்னிக்கு போய் தியேட்டர்ல உட்கார சொல்ற, அதுவும் நான் புடிச்ச முயல் தான் வேணும்ங்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டுட்டு; போடீ
நீ போங்கு பண்ற!" என்றவனிடம் சிரிப்புடன்,
"நீங்க என் புருஷன் தானே......உங்க கிட்ட தான் நான் மிஸ் பண்ணின விஷயத்தை எல்லாம் உரிமையா கேக்க முடியும்.... கேக்கணும்னு தோணுச்சு. கேட்டேன். குடுக்கறதும் இல்லைன்னு சொல்றதும் உங்க இஷ்டம்!" என்று தோள் குலுக்கி விட்டு அமர்ந்து கொண்டாள் அபிநயா.
"சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட இல்லை இல்லை துணிச்சல்;
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது ரொம்ப ரொம்ப குறைச்சல்;
ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம் இனி
வெட்கங்கள் என்பது வேஷம்
உயிரே உறவே உனதே!" என்று மெல்லிய குரலில் பாடிக் கொண்டு இருந்தவள் சிணுங்கலுடன்,
"கவி என் இமாஜினேஷன்ல உங்க சீரியஸ் பேஸ் இந்த ரொமான்டிக் சாங்க்கு செட் ஆகவேயில்ல..... ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரியாவது நல்லா இருக்கான்னு பார்க்கணும்!" என்று சொன்னவளை பார்த்து பல்லைக் கடித்தவன் போனில் அவனுக்கு பழக்கப்பட்ட ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடைக்கு அழைத்தான். ஒரு ஹோம் தியேட்டர் வேண்டும் என்று ஆர்டர் செய்தவன் டெலிவரி மற்றும் இண்ஸ்டலேஷனுக்கு இரண்டு நாட்கள் ஆகும் என்றதும் உச்சுக் கொட்டி விட்டு பணத்தை கேஷ் ஆன் டெலிவரியில் தந்து விடுவதாக சொல்லி விட்டு வைத்தான்.
"நான் உங்க கிட்ட தியேட்டர்ல படம் பார்க்கணும்ன்னு கேட்டேன். ஹோம் தியேட்டர்ல இல்ல....!" என்று சொல்லி விட்டு அவனை முறைத்தவளிடம்,
"கடைக்காரன் தான் கடுப்படிக்கிறான்னா நீ வேற ஏன்மா கூடக் கொஞ்சம் டென்ஷன் ஆக்குற..... அப்போ கண்டிப்பா இன்னிக்கு சொய்ங் சொய்ங் பாட முடியாதா வாணிம்மா?" என்று பாவமாகக் கேட்டவனை மனம் நிறைந்த சிரிப்புடன் அணைத்துக் கொண்டு, "இன்னிக்கும் பாடலாம், ஹோம் தியேட்டர் வந்த பிறகும் பாடலாம். பட் ஸாரி கவி; ஹோம் தியேட்டர் ரொம்ப காஸ்ட்லி இல்லையே?" என்று கேட்டவளிடம்,
"நம்ம அஃபோர்டு பண்ண முடியாத அளவுக்கு காஸ்ட்லிலாம் இல்ல... நம்மள மட்டும் தனியா விட்டுட்டு எல்லாரும் ஆளாளுக்கு ஒரு பக்கம் வேலை பார்க்குறாங்க போலிருக்கே....வா போகலாம்!" என்று சொல்லி விட்டு தன் மனைவியை தன்னுடன் அழைத்து சென்றான் பார்கவ்.
மண்டபத்தை ஒதுக்கி ஒப்படைத்து வீட்டுக்கு வந்ததும் ஷைலுவும் கவியும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தனர். "பாகி அத்தான் பணம் தான் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க. லட்டுவும், நானும் சேர்ந்து தாத்தாட்டயும் அப்பாட்டயும் பேசி உங்களுக்கு பிடிச்ச ஒரு பொருளை கிப்டா கொண்டு வந்துருக்கோம், தூக்கி எல்லாம் குடுக்க முடியாது, அங்க வச்சுருக்காங்க பாருங்க, அக்செப்ட் பண்ணிக்குறீங்களா?" என்று கேட்ட ஷைலஜாவிடம் மகிழ்ச்சியும் குதூகலமும் ஒருசேர முகத்தில் காட்டி,
"தேங்க்ஸ் ரூபிம்மா....." என்று சொல்லி ஷைலுவின் கைகுலுக்கிய பார்கவ் பலராமிடம் "அப்பா இப்பவே ஒரு அட்டெம்ப்ட் பண்ணட்டுமா?" என்று கேட்ட படி தன் பட்டுச் சட்டையை கழட்டிக் கொண்டிருந்தான்.
"ஷைலு உங்க அத்தான் எதுக்கு சட்டையை கழட்டுறாங்க? இங்க என்ன நடக்குது?" என்று கேட்ட அபிநயாவிடம் நிர்மலா சுருக்கமாக இளவட்டக் கல்லின் கதையை சொல்லி முடித்தார்.
ஆம். கல்யாண பரிசாக ஷைலுவும் இனியாவும் ஜெயந்தனிடம் அடம் பிடித்து பூம்பாறையில் இருந்து பார்கவிற்காக கொண்டு வந்தது இளவட்டக் கல்லைத் தான்.
"பாகி ஏற்கனவே ட்ரையினிங் இருந்தா மட்டும் இத செய்டா. கவனம்!" என்று சொன்ன ஜெய் நந்தனிடம்,
"ட்ரை பண்ணி தோத்தாலும் பரவாயில்லை மாமா; எனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல...." என்று சிரிப்புடன் சொல்லி விட்டு இரு கைகளிலும் மண்ணை அள்ளி பூசி அதை தட்டி விட்டு சென்றான் பார்கவ்.
"ஏய் என்னடீ உம் புருஷனுக்கு நீ தானே கல் தூக்க கத்து குடுத்த..... புள்ளைக்கு கத்துக் குடுத்தியா இல்லையா? புதுப் பொண்டாட்டிட்ட நல்ல பேரு வாங்கணும்ல" என்று கீதாவிடம் பத்மா கேட்டார். அவரது பேரன் கல்லை தூக்கி விட வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.
"ராம் பாகிக்கு சொல்லி குடுத்துடுப்பார்னு நினைக்கிறேன்மா. மீரா பால் பழம் ரெடி பண்றா போலிருக்கு. நான் போய் பார்க்குறேன்!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார் கீதா.
"ஏன் அண்ணி உங்க புருஷன் இந்த டாஸ்க்கை கம்ப்ளீட் பண்ணிடுவார்னு உங்களுக்கு தோணுதா?" என்று கேட்ட ராகவிடம்,
"அவரால கம்ப்ளீட் பண்ண முடியாட்டியும் பரவாயில்லை ராகவ், இவ்வளவு பெரிய கல்லை தூக்கி ஏதாவது ரிஸ்க் ஆகிடாம; ப்ளீஸ் அவர்ட்ட சொல்லுங்க!" என்று பதறினாள் அபிநயா.
"டேய் பெரியவனே..... நீ கல்லை தூக்க வேண்டாமாம்பா.... உன் சகதர்மினி சொல்றாங்க!" என்று சொன்ன தன் தம்பியை முறைத்தவாறு தன் மனைவியை நோக்கி பெருவிரலை உயர்த்தி சிரித்து விட்டு சென்றான் பார்கவ்.
"அபி.....பயப்படாதம்மா அவன் தூக்கிருவான்!" என்று சொன்ன சரஸ்வதியை அண்ணியின் பெயரை மறக்காமல் மாற்றாமல் சொல்லி விட்டாரே என்று ஆச்சரியமாக பார்த்தான் ராகவ்.
இரண்டு மூன்று முறை முயன்று தோற்று விட்டு நான்காவது முறையாக பார்கவ் கல்லை தோளில் ஏந்தி புல்வெளியில் பின்புறமாக போட்டு விட்டான். அனைவரும் அவனை பாராட்ட ஜெயந்தன், "மாப்பிள்ளைட்ட டெக்னிக் கேட்டுட்டு நீ தூக்குவன்னு நினைச்சேன்டா பாகி; நீ முயற்சி பண்ணி உனக்குன்னு ஒரு மெத்தட் கண்டுபிடிச்சு தூக்கிட்ட. சூப்பர்!" என்று கைகுலுக்கி விட்டு சென்றார்.
"அண்ணா உன் கிப்டை பார்த்து முடிச்சாச்சு, இப்போ உன் டாஸ்க்குக்கு போகலாமா?" என்று கவிப்ரியா கேட்க பார்கவ், "இப்பயும் வீட்டுக்குள்ள விட மாட்டீங்களாடா?" என்று சலித்து கொண்டான்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro