💟 ஜீவாமிர்தம் 37
பார்கவ் அபிநயாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்ததும் அர்ஜுன், மீரா, பலராம், கீதா, கவிப்ரியா, சரஸ்வதி அனைவரும் அபிநயாவின் கையைப் பார்த்து பதறி ஆளாளுக்கு கேள்விகள் கேட்டனர்.
"எங்க அண்ணி அடிபட்டுச்சு? கீழே விழுந்துட்டீங்களா?" என்று கேட்ட படி அவளது ஆர்ம் சிலிங் பௌச்சை வருடிக் கொடுத்து கொண்டிருந்த கவிப்ரியாவிடம் மீராவும் கீதாவும்
"கவிம்மா அண்ணிக்கு வலிக்கப் போகுதுடீ; பாகி ரூமுக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு வா, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்; டாக்டர் என்ன சொன்னாங்க அபி?" என்று கேட்ட தன் அத்தையர்களிடம்,
"ஸ்லிப் ஆகி கீழே விழுந்ததுனால வந்த ஃப்ராக்சர் தான் அத்தை; மூணு வாரத்துல சரியாகிடும்ன்னு சொல்லி இருக்காங்க; ஒன் வீக் ரெஸ்ட் எடுத்தாச்சு, இனிமே காலேஜ்க்கு கிளம்ப வேண்டியது தான்! ப்ரியாமா நீ என் கையை கொஞ்ச நேரம் இப்படியே வருடிக் குடுக்குறியா? எனக்கு இது நல்லாயிருக்கு......!" என்றாள் அபிநயா.
"அண்ணி என்னை நம்ம வீட்ல இருக்கிறவங்க யாரும் ப்ரியான்னு கூப்பிட்டதேயில்ல, நீங்க இனிமே இப்படியே கூப்பிடுங்க!" என்றவள் தன் அண்ணனிடம் திரும்பி,
"பாகி நீ அண்ணியை ஏதாவது ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போ. ராகினி ஆன்ட்டி கிட்ட கூட சஜஷன் கேட்டுக்கோ, கை நல்லா சரியாகுற வரைக்கும் காலேஜ்க்கு எல்லாம் போக வேண்டாம் அண்ணி; ஜாலியா வீட்ல இருக்கலாம்! போரடிச்சா நாம ரெண்டு பேரும் போய் உங்களுக்கு, ரூபி, லட்டுவுக்கு புதுசா அவள்ல வெட்டிங் ட்ரெஸ் டிஸைன் பண்ணலாம்!"
என்று சொன்னவளிடம் ராகவ்,
"கவிம்மா போதும், அண்ணி டையர்டு ஆகுறாங்க பாரு; ரூமுக்கு கூட்டிட்டு போய் உன் மொக்கையெல்லாம் போடு, அவங்களுக்கு தூக்கம் வந்துடும், கதவை மூடிட்டு நீ கீழே வந்துடு!" என்றான் ஒரு அழுத்தமான குரலில். அபிநயா சொன்ன விஷயத்தை ஜீரணித்து அதில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சித்து சற்று கோபமாக தான் அமர்ந்து இருந்தான்.
"ஏன்டா சின்னவனே அண்ணிக்கு அடிபட்டுடுச்சுன்னு நியாயமா பாகி தான் டென்ஷன் ஆகணும், ஆனா நீ எதுக்குடா ஒரங்குட்டான் மாதிரி முகத்தை வச்சுட்டு உட்கார்ந்து இருக்க? நிறைய சாப்பிட்டதுல வயிறு எதுவும் வலிக்குதா?" என்று கேட்ட தன் அக்காவிடம்,
"நீ வாய்க்கு ரெஸ்ட் குடுக்காம யூஸ் பண்ணி அந்த விஷயம்லாம் என் காதுக்குள்ள போய் காது வலிக்குது; கொஞ்ச நேரம் உன் வாய்க்கும், என் காதுக்கும் ரெஸ்ட் கிடைக்கட்டும், நல்லாயிருப்ப கிளம்பும்மா!" என்று சொல்லி பெரிய ஒரு கும்பிடு போட்டு தன் அக்கா மற்றும் அண்ணியை மேலே அறைக்கு அனுப்பி வைத்தான் ராகவ்.
"அப்பா, பெரியப்பா வாணி பாவம் நான் இல்லாம கஷ்டப்பட்டுட்டா; அவளுக்கு ஒரு லவ்வரா நான் குடுக்க வேண்டியது வாழ்க்கை பூரா அவ கூட வருவேன்னு ஹோப்பும், இவன் கூட இருந்தா பெட்டரா இருக்கும்ன்னு ஒரு செக்யூர்டு ஃபீலும் தான்! அதை எங்க மேரேஜ் மூலமா அவளுக்கு சீக்கிரம் குடுக்கணும்னு நினைக்கிறேன்! மாமா, தாத்தாட்ட பேசிட்டு சொல்லுங்கப்பா!" என்று சொல்லி விட்டு அவன் அறைக்கு செல்ல ராகவ் மீரா, அர்ஜுன், மற்றும் பலராம், கீதாவுடன் தனியாக ஒரு கூட்டம் போட்டு அபிநயாவின் குடும்ப நிலையை தனக்கு தெரிந்த வரையில் எடுத்து சொல்லி இப்போது உடனடியாக பார்கவ் அபிநயாவின் திருமணத்தை நடத்தி விடலாம் என்று ஜெயந்தனிடம், ஜெய்யிடம் பரிந்துரை செய்ய சொன்னான்.
"சரஸ் பாகி அபி கல்யாணத்தை சீக்கிரம் வச்சுடலாமா? நீ என்ன நினைக்கிற?" என்று தன் தாயிடம் கேட்டார் பலராம்.
சரஸ்வதி சற்று நேரம் யோசித்து விட்டு, "கல்யாணமா..... யாருக்கு? யாருக்கா இருந்தாலும் செஞ்சு வச்சுடு அஜு, நல்ல விஷயம் தானே!" என்று பலராமின் தோளை தடவிக் குடுத்து சொன்னதும் சகோதரர்களும், சகோதரிகளும் மகிழ்ந்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.
"எல்லாம் சரி தான்; இப்போ பூனைக்கு யாரு மணி கட்டுறது? உன் மருமகனுக்கு கல்யாணம்ன்னு அவன்ட்ட சொன்னோம்..... பத்து பக்கத்துக்கு வில்லுப்பாட்டு பாடி நம்மள கொலையா கொன்னுடுவான், இப்போ என்ன பண்றது?" என்று கேட்ட அர்ஜுனிடம் பலராம்,
"டேய் அஜு, நம்ம பருப்பு எல்லாம் ஜெய் மச்சான்ட்ட வேகாது, முதல்ல பாகியை ஜீவாட்ட பேசச் சொல்லு, ஜீவா ஜெய்க்கு கொஞ்சம் சோப் போட்டான்னா..... அதுக்கப்புறம் நம்ம இந்த பாசமலர் சிஸ்டர்ஸ வச்சு அவங்க அண்ணன் கிட்ட அபி கதையை கொஞ்சம் சால்ட், பெப்பர் தூக்கலா போட்டு சொல்லவிடறதுல, தலைவர் அங்கிருந்து கல்யாணத் தேதியோட வந்துருவார்!" என்று கண்ணடித்து தன் அண்ணனிடம் பெருவிரல் உயர்த்த மீராவும் கீதாவும், "அண்ணனும் தம்பியும் க்ரிமினல் இல்ல மீரு இல்ல கீது?" என்று மாறி மாறி கேட்டு கொண்டனர்.
"கீதுப் பாப்பா உன் புள்ளைக்கு உடனே கல்யாணம் பண்ணணும்னா இப்போ உடனே அவனை ஜீவா கிட்ட பேச சொல்லுவியாம், போடா செல்லம்!" என்று சொன்ன தன் கணவனிடம், "இதுகளே இம்புட்டு யோசிச்சு ஜீவாக்குட்டி கிட்ட ஹெல்ப் கேக்குதுக; இன்னும் அவன் என்னென்ன கொலாட்டரல் கண்டிஷனை அண்ணா கிட்ட வைக்க போறானோ? வீட்ல இருக்கிற அத்தனை பேரையும் கல்யாணம் பண்ணி துரத்துறக்குள்ள நமக்கு வயசாகிடும் போல!" என்று முணங்கி கொண்டே மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தார் கீதா.
பார்கவிடம் கீதா பேசி பார்கவ் சற்று தயக்கத்துடன் ஜீவானந்தனை கூப்பிட்டு தனக்கு வேண்டியதை அவன் தான் முடித்து தர வேண்டும் என்று கேட்டதும் எதிர்முனையில் ஜீவானந்தன் கடுப்பாகி விட்டான்.
"டேய் இனியா, ஷைலு கல்யாணம்னீங்க; சரி அவங்க நமக்கு தங்கச்சிங்க அதனால அவங்களுக்கு முதல்ல கல்யாணம்... இட்ஸ் ஓகேன்னு மனசை தேத்திக்கிட்டேன். இப்போ சைடு கேப்ல உனக்கும் கல்யாணம்ங்கிற, அதை நான் தான் அப்பா கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணி தரணும்னு வேற கேக்குற, உனக்கும் பெரியவன் எனக்கு தானே முதல்ல கல்யாணம் பண்ணணும்? அதுக்குள்ள உனக்கு என்னடா அவசரம்?" என்று கேட்டவனிடம் குரலில் எரிச்சலை மறைக்காமல்,
"ஏய் பக்கி நான் என்ன இளவரசனை பட்டத்து ராஜாவாக்குறதுக்கா இப்போ உங்கிட்ட பேசிட்டு இருக்கேன்.....ஏஜ் ஃப்ரிபெரன்ஸ், மெச்சூரிட்டி ஃப்ரிபெரன்ஸ் எல்லாம் பார்க்குறதுக்கு....இட்ஸ் அ ப்யூட்டிஃபுல் பாண்டிங் பிட்வின் டூ ஹார்ட்ஸ் டேமிட்!" என்று எகிறியவனிடம்,
"யெஸ் அப்கோர்ஸ் யூ ஆர் எக்ஸாட்லி கமிங் டூ தி பாயிண்ட் மிஸ்டர் பார்கவ்....அப்படிப் பார்த்தாலும் என்னோட லிட்டில் ஹார்ட் ஸ்கிப்ட் அ பீட் அட் தி ஏஜ் ஆஃப் டூ! அது ஒரு குட்டி தேவதை மேல ஒரு சின்னப்பையனுக்கு வந்த காதல்; உன்னைய மாதிரி ஆளுக்கெல்லாம் டீன் ஏஜ்ல தானே வந்துச்சு..... பட் எனக்கு பல்லு முளைச்சப்பவே கூட சேர்ந்து காதலும் முளைச்சுடுச்சு மச்சி! இப்போ சொல்லு லவ் பாண்டிங் எனக்கு தானே முதல்ல வந்தது?" என்று ஜீவா உணர்ச்சிபூர்வமாக பேசிக் கொண்டிருக்கையில் பார்கவ், "முடியலடா என்னைய விட்டுடுங்க!" எனும் தோரணையில் சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான்.
"என்னாச்சு கவி...... திடீர்னு அமைதியாய்டீங்க!" என்று அபிநயா கேட்க கவிப்ரியா பொங்கி எழுந்து விட்டாள்.
"டேய் இதுக்கு தான் அண்ணி என்னைய ப்ரியான்னு கூப்பிட்டாங்களா..... என் முன்னாடி உன் நிக்நேமை சொல்லக் கூடாதுன்னு முதல்லயே அவங்களுக்கு சொல்லி கூட்டிட்டு வந்தியா? ஒரு உறையில ஒரு வாள் தான்டா இருக்க முடியும்..... அண்ணி உடனே நீங்க உங்க வுட்பிய கூப்பிடறதுக்கு ஒரு நல்ல பேரா கண்டுபிடிக்குறீங்க!" என்று சொன்னவள் தலையில் அழுந்த குட்டினான் ராகவ்.
"சித்தி பாரு சித்தி இவன்லாம் என்னைய அடிக்கிறான்!" என்று கீதாவிடம் புகார் படித்தவளை ஆவென்று வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தாள் அபிநயா.
"டேய் என் மூக்கி கூட என்னடா பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க? அப்புறம் உங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன் பார்த்துக்குங்க, போனை அவ கிட்ட குடுடா!" என்று சொன்ன ஜீவா கவிப்ரியா போனை பார்கவிடம் இருந்து வாங்கியதும், "அம்முலு மச்சான் கூட பழம் விட்டுடு செல்லம்! உன்னை பார்க்காம எனக்கு ரொம்ப கோபம் கோபமா வருதுடீ; உங்கண்ணன் கிட்ட கா விட்டுட்டு மச்சான் கூட பேச வாடா கேப்ஸி; நாம பேசலாம்!" என்றவனிடம்
"எனக்கும் தான் உன்னைய பார்க்காம, உன் கூட பேசாம நல்லாவே இல்ல இருடா; வீடியோ கால் பண்றேன்!" என்று சொல்லி விட்டு பார்கவிடம் அலைபேசியை கொடுத்து விட்டு அவளது மொபைலை நோண்டிக் கொண்டு சென்றாள் கவிப்ரியா.
"அப்பாடா போய்ட்டா; நான் தான் உன் கிட்ட அவ இருக்கறப்போ கவின்னு கூப்பிடாதன்னு சொன்னேன்ல வாணிம்மா.....ஜாக்கிரதையா இருக்க மாட்ட...... நல்ல வேளை ஜீவா கூப்பிடதுனால போய்ட்டா!" என்று சொன்னவனிடம்,
"டேய் பாகி அபி உன்னை முதல்ல இருந்து கூப்பிடுற பேரை கவிக்குட்டிக்காக மாத்திக்க சொன்னா எப்புடி அவளால மாத்திக்க முடியும்? நீ இயல்பா இரு அபி.... யாருக்காகவும் உன்னோட பழக்கம் எதையும் நீ மாத்திக்க தேவையில்ல. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா!" என்று சொன்னவரிடம் மறுப்பாக தலையை ஆட்டிய ராகவ்,
"கொஞ்ச நேரம் இவனும் அண்ணியும் பேசிட்டு இருக்கட்டுமே கீது....ரெண்டு பேருக்கும் ப்ரைவஸி குடுக்கவே மாட்டேங்குறீங்க...... டேய் அண்ணா அண்ணிட்ட உன் பர்சனல் எமோஷன்ஸை எல்லாம் ஷேர் பண்ணிட்டு கீழ வா, அதுக்குள்ள நம்ம வீட்டுப் பெரிசுங்க சேர்ந்து உன் கல்யாண தேதி பேசி முடிக்கிறாங்களான்னு பார்த்துட்டு நான் உனக்கு அப்டேட் பண்றேன். பை அண்ணி!" என்று சொல்லி விட்டு ராகவ் தன் அன்னையுடன் பார்கவின் அறையில் இருந்து வெளியே சென்று விட்டான்.
ராகவ் சென்றதும் அறையை தாளிட்டு வந்து தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் புன்சிரிப்புடன்,
"என்ன கவி பர்ஸ்ட் டைம் பார்க்குற மாதிரி லுக் எல்லாம் புதுசா இருக்கு?" என்று கேட்டாள் அபிநயா.
"கபோர்டில் இருக்கிற உன் போட்டோவை பார்த்து பெருமூச்சு விட்டுட்டே லைஃப் முடிஞ்சுடுமோன்னு நினைச்சேன் வாணிம்மா, பட் என்னோட கேர்ள், என்னோட ரூம்ல, எனக்கு பக்கத்துல.... இன்னும் ஒரு வாரம் பத்து நாள்ல கல்யாணம்ன்னு வேற சொல்றாங்க, முழுசா எதையும் நம்பக் கூட முடியலடீ!" என்று சொன்னவனை குழப்பமாக ஏறிட்டு,
"கவி நான் உங்க கிட்ட எந்த போட்டோவும் குடுக்கவேயில்லையே..... ஸ்கூல்ல பார்த்துகிடுறதை தவிர நம்ம வேற எங்கயும் போனது கூட கிடையாது. அப்புறம் எப்படி என்னோட போட்டோ உங்க கிட்ட? எப்ப எடுத்தீங்க? எப்படி எடுத்தீங்க?" என்று கேட்டவளை தன்னுடன் அழைத்து சென்று தன் கபோர்டை திறந்து காட்டினான் பார்கவ்.
"நம்ம செட் ப்ளஸ்டூ சீனியர்ஸ்க்கு ஃபேர்வெல் குடுத்தோம்ல..... அப்போ எடுத்த க்ரூப் போட்டோவை பார்த்து உன்னை மட்டும் தனியா என் பெரியம்மா வரைஞ்சு தந்தாங்க. வரைஞ்சு தரலன்னா பப்ளிக் எழுத போக மாட்டேன்னு அடம் பிடிச்சு அவங்கள வரைய வச்சது, நீ நோ சொல்லலன்னா இண்டர் பாஸ் பண்ணியிருப்பேனான்னு கூட தெரியல, பட் என் இமாஜினேஷன்ல உனக்கு கண்றாவியான ஒரு ஹஸ்பெண்ட், அழுக்கா ஒரு பாப்பா எல்லாம் அடிக்கடி வந்து போகும். அந்த கோபம் எல்லாம் வெறியா மாறி ஜெயிச்சே ஆகணும்ங்கிற கம்பெல்ஷனாகி தான் சிஏ ஈஸியா கம்ப்ளீட் பண்ண முடிஞ்சதுன்னு நினைக்கிறேன்!" என்று சொன்னவனிடம்,
"என் மேல நீங்க வச்ச லவ் என்னை ரொம்ப ஆச்சரியப்பட வைக்குது கவி; ஆனா பாவம் நீங்க; உங்க கனவுல வர்ற அந்த கண்றாவியான முகம் உங்க முகம் தான்னு உங்களுக்கு தெரியல பாருங்களேன்....... ஆனா அழுக்கா இருந்தாலும் அழகா இருந்தாலும் பாப்பா பாப்பா தானே..... குழந்தையெல்லாம் எப்படி இருந்தாலும் அழகு தான் கவி!" என்று சொல்லி அவன் மடியில் படுத்துக் கொண்டவளை சிரிப்புடன் அணைத்துக் கொண்டு,
"நம்ம இமாஜினேஷனை பத்தி எல்லாம் அப்புறம் பேசலாம். கொஞ்ச நேரம் தூங்குடா, கை வலிக்குதா......?" என்று கேட்ட படி அவள் கையை வசதியாக வைத்து விட்டு கேட்டான் பார்கவ்.
"கொஞ்சம் வலிக்குது தான்...... பட் ரொம்ப ரொம்ப ஜாலியா இருக்கு கவி! என்ன எனக்கு உங்களை மாதிரி, ப்ரியா மாதிரி டக்ன்னு கவுண்ட்டர் குடுக்க வர மாட்டேங்குது, பட் உங்க சண்டை எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு!" என்று சொன்னவளிடம்,
"கொஞ்ச நாள் போச்சுன்னா கவுண்ட்டருக்கெல்லாம் பஞ்சம் இருக்காது. உங்கிட்ட ஒரு சின்ன ஆப்ளிகேஷன் வாணிம்மா ஷைலுவை நம்ம மேரேஜ்க்கு கூப்பிட....." என்று தயங்கி நிறுத்தினான் பார்கவ்.
"நம்ம ரெண்டு பேரும் கூப்பிடலாம் கவி; ஷைலு கோபப்பட்டா நீங்க அவ கிட்ட ஸாரி கேக்கணும், இப்போ தூங்கட்டுமா.....?" என்று அவன் முகம் நோக்கியவளிடம்,
"கை பத்திரம்.....தூங்கும் போது ரோல் ஆகிடாதீங்க மேடம்!" என்று சொல்லி விட்டு சென்றான் பார்கவ்.
கவிப்ரியாவிடம் வீடியோ காலில் "அம்முலு KPR சொல்லுடீ!" என்று கேட்டு அவள் முகம் நோக்கி இதழ் குவித்திருந்தவனிடம்,
"டேய் மாடு இவன் வேற எப்போ பார்த்தாலும் இம்சை பண்ணிக்கிட்டு.....
மறுபடியும் ஒல்லியான மாதிரி தெரியுற.....ஒழுங்கா சாப்பிடுறதில்லையா?" என்று கேட்டாள் கவிப்ரியா.
"மச்சானுக்கு உன்னை பார்க்காம ஏக்கமா இருக்குடா கேப்ஸி..... கொஞ்ச நாளைக்கு இங்க வர்றியாடீ?" என்று கேட்டவன் குரலில் ஏக்கம் வழிந்தது.
"எதுக்குடா மலைக்கு? எல்லாரும் பாகி கல்யாணம்னா இங்க தானே வருவீங்கன்னு அப்பாவும், சித்தப்பாவும் பேசிட்டு இருந்தாங்க? ஸோ அஸ் யூஸ்யுவல் நீயே வந்துடு, பட் இந்த தடவை கொஞ்சம் நிறைய நாள் இருக்குற மாதிரி வா நந்து.... ராகவும் வந்திருக்கான், எல்லாரும் ஜாலியா நல்லா இருக்கும்!" என்று கேட்டவளிடம்,
"இல்லடா அம்முலு; பாகி மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாலும் இங்க யாராவது ஒருத்தர் இருக்கணும்மா, மாணிக்கம் தாத்தாவுக்கு இன்னும் எதுவும் நார்மல் ஆகல, டாக்டர்ஸ் ஸ்கோப்புல்லா ஒண்ணும் சொல்ல மாட்டேங்குறாங்க. ஸோ எல்லாரும் கிளம்பினாலும் நான் இங்க தான் இருக்குற மாதிரி இருக்கும். நான் பாகிட்ட பேசிடுறேன். அவன் புரிஞ்சுப்பான்!" என்று ஜீவா சொன்ன தோரணையில் நீயும் என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யேன் என்ற கெஞ்சல் ஒளிந்திருந்தது.
சற்று நேரம் கவிப்ரியா எதுவுமே பேசவில்லை. "கவிம்மா என்னாச்சுடா?" என்று கேட்டவனிடம்,
"எங்க அண்ணன் கல்யாணத்துக்கு வர்றதை விட, என் கூட இருக்கிறதை விட உனக்கு உங்க மாணிக்கம் தாத்தா தான் பெரிசா இருந்தா அவர் கூடவே இருந்துக்க ஜீவானந்தன். போனை வக்கிறேன்!" என்று சொன்ன கவிப்ரியாவிடம்,
"எங்க, உங்கன்னு வார்த்தையெல்லாம் ரொம்ப வித்தியாசமா வருது கவிப்ரியா, கொஞ்சம் வார்த்தைகளை கவனமா உபயோகப்படுத்தினா பெட்டரா இருக்கும்!" என்று இறுகிய குரலில் சொல்லி விட்டு வைத்து விட்டான் ஜீவானந்தன்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro