💟 ஜீவாமிர்தம் 34
Disclaimer
பட்டங்கள் ஆள்வதில், சட்டங்கள் செய்வதில் வேண்டுமானால் ஆண்களுடன் பெண்கள் சரிசமமாகலாம். ஆனால் மது, புகை போன்ற சமூக சீரழிவுக்கு காரணமான போதைகளிலும் அவர்களுக்கு இணையாக வேண்டும் என்றால்.....
தான் பழகும் பழக்கம் தன்னை அடிமையாக்கி உடல்நலத்தையும் கெடுத்து சமூக மரியாதையையும் சீர்குலைத்து விடும் என்று தெரியாமல் வெறும் ஆர்வக்கோளாறால் விட்டில் பூச்சிகள் விளக்கருகில் நெருங்குவது போல் போகும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு பதிவு. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த விதமான போதைப்பழக்கமும் மிகவும் ஆபத்தானது. தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
மாலையில் ஜெய் நந்தன் நிர்மலாவுடன் சாவகாசமாக அமர்ந்து பேசிக்கொண்டு தன் தேநீரை அருந்திக் கொண்டு இருந்தார். கோல்ப் க்ளப், நண்பர்கள் பார்ட்டி என்று வரிசை கட்டி கொண்டு ப்ரோக்ராம்கள் இருந்தாலும் ஞாயிறு மாலை வீட்டை விட்டு எங்கும் அசைய மாட்டார். நிர்மலாவின் முகம் சற்று வாட்டமாக இருப்பதை காண சகியாமல்,
"நிலாக்குட்டி அப்போலேர்ந்து அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பதில் சொல்லும்மா, மாப்பிள்ளை ஓகே தானே? உன்னை தவிர வீட்ல எல்லாரும் டபிள் ஓகே சொல்லிட்டாங்க. நீ தான் அமைதியாவே இருந்து என் ப்ளட் பிரஷரை ஏத்திட்டு இருக்க. வாயை திறந்து பேசேன்டீ!" என்று கெஞ்சலில் ஆரம்பித்து கடுப்புடன் முடித்தார்.
"ஹாய்ப்பா உங்க கூட நானும் ஜாய்ன் பண்ணிக்கலாமா? மே ஐ சிட் ஹியர்?" என்று கேட்ட படி தன் தந்தையின் அருகே அமர்ந்து அவர் கோப்பையை பற்றி அவர் குடித்து கொண்டு இருந்த பாதி தேநீருடன் இன்னும் கொஞ்சம் ப்ளாஸ்க்கில் இருந்து எடுத்து ஊற்றி தன் கைகளில் வாங்கிக் கொண்டான் ஜீவானந்தன்.
"ஏன்டா டீ வேணும்னா தனியா குடிக்க வேண்டியது தானே..... என் கப்பை எதுக்கு வாங்கிக்குற? எதுக்கு இப்படி சின்ன பையன் மாதிரி உட்கார பெர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்க?" என்று கேட்ட தன் தந்தையிடம்,
"உங்களோட டீ தான் நல்லா இருக்கும்ப்பா, ரெண்டு பேரும் ஏதோ முக்கியமா பேசிட்டு இருந்தீங்க....அதான் பெர்மிஷன் கேட்டேன். என்னம்மா அப்பா ஏதாவது திட்டீட்டாங்களா?
டல்லா இருக்குற மாதிரி தெரியுறீங்களே?" என்று கேட்டவனிடம்
"நீ, உங்க அப்பா, சித்தப்பான்னு மூணு பேரும் இந்த வீட்ல எதுக்கு இருக்கீங்கன்னு யோசிச்சுட்டு இருக்கேன் நந்து. அன்னிக்கு ஒருத்தர் வந்து இனியாவை தூக்கிட்டு போனாரு, அப்பவும் பின்னாலயே போய் சமாதானம் பேசினோம். இன்னிக்கும் ஒருத்தர் ஷைலுவை அடிச்சுட்டு போறாரு, அவருக்கும் பல்லைக் காட்டிட்டு டாட்டா சொல்லி வழியனுப்புறீங்க..... உங்க அப்பாவுக்கு கொஞ்சம் கூட சுரணையே இல்லையா? கோபம் வரலயான்னு கேட்டு சொல்லு!" என்று சொன்ன நிர்மலாவை,
"ஆனந்த் உங்கம்மா ரொம்ப ஓவரா போறா. இப்படி பேசறது எனக்கு பிடிக்கலடா, அவ கிட்ட சொல்லி வை!" என்றார் ஜெய் நந்தன்.
"அப்பா கூல் டவுன், ரிலாக்ஸ்டா இருங்க, அம்மாட்ட நான் பேசிக்கறேன்!" என்று சொன்னவன்,
"அம்மா, ராசு இனியாவை கடத்திட்டு போனதுக்கும், பவின் ஷைலுவை அடிச்சதுக்கும் பேஸிக் ரீசன் ஒண்ணு தான், அவங்க ரெண்டு பேரும் அவங்கங்க பெட்டர் ஹாப் அ லவ் பண்றாங்க. இவ்வளவு
பேசுறீங்களே, உங்க பொண்ணு மட்டும் என்ன ரொம்ப சாந்தசொரூபியாவா நின்னுட்டு இருந்தா? அவளும் தானே அவரை பந்தால அடிச்சா......அவரை திட்ட வேற செஞ்சுருக்கா! மனசுக்கு பிடிச்ச பொண்ணு அடிச்சாலும் கடிச்சாலும் சத்தமே காட்டாம வாங்கிக்குறதுக்கு அவரென்ன ஜீவானந்தனா?" என்று கேட்டவன் தலையில் பின்புறம் இருந்து ஒரு குட்டு விழுந்தது. திரும்பி பார்த்தவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு நின்று கொண்டு இருந்தாள் ஷைலஜா.
"எதுக்கு பிரதர் இந்த செல்ஃப் டப்பா? அந்த பவின் கிட்ட என் நிக் நேமை சொன்னதும் நீதானாமே; கேள்விப்பட்டேன். அவன் என்னைய இன்டென்ஷனலா அடிச்சான் தெரியுமா.... ஆனா நான் ஜஸ்ட் ஆக்ஸிடெண்டலா தான் அடிச்சேன். அதையும் இதையும் கம்பேர் பண்ணிகிட்டு எனக்கு ஸப்போர்ட் பண்ணாம இருக்கியா நீ? நீ எனக்கு அண்ணனா இல்ல அவனுக்காடா?" என்று முகத்தை மூடிக் கொண்டு போலி அழுகைக்கு தயாரானவளிடம்,
"ஷைலும்மா நீ பவின் கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஏதோ ஒரு டெர்ம் யூஸ் பண்ணி அந்த மாதிரி தான் உங்க வீட்டுக்கு வருவேன்னு சொன்னியாமே? அது என்ன விஷயம் பேபி?" என்று அவள் கண்களை பார்த்து சற்று இறுக்கமான குரலில் ஜீவானந்தன் கேட்க ஷைலஜா எச்சில் விழுங்கி விட்டு அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று தன் தாய் தந்தையிடம் கூறி ஜீவாவின் கைப்பிடித்து இழுத்து சென்றாள்.
"டேய் ஆனந்த் என்னடா நடக்குது இங்க? இப்போ அண்ணனும் தங்கச்சியும் தனியா என்ன பேசப் போறீங்க?" என்று கேட்ட தன் தந்தையிடம்,
"தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ் மிஸ்டர் பண்ணையார்! நீங்க கூட தான் மாசத்துக்கு ஒரு தடவை விடிய விடிய உங்க தங்கச்சிங்க கூட பேசுறீங்க..... அதெல்லாம் என்னன்னு நாங்க கேக்குறோமா? அதை மாதிரி தான் எனக்கும் ஷைலு இனியாவுக்கும் நடுவில நீங்க வரக் கூடாது!" என்று சொல்லி விட்டு சென்றவனிடம்,
"ஆக மொத்தத்துல இவன் என் டீயை குடிக்குறதுக்கு தான் வந்திருந்தான் போல..... நீ என்னடீ சொல்ற?" என்று தன் மனைவியின் தோளில் கை போட்டு கொண்டவரிடம்,
"மூணு கல்யாணம் பக்கத்துல வந்துடுச்சு..... தேவையான ஏற்பாட்டையெல்லாம் செய்ங்கன்னு சொல்றேன் மிஸ்டர் நந்தன். எப்படியும் ஜீவாம்மா எல்லாத்தையும் கரெக்டா பார்த்துக்குவான்!" என்று சொன்ன தன் மனைவியின் தாடையை திருப்பியவர்,
"இப்போல்லாம் என்னை விட உன் பையன் பெரிசா போயிட்டான்ல உனக்கு?" என்று கேட்டவரிடம் நிர்மலா மெலிதான புன்னகையுடன்,
"இல்லையே ஜெய் ஸார்..... அவனை விட நீங்க தான் பெரிசு; அதாவது கிழம்ஸ்!" என்று சொல்லி விட்டு எழுந்த நிர்மலாவிடம், "யார்டீ கிழவன்..... ஐ'ம் ஜஸ்ட் பிப்டி யூ நோ!" என்று சொல்லி விட்டு அவர் முகத்தருகே வந்தவரிடம் கோபம் கொண்டு,
"உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா ஸ்ரீ? பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் பங்ஷன் முடிஞ்சதுக்கப்புறமா நம்ம அவங்களையும் கூட்டிட்டு மாணிக்கம் அண்ணாவை பார்த்துட்டு வந்திருக்கணும். இனியாவும், விவேக்கும் மாறி மாறி ஹாஸ்பிடலுக்கு ஓடிட்டு இருக்காங்க. சின்னப்புள்ளயில நம்ம ஜீவாவை தரையில நடக்க விடாம தூக்கி வளர்த்தவங்க ஸ்ரீ; அதை அவன்தான் மறந்துட்டான். நம்மளும் மறந்துடலாமா....நமக்காக மாணிக்கம் அண்ணா எவ்வளவு செஞ்சிருக்காங்க?" என்று கேட்டு குற்றம் சாட்டும் பார்வை பார்த்த மனைவியிடம், "ஸாரி நிலாம்மா; எனக்கு தோணல; எட்டு மணிக்கு தானே விஸிட்டர்ஸ் டைம் முடியும்? இன்னொரு ஹாப் அன் அவர்ல கிளம்பலாம். உன் பொண்ணு அவங்க அண்ணன் காதை கடிச்சுக்கிட்டு கிடக்கா, என்ன விஷயமா இருக்கும்டீ? பவினை வேற பேச்சுவாக்குல உள்ள இழுத்துச்சுங்க..... ஐயோ ஆர்வம் தாங்க முடியலயே!" என்று மண்டையை உருட்டிக் கொண்டு இருந்தவரிடம்,
"ரெண்டும் என்னமாவது பேசிட்டு போறாங்க, ஷைலுவுக்கும், இனியாவுக்கும் வாங்குற மாதிரி கவிம்மாவுக்கு கூட நாம எல்லாம் வாங்கலாமா ஸ்ரீ? எனக்கெல்லாம் நீங்க தானே வாங்கிக் குடுத்தீங்க.... இப்போ நம்ம மருமகளுக்கு கூட வாங்கி குடுங்க. என்ன இருந்தாலும் என்னைய விட கவிம்மா தானே உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?" என்று கேட்ட தன் மனைவியின் குரலில் மிக லேசாக பொறாமையின் சாயல் தெரிந்தது கண்டு ஜெய் சிரிப்புடன் நிர்மலாவின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
"ஏன் பஞ்சு மூட்டை..... பொசு பொசுன்னு கிளம்புறதுனால தான் அதுக்கு பேரு பொஸஸிவ்னெஸ்னு வச்சுருக்காங்களோ? கண்டிப்பா ஏஞ்சல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான். பட் என் நிலாக்குட்டி அளவுக்கு எல்லாம் ஸ்பெஷல் இல்ல. இப்போதான்டீ உன்னை கல்யாணம் பண்ணின மாதிரி இருக்கு. திரும்பி பார்த்தா நம்ம புள்ளைங்க மூணுக்கும் கல்யாணம் வந்துடுச்சு, சீக்கிரம் ஆனந்த்ட்ட கொஞ்சம் ரெஸ்பான்ஸிபிளிட்டியை குடுத்துட்டு நானும், நீயும் விவேக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கணும், அஜு அவன் இஷ்டத்துக்கு ஏஞ்சலுக்கு செய்றதை செய்யட்டும், நாம உன் ஐடியா படி எல்லாத்தையும் மூணா வாங்கிடலாம். ஹாப்பி தானே?" என்று கேட்ட கணவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, "வெரி ஹாப்பிடா புருஷா; தேங்க்யூ!" என்றவரை பார்த்து கண்சிமிட்டி இதழ் குவித்தவர்,
"போய் சேன்ஜ் பண்ணிட்டு உங்க புள்ளைங்கள கூட்டிட்டு அப்படியே சக்தி முத்துவுக்கு ஃபீட் பண்ணிட்டு வந்துடுங்க பண்ணையாரம்மா!" என்று போகிற போக்கில் ஒரு வேலையையும் தன்னிடம் தள்ளி விட்ட கணவனை பார்த்து புன்னகை புரிந்து விட்டு சென்றார் நிர்மலா.
"எனக்காக பொறந்தாயே எனதழகி;
இருப்பேனே மனசெல்லாம் உனையெழுதி!" என்ற பாடலை முணங்கி கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.
ஜீவானந்தன் தன் அறைக்குள் தன் தங்கையை காய்ச்சி எடுத்து கொண்டு இருந்தான். அவள் கட்டிலில் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.
"இங்க இருக்க எனக்கு பிடிக்கல, உன் வீட்டுக்கு அன்பெய்டு கெஸ்ட்டா வந்துடட்டுமான்னு எப்படி பேபி பவின்ட்ட போய் கேட்ட; அவன் அந்த வார்த்தையை சொன்னதும் நான் எவ்வளவு டிஸ்டர்ப் ஆகிட்டேன் தெரியுமா? அம்மா அப்பாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாங்க தெரியுமா? உனக்கென்ன நான் இங்க வந்ததும் உன் ப்ரியாரிட்டி போயிடுச்சுன்னு நீ நினைச்சன்னா, இனியா விவேக் சித்தப்பாவை என் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிட்டு நான் அவுட்ஹவுஸ்ல இருந்துக்கறேன். எனக்கு உங்க எல்லார் கூடவும் இருக்கணும் அவ்வளவுதான். ஆனா என்னையறியாம நான் உன்னை ஏதாவது பைபாஸ் பண்ணின மாதிரி நீ ஃபீல் பண்ணி இருந்தன்னா ஸாரிடா; நீயும் இனியாவும் தான்டா இந்த வீட்டுக்கு சந்தோஷம்; என்னைய பிரிஞ்சு அப்பா வருஷக்கணக்கா இருந்தாரே; ஆனா உங்க கல்யாணம் முடிஞ்சதும் ஒரு மாசத்துல பாதி நாள் உங்க கூட தான் இருப்பார் பாரேன்..... உனக்கு கோபம் வருதுன்னா என் கிட்ட வந்து சண்டை போடு; அதை விட்டுட்டு உனக்குள்ள ஃபீல் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்காத!" என்று அவள் முன்னால் மண்டியிட்டவனை அணைத்துக் கொண்டு, "ரொம்ப ஸாரிடா அண்ணா; அப்பா அம்மா கிட்ட சொல்லிடாத, தெரியாம பேசிட்டேன்.
எனக்கு ஒரு பி.......பி....பியர் வாங்கி தர்றியா? ரெண்டு பேரும் சேர்ந்து செலிபரேட் பண்ணலாம்? அந்தப் பையன் கூட என்கேஜ்மெண்ட் நடந்ததுக்கு உன் ட்ரீட்டா குடேன், நான் ட்ரை பண்ணி பார்த்தேயில்ல, ப்ளீஸ் அண்ணா.....ப்ப்ப்ப்ளீஸ் ஜீவாண்ணா" என்று சொல்லி கிட்டதட்ட அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள் ஷைலஜா.
"ஏய் லூசு.....ஆர் யூ சீரியஸ்; என்ன கேக்குறோம்னு தெரிஞ்சு தான் கேக்குறியா? வேண்டாம் பேபி; 17 வயசுல அப்பா என்னை கடைசியா அறைஞ்சார். இப்போ விஷயம் தெரிஞ்சா உடம்புலேர்ந்து தோலை தனியா உரிச்சுடுவாருடீ. மோர்ஓவர் எனக்கு பப்புக்கு எல்லாம் போன பழக்கமும் இல்ல, என் செல்லம்ல வேற ஏதாவது கேளு தங்கம்!" என்று தன் தங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவனிடம்
"எனக்கு அது வேணும்னா வேணும்; லட்டு கிட்ட சொன்னா அவ என் கையை பின்னாடி முறுக்கிட்டு முதுகில குத்து குத்துன்னு குத்திட்டா. காலேஜ்ல அப்பப்போ பிரெண்ட்ஸ் எல்லாம் யூஸ் பண்றாங்கடா; எனக்கு அது எப்படி தான் இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணும். வீட்ல யாருக்கும் தெரியாம நீ எனக்கு வாங்கி குடு; வேற யார் கிட்டயும் கேக்க முடியல..... ப்ளீஸ் ஜீவாண்ணா!" என்று கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வார்த்தைகளுக்கு தடுமாறி அமர்ந்து விட்டான் ஜீவானந்தன்.
நிர்மலா அவர்களை சஹாயன் செல்ல வேண்டும் என்று இண்டர்காமில் அழைக்க அவரிடம் பேசி வைத்தவன், "இங்க பாரு ஷைலு; நீ கேக்குறது ரொம்ப ரொம்ப தப்பான விஷயம்; அதை நான் உனக்கு வாங்கி குடுக்கறது அதை விட தப்பு; ஆனா என் கிட்ட வேணும்ன்னு கேட்டுட்ட...... ஸ்ட்ராங்கா நோ சொல்றதுக்கு எனக்கு மனசு வரல. இப்போ சஹாயனுக்கு போகணும்னு அம்மா சொல்றாங்க, கிளம்பு; போயிட்டு வந்து இன்னொரு ரவுண்ட் கூட்டிட்டு போறேன். அதுக்குள்ள என் பிரெண்ட்ஸ் கிட்ட எப்படி என்னன்னு இன்பர்மேஷன் கேட்டு வைக்கிறேன். பாகிக்கு தெரியாம இருக்கணும், தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையும் கையில பிடிச்சு நசுக்கிடுவான்!" என்று ஜீவா சொல்லிக் கொண்டு இருக்க ஷைலஜா பயத்தில் உடல் நடுங்கினாள்.
"அண்ணா பியர் குடிச்சதுக்கப்புறமா அந்த எம்ப்டி பாட்டிலை நம்ம கார்டன்ல புதைச்சு வச்சுடலாமா? இல்ல லேக் கிட்ட போய் உன் கார்ல உட்கார்ந்து குடிச்சப்புறம் சைலண்டா டஸ்ட் பின்ல போட்டு வந்துடலாம்!" என்று தங்கை சில பல ஐடியாக்கள் வழங்க ஜீவானந்தனின் உள்ளங்கையிலும், நெற்றியிலும் வியர்வை வழிந்தது.
தன் மனைவி மகன் மகளுடன் மாணிக்கத்தை காண சென்ற ஜெய் நந்தனை கண்ணார கண்ட மாணிக்கம், "என்னிக்கும் இப்படி சந்தோஷமா இருக்கணும் தம்பி; சின்னய்யா அவருக்கும் ஷைலு பாப்பாவுக்கும் நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சதா சொன்னாங்க, தினமும் நேரம் கிடைக்குறப்போ வந்து என்னைய பார்த்துட்டு போறாங்க. என்னால உங்களுக்கு தான் சிரமம்!" என்று சொன்னவரை அவர் கைகளைப் பிடித்து கொண்டு ஆறுதலாக பேசி விட்டு, "தைரியமா இருங்க. சீக்கிரம் சரியாகிடும் மாணிக்கம் அண்ணா!" என்று சொல்லி பிள்ளைகள் இருவரையும் அவரிடம் ஆசி வாங்கிக் கொள்ள செய்து விட்டு கிளம்பினார் ஜெய் நந்தன்.
"ஜீவாக்குட்டி.....ஏற்கனவே இங்க வந்து மாணிக்கம் அண்ணாவை பார்க்க வந்துட்டு இருக்கேன்னு நீ சொல்லவேயில்லயே....? உன் நிச்சயதார்த்தம் அன்னிக்கு விவேக் சித்தப்பா உங்கிட்ட பேசினாங்களா கண்ணா?" என்று கேட்ட தன் தாயிடம்,
"ஆமாம்மா.....எனக்கு மாணிக்கம் தாத்தாவும் ஆனந்த் தாத்தா மாதிரி தானே..... ஏதோ என்னால முடிஞ்ச ஆறுதலை அவருக்கு குடுக்கலாம்ன்னு தான் டெய்லி வந்துட்டு போறேன். அப்பா ஷைலுவுக்கு லேக் கிட்ட காரப்பொரி சாப்பிடணுமாம்; நான் கூட்டிட்டு போய்ட்டு வர்றேன். நீங்க கிளம்புங்க!" என்று சொல்லி விட்டு தந்தையின் சம்மதத்திற்கு கூட பொறுத்திருக்காமல் ஷைலுவை அழைத்து சென்று விட்டான் ஜீவானந்தன்.
தன் தங்கையை காரில் அமர்த்தி விட்டு பத்திரமாக இருக்குமாறு சொல்லி விட்டு இதயம் தடதடக்க ஒரு பப்பிற்குள் நுழைந்தான் ஜீவானந்தன்.
"வாட் வுட் யூ லைக் டூ ஹாவ் ஸார்?" என்று கேட்ட பார் வெயிட்டரிடம்,
"ஒன் பியர் ப்ரோ.....வித் பில்!" என்றான் ஜீவானந்தன்.
"எனிதிங் எல்ஸ் ஸார்!" என்று கேட்டவரிடம்,
"ப்ளீஸ் ப்ரோ....... இட்ஸ் வெரி அர்ஜென்ட், ஐ ஹாவ் டூ கோ...." என்றவன் பேரர் பியரை எடுத்து வந்ததும் அவரை மூடியை திறக்க செய்து அதை ஓர் வாட்டர்பாட்டிலில் ஊற்றிக் கொண்டான். பேரர் அவனை ஒரு விநோத ஜந்துவை போல் பார்த்த பார்வையை எல்லாம் அவன் கண்டுகொள்ளாமல் பணத்தை செலுத்தி விட்டு விரைந்து வெளியே சென்று விட்டான்.
"டேய் அண்ணா தேங்க்யூ சோ மச்; ஐ லவ் யூ டா!" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்ட ஷைலஜாவிடம்,
"பேபி இத சைட் டிஷ் இல்லாம சாப்பிட கூடாதாம், நம்ம கிட்ட சாப்பிடற மாதிரி ஒண்ணும் இல்லையே; என்ன பண்றது.... எதுவா இருந்தாலும் ஒரு அரைமணி நேரத்துக்குள்ள நம்ம வீட்ல இருக்கணும், மேக் இட் பாஸ்ட்!" என்று சொன்ன ஜீவானந்தனிடம்,
"எங்க காலேஜ்ல கேர்ள்ஸ் அசால்டா என்னன்னமோ ப்ராண்டு அடிச்சோம்னு சொல்றாங்க, ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் ஏன்டா இப்படி நடுங்குது.... அப்பாவை கட்டிப் பிடிச்சுக்கிட்டு ஒரு ஸாரி கேட்டுடணும் ஜீவா!" என்று சொன்ன தன் தங்கை தலையை நீவியவன்,
"இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கட்டும்டா பேபி! குடிக்க முடியலைன்னா ஒண்ணும் பிரச்சனை இல்ல, அப்படியே பாட்டிலோட கீழே வச்சுடு!" என்று சொல்லி விட்டு அவளிடம் வாட்டர்பாட்டிலை நீட்டினான்.
மூக்கினால் வாசம் பிடித்து ஒரு மிடறு விழுங்கியவள், முகத்தை சுழித்து கொண்டு காரில் இருந்து வெளியே இறங்கி விட்டாள்.
"த்த்தூ!" என்று துப்பியவளிடம், "என்னடா பிடிக்கலயா? தேங்க் காட்! பாட்டிலை அப்படியே மூடி வச்சுட்டு வந்துடு, போயிடலாம்!" என்று சொல்லி விட்டு காரைக் கிளப்பியவனை ஒரு குடிமகன் தடுத்து நிறுத்தினான்.
"ஏய் பொண்ணு பாட்டில்ல என்னா இருக்கு?" என்று கேட்ட படி தள்ளாடியவனிடம், "அக்னி திராவகம் இருக்கு ப்ரோ; என் எக்ஸ் லவ்வர் உள்ள சரக்கடிச்சுட்டு இருக்கான்; அதான் அவன் வெளியே வர்ற நேரம் பார்த்து வெடிக்கட்டும்ன்னு அவன் பைக் பக்கத்துல வெயிட் பண்ணிட்டு இருக்கேன். டமால்ன்னு வெடிச்சிடும், வேணும்னா ஒரு டெமோ பார்க்குறீங்களா?" என்று கேட்ட ஷைலுவை பயப்பார்வை பார்த்து விட்டு விழுந்தடித்து ஓடிக் கொண்டிருந்தான் அந்தப் பையன்.
"என்னடா ஜீவா ஆசிட் வெடிக்கும்ங்கிறேன், நம்பிட்டு இந்த ஓட்டம் ஓடுறான் பக்கி.... குடிச்சா நிதானம் இருக்காதோ.....உவ்வேக் எனக்கு பிடிக்கல, கசப்பா நல்லாவே இல்ல; இந்த கருமத்துக்கு தான் அவ்வளவு ஸீன் போடுறாங்களாக்கும்!" என்று சொன்ன தன் தங்கையின் தலையில் செல்லமாக குட்டியவன்,
"வீட்டுக்கு போகலாமா வாலு.....?" என்றான் பொங்கி வந்த சிரிப்புடன்.
"போகலாம்டா அண்ணா; எதுக்கும் ஒருக்கா பேஷ் வாஷ் பண்ணிட்டு மவுத் வாஷ் பண்ணிட்டு வந்துடட்டுமா அண்ணா?" என்று கேட்டவளிடம்
"நீ குடிச்ச ஒரு ஸ்பூன் பியருக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லடா பேபி.... வா போகலாம்!" என்று சொல்லி விட்டு புறப்பட்ட ஜீவானந்தனுக்கு அவனது நான்காவது வயதில் பிறந்த தங்கை ஷைலு நீண்ட இடைவெளியின் பின்னர் பேபியாகவே திரும்ப கிடைத்திருந்தாள்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro