Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 33

கொடைக்கானல் மலையின் அழகையும், ஆனந்த ஸாகரத்தின் செழுமையையும் பார்த்தபடி காரை செலுத்திய பவின் தன் தந்தையிடம், "ஏம்ப்பா..... இவ்வளவு ரிச் ஸ்டேட்டஸ்ல இருக்கிற ஒரு பொண்ணு என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்? நமக்கும் அவளுக்கும் செட் ஆகணுமேப்பா?" என்று கேட்டு ஒரு பயப் பெருமூச்சை வெளியேற்றிய நேரம் அவனது வலது கன்னத்தை ஒரு கிரிக்கெட் பந்து பதம் பார்த்து விட்டு காருக்குள் விழுந்தது.

"அம்..........மா!" என்று வலியில் முணங்கியவன், அனிச்சை செயலாக காரின் வேகத்தை குறைத்து ஓரமாக நிறுத்தி இருந்தான்.

"என்னாச்சு வினு? ஆர் யூ ஆல்ரைட் கண்ணா......?" என்று சற்று பதட்டமடைந்த ராகினியிடம்,

"நோ மாம்! ஐ'ம் நாட் ஆல்ரைட். ச்சை வந்த இடத்தில ப்ளடி பீப்பிள் ப்ரோக் மை சீக் போன்ஸ்! இட்ஸ் ஹர்ட்டிங் மாம்!" என்று கன்னத்தை தடவியவனிடம்,

"ரொம்ப பேசுனல்ல..... அதுதான் அடி விழுந்திருக்கு தம்பி, உங்கம்மா வீட்ல போய் ஏதாவது பர்ஸ்ட் எய்ட் பார்த்துடுவா. டோண்ட் வொர்ரி மை சன்!" என்று அவனை சமாதானம் செய்தார் கௌதமன்.

ஜெய்நந்தன், நிர்மலா, ஜீவானந்தன், விவேக் நால்வரும் கௌதமன் குடும்பத்தை மரியாதையுடன் வரவேற்றனர். ஜெயந்தன் தான் அனைவரையும் ஒன்றுதிரட்டி பெரிய அளவில் பெண் பார்க்கும் படலம் என்று அறிவித்து பவினையும், ஷைலஜாவையும் சங்கடப்பட வைக்க வேண்டாம் என்று சொல்லி அர்ஜுன், பலராம் வருகைக்கு தடை விதித்து விட்டார். தானும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

"டேய் ஜெய் நமக்குள்ள என்னடா பார்மாலிட்டீஸ்..... பி கேஷுவல் டா!" என்று கௌதமன் சொல்ல ஜெய் நந்தன் வேகமாக தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தார்.

தன் தந்தை, தாயை உள்ளே செல்ல சொன்ன பவின், "பேசிட்டு இருங்க, இந்த கிரிக்கெட் ஆடுற கேங்கோட எனக்கு கொஞ்சம் பர்சனல் வென்ஜென்ஸ் இருக்கு. அதை முடிச்சிட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு அவர்களின் அருகில் சென்றான்.

பதிமூன்று, பதினான்கு வயதில் இருந்து கல்லூரி மாணவிகள் வரை பதினைந்து பேர் கொண்ட ஒரு பட்டாளம் அங்கே நின்று கொண்டு இருந்தது.

"ஏய் ரூபி பாலை கண்டுபிடிக்க முடியலையாம். உனக்கு என்னடீ பட்டு இவ்வளவு கோபம்? ஒரு வாரமா நானும், பெரியப்பாவும் உன்னை கொஞ்சி கெஞ்சிப் பார்த்துட்டு இருக்கோம். ரொம்ப தான் பண்ற!" என்று அவள் கைகளைப் பற்றி சமாதானம் செய்து கொண்டு இருந்த இனியாவிடம்,

"இன்னிக்கு 4th சண்டே; புல்டேவும் என் கூட ஸ்பெண்ட் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்க, நடுவுல ஏதாவது வொர்க் முடிக்கணும்; உன் ஹப்பி போன் பண்றாங்கன்னு சொல்லிட்டு எழுந்திரிச்சு ஓடுன..... கொன்னுடுவேன் பார்த்துக்க. டேய் ஷ்யாம்.... ஆன்ட்டி எல்லாருக்கும் ஜீஸ் குடுத்து விட்டுருக்காங்க பாரு. நீ தான் குட்டி பையன், ஸோ அக்கா அண்ணாவுக்கு எல்லாம் ஜீஸ் எடுத்து குடு. பால் இன்னிக்கு ரொம்ப தூரமா கார் போற ரோடு வரைக்கும் போயிடுச்சுன்னு நினைக்கிறேன். தேடி எடுத்துட்டு வர்றவங்க அடுத்து பேட்டிங் பண்ணலாம் போ. நீ எங்க எழுந்திரிக்கிற என் கூட இருடீ லட்டு!" என்று தன் தோழியின் சகோதரனை வேலைக்கு ஏவி விட்டு இனியாவை தன்னுடன் அமர்த்தி கொண்டு விட்டாள் ஷைலஜா.

"எக்ஸ்க்யூஸ் மீ மிஸ் ஷைலஜா....!" என்று உரக்கக் கூப்பிட்டு அவள் முன்னால் வந்து நின்றவனிடம்,

"ஹாய் மிஸ்டர்......" என்று சொல்லி விட்டு நெற்றியை தடவி யோசித்தாள் ஷைலஜா.

"பவின்டீ எருமை.... பெயரை கூட மறந்து போன மாதிரி நடிக்காத!" என்று ஷைலஜாவின் காதில் முணுமுணுத்து விட்டு புன்னகையுடன் அவன் புறம் திரும்பி,

"ஹலோ மிஸ்டர் பவின்; வெல்கம்! நீங்க இன்னிக்கு வருவீங்கன்னு பெரியப்பா நேத்தே எங்க கிட்ட சொன்னாங்க, ஆனாலும் இவ தான் கேக்காம சண்டே.... கிரிக்கெட்ன்னு இழுத்து வச்சு.... வீ ஆர் ஸாரி! நீங்க உள்ளே போங்க, நாங்க வந்துடுறோம்!" என்று சொன்ன இனியாவிடம் புன்னகையுடன் பதில் வணக்கம் தெரிவித்தவன்,

"நாங்க வருவோம்னு தெரிஞ்சே பர்ப்பஸ்புல்லா கேம் விளையாட ப்ளான் பண்ணினதுக்கும், என்னோட ரைட் சீக்ஸ டேமேஜ் பண்ணினதுக்கும் சேர்த்து உங்க ப்ரெண்டும் ஒரு ஸாரி கேட்டுடட்டும் மிஸ் இனியா. அதுக்கப்புறம் உள்ள போறதை பத்தி யோசிக்கலாம்!" என்று அவனது காயத்தை காட்டியவனை பார்த்து இனியா பதறி விட்டாள்.

தன் மொபைலில் இருந்து சமையல் அறைக்கு அழைத்து "யார்கிட்டயாவது கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் கார்டனுக்கு குடுத்து விடுங்க அக்கா!" என்றவள் ஷைலஜாவிடம் திரும்பி, "ப்ளே ஏரியாவுக்குள்ள விளையாடி இருந்தாலாவது ஏதோ ஜன்னல், ட்யூப்லைட்டோட போயிருக்கும். முன்னால கார்டனுக்கு வந்ததுனால பாரு.... பவின் ஸாருக்கு அடிபட்டுடுச்சு!" என்று தன் தோழியை திட்டியவாறு கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

ஷைலஜா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், "எப்படியும் ஏதாவது ஒரு ட்யூப்லைட்டுக்கு அடிபடும்ல லட்டு.... இன்னிக்கு இந்த ட்யூப்லைட்டுக்கு அடிபட்டிருக்கு. அவ்வளவுதான்! என்ன மிஸ்டர் பவி உங்களுக்கு ரொம்ப வலிக்கலையே?" என்று கேட்டு அவன் முன் புன்னகையுடன் நின்றவளிடம்,

"ரொம்ப எல்லாம் வலிக்கல அழகு ரூபினி..... சும்மா எறும்பு முத்தம் குடுத்த மாதிரி தான் இருக்கு. ஒரு விஷயம் தெரியாம செஞ்சுட்டா தான் மன்னிப்பு கேக்கணும்; ஆனா உன்னை பார்த்தா பக்கா ப்ளானிஙோட எல்லாம் செஞ்ச மாதிரி எனக்கு தோணுது. ஸோ நீயும் ஸாரி கேக்க வேண்டாம், நானும் ஸாரி கேக்க வேண்டாம்!" என்றான் பவின். என்னவென்று யோசிக்க அவகாசம் கூட தராமல் ஷைலுவின் வலக்கன்னம் அதிருமாறு அவளுக்கு ஒரு அறைவிட்டான்.

"ஐயோ ரூபி.... என்ன பவின் ஸார் இப்படி பண்ணீட்டிங்க?" என்று கேட்ட படி அருகே வந்து அவள் கன்னத்தை வருடிக் கொடுத்து கொண்டிருந்தாள் இனியா.

"ஐஸ் க்யூப்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னீங்கல்ல இனியா; இவளுக்கு யூஸ் ஆகட்டுமேன்னு தான்.... அழுகை வந்துச்சுன்னா அழுதுடு அழகு ரூபினி.... உதட்டை சுழிச்சு, கண்ணெல்லாம் கலங்கி பார்க்கிறதுக்கு ரொம்ப கேவலமா இருக்க, மீட் யூ ஆப்டர் சம்டைம்! பை" என்று சொல்லி விட்டு துள்ளல் நடையுடனுன் வீட்டிற்குள் சென்றான் பவின்.

"டேய் அறிவுகெட்டவனே பந்தை குடுத்துட்டு போய் தொலைடா!" என்று எரிச்சல் பட்டவளிடம்,

"நான் உங்க வீட்டை விட்டு கிளம்புற வரைக்கும் அது என் கிட்ட பத்திரமா இருக்கட்டும்!" என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு கொண்டிருக்க பவினும் அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டான்.

"அங்கிள் இன்னும் ஒன்றரை மாசத்துல இனியா மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. நீங்க பவின் கிட்ட பேசிட்டு பைனலைஸ் பண்ணீட்டிங்கன்னா இனியா மேரேஜ்க்கு அப்புறம் ஒரு வாரம் கழிச்சு ஷைலு மேரேஜையும் வச்சுக்கலாமான்னு சொல்லுங்க. ரெண்டு பங்ஷன்க்கும் சேர்ந்து நாங்க ரெடி ஆகிடுவோம்!" என்று சொன்ன ஜீவானந்தனிடம் ராகினி தயக்கத்துடன்,

"இல்ல ஜீவா அவ்வளவு சீக்கிரம்னா எல்லா அரேன்ஜ்மெண்ட்ஸும் பண்ணிடலாமா? வினுவுக்கு லீவ் எல்லாம் யோசிக்கணும் வேற..... மூணு மாசத்துல முகூர்த்தம் வச்சுக்கலாமே? உன் ஒப்பீனியன் என்ன வினு?" என்று கேட்ட தன் தாயிடம்,

"எனக்கு இன்னும் ஒன் வீக்ல கல்யாணம் முடிஞ்சாலும் ஓகே தான் மா; ஆன்ட்டி உங்க கறிக்குழம்பு எக்ஸ்ட்ராடினரி; சான்ஸ்லெஸ் டேஸ்ட்!" என்று சொன்னவனை அனைவரும் விசித்திரமான ஒரு பார்வை பார்த்தார்கள்.

ஜீவானந்தன் மெலிதான புன்னகையுடன், "மிஸ்டர் பவின் நீங்க சாதத்துல எதுக்கு ஊறுகாய் புரட்டி சாப்பிட்டுட்டு இருக்கீங்கன்னு எல்லாரும் யோசிச்சுட்டு உட்கார்ந்து இருக்கோம்; நீங்க என்னடான்னா..... காதலுக்கு கண் இல்லன்னு கரெக்டா தான் சொல்லியிருக்காங்க இல்ல. ரொம்ப கஷ்டமா இருந்தா விட்டுடுங்க பவின். இதுக்கு மேலயும் ஊறுகாய் சாதத்தை உங்க வயிறு தாங்காது, பாவம்!" என்று சொன்னவனிடம் பதில் சொல்ல முடியாமல் பவின் அசடுவழிந்தான்.

"ஏய் ராகி மாவு.....நல்ல புள்ளைய பெத்து வச்சிருக்கடீ; என்னடீ எல்லார் முன்னாடியும் இப்படி மானத்தை வாங்குறான்? நான் கூட இவன் குதிச்ச குதிக்கு கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோன்னு நினைச்சு பயந்துட்டேன். மருமக கழுத்தை சேர்த்து ஒண்ணு வுட்டதுலயே உங்க பையரு ப்ளாட் ஆகிட்டாரு போல;
இருந்தாலும் ஷைலஜா கிட்ட ஏதாவது பேசணும்ன்னு நினைச்சான்னா பேசிக்க சொல்லும்மா!" என்று சொன்னவரின் வார்த்தைகளை கேட்ட ஜெய் நந்தன்

"நிர்மலா ஷைலுவை கூட்டிட்டு வாம்மா!" என்று சொன்னதும் நிர்மலா அறைக்குள் சென்று ஷைலுவை அழைத்து வந்தார்.

அதற்குள் ஷைலஜா வேறு உடைக்கு மாறியிருந்தாள். நீலநிற ஃப்ரில் வைத்த லாங் கவுனில் ஏனோ பவினுக்கு ஷைலஜா சின்ட்ரெல்லாவை நினைவுபடுத்தினாள்.

"ஹலோ ஆன்ட்டி, ஹாய் அங்கிள்!" என்று சொல்லி விட்டு கரம் கூப்பியவளை பார்த்திருந்தவனுக்கு ஏதோ இந்த மரியாதையாவது செய்தாளே என்று சற்று நிம்மதியாக இருந்தது.

சிறிது நேரம் பொது விஷயங்கள், அவளது ஆர்வங்கள், சினிமா, அரசியல் அனைத்தையும் பேசி விட்டு கௌதமன் பவினிடம் ஒரு மோதிரத்தை கொடுக்க ஜெய்நந்தன் விழித்தார்.

"டேய் ஜெய் இன்னும் ஒன்றரை மாசத்துல இனியாவுக்கும் ஷைலுவுக்கும் கிட்டத்தட்ட ஒரே வாரம் கேப்ல கல்யாணம்ங்கிறீங்க; அப்போ இன்னிக்கு சிம்பிளா ஒரு செரிமனியாவது செஞ்சிடலாம்டா! ஷைலு பவினை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம் தானேம்மா? ஜீவா உனக்கும் எந்த அப்ஜெக்ஷனும் இல்லையே?" என்று இருவரிடமும் ஒரே கேள்வியை வேறு வேறு விதத்தில் கேட்டார் கௌதமன்.

ஜீவானந்தன் புன்னகையுடன், "ஷைலுவுக்கு ஓகேன்னா எங்களுக்கு எல்லாம் சம்மதம் தான் அங்கிள்; ஷைலு நீ தான்டா சொல்லணும்; பவின் உனக்கு ஓகே தானே?" என்று கேட்டவனிடம்

"உங்க எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகே தான் அண்ணா!" என்று சொன்னவளை நம்பாத பார்வை பார்த்த பவின்,

"அங்கிள் எனக்கு ஷைலு கூட கொஞ்ச நேரம் பேசணும்; நிறைய சொல்லணும். ஒரு ஹாஃப் அன் ஹவர் டைம் தர்றீங்களா?" என்றான் ஒரு அவசரத்துடன்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஷைலஜாவும், பவினும் அவளது அறையில் இருந்தனர்.

"எதுக்குடா என்னை அறைஞ்ச?" என்று கேட்டவளிடம் குறுஞ்சிரிப்புடன், "ப்ளீஸ் ஹாவ் யுவர் சீட் மேடம்; என்னை யாராவது இன்சல்ட் பண்ணினா எனக்கு கோபம் வரும். அதுவும் நீ இன்சல்ட் பண்ணினா எனக்கு ரொம்ப கோபம் வருது, ஏன்னா நான் உன் ஃபியான்சி இல்லையா? ட்யூப்லைட்ன்னு சொன்னது, பேரு தெரியாத மாதிரி நடிச்சது இதெல்லாம் என்னை இன்சல்ட் பண்ணின விஷயம். ஸோ நான் வாங்கின அடிக்கும் சேர்த்து உனக்கு குடுத்துட்டேன். பட் இஸின்டிட் எக்ஸைட்டிங் அழகு?" என்று கேட்டவன் அருகில் சென்று அவன் சட்டையை கொத்தாக பற்றினாள் ஷைலஜா.

"ஏன்டா என்னைய அடிச்சுட்டு அதுல உனக்கு எக்ஸைட்மெண்ட் வேற வருதா? என்னை நிக் நேம்ல எங்க அப்பாவும், என் ப்ரெண்டும் தான் அடிக்கடி கூப்பிடுவாங்க, அதுவும் நீ கூப்பிடற மாதிரி கண்றாவியா யாரும் கூப்பிட மாட்டாங்க. தண்டம், தீவட்டி தடியா; துரியன்; சோடாப்புட்டி!" என்று திட்டிக் கொண்டு இருந்தவளிடம் இருந்து அவள் கைகளை விலக்கி விடுபட்டவன்,

"உங்கூட நிறைய பேசணும்; நின்னுட்டே எவ்வளவு நேரம் சண்டை போடறது? கொஞ்சம் ஐஸ் வாட்டராவது குடு, வயிறு எரியுது, பை த வே என்ணனோடது பவர் க்ளாஸ் அதுதான் உன் பாஷையில சோடாப்புட்டி இல்ல; காஷுவல் கூலர்ஸ் தான்!" என்றான் பவின் தன் வயிற்றை பிடித்து கொண்டு.

"என்னடா நெளியுற?" என்று கேட்டு ஒரு தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டியவளிடம், "நீ இன்னும் சாப்பிடலையே.....உனக்குப் பசிக்கலையா?" என்று கேட்டான் பவின்.

"நாங்க எல்லாம் ரெண்டு ரவுண்ட்ஸ் சாப்பிட்டுட்டு தான் பேட்டை கையில தூக்கினோம். நீ தண்ணி குடி; வயிறு வலிக்குதுன்னு சொன்னியே... கொஞ்சம் பெட்டரா இருக்கும். பவின் உன் கிட்ட ரெண்டு மூணு விஷயம் பேசணுமே?" என்று சொன்னவளிடம்,

"அதுக்கு தானே ஷைலு உன் ரூமுக்குள்ள வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன், என்ன சொல்லணுமோ சொல்லு!" என்று அவளை உந்தினான் பவின்.

"இனியா எனக்கு 2 வயசுல இருந்து ப்ரெண்டு; ரீசண்டா அவளுக்கு மேரேஜ் நடந்துடுச்சு; அவளோட ஹஸ்பெண்ட் அவ படிச்சு முடிக்கிற வரைக்கும் இங்க இருக்கட்டும்ன்னு ஓகே சொல்லி இருக்கார். அன்அஃபிஷியலா நடந்த மேரேஜ்க்கு ரெஹக்னிஷன் குடுக்கணும் ன்னு தான் மறுபடியும் ஒரு மேரேஜ் பண்றாங்க. அந்த இசக்கி ராசு அவ லைஃப்ல வந்ததுல இருந்து என் லட்டு எனக்கு ப்ரியாரிட்டி குடுக்க மாட்டேங்குறா. அண்ணா சென்னையில இருந்து இங்க வந்ததுலேர்ந்து அப்பா என்னை கண்டுக்க மாட்டேங்குறார். எனக்கு முதல் தடவையா என் வீட்ல இருக்க பிடிக்கல, எங்கேயாவது போயிடலாம்னு நினைச்சு எங்க கீதா அத்தை கிட்ட அட்வைஸ் கேட்டப்ப தான் அவங்களும் இதே ப்ராப்ளம் ஃபேஸ் பண்ணினதா சொன்னாங்க. பலராம் மாமாவோட ஸப்போர்ட் அவங்களுக்கு பெரிய எனர்ஜி குடுத்ததா சொன்னாங்க, அதான் எனக்கும் ஒரு லைஃப் பார்ட்னர் வரப்போறான்னு சொன்னதும் சும்மா ஒரு அன்பெய்டு கெஸ்ட் மாதிரி உங்க வீட்டுக்கு வந்துடலாம்ன்னு நினைச்சேன்!"

"கொஞ்ச நாள் முன்னாடி கீதா அத்தை பையன் பாகி அத்தான்ட்ட கூட நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன், அவங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க; மத்தபடி உன் மேல எனக்கு ப்ரெண்ட்ஷிப் கூட கிடையாது! வருமான்னு கூட தெரியாது, இதுக்கு மேலயும் என்னை கல்யாணம் செஞ்சுக்கற ரிஸ்க் எடுக்கப் போறியான்னு நீ தான் டிஸைட் பண்ணணும் பவின்!" என்று சொன்னவளை கைகளை கட்டிக் கொண்டு முறைத்தவாறு நின்று கொண்டு இருந்தான் பவின்.

"எ.....என்னாச்சு? எதுக்கு இப்படி முறைக்கிற?" என்று கேட்டாள் ஷைலஜா.

"ஏன்டீ என்னைப் பார்த்தா உனக்கு என்ன கேனையன் மாதிரி தெரியுதா? ப்ரெண்டா கூட இருக்க மாட்டேன்னு சொல்ற; அப்புறம் எந்த தைரியத்துல என்னைய கல்யாணம் பண்ணிக்க போற? நானும் ஒரு நார்மல் ஹாப்பி லைஃப் வாழ வேண்டாமா?" என்று கேட்டவனிடம் தயங்கிய படி

"இல்ல முன்னால உன் மேரேஜ் நடக்காம போயிடுச்சு. அதனால நீ கொஞ்சம் அப்செட் மூடுல இருக்கன்னு சொன்னாங்க, அப்புறம் எப்படி உன்னால.......கல்யாணத்துக்கப்புறம் நார்மல் லைஃப் அப்படில்லாம் யோசிக்க முடியுது?" என்று திணறியவளிடம்

"இங்க பாரு ஷைலு.....சம்யுக்தா விஷயத்துல அவளை ஏமாத்தினது நான் இல்ல, என்னோடது ரியல் லவ் தான்; பட் தகுதியே இல்லாத ஒரு பொண்ணுட்ட அதை காட்டினது தான் என் தப்பு; அவ என்னை ரிஜெக்ட் பண்ணினா பண்ணிட்டு போறா.... நீ தான் என்னோட ப்யூட்டிஃபுல் டெஸ்ட்டினியா இருந்தா அதை யார் மாத்த முடியும்? என்னை உன் ஹஸ்பெண்டா ஏத்துக்க முடியும்ங்கிற கான்பிடென்ஸ் இருந்தா மட்டும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லு; மத்தபடி என் சிடிசி..... என்னோட கேரியர், ஆம்பிஷன், டேஸ்ட், லைக்கிங்ஸ் இதெல்லாம் பத்தி நீ ஒண்ணுமே தெரிஞ்சுக்க வேண்டாமா?" என்று சற்று ஆர்வமாக கேட்டவனிடம்,

"ஏன்டா நான் என்ன உன்னை இண்டர்வியூ எடுத்துட்டு இருக்கேனா என்ன? கடுப்படிக்காத மிஸ்டர் பவி!" என்றவளிடம் நக்கல் சிரிப்புடன்

"ஓகே அழகு.... பார்த்த ரெண்டாவது நாள்ல ஐ லவ் யூ.... இப்படியே இரு, மாறிடாத, அடுத்து நம்ம கல்யாணத்துல தான் மீட் பண்ணுவோம்ன்னு நினைக்கிறேன், டெய்லி பவினை எப்படி லவ் பண்ணலாம்ன்னு யோசி. ப்ரப்போஸ் பண்ணும் போது என்னை வினுன்னு கூப்பிடணும், வெளியே போகலாமா?" என்று கேட்டவனுடன் இணைந்து சென்றாள் ஷைலஜா. ஒருவாறாக பவின் மற்றும் ஷைலு இருவரது கன்னங்களையும் சரி
செய்து முடித்த பின்னர்,

பவினுக்கும், ஷைலஜாவிற்கும் வீட்டினர் ஆசிகளுடன் அவளது கல்லூரி தோழிகள் மற்றும் குட்டி நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்ய முடிவு செய்து மோதிரம் மாற்றிக் கொள்ளும் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.

ஊருக்கு கிளம்பிய ராகினியிடம் ஓடி வந்து கைகுலுக்கிய ஷைலு, "அடிக்கடி எனக்கு கூப்பிடணும் ஆன்ட்டி, நான் ஈவ்னிங் டைம்ல உங்க ட்யூட்டி முடிஞ்சப்புறம் கால் பண்றேன், பை ஆன்ட்டி, பை அங்கிள், பை பவின்!" என்று போகிற போக்கில் அவனுக்கும் தலையசைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

"பொண்ணு பார்க்க போனப்ப அவ ஜாலியா விளையாடிட்டு இருந்தது செமையா இருந்தது மாம். உங்க மருமக என்னமா வாயாடுறா தெரியுமா..... இவளைப் போய் எது சொன்னாலும் மண்டைய ஆட்டுறான்னு தப்பா ஃபீல் பண்ணிட்டேன். ஏன்ப்பா நீ அம்மாவை பொண்ணு பார்க்க போனப்ப அவங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்க?" என்று கார் சீட்டை பின்புறமாக கைகளில் கட்டிப் பிடித்து கொண்டு கேள்வி கேட்ட தன் மகனிடம்,

"ம்ம்ம்...... மாட்டுக்கு புண்ணாக்கு, பருத்திக்கொட்டை வச்சுட்டு இருந்தா.... ஏன்டா நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவன்னு நினைச்சேன். ஆனா ஒரு பொண்ணை பார்த்து இப்படியாடா வழிஞ்சு தொலைவ?" என்று கிண்டலாகக் கேட்டார் கௌதமன்.

"ஒரு பொண்ணை பார்த்து இல்லப்பா, அவளைப் பார்த்து மட்டும் தான்.... அவ என்னை ஒரு மாப்பிள்ளையா பார்க்கல, அதுதான் அவ கிட்ட பிடிச்சிருக்கு. புதுசா ஒரு ரிலேஷன்ஷிப்பை அக்செப்ட் பண்ணிக்க யோசிச்சுட்டு கொஞ்சம் குழப்பிக்குறா, அவளை இன்னும் நல்லா குழப்பி என்னை லவ் பண்ண வைக்கணும். என்னோட லவ் ஸிம்பளை செட் பண்ணி வைக்கிற மாதிரி ஒரு ஹோல்டர் வாங்கணும்ப்பா!" என்று சொல்லி விட்டு பந்தை கையில் வைத்து உருட்டி கொண்டு இருந்தான் பவின்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro