Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 31

"நந்து எங்கடா போறோம்?" என்று கேட்ட படி அவன் தோளில் சாய்ந்து கொண்டு அமர்ந்து இருந்த கவிப்ரியாவிடம், "அப்படியே ஒரு ரொமான்டிக் ரவுண்ட்ஸ் தான்.
நீங்களும் திருட்டுத்தனம் செஞ்சு ஜெயிச்சு என் ஆசையும் தாத்தாட்ட சொல்லி ஓகே பண்ண வச்சுட்டீங்கல்ல மூக்கி; அதுக்கு உங்களுக்கு முதல்ல தேங்க் பண்ணணும். ரொம்ப தேங்க்ஸ் அம்முலுக்குட்டி!" என்று அவள் புறம் திரும்பி புன்னகைத்தவனிடம்,

"உனக்காக எதுவுமே கேக்காம பாகி, ராகி, எனக்கு, ஷைலு, இனியாவுக்குன்னு எல்லாருக்கும் தேவையானதை தானேடா நீ கேட்ட.... அதுக்கு நாங்க தான் உனக்கு தேங்க் பண்ணணும். வீ ஆர் என்கேஜ்ட்....... ஐ'ம் கோயிங் டூ கெட் மேரீட் வித் மை மச்சான் சூன்...... மீ வெரி எக்ஸைடட்டா நந்து! ரூஃப் திறந்து விடேன்ப்பா. எனக்கு கொஞ்சம் ப்ரெஷ் ஏர் வேணும்!" என்று துள்ளிக் குதித்தபடி  சொன்னவளை அருகில் இருத்தி தன் இடக்கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டவன்,

"சின்னக் குழந்தை மாதிரி ஜங்கு புங்குன்னு குதிக்காத கேப்ஸி. எல்லாரும் ஓகே சொல்லி கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்குறோம்ன்னு சொல்லிட்டாங்க தான். ஆனாலும் கல்யாணம் ஆகுற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசி. எல்லாம் நல்லபடியா நடக்கணும். ஒரு பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு! நீ என்னடான்னா கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாம இவ்வளவு ஜாலியா குதிச்சுட்டு இருக்க......" என்று சொன்ன தன் மாமன் மகன் முகத்தில் முதல் முறையாக சற்று பதட்டத்தையும், பயத்தையும் பார்த்தாள் கவிப்ரியா.

அவளுக்கு ஜீவாவின் இந்த பதட்டம் சிரிப்பை வரவழைத்தது. அவள் பார்த்தவரையில் அப்பா, மகன் இருவரும் எந்த ஒரு விஷயத்துக்கும் பெரிதாக அலட்டிக் கொள்கிற வகையில்லை. ஆனால் ஜீவாவின் இந்த முரண்பாடு அவளுக்கு பிடித்திருந்தது.

"இவ்வளவு நாள் கவியை கல்யாணம் பண்ணி பத்திரமா பார்த்துக்குறேன்னு கதை விட்டுட்டு இருந்தல்ல மச்சான்? இப்போ நிஜமாவே அதை செய்ய சொன்னவுடனே பயப்படுறியா? பாகி, ராகிக்கு ஃபேவர் பண்ணினது கூட என் அண்ணன் தம்பிங்கள கரெக்ட் பண்ணிட்டா உனக்கு ரூட் க்ளியரா இருக்கும்ன்னு நினைச்சு தானே?" என்று சிரிப்புடன் கேட்டவளின் தலையில் அழுந்த குட்டினான் ஜீவானந்தன்.

"ஷ்...... வலிக்குதுடா ஹல்க்; இப்படி என்னைய அடிச்சன்னா டார்லிங் கிட்ட சொல்லிக் குடுத்துடுவேன் பார்த்துக்க!" என்று மிரட்டியவளிடம்,

"அப்டீங்களா உங்க மாமாவோட ஏஞ்சல்; உன் டார்லிங்கும், அவர் டார்லிங்கும் சண்டை போட்டுருந்தாங்கன்னா அவர் பொங்கல் கேட்டா அவர் ப்ளேட்டுக்கு பூரி வரும். பைக் சாவி கேட்டார்னா கார் சாவியை எடுத்துட்டு வந்து குடுப்பாங்க; இப்படித் தான் அவங்க சண்டை போட்டுருக்காங்கன்னு நமக்கு தெரியும். இந்த மாதிரி புரிதல் ப்யூச்சர்ல நமக்குள்ளயும் இருக்கணும். அதை விட்டுட்டு எல்லாத்தையும் எல்லார்ட்டயும் சொல்லுவேன்னு நீ சொன்னா அது உன் இஷ்டம்...... இவ பெரிய மகாராணி, இவ கூட பிறந்ததால அந்த இளவரசர்களை எல்லாம் நாங்க கரெக்ட் பண்றோம். போடீ செமி..... நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி தான் பாகியும்.... ராகவ் அங்க தனியா நம்ம எல்லாரையும் விட்டுட்டு இருக்கான்டான்னு ரெண்டு மூணு அக்கேஷன்ல பாகி எங்கிட்ட ஃபீல் பண்ணியிருக்கான், அதனால தான் நாங்க ரெண்டு பேரும் ராகவ் ட்ட பேசி அவனை கன்வின்ஸ் பண்ணினோம். கீழே இறங்குடீ!" என்று சொன்னவனிடம் ஒழுங்கு காட்டி விட்டு இறங்கி நின்றவள்,

"ஐய் ரகுப்பாட்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க...... எங்கேயோ டிஸ்கோதே, ரெஸ்ட்டாரண்ட்னு கூட்டிட்டு போவன்னு நினைச்சேன். ம்ப்ச்! இட்ஸ் ஓகே நந்து; இங்க கூட நல்லா தான் இருக்கும். வா உள்ள போகலாம்!" என்று சொல்லி அவள் இறங்கி ஜீவானந்தனுக்கு கேட்டை திறந்து உதவி செய்தாள் கவிப்ரியா.

"தேங்க்ஸ் கேப்ஸி!" என்று புன்னகைத்து அவள் கையை தன் கையில் கோர்த்துக் கொண்டவன், ஒவ்வொரு கதவாக திறந்து வைத்து விட்டு அவளை உள்ளே அழைத்து வந்தான்.

ஜெயந்தனும், பத்மாவும் ஆனந்த ஸாகரத்திற்கு கிளம்பினால் அவர் தோட்டக்காரரை தவிர மற்ற வேலையாட்கள் அனைவருக்கும் ஒரு வார விடுமுறை அளித்து விட்டு தான் செல்வார். அதற்கு முன் கிளம்புகிறேன் என்று பையனிடம் சொன்னால் அவன் வழக்கம் போல பல்லவியை ஆரம்பித்து விடுவான் என்று அவருக்கு தெரியும். ஆனால் எப்படியும் மாதத்தில் ஒரு முறை இப்படி ஜெய் நந்தனிடம் சென்று வருவதால் மகன், மருமகள், மகள்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் அனைவரையும் ஒன்றாக சேர்த்து பார்த்து விடுவது ஜெயந்தன் பத்மா இருவருக்கும் சற்று வசதியான ஏற்பாடாக தான் தோன்றியது. இன்று ஜீவா அவரிடம் வந்து வீட்டுக்கு செல்கிறேன் என்று சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் வேலையாட்கள் யாரும் இல்லை என்று மட்டும் தெரிவித்து அவனிடம் வீட்டின் சாவியை கொடுத்து பத்திரம் சொல்லி அனுப்பினார்.

"ஜீவா எப்பவுமே நம்மள சுத்தி ஒரு பெரிய கேங்கோடவே இருந்துட்டு இப்போ நம்ம ரெண்டு பேர் மட்டும் ரகுப்பாட்டா வீட்ல உட்கார்ந்துட்டு இருக்கிறது ஒரு மாதிரி....... ஐ கான்ட் எக்ஸ்ப்ரெஸ் மை ஃபீலிங்ஸ் இன் வேர்ட்ஸ்; பட் ஏதோ மிஸ் ஆகுது இல்லடா?" என்று குழப்பத்துடன் அவனிடம் கேள்வி கேட்டாள் கவிப்ரியா.

ஜீவானந்தன் தன் முகத்தில் இருந்த புன்னகை மாறாமல், "நம்ம ரெண்டு பேர் இருக்கும் போதே உனக்கு லோன்லினெஸ் ஃபீல் ஆகுது. நானெல்லாம் தனியா அதை வருஷக் கணக்கா அனுபவிச்சவன்மா. மனசுக்குள்ளயே உறவுகள் எல்லாரும் இருக்கிற அநாதைடா நீ; உன் டிஸைன் இப்படித் தான் போலிருக்குன்னு நினைச்சுக்குவேன்!" என்று அவன் சொல்ல கவிப்ரியா சிறிது நேரம் பேச்சின்றி அயர்ந்து போய் நின்றாள்.

"ஹல்ல்ல்ல்.......லோ மிஸ் கவிப்ரியா அர்ஜுன்!" என்று உரக்க அழைத்து அவள் முகத்திற்கு முன்னால் சொடுக்கிட்டவனிடம் கோபத்துடன் முறைத்து,

"என்னைய அழ விட்டு உங்கிட்ட ஸாரி கேக்க வக்கிறதுக்கு தானே இங்க கூட்டிட்டு வந்த...... நீ பேசுனதை கேட்டு நான் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணிட்டேன். இப்போ உனக்கு சந்தோஷமா மாடு?" என்று மெலிதாக விசும்பி மூக்கை உறிஞ்சியவளிடம்,

"இங்க பாரு அம்முலு....... சத்தியமா  உன்னை அழ வைக்கணும்ங்கிறது என்னோட நோக்கம் இல்ல. நீ ஏதோ மிஸ் ஆகுதுன்னு சொன்ன. என்ன மிஸ் ஆகுதுன்னு நான் சொன்னேன். அவ்வளவு தான். அதுக்குப் போய் மூக்கை தேய்ச்சு கண்ணை தேய்ச்சு இல்லாத ஸீனை போட்ட; பிச்சுடுவேன்! உன்னால தான் நான் இன்னிக்கு இவ்வளவு ஹாப்பியா இருக்கேன். நீ மட்டும் கவிப்ரியாவா பிறக்காம கவிப்ரியனா பிறந்திருந்தா ஜீவானந்தன் கல்யாணம் பண்ணிக்க சூப்பர் பிகர் கிடைச்சிருக்குமா....? நான் பிறந்து சரியா ரெண்டு வருஷம் கழிச்சு எப்படிடீ  இப்படி ஒரு அழகு மூக்கியை அஜுவும் மீருவும் எனக்குன்னு பெத்து குடுத்துருக்காங்க?" என்று கேட்ட படி அவள் முகத்தை நிமிர்த்தி தன் மூக்கினால் அவள் மூக்கினை உரசியவனிடம்,

"நந்து நான் உன் மேல கோபமா இருக்கேன். நீ என்னை ஒண்ணும் பொய் சொல்லி சமாதானம் செய்ய வேண்டாம் போ!" என்று முறுக்கிக் கொண்டவளை அணைத்துக் கொண்டு நின்றவன்,

"பொய் சொல்லல அம்முலு. நிஜமா என் மூக்கி நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா? நான் மாய்ஞ்சு மாய்ஞ்சு சைட் அடிச்ச ஒரே பொண்ணு நீ தான்; சரியான டைம் கிடைச்சதுன்னா இவளை போட்டுத் தள்ளிடணும்ன்னு நினைச்ச பொண்ணும் நீ தான்; கல்யாணம்னு ஒரு செரிமனியை மனசுல நினைச்சு பார்த்தப்போ அதுல கல்யாண பொண்ணா சிரிச்சுட்டு நின்னது நீ தான்; இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு. பாட்டா பாடினா ஒரு அஞ்சு நிமிஷம் பாடலாம். பட் இப்பவும் சொல்றேன், உன் மேல நான் வச்சிருக்கிற என்னோட காதலை என்னால ஜஸ்ட் வார்த்தைகளால முழுசா சொல்லிட முடியும்னு தோணல! உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் இருக்கு. கிவ் மீ எ மினிட்!" என்று சொன்னவனை தடுத்து நிறுத்தியவள்,

"இவ்வளவு நேரம் சொன்னதுல ஒரு விஷயம் மட்டும் இடிக்குதே மிஸ்டர்  ஜீவானந்தன்..... டைம் கிடைச்சதுன்னா என்னை போட்டு தள்ளிடுவியா நீ? நீ என்னைய கொலை பண்ற அளவுக்கு நான் வொர்த் இல்லடா. நீ என்ன க்ரிமினல் லாயரா...... இல்ல க்ரிமினலாடா?" என்று கேட்டவளிடம் குறுஞ்சிரிப்புடன்,

"போட்டு தள்ளுறதுன்னா கொலை பண்றது இல்லடீ பேக்கு; அது வே......ற; இரு வர்றேன்!" என்று சொல்லி விட்டு கவி "இருடா அப்போ அதுக்கு என்ன மீனிங்னு சொல்லிட்டு போ!" என்று கத்திக் கொண்டிருந்ததை காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளியே  சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து அவள் கைகளில் ஒரு புடவையை நீட்டினான். கவிப்ரியா வியப்பில் கண்களை பெரிதாக விரிக்கவும்,

"இது உங்க பர்ஸ்ட் ப்ராடெக்ட் மேடம்; நியாபகம் இருக்குங்களா?" என்று புருவம் உயர்த்தினான் ஜீவா.

"வாவ் சூப்பர் நந்து.... இதை அப்பா கிட்ட குடுத்த பிறகு ஏன்டா குடுத்துட்டோம்னு எவ்வளவு ஃபீல் பண்ணினேன் தெரியுமாப்பா? அவர் பிரெண்டோட மருமகளுக்குன்னு சொல்லி தான் எங்கிட்ட பே பண்ணி வாங்கிட்டு போனாரு..... இது எப்படி உங்கிட்ட?" என்று குழம்பிப் போனவளிடம்,

"உன்னோட பர்ஸ்ட் ப்ராடெக்டை வேற யாருக்காவது குடுக்க விடுவேனா அம்முலு... மாமுவும் ஜெய்யும் ஒரு காலத்தில கழுத்தை கட்டிக்கிட்டு கிடந்த ப்ரெண்ட்ஸ் தெரியுமா.... அஜு மாமா ப்ரெண்டோட மருமக நீ தான்..... அவர் கரெக்டா தானே சொல்லியிருக்காரு? கிப்ட் மேல கிப்ட் குடுத்து என்னைய ஸர்ப்ரைஸ் பண்ணியே..... நம்ம என்கேஜ்மெண்ட் கிப்ட்ல நீ ஸர்ப்ரைஸ் ஆகி நின்னியா; இல்லையா?" என்று கேட்டான் ஜீவானந்தன்.

"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடா; நந்து நான் இந்த புடவையை இப்போ கட்டிட்டு வரட்டுமா? நீ தான் நான் புடவை கட்டினா ரொம்ப பசிக்கும் போது சாப்பாட்டை பாக்குற மாதிரியே என்னை பாப்பியே.....இப்போ அவ்வளவு தூரத்தில எல்லாம் இல்ல. என் பக்கத்துல தான் இருக்க. இன்னும் நல்லா பார்க்கலாம். போகட்டுமா?" என்று கேட்டவள் கன்னத்தில் முத்தமிட்டு,

"அதுக்குள்ள என்னடீ அவசரம்? நான் உன்னை அடிச்ச ரூமுக்கு கூட்டிட்டு போய் உங்கிட்ட ஸாரி கேட்டதுக்கப்புறம் நீ சாரி கட்டிக்கோ. ஆனாலும் நான் உனக்காக இத்தன வருஷமா தொங்குறேன்னு தெரிஞ்சே என்னைய சுத்த விட்டதுக்கு உன்னை என்னடீ பண்றது? அப்படி என்னடீ உனக்கு திமிரும் பிடிவாதமும்?" என்று திடீரென்று கோபத்துடன் முறுக்கிக் கொண்டவனிடம் கவிப்ரியா கொஞ்சல் பேச்சுடன் சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்.

"நான் உன்னை மாதிரி இல்ல அம்முலு. இத்தனை நாளா ரெண்டே ரெண்டு கிப்ட்ஸ் தான் உனக்காக வாங்கணும்ன்னு எனக்கு தோணுச்சு. நம்ம மேரேஜ்க்கு அப்புறம் நிறைய வாங்கி தர்றேன்!" என்று சொன்னவன் மடியில் அமர்ந்து அவன் முகத்தை நிமிர்த்தி ஆவலுடன் அவனை நோக்கினாள் கவிப்ரியா. 

"செகண்ட் கிப்ட் என்னன்னு பார்க்கணும்ன்னு ஈகரா இருக்கு நந்து. அதையும் காட்டுறியா?" என்று கேட்டவளிடம் எரிச்சலுடன்,

"அதை எப்படா உன் கிட்ட குடுப்போம்னு ரெண்டு வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்டீ மூக்கி; டெய்லி உன்னை பார்க்க வரும் போதெல்லாம் என் பாக்கெட்ல வச்சு எடுத்துட்டு வருவேன், ஆனா உன் கிட்ட குடுக்கறதுக்கு தைரியம் வராது. திருப்பி எடுத்துட்டு போயிடுவேன்! இப்போ கூட என்கேஜ்மெண்ட் ஆகிடுச்சுன்னு தான் உன் கிட்ட தர்றேன்!" என்று சொல்லி விட்டு அவள் கைகளைப் பற்றி ஒரு மோதிரத்தை அணிவித்தான் ஜீவானந்தன். இரு இதயங்களுக்கு நடுவில் KPR என்ற எழுத்துகள் அழகாகப் பொருந்தியிருந்தது.

"அட லூசே; ஒரு ரிங் குடுக்கறதுக்கு தான் இவ்வளவு பில்டப்பாக்கும்?  KP னா கவிப்ரியா R னா ராட்சஸியா இல்ல ரவுடியாடா?" என்று கேட்டு அவனை முறைத்தவாறு நின்றவளிடம்,

"அட இதை நான் யோசிக்கவேயில்ல பாரேன்; பட் நான் கல்யாணத்துக்கு பொண்ணு ரெடியான்னு கேட்டு உங்கிட்ட ப்ரோப்போஸ் பண்றதுக்கு தான் KPR போடச் சொன்னேன் அம்முலு!" என்று சொன்னவன் முன் சென்று இரு கைகளையும் நீட்டிக் கொண்டு நின்றாள் கவிப்ரியா.

"என்னடீ?" என்று கேட்டு புரியாமல் விழித்தவனிடம், "பர்ஸ்ட் மாடிக்கு என்னை தூக்கிட்டு போ; ரெண்டு பேரும் ஸாரி கேட்டதுக்கப்புறம் நான் ஸாரி கட்டிட்டு வர்றேன், அதுக்கப்புறம் உனக்கு நிறைய கிஸ்ஸஸ் குடுத்துட்டு கல்யாணத்துக்கு பொண்ணு ரெடின்னு சொல்றேன், ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு ஜீவாக்குட்டி!" என்று சொல்லி அவனை தாவிக் குதித்து கட்டிப் பிடித்தவளை சிரிப்புடன்

"இதுக்கு தான் ரெஸ்ட்டாரண்ட், க்ளப்பிங், டிஸ்கோதேன்னு எங்கயும்
போகல, நம்ம ரெண்டு பேரும் மட்டும் நிறைய பேசிக்கற ப்ரைவேட் டைமா இருக்கணும் இது உனக்கும் பிடிக்கும்னு யோசிச்சேன். வா ரவுடி மேல போகலாம்!" என்று சொல்லி கவியை தன் கைகளில் சுமந்து கொண்டு சென்றான் ஜீவானந்தன்.

"மச்சான் ரொமான்டிக்கா ஏதாவது பாட்டு பாடேன்!" என்று கேட்டவளிடம் "நேரம்டீ" என்று பெருமூச்சுடன் அலுத்துக் கொண்டவன்

"என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து....... உயிர் தாங்கி நான் இருப்பேன்!" என்று கண்மூடி பாடிக் கொண்டு இருந்தவன் வாயை மூடியவள்,

"பாட்டு பாடச் சொன்னா ஒப்பாரி வச்ச கொன்னுடுவேன்..... கவிப்ரியா பாடச் சொன்னா கவிம்மா பாட்டு தான் பாடணும். உனக்கு நியாபகம் இருக்கான்னு பார்ப்போம். பாடு!" என்று சொல்லி அவனது தாடையை பற்றியவளிடம் சிரிப்புடன்,

"இம்சை.....வீட்டை என்னோடதுன்னு சொல்ல வேண்டியது, பாட்டை என்னோடதுன்னு சொல்ல வேண்டியது..... பாட்டை எழுதினவங்க கேட்டா ஃபீல் பண்ண போறாங்கடீ கேப்ஸி!" என்று சொன்னவனை பாடுடா மாடு" என்று உலுக்கினாள் கவிப்ரியா.

"புன்னை இலை போலும் சின்னமணி பாதம் மண்ணில் படக் கூடாது!
பொன்னழகு மின்னும் உந்தன் முகம் பார்த்து கண்கள் படக் கூடாது!
விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு!
விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு பாடல் நீ கேட்டு!!" 
என்று பாடியவன் தன்னை இறுக்கமாக பற்றியிருந்தவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro