💟 ஜீவாமிர்தம் 30
ஆனந்த ஸாகரத்தில் ஜீவா, பார்கவ், ராசு அடங்கிய ஆண்கள் அணியினருக்கும், கவி, ஷைலஜா, இனியா அடங்கிய பெண்கள் அணியினருக்கும் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற இருந்தது.
சற்று நேரத்திற்கு முன்புதான் ஜீவாவும், கவியும் ராசுவும் இனியாவும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொள்ள ஷைலஜாவும், இனியாவும் கவிப்ரியாவிற்கு வளையலிட்டு, கவி
இனியாவிற்கு வளையலிட்டாள்.
பின் நிர்மலாவும், மீரா கீதாவும் வருங்கால மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தனர். ஜீவா கவிப்ரியாவிடம் கைகுலுக்கி, "ஒரு வழியா அபிஷியல் அனௌன்ஸ்மெண்ட் முடிஞ்சது கேப்ஸி; இனிமேல் பயப்படாம நெயில் பாலிஷ் போடலாம்!" என்று சொல்ல கவிப்ரியா வெட்கச் சிரிப்புடன் அவன் மார்பில் குத்தினாள். ராசு இனியாவின் காதருகே குனிந்து, "என்னட்டி மெத்துக்கு வந்ததுல இருந்து விவேக்கு மாமன காணும்? சரக்கடிச்சுட்டு மட்டை ஆகிட்டாப்லயோ?" என்று கேட்க இனியா எவரும் அறியாமல் அவன் கைகளில் கிள்ளினாள்.
"அப்பாவை பெரியப்பா சஹாயனுக்கு அனுப்பிச்சாங்க. மாணிக்கம் தாத்தாவுக்கு மறுபடியும் உடம்பு சரியில்லை போலிருக்கு!" என்று சொன்ன தன் மனைவியின் கண்களில் சற்று கவலை தென்பட்டதை கண்டான் ராசு.
"சீக்கிரம் அவர் மேலுக்கு நல்லாகிடும். நீ வெசனப்படாதடீ!" என்று இனியாவின் கைகளைப் பற்றிக் கொண்டு அவளுக்கு ஆறுதல் அளித்தான்.
ஜீவாவும், கவியும் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி பெற்றிருந்தனர். ஜெயந்தன் வாழ்த்த வந்த போது ஜீவானந்தன் அவரிடம், "தாத்தா எனக்கு சும்மா ஃப்ளசிங்ஸ் மட்டும் போதாது. நிச்சயத்துக்கு கிப்டா என்னோட ஆசைகளை நீங்க நிறைவேத்தி வைக்கணும்!" என்றான் சற்று தணிந்த குரலில்.
அர்ஜுன் அவசரமாக ஜெயந்தனிடம், "மாமா இவன் கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்காதீங்க. என்னத்த கேக்க போறான்னு தெரியல.......பயமா இருக்கு!" என்றார்.
மீரா புன்னகையுடன், "ஜீவாக்குட்டி என்ன கேட்டாலும் நீங்க குடுக்கணும் அர்ஜுன். ஏன்னா இப்போ அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை.... அப்படித்தானே மாப்பிள்ளை?" என்று கேட்ட தன் அத்தையிடம்,
"அப்படி உங்க வீட்டு மாப்பிள்ளைன்னு அட்வான்டேஜ் எடுத்துட்டு நான் எனக்கு தேவையான விஷயத்தை டிமாண்ட் பண்ணல மீரு, நான் கேக்கறத குடுத்தா எனக்கு சந்தோஷமா இருக்கும் அவ்வளவு தான்!" என்றான் ஒரு தோள் குலுக்கலுடன்.
"அப்படி என்னடா கேக்க போற ஜீவாம்மா...... இதுக்கு பின்னால என்ன விஷயம் இருக்கும்ன்னு தெரியலயே.....?" என்று தலையை தட்டிக் கொண்டு இருந்தார் பலராம்.
"எல்லாரும் இவ்வளவு யோசிச்சுட்டு இருக்கீங்க..... நம்ம வீட்ல நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் நம்ம வீட்டுப் பொண்ணுக்கு எப்படியும் ஒரு பரிசு குடுக்கறது யூஸ்யுவலான விஷயம் தானே..... எங்க கல்யாணத்துக்கு எல்லாம் ரகு தாத்தா அப்படித்தான் கிப்ட் குடுத்தார். அப்படிப் பார்த்தா இப்போ நம்ம கவிம்மாவுக்கு தான் கிப்ட் குடுக்கணும்......!" என்று கீதா சொல்ல எனக்கு தான், எனக்கும் தான் என்று ஜீவாவும் கவியும் சண்டையிட்டு கொள்ள தொடங்கி விட்டனர்.
அவர்களிடையே ஏற்பட்ட சண்டையை ஜெய் நந்தன் தடுத்து நிறுத்தி, வருங்கால தம்பதியரில் எவர் பலமானவராக இருக்கிறாரோ அவருக்கு தான் கேட்கும் பரிசு கிடைக்கும் என்று சொல்லி விட்டு கயிறு இழுக்கும் போட்டியை நடத்தி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது என்று முடிவெடுத்தது விட்டார்.
அர்ஜுன் மீராவிடம், "ரமி இன்னிக்கு கவிம்மா ஏதோ ரொம்ப அழகா இருக்குற மாதிரி எனக்கு தோணுதுடீ...... உனக்கு அப்படி தோணுதா?" என கேட்க மீரா தன் கணவரிடம்,
"இன்னும் இரண்டு மூணு மாசம் தான் டீப் அவ நம்ம கூட இருப்பா, அதுக்கப்புறம் அவ மிஸஸ் ஜீவானந்தன்! முன்ன எல்லாம் போரடிச்சா நானும் கீதாவும் மலைக்கு கிளம்புவோம்ல.... இனிமே நம்ம கவியை பார்க்கணும்ன்னு தோணுச்சுன்னா நான் இங்க வந்துடுவேன், உங்களுக்கு தான் உங்க காலேஜ், உங்க ஸ்டூடெண்ட்ஸ்னு ஏகப்பட்ட வேலை இருக்கே.... நீங்க அதைக் கவனிங்க!" என்றவளிடம் நக்கல் சிரிப்புடன்,
"ஒரு வாரம், பத்து நாளைக்கு ஒரு தடவை எங்க மாப்பிள்ளையால என்னையும், ராமையும் பார்க்காம இருக்க முடியாது. அதனால கவியையும் கூட்டிட்டு சென்னைக்கு வருவான். இல்லடா ராம்?" என்று தன் சகோதரனையும் தனது கேள்விக்கு பதில் சொல்ல துணைக்கு அழைத்து கொண்டார் அர்ஜுன்.
"டேய் அஜு அவனவனுங்களுக்கு பொண்டாட்டி வந்துட்டா பிறகு மாமனாவது; மச்சானாவது? நீயும் தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி கொடைக்கானல் பஸ் சர்வீஸ்க்கு எல்லாம் நிறைய பணம் குடுத்து அதை வாழ வச்சுட்டு இருந்த; உனக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் நீ அதெல்லாம் செஞ்ச மாதிரி எனக்கு நியாபகம் இல்லையே?" என்று கேட்ட தன் தம்பியிடம்,
"டேய் டேய் மெதுவா பேசுடா ஜீவா காதுல விழுந்துடப் போகுது!" என்று பதட்டப்பட்டு கொண்டு இருந்தார் அர்ஜுன்.
கவிப்ரியா போட்டி என்று சொன்னவுடன் ஜீவாவை நிமிர்ந்து கெஞ்சல் பார்வை பார்த்தாள்.
"ஸாரி கேப்ஸி..... மத்த நேரம்னா ஜெயிச்சுக்கோன்னு சொல்லி விட்டுக் குடுத்திருப்பேன். பட் இந்த கேம்ல ஜெயிக்கறது எனக்கு முக்கியம். ஸோ நீ கொஞ்சம் எனக்காக........" என்று இழுத்தவனிடம்,
"ம்ஹீம் நந்து! உன்னைய மாதிரி தோத்துப் போயிடுவேன்னு தெரிஞ்சே எல்லாம் என்னால கேம் விளையாட முடியாது. நான் ஜெயிக்கறதுக்கு உண்டான வழியையெல்லாம் நான் பார்க்குறேன். உன்னால முடிஞ்சத நீ செஞ்சுக்கோ!" என்று அவனிடம் சொல்லி விட்டு சென்றாள் கவிப்ரியா.
"தோத்துப் போயிட்டா அழக்கூடாதுடீ மூக்கி!" என்று கண்சிமிட்டி கடுப்பேற்றிய ஜீவாவிடம் ஒரு முறைப்பை மட்டுமே பதிலாக தந்து விட்டு சென்றாள் அவள்.
சிறியவர்கள் இரு குழுவினராக அணிவகுத்து நின்ற போது இனியா ராசுவை பார்த்து, "ராசு மாமா என் பக்கத்துல வந்து நிக்குறீங்களா?" என்று கேட்ட படி அவனைப் பார்த்து புன்னகைக்க பார்கவ் எரிச்சலுடன், "இனியா இதெல்லாம் சீட்டிங்..... ராசு நீ போகாதடா!" என்று தடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் ராசு அவன் மறுப்பை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
"மாம்ம்.......மா!" என்று இனியா மறுமுறை அழைக்க "மாமன் இந்தா வந்துட்டன்டீ சிட்டு எலே பார்கவு, மச்சான் ரெண்டு பேரும் என்னைய மன்னிச்சிகிடுங்க மக்கா..... என் பொஞ்சாதி என்னைய கூப்பிடுறா!" என்று சொல்லிவிட்டு இனியாவின் அருகே சென்று கையில் கயிறைப் பற்றிக் கொண்டான் இசக்கி ராசு.
இருவர் நால்வர் என்று சமமின்றி ஆரம்பித்த போட்டியை இதெல்லாம் சரியில்லை என்று தடுக்க போன ஜெய் நந்தனிடம் ஜெயந்தன் புன்னகையுடன்,
"தம்பி எல்லாம் சரியாக அதுவா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. பேசாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்!" என்று சொல்லி விட்டார்.
பெண்கள் அணி ராசுவின் உதவியால் ஜீவா மற்றும் பார்கவை சற்று சிரமப்பட்டு ஜெயித்து விட்டது.
கைகளை தேய்த்துக் கொண்டு ஊதி விட்ட படி, "அப்பா டஃக் ஆஃப் வார் இவ்வளவு கஷ்டமா இருக்கு, கையெல்லாம் எரியுது மாமா!" என்று சொன்னவள் கைகளை ஆராய்ச்சி பார்வையில் துழாவி விட்டு,
"கைய வச்சு ஏதாவது வேல கீல செய்வியா இல்லையாட்டீ..... சும்மா கயித்தை இழுத்து பிடிச்சதுக்கே கன்னிப்போச்சுது...... மூணு பேரும் கீழ போய் ஏதாச்சு மருந்து போட்டுக்கங்க!" என்று சொல்லி விட்டு நகர்ந்தவனிடம் கவிப்ரியாவும், ஷைலஜாவும் "தேங்க்ஸ் மிஸ்டர் ராசு!" என்று கைகுலுக்க கைகளை நீட்டினர்.
அவர்கள் முன் புன்னகையுடன் கை கூப்பியவன், "இந்தாத்தா கவிப்ரியா உங்களுக்கு நான் அண்ணே, எலே ஷைலஜா உங்களுக்கு நான் மச்சான்; மிஸ்டர் ராசுவெல்லாம் இல்லாம முறை வச்சு கூப்புட்டீகன்னா நல்லா இருக்கும். ஐ வில் பி வெரி ஹாப்பி! போங்க உங்க தாத்தா கிட்ட போய் என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்குங்க!" என்று சொல்லி விட்டு ஜீவானந்தன் புறம் சென்று நின்றான் ராசு.
"டேய் துரோகி ஏன்டா எங்கள விட்டுட்டு போன...... அவங்களை ஏன்டா ஜெயிக்க வச்ச? எந்தங்கச்சி இன்னொரு கார் கேட்டா பக்கத்துல நிக்குற இந்த லூசு கார் வாங்க கிளம்பிடுவான் தெரியுமாடா......?" என்று கேட்டு அவன் சட்டையை பற்றி உலுக்கிக் கொண்டிருந்த பார்கவிடம்,
"டேய் பார்கவு வேணும்ட்டு செய்யலடா.... இனியா புள்ள மாமான்னு கூப்பிட்டவுடனே போயிட்டேன். மன்னிச்சுக்கடா!" என்று கேட்டுக் கொண்டிருந்தவனை ஜீவா சிரிப்புடன் நின்று பார்த்து கொண்டு இருந்தான்.
இந்த போட்டியால் பார்கவ், ஷைலஜா, கவிப்ரியா மூவரும் ராசுவிடம் பேசி விட்டனர், அதிலும் பார்கவ் சட்டையை பிடிக்கும் அளவுக்கு நெருங்கி விட்டான் என்று ஒரு நல்ல விஷயம் நடந்திருந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் தான் கேட்க ஆசைப்பட்ட சில விஷயங்களை கேட்க முடியவில்லையே என்று வருந்தி கொண்டிருந்த போது கவிப்ரியா அவனை கையசைத்து அழைத்தாள்.
"டேய் பாகி ராசு கவி கூப்பிடுறாடா.... என்னன்னு கேட்டுட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு ஜீவானந்தன் கவிப்ரியாவிடம் செல்ல பார்கவ் எரிச்சலுடன்,
"இந்தா கிளம்பிட்டான்ல; மகாராணி வரிசையா கண்டிஷனா போடுவா! குடும்பமே சேர்ந்து அதுக்கு தலைய ஆட்டணும். ஏன்டா இப்படி இருக்கீங்க? அவங்க அவங்க ஆளு கூப்பிட்டதும் பாய்ஞ்சு பாய்ஞ்சு ஓடுறீங்க?" என்று கேட்ட பார்கவ் தோளில் கை போட்டு கொண்டு,
"லேய் மக்கா.... நீயும் உன் ஆளையும் இங்க கூட்டிக்கிட்டு வந்துருக்கலாம்ல....எதுக்குவே சும்மா எங்கள ஏசிகிட்டு கிடக்க; இனியா புள்ள உன்னைய பத்தி நிறைய பேசுச்சுல்ல.... மாமன் புள்ளைய அதுவே வந்து கட்டிக்க மச்சான்னு கேட்டும் மாட்டம்ன்னுட்டியாமே; அம்புட்டு பாசம் வச்சு தங்கச்சியும், மாமன் புள்ளையும் ஒண்ணுதேன்னு சொல்றதுக்கு எல்லாம் பெரிய மனசு வேணும்டா பங்காளி!" என்று சொன்னவனிடம்,
"அப்படியில்ல ராசு! மூணு பேரையும் ஒண்ணா பார்த்ததுனால எனக்கு ஷைலு தனியா தெரியல. நீ சொன்ன பாசம் நிறைய இருந்தது. ஆனா காதல் இல்லையே.... அது அபிநயாட்ட தான் வந்தது.... சில நேரம் நீ பேசுறதை புரிஞ்சுக்க கஷ்டமா இருக்குடா!" என்று பார்கவ் சொல்ல ராசு நாக்கை துருத்திக் கொண்டு,
"என்னலே எவனைக் கேட்டாலும் இதையே சொல்றீக..... நாலு நாள் என் கூட பேசு. அஞ்சாவது நாள் தானா என் தமிழ் புரியும். வாலே போவோம்!" என்று பார்கவின் கழுத்தை வளைத்து கை போட்டு அழைத்து சென்றான் ராசு.
"ஏஞ்சல் நீ விளையாடினது போங்கு, ஆனா நீ தான் ஜெயிச்சுட்ட; உனக்கு என்னடா வேணும்?" என்று கேட்ட தன் மாமனிடம்,
"எனக்கு ஒண்ணும் வேண்டாம் டார்லிங்; இதோ இவனுக்கு தான் ஏதோ முக்கியமான விஷயம் வேணும்ன்னு சொல்லிட்டு இருந்தான். மச்சான் மாமா, தாத்தாட்ட உங்களுக்கு என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்குங்க!" என்று சொல்லி விட்டு நிர்மலாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் கவிப்ரியா.
"அப்பாடா ஒரு கண்டத்தை தாண்டியாச்சு..... அடேய் ஜீவானந்தன் நீ என்னடா கேக்கப் போற?" என்று கேட்ட படி தன் தங்கையின் அருகே சென்று அமரப் போன பார்கவை பார்த்து புன்னகைத்த படி உட்காரும் நாற்காலியை அவன் அமரும் நேரம் பார்த்து கவி சரியாக மறுபுறம் நகர்த்தி விட பார்கவ் நாற்காலியில் அமரப் போய் தரையில் கிடந்தான்.
"ஏன்ன்ன்......டீ!" என்று பல்லைக் கடித்தவனிடம், "நான் அவன் கிட்ட கார் கேட்டத நீ பார்த்தியாடா? நான் எதுவும் கேக்கலைன்னா உனக்கு கண்டம் தாண்டின மாதிரியா? இரு நந்து கிட்ட சொல்லி உன் லவ்வுக்கு அவனை ஹெல்ப் பண்ண வேண்டாம்ன்னு சொல்றேன்!" என்று பொரிந்து கொண்டு இருந்தாள் கவிப்ரியா.
"அய்யோ..... நோடா; நீ பாகி அண்ணன் செல்லம்ல கவிம்மா? இப்போதைக்கு உங்க ஜீவாக் குட்டி தான் என் லவ்ஸ்க்கு ஆபாத்பாந்தவன்..... வேண்டாம்னு ஸ்டாப் சிம்பள் போட்டு அண்ணன் சோலிய முடிச்சுப்புடாதடா பட்டு!" என்று தன் தங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பார்கவிடம்,
"போய்த் தொலை..... அண்ணி ரொம்ப ஸாப்ட்ன்னு சித்தி, சித்தப்பா சொன்னாங்க. அதனால பொழச்சு போன்னு உன்னைய மன்னிக்கிறேன். எங்கேயும் அடிபட்டுடுச்சாடா அண்ணா?" என்று கேட்டவளிடம் எரிச்சலுடன்,
"கீழ தள்ளி விட்டுட்டு கேள்வி வேறயா கேக்குற?" என்று உட்கார்ந்து இருந்த சேரை தூக்கி கவிப்ரியாவை பார்கவ் அடிக்க வர அவன் கைகளில் அகப்படாமல் கவி ஓடி விட்டாள்.
"தாத்தா பாகி ரொம்ப வருஷமா கேட்டுட்டு இருக்கிற இளவட்ட கல் தீராஸுக்கு வேணும், நாங்க திருவிழா அப்பவே அதை கரெக்ட் பண்ணிடலாம்ன்னு நினைச்சோம், எல்லாம் இந்த ராசு மடையனால சொதப்பிடுச்சு; அப்புறம் கவிக்கு மலையில அவளோட "அவளை" செட் பண்ணி குடுத்துடணும், என்னை மாதிரி இல்லாம அவளோட பீல்டுல கொஞ்சம் சின்ஸியரா..... சரி முறைக்காத; ரொம்ப சின்ஸியரா வொர்க் பண்ணிட்டு இருக்கா. ஸோ அவ ஷாப் வச்சுக்க ஒரு நல்ல இடமா பார்த்து கிப்ட் பண்ணிடணும்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனை இடையில் நிறுத்திய பார்கவ்,
"என்னடா நாலஞ்சு மாசமா தம்பி ரொம்ப தங்க கம்பியா இருக்காரேன்னு நினைச்சேன் மாமா, மொத்தமா வச்சான் பார்த்தியா வேட்டு..... பொண்டாட்டிக்கு ஷாப் செட்டப் பண்ணி குடுக்கறதுக்காக கார் பைக் மாடல்ஸை மாத்தாம பணத்தை செலவு பண்ணாம வச்சிருந்து இருக்கான் திருடன்..... ஏன்டா எங்களுக்கு மட்டும் காலி பெருங்காய டப்பா; உன் பொண்டாட்டிக்கு மட்டும் சந்தன சோப்பு டப்பாவா? இதெல்லாம் நியாயமே இல்லையாக்கும்..... நான் ஒத்துக்கவே மாட்டேன்!" என்று குதித்தவனிடம்,
"கல் மட்டும் இல்லடா பாகி.... உன் கல்யாணத்தை பத்தியும் தான் பேசலாம்ன்னு நினைச்சேன். பேசட்டுமா வேண்டாமா?" என்று கேட்டவனிடம் பலராம் புன்னகையுடன், "யூ கேன் ப்ரொஸீட் மிஸ்டர் மாப்பிள்ளை!" என்று இடை வரை குனிந்து ஒரு வணக்கம் வைத்தார்.
"பாகி லவ் பண்ற பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு ஓகே சொல்ற மாதிரி தெரியல தாத்தா. பட் இவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஸின்ஸியரா லவ் பண்றாங்க. அதனால அந்தப் பொண்ணோட சம்மதத்தோட நாங்க அவளை கூட்டிட்டு வந்தா நீங்களும் அப்பாவும் தான் பாகி கல்யாணத்தை நடத்தி வைக்கணும். கீதாத்தை, ராம் மாமா நீங்க தான் அபிநயாவை உங்க பொண்ணாவும் ட்ரீட் பண்ணனும். ஏன்னா அந்த பொண்ணு அவ பேமிலியில இருந்து வெளியே வந்துட்டா ஒருவேளை அவங்க பேமிலி ரிலேஷன்ஷிப் கட் ஆகிடலாம்!"
"அப்புறம் இந்த ராகவ் பையன் இருக்கான்ல.... அவன் இன்னும் ஒரு வாரத்துல இங்க பெர்மெனன்டா வந்துடுவான். டிக்கெட்ஸ் எல்லாம் கூட அரேன்ஜ் பண்ணியாச்சு. அவனோட டிபார்ட்மெண்ட்லயே ------- காலேஜ்ல அஸிஸ்டென்ட் புரபொஸர் ஆஃபர் கிடைச்சிருக்கு. அப்ராட்ல, டெல்லி, பெங்களூர்ல எல்லாம் நல்ல ஸ்கோப் இருக்கும்டா. ஆனா எனக்கு நம்ம பேமிலிய ரொம்ப மிஸ் பண்ற மாதிரி ஒரு ஃபீல் வருதுன்னு சொன்னான். அதனால தான் பாகியை மாதிரியே சென்னையிலயே செட்டில் ஆகிடுடான்னு நானும் பாகியும் அவன் கிட்ட சொல்லிட்டோம்!"
"இனியா, ஷைலஜா கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கும் கவிக்கும் எப்போ மேரேஜ் பண்ணினாலும் ஓகே தான் தாத்தா. இதெல்லாம் தான் நான் உங்க கிட்ட கேக்க நினைச்ச விஷயம். எல்லாத்துக்கும் ஓகே சொல்லிடுங்க தாத்தா!" என்று கேட்டவனிடம் பத்மா புன்னகையுடன்,
"அவ்வளவு பெரிசா எதுக்குடா உன் தாத்தாவை பேச வைக்கணும் ஜீவாம்மா......
அதையும் நீயே சொல்லிடு!" என்று சொல்லிவிட்டு ஜெயந்தனும் ஜெய்யும் முறைப்பதை கண்டு கொள்ளாமல் அனைவருக்கும் உணவு பரிமாற சென்று விட்டார்.
"ஆனந்த்.... எத்தனை ஆப்ளிகேஷன்ஸ சேர்த்து ஒண்ணா சொல்லி முடிச்சிட்டு.... என்ன இதெல்லாம்? நில்லுடா....." என்று ஜெய் ஜீவாவிடம் கேட்டுக் கொண்டிருக்க அவன்
"ஸாரிப்பா.... கவி நாளைக்கு கிளம்பிடுவா. அதனால அவளை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகணும். நீங்களும் மாமாவும் நோ சொல்ல முடியாது. ஏன்னா நீங்க ரெண்டு பேருமே நிரு, மீருவை கூட்டிட்டு அடிச்ச ரவுண்ட்ஸ் எல்லாம் எனக்கு தெரியும்!" என்று சொல்லி விட்டு அவசர நடையுடன் நகர ஜெய் நந்தன் சிரிப்புடன் தன் சித்தப்பாவை சமாதானம் செய்யும் வேலையை பார்க்க சென்றார்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro