Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 3

மருத்துவமனையில் ஜீவாவின் காயத்தை ஆராய்ந்து நன்றாக சுத்தம் செய்து கையில் கட்டுப் போட்டதும் ஜீவா அர்ஜுனிடம், "அப்படியே கிளம்பட்டுமா மாம்ஸ்?" என்று கேட்டான்.

"எங்கடா போற?" என்று கேட்டவரிடம் சலிப்புடன், "எங்க போவேன்? கழுதை கெட்டா குட்டிச்சுவர், நம்ம ப்ளாட்டுக்கு தான் போறேன்; ஆனாலும் நீ இன்னிக்கு ஈவ்னிங்ல இருந்து என்னை ரொம்ப டென்ஷன் பண்ணுற மாமா!" என்று புகார் கூறியவனிடம்,

"கையை ஒழுங்கா தூக்கக் கூட முடியல. இதுல வீட்டுக்கு போய் என்னத்த கிழிக்க போற? வா நம்ம வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஒன் வீக் கழிச்சு ப்ளாட்டுக்கு போய்க்கலாம்!" என்றார் அர்ஜுன்.

அவர் தோளில் சாய்ந்து கொண்டு, "அம்மா, தங்கச்சிங்களை பார்க்கணும் போலிருக்கு மாமா! நீ எனக்கு அடிபட்டதை சொல்லாம அம்மாவை உங்க வீட்டுக்கு வரச் சொல்றியா?" என்று கேட்ட தன் மருமகனின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு,

"நான் உன் மாமாடா; நீ பொறந்ததுல இருந்து உன்னை பார்த்துட்டு இருக்கேன். ஜெய்ட்ட இன்பார்ம் பண்ணிட்டேன். தலைவருக்கும் இங்க ஏதோ வேலை இருக்காம். இந்நேரம் கிளம்பியிருப்பாங்க. காலையில வந்துடுவாங்க. சந்தோஷம் தானே?" என்று கேட்ட தன் மாமனிடம் இல்லையென தலையசைத்து,

"முக்கியமான ஒரு விஐபி பெர்மிஷன் குடுக்கணும். கால் பண்ணி ஸ்பீக்கர்ல போட்டு பேசு!" என்றான் ஜீவா.

"டேய் அது என் வீடுடா! உன்னை நான் அங்க கூட்டிட்டு போறதுக்கு அவ பெர்மிஷன் எதுக்கு வேணும்? அவளுக்கு உன்னை பார்க்க பிடிக்கலன்னா அவளோட ரூம்ல இருந்துக்கட்டும்!" என்று சொன்ன தன் மாமனிடம் சிரிப்புடன்,

"அவளுக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமா! ஆனா நான் செய்யாத தப்புக்கு அப்பா எனக்கு தண்டனை குடுத்த மாதிரி, இவ நான் அவ கிட்ட பேசின பேச்சுக்கு இவ்வளவு நாளா என் கிட்ட பேசாம என்னை தண்டிச்சுட்டு இருக்கா. ஆனா எனக்கும், அவளுக்கும் நடுவில லவ் இல்லன்னு எல்லாம் சொல்ல முடியாது!" என்று சொன்ன ஜீவாவை குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தார் அர்ஜுன்.

"எத்தன பிரச்சனையை தான்டா இழுத்து வச்சுருக்க? அது ஏனோ கவி சின்ன குழந்தையா இருக்கும் போதே உன் கிட்ட சரியா ஒட்டல. இதுக்கும் மேல எரியுற தீயில எண்ணெயை ஊத்துற மாதிரி என்ன பேசி தொலைஞ்ச?" என்று எரிச்சலுடன் அர்ஜுன் கேட்க, ஜீவா சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு மெல்லிய குரலில்,

"அவளுக்கு அடிபட்டுடுச்சுங்கிற பதட்டத்துல எனக்கு அவ மேல ரொம்ப கோபமா வந்தது மாமா, இவ்வளவு இம்சை குடுக்குற உன்னை மாதிரி ஒரு பொண்ணை போய் நான் தான் கவனிச்சுக்கணும்ன்னு எதுக்கு எங்கப்பா எங்கிட்ட சொன்னாரோன்னு ஒரு கேள்வி கேட்டேன். என்னை ஒரு லுக் விட்டுட்டு, "உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்குன்னா என்னை நீ பார்த்துக்க வேண்டாம் ஜீவானந்தன்! இனிமேல் எனக்கும் உனக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் கிடையாதுன்னு பதினாலு வயசுல சொன்னா. இன்னிக்கி வரைக்கும் அதே வீராப்பு தான் காமிச்சுட்டு இருக்கா. ஆனா மேடம்க்கு நம்ம மேல ஒரு தனி லவ்ஸ் தான் மாம்ஸ்!" என்று சொன்ன ஜீவாவிடம் புன்சிரிப்பை உதிர்த்தவர்,

"நினைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம் தம்பி. நீ அழுத்தம்ன்னு தெரியும். ஆனா இவ்வளவு பெரிய விஷயத்தை நான் எதிர்பார்க்கல. அவ உன்னை ஒரு பார்வை கூட பார்க்க மாட்டேங்கிறா. உன்னை ஒரு மனுஷனா மதிச்சு பேசவும் மாட்டேங்கிறா. இதுல அவ உன்னை லவ் பண்றான்னு எப்படிடா காமெடியெல்லாம் பண்ற?" என்று கேட்டவரை ஓர் மவுனப் புன்னகையுடன் நோக்கினான் ஜீவானந்தன்.

"பார்க்கலைன்னா... பேசலைன்னா... காதல் இல்லைன்னு அர்த்தமா? நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வர்றதை அவ கிட்ட சொல்லு. அழகா புடவை கட்டி சூப்பரா ரெடியாகி அவ ஷாப்புக்கு போவா பாரு!" என்று சொன்னவனிடம்,

"கவிம்மா புடவை கட்டுறது எல்லாம் ஒரு மேட்டராடா? அப்பப்போ கட்டுறது தானே? இது தான் நீ சொன்ன தெய்வீக காதலாக்கும்....!" என்று சிரித்தவரிடம்,

"மாம்ஸ் அப்பப்போ புடவை கட்டுவான்னு சொன்னியே? அந்த அப்பப்போ எப்போன்னு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்த்தன்னா அது எல்லாமே நான் உங்க வீட்டுக்கு வந்த நாளா தான் இருக்கும்!" என்று ஜீவா சொன்னதும் அர்ஜுன் யோசனையுடன் அமர்ந்திருந்தார்.

"அடுத்த மேட்டருக்கு போவோமா? அடிக்கடி ஏன்டா பைக், காரையெல்லாம் மாத்திட்டு இருக்கன்னு கேப்பீங்களே.... நம்ம கவி மேடம் இருக்காங்கல்ல.... மார்க்கெட்டுக்கு புதுசா ஒரு கார் வந்துடக்கூடாது... நான் உங்க வீட்டுக்கு வர்ற நாள்ல பார்த்து உங்க ஹால் டீப்பாயை அந்த கார் மாடல் பிக்ஸால ஃபுல்லா நிரப்பி வைச்சுருப்பாங்க. அவங்க ஆசைப்படி காரை புக் பண்ணிட்டோம்னு வை, செம ஹாப்பியாகி "லைக் யூ....." "லைக் யூ....." ன்னு கார் பேரை பிரிண்ட் பண்ணி கீசெயின்ஸ்ல போட்டு அத கிப்ட் குடுப்பாங்க. இது அவ கிட்ட இருந்து நான் வாங்கியிருக்கிற மூணாவது கீசெயின்!" என்று தன் கார் கீசெயினை தன் மாமனிடம் நீட்டியவனிடம் பிரமித்த பார்வையை செலுத்தியவர்,

"என்னடா இது புது விதமான டார்ச்சரா இருக்கு? கிட்டத்தட்ட ஒன்றரை சி செலவு பண்ணி மூணு கீசெயினை வாங்கினியா.... உன்னை கிறுக்கன்னு சொல்றதா; மெண்டல்ன்னு சொல்றதா, இல்ல அரைவேக்காடுன்னு சொல்றதா?" என்று கேட்டவரிடம்,

"நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கலாம் மாமா, உனக்கு இல்லாத உரிமையா?" என்று கேட்டுக் கொண்டிருந்தவனின் சட்டையை பிடித்து இழுத்து,

"டேய் மரியாதையா எல்லாத்தையும் இதோட நிறுத்திக்க.... உங்கப்பன் வந்து எதுக்கு நீ இப்படி செலவு செய்யுறன்னு எங்கிட்ட கேட்டு என்னைய தானே தூக்கி போட்டு மிதிப்பான்? அவ பெரிய மகாராணி.... அவ பேச்சை கேட்டு ஆடுற இவர் பெரிய நவயுககாதலன்..... நானும் தான்டா மீராவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்க அத்தையை பார்க்க போகும் போதெல்லாம் ஒரு சாக்லேட் தான் வாங்கிட்டு போவேன். ஆனா நீ என்னடான்னா ஒரு காரை கேப்பா..... புக் பண்ணுவேன்னு அசால்டா சொல்ற.... ஒரு வார்த்தை கூட பேசிக்காமயே இந்த ஆட்டம் போடுறியே.... நாளைக்கு அவ மச்சான்னு வாயை திறந்து கூப்பிட்டு ரெண்டு வார்த்தை பேச ஆரம்பிச்சுட்டான்னா...
உன்னையெல்லாம் கையில பிடிக்க முடியாது போலிருக்கே!" என்று சொல்லி விட்டு தன் நெஞ்சை தடவி விட்டுக் கொண்டார் அர்ஜுன்.

"நீ சொன்ன மாதிரி அவ இங்கயும் சரி, அங்கயும் சரி மகாராணி தான் மாம்ஸ்! அந்த ராகவ் அரைடவுசர் பையன பிரச்சனையில இழுக்க கூடாதுன்னு கவி நினைச்சா. அவ நினைச்சதை புரிஞ்சுட்டு நானும் பனிஷ்மெண்ட் வாங்கிக்கிட்டு அமைதியா இருந்துட்டேன். ஆனா ஒரு குற்ற உணர்ச்சி அவளுக்குள்ள அரிச்சுட்டு இருக்குன்னு நினைக்கிறேன் மாமா, நம்ம போய் இவன் கிட்ட எப்படி பேசி ஸாரி கேக்குறதுங்கிற ஃபீல், ஆனா எனக்கு அவ மேல எரிச்சல் இல்ல. வருத்தம் இல்ல, துளி அளவு கூட கோபமும் இல்ல. அவளுக்கு கஷ்டமா இருக்குன்னா எனக்கு எந்த விதமான விளக்கமும் வேண்டாம், அப்படியே கட்டிபிடிச்சு..... ஒரு கிஸ் பண்ணி காம்ப்ரமைஸ் ஆகிடுறேன். முதல்ல அவளை வாயைத் திறக்க வைக்கணும். அவ என்ன மாதிரி மைண்ட் செட்ல இருக்கான்னு பார்த்துட்டு, அதுக்கேத்த மாதிரி ஸ்ட்ராடெஜி ஃபாலோ பண்ணணும்!" என்று சொன்ன ஜீவானந்தனிடம்,

"என்னடா மைண்ட் செட்ங்கிற, ஸ்ட்ராடெஜிங்கிற! எனக்கு ஒண்ணுமே புரியலையே.....!" என்று கேட்டவரிடம் பெருமூச்சுடன்,

"ம்ப்ச்! எல்லாத்தையும் உனக்கு லெக்சர் குடுத்துட்டு இருக்க முடியாது. எனக்கு ஒரு மாதிரி ட்ரௌசியா இருக்கு. நான் தூங்கட்டுமா?" என்று கேட்டவனிடம் பதட்டத்துடன்,

"டேய் டேய் தூங்கிடாத கண்ணா, இன்னொரு பத்து நிமிஷம்..... வீட்ல போய் ஏதாவது சாப்பிட்டு பெயின் கில்லர் போட்டு படுக்கலாம்!" என்று சொல்லி காரை விரைவாக வீட்டுக்கு செலுத்தினார் அர்ஜுன்.

வீட்டில் அழைப்பு மணியை அழுத்தியதும் உள்ளிருந்து கதவைத் திறந்தது கவிப்ரியா தான்.

இருவரையும் சேர்த்து ஒரு ஆராயும் பார்வை பார்த்து விட்டு பின்னர் வழி விட்டு பின்னால் நகர்ந்தவளிடம்,

"அம்மா படுத்துட்டாளாடா கவிம்மா? நீ தூங்கலையா.....?" என்று கேட்ட தன் தந்தையிடம்,

"டையர்டா இருக்குன்னு படுத்துட்டாங்க அப்பா, நீங்க சாப்பிடுங்க. உங்க கெஸ்ட்க்கு கையில அடிபட்டுடுச்சு போலிருக்கு. நான் அவருக்கு பௌல்ல போட்டு சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் கவிப்ரியா.

"டேய் என்னடா இது உலக நடிப்பா இருக்கு?" என்று அவனை முறைத்த அர்ஜுனிடம்,

"மாமா இன்னிக்கு ஒரு நாள் மட்டும் ஒரு பத்து நிமிஷத்துல சாப்பிட்டு முடிச்சிட்டன்னா ரொம்ப நல்லாயிருக்கும்!" என்று கேட்டுக் கொண்டான் ஜீவா.

"பானகத் துரும்பா இருக்காதன்னு கொஞ்சம் டீஸன்டா சொல்ற, அது எங்களுக்கும் தெரியும்டா! முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் கிளம்பிடுறேன்; போதுமா? நீ ஸ்பேர் டிரெஸ் ஏதாவது இங்கே வச்சிருக்கியா? அது தான் உன் ஷார்ட்ஸ்....!" என்று கேட்ட அர்ஜுனிடம்,

"இல்ல உன் வீட்ல ஷார்ட்ஸ் போட்டு உலாவுற தைரியம் எல்லாம் எனக்கு இன்னும் வரல. இந்த டிரஸ்ஸோடவே அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்!" என்று சொல்லி விட்டு அவன் ஸோஃபாவில் கண்மூடி தலைசாய்ந்தான்.

அர்ஜுன் இப்பொழுது தான் தன் மகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் உடை மாற்றி விட்டு வரும் முன் ஜீவாவின் கழுத்துப் பகுதியில் ஒரு தலையணை இடம் பிடித்திருந்தது. அவனது ஷாக்ஸ் கழற்றி விடப்பட்டிருந்தது. தனித் தனியான சிறிய கிண்ணங்களில் குழம்பு, வியஞ்சனங்களுடன் சாதம் தயாராக இருந்தது.

கவிப்ரியா பாசமான பெண் தான். அனைவரிடமும் உள்ள அவளது அனுசரணை அர்ஜுன் தன் பெண்ணிடம் கண்டது தான். ஆனால் ஜீவாவிடம் அவளது அனுசரணை வெறும் விருந்தோம்பலாக மட்டும் அவருக்கு தெரியவில்லை. தன் மகளின் கண்ணில் தென்பட்ட பரிதவிப்பையும், அக்கறையையும் பார்த்து வியந்து விட்டார்.

இனிமேல் எல்லாவற்றையும் ஜீவா பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கையுடன், "கவிம்மா அப்பா போய் படுக்குறேன்! குட்நைட் மா!" என்று சொல்லி விட்டு மேலே சென்று விட்டார்.

கவிப்ரியா சமையலறைக்குள் நின்று கொண்டு தவித்துக் கொண்டு இருந்தாள். "க்ளையண்ட் எவனாவது ஆள் வச்சு அடிச்சுருப்பானோ? அப்படின்னா கையில மட்டுமா அடிபடும்? இவ்வளவு பெரிய கட்டா போட்டிருக்கான்.... என்னாச்சுன்னு தெரியலையே!" என்று மனதில் பல கேள்விகள் கேட்டு அதற்கு பதில்களும் கிடைக்காமல் குழம்பிக் கொண்டு இருந்தாள்.

ஆனால் இப்போது அவனை சாப்பிட வைப்பதும், மாத்திரை தந்து படுக்க வைப்பதும் தன் பொறுப்பு என்று புரிந்ததால் படுக்கையறையில் அனைத்தையும் தயார் செய்து விட்டு அவனருகில் வந்தாள். முகத்தில் சோர்வுடன் கண்களை மூடிக் கிடந்தவனை பார்த்தவள், "இவன் தூங்குறானா; முழிச்சுருக்கானான்னு தெரியலயே? இப்போ என்ன பண்ணலாம்!" என்று யோசித்தவள் அவன் காதின் அருகே சொடுக்கிட்டு கை தட்டினாள். அவனிடம் அசைவை காணவில்லை. சலிப்புடன் தன் மொபைலில் பாடலை ஓட விட்டு அவன் பக்கத்தில் வைத்தாள். அதற்கும் அவனிடம் ஒரு சலனமும் உண்டாகவில்லை. இப்போது கவிப்ரியாவிற்கு லேசாக சந்தேகம் எழுந்தது. "இரு வர்றேன்!" என்று நினைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் சென்று ஒரு தீப்பெட்டியை கையில் எடுத்து வந்தாள்.

தீக்குச்சியை உரசியபடி அவனருகில் வந்தவளிடம் கைகளை உயர்த்தி காட்டி புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

"எழுந்துரிச்சு உட்காருடான்னு சொன்னா ஒரே நிமிஷத்துல செஞ்சு இருக்கப் போறேன்; அதை விட்டுட்டு எதுக்கு சூடு போட எல்லாம் ட்ரை பண்ணிட்டு இருக்க அம்முலு!" என்று சிரித்தவனிடம் உணவை சாப்பிடுமாறு கண் ஜாடையில் சைகை காட்டினாள் கவிப்ரியா.

இடது கையால் ஸ்பூனை பிடித்து அவன் உணவை அளைந்து கொண்டிருக்கவும் கவிப்ரியா ஒரு பொறுமையற்ற பெருமூச்சுடன் அவன் கைகளில் இருந்த பௌலை புடுங்கி கொண்டு அவன் அருகே அமர்ந்து கொண்டு ஸ்பூனால் உணவை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றாள்.

"கேப்ஸி..... இதெல்லாம் நிஜமாவே நடக்குதா? இல்லை நான் ட்ரீம்ல இருக்கேனான்னு எனக்கு டவுட் வருதுடா! என் கூட பேச தானே மாட்ட, அட்லீஸ்ட் நிமிர்ந்து என்னைப் பார்த்தாவது ஊட்டலாம்ல?" என்று கேட்டவுடன் முகம் இறுக அவள் எழ முயலவும் அவன் பயத்தில்

"ஹோல்ட் ஆன் பேபி.... இதுக்கு மேல சாப்பிடறதுக்கு தவிர வேறு எதுக்கும் வாயை திறக்க மாட்டேன். ப்ளீஸ்ஸ்ஸ்..... கண்டினியூ பண்றியா?" என்று பாவமாக கேட்டவனின் விண்ணப்பத்தை ஏற்று அவனுக்கு ஊட்டி விட்டு, சிறிது நேரம் கழித்து மாத்திரைகளும் எடுத்து கொடுத்து விட்டு அறையை கை காண்பித்தவளிடம்,

"தேங்க்யூ அம்முலு..... உங்கப்பாவோட கெஸ்டா இருந்தாலும் ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்ட.... உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ஸாரி.....குட்நைட்!" என்று சொன்ன ஜீவாவின் கையில் அவன் போனை திணித்தாள் கவிப்ரியா.

அவனது அலைபேசியை அவள் குறிப்பாக பார்த்து கொண்டே இருக்கவும் அவன் அதை எடுத்து பார்த்தான். அவளிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. கையில் எப்படி அடிபட்டது என்று கேட்டிருந்தாள்.

பதில் ஏதும் சொல்லாமல் ஒரு விரிந்த புன்னகையுடன், "டையர்டா இருக்கு. படுக்குறேன் அம்முலு!" என்று சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்தவனின் பின்னால் நுழையப் போனவளை வாசலிலேயே தடுத்தவன்,

"ரகு பாட்டா சொல்லி குடுத்தது எல்லாம் மறந்து போயிடுச்சா உனக்கு.....பேச்சு வார்த்தையெல்லாம் ஹாலோட நிறுத்திக்கணும். பெட்ரூமுக்குள்ள வர்ற பழக்கம் எல்லாம் நம்ம யாருக்கும் இருந்ததில்லையே? உன் ரூமுக்கு போ! காலையில பேசிக்கலாம்!" என்று சொன்ன ஜீவாவை கனல் பார்வை பார்த்தவள் அவனுக்கு கால் செய்து,

"இது எங்கப்பாவோட வீடு, இந்த வீட்டில் எல்லா இடத்துக்கும் போக எனக்கு ரைட்ஸ் இருக்கு. இந்த பெட்ரூமில என் எதிர்ல நின்னுட்டு இருக்கிறவன் கிட்டயும் எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு பதில் சொல்லு. கிளம்பறேன்!" என்று பேசிக் கொண்டிருந்தவள் அலைபேசியையும், அவனது அலைபேசியையும் கட்டிலில் தூக்கி வீசி விட்டு ஒரே எட்டில் அவளை அணுகி இறுக்கமாக அணைத்து கொண்டான் ஜீவானந்தன்.

"ஏ....ஏய்! என்ன பண்ற; என்னை விடு நந்து..... அப்பா கிட்ட சொல்லிடுவேன் டா....அப்......!" என்று கத்தப் போனவள் வாயில் கை வைத்து கதவின் பின்புறம் அவளை சாய்த்து நிறுத்தியவன் கதவை சாவியைக் கொண்டு மூடி விட்டு,

"உள்ளுக்குள்ள இருக்கிறத எத்தன வருஷமா நீயும் இல்ல இல்லன்னு சொல்லி ஹைட் பண்ணிட்டு இருப்ப அம்முலு..... அதான் உன் மனசுல இருக்கிறது எல்லாமே வந்துடுச்சே.....இன்னும் எதுக்கு இந்த பேசாம இருக்கிற ட்ராமா எல்லாம்! போதும்டா....நம்ம ரெண்டு பேர் விஷயத்துல நான் பேசுனதெல்லாம் ரொம்ப தப்பு.....இதுக்கு மேலயும் எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் குடு. ஆனா நீ மட்டும் குடு. ஒட்டு மொத்தமா எல்லாரும் சேர்ந்துட்டு என்னை மட்டும் தள்ளி நிறுத்தாதீங்க..... முடியலடா; ரொம்ப கஷ்டமா இருக்கு!....." என்று சொன்ன ஜீவாவை இப்போது கவிப்ரியா தன் அணைப்பில் வைத்து இருந்தாள்.

"தப்பெல்லாம் நான் செஞ்சது, நீ எதுக்குடா ஸாரி கேக்குற? உனக்கு, நிர்மலா அத்தைக்கு, டார்லிங்க்கு, ஷைலு, இனியாவுக்கு எவ்வளவு பெரிய தண்டனையை இவ்வளவு வருஷமா குடுத்துட்டு உங்களையும் நிம்மதியா இருக்க விடாம, நானும் நிம்மதியா இல்லாம.....ச்சே! நான் ரொம்ப கெட்டவ....இல்ல நந்து! ப்ளீஸ் உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சுடுறியா?" என்று கேட்டு அவன் காலில் விழப் போனவளை,

"கவிம்மா.....நோ! உன் மேல எந்த தப்பும் இல்ல; இந்த ஃபங்ஷன்க்காவது மலைக்கு நான் வரலாமுங்களா சின்ன ராணி?" என்று கேட்ட படி அவள் தோளில் இருபுறமும் பிடித்து கொண்டான் ஜீவானந்தன்.

"கண்டிப்பா போகணுமாப்பா? அப்போ உன் ஆர் ஆர் ல தான் என்னை கூட்டிட்டு போகணும். நம்ம ரெண்டு பேர் மட்டும்....தனியா! அப்படி வர்றதுன்னா எனக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்ல!" என்று கேட்டவளிடம், "ம்ம்ம்.....ரெண்டு பேரும் தனியாவா? ஓகே ப்ளான் பண்ணுவோம்! சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா கேப்ஸி?" என்று அவளின் கரம் பற்றிக் கொண்டவனிடம்,

"நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்க போறேன்னு யாரு சொன்னா நந்து...... நான் என் டார்லிங்க தான் பண்ணிக்குவேன்! நாளைக்கு வருவார் பாரு சும்மா ஸ்மார்ட் ஆ.....மாமு ஐ லவ் யூ! உனக்கு எல்லாம் அவ்வளவு சீன் கிடையாது! நீ தூங்கு. குட்நைட்!" என்று சொன்னவளிடம்

"ஏய் கேப்ஸி மூக்கி....கையில எப்படி அடிபட்டுச்சுன்னு கேட்டியே.... சொல்லவா? வேண்டாமா?" என்று கேட்டவனிடம் "தூக்கம் வருது. அந்த கதைய காலையில கேட்டுக்கறேன்டா!" என்று சொல்லிய படி மாடியில் ஏறினாள் கவிப்ரியா.

எட்டு வருடங்களாக இருந்து வந்த உரசல் தீர்ந்த சந்தோஷத்தில் ஜீவாவும், கவிப்ரியாவும் அன்றிரவு நிம்மதியாக துயில் புரிந்தனர்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro