💟 ஜீவாமிர்தம் 29
ஜீவானந்தன் தனது தந்தை, தாயின் அறைக் கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். ஜெய் நந்தன் கதவைத் திறக்கையிலேயே, "இன்னும் கால் மணி நேரம் கழிச்சு வா ஆனந்த், உங்கம்மா எனக்கு அர்ச்சனை நடந்திட்டு இருக்கா. உன் முன்னாடியெல்லாம் நான் திட்டு வாங்க முடியாதுடா!" என்று சொன்னவரின் வார்த்தைகளை காதில் வாங்காமல், "அதெல்லாம் பரவாயில்லை, வழியை விடுங்கப்பா!" என்று சொல்லிவிட்டு அறையில் நுழைந்து தன் தாயின் அருகே சென்று அமர்ந்தான்.
"ம்மா.... உங்கள பார்த்தாலே தெரியுது.
ரொம்ப கோபமா இருக்கீங்க. பட் நீங்க கோபப்படுற அளவுக்கு என்ன விஷயம் நடந்ததும்மா?" என்று கேட்ட படி தன் தாயின் கைகளைப் பற்றிக் கொண்டான் ஜீவானந்தன்.
"நந்து கண்ணா..... உங்கப்பா எங்கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொல்லி என்னைக் கூட்டிட்டு வந்தாரு; அவர் கூட ஃப்ரீயா டைம் ஸ்பெண்ட் பண்ணி ரெண்டு மூணு மாசமாச்சேன்னு கீழே எல்லாரும் உன்னைய ரவுண்ட் அப் பண்ணினதை கூட கண்டுக்காம நான் இங்க வந்தா......" என்று நிறுத்திய தன் தாயிடம்,
"அப்போ உங்க கோபம் பண்ணையார் மேல தான்.... என்னம்மா பண்ணினாரு?" என்று கேட்டான் ஜீவா.
"நம்ம அப்பாவோட ப்ரெண்டு கெளதமன் அங்கிள் இருக்காங்கல்ல, அவர் பையன் கல்யாணம் ஏதேதோ ரீசனால நின்னு போயிடுச்சாம். அந்த பையனை நம்ம ஷைலுவுக்கு மாப்பிள்ளையாக்கலாமான்னு கேக்குறாருடா இவரு....... அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு நினைச்சு அந்தப் பவின் பையன் அவ மேல ஆசையா இருந்திருப்பான் இல்லையா......? இப்போ அந்த பொண்ணு கிளம்பிட்டான்னு நம்ம ரூபியை அவனுக்கு பொண்டாட்டியாக்கி பார்க்க உங்கப்பாவுக்கு எப்படிடா மனசு வந்துச்சு? கெளதமன் அங்கிளும் ராகினி ஆன்ட்டியும் நம்ம பேமிலிக்கு நிறைய விதத்துல ஹெல்ப் பண்ணியிருக்காங்க; எனக்கு உடம்பு சரியில்லாம கஷ்டப்பட்டப்போ, நீ பிறந்தப்போ, ரூபி பிறந்தப்போ நல்லா பார்த்துக்கிட்டாங்க தான், ஆனா இப்போ அந்தப் பையன் கல்யாணம் நின்னு போச்சுன்னு எவ்வளவு வெக்ஸ் ஆகி உட்கார்ந்து இருக்கானோ தெரியல. எம் பொண்ணை அந்தப் பையன் கூட...... கடவுளே என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. என்னிக்கும் இல்லாத திருநாளா உங்கப்பா நிலான்னு கூப்பிட்டு வாம்மா பேசலாம்ன்னு கூப்பிட்டப்பவே எனக்கு பயமாயிருந்தது. கண்டிப்பா என் பொண்ணுக்கு இந்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ண நான் சம்மதிக்கவே மாட்டேன். அவர் கிட்ட தெளிவா சொல்லிடு. அவர் பார்க்கிற பையனுக்கு பணம் இருக்கோ இல்லையோ, அவன் மனசு பூரா நம்ம ரூபியை தான் வச்சிருக்கணும்.
ஏற்கனவே ஒருத்தியை மனசுல வச்சிருந்து, இப்போ செகண்ட் ஆப்ஷனா நம்ம ரூபியை அவனுக்கு குடுத்து.... இதெல்லாம் எனக்கு சரியாப்படல!" என்று சொல்லி விட்டு மூச்சு வாங்கியவரிடம் சிறு சிரிப்புடன்,
"ஏன்டா ஆனந்த்...... எம் பொண்ணு, எம் பொண்ணுன்னு உங்கம்மா சொல்றாளே; நீங்கல்லாம் ஒரு கேம் விளையாடுவீங்களே.... குழந்தையை மெஷின்ல தயாரிச்சு, அதுங்கள அழகா மேக்கப் பண்ணி விட்டு பையன் கேட்டாலும், பொண்ணு கேட்டாலும் வீடு வீடா கொக்கு கொண்டு போய் டெலிவரி பண்ணிட்டு வருமே.... அது என்ன கேம்டா..... ம்ம்ம்ம் பேபி ப்ளிம்ப்; அந்த மாதிரி இவ ஏதாவது கேம் விளையாண்டு கொக்கு கிட்ட இருந்து தான் ரூபியை வாங்கினாளான்னு கொஞ்சம் அவ கிட்ட கேட்டு சொல்லு!" என்றவரிடம் கோபத்துடன்,
"அத்தான்...... பையன் முன்னாடி ஒழுங்கா பேசுங்க!" என்றார் நிர்மலா எரிச்சல் குரலில்.
"பையன் இருக்கான்னு தான்டீ பாக்குறேன். இல்லன்னா வேற ஒரு கேள்வி கேட்டுருப்பேன். என்னைய பேச வைக்காத சொல்லிட்டேன்!" என்றார் ஜெய் நந்தன் அடக்கிய கோபத்துடன்.
"ம்மா! ப்ளீஸ் காம் டவுன்.... நம்ம ஷைலுவுக்கு தானேம்மா கல்யாணத்துக்கு பேசிட்டு இருக்கோம்.... அவளோட ஒப்பீனியனும் கேக்கலாமே, நான் அவளை இங்க வரச் சொல்றேன். நம்ம பேசிக்கலாம்!" என்று ஜீவானந்தன் தன் அன்னையிடம் சமாதானம் செய்து கொண்டு இருந்த போது,
"நீ என்னடா உங்க அப்பாவுக்கு ஸப்போர்ட்டா..... இவர் என்ன கேட்டாலும் அந்த லூசு தலையாட்டிடுவாடா..... அப்பா முடிவு தான் உனக்கும் சரின்னு படுதாடா நந்தும்மா?" என்று கேட்ட தன் அன்னையிடம் புன்னகையுடன்,
"ம்மா! முடிவெடுக்க வேண்டியது ஷைலு தான்மா! இவளுக்கும் அந்த பையனுக்கும் கல்யாணம் ஓகே தான்னா அன்னிக்கு அத்தை வீட்டுக்கு வந்த மாதிரி ப்ரெண்ட்லியா நம்ம வீட்டுக்கு ஒரு தடவை அவங்க வந்துட்டு போகட்டும். ரெண்டு பேரும் பேசிக்கட்டும். இல்ல நீங்க யோசிச்ச மாதிரியே ஷைலுவும் யோசிச்சான்னா கூட இந்த ப்ளானை ட்ராப் பண்ணிடலாம். இருங்க ஜெயந்தன் தாத்தா உங்க ரெண்டு பேரையும் கீழே கூட்டிட்டு வரச் சொன்னாங்க. அவங்க கிட்ட கொஞ்ச நேரம் ஆகும்னு சொல்லிட்டு ஷைலுவை மேல வரச் சொல்றேன்!" என்று புன்னகைத்து விட்டு இண்டர்காமின் அருகில் சென்றான் ஜீவானந்தன்.
"ஜீவாவை சம்மதிக்க வச்ச மாதிரி ஷைலுவையும் நீங்க ஏமாத்த முடியாது பார்த்துக்கோங்க!" என்று பத்திரம் காட்டிய தன் மனைவியை பார்த்து சிரிப்பு வந்தது ஜெய் நந்தனுக்கு.
"மொத்த ப்ளானையையும் போட்டுக் கொடுத்ததே அவன் தான்..... ஆனா எல்லாம் ஏதோ என் மூலமாத் தான் நடக்குறது மாதிரி என்ன ஒரு நடிப்பு நடிக்கிறான்! அதை இந்தப் பஞ்சுமூட்டையும் நம்பிட்டு என்னைய திட்டுது!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார்.
சற்று நேரத்தில் கவிப்ரியா, ஷைலு மற்றும் இனியா மூவரும் ஒரு சேர அறைக்குள் நுழைந்ததும் ஜீவானந்தன், "ஆரம்பிச்சுட்டாளுகளா மூணு பேரும்....!" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
மூவரும் ஜெய் நந்தன் அருகில் அமர்ந்து கொண்டதும் ஷைலு ஜெய்யிடம், "அப்பா என்னை கூப்பிட்டீங்கன்னு அண்ணா சொன்னான், எதுக்கு கூப்பிட்டீங்கப்பா?" என்று கேட்ட தன் மகளிடம் ஜெய் நந்தன் கௌதமன் குடும்பத்தை பற்றியும், பவினைப் பற்றியும் கூறி விட்டு பவினைத் திருமணம் செய்து கொள்ள ஷைலுவுக்கு சம்மதமா என்று கேட்டார்.
நிர்மலா, "ரூபி உங்கப்பா கிட்ட அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுடீ!" என்றார் சற்று கோபத்துடன்.
கவிப்ரியா ஜெய் நந்தனிடம், "ஏன் டார்லிங் இன்னும் கொஞ்ச நாளைக்கு நம்ம ரூபி ஜாலியா இருக்கட்டுமே..... இப்பவே எதுக்கு மேரேஜ்?" என்று சொன்னாள்.
"லட்டு உன் ஒப்பீனியன் என்ன.... நீ ஏன்டீ அமைதியா இருக்க?" என்று கேட்ட ஷைலஜாவிடம் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இருந்த இனியா,
"நீ ஊர்ல இருந்து வந்ததுல இருந்து என் கிட்ட பேசவேயில்ல ரூபி; அதுனால நீ எங்கிட்ட கோபமா இருக்கியோன்னு நினைச்சேன். பெரியப்பா எது செஞ்சாலும் நம்ம நல்லதுக்கா தான் இருக்கும்டா, ஒரு தெரியாத பேமிலியில போய் அடாப்ட் ஆகுறதை விட நமக்கு தெரிஞ்ச பேமிலின்னா பழகுறது கொஞ்சம் ஈஸியா தான் இருக்கும், ஆனா இந்த விஷயம் பெரியம்மாவுக்கு பிடிக்கல போலிருக்கு. நீ எதுக்கும் மிஸ்டர் பவின் கிட்ட நீ பேசிட்டு அப்புறம் டிஸைட் பண்ணு, என் மேல ஒண்ணும் கோபம் இல்லையேடீ?" என்று கேட்ட தன் தோழியை அணைத்துக் கொண்டு,
"உன் மேல எதுக்குடீ கோபம்? நீ ராசு ஸார் கூட பிஸியா இருந்த, ஸோ உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு ஒதுங்கி இருந்தேன், அவ்வளவு தான்!" என்றவள் தன் தந்தையிடம் திரும்பி,
"அப்பா என்னை பார்கவ் அத்தான் ரிஜெக்ட் பண்ணினப்ப எனக்கு எவ்வளவு வலிச்சதோ, அதே மாதிரி தானேப்பா அவர்.... அந்த பையனுக்கும் பெய்ன் இருந்திருக்கும்! என்னை மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்கற ஒருத்தருக்கு என்னால முடிஞ்ச வரைக்கும் லவ்வை கொடுத்து அவரோட லைஃப் அ ஷேர் பண்ணிக்குறேனே.........
வீட்ல எல்லாருக்கும் ஓகேன்னா அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்ப்பா!" என்றாள் ஷைலஜா.
"ரூபிம்மா...... எதுக்கும் இன்னொரு தடவ நல்லா யோசிச்சுட்டு......" என்று தயக்கத்துடன் இழுத்த நிர்மலாவை தன் கோபப் பார்வையால் முறைத்த ஜெய் நந்தன் தன் மகளிடம்,
"அப்பா மேல நீ வச்சிருக்கிற கான்பிடென்ஸ்க்கு தேங்க்ஸ்டா ரூபி,லட்டு உனக்கும் தான்டா; ஏஞ்சல் நீ கல்யாணம் ஆகி இங்க வந்ததும் உனக்கு கம்பெனி தர உன் டார்லிங் இருக்கேன்டா செல்லம், நீ கம்பெனி குறையுதுன்னு யோசிச்சுட்டு நம்ம ரூபியை நிறுத்தாத சரியா? இன்னிக்கு நைட் வீட்ல யாரும் தூங்கக் கூடாது. நம்ம ஆனந்த் ஸாருக்கும், கவிப்ரியா மேடமுக்கும் டெரஸ்ல வச்சு நம்ம எல்லார் முன்னிலையிலும் மறுபடியும் என்கேஜ்மெண்டும், நம்ம லட்டு, ராசு ஆனந்த், ஏஞ்சல் இவங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சு பெரியவங்க கிட்ட முகூர்த்தம் பார்க்கிற வேலையையும் செய்யணும். எல்லாரும் ஈவ்னிங் 7 மணிக்கு டெரஸ்ல அசெம்பிள் ஆகணும். என்னனென்ன தேவைப்படுதோ அத்தனையும் மாடிக்கு ஏத்துங்க. ஆனந்த் தாத்தா கிட்ட பத்து நிமிஷத்துல அப்பா வந்துடுறேன்னு சொல்லிடுப்பா!" என்று அனைவரையும் ஒவ்வொரு வேலை தந்து அனுப்பி வைத்து அந்நேரமும் நிர்மலாவை தன்னுடன் நிறுத்திக் கொண்டார்.
இதற்கு மேல் தாய் தகப்பன் இருவரின் தனிமைக்கு பங்கம் விளைவிக்க வேண்டாமென்று நினைத்த ஜீவாவும் சிரிப்புடன் கீழிறங்கி விட்டான்.
கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து தன்னுடைய புடவையின் ஓரத்தை கைகளில் சுருட்டி விளையாடிக் கொண்டிருந்தவரை எழுப்பி நிறுத்திய ஜெய் நந்தன்,
"நிலாம்மா என் மேல கொஞ்சம் நம்பிக்கை வைடீ! நம்ம ரூபி அவ போற இடத்துலயும் சந்தோஷமா, ஒரு நிறைவான வாழ்க்கை வாழணும். நாமளும் இங்க போர் அடிச்சா மீரா, கீதா வீடு மாதிரி நம்ம பொண்ணு வீட்டுக்கு கூட உரிமையா போய் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வரணும். இதெல்லாம் கௌதம் வீட்லனா கண்டிப்பா நடக்கும். வேற யாரோ முகம் தெரியாத ஒருத்தர் வீட்ல நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்தா சம்பந்தின்னு நாம ரெண்டு ஸ்டெப் தள்ளி தான் நிக்கணும். அன்பு மறுக்கப்படுவறங்களுக்கு தான்டீ உண்மையான அன்பை குடுக்க தெரியும். பவின் நம்ம பொண்ணை நல்லா பார்த்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ கொஞ்சம் யோசி!" என்று சொல்லிவிட்டு தன் மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்.
"பொண்ணுக்கு அலையன்ஸ் பேசுறதெல்லாம் சரி தான் மிஸ்டர் நந்தன்..... நான் முதல்ல கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலயே? உங்க பையனும், மருமகளும் எல்லாரையும் விட்டுட்டு தனியா என்கேஜ்மெண்ட் நடத்துனதுக்கு நந்துவுக்கு என்ன பனிஷ்மெண்ட் குடுக்கப் போறீங்கன்னு கேட்டேன்.....!" என்று கேட்ட நிர்மலாவிடம் மழுப்பலாக சிரித்த படி,
"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாம தானே உங்கிட்ட அவ்வளவு நேரமா திட்டு வாங்கிட்டு இருந்தேன். மறுபடியும் ஃப்ரெஷ்ஷா கூட திட்ட ஆரம்பி. ஆனா சின்னவர்ட்டயும், ஏஞ்சல்ட்டயும் என்னைய கோர்த்து விடாத பஞ்சு மூட்டை. கீழே சித்தப்புவ புள்ளைங்க எல்லாம் சேர்ந்து ஆஃப் பண்ணி இருக்குங்கன்னு நினைக்கிறேன். பை பை!" என்று சொல்லி தன் மனைவிக்கு ஒரு அவசர முத்தத்தை தந்து விட்டு சென்று விட்டார் என ஜெய் நந்தன்.
சிறிது நேரத்தில் நிர்மலாவும் கீழிறங்கி வந்து விட இன்னும் தன் மனைவியின் முகத்தில் தெளிவை காணாத ஜெய் நந்தன் நிர்மலாவை தொந்தரவு செய்ய விரும்பாமல் ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நினைத்து தன் மனைவியின் முகத்தை பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தார்.
நிர்மலா ஜெய் நந்தனிடம் சென்று, "உங்க எல்லாருக்கும் சம்மதம் தான்னா இந்த சம்பந்தத்தை பேசி முடிவு செய்ங்க. ஆனா என்னைக்காவது ஒரு நாள் ஷைலு கண்ணீர் விட்டான்னா அப்புறம் உங்கள பேசிக்குறேன்!" என்று சொல்லி விட்டு அவர் அருகில் அமர்ந்து கொண்டார்.
ஜெயந்தன், பத்மா, அர்ஜுன், மீரா, பலராம், கீதா, சரஸ்வதி, அனைவரும் கூடத்தில் அமர்ந்து இருக்க சிறியவர்கள் பட்டாளம் அனைத்தும் மாடியில் நின்று கொண்டு அரட்டையுடன் பெரியவர்கள் உட்கார சேர்களை அடுக்குவது, மழை வந்தால் நனையாத பந்தலிடுவது போன்ற சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
பார்கவ் சிறு எரிச்சலுடன் ஜீவாவிடம், "டேய் மச்சி..... அவன் எப்படா கிளம்புவான்? நம்ம கேங்க்ல அவன் செட் ஆகவேயில்ல, தனியா தெரியுறான்; அவனைப் போகச் சொல்லுடா!" என்று ராசுவைப் பற்றி குறைபாடிக் கொண்டிருந்தான்.
"பாகி என்னடா இது? அவர் நம்ம வீட்டுப் பொண்ணோட ஹஸ்பெண்ட் டா, எந்த ஈகோவும் பார்க்காம, இவ்வளவு கேஷுவலா நம்ம வேலை எல்லாம் அவரும் ஷேர் பண்ணிக்குறார்னா நம்ம ராசுவை அப்ரிஷியேட் பண்ணணும். அதை விட்டுட்டு.... அங்க பாருடா; இனியாவோட ஸ்மைல் க்யூட்டா இருக்குல்ல, அதை நாம ஏன் தடுக்க நினைக்கணும்? ஷைலு, கவியெல்லாம் தான் சின்னப்புள்ள தனமா அவரை அவாய்ட் பண்றாங்கன்னா நீயுமாடா? போடா அவர் கிட்ட சும்மா ப்ரெண்ட்லியா நாலு வார்த்தை பேசு!" என்று சொல்லி பார்கவை ராசுவிடம் அனுப்பி வைத்த ஜீவானந்தன் கவியும் ஷைலுவும் ஒரு ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கண்டு அவர்கள் அருகில் சென்று தானும் அமர்ந்து கொண்டான்.
"ஷைலு.... உங்க கவி அக்காவுக்கு என்னவாம்? மூக்கை தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்கா...." என்று தன் தங்கையிடம் கேட்டவனிடம்,
"அண்ணா கவி அக்காவுக்கு இப்போ கல்யாணம் வேண்டாமாம். இன்னும் ஒரு ஆறு வருஷம் கழிச்சு அவங்களுக்கு 29 ஆகும் போது பண்ணிக்குறாங்களாம்..... 30 வயசு ஆகிட்டா தான் எல்லாரும் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் பண்ணலையான்னு அஜு மாமாட்ட கேக்க ஆரம்பிச்சுடுவாங்களாம். அதனால கவி அக்கா 29 வயசுல கல்யாணம்னு கமிட் ஆகிட்டாங்களாம். இவ்வளவு நாள் அவங்களுக்கு ஒண்ணும் தெரியலயாம். இப்போ கல்யாணம், கல்யாணம்னு எல்லாரும் பேசிறதுனால அவங்களுக்கு பயமா இருக்காம். 31 வயசுல நீ எப்படி இருந்தாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பாங்களாம். இதெல்லாம் அவங்களே இன்னிக்கு யோசிச்சு முடிவு பண்ணின விஷயமாம். உங்கிட்ட சொல்ல சொன்னாங்க!" என்று ஷைலஜா சொன்னதும் ஜீவானந்தன் சிறு சிரிப்புடன்,
"என் கூட வா ஷைலு!" என்று சொல்லி தன் தங்கையை தன்னுடன் அழைத்து சென்று விட்டான்.
"ஏதாவது சொல்லுவான்னு பார்த்தா இந்த விஷயத்துல இவனோட டோட்டல் ரியாக்ஷன் இவ்வளவு தானா.... அப்போ நம்ம எடுத்துருக்கிற முடிவு சரி தான் போலிருக்கு......!" என்று முணுமுணுத்து கொண்டாள் கவிப்ரியா.
சிறிது நேரம் கழித்து ஷைலஜா சிறு சிரிப்புடன் கவிப்ரியாவிடம் வரவும், "என்னடீ உங்க அண்ணன் உன்னைய தனியா தள்ளிட்டு போனான், என்ன பேசினீங்க ரெண்டு பேரும்....." என்று சற்று ஆர்வத்துடன் கேட்டாள் கவி.
"மலையில இப்போ சூடு அதிகமா இருக்காம். அப்படி இருந்தா உன்னைய மாதிரி சில பேர் இப்படித் தான் உளறுவாங்களாம். இந்தா இந்த லெமனை தலையில தேச்சு குளிச்சன்னா இனிமே தேவையில்லாம உளற மாட்டியாம்.... ஏய் கவி அக்கா; நீ சொன்னதை அண்ணாட்ட சொன்னேன். அவன் சொன்னதை உன் கிட்ட சொன்னேன். கைய விடு. வலிக்குது கவி அக்கா...." என்று தன் கையை இறுகப் பற்றியிருந்த தன் அண்ணியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஷைலஜா.
"ஏன்டீ அந்த ஹல்க் தான் லெமனை குடுத்து விட்டான்னா நீ எதுக்குடீ வாங்கிட்டு வந்த.... உனக்கு தான் இது தேவைப்படும். நீயே யூஸ் பண்ணிக்கோடான்னு திரும்பி அவன் கையில குடுத்துட்டு வந்துருக்க வேண்டியது தானே..... நில்லுடீ எங்க ஓடுற...... ஏய் லட்டு இவளை பிடிடீ!" என்று சொல்லி ஷைலஜாவின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள் கவிப்ரியா.
"அய்யோ கவி அக்கா..... நீ நியாயமா அண்ணா மேல தானே கோபப்படணும்? ரூபியை எதுக்கு அடிக்க வர்ற.... ஜீவாண்ணாட்ட போய் உன் சண்டையை வச்சுக்க. எங்கள டிஸ்டர்ப் பண்ணாத. ரூபி உட்காருடீ கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம்!" என்று இனியா சொல்ல ராசுவும், பார்கவும் இவர்களது சண்டை எதற்கென்று காரணம் தெரியாததால் யோசனையுடன் நின்று கொண்டு இருந்தனர்.
கவிப்ரியா புயல் வேகத்தில் மாடியில் இருந்து புறப்பட்டு ஜீவானந்தனின் அறை வாசலில் தான் ப்ரேக் அடித்து நின்றாள்.
"ஹாய் அம்முலுக் குட்டி....!" என்று கையசைத்து அழைத்தவாறு கூப்பிட்டவனிடத்தில், "இப்போ உன் ரூமுக்குள்ள நான் வரலாமா? வரக் கூடாதாடா?" என்று கேட்ட படி யோசித்தவளிடம்,
"உள்ள வரலாம், கையைப் பிடிச்சுக்கலாம். கட்டிப் பிடிச்சுக்கலாம். மிதிக்கலாம், உதைக்கலாம், வறுக்கலாம், பொரிக்கலாம், ஆனா நோ மெச்சூர்டு கண்டென்ட்..... அது மட்டும் கல்யாணத்துக்கு அப்புறம் தான். உள்ள வா கேப்ஸி!" என்று அழைத்தவனை
"நல்லா தானடா இருந்த..... திடீர்னு எதுக்கு இப்படி இழுத்து போர்த்திட்டு படுத்திருக்க?" என்று கேட்ட கவிப்ரியாவிடம்,
"காய்ச்சல் அடிக்குது. காலையில இருந்து அடிக்குது.....!" என்றான் ஜீவா அவளையே பார்த்தவாறு.
"ஏன்டா எல்லாருக்கும் பார்த்து பார்த்து எல்லாம் செய்ற, உன் உடம்பை கவனிச்சுக்க மாட்டியா? டேப்லெட்ஸ் ஏதாவது சாப்பிடுறியாடா?" என்று கேட்ட படி அவன் நெற்றியில் கை வைத்து காய்ச்சலை சோதித்த கவிப்ரியாவை இழுத்து தன் போர்வைக்குள் அடக்கிக் கொண்டான் ஜீவானந்தன்.
"ஏஏஏய்....என்னடா பண்ற; விடு நந்து!" என்று சொன்னவளின் சத்தம் இயல்பை விட சற்று குறைவாக தான் கேட்டது.
"உனக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு நினைச்சு காய்ச்சல் அடிக்குது, எனக்கு எப்படா கல்யாணம் பண்ணிக்க போறோம்னு நினைச்சு காய்ச்சல் அடிக்குது அம்முலு. சென்னைல உங்க வீட்ல இருக்கும் போது நான் ஒரு கனவு கண்டேன் தெரியுமா அம்முலு. இப்படித் தான் உன் மூச்சும், என் மூச்சும் கலக்குற மாதிரி, நான் உன் நெயில்ஸ்க்கு எல்லாம் நெயில் பாலிஷ் போடுற மாதிரி, நீ என் முகம் பூரா முத்தம் குடுக்குற மாதிரி, நான் அதை என்ஜாய் பண்ணிட்டு இருக்கற மாதிரி.... ரொம்ப நேரத்துக்கு அதை என்னால கனவுன்னே அக்செப்ட் பண்ணிக்க முடியல. அஜு மாமா கூட என்னைய கிண்டல் பண்ணினாரு தெரியுமா? உன் மேல தான் என்னோட காதல்ன்னு நான் ரியலைஸ் பண்ணின நாள்ல இருந்து நான் உன் கிட்ட இருந்து விலகி தான் நின்னுட்டு இருக்கேன்டா கேப்ஸி.... உன்னை தூர இருந்து ரசிச்சுட்டே இருக்கறது தான் எனக்கு பிடிக்குது. ஆனா இப்படியே விடக் கூடாது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் அம்முலு, நீ கேக்குற நேரம் நான் உன்னை சென்னைக்கு கூட்டிட்டு போறேன். உன் தனிப்பட்ட ஆசைக்கும் நான் எந்த விதத்திலயும் தடையா நிக்க மாட்டேன். ப்ராமிஸ். நாளைக்கே கல்யாணம்னாலும் உனக்கு ஓகே தானடீ மூக்கி?" என்று கேட்டவனிடம்,
"இப்பவே கல்யாணம்னாலும் ஓகே தான்டா மாடு; நீ என்னைய என்னமோ செய்ற; ஆனா என்ன செய்றன்னு தான் தெரிய மாட்டேங்குது. சீக்கிரம் கீழே போகலாம் வா ஜீவா!" என்று சொன்னவளை முத்தமிட்டு அணைத்துக் கொண்டு அவளுடன் அறையில் இருந்து வெளியே வந்தான் ஜீவானந்தன்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro