Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 25

"அவள்" பேஷன் க்ரியேட்டர்ஸின் முன் காரை நிறுத்திய ஜீவா தன் வேகமான எட்டுகளுடன் உள்ளே நுழைந்தான்.

"ஹலோ ஸார்.....நில்லுங்க! வெயிட் பண்ணுங்க. இன்னும் ஷாப் ஓப்பன் பண்ணல. கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க. எப்படியும் இன்னும் ஒன் ஹவர் ஆகும்!" என்று சொன்னார் ஒரு துவாரபாலகி.

"ஏன் உங்க ஓனர் மேடம் இன்னும் கவுந்தடிச்சு படுத்து தூங்கிட்டு இருக்காங்களா? நீங்க தான் அவங்களுக்கு காவல் தெய்வமாக்கும்..... பரவாயில்லை; நல்ல ஆளா தான் செலக்ட் பண்ணி இருக்காங்க. உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டவனை சுட்டுப் பொசுக்குவது போல் முறைத்த அவள்,

"மிஸ்டர் கடை இன்னும் ஓப்பன் பண்ணல. கிளம்புங்கன்னு சொல்றேன்! புரியலையா?" என்றாள் எரிச்சலை அடக்கிக் கொண்டு.

"மேடம்..... உங்க ஷாப்புக்கு பர்சேஸ் பண்றதுக்காக நான் வரல. உங்க கவிப்ரியா மேடம்க்கு சாப்பாடு குடுக்கறதுக்காக வந்துருக்கேன். அவங்க ப்ரேக் பாஸ்ட் இதோ என் கையில இருக்கிற பேக்ல இருக்கு பாருங்க. இப்போ உள்ள விடுவீங்களா.....விட மாட்டீங்களா?" என்று கேட்டவனிடம் சற்று தயக்கம் காட்டி என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள் அவள்.

குறுஞ்சிரிப்புடன், "இந்த தடியனை இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே..... சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்னு சொல்றான்! இது உண்மையா, பொய்யா இருக்குமான்னு யோசிக்குறீங்க, கரெக்டா?" என்று கேட்டான் ஜீவா.

"அப்படி இல்ல ஸார்! கவி மேடம் பேமிலியில அவங்க அப்பா, அம்மா, அண்ணா எல்லாரையும் எனக்கு தெரியும். ஆனா நீங்க யாருன்னு தெரியல. அதான்......." என்று இழுத்தவளிடம் புன்னகையுடன்,

"கவி என் மாமா பொண்ணு.... தெரியாத பையன் கிட்ட இவ்வளவு கேள்வியெல்லாம் கண்டிப்பா கேட்கத் தான் செய்யணும் சிஸ்டர். ஷாப்புல நைட் எல்லாம் தனியா இருந்தான்னு சொன்னதும் எனக்கு என் மாமா, அத்தை மேல கொஞ்சம்
கோபம் கூட வந்துச்சு. பட் உங்களை பார்த்தவுடனே ரிலாக்ஸ்டா இருக்கு.
நான் வேணும்னா இங்கேயே வெயிட் பண்றேன். ஜீவா வந்திருக்கார்னு சொல்லி அவளை கூட்டிட்டு வர்றீங்களா?" என்று கேட்டவனிடம் சிரிப்புடன் தலையாட்டி விட்டு,

"வாங்க ஸார்! உள்ள போகலாம்! கவி மேடம் உங்களை தெரியும்னு சொல்லிட்டாங்கன்னா நான் வீட்டுக்கு கிளம்பறேன்! அவங்க தூங்கிட்டு இருக்காங்க. எப்படி தனியா விட்டுட்டு போறதுன்னு யோசிச்சுட்டு தான் இவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நானும் வீட்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் வரணும்!" என்று சொல்லிக் கொண்டு அவளுக்குள் அவனை அழைத்து சென்றாள்.

அவள் ஒரு மூன்று நட்சத்திர விடுதி போல் அனைத்து வசதிகளுடன், ஒரு தனித்தன்மையுடன் அவனது அவள் போலவே ஒரு அழகுடன் மிளிர்ந்தது.

"இன்ட்டீரியர்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு சிஸ்டர். எங்க மாமன் காசை எப்படி எல்லாம் பாழாக்கியிருக்கா மூக்கி!....... வாவ்; ஃபைபர் க்ளாஸ்ல பிஷ் டாங்க் ஆ; இது கண்டிப்பா எங்க அம்மா ஐடியாவா தான் இருக்கும். உள்ள கூட போக முடியும் போலிருக்கே சிஸ்டர்....." என்று ஆச்சரியத்துடன் கேட்டவனிடம்,

"ஷாப்புக்கு வர்ற கிட்ஸை அட்ராக்ட் பண்றதுக்காக வச்சிருக்கோம் ஸார்! இந்த பிஷ் டாங்க் நடுவில ஒரு குட்டி சேர் இருக்கு. குழந்தைகளை அங்க ஹோல்ட் பண்ணிட்டோம்னா அவங்க அம்மா ஃப்ரீயா ஷாப் பண்ணலாம். இன்னும் ரெண்டு செட் கூட பர்சேஸ் பண்ணலாம்ல.....!" என்று அவள் சொன்னதும் ஜீவா ஒரு மார்க்கமாக தலையாட்டி விட்டு கவிப்ரியாவின் அருகே சென்றான்.

இரவு முழுவதும் அவள் சிரமப்பட்டு வடிவமைத்த உடைகள் மேனிகுயின்களிடத்தில் அழகுற மாட்டி விடப்பட்டிருந்தது. துணிகள், குப்பைகள் என்று எதுவும் தேங்கி இருக்காமல் அவை அவை அதனதன் இடத்தில் இருந்தது. ராஜகுமாரி இரு ஸோஃபாக்களை எதிர் எதிராக இணைத்து தலைக்கு, கால்களுக்கு இரு தலையணைகளை வைத்துக் கொண்டு சுகமான துயிலில் ஆழ்ந்திருந்தாள்.

"என்ன கான்செப்ட்ல ஷோவுக்கு டிஸைன்ஸ் ரெடி பண்ணியிருக்கீங்க சிஸ்டர்?" என்று கேட்ட ஜீவாவிடம்,

"ஸாரி ஸார். என் பேரு ஆர்யமாலா! அப்பவே சொல்லாம இருந்ததுக்கு இன்னொரு ஸாரி. வெஸ்டர்ன் பார்ட்டி வியர் அவுட்ஃபிட்ஸ் தான் எங்க கான்செப்ட். பாண்டுயூ, கேப் ச்லீவ், பென்சில், எம்பயர் வெய்ஸ்ட், ஆஃப் ஷோல்டர், லேயர்டு டிரெஸ், ஜம்ப் ஸ்யூட் இப்படி வேற வேற மாடல்ஸ் ல ட்ரெஸ் ரெடி பண்ணியிருக்கோம். பேஷன் பரேட் முடிஞ்சதுக்கப்புறம் இந்த ட்ரெஸஸை எல்லாம் சேல் பண்ணி அதுல கிடைக்கிற அமௌண்ட்டை ஏதாவது நல்ல காஸ்க்கு செலவு பண்ணணும்ங்கிறது கவி மேடமோட ஆசை!" என்றாள் ஆர்யமாலா.


"சென்னையில க்ளைமேட் ரொம்ப வொர்ஸ்டா இருக்கு ஆர்யா..... உங்க மேடம் கிட்ட சொல்லி இரண்டு மலை உருவாக்க சொல்றீங்களா?" என்று கேட்டுக் கொண்டிருந்தவனின் முதுகுப்புறத்தை ஒரு திவான் தாக்கியது.

"செல்லம்...... என்ன அதுக்குள்ள முழிச்சுட்டீங்க; மணி பத்தரை தான் ஆகுது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்ல?" என்று கேட்ட ஜீவாவை முறைத்தவள்,

"ஒருத்தி தூங்கிட்டு இருக்காங்கிற அறிவு இல்லாம எதுக்கு மாலா கிட்ட கேள்வியா கேட்டுட்டு இருக்க? மாலா இவர் என் மாமா பையன் ஜீவா!" என்று அறிமுகப்படுத்தி விட்டு

"ஏன் நல்லதெல்லாம் நீங்க தான் செய்யணும்னு எழுதி வச்சிருக்காக்கும்...... எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னைய மலைய க்ரியேட் பண்ண சொல்லி இருப்ப..... இருக்கிறதை ஒழுங்கா பத்திரமா பாதுகாத்து நெக்ஸ்ட் ஜெனரேஷனுக்கு குடுங்கடா. வந்துட்டான் பெரிசா அதை வாங்கு, இதை வாங்குன்னு சொல்றதுக்கு..... மாலா நைட் அதகளமால்ல போட்டு வச்சுட்டு படுத்தோம்.... சீக்கிரமே எழுந்துரிச்சு எல்லாத்தையும் செட் பண்ணிட்டீங்க போலிருக்கு! அப்ப்ப்பா...... நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு. லாஸ்ட் டே வொர்க் டென்ஷன் இல்லாம நிம்மதியா இருக்கலாம். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மாலா, நீங்க இல்லாம இவ்வளவு அழகா வொர்க் முடிச்சுருக்க முடியாது! ஒரு நிமிஷம்......!" என்று சொல்லி விட்டு தன் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து வந்து மாலாவிடம் தந்தாள் கவிப்ரியா.

"ஐயோ மேடம்.....இப்போ எதுக்கு பணம்?" என்று மறுத்தவளிடம்,

"வாங்கிக்கங்க சிஸ்டர். இந்த கஞ்சி எது குடுத்தாலும் வாங்கி பாக்கெட்டில போடறத தான் பார்த்திருக்கேன். இப்போ தான் முதல் தடவையா கையில இருக்கிறத நீட்டுறா. கவி மேடம் ஹாப்பி; ஸோ நானும் ஹேப்பின்னு நினைச்சு வாங்கிக்கங்க. என்ஜாய்!" என்று சொல்லிக் கொண்டே கத்திரிக்கோலால் ஒரு துணியை வெட்டிக் கொண்டிருந்தவனிடம், "அய்யய்யோ.....ஸார்! அது ஸாட்டின் மெட்டிரியல்....ஒரு மீட்டர் மூவாயிரம் ரூபாய்; அதை எதுக்கு தேவையில்லாம.....!" என்று முடிக்க மாட்டாமல் திணறியவளிடம் சிரிப்புடன்,

"மாலா........ குரங்கை கடைக்குள்ள விட்டா அது செய்யுற சேட்டையையும் பொறுத்துட்டு தான் ஆகணும். நீங்க கிளம்புங்க. நாளைக்கு மார்னிங் பார்க்கலாம்!" என்று சொல்லி அவள் இருவரிடமும் விடைபெற்று நகர்ந்தவுடன் சிறிது நேரம் கழித்து கதவை உட்புறமாக பூட்டி ஷட்டரையும் போட்டு விட்டு சாவியுடன் திரும்ப உள்ளே வந்தாள் கவிப்ரியா.

"தூங்கும் போது செம க்யூட்டா இருக்கடீ அம்முலு. போய் ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம். வயிறு பசிக்கலையா?" என்று கேட்டவன் தோளில் சாய்ந்து கொண்டு,

"எதுக்குடா இப்படி தேவையில்லாம துணியை கட் பண்ணிட்டு இருக்க..... காஸ்ட்லி மெட்டிரியல் அதை வேஸ்ட் பண்ணாத மாடு!" என்று அவனை கட்டிப் பிடித்துக் கொண்டு திட்டியவளை,

"ஏய் இப்போ போறியா இல்லையாடீ..... இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்தா வயிறு என்னவாகுறது? துணி வேஸ்ட் ஆனா பரவாயில்லை. மூவாயிரம் ரூபாய் தானே? உங்கண்ணன் கிட்ட கேட்டு வாங்கித் தர்றேன். போயிட்டு வா. ரெஸ்ட் ரூம் இருக்குல்ல......." என்று கேட்டவனை, "இது எனக்கு இன்னொரு வீடு மாதிரி; கம்பர்டபிள் ப்ளேஸ்...... வீட்ல இருக்கிற மாதிரி எல்லா வசதியும் இங்கயும் தான் இருக்கு. இங்க தான் என் நிறைய ரகசியங்களையும் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்!" என்று கவிப்ரியா சொல்ல ஜீவா ஆர்வமாக புருவம் உயர்த்தினான்.

ஜீவா பரிமாறி அவளுக்கு வாயில் உணவு ஊட்டி வேறு விடவு‌ம் கவிப்ரியா திருப்தியாக சாப்பிட்டு முடித்தாள். திடீரென ஜீவா அவளிடம்,

"அம்முலு உன் ரிங்கை என் கிட்ட குடு!" என்றான். அவனை புரியாத ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனிடம் தனது மோதிரத்தை கையில் கொடுத்தாள் கவிப்ரியா.

அவளின் கையில் தனது மோதிரத்தை குடுத்தவன்,

"நானும் இப்போ பண்ணுவாய்ங்க, இந்தா பண்ணிடுவாய்ங்கன்னு பார்க்குறேன்! வீட்ல எந்த பயபுள்ளயும் நம்ம நிச்சயதார்த்தம், கல்யாணம் பத்தியெல்லாம் பேசுற மாதிரியே தெரியல. ஒரு ஹாப்பி மொமண்டை க்ராஸ் பண்ணினா பக்கத்திலேயே ரெண்டு மண்டைய பிச்சுக்குற மொமண்டும் வந்துடுது. அதனால....... அம்முலு" என்று நிறுத்தியவனிடம்,

"இன்னிக்கு இங்க வச்சு நம்ம என்கேஜ்மெண்டை முடிக்கப் போற. இது இங்க வர்ற வரைக்கும் நீ யோசிக்காத ப்ளான். நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள மாலையை ரெடி பண்ணிட்ட. மோதிரத்தை அதுக்கு தான் கழட்ட சொன்ன. என்னைய கிழிச்சு தைக்கிற வேலை பார்க்குறவன்னு சொல்லிட்டு இப்போ நீ என்ன பண்ணி வச்சிருக்க மிஸ்டர் ஜீவானந்தன்..... ஆனாலும் இந்த இன்ஸ்டண்ட் துணி மாலை அழகாத் தான் இருக்கு. இந்த பூவெல்லாம் ஷாப்பை டெகரேட் பண்ணணும்னு வச்சிருந்தது மாடு..... அதையும் பிரிச்சு மேய்ஞ்சுட்டியா; இது வரைக்கும் ஷாப்புக்கு வந்த குழந்தைங்க கூட இப்படி அட்டகாசம் பண்ணினதில்ல!" என்று சொன்னவளிடம் சிரிப்புடன்,

"பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன்.

"வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன்.

தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமும், ரோஷமும் வரவேயில்ல....... இன்னும் கொஞ்சம் சீக்கிரமா நான் வந்து உன் கிட்ட பேசியிருந்தா நல்லா இருந்திருக்கும். சரி விடு. இனி லைஃப் லாங்கா ஜீவாம்மாவை கண் கலங்காம, யார் கிட்டயும் அடி வாங்க விடாம, பத்திரமா பார்த்துக்கோ! என் மனசுல இருக்கிற காதலை முழுசா சொல்லிடுவேனான்னு கூட எனக்கு தெரியல அம்முலு. திடீர்னு ஏதோ வார்த்தைக்கு பஞ்சம் வந்துட்ட மாதிரி பேசுறதுக்கு ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கு லைக் ஐ'ம் ஷிவரிங்!" என்று சொன்னவனை பார்த்தவள்,

"நந்து என்னை கீழே இறக்கி விடு!" என்றாள் குரலில் மிருதுத்தன்மையை கூட்டி.

"என்ன மேடம்.....வாய்ஸ் ரொம்ப ஸாப்ட் ஆகுது. கீழே இறங்கி என்ன பண்ணப் போறீங்க?" என்று கேட்ட படி அவளை இறக்கி விட்டவனை பார்த்து புன்னகைத்து விட்டு ஒரு ஷெல்புக்குள் தலையை விட்டுக் கொண்டு இருந்தாள் கவிப்ரியா.

"ஏய் கேப்ஸி மூக்கி! எவ்வளவு ஃபீல் பண்ணி என் லவ்வை சொல்லிட்டு இருக்கேன். அங்க என்னத்தடீ நோண்டிட்டு இருக்க!" என்று கேட்டவனை "இங்க வா!" என்று அழைத்தாள் கவிப்ரியா.

"இதென்னன்னு தெரியுதா?" என்று கேட்டவளிடம், "ம் காய்ஞ்சு போன பூ! எதுக்குடீ இதைப் போய் இவ்வளவு பத்திரமா வச்சுருக்க?" என்று கேட்டு அந்த பூவைப் பார்த்து கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

"இது குறிஞ்சிப்பூ நந்து, ரெண்டு தடவை தான் டார்லிங் எனக்கு குடுத்திருக்காரு! போன வருஷம் ஒண்ணு, அதுக்கு 12 வருஷம் முன்னாடி ஒண்ணு, உனக்கு ஸ்பெஷலானவங்க யாருக்காவது ஏதாவது ஸ்பெஷல் டே அப்போ குடுன்னு சொன்னாரு. எனக்கு ஸ்பெஷலானவன்னா அது நீ தான். இன்னிக்கி நமக்கு ஸ்பெஷல் டே தான். ஸோ இதை என் கிப்டா ரொம்ப பத்திரமா நீ வச்சுக்கணும். அடுத்து 11 வருஷம் கழிச்சு தான்டா கிடைக்கும்!" என்று கவிப்ரியா சொல்ல ஜீவானந்தனின் மனதிற்குள் கோடிப்பூக்களின் வாசம் வீசியது. அவளைக் கட்டித் தழுவிக் கொள்ள பரபரத்த கைகளை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு,

"ஏய் மூக்கி! இதெல்லாம் செல்லாது. எங்கப்பா உனக்கு குடுத்த கிப்டை நீ எனக்கு குடுத்தா அதை அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன். வேற கிப்ட் குடுடீ!" என்றான் முகத்தில் கோபம் காட்டி.

"வேற கிப்ட் தானே...... குடுத்துட்டா போச்சு!" என்று தலையை ஷெல்புக்குள் விட்டவளை விசித்திரமான பாவத்துடன் பார்த்தவன்,

"இவ என்ன ஜீனி பூதமா? கேக்க கேக்க இதோ தர்றேன், இதோ தர்றேன்ங்கிறா. அப்படி என்னத்தை கிப்டா குடுக்க போறான்னு தெரியலையே......" என்று யோசித்து கொண்டிருந்தவன் கைகளில் ஓர் ஆல்பத்தையும், சில சிடிக்களையும் நீட்டினாள் கவிப்ரியா.

"இது தான் உன் கிப்டா?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன் தலையாட்டி விட்டு, "இதெல்லாம் என்ன போட்டோஸ் தெரியுமா? நீ மலையில இருந்து சென்னை வந்ததுல இருந்து அங்கே நடந்த பங்ஷன்ஸோட போட்டோவும், சிடிஸ் கலெக்ஷனும். திறந்து பாரேன்!" என்று சொன்னவளின் ஆர்வமான முகத்தை கஷ்டப்படுத்தி சூழ்நிலையை சிரமமாக்க மனமில்லாமல் அரை மனதாக ஆல்பத்தை பிரித்தான் ஜீவானந்தன்.

"இந்த ஆல்பம் ராகவ் கிட்ட சொல்லி ஸ்பெஷலா ரெடி பண்ண சொன்னது நந்து. இந்த எல்லா போட்டோஸ்லயும் அந்தந்த வயசுல நீ இருப்ப. நீ திரும்பி வந்து குடும்பத்துடன் சேரும் போது எதையும் மிஸ் பண்ணிட்டோம்ங்கிற ஃபீல் வரக் கூடாது இல்லையா..... அதுக்காக தான் இந்த போட்டோஸ். முன்ன நடந்த பங்ஷனையெல்லாம் நீ இருக்கும் போது ஹாண்டி கேம்ல ஷுட் பண்ணுவியே அந்த மாதிரி இதுவும் நீ எடுத்தது அதுனால நீ அதுல இல்லன்னு நினைச்சுக்க; ஆனா நீ இல்லாம எல்லாரும் ஒவ்வொரு விதத்தில தவிச்சுக்கிட்டு தான் இருந்தாங்கன்னு காட்டுறதுக்கு தான் இந்த சிடி எல்லாம்! இந்த கிப்ட் ஓகேவா நந்து!" என்று கேட்டவளை ஒரு மௌன போராட்டம் மனதில் நடந்து கொண்டிருக்க அதை தனியாக தாங்கும் வலுவில்லாமல் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் ஜீவானந்தன்.

கண்ணீரும் அதைத் தடுத்த கரங்களின் ஆதரவும், முத்தங்களும் அதைத் தடுக்க வெட்கமும் வார்த்தைகளில் சொல்ல முடியாத பல வருடங்களின் காதலை இருவருக்குமே உணர்த்தியது.

"ஏய்......இன்னிக்கி நம்ம என்கேஜ்மெண்ட்ன்னு சொன்னியே..... அது நடக்கப் போகுதா? இல்ல கிளம்புவோமாடா?" என்று கேட்டவளிடம் கோபத்துடன்,

"ஏன்டீ கொள்ளிவாய் பிசாசே! மனசுக்குள்ள இவ்வளவு லவ்வை வச்சுட்டு எப்படிடீ உன்னால எப்போ பார்த்தாலும் என்னை முறைச்சுட்டு இருக்க முடிஞ்சது......?" என்று கேட்டான் ஜீவானந்தன்.

"சும்மா சும்மா முறைச்சுட்டு இருந்தா நீ சீக்கிரம் வந்து பேசுவன்னு நினைச்சேன் மச்சான்!" என்று கண்சிமிட்டினாள் கவிப்ரியா.

"செய்வடீ......இதுவும் செய்வ; இன்னமும் செய்வ! அம்முலு ட்ரெஸ் நல்லாயிருக்கா..... என்கேஜ்மெண்ட் ன்னா அழகான ட்ரெஸ் போட வேண்டாம்?" என்று சந்தேகம் கிளப்பிய ஜீவாவிடம்,

"ஆமால்ல ஒரு நிமிஷம் இரு!" என்று சொல்லி விட்டு மறுபடியும் ஷெல்புக்குள் தலையை விட்டுக் குடைந்து கொண்டு இருந்தாள் கவிப்ரியா.

"அடியேய்.......என்னடீ ஆ ஊன்னா அதுக்குள்ள தலையை விட்டுக்குற....உன் ரகசிய சுரங்கம் ரொம்ப பெருசா இருக்கும் போலிருக்கு!" என்று கேட்டவனிடம் புன்னகையுடன்,

"நம்ம புள்ளைங்க கல்யாணம் வரைக்கும் உங்கிட்ட குடுக்கறதுக்கு என் கிட்ட கிப்ட் ரெடியா இருக்கு. என்ன உன்னோடது மாதிரி காஸ்ட்லியானதா இருக்காது. பட் டச்சிங் ஆ இருக்கும்! இந்த சூட் நீ கையில க்ளாஸ் குத்தி வீட்டுக்கு வந்தியே....அப்போ உனக்கு தெரியாம அளவெடுத்து தச்சது" என்று பேசிக் கொண்டே அவனிடம் ஒரு கோட் சூட்டை நீட்டினாள் கவி. அவளின் இந்த பதிலில் ஜீவானந்தன் சற்று ஆடித் தான் போனான்.

"அம்முலு! நீயும் உன் கலெக்ஷன்ல இருந்து பெஸ்ட்டா ஏதாவது செலக்ட் பண்ணி போட்டுட்டு ரெடியா இரு! நான் டூ செகண்ட்ஸ்ல வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு சென்றான்.

இருவரும் சேர்ந்து மாலை மாற்றி, பின்னர் மோதிரம் மாற்றி, இவ்வளவு நாள் இல்லாமல் இவனது மனதை அவளும், அவளது மனதை இவனும் புரிந்து கொண்டு நிச்சயதார்த்தம் இனிதாக நிறைவடைந்து தங்கள் குடும்பத்தினருடன் தனக்கும், கவிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்று ஜீவானந்தன் மகிழ்ச்சியாக அறிவித்து போட்டோக்களை அனைவருக்கும் அனுப்பி வைத்த பொழுது பார்கவை தவிர அனைவரது மனதிலும் கோபம் வராமல் நிம்மதி தான் நிறைந்தது. இரண்டு நாட்களுக்கு பின்னர் கவியின் பேஷன் பாரேடும் எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் அமைதியாக நடந்தேறியது.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro