💟 ஜீவாமிர்தம் 24
அன்று காலையில் ஜீவா விழித்தெழும் போது எட்டு மணியாகி விட்டது. இனியாவை எப்படி ராசு வந்து கூப்பிட்டதும் அனுப்பி வைக்கலாம் என்று தன் தந்தை, தாய், சித்தப்பா மூவரையும் வறுத்தெடுத்து விட்டு, ராசுவையும் கூப்பிட்டு அவனிடமும் இரண்டு முறை குதித்து விட்டு இனியா பத்திரம் பத்திரம் என்று நூறு முறை சொல்லி விட்டு அவன் படுப்பதற்கே இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகி விட்டது. மலையில் அவனை எழுப்பி விடும் அலாரம் ஆறு மணிக்கு அலற அதை தலையில் குட்டி விட்டு போர்த்திக் கொண்டு மறுபடியும் உறங்கி விட்டான்.
"ஜீவாம்மா இன்னும் பெட்டை விட்டு எழுந்திரிக்க மனசு வரலையா? வேக் அப் மேன்!" என்று போர்வையை உருவிய அர்ஜுன், "அடச்சீ...... என்னடா கருமம் இது? ஒரு பெர்முடாவாவது போட்டு தொலையேன்! எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டு இத்துணூண்டு ஷார்ட்ஸை போட்டுட்டு சுத்துது பாரு! இந்தா காஃபி, ஃப்ரெஷ் ஆகிட்டு மறக்காம பல் தேய்ச்சுட்டு குடிப்பியாம். உங்கத்தை உன்கிட்ட சொல்லச் சொன்னா. சொல்லிட்டேன்! மாமா காலேஜ்க்கு கிளம்பட்டுமா......?" என்று கேட்டவரிடம் லேசான முணகலுடன் உடம்பை நெளித்து சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தவன், "வந்ததுல இருந்து பாயிண்ட் பாயிண்டா இவ்வளவு பேசினியே.....எனக்கு ஒத்த குட்மார்னிங் சொன்னியா? உன் முகத்தில முழிச்சுருக்கேன். இன்னிக்கி நாள் எப்படி இருக்கப் போகுதோ.....இல்ல நான் தெரியாம கேக்குறேன்! ஒரு யங் ஹாண்ட்ஸம் மேனோட ரூமுக்குள்ள பெர்மிஷன் இல்லாம எண்ட்ரி குடுத்துட்டு எவ்வளவு தைரியம் இருந்தா பெட்ஷீட்டை வேற உருவி எடுப்ப? ஒரு வேளை இதுக்குள்ள அம்முலுவும் என் கூட இருந்தா நீ என்ன பண்ணியிருப்ப மாமு........ அவ இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் என் ரூமுக்கு வந்திருந்தா. சொல்ல சொல்ல கேக்காம ரூமுக்குள்ள வந்து, பெட்ல என் பக்கத்துல படுத்துட்டு எழுந்துரிச்சு போக மாட்டேன்னு ஒரே அடம்! அப்புறம் நான் தான் அவளை கொஞ்சி கிஸ் எல்லாம் குடுத்து, அவ கால்ல........!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனிடம் நிறுத்துமாறு சைகை செய்த அர்ஜுன்,
"அவ கால்ல விழுந்து சீக்கிரம் என்னைய கல்யாணம் பண்ணிக்கம்மா; இல்லன்னா நான் இப்படி புலம்பி புலம்பி லூசாகிடுவேன்னு சொல்லி தொட்டு கும்பிட்டியாக்கும்...... அறிவு கெட்டவனே கவிம்மா நைட் வீட்டுக்கு வரவேயில்லைடா! இதுல அவ கூட இவரு பெட்ல படுத்தாராம். கொஞ்சுனாராம். கிஸ் கொடுத்து கால்ல விழுந்து கும்பிட்டாராம்; ஏன் ஜீவாம்மா இந்த மனப்பிராந்தின்னு ஏதோ சொல்றாங்களே..... அது இது தானோ?" என்று கேட்டு சிரித்த அர்ஜுனிடம்,
"ஐயோ..... கிண்டல் பண்ணாத அஜு மாமா; நான் நிஜமாவே அம்முலுவுக்கு கால் விரல் பிடிச்சு நெயில் பாலிஷ் எல்லாம் போட்டு விட்டேன். லாவண்டர் ஷேட் அது கூட எவ்வளவு தெளிவா நியாபகம் இருக்கு. அது கனவா இருக்காது. நீ தான் பொய் சொல்ற!" என்று தன் மாமனை திட்டியவனிடம்,
"சரி தான்..... போதை இன்னும் தெளியலை போலிருக்கு! ஜீவாம்மா நீ என்ன பண்ற..... ப்ரெஷ் ஆகிட்டு காஃபி குடிச்சிட்டு, நல்லா குளிச்சிட்டு கீழே வா. உங்க மீராத்தை கிட்ட மந்திரிக்கிறவங்க யாராவது தெரியுமான்னு கேட்டு வைக்கிறேன். உன்னை கூட்டிட்டு போய் ஒரு தடவை காட்டிட்டு வருவோம்!" என்று சொன்ன அர்ஜுனை முறைத்தவன் கவிப்ரியாவை மொபைலில் அழைத்தான்.
"ஹ............லோ!" என்று தூக்கக் குரலில் பேசியவளிடம்,
"அம்முலு எங்கடா இருக்க? மேல ரூமுக்கு வா!" என்று சொன்னான் ஜீவா.
"நந்து.....நான் இன்னும் ஷாப்ல தான் இருக்கேன்.....எல்லா டிஸைன்ஸும் ரெடி பண்ணி.... தூக்கமா வருது. அப்புறம் பேசட்டுமா?" என்று கேட்டவள் கொட்டாவியுடன் அழைப்பை கட் பண்ணினாள்.
சற்றே அசடு வழிய அர்ஜுனின் முகத்தை பார்த்தவனிடம் ஒற்றைப் புருவத்தூக்கலுடன், "என்ன ஸார்..... கல்யாணம் பண்ற வயசுல இந்த மாதிரி கனவெல்லாம் சகஜம் தான்! ஆனா நீ கண்டது கனவுன்னு ஒத்துக்காம நான் பொய் சொல்றேன்னு சொல்லி அடம் பிடிக்குற பார்த்தியா... அது தான் சிரிப்பு வருது! நீயும் அடமெண்ட், கவிம்மாவும் அதே கேரக்டர் தான்..... உங்க மேரேஜ் லைஃப் எப்படி இருக்கும்னு நினைச்சா கொஞ்சம் பயமாயிருக்குடா ஜீவா......" என்று உண்மையில் சற்று பயத்துடன் பேசியவரிடம்,
"மாமா எங்களுக்குள்ள சண்டையே நடக்காதுன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன்! அங்க பண்ணையார், இங்கே நீ, ராமுத்தம்பி உங்க பொண்டாட்டிங்க கூட போடுற சண்டை எல்லாம் நாங்களும் பார்த்துட்டு தானே இருக்கோம்! மாங்கு மாங்குன்னு சண்டை போட்டுட்டு அப்புறம் உங்க தர்ம பத்தினிங்கள சமாதானம் செய்றதுக்கு தொங்கிட்டு இருக்கிற ஒரு கூட்டம் நம்ம வீட்ல இருக்கு பார்த்தியா.....அந்த ஜோதியில திருவாளர் ஜீவானந்தனும் ஐக்கியமாகிடுவார். அவ்வளவு தான்! என் வேலையெல்லாம்
முடிஞ்ச பிறகும் இவ்வளவு நாள் சென்னையில ஓபி அடிச்சுட்டு சுத்திக்கிட்டு இருக்கிறது எதுக்குன்னு நினைச்ச..... அம்முலு ஒவ்வொரு நாள் நைட்டு தூங்கப் போகும் போதும் நாளைக்கு ஒரு நாள் மட்டும் கூட இருக்கியாடான்னு கேட்குறதால தான்.... இதுக்காக தானே ஒரு காலத்துல ஏங்கிட்டு இருந்தேன்..... அவ கொஞ்சம்
முகம் சுளிச்சா கூட என்னால தாங்கவே முடியல மாமா!" என்று சொன்னவனை ஒன்றும் பேசாமல் அணைத்துக் கொண்டார் அர்ஜுன்.
"ஷர்ட் கசங்கிடப்போகுது ஹெச்ஓடி ஸார்!" என்று சிரிப்புடன் சொன்னவனிடம் கவலைக்குரலில்,
"பாகி மேட்டர் என்னடா ஆச்சு? எங்களை மாதிரியே நீங்களும் உங்கள் காதல்ல ஒரு புரிதலோட இருக்கிறத பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்குடா ஜீவாம்மா! அந்த பொண்ணோட அப்பன் ரொம்ப குடைச்சல் குடுத்தான்னா அந்த பொண்ணை கிளம்பி வந்துடச் சொல்லுடா! ராம் எல்லாம் கொண்டாட ஒரு பொண்ணு இல்லையேன்னு கவலைப்பட்டுட்டு இருக்கிறவன். பாசம் காட்டாத இடத்தில எதுக்கு நம்ம மருமக பொறுத்துட்டு இருக்கணும்...... அபியை ரெண்டு பேரும் சேர்ந்து தூக்கிடுங்க. என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்!" என்று சொன்னவரின் மீசையை தடவி விட்டவன்,
"எப்போலேர்ந்து நீ இப்படி வீர வசனமெல்லாம் பேச ஆரம்பிச்ச அஜு....... ஆமா அதென்ன நம்ம மருமக; அபிநயா உங்க ரெண்டு பேருக்கும் தான் மருமக. ஸோ சுவர் ஏறிக் குதிக்கிற வேலையெல்லாம் அண்ணனும், தம்பியும் கூட பண்ணலாம் தப்பில்ல. சும்மா நொசநொசன்னு பேசி என் டைமெல்லாம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத. காஃபி ஆறிடுச்சு. இதை சூடு பண்ணி நீ குடிச்சிட்டு எனக்கு ப்ரெஷ்ஷா போட்டு வை. ஐயா அவர் டார்லிங்க பார்க்க இன்னும் 15 மினிட்ஸ்ல "அவள்" கிழிச்சு தைக்கிற பட்டறைக்கு கிளம்பப் போறாரு. அதுக்குள்ள ப்ரேக் பாஸ்ட் ரெடியா இருக்கணும். யூ கேன் லீவ் நவ்!" என்று சொல்லி விட்டு விசில் ஒலியுடன் பாத்ரூமிற்குள் நுழைந்தவனை பார்த்து சிரித்து கொண்ட அர்ஜுன் இனிமேலாவது தன் மருமகனின் முகத்தில் தெரியும் ஆனந்தம் அப்படியே நிலைக்கட்டும் என பிரார்த்தனை செய்து விட்டு வெளியே சென்றார்.
ஜீவா குளித்து விட்டு தயாராகி வந்த போது காலை உணவு அவனுக்காக சுடச்சுட டேபிளில் தயாராக இருந்தது.
"குட்மார்னிங் ஜீவாக்குட்டி!" என்று புன்னகையுடன் சொன்ன தன் அத்தையின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியவன், "என்ன மீரு பார்த்துக்கிட்டே நிக்குற..... இட்லியா இருந்தா சாம்பாருக்குள்ள போடு; இடியாப்பமா இருந்தா தேங்காய் பாலுக்குள்ள போடு; அதெல்லாம் எடுத்து ஒரு பௌல்ல போடு. அப்புறமா எல்லாத்தையும் என் வாய்க்குள்ள போடு. ஆமா..... இது என்ன எப்பவும் இல்லாத புதுப்பழக்கமா இருக்கு, கவிப்ரியா மேடம் நைட் ஷாப்ல ஸ்டே பண்ணியிருந்தாங்களாம். ஒழுங்கா சாப்பிட்டாளோ..... என்னவோ; அவளுக்கும் கொஞ்சம் பேக் பண்ணி குடு அத்தை, அந்த கழுதைக்கு நா ஊட்டி விட்டுட்டு அவ காதைப் பிடிச்சு இழுத்துட்டு வர்றேன். அப்படி என்ன நேரம், காலம் பார்க்காம கமிட்மெண்ட் வச்சுக்கறது?" என்று சற்று எரிச்சலுடன் கேட்டவனிடம்,
"நேரம், காலம் பார்க்காம உன்னைய கொஞ்சிட்டு இருந்தா, அப்புறம் வேலையையும் நேரம் காலம் பார்க்காம தான் செய்யணும். ஷைலுட்ட பேசினியா ஜீவாக்குட்டி..... இனியாவும் இல்லாம ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ண போறாடா! சீக்கிரம் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லி அண்ணா கிட்ட பேசணும்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவரின் பேச்சை காதில் வாங்காமல் ஜீவா "பேலன்ஸிங்" கேமில் கவனமாக இருக்க அவனுடைய மொபைலை பிடுங்கி ஓர் ஓரமாக வைத்து விட்டு, "நான் பேசினத காதுல வாங்கினியா? இல்லையா? ஷைலு மேட்டர் பத்தி அப்பா கிட்ட பேசுன்னு சொன்னேன்!" என்றவரை,
"ம்ப்ச்! என்ன மீரு ஸ்டேட்மெண்டை மாத்தி மாத்தி பேசிட்டு இருக்க...... ஷைலு மேட்டர நீ பேசுறியா? நான் பேசட்டுமா? போதும் வயிறு ஃபுல்! இதுக்கு மேல ஒரு வாய் சாப்பாடு கூட வாங்க முடியாது. இட்லிக்கு சாம்பார், சாம்பாருக்கு இட்லின்னு கேம் ஆடாத!" என்று சொன்ன படி தண்ணீரை அருந்தினான்.
ஜெய் நந்தன் ஜீவாவை மொபைலில் அழைக்க மீராவிடம் ஜீவா, "அப்பாட்ட நீயே பேசிடு அத்தை, நான் பேசினா இன்னும் ஊருக்கு கிளம்பலையான்னு செம ரைடு விழும்!" என்று சொன்னான்.
மீராவும் ஜெய் நந்தனிடம் சற்று நேரம் அளவளாவி விட்டு, "இந்தா ஏதோ முக்கியமான விஷயம் உன் கிட்ட பேசணும்னு அண்ணா சொல்றாங்க!" என்று அவனிடம் மொபைலை நீட்ட ஜீவாவின் புருவங்கள் யோசனையுடன் சுருங்கியது.
"சொல்லுங்கப்பா!" என்று நேராக விஷயத்திற்கு வந்தவனிடம்,
"ஆனந்த்..... என் ப்ரெண்டு கௌதமன் அவன் வொய்ப் ராகினி உனக்கு தெரியும்ல..... நம்ம மீராத்தை வீட்டுக்கு அவர் பையன் மேரேஜ்க்கு இன்வைட் பண்ண வந்திருந்தாங்களே..... உனக்கு நியாபகம் இருக்குல்ல?" என்று கேட்ட தன் தந்தையிடம்,
"நல்லா நியாபகம் இருக்குப்பா. மிஸ்டர் பவின் ரொம்ப நல்லா பேசினாரே.... அந்த ஆன்ட்டி, அங்கிள் கூடத் தான்! கெஸ்ட் வந்திருக்காங்கன்னு ஒரு அன்கம்பர்டபிள் ஃபீல் வரவேயில்ல. நம்ம பேமிலியில ஒருத்தர் மாதிரி தான் தோணுச்சு. பவின் கல்யாணத்துக்கு நம்ம எல்லாரும் பேமிலியோட போயிட்டு வரணும்ப்பா!" என்றவனிடம் தயக்கத்துடன்,
"அந்த மேரேஜ் ப்ளானை ட்ராப் பண்ணிட்டாங்களாம் ஆனந்த், அந்த பொண்ணு ஏதோ மாடலிங் எல்லாம் பண்ணுவாளாம். இப்போ சினி பீல்டுலயும் சான்ஸ் கிடைச்சிருக்காம். அதனால பவினை மாதிரி ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பையனை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டாளாம். கௌதம் போன் பண்ணி என் கிட்ட அழறான். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நீ உன்னால முடிஞ்சா ஒரு தடவை போய் கௌதம், பவினுக்கு ஆறுதல் சொல்லிட்டு வர்றியாப்பா?" என்று கேட்ட தன் தந்தையிடம் சில நிமிடங்கள் பேசாமல் அமைதியாக இருந்த ஜீவா,
"அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கட்டுமா? இப்போ யாரு செத்துப் போயிட்டாங்கன்னு என்னைப் போய் ஆறுதல் சொல்லிட்டு வரச் சொல்றீங்க? மேரேஜ்ங்கிற ஒரு ரிலேஷன்ஷிப் அவளுக்கு பெரிசா தெரியல. ஒரு பையன் அவ மேல வச்சிருந்த காதல், நம்பிக்கை இதல்லாம் பெரிசா தெரியல. ஒரு குடும்பத்தில நடக்க இருந்த ஒரு பங்ஷன் நின்னு போச்சுன்னா அந்த பேமிலியில இருக்கிற ஒவ்வொருத்தர் மனசும் என்ன பாடுபடும்ங்கிற ஒரு ஃபீல் கூட இல்ல; இந்த மாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்ணினதுக்காக மிஸ்டர் பவின் எல்லாருக்கும் பார்ட்டி குடுத்து இந்த அக்கேஷனை செலிபரேட் பண்ணலாம்! நான் கண்டிப்பா ஒரு நாள் அவங்க வீட்டுக்குப் போறேன்ப்பா! என் தங்கச்சிக்கு அவங்க பையனை மேரேஜ் பண்ணி தருவாங்களான்னு ஒரு கேள்வியையும் எக்ஸ்ட்ராவா கேட்டுட்டு வரட்டுமா?" என்றான் ஜீவானந்தன் அமைதியாக.
"என்ன ஆ.....ஆனந்த் திடீர்னு இப்படி ஒரு கேள்விய கேக்குற! இது சரியா வருமாப்பா?" என்று கேட்ட ஜெய் நந்தனிடம்,
"எப்படியும் மிஸ்டர் பவினுக்கு ஒரு பொண்ணு பார்க்கத் தான் போறாங்க. வொய் நாட் ஷைலு? தோணுச்சு; கேட்டுட்டேன். பட் இது சரியா வருமா இல்லையான்னு எல்லாம் நம்ம ஷைலுவும், பவினும் தான்ப்பா சொல்ல முடியும்!" என்றான் ஜீவானந்தன் அமைதியாக.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro