Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 22

"கீதும்மா இவ அபிநய சரஸ்வதி, எனக்கு மட்டும் வாணி; நீங்கல்லாம் அப்படி கூப்பிடக் கூடாது; இவ தான் 16 வயசுல இருந்தே என்னோட இதய தேவதை, நடுவில கொஞ்சம் பக்கத்த ரெண்டு பேரும் மிஸ் பண்ணிட்டோம். பட் அது ஒண்ணும் பிரச்சனை இல்ல. இனிமே புதுசா நிறைய ஸீன்ஸ் எழுதிக்கலாம் இல்ல வாணி?" என்று கேட்ட பார்கவை முறைத்து விட்டு கீதாவிடம் வந்தாள் அபிநயா.

"ஹலோ ஆன்ட்டி.....என் பேரு அபிநயா; 2 வருஷமா காலேஜ்ல அஸிஸ்டென்ட் புரபொஸரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். கவி சொல்லி உங்கள பத்தி நிறைய கேள்விபட்டிருக்கேன். ஆனா இதுவரைக்கும் மீட் பண்ண சான்ஸ் கிடைக்கல. என் தங்கச்சிக்கு மேரேஜ் அரேன்ஜ் பண்ணியிருக்காங்க. இங்க தான் ஜ்வல்ஸ் ஆர்டர் பண்ணியிருந்தோம். அதை கலெக்ட் பண்ணிட்டு அப்படியே உங்களையும் அங்கிளையும் பார்த்து பேசிட்டு போகலாம்ன்னு நினைச்சு தான் வந்தேன். ஆனா இவரை இன்னிக்கு மீட் பண்ணுவேன்னு நினைக்கல. உங்க புள்ளைய இத்தன வருஷமா தவிக்க விட்ட ராட்சஸி நான் தான்! உங்களுக்கு என் மேல செம கோபம் வரும்ல ஆன்ட்டி.....?" என்று தலைசரித்து கேட்ட அபிநயாவிடம் மென்சிரிப்புடன்,

"வெல்கம் அபி! உன் மேல நான் எதுக்கும்மா கோபப்படணும்? மோர்ஓவர் உன்னோட சிச்சுவேஷன், என் பையன எதுக்கு ரிஜெக்ட் பண்ணினங்கிற காரணம் எதுவுமே எனக்கு தெரியாதுல்ல..... அதெல்லாம் தெரிஞ்சா தானே யார் மேல தப்பு இருக்குன்னு ஒரு முடிவுக்கு வர முடியும்?" என்று கேட்ட தன் தாயிடம்,

"ம்ம்ம்ம்மா...... எவ்வளவு வருஷம் கழிச்சு மீட் பண்ணியிருக்கோம். கொஞ்ச நேரம் இவ கூட பேசலாம்னு நினைச்சா நீயே எல்லா டைமையும் திருடிக்குவ போலிருக்கு! ரெண்டு பேரும் நம்பர் ஷேர் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் நீங்க பேசணும்னு நினைக்குற கதையெல்லாம் பேசி முடிங்க. வாணி நீ முதல்ல எங்கிட்ட உன் நம்பரை ஷேர் பண்ணு!" என்றான் பார்கவ் அவளைப் பார்த்து. 

"மிஸ்டர் பார்கவ், அபிநயான்னு பேரு இருக்கிற எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.... ப்ளா ப்ளா ப்ளான்னு அன்னிக்கு நிறைய டயலாக் எல்லாம் விட்டீங்களே...... அதெல்லாம் இன்னிக்கு காத்தோட பறக்க விட்டுட வேண்டியது தானா?" என்று புன்முறுவலுடன் கேட்ட தன் தாயிடம் ஒரு கோபப்பார்வையை கொடுத்தவன்,

"பிறந்ததுல ஆரம்பிச்சு நீ எல்லாத்துலயும் முந்திரிக் கொட்டை தான் கீதும்மா! லவ்வர்ஸ் க்வாரல்னா அப்படித்தான் இருக்கும். இன்னிக்கி ஒண்ணு பேசுவேன்! நாளைக்கு அதை ரப்பர் வச்சு அழிச்சுட்டு என் லவ்வர்ட்ட ஸாரி கேட்டுக்குவேன். இப்படி எல்லாம் மேட்டர போட்டுக் குடுத்தன்னா இனிமே உனக்கும், ராமுக்கு‌ம் சண்டை வரும் போது நான் தூது போக மாட்டேன் பார்த்துக்கோ!" என்று தன் தாயிடம் விரல்களால் பத்திரம் காட்டியவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் அபிநயா.

"அம்மாவும், பையனும் சண்டை போட்டுக்குறாங்க. பட் அது கூட எவ்வளவு இயல்பா இருக்கு. எனக்கு இந்த பாசம் எங்க வீட்ல கிடைக்கலையே..... எல்லாருக்கும் தேவைன்னு வரும் போது மட்டும் நியாபகம் வர்ற ஒரு உயிருள்ள மணிமெஷின் மாதிரி தானே இருக்கேன்!" என்று நினைத்தவள் பெருமூச்சுடன் கீதாவிடத்தில்,

"ஆன்ட்டி கவி இடத்தில வேற பையன் இருந்திருந்தா, என்னை என்னெல்லாம் படுத்தியிருப்பாங்களோ தெரியல. உங்க பையன் நிஜமாவே ரொம்ப நல்லவர். எனக்கு எந்த டிஸ்டர்பென்ஸூம் குடுக்கல. என்ன தான் நாங்க டச்ல இல்லைன்னாலும் என்னை பத்தி எல்லா விஷயமும் அவருக்கு தெரியும் போலிருக்கு! யார் கிட்ட இன்பர்மேஷனை வாங்கினார்னு கூட எனக்கு தெரியல!" என்று சொல்லிக் கொண்டிருந்தவளிடம்,

"உன் கொலீக்ஸ் கிட்ட அப்பப்போ ஏதாவது கேட்டுக்குவேன். ஆனா அப்பவும் என்னை விட உனக்கு உன் பேமிலி தான் முக்கியம்னு சொல்லிட்டல்லன்னு உன் மேல கோபமா தான் வந்தது. நீ உங்க பூர்வீக லேண்டை வித்து உன் ஷேர்ல உங்க அக்கா மேரேஜ்க்கு அரேன்ஜ் பண்ணினது, உங்க அப்பாவுக்கு ஹார்ட் ஆப்பரேஷன் பண்றதுக்கு கொஞ்சம் செலவழிச்சது வரைக்கும் தெரியும். அடுத்து எங்க உன் கல்யாணம்னு எதுவும் நியூஸ் சொல்லிடுவாங்களோன்னு பயத்துல கொஞ்ச நாளா உன் பிரெண்டை நான் மீட் பண்ணவேயில்ல. இப்போ மேடம் தங்கச்சி மேரேஜ்  இன்விடேஷனோட வந்துட்டீங்க. கையில இருக்கிற கேஷ் போதுமா? இல்ல நம்ம பணத்தில இருந்து நான் வேணும்னா கொஞ்சம் போடட்டுமாடா.....?" என்று கேட்டவனிடம் கண்களில் நீருடன் மறுத்து தலையாட்டியவள்,

"தேவையான அளவு ரெடி பண்ணிட்டேன் கவி! ஷேர் பண்ணிக்கிறேன்னு கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். எ.....எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும் கவி.....ப்ளீஸ்!" என்று கேட்டவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான் பார்கவ்.

தண்ணீரை குடித்து தன்னை சற்று சமன் செய்து கொண்ட அபிநயா, "ஆன்ட்டி ஜ்வல்ஸ் ரெடின்னா வாங்கிட்டு நான் கிளம்பணும்!" என்றாள்.

சிறிது கூட விலைக்குறைப்பு செய்ய விடாமல் பார்கவை தடுத்தவள் கீதா கடவுளை வேண்டிக் கொண்டு நகைகளை கொடுக்கவும் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டாள். பார்கவிடம் புன்னகையுடன்  விடைபெற்றவள்

"என்ன ப்ளோர்ல எம்ப்ளாயீஸ் யாரையும் காணும்? எங்க போயிட்டாங்க?" என்று கேட்டாள்.

"எல்லாருக்கும் டீ ப்ரேக் குடுத்து கீழே அனுப்பிட்டேன். மை டியர் மம்மி; நீ சுவிட்ச் போர்டு கிட்ட போய் உட்கார்ந்துட்டு ரெண்டு ரெண்டா சுவிட்ச்ஸசை ஆஃப் பண்ணி ஆன் பண்றியா..... நான் வாணி கிட்ட மறுபடியும் ப்ரப்போஸ் பண்ணிக்குறேன்!" என்று பார்கவ் கேட்க அபிநயா வெட்கச்சிரிப்புடன் குனிந்து கொண்டாள்.

"இந்த விளக்கமாறு எங்க வச்சிருந்தாங்கன்னு தெரியலையே.... அபி நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத; இந்த மாதிரி கான்வெர்ஷேஸன் நமக்குள்ள இனிமே நிறைய நடக்கும். நீ டென்ஷன் ஆக வேண்டாம்!" என்று சொல்லி விட்டு தன் மகனை எரிச்சலுடன் பார்த்து கொண்டு நின்றவரிடம் சிரிப்புடன்,

"எவ்வளவு கொழுப்பு இருந்தா அவர் ப்ரப்போஸ் பண்றதுக்கு உங்கள வேலை வாங்குவாரு..... நானும் உங்க சைடு ஸப்போர்ட் தான் ஆன்ட்டி; இவரை வீட்டுக்கு போய் நீங்க நல்லா உதைக்கணும்!" என்று சொல்லி விட்டு கண்களில் சிரிப்புடன் அவனைப் பார்த்தவளிடம் கோபமாக,

"ஏய் என்ன ரெண்டு பேரும் ஒரே டீம் ஆகுறீங்களா.... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. ஏற்கனவே சரஸ் பாட்டி கூட சேர்ந்துட்டு எங்கம்மா இம்சை தாங்க முடியல. இப்போ ஆடிங் நியூ க்ரூப் மெம்பர் அபிநய சரஸ்வதியுமா..... அட்லீஸ்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போயாவது சாத்த சொன்னியே..... ரொம்ப நல்லாயிருப்பம்மா!
டேய் பார்கவா என்னடா இது உனக்கு வந்த சோதனை?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான் பார்கவ்.

கீதாவிடம் விடைபெற்று வெளியே வந்தவளை வாசல் வரை வந்து வழியனுப்பியவன், "வாணிம்மா இனிமே எதுக்காகவும் நீ ஃபீல் பண்ணக் கூடாது. உன் கண்ணுல கண்ணீரைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் இனிமே அழாத. சரியா? நான் வீட்ல எல்லார்ட்டயும் பேசிட்டு சீக்கிரமே உங்க வீட்ல வந்து உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறேன்! உனக்காக என்னோட கான்ட்ரிப்யூஷன் ஒரு 50 பவுன் பக்கத்தில இருக்கும்னு நினைக்கிறேன். உங்கப்பா ஓகே சொல்லிடுவாருல்ல....?" என்று கேட்டு புருவம் தூக்கியவனிடம்,

"கவி இன்னும் எதுவுமே மாறல. ரெண்டு கல்யாணம் மட்டும் தான் முடிச்சு வச்சுருக்கேன். மத்தபடி உங்களுக்கும் எனக்கும் நடுவில மேலயும், கீழேயுமா இருக்கிற ஸ்டேட்டஸ், பேமிலி பேக்ரௌண்டு,
எங்கப்பா, எங்க சிஸ்டர்ஸ்,
இந்த எல்லா பிரச்சனையும் தாண்டி நம்ம ஒண்ணா சேருவோம்னு உங்களுக்கு தோணுதாப்பா? நா எந்த தைரியத்தில உங்க கிட்ட கல்யாணத்தை பத்தி பேசுனேன்னு தெரியல...... கொஞ்சம் பயமாயிருக்கு  கவி!" என்று சொல்லி தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து ஹெல்மெட்டை கையில் எடுத்துக் கொண்டவள் இடுப்பில் கிள்ளினான் பார்கவ். சட்டென்று சிலிர்த்து வண்டியை ஒழுங்காக பற்றிக் கொண்டு விழுந்து விடாமல் அவனை முறைத்தவளிடம்

"சும்மா சும்மா கண்ணை உருட்டாத. ரொம்ப நேரமா கண்ணுல பட்டு என்னை டெம்ப்ட் பண்ணிட்டே இருந்தது. அதனால தான் பிஞ்ச் பண்ணிட்டேன். உங்கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும். முதலாவதும், முக்கியமானமானதும் என்னன்னா வீட்ல என் தங்கச்சி, என் மாமா பையன் ஜீவா முன்னாடி என்னைய கவின்னு கூப்பிட்டுடாத. ரெண்டும் சாமியாடிடுங்க. எங்க வீட்ல எல்லாருக்கும் அவ தான் கவி, எல்லாரும் இருந்தா ஜஸ்ட் வாங்க, போங்கன்னு மெயின்டெய்ன் பண்ணிக்கோ. அப்புறம் தேவையில்லாம மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத; எட்டு வருஷம் ஒரு கட்ஸோட பிடிவாதமா இருந்து உன் பேமிலிக்கு எல்லாம் செட்டில் பண்ணி குடுத்தாச்சு. இனிமேலும்  அவங்களுக்கு என்ன வேணுமோ அதை நான் செய்றேன். ஆனா உன்னை எனக்கு அவங்க முகம் காட்டாம சந்தோஷமா கல்யாணம் பண்ணி தரணும்! அவங்க கிட்ட இருந்து அவங்க சம்மதம் மட்டும் தான் எனக்கு வேணும். மத்த எதுவும்..... உன்னை தவிர எதுவுமே எனக்கு வேண்டாம். உங்கப்பா கிட்ட சொல்லிடு. இனிமே டெய்லி காலையிலயும், நைட்டும் என் கூட பேசணும். பார்த்து ஸேஃபா போயிட்டு வா. பை!" என்று கூறி கையசைத்தவனிடம், "பார்க்கலாம் கவி! நீங்களும், நானும் லைஃப்ல ஒண்ணு சேர முடிஞ்சா ரொம்ப சந்தோஷம்! நைட் கூப்பிடுறேன். வர்றேன்!" என்று சொல்லி ஒரு பறக்கும் முத்தத்தை அவனுக்கு தந்து விட்டு கிளம்பினாள் அபிநயா.

"இன்னும் 16 வயசு அபிநயாவா தான்டீ அப்படியே இருக்க; நீ வளர்றதுக்கு எவ்வளவு நாளாகுமோ தெரியல.....!" என்று மனதிற்குள் நினைத்தபடி சிரித்துக் கொண்டு வாயில் படியேறி
உள்ளே சென்றான் பார்கவ்.

அன்று காலையில் எழுந்ததும் ஜீவானந்தனுக்கு தன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. முகம் முழுவதும் குதூகலத்துடன் அழைப்பை எடுத்து, "குட்மார்னிங்ப்பா!" என்றவனிடம் எரிச்சலுடன்,

"என்ன ஆனந்த் கூலா குட்மார்னிங் சொல்ற..... ரெண்டு நாள்ல வந்துடுவேன்னு நீ சொல்லிட்டு போய் அடுத்து ஒரு
அஞ்சு நாள் ஆகிடுச்சு. இன்னிக்காவது கிளம்பிடுவியாம்மா? இங்க ஷைலு ராசு கூட போன் பண்ணி சண்டைக்கு போயிட்டு இருக்கா. ராசு என் கிட்ட போன் பண்ணி காதல் வசனமெல்லாம் புலம்பிக்கிட்டு இருக்கான். உங்க சித்தப்பன் ரோபோ வழக்கம் போல பெண்டு கழண்டு போற மாதிரி ப்ராஜெக்ட்ஸை அசுரத்தனமா பார்த்து எனக்கும் நிறைய வேலை வச்சுட்டு இருக்கான். மாணிக்கம் தாத்தாவுக்கு மறுபடியும் கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு சஹாயனுக்கு போக வேண்டியதாகிடுச்சு.  உங்கம்மா எனக்கு கொஞ்சம் தொப்பை போட்டுடுச்சுன்னு சொல்லிட்டு ஈவ்னிங் டைம்ல சூடா பஜ்ஜி போட்டு தர மாட்டேங்குறா...... நான் ஒத்தை ஆளா இப்படி எத்தனை பேர சமாளிக்குறது? நீ எப்ப கிளம்புற?" என்று கேட்ட தன் தந்தையிடம்

"வொர்க் 90 பர்சன்ட் முடிஞ்சுடுச்சுப்பா! என் ப்ரெண்டுக்கு நம்ம ஆஃபிஸை பக்காவா செட் பண்ணி குடுத்தாச்சு. இங்க உங்க தங்கச்சி பையன் அவர் பழைய அக்கவுண்ட்டை ரெனிவ்யூ பண்ணியிருக்கார். அந்த பொண்ணு வீட்டுக்கு போய் பேசணும்னு சொன்னான்! அதுக்கு போயிட்டு வந்தோம். பட் இந்த விஷயத்துல உங்க ஹெல்ப் தேவைப்படும்னு நினைக்கிறேன்பா!
அம்முலு ஒரு பேஷன் பரேட்ல அவளோட டிஸைன்ஸ எக்ஸிபிட் பண்ணப் போறாளாம். ஸோ அதுக்கு கொஞ்சம் ஸப்போர்ட் பண்ண சொல்லியிருந்தா. உன்னதம் மார்க்கெட் மூவ்மெண்ட், மீரா, கீதா அத்தை கூட ஷாப்பிங், தீராஸ்ல கொஞ்சம் ப்ராக்டிஸ் ன்னு ஒரு வாரம் போனதே தெரியலப்பா! இன்னிக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு மார்னிங் இங்கிருந்து கிளம்பிடுறேன்பா! ஈவ்னிங் வந்துடுவேன். ஓகேவா டாடி?" என்று கேட்டவனிடம் "சீக்கிரம் வந்துடுங்க சின்னவரே..... நீங்க இல்லாம கம்ப்ளீடட் ஃபீல் வரமாட்டேங்குது!" என்று சொன்ன தன் தந்தையின் குரலில் மனப்பூர்வமாக வார்த்தைகளை உணர்ந்து சொன்ன வலி தென்பட்டது ஜீவாவுக்கு. அவரிடம் விரைந்து வந்து விடுவதாக சொல்லி போனை வைத்து விட்டு சற்று நேரம் யோசனையுடன் அமர்ந்திருந்தான்.

அங்கிருந்து வந்ததிலிருந்து வேண்டுமென்று தான் சில பல வேலைகளை காரணம் காட்டிக் கொண்டு இங்கே சுற்றிக் கொண்டு இருந்தான் ஜீவானந்தன். ஆனால் முன்பு போல்  ப்ளாட்டுக்கு கிளம்புகிறேன் என்றவனை கவிப்ரியா, "கொன்னுடுவேன் மரியாதையா இங்கயே இரு!" என்று அதட்டி அமர வைத்து விட்டாள். தந்தை தன்னை தினமும் மிஸ் பண்ணுவதாக சொல்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அன்னை, தங்கைகள் அனைவரும் அவனை மாய்ந்து மாய்ந்து கூப்பிடுவதையும் மிகவும் ரசித்து அனுபவித்து கொண்டிருந்தான். முன்பு  அனைவரின் பாசத்திற்கும் ஏங்கியவன், இப்போது கிடைத்த பாசம் தங்கு தடையின்றி தொடர செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்து கொண்டிருந்தான்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro