💟 ஜீவாமிர்தம் 18
அனைவரும் விருந்து சாப்பிட்டு விட்டு இனியா, ராசுவின் திருமணத்தை எவ்வாறு திட்டமிடலாம் என்று பேசிக் கொண்டிருந்த போது இனியாவின் செல் சிணுங்கியது.
"போன்ல யாருடா லட்டு?" என்று கேட்ட ஜெய் நந்தனிடம், "ரூபி தான் கூப்பிடுறா பெரியப்பா! அவ கிட்ட பேசச் சொல்லியிருந்தா. நான் கூப்பிடல.... அதான் அவ கூப்பிட்டுட்டா; பேசிட்டு வர்றேன் பெரியப்பா!" என்று அவள் சொல்லி விட்டு அனைவரையும் தயக்கத்துடன் பார்க்க ராசு முதல் ஆளாக அவள் முன்பு வந்து,
"மெத்துல போய் பேசு! உன் ஸ்நேகிதி தானே..... கண்டிப்பா நம்பளத்தேன் கூப்பிட்டு ஏசுவாக! நானும் வர்றேனே.....!" என்று கேட்டவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டுக்கு வெளியே வந்து மாடிப்படிகளில் ஏறினாள் இனியா. அவள் பின்னால் ராசுவும் சென்றான்.
இனியா அலைபேசியை அட்டெண்ட் செய்ததும் ராசு அதைக் கையில் வாங்கி ஸ்பீக்கரில் இட அதற்குள் ஷைலஜா பொருமித் தீர்த்து விட்டாள்.
"லட்டு...... என்னடீ யாருமே என்னைய கூப்பிடவேயில்ல...கவியும், பாகி அத்தானும் எனக்கு பத்து தடவை கால் பண்ணிட்டாங்க.
அங்க என்ன தான் நடக்குது? அந்த ஆளுக்கு ஏதாவது பனிஷ்மெண்ட் குடுத்தாங்களா இல்லையா? நீ என்ன முடிவு பண்ணியிருக்க? போடா நீயுமாச்சு.... உன் ரிலேஷன்ஷிப்பும் ஆச்சுன்னு இந்த இன்சிடென்டை ஒரு பாஸிங் க்ளவுடா நினைச்சு மனசுல இருந்து தூக்கி எறிஞ்சுட்டு வந்துடுடீ லட்டு! அவன் நமக்கு வேணாம்!" என்று தன் மனதில் நினைத்ததை எல்லாம் தோழியிடம் கொட்டிக் கொண்டிருந்த ஷைலஜாவிடம்,
"எலா என்னவே ரொம்ப துள்ளுறவுக; உம்ம சலம்பல கொஞ்சம் நிறுத்திக்கிடும்! காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போனாக்குலல்லா இருக்கு உம் பேச்சு; பாஸிங் க்ளவுடாமுல்ல....... நெனைப்பீகடீ; ஏன் நெனைக்க மாட்டீக! உம்ம தோழிக்கு இப்படி ஒண்ணுத்துக்கும் வொதவாத சோலியெல்லாம் சொல்லிக் குடுத்துட்டு இருந்தீக.... நல்லாயிருக்காது. சொல்லிப்புட்டேன். இனியா புள்ள இனிமே என் சொத்து, எம் பொஞ்ஜாதி மனச கலைக்குற வேலையெல்லாம் இனி செய்யாதீக! கடைய சாத்துங்க!" என்றான் ராசு தன் மீசையை முறுக்கிக் கொண்டு.
"யோவ் கண்ட்ரி மேன்.....டோண்ட் யூ ஹாவ் எனி மேனர்ஸ்....உன் ஸ்லாங்கும், நீயும்; ரெண்டு பேர் பேசிட்டு இருக்கும் போது இப்படி தான் மொபைலை வாங்குக்குவியா? போனை லட்டு கிட்ட குடுடா!" என்று எரிச்சலுடன் கத்தியவளிடத்தில் புன்னகையுடன்,
"எம்பொண்டாட்டி போனை நான் வச்சுட்டு இருக்கன்; இதுல என்னலே நீ கேட்ட மேனர்ஸ் குறைஞ்சு போச்சு.....
போனு முதல்ல இருந்தே என் கையில தாமுலே ஸ்பீக்கர்ல கிடக்கு. உங்களுக்கு மூத்தவகள மரியாதை இல்லாம பேசக் கூடாது! உங்கண்ணனுக்கு நா மச்சான் முறை வேணும்! அப்போ உங்களுக்கும் அப்படித்தேன்..... மச்சான்னு இல்ல அத்தான்னு கூப்புடுக. வாடா, போடான்னு உங்களுக்கு வரப்போற வூட்டுக்காரனை கூப்புடுக! இன்னும் மூணு மாசத்துல எனக்கும் நர்ஸம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு எல்லாரும் பேசிகிட்டு இருக்காவ; அதுவரைக்கும் உங்க ஸ்நேகிதி உங்க வீட்ல தாமுலே இருப்பாக! ஆனாக்க அப்பப்போ நான் உங்களுக்கு நடுவால வருவேன். இப்போ உங்க ஸ்நேகிதி கிட்ட பேசுறீகளா?" என்று கேட்டவன் இனியாவின் அருகில் வந்து,
"ஏட்டி அழகி, மாமனுக்கு ஒரு முத்தம் குடு. அப்பத்தேன் உன் போன உங்கையில தருவேன்!" என்றான் கண்சிமிட்டி.
"என் கிட்ட ஒரு அறை வாங்கினதுக்குப்புறம் கூட உங்களுக்கு சூடு சுரணையே இல்லையா? நான் ரூபிட்ட பேசணும். எனக்கு கொஞ்சம் ப்ரைவஸி வேணும். இங்கிருந்து கிளம்புங்க!" என்று சொன்ன மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான் இசக்கிராசு.
மாடியை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தவனை வழிமறித்த ஜீவானந்தன், "உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் மாப்பிள்ளை; வர்றீங்களா?" என்றான்.
"வாலே மச்சான், ஆசையா கூப்பிடுதீக, என்னதேன் சொல்றீகன்னு கேப்பம்!" என்று ஜீவாவின் தோளைப் பற்றிக் கொண்டு வீட்டின் திண்ணையில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டான் ராசு. அவனருகில் அமர்ந்து கொண்ட ஜீவானந்தன் தன் தந்தையின் மேல் ஒரு கண்ணை வைத்தவாறு,
"ராசு..... என் கூடப்பொறந்த
தங்கச்சி ஷைலஜா எங்க மாமா பையன் பார்கவ்ட்ட லவ் ப்ரப்போஸ் பண்ணி அவன் அவளுக்கு ஸாரி நாட் இன்ட்ரெஸ்டட்னு சொன்னான்! ஆனா அத பொலைட்டா சொல்லாம கொஞ்சம் ஹார்ஷா சொன்னான். அவன் செவுளு பேந்துரும்ன்னு என் தங்கச்சிய திட்டுனதுக்காக அவன் செவுள பேத்தவன் நானு! ஒரு கண்ணுல வெண்ணெயும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கக் கூடாதுல்ல மாப்பிள்ளை.... இனியாவை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணின்னதுக்கு உனக்கு நான் இன்னும் தண்டனையை குடுக்கவேயில்லையே.....
வந்தவுடனே உன்னைய நாலு அறை அறைஞ்சிருந்தாலாவது எனக்கு மனசு ஆறியிருக்கும். ஆனா அப்பா உன் சட்டையை பிடிச்சவுடனே வெளியே போய் நிக்க சொல்லிட்டாரு. உன் தகுதி, வேலை எல்லாம் எனக்கு திருப்தி தான். ஆனா ஊர்ல கூட்டம் சேர்த்துட்டு சண்டை பிடிக்குறது, வட்டிக்கு பணம் குடுக்கறது, சிகரெட் பிடிக்கிறது, டிரிங்ஸ் பழக்கம்...... இதெல்லாம் கேக்குறப்போ நீ எதுக்கு என் தங்கச்சிய கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டியோன்னு நினைச்சு எரிச்சல் வருது. இனியா ரொம்ப ஸாப்ட் அண்ட் சென்ஸிடிவ்..... அவ உன்னை விரும்புற வரைக்கும், பேமிலியில எல்லாருக்கும்..... ஏன் எனக்கும் கூட உன் மேல இருக்கற கோபம் குறையுற வரைக்குமாவது நீ பொறுமையா வெயிட் பண்ணித் தான் ஆகணும். இத நான் எல்லார் முன்னாடியும் அப்பவே பேசியிருப்பேன்; பட் எங்கப்பா டென்ஷன் ஆகி மறுபடியும் என்னைய டூர் அனுப்பிட போறாருன்னு பயந்துட்டு தான் என் கோபத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு உட்கார்ந்து இருந்தேன். ஆனா நீ என்னை மச்சான்னு கூப்பிடுறது எனக்கு பிடிச்சிருக்கு ராசு!" என்று சொன்ன ஜீவாவின் கைகளை பிடித்துக் கொண்டு,
"கைய குடுலே மச்சான்......மனசுல நினைக்கிறத அப்படியே பேசுறதுக்கு கூட ஒரு துணிச்ச வேணும். ஆக மொத்தத்துல எம் பொஞ்ஜாதியையும் சேர்த்து உங்க குடும்பத்துல யாருக்குமே நம்பள பிடிக்கல. நானும்தேன் உடனே மன்னிக்கிற மாதிரி தப்பா செஞ்சிருக்கேன்....... அங்கண திருவிழாவுக்கு ரெண்டு நாள் முன்னால உங்க ஊருக்கு வரும் போதே தாலியோட தேன் வந்தேன். உங்க அப்பாரு குடும்பத்த பத்தி எல்லாம் விசாரிச்ச உடனே இனியா புள்ள உனக்கில்லடா மொக்கைன்னு எனக்கு உறுதியா தெரிஞ்சுட்டு..... சரி மாமன் மவ நம்மளப் பத்தி என்னதேன் நினைக்காவன்னு கேப்பம்ன்னு வந்தா சொன்னாளே ஒரு வார்த்த..... ரொம்ப தேங்க்ஸ் சாருன்னு; ஆனா அவளையும்தேன் என்ன தப்பு சொல்ல முடியும்? அவள அப்பப்போ பார்த்து பழகிட்டா இருந்தம்...... நா யாருன்னே தெரியாம எங்கிட்ட வேற என்ன பேசுவான்னு எதிர்பார்க்குறது..... ஆனா வேற எவன் எவனையோ அத்தான்ங்கிறா, மாமாங்கிறான்னு ஒரு எரிச்சலும், இனியா எனக்குத்தேன் வேணுங்கிற ஒரு ஆசையிலயும்தேன் இப்படி கோக்குமாக்கா யோசிச்சு தாலிய கட்டிப்புட்டேன். ஒரு பொண்ணுக்கு திடீர்னு எவனோ ஒருத்தன் கையால தாலி வாங்கிக்குறதெல்லாம் சூளுவான விசயமில்ல. ஆனா என் தகுதி, அந்தஸ்து, வயசு, எல்லாத்தையும் இப்பமே இப்படி யோசிக்குறவுக முறைப்படி பொண்ணு கேட்டு வந்திருந்தா இந்தா பிடிடா மொக்கை உன் முறைப்பொண்ணைன்னு கையில தூக்கி குடுத்துருப்பியளாக்கும்......
அப்பத்தா காலத்துக்குள்ள கல்யாணம் முடிச்சு அது சந்தோஷத்தை பார்த்துடணும்னு நினைச்சமுல.... பொஞ்ஜாதி மனசுல நல்ல புருஷனா இடம் பிடிக்க குட்டிக்கரணம் தேன் போடணும்னு எந்தலயில எழுதியிருந்தா அத யாரால மாத்த முடியும்.... அப்பப்போ உங்க வீட்டுக்கு வந்து போக பெரிசுகட்ட அனுமதி வாங்கி குடு மச்சான்..... அது போதும்!" என்று சொன்ன ராசுவிடம்,
"நானும் உறவுக்காக ஏங்குனவன் தான் ராசு.... எனக்கு அந்த வலி நல்லா தெரியும். எல்லாருக்கும் கொஞ்சம் டைம் குடு. இனியாவை அப்பப்போ கூப்பிட்டு உன் காதலை புரிய வைக்க முயற்சி செய். இதுக்கு மேல உனக்கு எப்படி ஃபேவர் பண்றதுன்னு எனக்கு தெரியல ராசு..... ஸாரி எனக்கு உன்னை வாங்க, போங்கன்னு கூப்பிடறது ரொம்ப பார்மலா பேசுற மாதிரி இருக்கு!" என்றவனிடம் சிரிப்புடன்
"இப்படியே கூப்பிடுவே மக்கா...... கிளம்பணும்ல; உந்தங்கச்சிக்கு ரெண்டு, மூணு விஷயம் குடுக்கணும். வாலே உள்ள போலாம்!" என்று சொல்லி விட்டு ஜீவாவை வீட்டுக்குள் அழைத்து சென்றான் ராசு.
அனைவரும் கிளம்பும் நேரம் இசக்கிராசு தன் அப்பத்தாவின் அருகே வந்து, "ஏத்தா.... எம் பொண்டாட்டி அவுக அப்பன் வீட்டுக்கு போறா! என்னைய மறந்துடாம இருக்க வேண்டாமா? ஏதாவது வலுவா குடுத்து வழியனுப்பி வைக்க வேணாமா?" என்று இனியாவை பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க விவேக் கோபத்துடன்,
"நீ ஒரு திரியும் திரிக்க வாணாம். எங்கள கிளம்ப விட்டாப் போதும்!" என்றார்.
"இரு மாமோய்......ஏன் இப்படி தேவையில்லாம பொங்குற......" என்று கேட்டவன்,
"ஏட்டி இங்க வா!" என்று இனியாவின் கையைப் பற்றி பூஜையறைக்குள் இழுத்து சென்று விழுந்து வணங்கி அவள் நெற்றியில் குங்குமம் இட்டு வெளியில் அழைத்து வந்தான்.
அழகான ஒரு தாம்பாளத்தில் பட்டுப்புடவை, ஒரு தங்கச்சங்கிலி மற்றும் ஓர் குங்குமச்சிமிழுடன் ராசுவின் பாட்டி நின்று கொண்டு இருந்தார்.
"இந்த சங்கிலில்ல கோர்த்து கழுத்துல கிடக்கிறத போட்டுக்க. இனிமே எவனும் எதுவும் பேச மாட்டான். புடவையை நம்ம கல்யாணத்துக்கு கட்டிக்கலாம். அப்பத்தாட்ட இருந்து தட்டை கையில வாங்கு!" என்றான் ராசு.
ஜீவானந்தன் அமைதியாக அனைவரையும் காரில் சென்று அமருமாறு சொல்லி விட்டு இனியாவின் அருகில் நின்று கொண்டு இருக்க நிர்மலா, "குங்குமத்தை வேண்டாம்ன்னு சொல்லக் கூடாதுடாம்மா! எடுத்துக்கோ!" என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.
இனியா ஓர் யோசனையுடன் நின்று கொண்டு இருக்க ராசு அவள் காதருகில் குனிந்து, "பிரச்சனை எனக்கும் உனக்கும் தானே? ஏன்டீ இப்படி பெரியவுகள கஷ்டப்படுத்தற..... அப்பத்தா ஏற்கனவே வெசனப்பட்டுக்கிட்டு கிடக்கு. அத இன்னும் நோகடிக்காத. தயவு செஞ்சு தட்டை வாங்கிக்க!" என்று சொன்னவன் அவள் தட்டை வாங்க கையை நீட்டியதும்
தங்கச் சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்து விட்டான். அவள் கைகளில் இருந்து தட்டை வாங்கி மேசையில் வைத்தவன்,
"அப்பத்தா எங்கள ஆசிர்வாதம் பண்ணு; சீக்கிரம் உனக்கு கொள்ளுப் பேரன் பிறக்கணுமுன்னு...... ஷ்ஷ்ஷ் ஆ!" என்று பாதி பேச்சு மீதி அலறலுடன் எழுந்து நின்றான்.
"எதுக்குலே இப்பம் கத்துன?" என்று கேட்ட தன் பாட்டியிடம்,
"அது.....எம் பொண்டாட்டி என்னைய..... போ அப்பத்தா!" என்று வெட்கி சிரித்தபடி வாசலுக்கு சென்று விட்டான் இசக்கிராசு.
"மவராசி.......உங்கையில அந்த முரட்டுப்பயல பிடிச்சாந்து குடுத்துப்புட்டேன். அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நீ தான் தாயி ஏற்படுத்தி குடுத்து அவங்கூட சந்தோஷமா மனசு நிறைஞ்ச வாழ்க்கை வாழோணும்!" என்று கூறிய அந்த முதியவளிடம் ஓர் தலையசைப்பை மட்டும் கொடுத்து விட்டு தன் பரிசுகளுடன் வாசலுக்கு சென்றாள் இனியா.
"ஏட்டி மாமன மறந்துடாத! அப்பப்போ நினைச்சுக்க. கடைசி வரைக்கும் நான் கேட்டத நீ குடுக்கவேயில்லையே.... வேணும்னா நான் உனக்கு தரவாலே...?" என்று கேட்ட தன் கணவனிடம், "போடா உள்ள போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாரு!" என்று ராசுவை திட்டி விட்டு "அப்பா கிளம்பலாம் வண்டியை எடுங்கப்பா!" என்று விவேக்கிடம் சொன்ன தன் மனைவியை தன்னையும் அவளுடன் கூட்டிச் சென்று விட மாட்டாளா என்று ஆவலும், ஏக்கமாக பார்த்து கொண்டு நின்றிருந்தான் இசக்கிராசு.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro