💟 ஜீவாமிர்தம் 13
அர்ஜுன், மீரா, சரஸ்வதி மூவரும் காரில் அமர்ந்திருக்க பலராம், கீதா இருவரும் அவரது பைக்கில் அமர்ந்து மலைக்கு கிளம்ப தயாராக இருந்தனர்.
"டேய் ராம் கார்ல தான் இடம் இருக்கே? எதுக்குடா தேவையில்லாம பைக் ஓட்டி ரிஸ்க் எடுத்துட்டு..... நீயும், கீதாவும் கார்ல ஏறுங்க. சேர்ந்து போகலாம்!" என்று கேட்ட அர்ஜுனிடம் பலராம் தயக்கத்துடன்,
"அது வந்துடா அஜு......" என்று பலராம் இழுத்த போது ஜீவா உள்ளே புகுந்து,
"நீ சும்மா இரேன் மாமு; ராம் தனியா கீதாத்தை கூட வரணும்னு ஆசைப்படுறாரோ என்னவோ..... பார்த்து பத்திரமா ஓட்டு மாமு; துரை அண்ணாவை வரச் சொல்லவான்னு கேட்டதுக்கு வேண்டாம்னு சொல்லிட்ட..... மீரா பேபியையும், சரஸ் பாட்டியையும் பத்திரமா கொண்டு போய் ட்ராப் பண்ணணும். அதை மனசுல வச்சுட்டு ஓட்டு! கிளம்பலாம். பை!" என்று சொல்லி விட்டு சுற்றும் முற்றும் கண்களால் துளாவியவன்,
"எங்க ஒரு டிக்கெட் குறையுது? நம்ம நெருப்புக்கோழி எந்த பைலுக்குள்ள தலைய விட்டுட்டு இருக்கான்? உங்க கூட வரலையா மாமா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டவனிடம்,
"ஏதோ வேலை இருக்குன்னு சொன்னான்டா; உன் கிட்ட அடி வாங்கினேன்னு சொன்னான்...... அந்த கோபமா இருக்கும்ன்னு நினைச்சு நாங்க எல்லாம் கிளம்பிட்டோம்!" என்று பலராம் சொல்ல ஜீவானந்தன் குழப்பமான புருவத்தூக்கலுடன் நின்று கொண்டு இருந்தான்.
கவிப்ரியா வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தவள், "இன்னும் கிளம்பாம எல்லாம் நின்னுட்டு கதை தான் பேசிட்டு இருக்கீங்களா..... பாகியை நாங்க கூட்டிட்டு வர்றோம்! நீங்க கிளம்புங்க!" என்று சொன்னவளிடம் அர்ஜுனும், மீராவும், "ஜீவாம்மா பாவம்..... அவனை படுத்தாம இரு கவி! ஜீவா குட்டி ரெண்டு குரங்குகளையும் பார்த்து கூட்டிட்டு சீக்கிரமா வந்துடு! பை" என்று சொல்லி விட்டு விடைபெற்றனர். உள்ளே வந்து அமர்ந்தும் ஜீவா அவளிடம்,
"இந்தாம்மா கவிப்ரியா பாப்பா; மச்சானுக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுறியா? உங்கண்ணனுக்கு கால் பண்ணி குடேன்!" என்று ஜீவா கவிப்ரியாவிடம் கேட்க அவள் முகத்தில் கோபத்தின் சாயல் தெரிந்தது.
"ரெண்டு பேரும் சண்டை போட்டீங்களாடா? உனக்கு நான் தான் மீடியேட்டர் வேலை பார்க்கணுமாக்கும்? என்னால முடியாது!" என்று சொன்னவளின் தாடையை பற்றி முத்தமிட்டு,
"அப்படியெல்லாம் சொல்லப்படாது மூக்கி; உன்னை பாப்பான்னு கூப்பிட்டு பொலைட்டா ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டேன்ல..... கொஞ்சம் கன்ஸிடர் பண்ணு தங்கம்!" என்று கொஞ்சியவனிடம் முகத்தை நொடித்து கொண்டு,
"போடு..... பிட்டு பிட்டா போடு; ஏன் நந்து நம்ம மேரேஜ்க்கு அப்புறம் இப்போ இருக்கற மாதிரி எனக்கு பர்ஸ்ட் பிரிஃபெரென்ஸ் குடுப்பியாடா? இல்ல கல்யாணம் ஆகிடுச்சுன்னு என்னை கண்டுக்காம ஒரு ஓரமா வச்சுடுவியா?" என்று கேட்டவளை கைகட்டி சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.
"பதில் சொல்லு மாடு!" என்று கேட்டவளை "இங்க வா!" என்று இரு கைகளையும் விரித்து கூப்பிட்டான் ஜீவா.
"ஒண்ணும் வேண்டாம். அங்கிருந்தே சொல்லு. எனக்கு காது கேக்கும்!" என்றவளை வலுக்கட்டாயமாக இருக்கையில் இருந்து எழுப்பி தன் கையணைப்பில் வைத்துக் கொண்டவன், "நீ எப்பவுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! நீ கேட்டா.......... ஏன் எங்கிட்ட கேக்கலைன்னா கூட உன்னோட தேவையையும், ஆசையையும் புரிஞ்சுட்டு உனக்கான எல்லா விஷயத்தையும் என்னால யோசிச்சு செய்ய முடியும். பட் பர்ஸ்ட் பிரிஃபெரென்ஸ்...... இதை கொஞ்சம் யோசிக்கணுமே; ம்ஹூம் முடியாது னு தான் நினைக்கிறேன் கேப்ஸி! அம்மா, அப்பா, தங்கச்சிங்க, பாகி, ராகவ், மாமாஸ்; அத்தைஸ், தாத்தா, பாட்டி, நம்ம வொர்க்கர்ஸ் எல்லாரும்.... அதுக்கப்புறம் தான் நீ; கவுண்ட்டிங் படி பார்த்தா ரிவர்ஸ்ல இருந்து பர்ஸ்ட் வருவ...... பட் இந்த கவுண்ட்டிங் எல்லாம் எதுக்குடீ........ உனக்கு நல்ல ஹஸ்பெண்டா நடந்துக்க முயற்சி செய்றேன். நான் மலையில இருக்கும் போது உங்க மாமா எங்கம்மாவுக்கும், எங்களுக்கும் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் தான் குடுப்பார். பட் அந்த அரைமணி நேரத்துக்காக அந்த நாள் பூராவும் வெயிட் பண்ணலாம். அவ்வளவு க்வாலிட்டி டைமா இருக்கும். நம்ம லைஃப் கூட மலைக்கு போனதுக்கு அப்புறம் அப்படித்தான் இருக்கும்னு யோசிக்கிறேன்! உனக்காக நானும், எனக்காக நீயும் சில விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். முடியும் தானே?" என்று கேட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவனை பார்த்து விழித்தவாறு,
"ஜீவா நீ நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் மலைக்கு போய் செட்டில் ஆகிடணும்ங்கிற ஐடியாவோட இருக்கியாடா...... என் கிட்ட சொல்லவேயில்லையே...." என்று கேட்டாள் கவிப்ரியா.
"ஆப்வியஸ்லி.....அங்க தான் போகப் போறோம். இதெல்லாம் என்ன கேள்வி கேப்ஸி, பட் எதுவுமே மாறப் போறதில்ல. டோண்ட் வொர்ரி!" என்று சொன்னவனிடம்,
"நீயும் மாமா இங்க வொர்க் பண்ண மாதிரி சென்னைல ஆஃபிஸ் வச்சிருக்கல்ல..... அதான் கொஞ்ச நாளைக்கு இங்க இருப்பியோன்னு நினைச்சேன். இட்ஸ் ஓகே.... ரொம்ப யோசிக்க வேண்டாம். அதான் நீ இருக்கல்ல........ பார்த்துப்ப!" என்றவள் தன் அண்ணனுக்கு கால் செய்து அவனிடம் போனை நீட்டி விட்டு,
"பாகிட்ட பேசிட்டு மொபைலை நீ வச்சுக்க ஜீவா. கீழே ரூம்ல படுத்துக்கோ. நான் போனை காலையில வாங்கிக்கறேன். நாளைக்கு சீக்கிரம் எழுப்பி விடு. குட்நைட்!" என்று சொல்லி விட்டு திரும்பியவளை, "அம்முலு உனக்கு என் மேல கோபம் தானே?" என்று கேட்டான் ஜீவா.
சற்று தடுமாறி பின் புன்னகைத்து, "அதெல்லாம் இல்லையேப்பா.....நந்துன்னு எப்பவுமே கூப்பிடணுமா என்ன! அப்பப்போ ஜீவான்னு கூப்பிட்டா தப்பு இல்ல" என்றவளிடம்,
"ம்ஹூம்! உனக்கு கண்டிப்பா என் மேல கொஞ்சம் கோபம் இருக்கு; பட் லவ் டன் டன்னா இருக்கு! ஸோ எந்த விதமான சிச்சுவேஷனையும் ஹாண்டில் பண்ணிடலாம்..... அம்முலு எனக்கு தூங்குறப்போ ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டா தான் கம்பர்டபிளா இருக்கும். ஸோ மே ஐ.......!" என்று வார்த்தைகளை மென்றவனிடம்,
"நீ கீழே இருக்கப் போற! நான் என் ரூமுக்கு கிளம்பறேன்! இதுல நீ என்னத்த வியர் பண்ணினா எனக்கென்னடா வந்தது? நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா எழுப்பி விடு. கிப்ட்ஸ ரெடி பண்ணி வாங்கிட்டு வந்துட்டு அதுக்கப்புறம் ஊருக்கு கிளம்பணும். மேல போகட்டுமா..... குட்நைட்!" என்றவளிடம் சிறு புன்னகையுடன் இரவு வாழ்த்து தெரிவித்து விட்டு அறைக்குள் வந்தான் ஜீவானந்தன்.
பார்கவிற்கு தன் மொபைலில் இருந்து மறுபடியும் அழைப்பு விடுத்தவன் அவன் காலை கட் செய்து விடவும், கவியின் மொபைலில் இருந்து கூப்பிட்டான்.
ஒரே அழைப்பில் போனை எடுத்தவன், "கவிம்மா ஆர் யூ ஸேஃப்? அண்ணா வரட்டுமாடா..... பயமா இல்லையே?" என்று கேட்ட தன் நண்பனிடம்,
"நைட் எபெக்ட்டா! அம்முலு ஒரு மாதிரி க்ளோயிங் ப்யூட்டியோட செமையா இருக்காடா. ரகுநாத பூபதி பண்ணையாருக்கு செஞ்சு குடுத்த மானசீக சத்தியத்தை கொஞ்சமா ப்ரேக் பண்ணிக்கிட்டா என்னன்னு தோணுது! நீ என்ன ஃபீல் பண்ற?" என்று கேட்ட ஜீவாவிடம்,
"............. ஃபீல் பண்றேன். சத்தியத்தை உடைக்கிற மொகரகட்டையை கண்ணாடியில போய் பாரு.... உன்னைய எவன்டா அஜு பெரியப்பா வீட்டுக்கு கூப்பிட்டது? அவ மட்டும் ஏன் இன்னும் ஊருக்கு கிளம்பாம உட்கார்ந்துட்டு இருக்கா? வாணி மேட்டர எல்லாம் உன்னைய யாருடா ஷைலு கிட்ட உளற சொன்னது? அந்த லூசு நேரா அப்பா, அம்மா கிட்ட பத்த வச்சுட்டாடா..... நா அவளையே கல்யாணம் பண்ணிக்கணுமாம். அம்மா ஆரம்பிச்சுட்டாங்க!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனை,
"பாகி ஹோல்ட் ஆன் அ செகண்ட்..... யாரது வாணி? இன்னொரு புது காரெக்டரா.... முடியலடா மச்சி.....!" என்றவனிடம் கோபத்தில் பற்களை கடித்தவாறு சிறிது நேரம் திட்டியவன்,
"ஒருத்திக்கே இங்க வழியக் காணும். இதுல புது காரெக்டர்.... யாருடா அவன்னா கேக்குற. அவ தான் அந்த ராங்கியோட புல் நேம் அபிநய சரஸ்வதி நம்ம சரஸ் பாட்டி பேரா இருக்குன்னு நினைச்சு நான் மட்டும் வாணின்னு கூப்பிடுவேன். அவளுக்கும் பிடிக்கும்!" என்று மெல்லிய குரலில் சொன்னவனிடம்,
"அடடா என்ன ஒரு தெய்வீக காதல்...... நீங்க அவங்களை வாணின்னு கூப்பிடுவீங்க. மேடம் உங்களை என்னன்னு கூப்பிடுவாங்க..... மிஸ்டர் பார்கவ்?" என்று கேட்ட ஜீவாவிடம்,
"ஏன்டா இப்படி என் லைஃப்ல அண்ணனும், தங்கச்சியும் சேர்ந்து ஏழரைய கூட்டி வச்சிருக்கீங்களேன்னு ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு இன்னும் பதிலைக் காணும்?" என்றவனிடம் சிரிப்புடன்,
"டேய் விடுறா பாகி..... இன்னும் எத்தனை நாளைக்கு தான் ரெண்டு பேரும் இப்படி டாம் அண்ட் செர்ரி சண்டை போட்டுட்டு இருக்க போறீங்க......... கண்றாவியா தாடி எல்லாம் வச்சுட்டு.....!" என்ற ஜீவாவை நிறுத்தி,
"டேய்.......நான் எனக்கு மீசை முளைக்க ஆரம்பிச்ச நாள்லேர்ந்து தாடியும் வச்சுட்டு தான் இருக்கேன்! ஏதோ காதல் தோல்வியால வச்சது எல்லாம் இல்ல!" என்றான் பார்கவ் ஓர் அவசரத்துடன்.
"யப்பா தம்பி..... நீ மீசை முளைக்க ஆரம்பிச்ச வயசுல இருந்தே லவ்வும் பண்ணிட்டு தானே இருக்க. சரி அதை விடு. உன் மேட்டரை நானா ஓப்பன் பண்ணணும்ன்னு நினைக்கல. அப்படி ஒரு சிச்சுவேஷன் க்ரியேட் ஆகிடுச்சு. நான் என்ன பண்ணட்டும்? எனக்கு காம்பிளிகேஷன்ஸ் இல்லாம கல்யாணம் நடந்திடும்டா..... உனக்கு இப்போலேர்ந்து ஸ்டார்ட் பண்ணினா உன் சைடு, அவங்க சைடு, பேமிலி சைடு எல்லா பிரச்சனையும் முடிஞ்சு கல்யாணம் பண்ண ஒன் இயர் ஆகிடும். திஸ் இஸ் தி ரைட் டைம் பாஸ்! யூ ஹாவ் டூ பேட்ச் அப்!" என்றவனிடம் ஓர் இகழ்ச்சி புன்னகையுடன்,
"இம்பாஸிபிள்! உன் ப்யூச்சரை பாரு, உன் கோலை நோக்கி கரெக்டா போயிட்டு இருக்கியான்னு பாரு! கல்யாண வாழ்க்கைக்கு பணமும், ஸ்டேட்டஸும் முக்கியம்ன்னுட்டு என் மனசை உடைச்சிட்டு போனால்ல..... அவளை தேடிப் போய் அவ கால்ல விழுந்து நீ கேட்ட காசும், ஸ்டேட்டஸும் வந்துடுச்சு. வாழ்க்கை பிச்சை குடும்மான்னு மண்டி போட சொல்றியா?" என்று சொல்லிக் கொண்டு இருந்த பார்கவிடம் யோசனை நிறைந்த குரலில்,
"ஏன்டா பாகி, உனக்கு 16 ன்னா அந்த பொண்ணுக்கும் அதே வயசு தான் இருந்திருக்கும். அந்த வயசுல இவ்வளவு பேசுறதுனா அவங்க மெச்சூரிட்டி லெவல் செமையா இருந்திருக்குடா. ஒரு பையன் லவ் பண்றேன்னு சொன்னவுடனே காத்தை குடிச்சுகிட்டு உயிர் வாழலாம். ஒட்டடைல பூச்சியா ஒட்டிக்கிட்டு காலம் தள்ளலாம்னு சினிமா டயலாக் எல்லாம் பேசாம ஃபேக்ட் என்னன்னு யோசிச்சு அட்வைஸும் பண்ணியிருக்காங்களே..... அதுக்கே ஒரு ஹாட்ஸ் ஆஃப் சொல்லணும்டா..... சுத்தமா காண்டாக்ட விட்டுட்டியா; இல்ல முன்னாடி நான் செய்ற மாதிரி டெய்லி பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக்குவியா?" என்று விசாரித்தவனிடம்,
"ம்ம்ம்...... அவ பேரு, வீட்டு அட்ரஸ், காலேஜ் அட்ரஸ், அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி இப்படி எல்லா இன்பர்மேஷனையும் உங்கிட்ட சொல்றதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்......... போடாங்கு!" என்று திட்டியவனிடம் புன்னகையுடன்,
"அவங்க பேரு அபிநய சரஸ்வதி, வயசு 24; 24 வயசுல காலேஜ்......எப்படி கனெக்ட் பண்ணலாம்; ஒண்ணு அவங்க காலேஜ்ல வொர்க் பண்ணணும். இல்ல பி.ஹெச்டி மாதிரி டிகிரி ஏதாவது செய்ய வாய்ப்பு இருக்கு. அவங்க வீட்ல அவங்களை சேர்த்து மொத்தம் அஞ்சு பேர்; இப்போ உன் வாயை இன்னும் கொஞ்ச நேரம் வாடகைக்கு எடுத்தா எல்லா விஷயத்தையும் கரெக்ட் பண்ணிடலாம். முக்கியமா அவங்க அட்ரஸ்!" என்று சொன்ன ஜீவாவிடம்,
"தூக்கம் வருது...... ஆளை விடு சாமி, நாளைக்கு நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க. விட்டுட்டு போய்டாத!" என்று சொன்ன பார்கவிடம்,
"ச்சேச்சே! நீ தானேடா எனக்கு மாலை போட்டு வீட்டுக்குள்ள வெல்கம் பண்ணணும். உன் தங்கச்சி ஆரத்தி எடுப்பா. அதுக்காகவாவது உன்னை மலைக்கு கூட்டிட்டு தான் போகணும்!" என்று சொன்னவனிடம்,
"போதுமா தம்பி...... இன்னும் ஏதாவது பாக்கி வச்சிருக்கியா? கல்யாணத்துக்கு இப்பவே ரிகர்சல் பார்க்க ஆரம்பிச்சுட்டானே......
கடவுளே!" என்று புலம்பியவனின் குரல் ஜீவாவிற்கு எரிச்சலை தந்ததோ என்னவோ "காலையில சீக்கிரம் வந்துடுடா! தூங்கப் போறேன்! குட் நைட்!" என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
ஜெய் நந்தன் வீட்டில் இரவு எட்டு மணியளவில் இரவு உணவை முடித்து விட்டு தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். இப்போது தான் அர்ஜுன் அவருக்கு கூப்பிட்டு அனைவரும் நாளை விடியற்காலை வந்து விடுவார்கள் என்றும், ஜீவா, கவி மற்றும் பார்கவும் நாளை மாலையில் கண்டிப்பாக வருவார்கள் என்றும் சொல்லி அவரை நிம்மதிப் படுத்தியிருந்தார்.
பல வருடங்களுக்கு பிறகு தன் மகனின் வருகை நிகழப் போகிறது. எதுவும் சங்கடம் நிகழ்ந்து விடக் கூடாது என்று ஜெய் நந்தனுக்கு உள்ளுக்குள் சிறு உதறலை தான் ஏற்படுத்தி இருந்தது. நிர்மலாவும், விவேக்கும், இனியா, ஷைலு, மாணிக்கம் ஆகியோரும் அவரை எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் படுத்தி வைத்திருந்தனர்.
"அண்ணா, என்ன இன்னும் தூங்கலையா? எதையாவது யோசிச்சு குழப்பிக்காம போய் படுக்கலாம்ல?" என்று கேட்ட படி வந்த விவேக்கிடம்,
"டேய் அரேன்ஜ்மெண்ட்ஸ் எல்லாம் ஓகே தானேடா.... ரொம்ப ஓவராவும் போய்டாம...... அதே நேரத்தில ஒண்ணுமே இல்லாத மாதிரியும் தெரியாம தம்பிக்கு பிடிக்கிறது மாதிரி எல்லாம்.......!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவரிடம் சிறு சிரிப்புடன்,
"அவன் வீட்டுக்கு அவன் வர்றான். இதுல என்ன ஸ்பெஷலா வரவேற்பு வேண்டியிருக்கு......?" என்று கேட்டார் விவேக்.
"ம்ஹூம்! என்னோட வீடுன்னாலும் இங்க வந்து பெர்மனன்டா செட்டில் ஆகும் போது எல்லாரும் என்னை வெல்கம் பண்ணணும்னு நான் எதிர்பார்த்தேன். அதனால கண்டிப்பா வரவேற்பை அவனும் எதிர்பார்ப்பான். எதுவும் சொதப்பிடாம நடக்கணும். ஆனந்த் எல்லா விதத்திலும் கம்பர்டபிளா இருக்கணும். அவ்வளவு தான்.....கொஞ்சம் பயமாயிருக்குடா!" என்று சொல்லி பரிதாபமாக பார்த்தவரிடம்,
"அண்ணி எங்க? போய் அவங்களை படுத்தி எடுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு! சீக்கிரம் படுக்கணும்!" என்று சொல்லி விட்டு சென்று விட்டார் விவேக்.
"ம்ப்ச்! ச்சை.....நம்ம பயத்தை சொன்னா ஒரு பக்கியும் புரிஞ்சுக்க மாட்டேங்குதுகளே.....!" என்று மனதிற்குள் குமைந்து கொண்டு தன் அறைக்கு சென்றார் ஜெய் நந்தன்.
அடுத்த நாள் காலையில் இருந்து ஆனந்த ஸாகரம் தன்னுடைய இளவரசனின் வருகைக்காக பரபரவென்று வெளியே சென்ற கணவனுக்காக புது மனைவி தயாராவது போல் தயாராகியது. அனைவரது முகங்களிலும் புன்னகை, பூரிப்பு அதை விட மனநிறைவு தான் தனி அழகை கொடுத்தது. நிர்மலாவிடம் அவரது புன்னகை சற்று கூடுதலாக தான் தெரிந்தது. ஜெய் நந்தனின் கண்கள் உற்சாகமாக தன் மனைவியை வருடியது.
"ஏய் பஞ்சுமூட்டை....... என்னடீ பையன் வர்றான்ங்கிற சந்தோஷமா? உதட்டை மூடவே மாட்டேங்கிற. பல்லெல்லாம் ரொம்ப வெளியே தெரியுது. பார்த்து கொஞ்சமா பண்ணு!" என்று சொல்லியவர் அருகே வந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கன்னத்தில் முத்தமிட்டு அணைத்து விட்டு சென்றார்.
அனைவரும் சந்தோஷமாக இருந்தால், மனைவியின் அணைப்பும், முத்தமும் கிடைத்தால், பிறகு அதற்கு மேல் பண்ணையாருக்கு என்ன தான் வேண்டும்? ஜெய் நந்தன் பூமியில் நின்றபடியே மிதந்து கொண்டு இருந்தார்.
பத்மா, மீரா, கீதா மூவரும் இணைந்து கடைசி நேர வேலைகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். ஆனால் காலையில் ஊருக்கு கிளம்பியவன் அரை மணிக்கு ஒரு முறை காரை நிறுத்தி கீழே இறங்கி குழந்தை போல் குதூகலித்து விட்டு இருவரிடமும் திட்டு வாங்கிய பிறகு வண்டியை சீராக செலுத்தி ஆனந்த ஸாகரத்துக்குள் நுழைந்தான்.
அதிர்வேட்டுகள் முழங்க, வானத்தில் பூஞ்சிதறல்களாக நிறைய பட்டாசுகள் வெடித்து சிதறியது. ஜீவானந்தன் முகத்தில் தெரிந்த புன்னகை சற்று விரிந்து சிரிப்பாக விரிவடையவும் பார்கவும் கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"இந்தா இதை கையில பிடி!" என்று கவிப்ரியா அவனிடம் ஒரு டப்பாவை கொடுக்க ஜீவானந்தன் சந்தேகப் பார்வையுடன், "நீ அவருக்கு வாங்கிட்டு வந்த கிப்ட் தானே........நீயே குடு. என்ன இருக்கு இதுல?" என்று கேட்டவனிடம்
"இதை கையில வச்சிருந்தன்னா தான் எல்லார் கூடவும் நானும் உனக்கு ஆரத்தி எடுப்பேன்!" என்று ஒப்பந்தம் போட்ட கவியை முறைத்த படி அந்தப் பெட்டியை தன் கையில் வைத்துக் கொண்டான் ஜீவானந்தன்.
ஜெயந்தன், பத்மா, மாணிக்கம், சரஸ்வதி ஆகியோரின் காலில் விழுந்து வணங்கியவன் பண்ணையில் வேலை பார்க்கும் அனைவரையும் நலம் விசாரித்தான். விரிந்த புன்னகையுடன், கூப்பிய கைகளுடன் ஆறடி அழகனாய் இருந்த தன் மகனைப் பார்த்து கண்கலங்கிய ஜெய் நந்தன்,
"நிலாம்மா உன் புள்ளைக்கு சுத்தி போடுடீ..... என் கண்ணே பட்டுடும் போலிருக்கு!" என்று சொல்லி விட்டு அவசரமாக கண்களை துடைத்து கொண்டார். இல்லையென்றால் பண்ணையாரம்மாவிடம் யார் வசவு வாங்குவது?.....
தன் தங்கைகளை கட்டிக் கொண்டு நின்றவன் விவேக்கிடம், "நல்லா இருக்கீங்களா சித்தப்பா?" என்று நலம் விசாரித்தான். அவர் மன மகிழ்ச்சியுடன் தலையசைத்து விட்டு, "நல்லா வளர்ந்துட்ட ஜீவாம்மா.....அப்பா மாதிரியே இருக்க!" என்றவரிடம் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு வாசலில் வந்து நின்றான்.
தன் அன்னை மற்றும் தந்தையை பார்த்து புன்னகைத்தவன் கழுத்தில் பார்கவ் மாலையிட்டான். "வெல்கம் பேக்டா மச்சி!" என்று சொல்ல இருவரும் கண்கலங்கிய படி ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டனர்.
நிர்மலா, மீரா, கீதா, கவிப்ரியா, ஷைலு, இனியா அனைவரும் சேர்ந்து நின்று கொண்டு அவனுக்கு ஆரத்தி எடுத்தனர். மகிழ்ச்சியின் நிறைவு அவர்கள் கண்ணீரில் அப்பட்டமாகத் தெரிந்தது.
"டேய் மச்சான் என்ன சும்மா நின்னு லுக் விட்டுட்டு இருக்க? ஆரத்தி எடுத்ததுக்கு ஆளாளுக்கு ஒரு பவுன் சித்தப்பா கிட்ட வாங்கி குடுக்கணும்......ஓகேவா?" என்று கேட்க ஜெயந்தன் நிஜமாகவே பொற்காசுகளை கவிப்ரியாவின் கையில் கொடுத்து விட்டு சென்றார்.
"இங்க பாருடா ஒண்ணு கேட்டா ரெண்டு வருது.....இந்த பையன் பெரிய அப்பாடக்கர் தான் போலிருக்கு!" என்றாள் உதட்டுச் சுழிப்புடன்.
ஓரமாக நின்று கொண்டு இருந்த தன் மாமனை கையசைத்து கூப்பிட்டவள், "ஜீவா உனக்காக என்ன வாங்கிட்டு வந்து இருக்கான்னு பாரு மாமா! ஜீவா அப்பா கிட்ட உன் கிப்டை கொடுக்கலையாப்பா?" என்று கேட்ட படி பெட்டியை பிரித்தாள் கவிப்ரியா. மெல்லிய முணங்கல் சத்தத்துடன் இரு நாய்க் குட்டிகள் பெட்டியில் இருந்து தலையை நீட்டியது.
"கடை கடையா ஏறி நீ மிஸ் பண்ணின சக்தி, முத்துவை உனக்கு மறுபடியும் வாங்கி குடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி லுக் விட்டுட்டு நிக்கிறான் பார்த்தியா?" என்று கேட்டு விட்டு ஜீவாவை பார்த்து கண்சிமிட்டினாள் கவிப்ரியா.
"என்ன இதெல்லாம்?" என்று கண்களால் கேட்டவனை கண்டு கொள்ளாமல் நாய்குட்டிகள் இரண்டையும் பிடித்து தன் மாமனின் கைகளில் ஒப்படைத்தாள்.
ஏற்கனவே குற்ற உணர்வில் நின்று கொண்டு இருந்தவர், தன் மகன் தனக்கு தேவையான பரிசினை கொண்டு வந்து தரவும் கண்ணீருடன், "தேங்க்யூ ஆனந்த், ரொம்ப தேங்க்ஸ்! நான் உனக்கு நல்ல அப்பாவா இல்லைன்னாலும், நீ எனக்கு ரொம்ப நல்ல புள்ளைப்பா!" என்று அவர் கண்களில் நீருடன் சொல்ல ஜீவானந்தனின் கைகள் தன் தந்தையின் கண்ணீரை துடைத்து விட்டு அவரை அணைத்துக் கொண்டது அவனுடைய அனுமதியே கேட்காமல்!
"உள்ள போகலாம் வாங்க!" என்று அழைத்தவனை பார்த்த ஜெய் நந்தனிடம் தன் மகன் சீக்கிரம் தன்னிடம் உறவை ஏற்படுத்திக் கொண்டு விடுவான் என்ற நம்பிக்கை ஒளிர்ந்தது.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro