💟 ஜீவாமிர்தம் 12
ஜெய் நந்தன் ஊருக்கு கிளம்பி போய் மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவர் கிளம்பும் போதும் தனித் தனியாக ஒவ்வொருவரிடமும் சென்று தன் மகனை ஆனந்த ஸாகரத்துக்கு கூட்டி வந்து விடுங்கள் என்று முடிந்தவரை புலம்பி விட்டு தான் சென்றார். நிர்மலா வழக்கம் போல ஒரு சிறு சிரிப்புடன் அவருடைய அலப்பறைகளை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தார்.
கவிப்ரியா உறுதியாக ஜீவானந்தனை கூட்டி வருவதாக அவரிடம் ஒத்துக் கொண்ட பின்னர் தான் சற்று அமைதியடைந்து கிளம்பினார்.
அன்று காலையில் பலராமும், கீதாவும் அவரவர் வேலையை கவனிக்க அவரவர் நகைக்கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது கீதா அவரை நிறுத்தி, "ராம் ஒரு பத்து நிமிஷம் உன் கூட பேசணும். நீ ஃப்ரீயா?" என்றார் கீதா.
விரிந்த புன்னகையுடன் தன் மனைவியை அணைத்துக் கொண்டு, "என் க்யூட்டி டைம் கேட்டா நான் எவ்வளவு பிஸியா இருந்தாலும் ஃப்ரீ ஆகிட வேண்டியது தான்...... சொல்லும்மா! என்ன பிரச்சனை? பாகியா....ராகியா..... எந்தப் புழு உனக்கு குடைச்சல் குடுக்குறது?" என்று கேட்ட தன் கணவனிடம் சிரிப்புடன்,
"எனக்கு பிரச்சனைனா அது பசங்களால தான் இருக்குமா? ஏன் நீயெல்லாம் குடைச்சல் குடுக்குறது இல்லையாக்கும்?" என்று கேட்ட தன் மனைவியை முத்தமிட்டு,
"நானெல்லாம் ரொம்ப அப்பாவி பையன்டீ, வீடு அதை விட்டா ஜ்வல்லரின்னு வாழ்ந்துட்டு இருக்கிற பரிதாபமாகரமான ஜீவன்..... ஏதாவது அட்வென்சர், ஒரு த்ரில் எதுவுமே இல்லாம என் லைஃப் ரொம்ப ட்ராஜெடியா போயிட்டு இருக்கு. இதுல உனக்கென்னம்மா நான் தொந்தரவா இருக்கேன்?" என்று கேட்ட தன் கணவனை இடுப்பில் கட்டிக் கொண்டு,
"ராம் கண்ணா, இந்த தடவை மலைக்கு போகும் போது நீயும் நானும் மட்டும் யாருக்கும் தெரியாம கழண்டுகிட்டு பைக்ல போகலாமா? இட் வில் பீ மோர் ஃபன்!" என்று கேட்ட தன் மனைவியை பார்த்து, "சூப்பர்டா க்யூட்டி! ரொம்ப நாளாச்சு. நைஸா எஸ்கேப் ஆகிடுவோம்!" என்று கண்சிமிட்டி புன்னகைத்தார் பலராம்.
"ஹலோ மிஸஸ் & மிஸ்டர் பலராம், எங்க எஸ்கேப் ஆக ப்ளான் போட்டுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?....... எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்க...... கீது காது வலிக்குது. ஏதாவது செய்யேன்!" என்று கன்னத்தில் கை வைத்து கொண்டு பேசிய மகனிடம்,
"என்னடா ஆச்சு? என்ன திடீர்னு காதுவலிங்கிற..... எதனால? நீ இன்னிக்கு உன் ஆஃபிஸுக்கு போகலையா?" என்று கேட்டார் கீதா.
"சரஸ செக்கப் கூட்டிட்டு போகணும். அதனால ஆப்டர்நூன் தான் வருவேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். என் அஸிஸ்டென்ட் பார்த்துப்பான். எதனால காது வலின்னா கேட்ட..... உங்க அண்ணன் பையன் இருக்கானே; வருஷ நாட்டு வல்லாள கண்டன்....... என்னை அறைஞ்சுட்டான். அதுனால தான் எனக்கு காது வலி...!" என்று சொன்னவனிடம் பலராம் சந்தேகப் பார்வையை செலுத்தியவர்,
"ஜீவா அடிக்கிற அளவுக்கு நீ என்னடா தப்பு செஞ்ச? அவனுக்கு லேசுல கோபம் வராதே......" என்று கேட்டார்.
"ஆமா; வந்தா தான் பேய்த்தனமா வருதே...... யம்மா என்ன வலி; நான் ரூ......ம்ஹூம்; ஒண்ணுமில்ல. மறுபடியும் உங்க கிட்ட வேற அடி வாங்கினா காது கேக்குறது டவுட்டு தான். தப்பை நான் தான் செஞ்சிட்டேன். என்னை விட்டுடுங்க...... இன்னும் ஷாப்புக்கு கிளம்பாம ரெண்டு பேரும் என்ன வெட்டி அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்க?" என்று கேட்டான் பார்கவ்.
"உனக்கு கல்யாணம் பண்ணனும்னு தான் அப்பாவும், நானும் பேசிட்டு இருந்தோம்டா.....
பொண்ணு பேரு அபிநயா; எம்.எஸ்சி மேத்ஸ் படிச்சிருக்கா; நல்ல பொண்ணு! உனக்கு ஸுட் ஆவா!" என்று சொன்ன தன் அன்னையிடம் எரிச்சல் குரலில்,
"கீது ப்ளீஸ்...... எனக்கு கல்யாணம் எல்லாம் நம்ம கவிம்மா கல்யாணம் முடிஞ்ச பிறகு யோசிக்கலாம். ஆனா அப்ப கூட நீ சொன்ன பேருல இருக்கிற பொண்ணு வேண்டவே வேண்டாம். நல்ல பொண்ணை பார்த்த.... எனக்கு கருப்பாயி, ராமாத்தா இந்த மாதிரி பேருன்னா கூட ஓகே தான்; ஆனா நீ சொன்ன பேரும், அந்த பேருல இருக்கிற எவளும் வேண்டாம். வலி கம்மியாக கொஞ்சம் ஒத்தடம் குடுத்தா பெட்டரா இருக்கும் ன்னு நினைக்கிறேன்! நான் போய் ட்ரை பண்ணி பார்க்குறேன்!" என்று தன் தாயிடம் சொல்லி விட்டு விடைபெற்று சென்றான் பார்கவ்.
சிரிப்புடன் நின்று கொண்டு இருந்த கீதாவிடம், "கீதும்மா அபிநயான்னா யாரும்மா? பாகி என்ன புதுசா டென்ஷன் ஆகிட்டு போறான்; கருப்பாயி.....ராமாத்தா; என்னம்மா இதெல்லாம்!" என்று புன்னகைத்தவரிடம்
"டோண்ட் வொர்ரி மிஸ்டர் பலாமரம்.... உங்க மருமக பேரு அபிநயா தான்! நம்ம இளவரசர் லவ் பண்ணி ரெண்டு பேருக்குள்ள ப்ரேக் அப் ஆகிடுச்சு போலிருக்கு! அந்த பொண்ணை கண்டுபிடிச்சு, அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சுகிட்டு, அந்த பொண்ணை நம்ம பையன் கூட சேர்த்து வைக்கணும். இது தான் நான் சொல்ல வந்த விஷயம். உங்க இன்வெஸ்டிகேவிட்டிவ் மைண்ட கொஞ்சம் தட்டி எழுப்பலாம்ல.....!" என்று கேட்ட தன் மனைவியிடம் கை கொடுத்து விட்டு,
"சூப்பர்.....ரொம்ப நாளுக்கு அப்புறம் பையன் மூலமா மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. அந்த பொண்ணை கண்டுபிடிச்சு, காரணத்தை தெரிஞ்சுக்கறது வரைக்கும் நான் செஞ்சிடுவேன் கீது. பட் இந்த விஷயம் எல்லாம் யார் உனக்கு சொன்னா? அந்த பொண்ணை எப்படி மறுபடியும் உன் பையனோட பேட்ச் அப் பண்ணி விடுறது இதெல்லாம் நீ தான் யோசிக்கணும். ஏன்னா நான் பாகிக்கு அப்பா!" என்று சொன்ன தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு,
"நம்ம பேமிலியில மீரா, அஜு மாமா லவ்வை யாரும் அப்ஜெக்ட் பண்ணல. நீ என்னை பார்த்தவுடனே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னதுக்கு கூட எங்க மாமியார் அப்ஜெக்ஷன் சொல்லல, அப்புறம் நாம மட்டும் ஏன் நம்ம பையன் லவ்வுக்கு தடை சொல்லணும்.....? நம்ம ஷைலு பாகி கிட்ட ப்ரெண்ட்லியா பேசிட்டு இருக்கும் போது தான் இந்த பையன் அவனோட லவ் மேட்டரை அவ கிட்ட சொல்லியிருக்கான். அவ தான் என் கிட்ட பாகி அத்தான் வல்வை சேர்த்து வைங்க அத்தைன்னு ரெக்வெஸ்ட் பண்ணினா. ஆனா இந்த காலத்துல பசங்களுக்கு 16, 17 வயசுல லவ் வந்துடுது. ரெண்டு, மூணு வருஷம் முடிஞ்சதுக்கப்புறம் ப்ரேக் அப் பண்ணிக்குறாங்க. இவங்க எல்லாம் அவங்களோட காதல்ல உண்மையான புரிதலோட தான் இருக்காங்களா ராம் கண்ணா?" என்று கேட்ட தன் மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டு,
"இந்த காலத்துல பசங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம் கீதும்மா! ஆனா பாகி சரியான பையனா தான் இருப்பான். அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னா கடைசி வரைக்கும் தனியா தான் இருப்பானே தவிர, வேறொரு பொண்ணு பின்னால போக மாட்டான்ங்கிற நம்பிக்கை இருக்கு. ஸோ அதுக்காகவாவது அந்த பொண்ணை சீக்கிரம் கண்டுபிடிச்சு பாகி கூட சேர்த்து வைக்கணும். பார்க்கலாம். நீ உன் பலாமரத்துக்கு ஒரு ஹக் அண்ட் கிஸ்ஸோட ஆல் தி பெஸ்ட் சொல்லு பார்ப்போம்!" என்று கேட்டவரிடம் புன்னகையுடன் கட்டிப்பிடித்து முத்தம் தந்து கீதா வாழ்த்து தெரிவிக்க இருவரும் இணைந்து அவர்கள் வேலைகளுக்கு கிளம்பினர்.
அன்று மாலையில் கவிப்ரியா ஜீவானந்தனை அலைபேசியில் அழைத்தாள்.
"ஹாய் கேப்ஸி! என்னடீ திடீர்னு போன் எல்லாம்? என்ன விஷயம்?" என்று கேட்ட தன் மாமன் மகனிடம்,
"டேய் நாளைக்கு மலைக்கு கிளம்பணும்ல; டார்லிங்க்கு ஒரு கிப்ட் வாங்கணும். அதை பார்த்து நீ ஓகேவான்னு சொல்லணும். வீட்டுக்கு வர்றியா? நாளைக்கு ஊருக்கு போய்ட்டு நீ எப்படா திரும்ப வருவ? நீ வர்ற வரைக்கும் உன்னை மிஸ் பண்ணுவேன் நந்து!" என்று சொன்னவளிடம் கிண்டல் குரலில்,
"உன் மாமாவுக்கு நீ கிப்ட் வாங்குற; அதுல நான் ஒப்பீனியன் சொல்றதுக்கு என்ன இருக்கும்மா...... பேசாம இருந்தாலும், பேசினாலும்; பார்த்து முறைச்சாலும், சிரிச்சாலும் உனக்கு தினமும் என் முகம் தான் வேணுமாடீ....... ஆனா இதுவரைக்கும் உனக்கு என்னை டார்லிங்னு கூப்பிடணும்னு ஒரு நாள் கூட தோணலயா அம்முலு....!" என்று ஏக்கக் குரலில் கேட்டவனிடம்
"அய்யே.........உன்னையவா; ம்ஹூம்! நீ எல்லாம் அந்த கேட்டகிரிக்கு செட் ஆக மாட்ட செல்லம்!" என்று சொல்லி விட்டு கவிப்ரியா சிரிக்கவும்,
"நா எல்லாம் உனக்கு லவ்வரா செட் ஆக மாட்டேன்ல..... அப்புறம் ஏன்டீ கால் பண்ணி என்னை கூப்பிட்டுட்டு இருக்க..... உங்க மாமாவை கட்டிப் பிடிச்சுட்டு அவர் கழுத்துலயே தொங்கு.... போ! ஊருல இருந்து திரும்பி வந்து என்னோட இம்சை இல்லாம சந்தோஷமா, நிம்மதியா இரு! போனை வை!" என்று சொல்லி விட்டு ஜீவா நொட்டென்று அலைபேசியை தூக்கி வீச நல்ல வேளையாக அது அவனுடைய க்ளையண்ட்ஸ் அமரும் ஸோஃபாவில் விழுந்து கிடந்தது.
"தாஸ்..... நான் நாளைக்கு எங்க நேட்டிவ்க்கு கிளம்பறேன். ஸோ நீங்களும், மத்த ரெண்டு அசிஸ்டெண்ட்ஸ் ம் லீவ் எடுத்துக்குங்க. நான் திரும்பி வர்றதுக்கு ஒரு வாரம், பத்து நாள் ஆகலாம். அதுவரைக்கும் நீங்களும் ஜாலியா பேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க!" என்று சொன்னவனிடம்,
"ஒரு வழியா நீங்க எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்த நாள் வந்துருச்சு போல ஸார்......
சந்தோஷமா எல்லார் கூடவும் போய் ஜாயிண்ட் அடிச்சிடுங்க. பெரியவங்க கொஞ்சம் முறுக்கிக்க தான் செய்வாங்க. நீங்க இயல்பா போய் அவங்க கிட்ட பேசிடுங்க....எல்லாம் சரியாகிடும்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஸார்!" என்று கை குலுக்கியவனிடம் மலர்ந்த முகத்துடன் "தேங்க்யூ தாஸ்! இந்த மன்த் எண்ட்ல சாலரி எல்லார் அக்கவுண்ட்டுக்கும் க்ரெடிட் ஆகிடும். பை தாஸ்!" என்று கையசைத்து விட்டு தன் ப்ளாட்டுக்கு கிளம்பினான் ஜீவானந்தன்.
மூளையின் கட்டளையை கைகள் உதாசீனம் செய்து அவனது கார் அர்ஜுன் வீட்டுக்கு சென்று நின்றது.
"உனக்கு கொஞ்சம் கூட சூடு, சொரணையே இல்லையா? இப்போ உள்ள போய் நின்னதும் கழுவி ஊத்துவா! வாங்கிட்டு பல்லைக் காட்டு!" என்று தன் மனசாட்சி திட்டிக் கொண்டு இருக்க அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வேக நடையுடன் உள்ளே நுழைந்தான் ஜீவா.
சமையல் அறைக்குள் இருந்து வெளியே வந்த மீரா, "வா ஜீவாம்மா.....இன்னிக்கி ஈவ்னிங் 7 மணிக்கு நான், கீதா அத்தை, அஜு மாமா, ராம் மாமா, பார்கவ், சரஸ் பாட்டி எல்லாரும் சேர்ந்து ஊருக்கு கிளம்புறோம். ஆனா எனக்கு பொறந்த ராங்கி ஒண்ணு இருக்கு பாரு, அது நாளைக்கு தான் கிளம்பப் போகுதாம். எதோ ஒரு கிப்ட் க்கு சொல்லி வச்சுருக்காளாம். அத வாங்கிட்டு தான் வருவேன். நீங்க எல்லாரும் கிளம்புங்கங்குறா.... நீயும் நாளைக்கு தானே ஊருக்கு......!" என்று கேட்ட தன் அத்தையிடம்,
"உன் பொண்ணு வந்தா தான் நானும் வர முடியும் மீராத்தை..... அப்புறம் எதுக்கு தேவையில்லாம ஒரு கேள்வி வேற........ நான் இங்க தங்கியிருந்து அவளை கூட்டிட்டு வர்றேன்! நீங்க கிளம்புங்க. இப்போ நீ என்ன பண்ற..... என்னோட பௌலை எடுத்து, சாப்பாடு வச்சு, கூட்டு சேர்த்து, நெய் ஊத்தி பிசைஞ்சு வாயில ஊட்டி விடு. அப்புறம் பசிச்சா கொஞ்சம் ப்ரூட்ஸ் சாப்பிட்டு டின்னரை கம்ப்ளீட் பண்ணிக்குறேன்!" என்று தன் அத்தையின் தோளில் தலை சாய்த்து அமர்ந்து இருந்த ஜீவானந்தனை முறைத்த படி அவன் அருகில் வந்து நின்ற கவிப்ரியா,
"ம்மா! ரெண்டு, மூணு நாள் ஊர்ல இருக்கணும்ல.... எனக்கு டிரெஸ் செலக்ட் பண்ணி குடு. நான் லக்கேஜ் பேக் பண்ணணும்!" என்றாள் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு.
"இருடா கவிம்மா ஜீவாக்குட்டி வயிறு பசிக்குதுன்னு சொன்னான். அவனுக்கு ஊட்டி விட்டுட்டு உனக்கு பேக்கிங் பண்ணி தர்றேன்!" என்று சொன்ன மீராவிடம்,
"உன் ஜீவாக்குட்டியை ஊட்டியில விடுறது; கொடைக்கானல்ல விடுறது எல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீ கிளம்பு!" என்று சொன்ன தன் மகளிடம், "அவன் பசி தாங்க மாட்டான்டீ!" என்று கெஞ்சலுடன் திரும்பிப் பார்த்துக் கொண்டு மேலே ஏறினார் மீரா.
கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவனிடம், "என்னடா பிரச்சனை உனக்கு? நான் தானடா உன் லவ்வர்..... அப்போ நீ என் கிட்ட தான உனக்கு சாப்பாடு ஊட்ட சொல்லி கேட்டுருக்கணும். எங்கம்மா தோளை பிடிச்சுட்டு கொணட்டிகிட்டு நிக்குற. இரு உன் வாயை மீன் உரசுற கல்லை எடுத்துட்டு வந்து உரசுறேன்!" என்று கொதித்து பேசிக் கொண்டிருந்த போது ஜீவானந்தன் குறும்பு சிரிப்புடன்,
"உனக்கு இப்போ என்ன.... என் வாய்க்கு தண்டனை குடுக்கணும். அவ்வளவு தானே? வாய்க்கு தண்டனை குடுக்க ஈஸியான மெத்தட் எவ்வளவு இருக்கு.... அதை விட்டுட்டு கல்லை எடுத்து உரசுறேன்னுட்டு...... உன் லிப்ஸால வேணுங்கிற அளவுக்கு தண்டனை குடு. நான் ரெடிப்பா....." என்று கண்சிமிட்டிய படி அவள் இதழ்களை விரல்களால் வருடியவன் கைகளை தட்டி விட்டு,
"அம்மா மேல இருக்கற தைரியத்துல தப்பு தப்பா பேசுறியா..... ச்சீ உன்னை போய் எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்களே...." என்றவள் சமையலறைக்குள் சென்று சாதத்தை எடுத்து வந்து, "வாயைத் திறடா. ஊட்டி விடுறேன்!" என்று சொல்லி விட்டு தன் காதலனுக்கு சாதத்தை ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.
ஜீவாமிர்தம் சுரக்கும்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro