" விக்கி " என்று அழைத்தவனின் குரலில் நிமிர்ந்துப் பார்த்தவன் அங்கிருந்த வருணைக் கண்டதும் தாயைக் கண்ட சேயைப் போல் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான்.
சுற்றியிருந்தவர்களையெல்லாம் கண்டுகொள்ளாது ரவி ரவி என்று அழுபவனைப் பதிலுக்கு அணைக்காமல் இருந்த வருணின் உடலோ கல்லென இறுகியதோடு மட்டுமில்லாமல் சூரியனின் நிறத்தைத் தத்தெடுத்துக் கொண்ட விழிகளோ அந்த கயவர்களைத் தேடித் தான் அலைந்தது.
எப்படியும் விக்ரம் ,தான் கூற வருவதை கேட்கமாட்டான் என்பதை அறிந்திருந்த வருண் உடனே விஸ்காமில் தனக்குத் தெரிந்திருந்த அனைத்து நண்பர்களிடமும் ஐந்தாவது தளத்திற்கு விரைந்து செல்லுமாறு உத்தரவு பிறப்பித்ததோடு அல்லாமல் புயல் போல் தன் தோழனைத் தேடி வந்திருந்தான்.
"விக்கி இங்கே பாரு ! " என்ற வருணை நிமிர்ந்து நோக்கியவன் அவனை அடிக்க ஆரம்பித்தான்.
" என்னை இப்படி கூப்பிடாதே டா!! உனக்கு ரவி தானே முக்கியமா போயிட்டா? நான் என்ன சொல்ல வரேனு கொஞ்சமாச்சும் கேட்டியா டா? தூக்குத் தண்டனை கைதிக்கு கூட கடைசி வாய்ப்பு கிடைக்கும் டா...ஆனால் எனக்கு"
உதடுகளைக் கடித்து அழுகையைக் கட்டுபடுத்தியவன் தன் சிகையைக் கோதிக் கொண்டே வருணின் முகத்தைப் பார்க்காமல் வேறுபுறம் திரும்பிக் கொள்ள
வருணோ அவனைப் புரியாது பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
" நான் என்னைக்காச்சும் இப்படி அழுதிருக்கேனா டா? இப்போ தினந்தினம் அழுகிறேன் டா !! " என்றவனை வருண் அதிர்ச்சி கலந்த பார்வைப் பார்க்க அதைக் கண்டு ஏளனத்துடன் முகம் சுழித்தவன்
"உன் மாலு அம்மாவைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு மிஸ்டர். வருண்? அவங்களைப் பார்க்காமல் உங்களால ஒருநாள் கூட இருக்க முடியாதே?? இப்போ இருந்து பழகிட்டீங்களோ? நண்பனே வேணாம்னு முடிவானதுக்கப்புறம் நண்பனோட அம்மாவைப் பத்தி எதுக்கு நினைச்சுட்டு அப்படித்தானே வருண்?" என்றவன் வருண் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளைத் தான் படித்துக் கொண்டிருந்தான்.
"ஆனால் நீங்க ஒன்னை மறந்துட்டீங்க!!! அவங்க உங்களை எப்பவுமே பையனோட நண்பனா பார்த்ததில்லை, ஏம் ஐ கரெக்ட் வருண்!! " என்று புருவம் உயர்த்திய விக்ரமை வலி நிறைந்த பார்வை பார்க்க " இப்படிலாம் உங்க கிட்ட பேசி சண்டை போடணும்னு நான் பலநாள் யோசிச்சிருக்கேன் ஆனால் உங்களைக் கஷ்டப்படுத்தவே மனசு வராது...ஆனால் இப்போ நான் ஏன் இதெல்லாம் பேசுனேனு நீங்க யோசிக்கலாம் !!! கடைசி வரை இதெல்லாம் உங்க கிட்ட பேச முடியாமலே நான் போயிட்டா " என்றவன் சிரித்துக் கொண்டே ஆகாயத்தைப் பார்த்து விட்டு வருணைக் காண , விக்ரமின் கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தான் விஷ்வா.
" என்ன டா உன் பிரச்சனை? அவனுக்கு நீயும், மாலு அம்மாவும் எவ்வளவு முக்கியம்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணும்னு இல்லை!!! ஆனால் ரவி அவனுக்கு எவ்வளவு முக்கியம்னு நீ தெரிஞ்சுக்காம போயிட்ட டா!!
அவன் கண் முன்னாடியே போன இரண்டாவது உயிர் டா...
மானு அக்கா இழப்பிலிருந்து அவன் வெளிய வரவே எவ்வளவு நாள் ஆச்சு? மானு அக்கா மாதிரி தானே டா ரவியும்!!! நீ பொறுமையை இழந்த ஒரே காரணத்துனால தான் நம்ம ரவி நம்ம கூட இல்லை!!
கொஞ்சம் நீ பொறுமையா இருந்திருக்கலாமே டா!!! என்றவன் வருணைப் பார்க்க அவன் பார்வை எங்கோ வெறித்திருந்தது.
"ச்ச" என்று தன்னைத்தானே நொந்துகொண்டவன் வருண் என அழைக்க அவன் கண்களில் தெரிந்த வலி விஷ்வாவையும் கலங்கடித்தது என்னவோ உண்மை தான்.
"வா டா போலாம் , உன்னைப் புரிஞ்சுக்காதவன் பேசுறதையெல்லாம் நீ ஏன் கேட்டுக்கிட்டு இருக்க " என்றவன் விக்ரமை முறைத்துக் கொண்டே பிடித்து இழுக்க வருண் என்ற ஆறடி உயரம் அங்கே சிலையென சமைந்து விட்டதை அவன் அறியவில்லை...
பிடித்து இழுத்தும் ஒரு அடி கூட நகராமல் இருப்பவனை நிமிர்ந்துப் பார்க்க "ஒரு நிமிஷம் டா " என்றவன் திரும்பி விக்ரமைப் பார்த்து " ரவி முக்கியமா தான் போயிட்டா விக்கி!!! ஆனால் உன்னை விட இல்லை டா" என்றவனின் கண்களும் கலங்கியதோ என்னவோ!!
வருணை அணைத்துக் கொள்ளத் துடித்த கைகளை அடக்கியவன் இதழோரம் எட்டிப் பார்த்த புன்னகையையும் மறைத்திருந்தான்.
என்னை விட அவள் முக்கியமோ என்ற ஆற்றாமையில் உதிர்த்த வார்த்தைகள் தான் இத்தனையும்!!!
அதை அவன் புரிந்துக் கொண்டு பதிலும் அளித்து விட்டானே என நினைத்தவன் கைகளைக் கட்டிக் கொண்டு "ஓஓ " என்று கூற
" ஆனாலும் என்னால உன்னை இப்போதைக்கு மன்னிக்க முடியாது டா!! எப்போ மன்னிப்பேனு தெரியாது !!! கடைசி வரை அது நடக்காம கூட போகலாம், ஆனால் நீ , நீ மட்டும் தான் டா எனக்கு முக்கியம்!!! உனக்கு ஏதாவதுனா என்னால தாங்கிக்க முடியாது , அவங்களை நான் சும்மாவும் விடமாட்டேன் " என்று இறுதி வரிகளை மட்டும் அழுத்திக் கூறியவன் " விக்கிக்கு ஏதாவதுனா இந்த வருண் எந்த எல்லைக்கும் போவான்!!!எல்லாருக்கும் புரியும்னு நினைக்கிறேன்" என்றவனின் பார்வையோ அங்கு ஓரத்தில் குரோதத்துடன் விக்ரமைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரவீணாவைத் தான் நோக்கியது.
முகத்தை முழுவதும் மூடியிருந்தாலும் அவள் விழிகளில் தெரிந்த குரோதம் ஒரு நொடி அவனையும் அச்சம் கொள்ள வைத்துவிட்டது.
அதற்காகத் தான் இப்படி உரக்கப் பேசியது.
விக்ரமின் புறம் திரும்பி அவன் கன்னத்தில் அறைந்தவன் "எல்லாம் பேசியாச்சா? மிஸ்டர். விக்ரம் " விக்கி கூறியதைப் போல அவனும் அப்படியே அழைக்க அடித்ததில் அதிர்ந்த விக்கி, இப்போது வருணைப் பார்த்து முறைக்க
" இந்த லுக் தான் நல்லாருக்கு, இப்படியே முறைச்சுட்டே இரு ! டாடா பாய்" என்றவன் விஷ்வாவுடன் கிளம்பிவிட்டான்.
" இந்த பாழாய்ப் போன காதல் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் , காதல்னு முன்னாடி யாரு வந்தாலும் துப்பாக்கியால அவங்களை சுட்டுக் கொல்லணும் " என்று புலம்பியபடியே வந்த வருணின் பேச்சைக் கேட்டதும் ஒரு நிமிடம் ஜெர்க்காகி நின்றவன் அடுத்த நொடி சத்தமாக சிரித்துவிட்டான்.
" பைத்தியமா இவன் " என்றதொரு வருணின் பார்வையைக் கூட விஷ்வா கண்டுகொள்ளவில்லை.
" துப்பாக்கியை ரெடி பண்ணி வெச்சுக்கோ டா மச்சான் " என மனதினுள்ளே வருணின் முகத்தைப் பார்த்தவாறே நினைத்தவன் தலையை கோதிக் கொண்டே
" ஒன்னுல்ல வா " என்றவனுக்கோ காலையில் நடந்த சம்பவங்கள் தான் நினைவலையில் ஓடியது.
"ஏய் சில்லிபவுடர் நில்லு " என்றவனை " என்ன டா " என்ற லுக்கில் அஞ்சு பார்க்க ,
" இதெல்லாம் வேணாம் , விட்டுரு ! உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன் " என்ற விஷ்வாவை "ஐயோ யார் பெத்த பிள்ளையோ பைத்தியம் போல உளறிக்கிட்டு இருக்கு " என்றவள் அவனைக் கண்டுக்கொள்ளாமல் லாலிபாப்புடன் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
"ஏய் உன்னைத்தான் " என்றவனிடம்
"நான் அஞ்சனா , ஏய் அப்புறம் சில்லிபவுடர் இல்லை " என்றவள்
" கால் மீ அஞ்சு ஆர் அஞ்சனா " எனக் கூற
"மிஸ். அஞ்சனா ரங்கன் , உங்களுக்கு உங்க ஊருல தினேஷ் ,சதீஸ்னு எவனாச்சும் கிடைப்பான் அவனைப் போய் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கோங்க !!! என் வருணை விட்டுடுங்க " என்றவனை விழி விரித்து நோக்கியவள்
" இவனுக்கு எப்படி தெரிஞ்சுது " என யோசிக்க ஆரம்பிக்க
" ஹலோ " என்றவனின் குரலில் "என்ன " எனக் கடுப்புடன் கேட்டவளின் குரலில் இருந்த காரசாரம் அவனையும் தாக்கியது போல...
"புரிஞ்சுதா?" எனக் குரலைத் தாழ்த்திக் கேட்க
"ஓஓ நல்லா புரிஞ்சுது " என்று நாலு பக்கமும் அஞ்சு தலையை ஆட்ட
" குட் " என்றவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
"விஷ்வா பாய் " என்றவளின் அழைப்பில் திரும்பி பார்த்தவனை
கை நீட்டி அழைத்தவள் அவன் வராமல் அங்கேயே நிற்பதைக் கண்டு அவன் அருகில் சென்றாள்.
"புரிஞ்சுதானு கேட்டீங்க நானும் புரிஞ்சுதுனு சொன்னேன் ஆனால் என்ன புரிஞ்சுதுனு கேட்கலையே ?" என்று புருவம் தூக்கி வினவியவளை மனதினுள் வசை பாடியவனின் மைன்ட் வாய்ஸ் என்னவோ சொல்லும் சொல்லித் தொலையும் என்பது தான்.
"எங்க ஊருல எனக்கு மாப்பிள்ளைப் பார்க்க நீங்க என்ன புரோக்கரா? ஓஓ பார்ட் டைம் வேலையா? குட் குட் " என்றவள் அவன் முறைப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் "சரி கேட்டுக்கோங்க விஷ்வா பாய் !! எனக்கு ஆறடி உயரத்துல அப்படியே ரசகுல்லா மாதிரி ஒரு பையன் வேணும் !!! ஏன் அது பாலிவுட் ஆக்டர் சித்தார்த் மல்ஹோத்ராவா இருக்கலாம் , கோலிவுட்ல வருண் தேஜ்ஜா இருக்கலாம் , நம்ம காலேஜ்ல படிக்கிற வருணா கூட இருக்கலாம் !!! எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை" என்றவள் லாலிபாப்பை சுவைத்துக் கொண்டே
"ரசகுல்லா மாதிரி மாப்பிள்ளை முக்கியம் பிகிலு " என்றவாறே நடந்து செல்ல
" பைத்தியம் " என்ற விஷ்வாவோ கோபத்தில் தரையில் காலை எட்டி உதைத்தான்.
"பாத்து பாத்து அடிப் பட்டுட்டா எனக்கு மாப்பிள்ளை பார்க்குறது டிலே ஆயிடும் விஷ்வா பாய்..." என்ற அஞ்சுவை முடிந்தளவு முறைத்தவன் "விளையாடாத அஞ்சனா! அவன் பாவம் ,அவனுக்கு இந்த காதலெல்லாம் செட் ஆகாது புரிஞ்சுக்கோ" என்றவனிடம்
"நீங்களும் புரிஞ்சுக்கோ விஷ்வா அண்ணா, வரு இல்லாம என்னாலையும் இனி இருக்க முடியாது...கண்டிப்பா அவனை நான் நல்லா பார்த்துப்பேன் " கண்கள் கலங்கிய நிலையில் நின்றவளின் தோற்றம் மனதை வதைத்தாலும் தன் நண்பனைப் பற்றி தெரியும் என்பதால் "உன் காதல் தோல்வில தான் முடியும் அஞ்சனா...நான் அதை ஜெயிக்க விடவும் மாட்டேன் " என்று கூறி விறுவிறுவென்று நடந்து சென்றுவிட்டான்.
"வரு எனக்கு தான்...அவனை இந்த அஞ்சு கடைசி வரை காதலிச்சுட்டு தான் இருப்பா " என்று அஞ்சனா கத்தியது கேட்டாலும் விஷ்வா நிற்கவில்லை...
ஆனால் நின்றது வேறு ஒரு உருவம்!!!
அஞ்சனா கூறியதை நினைத்துப் பார்த்தவனுக்கு மனதின் ஓரம் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.
இனி என்ன ஆகுமோ? ஆனால் முயன்றவரை இருவரையும் சந்திக்க விடக் கூடாது எனக் கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டே வருணுடன் சேர்ந்து விஷ்வா நடக்க,
" பெருமானே வரு எனக்கு வேணும், நீங்க தான் அதுக்கு உதவி பண்ணனும்" என அஞ்சுவும் வேண்டுதலை வைத்துக் கொண்டே வகுப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
இருவரின் வேண்டுதலையும் கேட்ட கடவுளோ கன்ப்யூஸன் ஆகி ஸ்விட்ச் ஆப் மோடிற்கு சென்று விட்டார்.
வணக்கம் ,
பல மாதங்கள் தலைமறைவாகி இப்போ யூடியோட வந்துட்டேன்...
திட்டுறவங்க திட்டிக்கலாம் பட் மனசுல ஓகே😝
எப்படியும் கமெண்ட்ஸ் வராது எதுக்கு அப்டேட் போட்டுட்டுனு தான் நானும் லீவ் விட்டேன்...அதுக்கப்புறம் வேலைல பிஸியாகிட்டேன்😒
நானா எந்த தப்பும் பண்ணல...
இப்பவும் அப்படிதான்😂
கமெண்ட்ஸ் தான் அடுத்த அப்டேட்
எப்போ அப்படினு தீர்மானிக்கும்....
நன்றி🚶♀
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro