Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நாணல் - 13


கனமழையானது வெளியே கொட்டிக்கொண்டு இருந்தது. ஐப்பசி மாதத்தில் இதுவே முதல் மழை. இரவிலிருந்து விடாது பொழிந்த மழையானது ஏற்படுத்திய தாக்கம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்குமளவு கோவை மாநகரத்தையே குளுமையாகியிருந்தது அந்த மாரி. 

இன்னும் செல்ல மாட்டேன் என அடம் செய்த மழையானதை வெளியே எட்டி எட்டி பார்த்தபடி இருந்தாள் ஆரபி. 

"எத்தனை தடவை பாத்தாலும் அதுக்கு எப்ப தோணுதோ அப்போ தான் ஆராம்மா நிக்கும்" 

குளித்து வந்த பார்த்திபன் எந்த உடையை எடுக்கலாம் என யோசிக்க அதற்கு முன்பே அவனுக்கு உடையை எத்தாள். 

கண் உறுத்தாத எலுமிச்சை மஞ்சள் நிறத்தை விட நிறம் கம்மியான மஞ்சள் நிற சட்டை அது. அதற்கு பொருத்தமாக வெள்ளை நிற காற்சட்டை எடுத்து வைத்திருக்குந்தாள். 

மனைவியை கழுத்தை வளைத்து திரும்பி பார்த்தான், இன்னும் திரை சீலையை விளக்கி மழையின் அளவை தான் கண்காணித்துக் கொண்டிருந்தாள். 

"ஆராம்மா, ஆதார் எடுத்து தாயேன்" அவள் கவனத்தை ஈர்க்க முயன்று வேலை கொடுத்தான். 

இன்று பார்த்திபன், விஷ்ணு பெயரில் அந்த குடவுன் மாற்றும் நாள். மனைவிக்காக அவள் விருப்பத்தின்படி அவள் தந்தை குறித்துக்கொடுத்த நாளில் தான் பத்திரப்பதிவினை வைத்துள்ளனர். 

"இங்க இல்லையே ன்னா, உங்க ஆபீஸ்ல எதுவும் வச்சிட்டேளா?" அலமாரியில் தேடிக்கொண்டிருந்த மனைவியின் பின்னிருந்து அணைத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து ஆழ்ந்த மூச்சை இழுத்தான். 

அவன் நிம்மதி அவள் வாசனை. அவன் அமைதி அவள். 

"நல்லா பாரு மாமி. இங்க தான் வச்சிருப்பேன்" அவள் இடை வழியே கை விட்டு அவளுக்கு உதவுகிறேன் என அல்சாட்டியம் செய்தவனை திரும்பி பார்த்தவளுக்கு இதழில் சிரிப்பு தான். 

அவனும் தேடுவதை நிறுத்தி மனைவியை பார்த்தான், "ஏன் மாமி டென்ஷன்?" 

"மழை விடாம தூறிண்டே இருக்கே ன்னா" 

"நம்ம என்ன டூ வீலர்லயா போக போறோம், கார் தானே" 

அவள் உடையை பார்த்தான் பார்த்திபன், "நீ கெளம்பலையா?" புருவம் சுருங்கியது அவளது உடையின் எளிமையில். 

தன் இடை வளைந்திருந்த அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள் கணவனை சமாளிக்கும்பொருட்டு, "நீங்க போய்ட்டு வாங்களேன் ன்னா" கண்களை சுருக்கி கெஞ்சினாள்.

"ஏன்?" கேள்வியோடு அவன் பார்வையும் மனைவியை துளைத்தது. 

"கோவிலுக்கு போகணும் ன்னா" 

"டைம் இருக்குல வா கோவில் போய்ட்டு ரெஜிஸ்டர் ஆபீஸ் போகலாம்" 

"இல்ல நேரமாகிடும்" அவளை விட்டு விளங்கியவன், "கெளம்பு ஆரபி. பாப்பாவை நான் கெளப்புறேன்" குழந்தையும் அந்நேரம் எழுந்து நேராக அவள் தகப்பனிடம் வந்தாள். 

"பூர்வி அப்பா சட்டை கசங்குத்துடா. நீ வா இங்க" குழ்நதை முகம் உடனே சுருங்கி போனது. 

"வேணாம்" என்றவன் சட்டையை அவிழ்த்து மகளை தூக்கி கிளப்ப தயாரானான். 

அவனை பாத்திருந்த ஆரபி பார்வை மீண்டும் மழையை வெறித்தது. என்றோ ஒரு நாள் அவள் தந்தை கூறியது, "நல்ல காரியத்துக்கு பொறப்படுற நேரம் மழை பெய்யிறது நல்லது இல்ல" என்று. 

அதுவே மனதினை பிடித்து வாட்ட கோவில் செல்லலாம் என நினைத்தவள் எண்ணத்தை தன் பிடிவாதத்தால் மாற்றியிருந்தான் பார்த்திபன். 

மூவரும் கிளம்பி கீழே வந்த சமயம் பார்த்திபனின் பெற்றோரும் கிளம்பியிருக்க அனைவரும் கோவில் சென்று பிறகு சார்பதிவாளர் அலுவலம் சென்றனர். 

இவர்களை போலவே விஷ்ணுவும் அவன் அன்னை தந்தையோடு அங்கு வந்திருந்தான். பெரியவர்கள் ஆரபி என அவர்களுள் பேச அவ்விடத்தை சுற்றி கண்களை சுழற்றிய பார்த்திபன் விஷ்ணுவிடம் கண் அசைக்க இருவரும் தனியே வந்தனர். 

"எங்கடா லேண்ட் ஓனர்?" 

"அதாண்டா நானும் பாக்கறேன், இன்னும் வரல கால் பண்ணாலும் எடுக்க மாட்டிக்கிறார்" 

"சரி விடு டிரைவ் பண்ணிட்டு இருப்பார். அரை மணி நேரம் இருக்குல்ல பாக்கலாம்" இருவரும் இயல்பாக பேச்சுக்களை வளர்த்த வண்ணம் இருந்தாலும் இடத்திற்கு உரிமையானவரை அடிக்கடி தேட தான் செய்தனர். 

"நான் போய் என்னனு பாத்துட்டு வரவா?" 

"நேரமாகிடும் விஷ்ணு" 

விஷ்ணு, " ஆகிட்டு போகுது. வீட்டுல கேட்டா போட்டோ எடுக்க போயிருக்கேன்னு சொல்லு" பார்த்திபனுக்கு அதுவே சரியென பட தலை அசைத்து அனுப்பி வைத்தான். 

விஷ்ணு தன்னுடைய வாகனத்தை எடுத்து வெளியே செல்லவிருந்த நேரம் சரியாக அந்த இடத்தின் உரிமையாளர் வாகனம் அங்கு உள்ளே நுழைந்தது. இருவரும் நிம்மதி பெருமூச்சோடு அவரை வரவேற்று பத்திர பதிவிற்கு செல்ல வேலைகள் மடமடவென நடந்தது. 

"பணம் உங்களுக்கு செட்டில் பண்ணிட்டாங்களா?" சார்பதிவாளர் நிலத்தின் உரிமையாளரிடம் கேட்க, 

அதற்குள் விஷ்ணு, "இல்ல சார் மிச்சம் குடுக்க வேண்டி இருக்கு" 

ஒரு பையை அவரிடம் நீட்டினான், "அம்பது லட்சம் இருக்கு சார்" என்று. "மிச்ச பணம் தம்பி?" அவர் பார்த்திபன் விஷ்ணுவை பார்த்து கேட்க இருவரும் குழம்பி போயினர் சில நிமிடம். 

"சார் ரெண்டரை சி தானே பேசுனோம்" 

"ஆமா ப்பா" 

"ஏற்கனவே ரெண்டு சி கொடுத்தாச்சு. மிச்சம் அம்பது லட்சம் இதுல இருக்கு" என்றான் பார்த்திபன். 

அவரோ இல்லை என தலை அசைத்து, "தம்பி நீங்க என்கிட்ட ஒரு சி தான் வீட்டுக்கு வந்து குடுத்தீங்க. இப்போ ஒன்றை கோடி கொடுத்திருக்க வேண்டியது அம்பது லட்சம் தான் தர்றிங்க" 

"சார் ரெண்டு கோடி வந்து நாங்க தானே குடுத்தோம், இப்ப மாத்தி பேசுறீங்க" விஷ்ணு அவரிடம் பொறுமையாக கேட்க அவர் அசைந்துகொடுக்கவே இல்லை. 

"என்ன தம்பி இது. தெரிஞ்சவங்கனு நம்பி தானே நீங்க குடுத்த பணத்தை எழுதி வாங்காம அனுப்புனேன்" 

அவரது போலியான ஆதங்கம் விஷ்ணுவை சூடேற்றியது. எகிறிக்கொண்டு வந்தான், "அதே நம்பிக்கைல தாங்க நாங்களும் குடுத்துட்டு வந்து ஏமாந்து நிக்கிறோம்"

"என்னையா ஏமாத்துறேன் அது இதுனு பேசிட்டு இருக்க, யார் யாரை ஏமாத்துறது. மூணு கோடி, ரெண்டே முக்கால் கோடினு எத்தனையோ பேர் கேட்டும் உங்களுக்கு குடுக்க சரினு சொன்னதுக்கு ஏமாத்துக்காரன்னு பட்டம் வேற தருவியா நீ" அந்த மனிதர் சற்றே குரல் உயர்த்தி கோவத்தில் பேச நண்பனை பிடித்து நிறுத்தினான் பார்த்திபன். 

"சார், அவன் அந்த அர்த்தத்துல சொல்லல. நீங்க எங்க மேல எவ்ளோ நம்பிக்கை வச்சு எழுதி வாங்காம விட்டிங்களோ, அதே நம்பிக்கைல தான நாங்களும் வந்தோம், இப்போ திடீர்னு மாத்தி பேசுனா என்ன அர்த்தம்?" 

"என்னது மாத்தி பேசுறேனா, கைல ஒரு கோடிய குடுத்துட்டு மிச்சம் பாத்திரம் முடிகிறபோ குடுக்குறேனு நீ தானே தம்பி சொன்ன. இப்ப என்ன மாத்தி பேசுறேன்னு சொல்ற" 

சார்பதிவாளர் என்ன என இடையிட்டு கேட்க, "ஏமாத்துற பழக்கம் எங்களுக்கு இல்ல சார். அவர் வீடு படியேறி அவர் மேல இருக்க மரியாதைல காசு குடுத்துட்டு வந்தா எப்படி பேசுறார்" அவருக்கு விஷ்ணு பதில் கொடுத்தான். 

"நான் என்ன ஏமாத்துறதையே பொழப்பா வச்சா பண்றேன், அப்டியே ஏமாத்தணும்னா காசே குடுக்கலனு சொல்ல எனக்கு எவ்ளோ நேரமாகும்?" 

"எங்க சொல்லி தான் பாரேன் அதையும்" விஷ்ணு அவரை அடிக்கவே நெருங்கிவிட்டான். 

"விஷ்ணு, என்னமோ சரியில்லடா" பார்த்திபன் அவன் காதில் கடிக்க நிதானமாக பார்த்திபனை பார்த்த விஷ்ணுவின் ஆத்திரம் இன்னும் கண்ணில் கூடியது. 

"அமைதியா இரு, நான் பேசுறேன்" பற்களை கடித்து விஷ்ணு அவரை முறைத்து நிற்க, "சாரி சார். நாம வெளிய நின்னு பேசலாமா?" அவரிடம் கேட்டான் பார்த்திபன். 

"சார், ஏதோ பிரச்சனை வந்த மாதிரி இருக்கு. வெளிய போகாம இங்கையே பேசி இன்னைக்கு பாத்திரம் பதியிறதா என்னனு அஞ்சு நிமிசத்துல முடிவு பண்ணிடுங்க" என்றார் சார்பதிவாளர் தன்னுடைய நாற்காலியில் சாய்வாக அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பொருட்டு.

இது சரி வரும் போல் தெரியவில்லை பார்த்திபனுக்கும். தூரத்தில் நின்று தன்னிடம் வர துடிக்கும் மனைவியை பார்த்தான். பொது இடத்தினில் கண்ணீரை காட்ட முடியாமல் துக்கம் நிறைந்த விழிகளோடு அவனை கெஞ்சும் கருமணிகள் வேண்டுதலை கை கட்டி ஓரம் நிறுத்தினான். 

"சார், அமௌன்ட் ஏதாவது அதிகமா எதிர் பாக்குறீங்களா?" 

"என்ன பார்த்திபன், நேரத்துக்கு ஒரு மாதிரி பேசுற ஆளா தெரியுறேனா நான்?" 

விஷ்ணு, "ஓ அதை நாங்க வாய திறந்து வேற சொல்லனுமா?" 

பார்த்திபன், "விஷ்ணு..." 

விஷ்ணு, "பின்ன என்னடா. உயிரை குடுத்து இந்த பணத்தை ரெடி பண்ணி சேர்த்துருக்கோம். இப்டி ஒரே வார்த்தைல குடுக்கலனு சொன்னா எங்க போறது?" பொறுமை இழந்தவன் வார்த்தை வேதனையில் வந்தது. 

"அவன் சொல்றது சரி தான். கைல இருக்க மொத்த பணத்தையும் இதுல தான் போட்டுட்டோம். வெளிய வட்டிக்கு வாங்கி, கொழந்தை நகை கூட வச்சு சேர்த்த பணம். ஒன்னு ரெண்டு லட்சமா இன்னைக்கு நாளைக்குன்னு புரட்டி குடுக்க, ஒரு கோடி. அந்த பணத்துக்காக நாங்க பல வருஷம் பாடுபடனும் சார்" 

ஆதங்கத்தோடு கேட்டான் பார்த்திபனும். அந்த மனிதரோ தன்னிடம் இத்தனை எடுத்து பேசும் இருவரையும் பொருட்படுத்தவே இல்லை. விடாப்பிடியாக நின்றார், ஏன் ஒரு வார்த்தை கூட அசைந்து கொடுக்கவில்லை. 

"அதெல்லாம் எனக்கு தெரியாது பார்த்திபன். எனக்கென்னமோ இது சரி பட்டு வரும்னு தோணல பணத்தை வந்து வாங்கிக்கோங்க. நான் வேற யாருக்காவது இடத்தை பேசுகிறேன்" 

"என்னையா பெரிய மனுஷன்னு பொறுமையா பேசிட்டு இருந்தா ரொம்ப தான் பண்ற, குடுத்த காசை இல்லனு வாய் கூச்சமா பேசுற உன்கிட்ட இனிமே பேச்சுக்கே இடம் இல்ல. எப்படி எங்க காசை வாங்கனு எனக்கு தெரியும். டேய் பார்த்திபா போலீஸ் போகலாம்டா" ஆவேசமாய் முறுக்கிக்கொண்டு வந்தான் விஷ்ணு. 

"சரிங்க போங்க" என்றவர் சார்பதிவாளரிடம், "ரெஜிஸ்டரக்ஷனை கேன்சல் பண்ணிடலாம் சார்" என்றார். 

அவர்களுக்கு இது சாதாரணமாக போக அடுத்த பதிர்விற்கு தயாராகி இவர்களை செல்லுமாறு அவசரப்படுத்தினர். 

பார்த்திபன் ஆரபி, பெற்றோரை அழைத்து இல்லம் புறப்பட்டான். பெற்றோருக்கு உர்ரென முகம் வைத்திருக்கும் மகனை பார்த்து எதுவும் பேச முடியவில்லை. 

குழந்தை தாத்தா பாட்டியிடம் விளையாடிக்கொண்டிருக்க அவள் விளையாடும் அழகை கூட ரசிக்கும் மனநிலையில் இல்லை அவர்கள். அத்தனை கோவம் வேதனை இருந்தாலும் நிதானமாக வாகனம் வீட்டினை வந்தடைய, 

தன் குடும்பத்திற்கு முன்பே இறங்கியவன் உள்ளே சென்ற வேகத்தில் கையில் பைக் சாவியோடு வந்தவனை நோக்கி வேகமாக நகர்ந்த ஆரபி, "பார்தி" என அழைக்க, அவளை திரும்பியே பார்க்கவில்லை அவன். 

"விஷ்ணுவை டீ கடை வர சொல்லிருக்கேன் ஆரபி" நிற்கவில்லை கணவன். காலில் சக்கரம் கட்டியவன் போல் வந்ததற்கு நேர் மாறாக அத்தனை வேகம் வாகனத்தில். 

இவனுக்கு முன்பே விஷ்ணு அங்கே நின்றான், கூடவே அவன் காரும். பெற்றோரை ஆட்டோவில் அனுப்பி வைத்திருப்பான் என்பது அவனது உடையிலும் அவன் முன்பு வைத்திருந்த தேநீர் கோப்பைகளிலுமே தெரிந்தது. 

கையில் மற்றொரு தேநீர் சூடாக இருந்தது. நண்பனை தாண்டி கடைக்கு சென்ற பார்த்திபன் தனக்கும் தேநீர் ஒன்றை வாங்கி வந்தான். 

"என்னடா இது, இப்டி நடந்துடுச்சு" விஷ்ணுவால் இன்று நடந்ததை ஏற்கவே முடியவில்லை. 

இடத்திற்கு உரிமையானவர் பல வருட பழக்கம். பழக்கம் என்பதை தாண்டி அவர் மேல் அதிக மரியாதை இருவருக்கும் உண்டு. ஈவென்ட் ஆர்கனைஸர் தொழில் துவங்க முடிவெடுத்து இடம் தேடி அலைந்த பொழுது பார்த்திபனின் மாமனார் மூலம் பழக்கமானவர் தான் இவர். 

தெரியாத மனிதரிடம் கை காட்டி செல்பவர் இல்லையே அவன் மாமா. அதுவும் மாப்பிள்ளையின் தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல மனிதரை பார்த்து பார்த்து இடத்தை கை காட்டினார். அப்படிப்பட்டவர் தற்பொழுது வேறுபட்டு பேசுவது ஏற்கவே கடினமாக இருந்தது. 

"சம்பாதிச்சிடலாம்டா. ஆனா இந்த ஏமாற்றம், அசிங்கம் எல்லாம் மண்டைல ஓடிட்டே இருக்கு" சிகையை அழுத்தமாக கோதி பார்த்திபன் புலம்ப, அவனை விட அதிக சினம் விஷ்ணுவிடம். 

"அந்த ஆள் வீட்டுக்கு போகலாம் வா" அழைத்தான் உண்மையை அறியும் பொருட்டு. 

"இல்ல, அங்க போனாலும் யூஸ் இல்ல. கீ குடுத்த ஆள் அப்டி" என்றான் பார்த்திபன் பற்களை கடித்து. 

சட்டென மண்டையில் தட்டிய பொறியானது கண்களில் தீ பந்தத்தினை ஏற்றியது போல் ஒரே நொடியில் சிவந்து போனது. 

"அந்த ஆள் வண்டிய ரெஜிஸ்டர் ஆபீஸ்ல பாத்தேன்" 

"அன்னைக்கே போட்டு தள்ளிருந்தா இன்னைக்கு ஆடிருப்பானா?" பார்த்திபன் வைத்திருந்த அவனது இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்தவன் அதை விட வேகமாக செல்ல பார்க்க அவனை பிடித்து நிறுத்தினான் பார்த்திபன். 

"என்ன பண்ண போற?" 

"அவனை கொன்னுட்டு வர்றேன்" 

"கொன்னுட்டு என்ன பண்ணுவ? அந்த ஆள் பக்கத்துல கூட போக முடியாது நம்மளால" 

"என்னால முடியும். தலையை சீவிட்டு வந்து நிப்பேன்" 

கையை நண்பனிடமிருந்து எடுத்தான், "சரி போ" என்று.

விஷ்ணுவால் நகர முடியவில்லை. நிதானித்து பார்த்தால் பார்த்திபன் கூறியது தான் சரி. 

அந்த தாமோதரனை நெருங்க கூட முடியாது இருவராலும். முன்பு எப்படியோ, இப்பொழுது சுதாரித்துவிட்டார் அந்த துப்பாக்கி சம்பவத்திற்கு பிறகு. தன்னை சுற்றி ஆட்களை சற்று கூட்டியுளார் என்பதும் அனாயா மூலமாக தெரிய வந்தது. 

வாகனத்தை விட்டு கீழே இறங்கி வர பார்த்திபனுக்கு அழைப்பு வந்தது ஸ்ரீனியிடமிருந்து. இவன் நலனை சகோதரி மூலம் தெரிந்து விசாரிக்க வந்திருப்பானோ என்கிற யோசனையில் எடுக்கவில்லை. அணைத்து வைத்தான் கைபேசியை. 

"உன் மாமாகிட்ட சொல்லி பேசலாமா?" விஷ்ணுவின் அந்த கருத்து சிறிதும் ஒப்பவில்லை அவனுக்கு. உறுதியாக முடியாது என தலை அசைக்க, இப்பொழுது அனாயாவிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்தான் தொழில் ரீதியாக இருக்குமோ என்று.

"சார்..." 

"சொல்லும்மா" 

"அவர் வந்துருக்கார் சார் இங்க" 

புருவம் சுருங்கியது, "யார்?" என்று. 

"தாமோதரன். நம்ம குடவுன்க்கு" 

அவள் கொடுத்த பதிலில் யோசனையோடு புருவத்தை பெருவிரல் கொண்டு நீவியவன், "வர்றேன்" என விஷ்ணுவோடு அங்கு சென்றான். 

முறுக்கிய கைகளோடு தன்னோடு நடந்து வந்த நண்பன் கை பற்றிய பார்த்திபன் அதில் அழுத்தம் கொடுக்க பற்களை கடித்து இறுக்கத்தை குறைத்தான் விஷ்ணு. 

விஷ்ணு, பார்த்திபன் வாகனம் நிறுத்தும் இடம் அது. அவர்கள் அலுவலக அறைக்கு எதிரில் இருக்குமந்த இடத்தில் இப்பொழுது தாமோதரன் வாகனம். 

பார்த்த விஷ்ணுவுக்கு அத்தனை கோவம், பார்த்திபனின் வாகனம் நிறுத்தும் முன்பே தாவி இறங்கியவன் சற்று தள்ளி கிடந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து அந்த வாகனம் நோக்கி விரைய, "விஷ்ணு... நில்லுடா" 

பார்த்திபன் கூறியதை ஆத்திரத்தின் உச்சியில் இருந்த விஷ்ணு காதிலே வாங்கவில்லை. விறுவிறுவென நடந்தவன் அந்த விலையுயர்ந்த வாகனத்தினை அடித்து நொறுக்கும் நோக்கோடு செல்ல, அவனுக்கு முன்பு வாகனத்தை தாக்காமல் இடைமறித்து நின்றாள் அனாயா.

"ஏய் போய்டு" என்றான் ருத்ர மூர்த்தியாக மாறி. 

"மாட்டேன் சார்" என்றாள் அவளும் இன்னும் அழுத்தமாக. 

"என்ன உன் தாத்தனை காப்பாத்த வரியா, இங்க நடக்க போறதை விட பல மடங்கு அவனுக்கு உள்ள நடக்க போகுது" 

நொடி தாமதிக்காமல் கையிலிருந்த இரும்பு துண்டை வைத்து ஓங்கி வண்டியில் அடிக்க எதிர்பாராமல் இடையில் வந்த அனாயா மேல் விஷ்ணுவின் மொத்த ஆத்திரமும் இறங்கியது. 

"ஆ..." விஷ்ணுவின் தாக்குதலில் தானாக விழுந்த அனாயாவிற்கு கையே உடையுமளவு அப்படி ஒரு வலி, பொறுக்க முடியாமல் கத்தியவளின் செயலில் அப்பொழுது தான் தன்னுடைய கோவத்தின் அளவை உணர்ந்தான் விஷ்ணு. 

"அனாயா..." விஷ்ணுவை தள்ளிவிட்டு அவளை பிடித்து ஆராய்ந்தான் பார்த்திபன். 

அவளது தோள்பட்டைக்கு கீழ் கையை பிடித்து தரையில் அமர்ந்து கண் மூடி மௌனமாக அழுத்தவளை பார்க்கவே கடினமாக இருந்தது. 

"வா ம்மா ஹாஸ்பிடல் போகலாம்" பெண்ணின் இடது கையை பிடித்து தூக்க பார்க்க அவளால் வலது கையை அசைக்க கூட முடியவில்லை. 

அவளும் ஒரேடியாக மறுத்துவிட்டாள், "வேணாம் சார். பெருசா வலி இல்ல" 

"டேய் நான் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்" 

விஷ்ணு அவளை பார்த்தவாறே வெளியே நடக்க பார்க்க, "எனக்கு அவர் எதுவும் பாக்க வேணாம் சார்" கோவமாகவே வந்தது அநாயாவின் குரல். 

"உன்னோட ஆத்திரத்தோடு விளைவை பாரு விஷ்ணு" நண்பனை கடுமையாக முறைத்தவன் அனாயாவிடம், "அவன் கோவத்தை தெரிஞ்சு நீ ஏன் ம்மா நடுல வந்த?" 

வலியை கட்டுப்படுத்த விழி மூடி இதழ் கடித்து அழுகையை கட்டுப்படுத்தியவள் விழி திறந்து, "அவர் உங்கள ஏதாவது செய்ய காரணம் தேடிட்டு இருக்கார் சார். ஒரு சின்ன சான்ஸ் கிடைச்சா கூட போதும். வெளிய வர முடியாத அளவு பண்ணுவார். அவ்ளோ ஆங்காரம் அவருக்கு. அதுனால தான் தடுத்தேன். நான் தடுக்கலானா கொலை கேஸ்ல ஜெயில்க்கு அனுப்ப கூட தயங்க மாட்டார்" 

அவளால் சரியாக பேச கூட முடியவில்லை, இதழ்கள் தடுங்கியது வலியில், "ஏன் சார் இப்டி பொறுமையே இல்லாம இருக்காங்க?" 

அவனை எண்ணி உண்மையாக உருவாகிய கரிசனையை அவளையும் மீறி பார்த்திபனிடம் ஆதங்கமாக கேட்க, அவளது வேதனை புரிந்தவன், 

"என்ன, என்னை திருத்த வந்துருக்கியா?" என்றவன், "ஸ்ரீனி..." கத்தி அழைக்க வேகமாக வந்தவன் அனாயாவை பார்த்து பதற ஆட்டோ பிடித்து வர அனுப்பினான் விஷ்ணு. 

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு தாமோதரன் பேத்தியை பார்க்க வர, அவரை பார்த்த மூவருக்கும் அத்தனை கோவம். ஸ்ரீனி மூலம் அனாயாவிற்கும் விஷயம் சென்றிருந்தது.  

"ரொம்ப தப்பு பண்ற தாமோதரன். சரித்திரத்துல என்னைக்குமே தோத்தவன் பேர் கோமாளியா தான் வரும். ஜெய்கிறதுக்காகவோ இல்லையோ, தோக்காம வாழணும்னே கங்கணம் கட்டி வாழ்றவன்டா நான்" 

அதே நிதானம் தப்பாமல் பேசியவன் அவரது கார் பேனட்டில் ஒரு கால் ஊன்றி காரில் ஏறி சாவகாசமாக இரண்டு பக்கமும் கை வைத்து அமர்ந்து சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களை அவிழ்த்தான். 

சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் இந்த பார்த்திபன் வித்யாசமாக தெரிந்தான் விஷ்ணுவை தவிர. 

ஆட்டோவை அழைத்து வந்திருந்த ஸ்ரீனி கூட பார்த்திபனின் பேச்சில் வியந்து வந்த வேலையை மறந்து நின்றான். 

என்றைக்கும் இல்லாமல் பட்டன் போடாமல் இருந்த அவன் சட்டை, கண்களில் காணாமல் போயிருந்த சாந்தம், அளவிற்கு அதிகமான நிதானம், உடலின் மொழியில் உஷ்ணம், வார்த்தையில் ஒரு பிடிவாதம் என இவன் வேறு ஒருவன். கிட்டத்தட்ட பித்தனாக தெரிந்தான். 

"அப்படிப்பட்ட எனக்கு ரொம்ப நாள் கழிச்சு ஒரு அடி... குட்டி அடி. பெத்த புள்ள முன்னாடி, கட்டுன பொண்டாட்டி முன்னாடி ஒரு குட்ட்ட்ட்டி அவமானம். 

ஆனா அது மண்டை வர போய் குடையிது. எங்கையோ உன் விசயத்துல தப்பு பண்ணிட்டோமோனு அடிச்சிட்டே இருக்கு. சரி பண்ணணும்ல தாமோதரன்? ஆமா பண்ணனும்" 

அவனே பதில் கொடுத்து தலை அசைக்க அரண்டு போனான் ஸ்ரீனி. விஷ்ணுவை நெருங்கினான் வேகமாக, "அண்ணா என்ன இது, அத்திம்பேர் இப்டி பேசுறார். எனக்கு என்னமோ பயமா இருக்கு" என்றான் படபடப்பாக. 

"டேய் உங்களுக்கெல்லாம் இவனை பத்தி சரியா தெரியல. இவன் தான்டா உண்மையான பார்த்திபன். ஆறே வருசத்துல எப்படி இவ்ளோ சம்பாதிக்க முடிஞ்சதுனு கொஞ்சமாவது யோசிச்சு பாத்துருக்கீங்களா?" இருண்டவன் தலை இல்லை என ஆடியது. 

"பொதுவா எதுலயும் இன்வால்வ் ஆக மாட்டான், அப்டி உள்ள வந்துட்டா ஜெயிக்காம போக மாட்டான். வின்டேஜ் பார்த்திபன் எனக்கும் மேல பத்து மடங்கு இருந்தவன்டா, சுருக்கமா சொல்லனும்னா வெறிபுடிச்சவன்"

"ண்ணா பில்டப் எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே ண்ணா" விஷ்ணு வளைந்த புன்னகையோடு நண்பனை கண்ணாலே காட்டினான்.

"தம்பிக்கு பட்டது போதாது போல. இன்னும் என்கிட்ட இந்த வீம்பெல்லாம் தேவையா?" என்றார் தாமோதரன் மீண்டு வந்து. 

"இது ஒரு பெரிய விஷயம்னு நினைக்கிறியா தாமோதரன்? பணத்தை எங்களால ஈஸியா சம்பாதிக்க முடியும். ஆனா இந்த அடி பணத்தையும் மீறியது" 

"விடுடா பார்த்திபா, பிள்ளை மேல கை வச்சதுக்கே ஒரு நாள் ஜெயில்ல ஒக்கார வச்சோம், இதுல இந்த மாதிரி சின்ன புள்ள வேலை பாத்து சந்தோசப்பட்டுக்க நினைக்கிறான்." 

விஷ்ணுவின் கண்கள் தாமோதரனின் முகத்தை சுவாரஸ்யமாக பார்த்தது. இவர்கள் எதிர்பார்த்தது போல் அவரின் முகம் ஏமாற்றத்தை தான் வைத்திருந்தது. 

இரு நண்பர்களுக்கும் அதீத ஏமாற்றம் ஏற்பட தான் செய்தது. இதனை அடுத்து அவர்கள் பத்து வருடத்திற்கு திட்டமிட்டு வைத்திருந்தனர். அது இப்பொழுது இல்லை என்றான பிறகு சற்று ஆடி தான் போயினர். 

அதோடு வாங்கிய கடனை காரணமே இல்லாமல் அடைக்க வேண்டும், ஆற்றில் இறைத்த நீராய் பணம் கண் முன்னே கரைந்து போக அதனை எதுவும் செய்ய முடியாத ஆதங்கம் இருவரிடமும். அதுவே மொத்தமாய் உருமாறி தாமோதரன் மேல் வெறியாய் நிக்கிறது. 

தாமோதரன் ஓட்டுனரை அழைத்தவன், "வண்டிய வெளிய எடு" என்றான் விஷ்ணு. அவனோ அசையாமல் இருக்க அவன் கூறிய வேலையை தான் செய்ய போனாள் அனாயா. 

"டேய்..." தாமோதரன் சத்தம் கொடுக்க ஓட்டுநர் வேகமாக அவள் முன்பு தான் வாகனம் எடுத்து வெளியே வர தாமோதரனும் ஏறிக்கொண்டார். 

ஸ்ரீனி அனாயாவை அழைத்து மருத்துவமனை செல்ல பார்க்க, விஷ்ணுவும் மனம் கேளாமல் தானும் உடன் சென்றான். 

பார்த்திபனுக்கோ குடவுனை விட்டு அகல மனமே இல்லை. இந்த சூழலை எப்படி சமாளிப்பதென தெரியாமல் அங்கேயே அமர்ந்துவிட்டான்.

நேரம் இரவு பனிரெண்டை கடந்த பிறகு தான் உயிர் வந்தது போல் வீட்டிற்கு சென்றான். வந்தவன் நேரே மாடிக்கு செல்ல பார்க்க, "பார்த்தி" மனைவியின் குரல் வரவேற்பறையிலிருந்து ஒலிக்க அப்டியே நின்று கீழே பார்த்தான். 

மனைவி சோபாவில் அமர்ந்திருக்க மகள் மனைவி மடியில் படுத்திருந்தாள். "ஆராம்மா நீ தூங்கலையா?" கேட்டவன் அவர்களை நெருங்கி மகளை கைகளில் எடுத்து, "வாங்க போகலாம்" என்றான். 

"ஏன்னா நீங்க சாப்பிடல இன்னும்" என்றாள் வேகமாக. 

"இல்ல மாமி நான் சாப்பிட்டேன் வா" 

அவன் நடக்க, அவன் கையை பிடித்து, "பொய் சொல்றிங்க ன்னா" அவன் முகமே காட்டிக்கொடுத்தது அவனின் வாட்டத்தை. காலை உணவிலிருந்து இரவு வரை எதுவும் எடுத்திருக்க மாட்டான். 

பிடிவாதமாக அவனை உணவு மேஜை அழைத்து சென்றவள் அவன் மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க தானே ஊட்டிவிட்டாள்.

காலையும் ஆரபி காலை உணவை தயாரிக்கும் முன்பே குளித்து வந்து மனைவியிடம் நின்றான், "நான் ஆபீஸ் கிளம்புறேன். கொழந்தை அம்மாகிட்ட இருக்கா" மனைவி தோளில் தட்டி கூறியவன் அவள் தடுக்கும் முன்பே கிளம்பிவிட்டான். 

ஆடிட்டர் அலுவலகம் வந்து மற்றவர்கள் வேலையை இழுத்து போட்டு தானே செய்தான். மற்ற ஆட்கள் வரும் முன்பு அவனே சில வேலைகளை செய்து முடித்திருக்க, அடுத்து விஷ்ணுவும் வந்தான். 

அவன் முகத்திலும் ஒரு அலுப்பான பார்வை தான். 

வந்ததும் உடனே, "லேண்ட் ஓனர் வீட்டுக்கு போகலாமா?" பார்த்திபனிடம் அமைதி, "யோசிக்காத பார்த்திபா. இந்த விஷயமெல்லாம் சூட்டோட சூட்டா முடிச்சிடனும்" என்றான் விஷ்ணு. 

அதுவும் சரியாக பட, "சரி வா போகலாம்" இருவரும் உடனே அவரது இல்லம் சென்றனர். 

அந்த பெரிய வீட்டின் தோட்டத்தில் அமர்ந்திருந்த முத்துமாணிக்கம் முகம் அதிகமாக சோர்வை தட்டியது. 

தலையில் கை வைத்து சோர்ந்திருந்தவர் அருகே ஏதோ ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார் அவர் மனைவி. எதுவும் அந்த பெரியவருக்கு நிம்மதி இல்லை போல். 

"உங்களுக்கு எதுக்கு சோகம், அதான் லம்ப்பா ஒரு கோடி அடிச்சாச்சுல" 

விஷ்ணு தூரத்தில் நின்றே குரல் கொடுக்க இருவரும் அவரை நோக்கி நடந்தனர். 

விஷ்ணுவின் குரலில் நிமிர்ந்தவர் இருவரையும் சந்திக்க முடியாமல் பார்வை மாற்ற இருவரும் வந்துவிட்டனர். 

"போலீஸ்ல கம்ப்ளைன் கொடுக்கலாம்னு இருக்கோம், உங்கள வந்து போலீஸ் தூக்கிட்டு போகிறது மரியாதையா இருக்காது அதுனால நீங்களே கூட வந்தா நல்லா இருக்கும்" என்றான் பார்த்திபன்அவரிடம். 

முத்துவின் மனைவி, "தம்பி ஒக்காந்து பேசலாமே" என்றார் கணவனின் நிலை தெரிந்து. 

"பேச ஒன்னுமில்லங்க, வரிங்களா இல்ல நாங்க போகவா?" அவசரப்படுத்தினான் பார்த்திபன். 

"வேணாம் ப்பா பணத்தை நாங்க இப்போவே கொடுக்குறோம்" அவர் மனைவி எழ, விஷ்ணு பார்த்திபன் பார்வை முத்துமாணிக்கத்தின் மேல் தான் இருந்தது. 

அவர் வந்ததில் இருந்து எதுவும் பேசவில்லை. சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்த திணக்கம், தெனாவெட்டு இல்லை. குற்றஉணர்ச்சியை மீறி ஏதோ ஒன்று அவரை தடுத்தது போல் இருந்தார். 

"பணத்தை வாங்குற ஐடியா எங்களுக்கு இல்ல. அந்த இடம் எங்களுக்கு வேணும். அதுக்கான வேலை தான் இது" அவர் மேல் பார்வை வைத்தே பதில் கொடுத்தான் விஷ்ணு. 

"தம்பி..." கண்களில் நீர் நிரம்ப எழுந்த அவர் கைகள் கூப்பி உடனே இருவர் முன்பு வந்து நின்றார், 

"நீங்க குடுத்த காசை கூட வாங்கிக்கோங்க, இடத்தை இனாமா உங்களுக்கு தர்றேன், ஆனா எதுவா இருந்தாலும் இப்போ என்னால முடியாது. இருந்த ஒத்த பேரனை ரெண்டு நாள் இந்தா தர்றோம் அந்தா வந்துடுவான்னு அலைகழிச்சிட்டு இருக்கானுங்க. உங்க பிரச்சனைல என் குடும்பம் அல்லாடிட்டு இருக்கு. போய்டுங்கயா"

எங்கே அடித்தால் வலிக்குமென தெரிந்து எளிமையாக காயை நகர்த்தியிருக்கும் தாமோதரனின் கூர் புத்தி சிறிதும் ரசிக்கும்படியாக இல்லை அவர்களுக்கு. தங்களுக்காக ஒரு குழந்தையை கடத்தியிருப்பது எந்த விதத்திலும் நியாயமாக படவில்லை. 

பழிவெறி இருக்கலாம், ஆனால் இப்படி இரக்கமற்றதாகவா? விஷ்ணு அவனது புல்லட்டை உசுப்ப வாகனம் பறந்தது தாமோதரன் அலுவலகத்திற்கு. அது ஒரு காட்டன் ஆலை. 

வேலை மின்னல் வேகத்தில் நடந்துகொண்டிருக்க, அனாயாவோடு கைபேசியில் தீவிரமாக பேசிக்கொண்டே வந்த பார்த்திபன் விஷ்ணுவுக்கு வழிகூறினான். 

பார்த்திபன் கூறி இறுதியாக வந்து நின்ற இடம் எலக்ட்ரிக் ரூம். அதாவது மொத்த ஆலைக்கும் மின்னுற்பத்தி செய்யும் அறை. பெரிதாக இருந்தது. 

"இப்ப அவனுக்கு கால் பண்ணுடா" பார்த்திபன் விஷ்ணுவிடம் கூற தகவல் பறந்து உடனே வந்து நின்றார் தாமோதரன். 

"என்ன பார்த்திபன் டொனேஷன் எதுவும் வேணுமா?" நக்கலாக கேட்டவர் உடனே தன்னுடைய உதவியாளரிடம் கை நீட்ட, அவனோ செக் புக் தேடி எடுத்து கொடுத்தான். 

"பத்து லட்சம்... ஓ... உங்களுக்கு தான் ஏதோ ஒரு கோடி நஷ்டமாமே. அப்போ ஒரு கோடி தரவா உதவியா இருக்கும்ல?" 

தானே பேசி, பேசிய தொகையை எழுதி, "ஆபீஸ்ல வச்சு கேக்க தம்பிகளுக்கு கூச்சம் போல. வெளியே வச்சு கேக்குறாங்க" தலையை ஆட்டி சிரித்தார் அந்த தாளை இவர்களிடம் கொடுக்குமாறு உதவியாளரிடம் நீட்டி. 

"எவ்ளோ பெரிய மனசு... இதுக்கு நன்றி சொல்ல வேணா?" 

விஷ்ணுவின் உள்நோக்குள்ள சிரிப்பை அவர் கணிக்கும் முன்பே அவனுக்கு முன்னிருந்த ஒரு பெரிய காட்டன் நிறைந்த மூட்டையில் லைட்டரை திறந்து போட அது திமு திமுவென பற்றிக்கொண்டு எரிந்தது. 

உடனே சுதாரித்த மற்ற ஆட்கள் அதனை சில நொடிகளில் அணைத்துவிட தாமோதரன் முகம் கோவத்தில் ஜிவ்வென சூடானது. 

"தோ பார்றா பார்த்திபா பெருசு இதுக்கே ஷாக் ஆகிடுச்சு" விஷ்ணு நக்கல் பேச பார்த்திபன் முகத்தில் கோணல் சிரிப்பு.

அவருக்கு தெரிந்திருந்தது இவர்கள் எண்ணத்தில் ஓடுவது. இத்தனை பெரிய ஆலைக்குள் வந்து எந்த தடயமும் இல்லாமல் செல்வது எப்படி என்று. இந்த பக்கம் எந்த வகையான கண்காணிப்பு கேமெராவோ, காவலாளிகளோ இருப்பதில்லை. 

காரணம் இங்கு வெறும் மின் சேவை மட்டுமே இருப்பது. சில நேங்களில் தேவையற்ற, இரண்டாம் ரகம் அல்லது வீணான துணிகளை இங்கு அடுக்கி வைத்து பிறகு வெளியேற்றுவார்கள். 

அதனை தான் விஷ்ணுவும் பார்த்திபனும் பயன்படுத்திக்கொண்டனர். யார் நேரமோ இன்று காலை தான் சில மூட்டைகளை அப்புறப்படுத்தி ஒரே ஒரு மூட்டை மட்டும் மீதமிருந்தது. இவர்கள் இதனை செய்தார்கள் என்று கூட ஆதாரம் திரட்ட முடியாது. 

"சார் இங்க ஒரே சீமண்ணை வாசனை வருது"

 ஒருவன் பதறி தண்ணீரை தேட போக, "ஏய், நகந்த மொத்தமா கொளுத்திடுவேன்" கையில் தீப்பெட்டி வைத்து பார்த்திபன் எச்சரிக்கை அவன் அப்படியே நின்றுவிட்டான். 

"சார் பவர் சப்ளைல நெருப்பு புடிச்சா மொத்த..." 

"ம்ம்..." தாமோதரனின் ஆத்திரமான ம்ம் என்ற வார்த்தையில் அவன் மௌனித்துவிட விழிகள் தெறித்து வெளியே விழும் அளவு கோவத்தோடு இருவரையும் பார்த்தார், "என்ன வேணும்டா உங்களுக்கு?" சாவகாசமாக வாகனத்தில் சாய்ந்து அமர்ந்த பார்த்திபன், கை கடிகாரத்தை பார்த்தான். 

"உனக்கு அஞ்சு நிமிஷம் டைம், நீ கடத்தி வச்சிருக்க முத்துமாணிக்கம் பேரன் அதுக்குள்ள அவங்க வீட்டுல இருக்கனும்" 

"சேகரன்..." தன்னுடைய காரியத்தரசியை அழைக்க, அதற்குள், "யோவ் பெருசு நில்லுயா... அதுக்குள்ள என்ன அவசரம்" நிறுத்தி வைத்தான் பார்த்திபன். 

"ரெண்டாவது பாயிண்ட். எந்த இடத்தை நாங்க முடிக்கவே கூடாதுனு நீ கங்கணம் கட்டி நின்னியோ அதை நாங்க இந்த வாரமே மறுபடியும் முடிப்போம். ரெஜிஸ்ட்ரேஷன்க்கு கண்டிப்பா நீ வரணும், வர்ற" விஷ்ணு அத்தனை அழுத்தமாய் அழுத்தி கூற அவள் விழிகள் அப்படி சிரித்தது. 

"நாலு நிமிஷம் தான் இருக்கு" பார்த்திபன் நினைவூட்ட அதற்கும் பார்த்திபனை முறைத்தார் தாமோதரன். 

"யோவ் முறைக்காம வேலைய பாக்க சொல்லுயா உன் ஆளுங்கள. அறிவானவனுங்களா இருந்தா நாங்க சொன்ன ஒடனே பையன அனுப்பிருப்பானுங்க. இதெல்லாம் வச்சு எப்படி தான் பிஸ்னஸ் பன்றியோ" 

விஷ்ணு தலையில் அடித்துக்கொள்ள உடனே அழைப்பு பறந்து குழந்தையும் அவர்கள் வீட்டில் ஒப்படைக்கப்பட்டான். அதனை உறுதி செய்த நண்பர்கள் தீப்பெட்டியை தூக்கி எரிய பார்த்திபன் வாகனத்தை உயிர்ப்பிக்க விஷ்ணு பின்னால் ஏறிக்கொண்டான். 

கிளம்பியவன் பட்டென நிறுத்தி, "விஷ்ணு மறந்துட்டேன். அடுத்த தடவை நியாபகப்படுத்து, வர்றப்ப பெருசுக்கு கார் பொம்மை, சொப்பு ஜாமான் எல்லாம் வாங்கிட்டு வரலாம், இப்போல்லாம் குழந்தைங்க கூட மட்டும் தான் விளையாட்டாம்" 

"அதுக்கென்னடா பார்த்திபா பால் பெட்டியும் சேர்த்தே வாங்கிட்டு வரலாம்" இவனும் இழுத்து நண்பனோடு ராகம் பாட, பார்த்திபன் இடது கை கொண்டு வலது மீசையை முறுக்கிவிட்டு, "வர்ட்டா..." என அவன் வெற்றி சிரிப்பு சிந்த உடனே சிவந்தது தாமோதரனுக்கு கோவத்தில்.

இருக்காதா பின்னே, 'அவர் இடத்துக்கே வந்து, அவரையே மிரட்டி போனதும் இல்லாமல் குழந்தைகளோடு விளையாட மட்டும் தான் நீ என பேசியதோடு, மீசையை முறுக்கி காட்டி ஆம்பளையா நீ?' என கொக்கரித்து சிரித்து போனால் எரிய தானே செய்யும். எரிந்தது தாமோதரனுக்கும். விஷ்ணு பார்த்திபன் மேல் பகை மலையளவு கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. 

ஆனால் அவரது கோவத்தின் தீ கொடுக்கும் அடி என்னவோ நாயகர்களுக்கு அதிக சறுக்கலை தான் தர காத்திருக்கிறது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro