பகுதி 16
வருணும் வனிதாவும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி அங்கு இருந்து கிளம்பி சென்று தன் தொலைபேசியை பெற்றுக்கொண்டு வர்ஷாவை அட்மிட் செய்த மருத்துவமனை விரைந்தான் விக்ரம்.
தன் தந்தையை தேடிச் சென்று வர்ஷாவின் நிலை குறித்து விசாரிக்க அவர் இன்னும் ஓரிரு நாட்களில் அவள் கண் விழிக்க வாய்ப்புண்டு என்றார்.
ஆனால் விக்ரமின் மனம் அவனை எச்சரித்தது. ஏதோ நெருடலாக இருக்க
தன் தந்தையை அழைத்து இன்று விடுப்பு எடுத்துக் கொள்ள முடியுமா என வினாவினான். அவர் முடியும் எனக் கூறினார். அவரை விடுப்பு எடுத்துக் கொண்டு ஒரு நிமிடம் கூட நகராமல் வர்ஷா வின் அருகில் இருக்கும்படி கூறினான்.
தன் தாய்க்கும் போன் செய்து அவரின் பாதுகாப்பு பற்றி கேட்டறிந்தான். என்ன என சொல்ல முடியாத மனபாரம் அவனுள் தாக்கியது.
ஆம் ஆபத்து அவன் எதிர்பாராத வகையில் ஆபத்து கணேஷன் கீதா ஜோடியை தாக்கியது.
அவர்கள் ஹனிமூன் சென்று திரும்பி வருகையில் ஏதோ லாரி அவர்களின் கார் மீது மோதியது.
விக்ரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தான். சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினர். விக்ரமிற்கு இது தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை. அவர்களையும்
வர்ஷா இருந்த மருத்துவமனைக்கு வரவழைத்தான்.
அவனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. வனிதா வருண் பாதுகாப்பு பற்றி கேட்டறிந்தான்.
அங்கே வருணும் வனிதாவும் அருகில் உள்ள பீச்சிற்கு சென்று வரலாம் என கிளம்பினார்கள்...
இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் செயற்கையாய் சில உயிருள்ள சிலைகளை அங்காங்கே பெற்றது விசாகப்பட்டினம்.
தன் கண்போரின் கவலைகளை கொள்ளை கொள்ளும் அழகு அந்த ஊருக்கு சொந்தம்...
கடலை பார்த்த மகிழ்ச்சியில் வனிதா சிறுகுழந்தையாய் மாற அப்போது தான் வருணிர்க்கு தான் என்ன செய்ய மறந்தோம் என்பதே நினைவில் வந்தது..
அவளின் குழந்தை தனத்தை மீட்டேடுக்க இவ்வுரே சிறந்த இடம் என் அறிந்தான்.. சிறுது சிறுதாய் அவளின் குழந்தை தனத்தில் அவனும் கரைந்தான்..
😀😀மன்னிக்க வேண்டுகிறேன்...
என் அருமை புதல்வனின் லீலைகள் அதிகமான காரணத்தால் கதையின் அடுத்த பதிவும் தாமதமாக வரலாம்...
கதையில் தவறுகள் இருப்பின் பகிரவும் ..
இன்னும் 5-6 பகுதியில் நிறைவு செய்ய முயற்சி செய்கிறேன்
விடைபெறும் உங்கள் சகோதரி... 😀
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro