பகுதி 13
அந்த நான்கு கண்களும் ராணியை காண சென்றனர் . அவர்கள் சாந்தாவும் வருணும் தான். சாந்தா ராணியிடம் " என்னை மன்னிச்சிடு அம்மா உன்னை நான் அப்படி பேசியிருக்க கூடாது சாரி மா என்றால்.
ராணி அவளிடம் " பரவயில்லை டா அம்மு நீ அழாதே.. நீ அப்படி பேசுனதால தான் நான் வனிதா கிட்ட சில பல விடயங்களை விளக்க முடிஞ்சது ".. என்றார்
வருணிடம் " நான் சொன்னது உனக்கு கேட்டுத்தோ இல்லையோ எனக்கு சீக்கிரம் பேரனோ பேத்தியோ வேணும்.. நீ யார வேணும்னாலும் தத்து எடுத்துக்கோ ஆனால் எனக்கு சொந்த வாரிசு வேணும். என் மருமகள் சுமந்து பெத்த தான் என் வாரிசு. வனிதா எல்லா குழந்தைகளும் ஒன்னு தான் உனக்கே தெரியும் ... சீக்கிரம் அவ கூட சேர்ந்து வாழ பாரு..." என்றால் ராணி.
வருண் பதில் கூறாமல் சிரித்தான்..
" உடம்ப பாத்துக்கோங்க அம்மா வனி அழுதுகொண்டே போன நான் வரேன் " என கூறி விடைபெற்று சென்றான்.
இல்லம் விரைந்தான் வருண். இல்லம் செல்லும் வழி எங்கும் வனிதாவை பற்றியே நினைத்துக் கொண்டு சென்றான். மிக மெல்லிதாய் ஒரு காதல் அவனுக்குள் எட்டி பார்த்தது. அவன் அதை உணரும் தருணம் எப்போதோ? .
வனிதா அழுது கொண்டே உறங்கி இருந்தால். காலையில் வனிதா உணவு உண்ணாமல் இருந்தது வருணுக்கு நினைவுக்கு வந்தது.
உடனே சமையலறை சென்றான். பழச்சாறு கலந்து கொண்டு வந்து அவளை எழுப்பி அருந்த செய்தான்.
" வருண் வயிறு ரொம்ப வலித்குது டா எனக்கு எதுவும் வேணாம் நான் தூங்கரேனே பிளீஸ் டா" என்றால் வனிதா.
" சாப்பிடமால் தூங்கு அப்புறம் அங்க வலி இங்க வலி சொல்லு ஒரு ஜுஸ் தானே குடிச்சிட்டு படு" என்றான் வருண்.
" சரி ஆரம்பிக்காத குடிக்கிறேன்" என பழச்சாறு குடித்து உறங்கி விட்டாள் வனிதா.
அப்போது தான் நாட்காட்டியை பார்த்தான் வருண். வனிதாவின் வயிறு வலிக்கான காரணம் புரிந்தது.
( வனிதாவின் கண் பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரியும் வலியின் அர்த்தம் புரியதோ? அவன் உயிர் தோழன் அவளை பற்றி முழுமையாக அறிந்தவன் . அவளுக்கு அந்த நாள் எப்போது என தெரியாமல் போகுமோ?.
நல்ல நண்பர்கள் நாம் கூறாமலே நம் வலிக்கான காரணங்கள் அறிவார்கள்)
அருகில் உள்ள கடைக்கு சென்று அவளுக்கு தேவையானதை வாங்கி வந்தான். அவள் அறையில் வைத்து விட்டு சமையலறை புகுந்தான் .
சின்ன வெங்காயம் பூண்டு எல்லாம் சேர்த்து நல்ல எண்ணெய் ஊற்றி புளிக் குழம்பு செய்தான். ஃபிட்ரூட் ரசம் மற்றும் பொரியல் செய்து பிரண்டைத் துவையல் செய்து சாதம் வடித்தான். மோர் கரைத்துக் கொண்டு வனிதாவை எழுப்ப சென்றான்.
( இந்த காலத்தில் ஆண்களும் பெண்களை விட நன்றாகவே சமைக்கின்றனர்).
" வனி மா எழு டா தங்கம் பிளீஸ் டா" என் அவளை எழுப்பினான் வருண்.
" இப்போ என்ன டா பிரப்ளம் உனக்கு " என கத்தி கொண்டே எழுந்தவள் அங்கு அவன் வாங்கி வைத்திருந்த பொருளை கண்டு அமைதியானாள்.
" வனி மா போய் ரிபிரஷ் ஆகிட்டு வா டா.. வந்து சமத்தா இந்த மோர் குடித்ச்சுடனும் .. இல்ல சாப்பாடு கூட ரெடி சாப்பிடலாம்னா சாப்பிட வா டா நான் வெளியே வைய்ட் பண்ணுறேன் டியர்" என் கூறினான் வருண்.
" ஒரு 5 நிமிஷம் ரெடி ஆகி வரேன் இப்போல்லாம் சாப்பிட முடியாது டா படுத்தாத வந்து மோர் குடிக்கிறேன் ஓ .கே?" என்றால் வனிதா.
" ஓ.கே டா" என்றான் வருண்.
அவளும் கூறியது போலவே 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தாள் மோர் குடித்து விட்டு " என்ன சமைச்ச? நான் எதாவது பண்ணவா " என்றால் வனிதா.
" நீயே பாரு " என்றான் வருண்
அவன் சமைத்து வைத்து இருந்ததை பார்த்து அவள் " என் டா இப்படி பண்ணுரே? எனக்கு பீட்ரூட் சுத்தமா பிடிக்காது உனக்கு தெரியும்ல .. நான். இதேல்லாம் சாப்பிட மாட்டேன் போ"
என் கூற "என் டி குழந்தையா நீ? இத தான் சாப்பிடனும் " என்றான் வருண்.
அந்த நிமிடம் முதல் வருணனை தன் தாயாய் உணர்ந்தாள் வனிதா.
" சரி டா இப்போ தானே மோர் குடிச்சேன் கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடலாம்.. இப்போ நான் போய் பாட்டு கேக்கறேன் பை" என் கூறி டி.வி. முன் அமர்ந்தால் வனிதா.
" உனக்கு நான் ஒரு கிஃப்ட் வாங்கி இருக்கேன் இந்த" என்றான் வருண். அது அவளுக்கு திருமண பரிசாக குடுக்க நினைத்து அவன் வாங்கி வைத்தது. இப்போது அந்த கிஃப்ட் உபயோகப்படும் என கருதி அவன் அவளுக்கு அதை அளித்தான்.
அவள் அதை பிரித்து பார்த்து " ஏய் ரொம்ப தேங்க்ஸ் டா .. நான் ரொம்ப நாளாக வாங்க வேண்டும்னு நினைச்ச அதே ஐ பெட் சூப்பர் டா இப்போ நான் போய் இதுல சாங் காப்பி பண்றேன் " என வனிதா கூற காலிங் ஃபைல் ஒலித்தது வந்தது யார்?
( சாரி சகோ's late updateku plz spelling mistakes irtha solunga aprm vera ethum mistakes irtha solunga .. nandri bye Thursday pakalam)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro