Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 10

                   வருணை சந்தேகமாக பார்த்து கொண்டே சன்னல் வழியே எட்டி பார்த்தான் விக்ரம் அங்கே மயங்கிய நிலையில் இருந்தால் வனிதா. அவளை மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.

                              அவளை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மிகுதியான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறினர்.

      இப்போது டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருப்பதால் ஒரு நாள் கழித்து வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறினர். இதைக் கேட்டு சோகத்தில் ஆழ்ந்தான் வருண். 

       மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்த வருணை கேள்விக் கணைகளைத் தொடுக்கலானாலன் விக்ரம்.

‌       "என்னடா ரெண்டு நாளா அவ சாப்பிடல ஒரே வீட்ல தான இருக்கிங்க நீங்க ஒன்னும் தெரியாதா உனக்கு?. கல்யாணம் மட்டும் பண்ணிக்கிட்டா பத்தாது கட்டி வந்த பொண்ணு பத்தரமா பாத்துக்க துப்பில்லை. நீ மட்டும் வேலா வேலைக்கு கொட்டிக்குறில அவ சாப்பிடலா இல்லையானு பார்க்கத் தெரியாது? ரெண்டு நாளா சாப்பிடலானு டாக்டர் சொல்லறங்க என்ன பண்ணிட்டு இருந்த நீ?.. இன்னைக்கு நாம அங்க போகாமல் இருந்திருந்தால் என்ன ஆயிறுக்கும்?..  ஃபோன் எடுக்கவில்லை சொன்னா சார்ச் இருக்காதுனு அசால்ட்டாக சொல்லற .. இனி அவல பாத்துக்கோ.. இது ரிபிட் ஆச்சு நான் மனிசனாவே இருக்க மாட்டேன் " என் கூறினான் விக்ரம்.

        மாலை ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் நாளை டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் இன்று  இரவு இங்கே தங்கி செல்லுமாறு கூறினார்.

          வருண் வனிதாவுடன் மருத்துவமனையில் இருந்தான். விக்ரம் இல்லம் சென்று உணவு அருந்தி இரவு ரோந்து பணிக்கு சென்றான்.

        11 மணிக்கு இல்லம் திரும்பும் போது வருண் வீட்டில் யாரோ இருப்பது போல தெரிந்தது சந்தேகப்பட்டு அங்கு சென்று பார்த்தால் கருப்பு உடையில் நால்வர் ஏதோ தேடி கொண்டு இருந்தனர். விக்ரமை கண்ட ஒருவன் "டேய் போலீஸ் ஜுட்" என்றான்.

                உடனே அங்கிருந்து அவர்கள் படி வழியாக வெளியேறினார். விக்ரம் இடத்தில் வனிதா வீட்டு சாவியை வருண் கொடுத்து அனுப்பி இருந்தான். வனிதாவிற்கு மாற்று உடை எடுத்து வருவதற்கு. அதை உபயோகித்து உள்ளே சென்றான் விக்ரம். அவர்களை துரத்தி சென்றான். அவர்களை பிடிக்க முடியவில்லை. இல்லம் வந்து ஏதும் கிடைக்குமா என தேடினான். அவர்கள் அங்கே இருந்து செல்லும் போது அவர்களில் ஒருவனின் தொலைபேசி கீழே தவரி விழுந்து இருந்தது அதே பத்திரமாக. எடுத்து வைத்து கொண்டான்.

யார் அவர்கள் என்ன தேடினார்கள்.....?

(யோசிச்சு சொல்லுங்க)....

காலையில் மருத்துவமனை சென்ற விக்ரம் அவர்களை விக்ரம் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

      " வருண் உனக்கு நான் 2 டேஸ் டைம் தரேன் அதுக்குள்ள இம்பார்ட்டன்ட் வொர்க் இருந்த முடிச்சுட்டு 10 டேஸ் லீவ் சொல்லிட்டு வா.. 2 டேஸ் இங்க தான் ஸ்டே. சாயந்திரமா வீட்டுக்கு போய்ட்டு முக்கியமான திங்ஸ் இருந்த இங்க கொண்டு வந்து வைச்சுட்டு பத்து நாளைக்கு தேவையான துணி எடுத்து வைச்சுடலாம் .. இனி நீங்கள் இரண்டு பேரும் அங்க இருக்க போறதில்ல "

(enge anupa poranga varuna? avasarama potta update so spelling mistakes irukum friends... sorry ... next update next week .. bye)


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro