பின்கதை
வெள்ளித் தண்டுகளை கொண்ட வெள்ளை மரங்கள் நீண்டு நிற்கும் அந்தத் தோட்டத்தினுள்ளே தன் முதலடியை பதித்தாள், வெள்ளை மாயவாயிலின் வழியே வந்திருந்த மாயா. அவள் பார்வையே எடுத்துச் சொல்லியது, அவளை சுற்றிலும் இருப்பது அவளுக்கு முற்றிலும் புதிய சூழல்.
அங்கிருக்கும் அனைத்தையும் புதிதாக பார்த்துக்கொண்டே அவள் கால்போன போக்கில் நடக்க.. இரு புறமும் வரிசையாக நிற்கும் மரங்கள், அவளை நேரக வழிநடத்திச் சென்றது ஒரு கோட்டைக்குத்தான். அந்தக் கோட்டையைத் தவிர்த்து அவ்விடத்தில் வேறு எந்தக் கட்டிடமும் இல்லாமலிருக்க.. உதவி நாடுவதற்கு வேறு இடம் தெரியாமல் அவ்விடம் நோக்கியே நடந்தாள் அவள்.
"ஹலோ! யாராச்சும் இக்கீங்களா?" பிரம்மாண்டக் கோட்டையின் சின்ன கதவை அடைந்துவிட்ட மாயா, அதை தள்ளிக்கொண்டு உள்ளே எட்டிப்பார்க்க, "வெல்கம் ஹோம்! முன்னால் இளவரசி," அவளை பதறச் செய்வதுபோல் கணீரென ஒலித்தது அவன் குரல். கையில் ஒரு கைகுழந்தையுடன் கோட்டையின் இரண்டாம் தளத்தில் வந்து நின்றான், வாலிபனான காலன்.
"அ-அம்.. உங்களுக்கு எப்டி தெரியும்?" வாயிலில் நின்றபடியே அவள் வியந்து நோக்க.. அவனிடம் பதில் இல்லை. அவளை பார்த்தபடியே புன்னகையுடன் படியில் இறங்கி வருபவனை தொடர்ந்து, மூன்று வயது குழந்தையை கைபிடித்து கூட்டி வந்தாள், இளம் வயதிலிருக்கும் மதி.
கீழ் தளத்தை அடைந்துவிட்டவன் மாயாவை சட்டை செய்யாமல், தன் முன்னால் கீ-போர்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் பெரிய ஸ்கிரீனில் எதையோ தட்டத் தொடங்கிவிட்டான். தான் யாரென்பது தெரிந்தும் தன்னை மதிக்காமல் செல்பவனை கண்டு மாயாவிற்கு உள்ளுக்குள் லேசாக எரிய.. அதை கவனித்திருந்தாள் மதி.
"என் அண்ணன் எப்பவுமே இப்டி தான். நீங்க உள்ள வாங்க.." தான் அழைத்துவந்தக் குழந்தையை சோஃபாவில் அமரச்செய்த மதி, மாயாவை உள்ளே அழைத்த அதேநேரம்.. ஒரு கையில் கைக்குழந்தையை பிடித்திருந்த காலா, மறுகையால், தன் முன்னால் இருந்த அந்த பெரியத் திரையில் தீவிரமாக மூழ்கியிருந்தான்.
சில நொடிகள் தன் முன்னால் இருந்த கீ-போர்டை தட்டியவன், "ஹ்ம், டன்!" தனக்குத்தானே சொல்லிக்கொண்டபடி நிமிர்ந்து, அந்தத் திரையை நோக்கி தன் வலது கரத்தை நீட்டிட.. அவன் கைவழியே பாய்ந்துவந்த வெள்ளி நிற ஒளிக்கீற்று நேராகச் சென்று அந்தத் திரையை தாக்கியதில், ஒரே திரையாக இருந்தது இப்போது நான்கு திரையாக மாறி நின்றது. மதி கொடுத்த தண்ணீரை குடிக்கப்போன மாயா, அவன் செயலைக் கண்டு திகைத்து எழுந்தாள்.
"சில்வர் கலர் ஆத்ம ஒளியா?! கேள்வி பட்டதே இல்ல!!" ஆச்சரியத்தில் மாயா வாயை பிழக்க.. அவளை திரும்பிக்கூட பார்க்காதவன், "ஆத்ம ஒளிய பத்தி ஏ பி சி டி அளவுக்குக் கூட தெரிஞ்சு வச்சுக்காதவங்க, இதப்பத்திலாம் பேசக் கூடாது." தனித்தனியாக இருக்கும் நான்கு ஸ்கிரீன்களிலும் வெவ்வேறு படக்கோப்புகளை ஓடவிட்டு, பின் அதை பாஸ் செய்துக்கொண்டே அவன் நக்கலாக சிரித்ததில் இன்னுமும் எரிச்சலானாள், மாயா.
ஒன்றாக இருந்து நான்காக பிரிந்திருந்த அந்த நான்கு திரைகளுக்கு அருகிலும் நான்கு வெள்ளி நிற மாயவாயில்கள் காலாவால் திறக்கப்பட... அவைகளைக் கண்டு திகைத்தாலும், மாயா, எதையும் பேசவில்லை. எரிச்சலுடன், கைகளை கட்டிக்கொண்டுதான் நின்றிருந்தாள். அதே எரிச்சலுடன் அவள் அந்தத் திரையை கவனிக்க.. அவைகளில் ஒன்று, வைரமாளிகையின் வாயிலை காட்டியபடி உறைந்து நின்றிருந்தது. அதைகண்ட மாயாவின் விழிகள் விரிய.. வேண்டுமென்றே அந்தக் காட்சியை பிளே செய்தான், காலன். அதில் ஒரு சிறுமி, தரையை அளந்து அளந்து விளையாடிக் கொண்டிருக்க.. மாயாவால் தன் வாயை கட்டுபடுத்த முடியவில்லை.
"வைரமாளிகைய வீடியோ எடுத்து என்ன பண்ணுறீங்க?"
"அங்.. ஷார்ட்-பிலிம் ரிலீஸ் பண்ண போறேன்!" அவள் முகத்தை பார்க்காமல் அவன் நக்கலாக பதில் கொடுக்க, அவ்வளவுதான்... மாயாவின் பொறுமை, எல்லை கடந்துவிட்டது. கொதித்தெழுந்துவிட்டாள் அவள்.
"ஓய் ஹலோ! என்ன, ரொம்ப ஓவரா போற நீ? வந்ததுல இருந்து திமிறாவே நடந்துக்குற! நா கேட்ட கேள்விக்கு ஒழுங்காவே பதில் சொல்ல மாற்ற.." அவள் காட்டு கத்து கத்த.. அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், "ஒரு நிமிஷம் இருங்க, தோ வரேன்." மீண்டும் திரைக்குள் மூழ்கினான்.
"ஒரு நிமிஷமா? நா ஒருத்தி இங்க காட்டு கத்து கத்தீட்டே இருக்கேன்... நீ, ஒரு நிமிஷம்குற," எரிச்சலில் எரிந்துக் கொண்டிருப்பவளை நோக்கி முழுமையாகத் திரும்பியவன், "இந்தாங்க, இவங்கள புடிங்க." அவன் கையிலிருந்தக் கைகுழந்தையை அவள் கையில் திணிக்க, "எ-என்ன இது.. என்ட்ட ஏன் குடுக்குறீங்க?" இவ்வளவுநேரம் இருந்த எரிமலை-ரூபம் மறைந்து, குழப்பமானாள் அவள்.
"அம்மாகிட்ட தானே கொழந்த இருக்கணும், அதான்.. புடிங்க."
"எதே! அம்மாவா? அவளோ தான் டா உனக்கு மறியாத."
"ஹாஹாஹா! சும்மா சொன்னேன் க்கா," சிரித்துக்கொண்டே சோஃபாவிலிருக்கும் குழந்தையை அழைத்துவந்தவன் அவளையும் மாயாவின் கையில் பிடித்துக்கொடுத்து, "அதோ.. அங்க ஒரு சின்ன பொண்ணு இருக்குல.. இவங்க ரெண்டுபேரையும் அந்த பொண்ணுட்ட விட்டுட்டு வாங்க." வைரமாளிகை இருக்கும் திரைக்கு அருகிலிருக்கும் மாயவாயிலை அவன் சுட்டிக்காட்ட, "எதுக்கு டா?" கடுப்புடன் கத்தினாள் அவள்.
"அட, போய் விட்டுட்டு வாங்களேன், உங்களுக்கு அப்பரமா வெளக்கம் குடுக்குறேன்." அவளை தள்ளிக்கொண்டு வந்து அந்த மாயவாயிலருகில் நிறுத்திட.. அவனை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றவள், அவன் சொன்னது போலவே செய்தாள்.
இரு குழந்தைகளுடன் சென்ற மாயா அங்கிருந்த சிறுமியின் முன் நிற்க... வெறும் தரையில் தவ்விக் கொண்டிருந்தவள், மாயாவின் கையிலிருக்கும் குழந்தையை கண்டு கன்னத்தில் கை வைத்தபடி அவளருகில் வந்துவிட்டாள். புன்னகையுடன் அந்த சிறுமியை நோக்கி குனிந்த மாயா, தன் கையிலிருக்கும் கைகுழந்தையை அவளுக்குத் தெரியும்படிக்கு கீழிறக்க.. சட்டென சம்மணமிட்டு தரையில் அமர்ந்துவிட்ட அந்த சிறுமி, குழந்தையை தூக்கவேண்டி மாயாவை நோக்கி கைகளை நீட்டினாள். அவளை நோக்கி புன்னகைத்த மாயா, தான் அழைத்துவந்த குழந்தையை அந்த சிறுமிக்கு அருகில் அமரச் செய்து, கைகுழந்தையை அவள் மடியில் வைக்க... கண்கள் நிரம்பிய ஆனந்தத்துடன் அந்தக் குழந்தையை நோக்கிய சிறுமி, "நீ யார்?" என மாயாவை நோக்கிட, "நான், மாயா." புன்னகையுடன் அவள் கன்னத்தை தட்டிவிட்டு, வந்த வழியே மீண்டும் காலாவின் கோட்டைக்கு வந்துவிட்டாள்.
"சூப்பர்! குட் ஜாப், க்கா!" வைர மாளிகைக்கான மாயவாயிலை மூடிய காலா, அருகில் இருந்த மேஜைமீது வைத்திருந்த ஒரு கையளவிலான புத்தகத்தை எடுத்துக்கொண்டு, அடுத்த மாயவாயிலை சுட்டியபடியே மாயாவிடம் மீண்டும் வந்தான்.
"இப்போ, இத எடுத்துட்டு அங்க போய்-"
"டேய்! என்ன பாத்தா உனக்கு எப்டி டா தெரியுது?"
"அத அப்பறமா சொல்லுறேன், இப்போ, இத எடுத்துட்டு அங்கப்போய் ஒளிஞ்சு நில்லுங்க. ஒரு-"
"என் பொறுமைய சோதிக்காத டா.."
"பலீஸ், க்கா! அங்க போய் ஒளிஞ்சு நில்லுங்க... ஒரு குட்டி பையன் வருவான் அவன் பக்கத்துல வச்சுட்டு வந்துருங்க." அந்த புத்தகத்தை அவள் கைக்குள் திணிக்க, "குட்டி பையனா? இந்த இருட்டுல நா எங்கேருந்துடா அந்த குட்டி பையன தேடுறது?" அந்த மாயவாயிலின் உள்ளே இருக்கும் இருளை சுட்டிக்காட்டியபடி கத்தினாள் அவள்.
"ஆமா ல?" ஒரு நொடி சிந்தித்தவன், அங்கிருந்த மேஜையிலிருக்கும் டிராயரில் தேடி, ஒரு கண்ணாடியை கையில் எடுத்தான். "இந்தாங்க, இத போட்டுட்டு போங்க. இது, நைட் விஷன் கிளாஸ். இருட்டுல நல்லா கண்ணு தெரியும்." அவள் கையில் அதை கொடுக்க.. வெடுக்கென அதை பறித்தவள், அவனை முறைத்துக்கொண்டே அந்த வாயிலினுள் சென்று ஒரு அலமாறியின் பின் ஒளிந்து நின்றாள்.
அது ஒரு அறை. பிரம்மாண்ட அறை. அவளுக்கு பழக்கப்பட்ட இடம் போலவும் தோன்றியது. ஓரிரு நொடிகள் அந்த அறையை சுற்றிமுற்றி பார்த்தவள், தன் கையிலிருக்கும் கையடக்க புத்தகத்தையும் ஒரு பார்வை பார்க்க.. 'ஆதிலோகினி' என பட்டை எழுத்தில் இருந்தது அதன் முகப்பு பக்கம். அதைகண்டு அவள் குழம்பிக்கொண்டு இருக்கையிலேயே அங்கு வந்துவிட்டான், காலா குறிப்பிட்ட அந்த சிறுவன். அவன் சொன்னதுபோலவே அந்த சிறுவனுக்கு அருகில் புத்தகத்தை வைத்தவள், அவனறியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
அவள் வந்ததும் அந்த மாயவாயிலையும் அடைத்துவிட்ட காலன், அதனருகில் இருக்கும் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியிலேயே உன்னிப்பாக இருக்க.. அது என்னவென கவனிக்கத் தொடங்கினாள் மாயா. அவள் இப்போது சென்றுவந்த அந்த அறைகுள் இருந்த சிறுவன், தனி ஒருவனாக அந்த அறையை சுத்தம் செய்துக் கொண்டிருத்தான். அது, அவன் சக்திக்கு மீறிய செயல் என மாயாவின் மனதில் பரிதாபம் எழுந்த அதே நேரம் அவனது முகம் கூட அவளுக்கு பரிட்சயமான முகம் போல் தான் தோன்றியது. அவள் யோசித்துக்கொண்டே அக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்க.. அந்த அறையை மொத்தமாக சுத்தம் செய்துமுடித்த அந்த சிறுவன், மாயா வைத்துவிட்டு வந்த புத்தகத்தை ஒருவழியாக கையில் எடுத்துவிட்டான். அத்துடன் அந்தக் காட்சி நிறைவு பெற்றது.
யோசனையுடன் நிற்கும் மாயாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்தத் திரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடியோவை பிளே செய்த காலன், "இப்போ..-" வார்த்தையை இழுத்தபடியே மாயாவை நோக்கி முழுதாகத் திரும்பிய நொடி, மாயாவின் எரியம் பார்வை, சட்டென அவனை நோக்கி நிமிர, "நான் எது சொன்னாலும் நீங்க செய்யுற மூட்ல இல்ல போல. சரி, என் தங்கச்சியவே அனுப்பிக்கிறேன் நான்." சோஃபாவில் அமர்ந்தபடி தங்கள் இருவரின் நடவடிக்கையையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் மதியை நோக்கித் தன் பார்வையை திருப்பினான்.
"புரியுது, 'ண்ணா" சிரிப்புடனே எழுந்தவள், காலா எதுவும் சொல்லாமலே அடுத்த மாயவாயிலுக்குள் நுழைந்தாள். மதி, அந்த மாயவாயிலுக்குள் நுழைந்ததும், மூன்றாவதாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த வீடியோவை எதார்த்தமாக பார்த்த மாயாவின் கண்ணை முதலில் கவர்த்தது அந்த சிவப்பு நிற கல்.
"உறவுசங்கிலி- ஹேய்! இது என் அண்ணன் டா!!" ரட்சக ராஜ்யத்தின் எல்லை வாயிலில், கையில் உறவுசங்கிலியுடன் கண்ணில் கண்ணீருடன் நிற்கும் சிறுவயது அபிஜித்தை கண்டு திகைத்து நிற்க, "இப்போ யாரு இல்லன்னா," சோஃபாவில் வந்து ஹாயாக அமர்ந்தான் காலன்.
"அது என் அண்ணனோட சின்ன வயசு!!"
"ஆமா!"
"அது பாஸ்ட்! அங்கைக்கு எப்டி உன்னால மாயவாயில் தெறக்க முடியும்?" மாயாவின் அதிர்ச்சி பார்வை, தன் அண்ணனின் சிறுவயது உருவம் நிற்கும் அந்த காட்சியை கண்டு மேலும் திகைத்துக் கொண்டிருக்க.. சிறுவயது அபிஜித், தூக்கி எறிந்துவிட்டுச் சென்ற உறவுசங்கிலியை, அதே காட்சியில் இருக்கும் மதி கையில் எடுத்தாள்.
"அடேய்! அது என் அண்ணனோடது! அவ ஏன் எடுக்குறா? ஹேய், உங்க ரெண்டுபேரையும் சும்மா விடமாட்டேன் நான்," மாயா இங்கு கத்திக் கொண்டிருக்க, "ஹ்ம்.. எத்தன ஜென்மம் ஆனாலும் பிறவிகுணம், பிறவிகுணம் தான்!" என்றபடியே உறவுசங்கிலியை எடுத்துவந்த மதி, அதை காலாவின் கையில் கொடுத்தாள்.
"என்ன லூசு மாதிரி ஒலர்ற?" மாயா, மதியை பார்க்க.. அதேநேரம், கடைசி காட்சியை ஓடவிட்டான் காலா.
"அத்த!.. டேய், என்ன டா செஞ்சுட்டு இருக்கீங்க என் குடும்பத்த வச்சு?" அந்த இறுதிகாட்சியில் இருக்கும் ஷிவேதனாவை கண்டு மாயா குழப்பத்தின் உச்சநிலைக்குச் சென்றுவிட்டாள்.
"நான் தான் சொன்னேனே க்கா, ஷார்ட்-பிளிம் ரிலீஸ் பண்ண போறேன்னு." நக்கலாக கூறியபடியே தன் கையை மாயாவின் கழுத்தை நோக்கி நீட்டிட... அவள் கழுத்தில் கிடந்த உறவுசங்கிலி, அலேக்காகக் கழண்டு அவன் கைக்கு சென்றது. உறவுசங்கிலிகள் இரண்டையும் இரு கைகளிலும் வைத்திருக்க, "ஹேய்! இது என்னோடது" அவள் காலாவை நோக்கி சீரிய நேரம், "கவல படாதீங்க, உங்க புருஷன காப்பாத்த தான்." என்றபடியே அவள் கழுத்திலிருந்த எடுத்தத்தை மதியின் கையில் கொடித்தான் காலன். அதை வாங்கிக்கொண்டு அடுத்த மாயவாயிலுக்குள் நுழைந்தாள் மதி.
மாயாவின் கவனம் அந்தக் காட்சியில் பதிய.. அதிலிருந்த ஷிவேதனா, அறையை விட்டு வெளியே சென்றதும், தன்னிடமிருந்த உறவுசங்கிலியை அங்கே வைத்துவிட்டு வந்துவிட்டாள் மதி. மாயா, வாயடைத்துப்போய் அக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த உறவுசங்கிலி அந்தரத்தில் எழும்பி எரியத் தொடங்கிய சில நிமிடத்தில், தன் கையில் தன் மகனை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழையும் தன் அத்தையை கண்டு, என்ன சொல்வதென்றே புரியாத நிலையில் நின்றிருந்தாள் அவள்.
"ஷேனா!" அவள் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது. அவள் இதுவரை சென்றுவந்த இரு இடமும் அவள் கண்முன் வந்து நின்றது. முதலில், அந்த சிறுமி.. அவள் முகம் பரிட்சயமானதாக இருந்ததன் காரணத்தை இப்போது புரிந்துக்கொண்டாள். அது, சங்கவி தான். தன் அத்தையின் மகள், சங்கவி. மேலும், தான் தூக்கிச்சென்று விட்டுவந்த இரு குழந்தைகள்?
தீராவும் தாரியும் இப்படிதான் தங்களின் ராஜ்யத்திற்கு வந்ததாக அனைவரும் சொல்லி கேட்டிருக்கிறாள் மாயா. அடுத்து, ஷேனா! அந்த புத்தகத்தை வைத்துவிட்டு வந்த அறையில் அவள் பார்த்தது ஷேனாவை தான். அனைத்தும் கடந்த காலத்தில் நடந்தவைகள். 'எல்லாம் தன் மூலமாகதான் நடந்ததா?'
"டேய் யார்ரா நீ" அவள் வியந்துபோய் காலாவை நோக்க, "ஹேப்பி பர்த் டே, மாயா க்கா!" அவன் முகத்தில் விஷம புன்னகை மட்டுமே இருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro