வழி மாறி போச்சே!
கிச்சன் ஜன்னல் வழியாக எகிறி குதித்துத் தன் அண்ணன் மற்றும் தீராவிடமிருந்து தப்பி ஓடியிருந்த இளவரசிகள் இருவரும் தோளோடு தோளாகக் கை போட்டுக்கொண்டு, அந்த ஊரின் எல்லையை அடையும் சாலை வழியாக நடந்துக் கொண்டிருந்தார்கள்.
"நம்ம மெமரியவே க்ளியர் பண்ணுற அளவுக்கு இந்த தீராக்கு தைரியம் இருந்துருக்கு பாரேன் ம்மூ!"
"ம்ம்! எல்லாத்துக்கும் சேத்துவச்சு என்னைகாச்சும் செஞ்சு விட்டுருவோம் அவள" சகோதரியின் பார்ட்-டைம் புலம்பலுக்கு பதில் கொடுத்தாள், ரக்ஷா.
"ம்ம். செய்வோம், கண்டிப்பா" என்னும்போதே அவர்கள் பார்க்க நினைத்திருந்த அவ்விடத்தை அடைந்திருந்தார்கள், ரட்சக ராஜ்ய இளவரசிகள் இருவரும். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ரட்சகனை காப்பதற்கு அவர்களால் போடப்பட்ட எல்லை கவசம் இருக்கும் இடம்தான் அது. அன்றைய நினைவுகள் எதுவும் அவர்கள் நினைவில் இல்லாமல் இருந்தாலும், நேற்று, தீரா சொல்லியதை கேட்டதும் அவர்களது மாயத்தின் வலிமையை காண இங்கு வந்திருக்கிறார்கள் இப்போது.
"இன்னும் இருக்கு, ம்மூ" அவர்களின் பார்வைக்கு மட்டுமே தெரியும்படியாக, மிக மெல்லியதாக இருக்கும் அந்த கண்ணாடித் திரையை பார்த்துக்கொண்டே ரக்ஷா சொல்ல, "ஆமா, ம்மூ! ஆனா, ஸ்ட்ராங்கா இல்ல" தங்கையின் சொல்லை பாதி ஆமோதித்தாள், மாயா.
"மறுபடியும் போட முடியுமா?"
"ம்ம். இது முழுசா உடையவும் தான் போடலாம்."
"சரியா பதினாலு வருஷம் ஆகும்ல, ஒரு ஸ்ட்ராங்கான மாயம் ஒடைய!"
"ம்ம்"
"கரக்டா பதினாலு வருஷம்னா... அவ சொன்ன கணக்குபடி மிட்-நைட் ஆகும் போல,"
"ஹான், அதுவரையும் நாம இங்கேயே- அம்மு! நீ அத பாத்தியா?" சட்டென மாயாவின் குரல் மாற்றம்கொள்ள... அவள் பார்வை, கவசத்திற்கு அப்புறமாக ஒரு வெற்றிடத்தில் பதிந்திருந்தது.
"நிழல்தேச இளவரசன் தானே அது!?" மாயாவின் அதே அதிர்ச்சி ரக்ஷாவின் குரலிலும் தென்பட்டது. அதுவே போதும், சட்டென கரும்புகைக்குள் மறைந்தவனை அவளும் பார்த்திருக்கிறாள் என்பது புரிந்தது அவள் சகோதரிக்கு.
"ம்ம். அவனமாறி தான் இருந்துச்சு"
"கவசம் வேற ஸ்ட்ராங்கா இல்ல அம்மு, ஒடச்சு இந்தபக்கம் வந்துற மாட்டான்?"
"அஹான், இதவிட வீக்கானாலும் அவனால ஒடைக்க முடியாது. ஆனா, ராஜபதக்கம் இல்லாத வேற யாருனாலும் ஒடச்சுறலாம், ம்மூ"
"நம்மலால மிட்-நைட்க்கு அப்பறமா தானே புது கவசத்த போட முடியும். அதுக்குள்ள உள்ள வந்துட்டா?"
"வா, தீராட்ட போய் சொல்லுவோம்" மாயா, அவசரமாக மாய வாயிலை திறக்கப்போன சமயம், "வேணா ம்மூ!, இங்க ஆள் நடமாட்டம் இருக்கு. வீடு பக்கம் தானே, நாம வேகமா நடந்தே போய்றலாம்." என்றபடி அக்காவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினாள், ரக்ஷா.
✨✨✨
அபி மற்றும் தீரா ரகசியமாகப் பின்தொடர, நம் ஆதிலோக ரட்சகன் அவன் அன்னையுடன் இணைந்து உற்சாகமாக நடந்துக் கொண்டிருந்தான் அந்த சாலையில். "அம்மா, நிஜமாவே அந்த எடத்துக்கு நான் போய்ருக்க மாட்டேன்னு நீ நெனைக்குறியா?"
"ம்ஹும்ம்ம். கண்டிப்பா நீ போய்ருக்க வாய்ப்பில்ல" மகனின் தலையில் லேசாகத் தட்டினாள், தேவயாசினி.
"அப்டிங்குற!"
"ம்ம்ம், நீயே பாத்துக்கோ, அந்த எடம் உனக்கு தெரியுமா தெரியாதான்னு"
"பாக்குறேன், பாக்குறேன்!"
இந்த வெண்பனி சூழ்ந்த மலையில், தனக்கு தெரியாத ஒரு இடமும் இருக்கிறதா என வியந்தவண்ணம், தன் வாழ்வின் புதிய பயணத்தை தொடரப்போகும் பாதையை நோக்கித் தன் நடையை தொடர்ந்தான், ரக்ஷவன். சில நிமிடங்கள் வரையில் அந்த பாதையை ரசித்துக்கொண்டு மௌனமாகவே வந்தவனுக்கு, எப்போது, தாங்கள் செல்லும் பாதை எந்த இடத்தை நோக்கிச் செல்லும் என்பது மூளையில் மணியடித்ததோ, அப்போதே சடன்-பிரேக்கிட்டது அவன் நடை. முறைக்கும் பார்வையுடன், பின்னால் வரும் தன் தாயை நோக்கித் திரும்பினான், அவன். அதன் காரணத்தை அறிந்த தேவயாசினியோ 'ஆஹா! புள்ள சுதாரிச்சுருச்சு!' என்னும் மைண்ட்-வாய்ஸுடன், "என்ன டா? ஏன் மொறைக்குற?" எதுவும் அறியாதவள் போல் வினவினாள்.
"இப்ப என்ன ஆச்சுனு உனக்கு தெரியாது?" அவன் கேட்க.. முறைத்த கண்கள் முறைத்தவாறே இருந்தது. குரலில், சிறு கோபம் வெளிப்பட்டது.
"சொன்னா தானே தெரியும்"
"நான் போகாத இடம்னு சொன்னப்பவே உஷாரா இருந்துருக்கனும் ம்மா, நீ கூப்ட்ட ஒடனே வந்தேன்ல... போ ம்மா, நான் வீட்டுக்கே போறேன்." சிடுசிடுவென சீரியவன், வந்தவழியே நடக்கப் போக... அவன் கையை பிடித்துத் தடுத்தாள், அவன் அன்னை.
"என்னடா ஆச்சு உனக்கு? சொன்னா தானே புரியும்.... இப்டி தலையும் புரியாம வாலும் புரியாம தையா-தக்கானு குதிச்சா எனக்கு என்ன புரியும்?"
"உனக்கு புரியல? சரி, புரியிற மாறியே கேக்குறேன், இப்போ நாம எங்க போறோம்?" அவன் கண்கள் அன்னையின் விழியை நோக்க, மகனின் கேள்விக்கு பதில் கொடுக்கத் தினறினாள், அவள்.
"ம்மா, நீ சொன்னா மட்டும்தான் நான் இந்த எடத்த விட்டு நகருவேன். இல்லனா ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்" என்றபடி அவன் அங்கேயே அமரப்போக, " அடேய்!!" அவனை இழுத்து நிற்கவைத்த தேவயாசினி, "கோவிலுக்கு தான் டா போறோம்" சலித்துக்கொண்டாள்.
"இதுக்குதான் சொன்னேன், நான் வீட்டுக்கே போறேன்னு" மீண்டும் அவன் வீட்டை நோக்கி நடக்க முனைய, அவன் கையிலிருந்த தேவயாசினியின் பிடி வலுவாகியது.
"ரக்ஷவ்... அம்மா பேச்ச கேப்பியா மாட்டியா?"
"அம்மா பேச்ச ரக்ஷவ் எப்போவுமே கேப்பான். ஆனா, அந்த கோவிலுக்கு போக சொல்லுறத மட்டும் கேக்க மாட்டான். ஹும்."
"ஏன் டா?"
"ம்மா.. அந்த பூசாரி ஒரு பிராடு பய ம்மா"
"ரக்ஷவ்."
"மொறைக்காத ம்மா, அவரு பிராடு தான். அவரே ஒரு டூப்ளிகேட், அப்போ அவரு பூஜ பண்ணுற சாமி மட்டும் ஒரிஜினலா இருக்குமா என்ன? அதுவும் டூப்பு தான், ரக்ஷவ்க்கு டூப்புலாம் புடிக்காது. சோ, நீயே கூப்புட்டாலும் அங்கெல்லாம் வர முடியாது, போ ம்மா..." அன்னையின் கையை உதறிவிட்டு எரிச்சலுடன் புரபட்டான் அவ்விடத்திலிருந்து.
"ஏன் தீரு, கோவில்ன்னா தலைவருக்கு புடிக்காதோ?" மொபைலில் பேசுவதுபோல் போஸ் கொடுத்தபடி, ஐந்தடிக்கு அப்பால் நின்றிருந்த அபி, கோபமாக நடந்து செல்லும் தங்கள் ரட்சனை பார்த்துக்கொண்டே தீராவிடம் கேட்க, "ஆமா, மாமா. ஆனா அவன் அம்மா, அங்க போகசொல்லி தான் எப்போமே இவன்ட்ட சொல்லிட்டு இருப்பாங்க"
"ம்ம், ரொம்ப பக்திமயமான அம்மா போல,"
"அப்டி தான் மாமா நானும் முன்னாடி நெனச்சேன். ஆனா, அப்டி அங்க என்னதான் இருக்குன்னு பாக்குறதுக்கு ஒரு தடவ அந்த கோவிலுக்கு போனேன். அங்க, ஆதிலோகத்துல உள்ள எனர்ஜி ஃபீல் ஆச்சு மாமா! சரியா சொல்லனும்னா... நம்ம வைரமாளிகைல உள்ள அதே மாதிரி எனர்ஜி!"
"அங்!? பூமில ஆதிலோக எனர்ஜியா?" அபியின் விழி விரிந்த வேகத்திற்கு அவன் இதயமும் சில நொடிகள் வேகமெடுத்து அடங்கியது.
✨✨✨
"ஹர்ஷா! பசிக்கிது டா; எவ்ளோ நேரமா இதே எடத்த ரவுன்ட் அடிப்ப?" அந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஹர்ஷாவின் டூ-வீலர் பின் சீட்டில் அமர்ந்தபடி அர்ஜுன் கேட்க, "எல்லாம் உன்னால தானே வந்துச்சு. பொறு! ஒரு மேப் கூட ஒழுங்கா பாக்க தெரியல நீலாம் எப்டி டா அத்தைய பாத்துக்க போற?" பதிலுக்கு எரிந்து விழுந்தான், அவன் அண்ணன்.
"டேய், நா என்ன டா செய்ய.. இதுல எது எந்த டேரக்ஷன்னே புரிய மாட்டுது."
"தலைல களிமண்ணு வச்சுருக்குறவனுக்குலாம் ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது."
"ஆமா, உங்க மண்டைல அப்டியே தங்கக்கட்டியும் வைரக்கட்டியும் இருக்கு... பாதையெல்லாம் பளபளன்னு தெரிஞ்சுரும் பாரு."
"வாய மூடு டா கொஞ்ச நேரம். இருக்குற கடுப்புல நீ வேற தொணதொணன்னு." ஹர்ஷா, தன் மொபைலை தட்டித் தட்டி பார்க்க.. அதுவோ, அவ்வளவு சீக்கிரத்தில் ஆசைவேணா? என ஹாங்காகி நின்றது.
"என்ன டா பண்ணி வச்சு தோலச்ச? ஹாங் ஆகிட்டு வரவே மட்டுது?"
"ம்ம்ம்ம்.... அப்பா சென்ட்டிமென்ட் ஃப்போன்னு ஆறு வருஷமா ஒரே ஃப்போன்குள்ள எல்லா லோடையும் ஏத்தி வச்சுருந்தா இப்டி தா ஆகும்."
"ம்ச், உன்ட்ட போய் கேட்டேன் பாரு, என்னை சொல்லனும்" தம்பியின் ரூபத்தில் தன்னுடனே இருக்கும் அர்ஜுன் என்னும் மினி தலைவலியை சமாளிக்க முடியாமல், அவன் வாய்க்குள்ளேயே முனங்க அதுவோ அர்ஜுனுக்கு தெளிவாக கேட்டுவிட்டது. "அப்போ எதுக்கு என்ட்ட கேக்குறீங்கலாம்? வழில போறவங்கள புடிச்சுவச்சு கேக்க வேண்டியது தானே? துரைய அப்டியே கை புடிச்சு கூட்டிட்டு போய் அத்த வீட்டுல விட்டுட்டு வந்துருவாங்க"
"உன்ட்ட கேக்குறதுக்கு, நான் அப்டி கேட்டு வந்துருந்தாலும் இந்நேரம் அத்த வீட்டுக்கு போய் ரிலாக்ஸா இருந்துருப்பேன்."
"ஒஹ்! அப்டிங்களா துரை," நக்கலாக, சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே வண்டியிலிருந்து கீழே இறங்கியவன், "ஹலோ, எக்ஸ்கியூஸ் மீ, இவன் உங்கள கூப்புடுறான்'ங்க" அவ்வழியாக அவசரமாக சென்றுக் கொண்டிருந்த இருவரை--ரட்சக ராஜ்ய இளவாகிகளை--அழைத்தான், அர்ஜுன்.
சாலையின் நட்டநடுவே வண்டியை நிறுத்தி வைத்துக்கொண்டு, யாரென்றே தெரியாத இரு பெண்களை அழைக்கும் இந்த டிப்-டாப்-சகோதரன்களை பார்க்க நம் இளைய இளவரசிக்கு எப்படி தெரிந்ததோ; அவன் குரலுக்கு அவனை திரும்பிப் பார்த்தவள், உச்சு கொட்டியவாறு தன் சகோதரியை இழுத்துக்கொண்டு முன்னே சென்றாள். தன்னை கண்டுகொள்ளாமல் நேராகச் செல்லும் அந்த பெண்ணை பார்த்த அர்ஜுனுக்கு தன்மானம் தலைதூக்க, "ஹலோ! கூப்ட தானே செஞ்சோம், அதுக்கு என்ன உச்சு கொட்டிட்டு போறீங்க?" நான்கடி சென்றவர்களை நோக்கிக் கத்தியபடியே அவன் சண்டைக்கு கிளம்ப... விடுவார்களா நம் இளவரசிகள்? "நீங்க எதுக்கு சம்பந்தமே இல்லாம எங்கள கூப்புடுறீங்க?" கத்தினாள், மாயா.
"ஸாரி'ங்க, ஸாரி'ங்க... ஊருக்கு புதுசு... அட்ரஸ் கேக்க தான் கூப்புட்டோம். நீங்க போங்க." ஊரில் செய்வது போலவே இங்கேயும் குட்டி-கலவரத்தை உண்டாக்கி கூட்டத்தை கூட்டி விடுவானோ என பதறிய ஹர்ஷா, தன் வண்டியிலிருந்து இறங்கிவந்து அம்மூவருக்கும் இடையில் புகுந்துக்கொள்ள... இளவரசிகள் இருந்த அவசரத்தில், அர்ஜுனை முறைத்துவிட்டு அப்படியே திரும்பி நடக்கப்போன சமயம், "திமிரு புடிச்சவளுங்க," வம்புக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பாதவன் போல், அவர்களுக்குக் கேட்கும்படியே முணுமுணுத்தான், அர்ஜுன்.
"யாரு திமிரு புடிச்சவங்க? முன்னப்பின்ன தெரியாத பொண்ணுங்க கிட்ட ரோட்ல வச்சு சத்தம் போடுற நீ தான் டா திமிரு புடிச்சாவன்."
"அப்போ, நீங்க என்ன பண்ணுறீங்களாம்?" தன்னிடம் எகிறிக்கொண்டு வந்தவளிடம் அர்ஜுன் சீற, "டேய், உன் வேலைய பாத்துட்டு போ டா. சும்மா போறவங்கள்ட்ட வம்பு வச்சுட்டு." அவன் முகத்திற்கு நேராக கையை காட்டிய ரக்ஷா, "நீ வா ம்மூ" மாயாவை இழுத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள். சிடுசிடுவென்ற முகத்துடன்.
"அந்த சுண்டக்கா-ட்வின்ஸ் என்னை இன்சல்ட் பண்ணிட்டு போறாங்க... நீ பாத்துட்டு சும்மா இருக்க," அவ்விருவரும் சற்று தொலைவுக்கு சென்றதும், இதுவரையில் தன்னை நிதானப் படுத்திக் கொண்டிருந்தத் தன் உடன்பிறப்பிடம் அர்ஜுன் திரும்பிய அதே நொடியில் அவன் பின்னந்தலையில் சுளீரென ஒரு அடி விழுந்தது.
"மூடிட்டு வண்டில ஏறு டா, எரும. வழி தெரிஞ்சுருச்சு." தம்பியை முறைத்த நிலையிலேயே வண்டியில் ஏறிய ஹர்ஷா, வண்டியை இயக்க, "இந்த ஊரு தானே, கைல சிக்காமலா போய்ருவீங்க" முணங்கிக்கொண்டே அண்ணனுக்கு பின்னால் ஏறினான், அர்ஜுன்.
❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro