ரட்சகன் வசியம்.
நள்ளிரவு தாண்டியிருந்த வேளையில் ஏதோ ஒன்று அசௌகரியமாக உணர்ந்த அர்ஜுன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழ முயற்சித்த நேரம் அவன் கண்களை திறக்க விடாமல் பளிச்சென்ற ஒளி ஒன்று அந்த அறையை ஆக்கிரமித்திருக்க.. தன் கண்ணை கூசச் செய்யும் அந்த ஒளியை மீறி கண்களை திறந்துபார்க்க முயன்றவனை அதிகம் சோதிக்காமல் அந்த ஒளியே மங்கிப்போய் அவன் பார்வைக்கு வழி விட்டது.
அவன் கண்களை திறந்த நொடியே தாமதிக்காமல், 'பக்கத்துல கெடந்தவன் ஒழுங்கா இருக்கானா?' என தன்னருகில் மாலை முதலாக மயக்கத்தில் கிடந்தவனை தான் முதலில் தேடினான். ஆனால் அவனைதான் காணவில்லை அங்கே. அர்ஜுனின் சந்தேகம் சரிதான் என்பதுபோல் அந்த ஒளிக்கு காரணமாக இருந்தது சட்ஷாத் நம் ரட்சகனே.
அருகில் கிடந்தவனை காணமால் ஒரு நோடியே பதறியவன் அடுத்த நொடி தன் கண் அழைக்கும் திசையில் பார்க்க... உடலை சுற்றிலும் நெருப்பு வளையம் சூழ நிலத்தை விட்டு மேலே எம்பிப் பறந்து கொண்டிருப்பவனை ஜன்னல் வழியாக வந்த ராட்சஸ காற்று திருடிச் சென்று கொண்டிருந்தது. அக்காட்சியை கண்ட மாத்திரத்தில் விழுந்தடித்து கட்டிலிலிருந்து தரைக்குத் தாவியவன், தான் தூங்க செல்லும் முன் ஒருத்தி ஹாலில் நின்றுகொண்டு 'எப்போ என்ன ஆனாலும் என்னை கூப்புடு.. நான் ஹால்லயே தான் இருப்பேன்' என ஹர்ஷனுடன் சேர்ந்து சொன்னது நினைவுக்கு வர.. அவளை பிடிக்க தான் முதலில் ஓடினான்.
தீராவை எதிர்பார்த்தே கதவை வேகமாக திறந்த அர்ஜுன், "ஹே...அவன்-" அவசரமாக எதோ சொல்ல வந்து அப்படியே நின்றான்; தூங்க செல்லும் முன் வீட்டில் இல்லாத இருவர், ஒரே போலான முக தோற்றத்துடன் வெவ்வேறு நிற டி-ஷர்ட் அணிந்துகொண்டு இருக்கும் இருவர், இரு திசையில் வாக்கிங் செல்லும் போஸில் நின்றபடியே அவனை நோக்கித் திரும்பி பார்ப்பதை கண்டு.
"ஹேய்! நீங்க யாரு?" தான் சொல்ல வந்ததை நொடியில் மறந்த அம்னீஸியா பேஷன்ட் போல் சட்டென கேள்வியை மாற்றிக் கேட்டவன், அவர்கள் இருவருக்கு இடையிலும் 'கண்டுபிடி எட்டு வித்தியாசம்' தலைப்பு போட்டிருப்பது போல் மாற்றி மாற்றி இருவரையும் பார்க்கத் தொடங்கினான்.
"நீ யாரு தம்பி?" மஞ்சள் சட்டை போட்டிருப்பவன் சாதாரணமாக அவனை பார்க்க, "அர்ஜுன்?," அவனுக்கு பின்னால், சோஃபாவில் இருந்து கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்து பார்த்தாள், தீரா. அவளை தவிர அங்கிருந்த மூவரும் ஒன்றாக அவள் அழைப்பிற்கு திரும்ப, தீராவை கண்டதும் அனைத்தும் நியாபகம் வந்து அவளிடம் விரைந்தான், அர்ஜுன்.
"ஹேய்.. உன்ன தான் தேடி வந்தேன்...அங்க.. அவன் பறந்து போறான்... ஜன்னல் வழியா..." அர்ஜுன் படபடக்க, "யாரு? ரக்ஷவனா?" ஸ்லீப்பிங் மோடிலிருந்து அலாரம் மோடிற்கு நொடி பொழுதில் மாறியவள் சட்டென தரைக்குத் தாவ, "அன்- ஆமா, ஆமா.. அந்த பக்கமா.." அர்ஜுன் சொல்லி வாயை மூடவில்லை, "டேய், நீங்க இங்கேயே இருங்க டா.. அவன பாத்ததும் மாயவாயில் தெறக்குறேன்.. வந்துருங்க.." அங்கிருக்கும் மற்ற இருவர் சொல்ல வருவதை கூட கேட்காமல் சட்டு சட்டென ஒவ்வொரு மாய வாயிலாக திறந்து ஓடத் தொடங்கினாள். 'சாதாரணமாக ஓடினாலாவது பின்தொடரலாம், இப்படி ஓடினால் என்ன செய்ய?' என்பதுபோல் அமைதியாக அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்த இரட்டையர்கள், இப்போது, அர்ஜுனை நோக்கித் திரும்பினார்கள். அவன் இன்னுமும் எட்டு வித்தியாசம் கண்டுபிடிக்கும் குறிக்கோலுடன் தான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
"நீங்க ரெண்டுபேரும் யாரு?" கைகளை மடக்கிக் கட்டிய நிலையில் நின்றவன் இருவருக்கும் குறுக்குவிசாரணை நடத்த தாயாராக நிற்பதுபோல் நிற்க, "இப்போ ஓடுனாளே.. அவளோட பிரதர்ஸ்." அரக்கு டி-ஷர்ட்டுடன் இருந்தவன் பதில் கொடுத்தான்.
"ஈவ்னிங் வேற ரெண்டு பேரு இருந்தாங்க?"
"அவங்களும் தா..." அரக்கு சட்டையுடன் இருப்பவன் புன்னகையுடன் சொல்ல, "அவ, பாக்குற எல்லாரையும் பிரதர்ஸ்ஸா மாத்தி, இஷ்டத்துக்கு வேல வாங்குவா." சகோதரனின் சொல்லை தொடர்ந்து சலித்துக் கொண்டான் இன்னொருவன்.
"பாத்து தம்பி.. விட்டா உன்னையும் அந்த லிஸ்ட்ல சேத்து விட்டுருவா" புன்னகையுடன் அவன் தோளை பிடித்து அழைத்துச் சென்று சோஃபாவில் அமர வைத்தபடியே, மஞ்சள் சட்டை போட்டிருப்பவன் அவனுடன் அமர்ந்துக்கொள்ள, "என்னையவா?" முகத்தை அஷ்ட கோணலாக்கி அவனை பார்த்த அர்ஜுன், "பிரதர் வேணும்னா, எனக்கு பிரதர்ன்னு ஒருத்தன் தெண்டமா இங்க கெடப்பான்... அவன்தான் சிஸ்டர் இல்லன்னு அழுதுட்டு கெடக்குறவன். அவன வேணும்ன்னா தத்தெடுத்துக்கட்டும். நமக்கு சிஸ்டர்ஸ்லாம் செட் ஆவாது. ஒன்லி கேர்ல் ஃப்ரெண்ட்ஸ்." கால்மேல் கால் போட்டுக்கொண்டு இரு கைகளையும் சோஃபாவின்மேல் உயர்த்தி போட்டபடியே டான் போல் அமர்ந்துகொள்ள, "ஓஹ்!" நக்கலாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், இரட்டையர்கள் இருவரும்.
"யாஹ்!!" இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டவன், "சரி, உங்கள இன்ட்ரோ குடுக்கல?" என அவர்களை பார்க்க, "ஆமால்ல.. ஐ'ம் முகிலர்ஜுனன்; ஐ.பி.எஸ்" பக்கத்தில் அமர்ந்தபடி மஞ்சள் சட்டை போட்டிருந்த முகில், அவனுக்கு தன்னை அறிமுகம் செய்திக்கொள்ள, "ஐ'ம் நகுலர்ஜுனன்" சோஃபாவுக்கு பின்னால் வந்து நின்ற நகுலன், "ஜர்னலிஸ்ட்" என தன்னையும் அறிமுகப் படுத்திக்கொண்டான்.
"ஓஹ்! உங்களுக்கும் என் பேரு தானா?" இருவரும் தன்னை கண்டு புன்னகைப்பதை பார்த்தவன், "பை த வே, நான்... வெறும் அர்ஜுன்.. அன்- பிலே பாய்" அவர்களை போலவே தன் பெயருடன் சேர்த்து, கேட்காமல் கிடைத்தத் தன் பதவியையும் இணைத்துக் கூறியவன், அவர்களை நோக்கி ஆஸ்கர் வாங்கிய கர்வத்துடன் பதில் புன்னகை சிந்திட, "எப்போல இருந்து பிலே-பாய்லாம் ப்ரஃபஷன் ஆச்சு?" முகில் புருவங்களை உயர்த்தி அவனை பார்த்தான்.
"அது.... நான் பொறந்ததுல இருந்தே ஆகீருச்சு.." சீலிங்கை விழித்து பார்த்தபடி அவன் பதில் கொடுக்க, "அது சரி." சுவாரசியமாக அவனை மேலும் கீழுமாக பார்த்தார்கள், இரட்டையர்கள் இருவரும்.
ரவி மற்றும் வீருக்கு அவர்களின் மருத்துவமனையில் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்துவிட்டதால் தீராவிடம் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட, அந்த பிசாசும் நிழல்தேச இளவரசனும் எந்தநேரத்திலும் வந்துவிடுவார்கள் என சொல்லி மித்ராவை மட்டும் அவளது வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு ரக்ஷவனின் வீட்டிலேயே இருந்துகொண்டாள் தீரா. மாலை முதலாக தன் உறக்கத்தில் இருந்து எழாத ரக்ஷவனுக்கு நான் தான் காவலாக இருப்பேன் என ஒற்றை காலில் நின்று அன்றைய இரவில் அவனுடனே உறங்க சென்றுவிட்டான் அர்ஜுன். விழித்துக் கொண்டிருக்கும் தீராவுக்கு துணையாக தானும் விழித்து இருப்பதாக சொன்ன ஹர்ஷன், முகில் மற்றும் நகுலன் வந்து சில நாழிகை கழித்து உறங்க சென்றுவிட, சற்று முன்பே உறங்க சென்ற தீராவை, இப்போது வந்து எழுப்பி விட்டிருந்தான் அர்ஜுன்.
அவள் வீட்டிலிருந்து புறபபட்டு முழுதாக மூன்று நிமிடங்கள் முடிந்திருந்தது. சுற்றி முற்றி இருக்கும் ஜன்னல்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன், "ஓகே.. இப்போ அந்த பொண்ணு எங்க போச்சு? இன்னும் எவ்ளோ நேரம் இப்டியே இருக்கணும்.. பொறுமையை இழந்து கேட்டான்.
"வெய்ட் பண்ணுங்க மிஸ்டர் பிலே-பாய்.. பறந்து போன உங்க கசின் எங்க இருக்கான்னு அவ கண்டு புடிக்கணும்ல" முகில் நக்கலாக புன்னகைக்க, "கண்டு புடிச்சுட்டான்னு நெனைக்குறேன்" இருவருக்கும் ஒரு திசையை காட்டி கையுயர்த்தினான் நகுலன். தீராவால் திறக்கபட்டிருந்த மாயவாயில், நீல நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது அங்கே.
"சரி, நீங்க போய் உங்க குட் நைட் ஸ்லீப்ப கன்ட்டின்யூ பண்ணுங்க மிஸ்டர்.பிலே-பாய்.. உங்க கசின்ன நாங்க கூட்டிட்டு வரோம்." என்றபடியே முகில் எழ, "வாட்?" அவனை தொடர்ந்து படக்கென எழுந்த அர்ஜுன், "அவனுக்கு நான்தான் பாடிகார்ட், இன்னைக்கி நைட் ஃபுல்லா.. சோ வாங்க போலாம் அர்ஜுன்ஸ்.... நம்ம ரெஸ்கியூ மிஷன் வெயிட்டிங்" என முன்னால் நடப்பவன் சட்டையை பிடித்து பின்னால் இழுத்தான் முகில்.
"ஆளுக்கு முன்னாடி கெளம்புறீங்க? சண்ட போட தெரியுமா பாஸ்?" நகுலன் அவனை புருவமுயர்த்தி பார்பதை கவனித்த அர்ஜுன், வீம்பாக கண்களை மூடி நின்றபடி, "என்கிட்ட கராத்தே பிளாக் பெல்ட் இருக்கு. சோ, நானும் வருவேன்" என பிடிவாதமாக நிற்க.. இவனிடம் பேசி சமாளிக்க நேரமில்லை என இரு மனதுடன் அவனையும் இழுத்துக்கொண்டு அந்த மாயவாயிலினுள் நுழைந்தார்கள் மற்ற இரு அர்ஜுன்களும்.
.
.
.
அர்ஜுன் கை காட்டிய திசையிலேயே கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தன் ரட்சகனை தேடிக்கொண்டே வேக வேகமாக மாய வாயில்கள் மூலமாக பயணித்து இறுதியில் தீரா வந்து சேர்ந்திருந்த இடம், காட்டுப் பகுதியில் இருந்த அந்த ஓடை கரையோரம் தான்.
அவள் அவ்விடத்தை அடைந்த நொடியில் அவள் பார்த்த காட்சி அவளையே ஒருநொடி மிரளச் செய்தது என சொன்னால் அது மிகையாகாது. அப்படி இருந்தது ரட்சகனின் கொலைவெறி தாக்குதல். ஆனால் ஒன்றுதான் அவளுக்கே புரியவில்லை, ரட்சகனை தாக்குவது ஷேனா தான், ஆனால் ரட்சகனின் மொத்த வெறியும் சமாராவின் மீது இருந்தது.
குழப்பத்துடன் அவள் தன் சகோதரன்கள் இவ்விடம் வருவதற்காக வழியமைக்க... அவள் அமைத்த மாயவாயிலின் பளிச் ஒளி யார் கவனத்தை ஈர்ததோ இல்லையோ, ஷேனாவின் கவனத்தை ஈர்த்து அவனுக்கு ஒரு புது யோசனையை கொடுத்து விட்டிருந்தது.
தன் கண் முன் அப்பாவிகள் துன்ப படுவதை ரட்சகனால் தாங்க முடியாது என்பதை நன்கறிந்த ஷேனா, அதையே தன் ஆயுதமாக எடுத்துக்கொண்டு இப்போது தீராவை நோக்கி திரும்பிட... தனது தங்க வாள் உடன் இல்லாவிட்டாலும், எங்கு தொலைத்தாலும் எப்போது எந்நேரமும் தன் அழைப்புக்கு கைவசம் வந்துவிடும் தன் மரகத ஆத்மவாளை அவளை நோக்கி வீசி எறிந்தான் ஷேனா.
நடப்பது என்னவென ஆராயும்முன் மின்னல் வேகத்தில் தன்னை நோக்கி ஒரு ஆத்ம வாள் வருவதை கண்டு திகைத்த தீரா சுதாரிக்கும் முன் அவ்வாளானது அவளுக்கு ஒரு அடி தூரத்தில் வந்த நொடி, சட்டென அவளை பிடித்து ஓரத்திற்கு இழுத்திருந்தான் முகில். பேயரைந்ததை போல் தீரா திகைத்து நிற்க.. அவளை தவற விட்ட ஷேனாவின் ஆத்ம வாள், தீராவின் மாயவாயில் வழியாக ராம்ப்-வாக் வந்த அர்ஜுனின் காலடியில் குத்திட்டு நின்றது.
ரட்சகனின் கவனம் நிச்சயம் இப்புறம் திரும்பும் என்பதை ஆணித்தனமாக நம்பிய ஷேனா, களத்திற்கு புதிதாக வந்திருக்கும் நால்வரை நோக்கி விரைந்தான்.
"யம்மாடி... வரவேற்பு பலமா இருக்கே" கண்களை அகல விரித்த நிலையில், அர்ஜுன் தன் காலடியில் சொறுகி நிற்கும் அந்த பச்சை வாளை தன் கையில் பிடுங்கி எடுக்க... அந்த நொடியே காந்தத்தால் ஈர்க்கப்பட்டது போல் அர்ஜுன் கையை விட்டு பிரிந்த வாள், இரண்டடியில் தன்னை நெருங்கவிருக்கும் ஷேனாவின் கைக்கு பாய்ந்த அந்நோடியே அவன் அடுத்ததாக அர்ஜுனை பதம் பார்க்கத் தன் கையை ஓங்க..., "ஐயையோ..." அலறியபடி தன் கைகளால் தலைக்கு கவசம் செய்துகொண்ட அர்ஜுன், நிலத்தில் குனிந்து அமர்ந்திருந்தான்.
இரு நொடிகள் கடந்து எதுவும் ஆகாமல் இருந்ததால் அவன் மெல்லமாய் நிமிர்ந்த நொடி, ஷேனாவின் வாள் பிடித்திருக்கும் கையை தடுத்தபடி அர்ஜுனை குனிந்து நோக்கினான், நகுலன்.
"ஹேய்.. எதோ பிளாக் பெல்ட் வச்சுருக்கேன்னுலாம் சொன்ன? என்னதிது?"
"அது.. வச்சுருக்கேன்னு தானே சொன்னேன்.. நான் வாங்குனேன்னு சொன்னேனா?" தலைகுப்புற கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரேஞ்சுக்கு எழுந்து நின்று பதில் கொண்டுத்தான் அவன்.
"எதே?" என்னதான் ஷேனாவின் கையிலிருக்கும் வாளை அவன் தட்டிவிட்டாலும் மீண்டும் அவனிடமே வந்துசேரும் வாளை கவனித்தபடி, தன் பிடியையும் தகர்த்தாமல் அர்ஜுனை காண, "ஆமா.. என் அண்ணன் வாங்குனான் நான் அவன்ட்ட இருந்து ஆட்டைய போட்டு வச்சுருக்கேன்." சர்வ சாதாரணமாக சொன்னான் அவன்.
"அது சரி" என சொல்லியபடியே ஷேனாவின் காலை இடித்து அவனை மண்டியிடச் செய்தவன், அவனின் இரு கைகளையும் அசைக்க முடியாதபடிக்கு பின்னால் முறுக்கிப் பிடித்த நொடி, "ஹே ஹேய் அண்ணா... எதோ தப்பா இருக்கு... அவன் கைல இருக்குற பிரேஸ்லெட் இப்டி இருக்க கூடாது.. அவன ஸ்டாப் பண்ணனும்.." பதட்டமாக ஒலித்த தீராவின் குரலை தொடர்ந்து அனைவரின் கவனமும் ரட்சகன் மற்றும் சமாரா இருக்கும் திசை நோக்கி பாய... வெண்ணிறமும் பொன்னிறமும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தது ரட்சகனின் மினி ஆத்ம வாளில் இப்போது கருநிறம் கலக்கத் தொடங்கியிருந்தது. அதை கண்டு ஷேனாவின் இதழ் மட்டும் அர்த்தமாக புன்னகைத்தது, தான் சொன்னது போலவே ரட்சகனுக்குள் இருக்கும் இருள்-வாரிசின் சக்தியை கொண்டு அவனை கட்டுபடுத்த தொடங்கிவிட்டாள் சமாரா என்பதை உணர்ந்தது.
"வெயிட் நான் பாக்குறேன்..." என்றபடி முகில், ரக்ஷவை நோக்கி விரைந்த நொடி, அவன் கைவழியாக பாய்ந்துவந்த கருநிற கயிறு ஒன்று முகிலை அடித்து பின்னுக்குத் தள்ளி விட்டு அவன் முழுதாக சாமாராவின் கட்டுக்குள் சென்றுவிட்டான் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க... திகிலடைந்து அக்காட்சியை நோக்கினார்கள் அனைவரும்.
என்ன செய்ய என ஒன்றும் புரியாமல் தீரா தவித்திருந்த நேரம், "ஹேய் நீ ஓப்பன் பண்ணுவியே ஒரு ஜிகுஜிகு கதவு.. அத வீட்டுக்கு ஓப்பன் பண்ண முடியுமா?" அர்ஜுன் அவளை பார்க்க, "முடியும். ஏன் டா.." சம்பந்தம் இல்லாமல் ஏன் இப்படி கேட்கிறான் என குழம்பினாள் அவள்.
'நீ ஓப்பன் பண்ணு சொல்றேன்" என்றவன், அவள் குழப்பத்துடன் திறந்து கொடுத்த மாயவாயிளினுள் நுழைந்து ஒரே நிமிடத்தில் மீண்டும் வந்து அவள் முன் நின்றான்.
"இந்தா.. இது யூஸ் ஆகுமா?.. கோவில் கிட்ட வச்சு நீ குடுத்தது தான்." என ஒரு சிறு பொதியை அவள் கைகளில் தினிக்க.. ஒரே நொடியில் அது என்னவென கண்டுகொண்டவளுக்கு கண்ணில் பிரகாசம் கூடியது.
"உன் கூட்டத்துலேயே உன் கிட்ட தான் டா அறிவு கொஞ்சம் அதிகமா இருக்கு." வெற்றிப் புன்னகையுடன் சொன்னவள் நொடியில் ஒரு மாயவாயிலை திறந்து அதனுள் நுழைய, "தேங்க் யூ ஃபார் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்" அர்ஜூன் பெருமிதம் கொண்ட நேரம், எதுவும் புரியாமல் சமாராவை நோக்கித் தன் பார்வையை திருப்பிய ஷேனாவின் கண் முன்னேயே அவளுக்கு பின்னால் இருந்து ஒரு மாயவாயில் வழியாக வந்த தீரா, அந்த பொதிக்குள் இருந்த வெண்ணிற பொடியை அவள் மீது தூவ... நொடியில் மாயமாகினாள் சமாரா. அவளின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இரண்டே நொடியில் ரட்சகனை ஒரு வெள்ளை ஒளி மொத்தமாக மூடி மறைக்க.. அது மறைந்த கணம் அவனும் மாயமாகியிருந்தான்.
அவன் எங்கு சென்றான் என அனைவரும் குழப்பத்தில் இருந்த சமயம், "அவன் வீட்டுக்கு போய்ட்டானான்னு நான் பாக்குறேன்" என தீராவால் வீட்டிற்கு திறக்கப்பட்ட மாயவாயிலினுள் ஓடிய அர்ஜுன் சில நொடிகளிலேயே மீண்டும் வந்து, "அவன் பெட்ல தூங்கிட்டு இருக்கான்" என சொன்ன பின்பு தான் அனைவருக்கும் மூச்சு வந்ததது, ஒருவனை தவிர..
"அவ எங்க..." மெல்ல ஒலித்த ஷேனாவின் குரல், "என்ன செஞ்ச அவள?" இரண்டாவது முறையில் தீராவை நோக்கி கர்ஜனையாக ஒலிக்க, "ச.மா.ரா. எங்க?" தன் முழு பலத்தை கொண்டு நகுலனின் பிடியில் இருந்து திமிறி எழுந்தவன், தன் ஆத்ம வாளை கைக்கு அழைத்தபடி வெறியுடன் தீராவை நெருங்கிய நொடி, பெரும் மரக்கிளை ஒன்று பாய்ந்து வந்து அவனை தூக்கிச் சென்று ஒரு மரத்துடன் வைத்து இறுக்கியது.
✨✨✨
வனதேசத்தில், இரு மரத்திற்கு நடுவில் இரண்டு தொட்டில்களை கட்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரட்சக ராஜ்ய இளவரசிகள் இருவரின் ராஜ பதக்கங்களும் ஒரே நேரத்தில் ஜொலித்து மின்ன.. அதன் ஒளியில் தூக்கம் கலைந்து படக்கென எழுந்தார்கள் இளவரசிகள் இருவரும்.
"என்ன ம்மூ இது?" ரக்ஷா மாயாவை பார்க்க, "காவல் ஸ்தூபிக்கு புது கைதி வந்துருக்கு.. நாம ஒடனே போனும்" என தரைக்கு குதித்த மாயா, அவள் குறிப்பிட்ட காவல் ஸ்தூபிக்கே நேராக மாயவாயில் திறந்து தன் சகோதரியுடன் அதனுள் நுழைய.. அவர்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக அந்த காவல் ஸ்தூபியின் வாயிலில் நின்றிருந்தார் நுவழி பாட்டி.
"நீங்கள் அவளை சந்திக்க இது சரியான தருணம் அல்ல இளவரசிகளே" என புன்னகையுடன் சொன்னவரை புரியாமல் பார்த்தார்கள் இளவரசிகள்
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro