Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாப்பிளை

தன்னை சுற்றிலும் விதவிதமான மாய விலங்குகள் ஓய்வு கொண்டிருக்கும் அந்த விலங்கு லாயத்தில் வீராவின் அருகில் உள்ள ஒரு திண்டின் மேல், ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப்போய் அமர்ந்திருந்த தீரா, தன்னை சுற்றிலும் இருந்த ஒளியானது சட்டென மங்கிப்போய் இருள் படர்ந்த நொடியே நிஜத்திற்கு வந்தாள். "ஆர்ஹ்ஹ்.. அதுக்குள்ள இன்னைக்கு பொழுது முடிஞ்சுருச்சா?" அலுத்துக்கொண்டு எழுந்தவள், வீராவை நோக்கித் திரும்பினாள்.

"வீரா, நா சொன்னது எல்லாம் நல்லா நியாபகம் வச்சுக்கோ டா. உன் பக்கத்துல என்னோட மாயவாயில் எப்போ தெறந்தாலும் ஒடனே நீ வந்துறனும். சரியா?" இன்று காலை முதலாக தனக்கு தெரிந்த எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருந்த அதே சொல்லை, அவள் வீராவிடமும் சொல்ல.. தீராவின் சொல்லுக்கு பதில் கொடுப்பதுபோல் கால்களை தூக்கிக்கொண்டு உற்சாகமாகக் கணைத்தான், வீரா.

"சரி டா வீரா, நல்லா ரெஸ்ட் எடு இப்போ. நா போய்ட்டு காலைல- இல்ல அப்பறமா எப்பயாச்சும் நேரம் கெடைக்கைல வாறேன்." தன் குதிரை நண்பனிடம் விடைபெற்று, வீட்டை நோக்கி நடந்தாள் அவள். அங்கோ, அவளை வரவேற்பது போலவே, தொங்கிய முகத்துடன் வாயிலிலேயே அமர்ந்திருந்தார்கள் நம் ரட்சகராஜ்ய இளவரசிகள் இருவரும். அவர்களை கவனித்த தீரா, இவ்விருவரும் காரணம் இல்லாமல் இப்படி நாடகமாட மாட்டார்களே என எச்சரிக்கையுடனே அவர்களை நெருங்கினாள்.

"என்னங்க டி! ஏன் இப்டி கப்பல் கெளந்த போஸ்ல ஒக்காந்து இருக்கீங்க? அதுவும் வாசல்லயே?" இருவரின் முன்பாக சென்று நிற்க, அவளை நிமிர்ந்து நோக்கிய மாயா, "அந்த கொடுமைய ஏன் கேக்குற," மீண்டும் அதே நிலையிலேயே அமர்ந்துக் கொண்டாள். பின்பு, ரக்ஷாதான் அவளுக்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கியது.

"இன்னைக்கு என்ன நாளு தீரு மா?"

"என்ன நாளு?"

"எங்களுக்கு கெட்ட நாளு" மாயா, சத்தமாக புலம்பியபடி இரு கன்னத்திலும் கை வைத்துக்கொள்ள, "அப்போ ஊருக்கே நல்ல நாளா தான் இருந்துருக்கும். ச்ச நா மிஸ் பண்ணிட்டேனே இந்த நாள" ரக்ஷாவுக்கு அடுத்ததாக அமர்ந்துக்கொண்டு, தானும் நொந்துக்கொண்டது போல தீராவும் கன்னத்தில் கை வைத்துக்கொள்ள.. மாயா, அவளை முறைத்ததை தொடர்ந்து அவள் முதுகிலேயே ஒரு அடியை வைத்தாள், ரக்ஷா.

"ஹஹஹா, சரி, சரி. நிறுத்து டி. நான் எதுவும் சொல்லல. சரி சொல்லுங்க, அப்டி என்ன கெட்டது நடந்துச்சு எங்க இளவரசிங்களுக்கு?"

"எல்லாம் உன்னால வந்தது தான். நீ தானே பூமிக்கு போற வழிய கண்டுபுடிச்ச! உன்னால தான் பூமில உள்ள பழக்க வழக்கமெல்லாம் ஆதிலோகத்துக்குள்ளையும் வந்துருச்சு" கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் தீராவையே குறை கூறினாள், ரக்ஷா. 

"அப்டி என்ன டி வந்துச்சு இங்க? தெளிவா சொல்லித் தொலைங்க"

"அங்ங்... பொண்ணு பாக்குறது, மாப்பிள்ளை பாக்குறது, கல்யாணம் பண்னுறது... இதெல்லாம் தான் வந்துச்சு"

"அது வந்ததுல உங்களுக்கு என்ன டி ஆச்சு?

"அது வந்ததால தானே அம்மா எங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லுறா"

"எதே! உங்களுக்கு கல்யாணமா!" திடீர் அதிர்ச்சியால் விழி விரித்த நிலையில் இளவரசிகள் இருவரையும் தீரா பார்த்த அதே நேரம், "ஆமா, தீரா! நம்ம இளவரசிங்கள கூடிய சீக்கிரமா கல்யாண கோலத்துல பாக்கணும்ன்னு மக்களுக்கு ஆச வந்துருச்சாம். அவங்க வந்து அம்மாட்ட கேட்டு கேட்டு இப்போ அம்மாக்கும் ஆசைய தூண்டி விட்டுட்டாங்க. அதனால அம்மா அவங்களோட மருமகனுங்கள பாத்தே ஆகனும்ன்னு ஒத்த கால்ல நீக்குறாங்க" மாயாவுக்கு அடுத்ததாக அபி வந்து அமர, "ஹை சூப்பரு!" தீரா உற்சாகமாகிய அதேநேரம், "பொய்லாம் சொல்லாத டா அண்ணா. நீ எங்க அண்ணிய சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு தானே எங்களுக்கு சீக்கிரமா மாப்பிளைய பாக்குற?" அபியின் ராஜ ரகசியத்தை பட்டென போட்டுடைத்தாள், ரக்ஷா. 

"அய்யோ, பப்ளிக்ல போட்டு குடுக்குறாளே!" அபி, அப்புறமாக திரும்பி முணுமுணுக்க, "அண்ணா" இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த மாயா,  தன்னருகில் இருப்பவனின் கையை பிடித்தபடி தொங்கிய முகத்துடன் சினுங்கினாள். 

"என்ன மா?" தங்கையின் முக வாடலை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிரித்து கொண்டிருந்தான் அவளின் சகோதரன் அபிஜித்.

"இதெல்லாம் வேணாம்'ண்ணா.."

"ஆமா வேணாம்.." தன் இரட்டை சகோதரிக்கு ஒத்து-ஓதினாள், ரக்ஷா.

"அட! சும்மா பாக்க தானே போறீங்க. பாருங்க மா" தங்கைகளின் முன்னால் எழுந்து நின்ற அபி, அவர்கள் இருவரையும் வீட்டினுள்ளே அழைத்துச் செல்லும் நோக்கில் அவர்களின் கையை பிடிக்கப்போன சமயம், "அபி'ண்ணா... வேணாம்... பாக்க மாட்டோம்" தன்னை பிடிக்க வந்த அண்ணனின் கையை பிடித்துக்கொண்ட ரக்ஷா எழுந்து நின்றாள்.

"அட!! வர்றவங்கலாம் என்ன வினோத மிருகமா? சும்மாமுன்னாடி போய் நின்னுட்டு போங்க டா"

"ஹான்.. நோ நோ நோ நோ... அப்பறம் எங்கள பாத்து எங்க அழகுல அப்டியே மயங்கிப்போய்.. கட்டுனா இவள தா கட்டுவேன்னு எவனாச்சும் ஒத்தக் கால்ல நின்னுட்டா?" மாயா, வெகு தீவிரமாகக் கூற, "அப்ரம், நாங்க போற எடத்துக்குலாம் பின்னாலயே வந்து, எங்கள புரப்போஸ் பண்ணி டார்ச்சர் பண்ணுனா?" அக்காவிற்கு ஏற்றது போலவே ஒரு கற்பனை இன்னலை உருவாக்கினாள், ரக்ஷா.

"ஹஹ்ஹாஹா.. ப்பாஹ்! என் குட்டி தங்கச்சிங்களுக்கு இப்டிலாம் வேற எண்ணம் இருக்கா?? ஹாஹாஹா..."

"ஹான்.. அண்ணா, சிரிக்காத. அவங்கள நாளைக்கு வர வேணாம்ன்னு சொல்லு. நாங்க எங்கேயும் போக மாட்டோம்"

"என்னங்கடி உங்க பிரச்சன. இப்போ என்ன? சத்யா அத்த என்ன உடனேவா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க? இல்ல நாங்க தா விட்டுருவோமா? எல்லாம் பொறுமையா தான் நடக்கும். பயப்புடாதீங்க பயப்புடாதீங்க" ரக்ஷா எழுந்ததும் சாவகாசமாக தூணில் சாய்ந்து அமர்ந்தபடி கூறினாள், தீரா. 

தீராவின் பதிலால் பேந்த பேந்த முழித்த இளவரசிகள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்ள, "அண்ணா, எனக்கு இப்போ தா ஒன்னு தோணுது.. இவ எங்களுக்கு மூத்தவ தானே? இவள ஏன் நாளைக்கு பொண்ணு பாக்க அனுப்பக்கூடாது?" அண்ணனை திரும்பிப் பாராமல், தீராவை பார்த்த நிலையிலேயே  ரக்ஷா கேட்ட நொடியில், "எதே!!?" இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்காமல்  குதித்தெழுந்தாள் தீரா. அவள் செய்கையில் சிரித்துக்கொண்டே, அதே தூணில் சாய்ந்தமர்ந்தான், அபி. மற்ற மூவரும் ஒரு மினி போருக்காக போர்க்கொடியை தூக்கினார்கள்.  

"அடியேய்... மத்த விஷயத்துக்குனா மட்டும் 'நீ ஸ்கூல் படிக்கிற சின்ன புள்ள.. இதெல்லாம் செய்ய கூடாது'னு ஓரங்கட்டுவீங்க? இப்ப நா சின்ன புள்ளையா தெரியலையா உங்க கண்ணுக்கு?" இருவரையும் அவள் மாற்றி மாற்றி முறைக்க, "அதெல்லாம் தெரியல... நீயும் தாரியும் போய் எங்களுக்கு பதிலா நில்லுங்க நாளைக்கு.. நாங்க வரல" அவளை ஒரு பொறுட்டாகவே மதிக்காத மாயா அண்ணன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

"அடியே.. தாரி கொழந்த டி!" தீரா கத்தியதற்கு, "அப்ப நாங்க மட்டும் என்னவாம்??.. எங்களுக்கும் அவ வயசு தானே?" அவளின் கூற்றை எதிர்த்து, ரக்ஷா சண்டைக்கு நின்றாள். நினைத்த காரியம் நடக்கும் வரையில் இவர்களை சமாளிக்க முடியாதென்பதை உணர்ந்த தீரா, "போங்க டி.. நாலாம் போக மாட்டேன்.. நானே நெனச்சாலும் வர முடியாது" ஒரே போடாக போட்டாள், தன் மாஸ்டர் பிளானை. 

அவள் கூறியதை கேட்டு மூவருமே 'அப்டி என்ன வெட்டி முறிக்க வேண்டிய வேல இருக்கு உனக்கு?' என்பதுபோல் ஒரு பார்வையில் அவளை நோக்க.. நீளமாக மூச்சை இழுத்து விட்டவள் இத்தனை நாள் தான் மறைத்து வைத்திருந்த ரட்சகன் குறித்த ரகசியத்தை அவர்களிடம் கூறத் தொடங்கினாள்.

பூமியில் சஹாத்ய சூரர்களிடம் ரக்ஷவனை எப்படி குறை கூறினாளோ அதேபோல் குறை கூறி அவனை குற்றம் சாடியவள், நாளைய விடியலில் மகாராணி ரட்சகனின் பிறப்பை குறித்து அறிவிக்க உள்ளதையும் கூறிட, அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் விரிந்த விழிகள், மூவருக்குமே மூடவில்லை. ஆனால், அதையெல்லம் கவனிக்காத தீரா, "அவன் இந்நேரம் இங்க வந்துருக்கணும் மாமா, ஆனா இன்னும் அவன் எதையுமே தெரிஞ்சுக்கல... வெளையாட்டு புள்ளையாவே இருக்கான். ஹும் ஹும்.. பதினாலு வருஷம் முடிஞ்சா அந்த இருட்டடிச்சி மூஞ்சி வேற அவன கண்டுபுடிச்சு பூமிக்கு வந்துருவானாம். அவன் சக்தி என்னனு அவனுக்கே தெரியல மாமா. அவன என்ன செஞ்சு இங்க கூட்டிட்டு வர்றது?" என சிணுங்கி கொண்டிருந்தாள்.

"நீ கவல படாத தீரு மா, நாம சேந்து அவனுக்கு ட்ரெய்னிங் குடுத்து சீக்கிரமே இங்க கூட்டிட்டு வந்துரலாம். நாளைக்கு பொண்ணு பாக்குற ஃபங்ஷன முடிக்கிறோம். அப்டியே நேரா-"  

"அண்ணா. அதெல்லாம் வேணாம'ண்ணா. இந்த ஃபங்ஷன ஸ்டாப் பண்ணு. நாம நேரா பூமிக்கே போய்ரலாம்" அண்ணனின் சொல்லை பாதியிலேயே குறுக்கிட்டாள், மாயா.

"ஹ்ஹம்... அது மட்டும் முடியாது, அம்மு. நீங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் வந்து தலைய மட்டும் காட்டிட்டு போங்க. மத்ததெல்லாம் அண்ணன் பாத்துக்குறேன்"

"போ'ண்ணா எங்களுக்கு வேணாம்னா வேணாம். அவ்ளோ தா" சற்றே அதிகரித்த எரிச்சலுடன் சகோதரிகள் இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.

தங்கைகளின் பிடிவாதம் அபிக்கு தெரியும். தான் பார்த்துக்கொள்வதாக சொன்ன பின்பும் அவர்கள் முடியாது என்றுவிட்டால் அந்த காரியத்தை நடத்துவது அசாத்தியம். ஆனால், தன் மகள்களுக்கு வருங்கால துணைகளை விரைவாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அன்னையின் விருப்பமாயிற்றே. அன்னையை போலவே தான் தங்கைகளும். பிடித்த பிடியை விடவே மாட்டார்கள்.

"ஆர்ஹ்ஹ்ஹ்!! சரி..... இப்போ உங்க பிளான் தா என்ன? நாளைக்கு என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க ரெண்டு பெரும்?" தங்கைகளின் பிடிவாதத்தை கண்டு தலையை பிடித்து கொண்ட அபி அவர்களின் வழிக்கே செல்ல முடிவெடுத்து விட, "ஹுஃப்.. இப்பயாச்சும் கேட்டியே." மாயா உற்சாகமாக அண்ணனை நெருங்கிய நொடி, "நாங்க வீட்ட விட்டு ஓடி போக போறோம். தட்ஸ் பைனல்" அக்காவிற்கும் சேர்த்து ரக்ஷா எடுத்த முடிவுதான் இங்கு ஹை-லைட், "ஆங்ங்ங்???....!!? தங்கைகளின் பதிலால் விழிவிரித்து நெஞ்சில் கை வைத்துவிட்டான் அபி.


❣️ ✨சாகச பயணம் சளைக்காமல் வரும்✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro