Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

புது விடியல்

ரக்ஷவன் வீட்டுக்கு வெளிப்புறத்தில் மறைவாக இருக்கும் ஒரு மரத்தின் பின்னால் மறைந்த நிலையில், "நான் என்ன சொன்னேனோ அத மட்டும் செய்" அதிகம் சத்தம் வராமல் தன் மொபைலுக்குள் கத்திக் கொண்டிருந்தாள், தீரா.

"ஏன்டி, நாங்க அங்க வரமுடியாதுன்னு சொன்னது ஒரு குத்தமா?" வனதேசத்தின் வழியாக நடந்துக் கொண்டிருந்த இளவரசிகள், தங்களின் மொபைலை ஸ்பீக்கரில் போட்ட நிலையில் தீராவின் கட்டளைக்கு நொந்துக்கொள்ள, "இங்க வந்து தான் ஹெல்ப் பண்ண மாட்டுறீங்க.. அங்கேயே இருந்தாச்சும் ஏதாச்சும் செஞ்சு தொலைங்களேன்," அலுத்துக் கொண்டாள், தீரா.

"இப்போ என்ன உனக்கு? நீ அனுப்புன ஃபோட்டோ பத்தி நுவழி பாட்டி கிட்ட கேட்டு சொல்லணும். அவ்ளோ தானே கேட்டுத் தொலையுறோம். வை ஃபோன"

"ஹான். அபி, மாமா-" ரக்ஷாவின் சரவெடி பதிலை தொடர்ந்து அடுத்த வார்த்தையை சொல்ல முனைந்த தீரா அதை சொல்லும் முன்பே அழைப்பு தூண்டிக்கபட்ட சத்தம் கேட்டதும், "-எப்டி இருக்காங்கன்னு தானே கேக்க வந்தேன்... அதுக்குள்ள அப்டி என்ன அவசரம் இவளுங்களுக்கு?" பல்லை கடித்துக்கொண்டு மொபைலை நோக்கிக் கத்தி முடித்தவள், நிலவை நோக்கி கண்ணீர் சிந்தி கொண்டிருக்கும் ரட்சகனை பாவமாக பார்த்தாள்.

கஷ்டம் தான். எல்லாமுமாக இருந்த உறவு ஒரே நொடியில் தன்னை பிரிந்த வேதனையை சுமந்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், என்னவென்றே தெரியாத மிகப்பெரிய பொறுப்பு ஒன்று கைக்கு வந்தால் இந்த பதினாலு வயது சிறுவன் என்னதான் செய்ய முடியும்?

தானாக முன்வந்து அனைத்தையும் அவனுக்குப் புரியவைக்கதான் காத்துக் கொண்டிருக்கிறாள், தீரா. ஆனால், என்னதான் அவள் உதவுவதற்கு முடிவெடுத்திருந்தாலும் ரட்சகனின் திறன்களை அவன் தனி ஒருவனாக நின்றுதான் விழிக்கச் செய்தாக வேண்டும். அதுதான் அவன் சக்திகளை அவனே உணர்வாதரக்கான முறையான வழி. அப்போதுதான் அவனுக்கான சரியான பாடங்களை கற்பிக்க முடியும்.

அவனுக்கு முன்னால் சென்று நின்று அனைத்தையும் விளக்கமாகச் சொல்லிவிட்டால் அவன் மனநிலை என்னவாகுமோ? எதிரிகளின் மீதான அவன் பார்வை எப்படி மாறுமோ? அதனால் அவன் சக்திகள் விழிப்பத்தில் தடைகள் வருமோ என்றெல்லாம் நினைத்துதான் அவள் விலகியே நின்றது.. அவன் சக்திகள் விழிப்பதக்காகத்தான் அவள் இத்தனை காலமும் காத்திருந்தது... ஆனால், என்ன செய்ய? காலம் கடந்தும் அவளின் காத்திருப்பு வெறும் காத்திருப்பாகவே தான் இருந்துக் கொண்டிருக்கிறது.

சற்று முன்பு கூட அர்ஜுனும் ரக்ஷவும் மற்றவர்களும் வீட்டுக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் தீராவும் அதே அறைக்குள்தான் இருந்தாள். அவர்களின் அனுமானங்களையெல்லாம் கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டுதான் நின்றிருந்தாள். ஆனால், எதுவும் குறுக்கிடவில்லை.

அர்ஜுன், தன்னையும் மற்றவர்களையும் கோவிலின் வெளியே பார்த்தை பற்றி சொல்லும்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது, இவனின் நினைவுகளை அகற்றாமல் விட்டது. அதே நேரத்தில் இனி ரட்சகனின் வாழ்வில் நடக்கவிருக்கும் அதிசயங்களை இவர்கள் நால்வருமே பார்க்கத்தான் போகிறார்கள்.. மேலும், அவனின் அன்னையே அனைத்தும் தெரிந்துக் கொண்டுதான் இவ்வளவு காலமும் இருந்திருக்கிறார் என்பதையெல்லாம் யோசிக்கும்போது இவர்களின் நினைவை நீக்குவது அவசியமாகதாக தெரியவில்லை அவளுக்கு. மாறாக, அத்தியாவசியமாகத் தான் தெரிந்தது. மகாராணியே பணிந்தால் பிறகு இவர்கள் நினைவுகளில் கை வைக்கலாம் என நினைத்துக்கொண்டவள், இருபினும், இவர்கள் மத்தியில் தன் ஈடுபாடு அதிகம் இருக்க வேண்டாம் என்றுதான் மறைந்து நின்று அனைத்தையும் கேட்டிருந்தாள்.

இத்தனை காலம் காத்திருந்தாகிவிட்டது, இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்தால் ஒன்றுமில்லயே!

✨✨✨

தூக்கத்திலிருந்து விழித்த ஷேனா, கண்ணை மூடிக்கொண்டு நடப்பதுபோல் எதிரில் வரும் சுவர்களை.. தூண்களையெல்லாம் மதிக்காமல் அவற்றின் மேல் மோதி மோதியே நடந்துக் கொண்டிருந்தான். அடர் இருளிளும் அனாயாசமாக நடந்துச் செல்பவனுக்கு இன்று இந்த நிலமை. எல்லாம் அவளின் காரணமாக தான். அவள் கனவில் வந்தக் காரணமாக தான்.

முன்பாவது ஏதோ ஒருநாள் அதிசயமாக வருவாள், ஆனால், கடந்த சில மாதங்களாக கண்ணயர்ந்தாலே கண்ணுக்குள் அவள் கனவுதான். அக்கனவு வரவில்லை என்றால் கண்ணிமைகள் கூட பிரிய மறுக்கிறது இப்பொழுதெல்லாம். காரணம் புரியாமல் தன்னிலை மறந்து நடப்பவனுக்கு கனவில் அவளிட்டத் தடை இன்னுமும் வலிமை குறையாமலே தான் இருக்கிறது. ஆனால், கனவுக்கு மாறாக நிஜத்தில், அவனுக்கு அது எரிச்சலை தான் தூண்டிக் கொண்டிருக்கிறது.

எங்கே செல்கிறோம் என சொல்லாமல் அவனை அழைத்து வந்தக் கால்கள் இறுதியாக ஓய்வு கொண்டது, இருள்படர்ந்த இரவுநேர வனதேசத்தின் மையத்தில்.

அது அவனுக்கு பரிட்சயமான இடம். மிக மிக பரிட்சயமான இடம். ஒரே நேர்கோட்டில் சென்றுக் கொண்டிருந்த அவன் வாழ்வு தடம் மாறிய இடம். இளமையில் அவனுக்குக் கிடைத்த துன்பங்களை மறந்து மகிழ்வுடன் விளையாடிய இடம்.. அவன் மாவீரனாக பிறப்பெடுத்த இடம். பிரம்மாண்டமாகத் தன் கிளைகளை பரந்து விரிந்துப் பரப்பி வைத்திருக்கும் மையாழி மரத்தின் முன்னிலையில் இளமை துளிர்களை மட்டுமே விட்டிருக்கும் சிறு செடிபோல் நின்றிருந்தான், ஷேனா.

முழுதாக பதினாலு ஆண்டுகள் முடிந்துவிட்டது, அவனுக்காக அவனின் அன்பு ஆசான்கள் உருவாக்கித் தந்த இந்த பயற்சிக் கூடத்தை அவன் மறந்து. ஆனால், இப்போது ஒவ்வொரு நினைவாக மீண்டும் துளிர்க்கத் தொடங்கிவிட்டது அவனுக்கு.

அவர்களுடனான பயிற்சி.. அவர்கள் சென்றதும் இந்த களத்துடனான தனிமை பயிற்சி.. இறுதியில், அனைத்தும் முற்றுப்புள்ளிக்கு வந்த அந்த நாள். அவன் அன்னையை ரட்சகராஜ்ய இளவரசிகள் கொன்று விட்டதாக அவனை நம்பாவைக்ப்பட்ட அந்த நாள். அந்த இறுதி நினைவின் வெறியுடன் சேர்த்து அவனின் இப்போதைய நிலையும் அவனின் பழைய நாட்களை அதிவேகமாகக் கிளரத் தொடங்கிட.. பாதியளவே பொலிவிழந்துக் கணபட்ட அந்த களமும் இனம்புரியாத கோவத்தில் இருக்கும் அவன் மனதின் வெறியை தீர்த்துக்கொள்ளச் சொல்லி அவனை வா வா என்றழைத்தது.

வேங்கையின் வெறிக்கொண்ட வேகப் பெருமூச்சுகளுடன் துடிக்கத் தொடங்கிய அவன் இதயத்தின் வெறியை அடக்கிட இதுவே தனக்குக் கிடைத்த வழி என எண்ணிக் கொண்டவன் அதே வேகத்தில் தன் ஒரு கையால் ராஜ பதக்கத்தை பிடித்துக்கொண்டு மறு கையை காற்றில் நீட்ட.. வந்தது.. அவனுக்கே அவனுக்கென உயிர்த்திருக்கும் அந்தத் தங்கநிற ஆத்ம-வாள்.

வலதுகையில் தன் ஆத்ம சக்தியின் ஒரு பாதியை ஏந்தியவனுக்கு இன்னும் முழுமை கிடைக்கவில்லை. ஏதோ குறையாக இருந்தது. அது என்னவென உணர்ந்தவன் கண்கள் நேராக சென்றது அருகிலிருக்கும் மரப்பொந்து ஒன்றுக்கு தான். அடுத்தநொடி, அவன் கட்டளை இன்றியே கால்கள் நடந்தது, அவ்விடம் நோக்கி... கைகள் எடுத்தது அந்த அதிசயத்தை. அவன் குருமார்கள் அவனுக்கென கொடுத்துச் சென்ற பொக்கிஷம். துளியளவும் தன் பொலிவிலிருந்துக் குறையாத, ஷேனா என்னும் வீரனின் முதல் அடையாளம்.

அற்புதவாள் ஒரு கையிலும் ஆத்மவாள் ஒரு கையிலும் என களத்தின் மத்திக்கு வந்து நின்றவன், ஆழ மூச்சை இழுத்துக்கொண்டு ஆரம்பித்தான் தன் வெறியாட்டத்தை.

இரவின் மணிநேரங்கள் மிக வேகமாக ஓடியது, அவன் வேக வீச்சுகளை கண்டு அஞ்சி நடுங்கி.. ஆனால், அவனை வரவேற்கக் காத்திருந்தது அவனுக்கான ஒளி. அதற்கான தக்கத் தருணமும் விரைவாகவே வந்தது. கூரிய அவன் வாளின் மீதும், முத்துக்களாகத் தோன்றி அவனை குளிப்பாட்டிய வியர்வை துளிகளின் மீதும் பட்டு மின்னிக் கொண்டு உதித்தது, வைர மாளிகையின் முதல் கீற்று.


❣️ ✨ சாகச பயணம் சலைக்காமல் வரும் ✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro