சாகசம் - (முன்னோட்டம்)
"அம்மா, எப்பவும் நீ என் கூடவே இருப்பன்னு சொல்லு."
"நான் எங்க போனாலும் உன் கூடவே தான் இருப்பேன், ராஜா. அது உனக்கே தெரியும். அப்புறம் எதுக்கு என்கிட்ட கேக்குற?"
"டெய்லி வேலைக்கு போறேன்னு காலையில போறவ தான், நைட் தூங்குனதுக்கு அப்பறம் தா வர்ர. ஒரே ஒருநாள் தா உன் கூட இருக்க முடியுது. அப்புறம் எப்படி நீ என் கூடவே எப்பவுமே இருக்கறதா சொல்லலாம்?"
"நமக்குன்னு வேற யாரும் இல்ல டா. அப்டி இருக்கும்போது நா வேலைக்கு போய்தானே ஆகணும்? வேற வழி இல்ல ராஜா, எல்லாம் நீ வளந்து வேலைக்கு போற வரைக்கும் தான். அதுக்கப்பறம் நீ என்ன ராணி மாதிரி பாத்துக்கப்போற... நான் வீட்டுலயே இருக்க போறேன்..."
"கண்டிப்பா, ம்மா. எல்லாம் நா வேலைக்கு போற வர மட்டும்தான். அப்பறம், நாம நம்மளோட சொந்த ஊருக்கே போய்ரலாம். அதுக்கப்பறம் நீயே வேலைக்கு போறேன்னு சொன்னாலும் நான் விடமாட்டேன். நம்ம ஊருல ஒரு பெரிய அரண்மனைய வாங்கலாம். அங்க நான் தான் ராஜா நீ தான் ராஜமாதா. எப்படி என்னோட பிளான்?"
"ஆஹா! ராஐ தந்திரம்!! ஹாஹாஹா..."
அன்னையே தன் உலகென வாழும் இவன் வாழ்வில் வரும் ஒரு புதிய திருப்பம்...
***
"மகாராணி, ரட்சகன் ஆதிலோகத்திற்கு வரவளிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. ஆனால், அவனது சக்திகளை இன்னும் அவன் உணர்ந்து கொள்ளவில்லையே? என்ன செய்வது மகாராணி?"
"அவனை குறித்து அவன் உணர்ந்தால் மாத்திரமே ரட்சகனால் ஆதிலோகம் வரவளிக்கக் கூடும். ஆனால்.... .. விதியின் எண்ணம் என்னவோ?"
"மகாராணி, அவ கவசங்கள் மெல்ல மெல்ல வலுவிழக்கின்றன. இன்னும் இரு தினம் கடப்பின் அவன் கவசங்கள் அவனை நீங்கிடும். எதிரிகளும் அவனை கண்டறிந்து விடுவார்கள்.."
"ஹ்ம் அதற்குள் ரட்சகனுக்கு தன்னிலையை உணர்ந்திடக் கூடுமா தீரா?"
"ம்ம்.. இயன்றளவு முயற்சிக்கின்றேன் மகாராணி. ஆனால், என்னவாயினும் சரி, எதிரிகள் அவனை நெருங்கிடாமல் ரட்சிக்கும் பொறுப்பு எனதாகும். எச்சூழலிலும் அதனை நான் மறவேன்."
"இவ்வார்த்தையே போதும் தீரா. உம்மீது எமக்கு நம்பிக்கையுள்ளது. ஹம்.. பிறகு, ரட்சகன் பிறப்பை குறித்து நம் மக்களுக்கு அறிவிக்கும் நாளும் நெருங்கிவிட்டது. அவன் பதினான்காம் பிறந்தநாளில் அறிவித்திடலாம். எனவே, உமக்கு உதவிகள் வேண்டுமாயின் எவரையேனும் அழைத்துக்கொள்."
"உத்தரவு, மகாராணி"
குறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனுக்கென காத்திருக்கும் கோடி மக்கள்...
***
"அண்ணா"
"ஹாஹாஹா என்ன மா"
"வேணாம்'ண்ணா..
"ஆமா வேணாம்."
"அட, சும்மா வந்து பாருங்க மா"
"அபி'ண்ணா... வேணாம். பாக்க மாட்டோம்"
"அட!! அவங்கலாம் என்ன வினோத மிருகமா? சும்மா வந்து நின்னுட்டு போங்க டா"
"ஆஹான். நோ, நோ, நோ, நோ... அப்பறம் எங்கள பாத்து எங்க அழகுல அப்டியே மயங்கிப்போய்.. கட்டுனா இவள தா கட்டுவேன்னு எவனாச்சும் ஓத்த கால்ல நின்னுட்டா?"
"அப்ரம் நாங்க போற எடத்துக்குலாம் பின்னாலயே வந்து, எங்கள புரப்போஸ் பண்ணி டார்ச்சர் பண்ணுனா?"
"ஹஹ்ஹாஹா.. ப்பாஹ்! என் குட்டி தங்கச்சிங்களுக்கு இப்டிலாம் வேற எண்ணம் இருக்கா? ஹாஹாஹா.."
"ஹான்ன்ன்... அண்ணா, சிரிக்காத... அவங்கள இங்க இருந்து போக சொல்லு. போ.. போய் அவங்கள எல்லாம் கெளப்புற வழிய பாரு. போ'ண்ணா"
"ஹ்ஹம்... அது மட்டும் முடியாது அம்மு.. நீங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் வந்து தலைய மட்டும் காட்டிட்டு போங்க"
"ஹும்ம்ம் நாங்க வர மாட்டோம்."
"ஆஹ்ஹ்ஹ்! சரி இப்போ உங்க பிளான் தா என்ன? என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க ரெண்டு பெரும்"
"ஹுஃப். இப்போயாச்சும் கேட்டியே நாங்க வீட்ட விட்டு ஓடி போக போறோம். தட்ஸ் பைனல்"
"ஆங்ங்ங்???....!!!"
தன் பாதையிலிருந்து விலகி பயணிக்கும் ஆதிலோக இளவரசிகள்...
***
"ரக்ஷவ்... அம்மா பேச்ச கேப்பியா மாட்டியா?"
"அம்மா பேச்ச ரக்ஷவ் எப்போவுமே கேப்பான். ஆனா, அந்த கோவிலுக்கு போக சொல்லுறத மட்டும் கேக்க மாட்டான். ஹும்."
"ஏன் டா?"
"ம்மா.. அந்த பூசாரி ஒரு பிராடு பய ம்மா"
"ரக்ஷவ்..."
"மொறைக்காத ம்மா, அவரு பிராடு தா. அவரே ஒரு டூப்ளிகேட், அப்போ, அவரு பூஜ பண்ணுற சாமி மட்டும் ஒரிஜினலா இருக்குமா என்ன? அதுவும் டூப்பு தா போ ம்மா. ரக்ஷவ்க்கு டூப்புலாம் புடிக்காது. சோ, அங்கெல்லாம் வர முடியாது"
தன் கடமையை நெருங்க மறுக்கும் நாயகன்...
***
"அவன் இந்நேரம் இங்க வந்துருக்கணும் மாமா. ஆனா, இன்னும் அவன் எதையுமே தெரிஞ்சுக்கல... விளையாட்டு புள்ளையாவே இருக்கான். ஹும் ஹும்.. அவன் கவசம் ஒடஞ்சா அந்த இருட்டடிச்சி மூஞ்சி வேற அவன கண்டுபுடிச்சு பூமிக்கு வந்துருவான்.. அவன் சக்தி என்னனு அவனுக்கே தெரியல மாமா அவன என்ன செஞ்சு இங்க கூட்டிட்டு வர்றது?"
"அப்போ... அவன் சக்திகள உணர்ந்தா தா அவனால இங்க வர முடியும். அப்டி தானே?"
"ஆமா, மாமா"
"அப்போ ட்ரைனிங் குடுத்துற வேண்டியது தா."
அவனை தயார் படுத்திய முடிவெடுக்கும் ஒரு களம்...
***
"நீ இன்னும் அதற்கு தயார் ஆகவில்லை"
"நீங்க யாரு? இது எந்த இடம்? கோவில்ல இப்டிலாம் எடம் இருக்குமா?"
"இது உனக்கான இடம், நீ மட்டும்தான் வரலாம்"
"அப்போ நீங்க எப்டி வந்தீங்கலாம்?"
"உன் வாழ்வின் ரகசியத்தை அறியும் பாதையில் உன்னை அழைத்துச் செல்ல நியமிக்கப்பட்ட உன் வழிகாட்டி ஆவேன் நான். உன்னுடனே பயணிக்கும் உன் குரு."
"ஹாஹா நீங்கி என் குருவா? ஹஹஹஹா நீங்களே நெனச்சுக்கோங்க என் அம்மா தான் என்னோட குரு.. அவங்க சொன்ன பாதைல மட்டும் தா நா போவேன்."
"அதுக்கு நீ உன் அம்மா இருக்கும் இடத்தை கண்டறிய வேண்டும் ரட்சகனே!"
ரட்சகன் தனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம், எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒரு பயணம்...
***
"ஏய்.. யாரு நீ? தைரியம் இருந்தா முன்னாடி வந்து பேசு பாப்போம்"
"ஐம் சாரி ரக்ஷவா.. இப்போதைக்கு உன் ஆச நிறைவேறாது. உன் சக்திகள உணர்ற வரைக்கும் நீ என்ன பாக்க கூடாது."
"ஹான்! ஹாஹா. போ டி பயந்தாங்கோலி. என் முன்னாடி வர பயந்துட்டு என்னென்னலாம் பிராடு வுடுற! ம்ம்.. தைரியம் இருந்தா நேர்ல வா பாப்போம்.. அத விட்டுட்டு சும்மா வாய்ஸ் மட்டும் குடுக்குற வேல என் கிட்ட வச்சுக்காத ஆமா.."
சேட்டைகளால் தன் இலக்கினை நெருங்க மறுக்கும் நாயகனை எப்படி தயார் படுத்தினார்கள் நம் ஆதிலாக வாசிகள்?
***
"இளவரசர் ஷேனா, நம்மை அழிக்க பிறந்த சக்தி மறைந்திருக்கும் இடத்தினை கண்டறிந்து விட்டேன். சமாராவை அழைத்துக்கொண்டு உடனடியாக அவ்விடம் புறப்பட்டுச்செல்."
"உத்தரவு அரசே."
"ஹம்- மற்றொன்றினையும் நினைவிலிருத்திக் கொள். அந்த சக்தி எமக்கு உயிருடன் வேண்டும்"
"நிச்சயம், அரசே! மரண வேதனையை கொடுப்பினும் மரணத்தை நிச்சயம் கொடுத்திட மாட்டேன். இது தமக்கு நானளிக்கும் வாக்கு"
அவனை நெருங்கிடும் ஆபத்திலிருந்து எப்படி அவனை காத்தார்கள்??...
***
"ஹோய்."
"ஹான்?"
"உங்கிட்ட ஒன்னு சொல்லனும்"
"என்ன?"
"நீ ரொம்ப ஸ்வீட்."
"ம்ம்???..."
"நீ ரொம்ப அழகா இருக்க."
"??!!..."
"அதுக்கு இப்போ என்னனு கேக்குறியா? அது ஒரு அழகான ஃபீல் பேபி. ஒருத்தவங்க கைய பிடிச்சுட்டே.. அவங்க செய்யுற எல்லா விஷயத்தையும் ரசிசுட்டே வாழ்க்கைல அப்டியே டிராவல் பன்றது ஒரு தனி என்ஜாய்மன்ட்"
"அதுக்கு?"
"அதுக்கு... ஒண்ணுமில்ல.. .. .. ஐ லைக் யூ பேபி.
"!!??"
"இப்போ இந்த உலகத்துல நாம இருக்க போற கொஞ்ச நாள்ல... அதுலயும், நீ என் கூட இருக்க போற இந்த கொஞ்ஜூண்டு நாள்ல.. என் கைய புடிச்சுட்டே ஊரு சுத்த ரெடியா?"
"ஆங்ங்ங்!!??..."
"பதில் சொல்லு, பேபி! ரெடியா?"
"பதில் தானே, உன் பின்னாடி நிக்குறவங்க சொல்லுவாங்க."
"??... பின்னாடி- ஆத்தாடி!!.. எமகண்டம்"
தன்னை நோக்கிய ரட்சகனின் தேடலில் அவனுக்குத் துனைவரும் பெயரறியா உறவுகள்... இடமறியா எதிரிகள்... எதிர்பாரா நட்புகள்.. இவர்களுடனான நாயகனின் ஒரு அசத்தலான சாகச பயணம்.
காவல் வீரா - 2 (ரக்ஷவணின் சாகச பயணம்)
அத்தியாயங்கள் விரைவில்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro