Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

க்யூட் ரட்சகன்!

"ஹேப்பி பர்த்-டே டூ மீ! ஹேப்பி பர்த்-டே டூ மீ!" மெல்லிய குரலில் தனக்குத்தானே பாடியபடியே தன் கையில் இருக்கும் பர்ஃப்யூம் பாட்டிலை மேஜையில் வைத்த ரக்ஷவன், தன் தாய் தனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கும் ஆடையை அணிந்துக்கொண்டு கண்ணாடி முன் நின்றுத் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தான். "சும்மா சொல்லக் கூடாது, அம்மா செலக்ஷன் எல்லாமே அழகுதான். ச்சோ கியூட் டா நீ" கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை கொஞ்சிக் கொண்டே, "எங்கருந்து தான் இவ்வளவு அழகு வந்துச்சோ! ப்ப்பாஹ்! என்ன ஒரு அழகு. என்  கண்ணே பட்டுடும் போல" தனக்குத்தானே திருஷ்டி சுற்றிக்கொண்டான் அவன்.

வழக்கத்திற்கு மேலான உற்சாகத்தில் இருக்கிறது இவன் முகம். முதல் முறையாக, இன்றைய பிறந்தநாளில்தான் உண்மையான பிறந்தநாள்-குழந்தை கலையில் இருக்கிறான் இவன். அனைத்திற்கும் காரணம், இன்றைய நாளின் முதல் பரிசாக இவனுக்குக் கிடைத்திருக்கும் அவன் தந்தையின் டைரி தான். என்றும், காலையில் எழுவதற்குத் தன் அன்னையின் தரிசனத்தை மட்டுமே தேடுபவன், இன்று, அன்னையுடன் சேர்த்து தந்தையின் டைரியையும் தேடினான். மகனின் இந்த புதிய மாற்றத்தை கண்டு தேவயாசினிக்கு அலாதி மகிழ்ச்சி! கடந்த எட்டு பிறந்தநாள்களாக தன்னை தானே குறைபட்டுக்கொண்டு கலையிழந்துக் காணப்பட்ட மகன், இன்று உற்சாகத்தின் ஒரு படி மேலே சென்று நிற்பதை காண்கையில் சிறு நிம்மதி துளிர்த்திருந்தது, அந்த தாயின் மனதில்.

மகனை எழுப்பி, கிளம்பும்படி கூறிவிட்டு அவனுக்கு இனிப்பு வகைகளை தயார் செய்து முடித்திருந்த தேவயாசினி, கையில் பாயாசக் கின்னத்துடனும் மனதில் ஆழ்ந்த யோசனையுடனும் ஹாலில் அமர்ந்திருக்கையில் அவளின் யோசனையை கலைக்கும்படியாக சிணுங்கியது, அவளின் அழைபேசி. அதை எடுத்துக் காதில் வைக்கும்முன், திரையில் ஒளிர்ந்தத் தன் அண்ணியின் பெயரை கண்டாள், அவள்.

"ஹலோ, அண்ணி,"

"தேவா...." தேவயாசினியின் சொல்லுக்கு, முழுதாக ஐந்து நொடிகள் கடந்து ஒலித்தது பதில் குரல். ஒரு ஆணின் குரல்.

"யார்- ...... அண்ணா!" கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கு பின்பாக கேட்கும் அக்குரலை, முதலில் கண்டறியவில்லை என்றாலும் மனதின் ஆழத்தில் பதிந்திருக்கும் அக்குரல் மறக்கவில்லை அவளுக்கு. முழுதாக ஒரு நொடி தேவைபடவில்லை, கண்ணீர் துளிர்த்துவிட்டது அவள் கண்களில். மறுமுனையிலும் அதே நிலைதான் இருக்கக்கூடும். நிலவிடும் அமைதி சொல்லியது இந்த கணிப்பை.

கிட்டதட்ட பத்தாண்டுக் காலமாக அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தையும் கிடையாது. அதற்கு காரணமாக கோபம், வருத்தம் என எதுவுமே இல்லை; தங்கையின் நிலையை கேள்விப்பட்டும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் செல்வகுமாரின் இயலாமையே அவர்களின் பேச்சு வார்த்தையை தடுத்து வைத்திருந்தது இத்தனை காலமும்.

"எப்-" நீண்ட அமைதிக்கு பின் வந்தது, செல்வகுமாரின் முற்றில்லா சொல். எப்படி இருக்கிறாய் என்று கேட்க முடியவில்லை அவரால். தங்கையின் நிலமை நன்றாகத் தெரியும். "நல்-" 'நல்லா இருக்கியா?' என்றும் கேட்க முடியாது. நடக்கப் போவதும் தெரியும். எப்படி தன் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துத் தொடுப்பது என அவர் தடுமாறுகையிலேயே கணித்துவிட்டால் தேவயாசினி, அண்ணனின் இத்தனை ஆண்டு கால மௌனத்திற்கு பின் இன்று ஏன் பேசுகிறார் என்பதை. இன்று நிகழப்போவது சங்கரி சொல்லி அவருக்குத் தெரிந்திருக்கிறது. இருந்தும், உரையாடலை சகஜமாக்கிட பேச்சை மாற்றலாம் என்று நினைத்தாலும் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. தொண்டையை அடைத்துக்கொண்டு துக்கம்தான் மேலோங்கி நின்றது. சில நொடிகள் கடந்து, செல்வகுமாரே பேச்சை தொடங்கினார்

"தேவா... பசங்க கெளம்பிட்டானுங்க டா. மதியம் அங்க வந்துருவாங்க. நீ-"

"நீங்க வரலையா, ண்ணா?"

"நாங்க- வருவோம் டா. கண்டிப்பா வருவோம்,"

"ம்ம்."

அவளின் கேள்வியை தொடர்ந்து, கோர்வையாக உரையாடலை கொண்டுசெல்ல முடியவில்லை இருவராலுமே. சில நிமிடங்கள் இரு பக்கமும் வார்த்தைகள் பரிமாறப்படாமலே இருக்க, "பசங்களுக்கு என்னை பத்தி சொல்லிறுக்கீங்களா ண்ணா?" இம்முறை, தேவயாசினி மௌனத்தை கலைத்தாள்.

"ம்ம். நேத்து சங்கரி சொன்னா, அவங்களோட தேவா அத்தைய பத்தி. பத்து நாள் லீவ்ல உன் கூட இருக்கப் போறதா சொல்லிட்டு கெளம்பீருக்கானுங்க." இதுவே போதுமானதாக இருந்தது அவளுக்கு, எந்த அளவிற்கு தன் மருமகன்களுக்குத் தன் நிலமையை பற்றித் தெரியும் என்பதை கணிக்க. சுருக்கமாகச் சொல்லப்போனால், அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.

"ஓஹ்."

"ஹர்ஷாதான் உன்ன பாக்க ரொம்ப ஆர்வமா இருக்கான், தேவா"

"அவனுக்கு என்னை நியாபகம் இருக்கா ண்ணா?"

"இருக்க டா"

"ம்ம். அவங்க இங்க வரட்டும். நான் பாத்துக்- என்னால முடிஞ்ச அளவுக்கு பாத்துக்குறேன் ண்ணா" இம்முறை, தேவயாசினியின் தடுமாறும் சொல், அவள் சகோதரனின் குரல் உடையக் காரணமாக இருந்தது. "ம்ம்" செல்வகுமாரின் ஒற்றை சொல்லுக்குப்பின் இரண்டு நொடிகள் கடந்த நிலையில், ஒருவருக்கொருவர் விடைபெறாமலே அவ்வழைப்பானது துண்டிக்கபட்டது. எந்தமுனையில் முதலில் துண்டிக்கபட்டது என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

ஒருபக்கம் வலியில் இருந்தாலும் அவள் மனம், மறுபக்கம், நிம்மதியில் இருந்தது. எப்படியானாலும், தன் மகனுக்குத் தன் குடும்பத்தின் ஆதரவு ஏதேனும் ஒரு வழியில் கிடைத்துவிடும். இனி இருக்கும் ஒரே கவலை, தன்னை மறந்த- தன்னை பிரிந்து அவன் எப்படி வாழாவை சமாளித்துக்கொள்வான் என்பதே. 

இந்த சிந்தனையிலேயே  அவள் உழன்றுக் கொண்டிக்க.. மகனின் அம்மா  என்னும் ஆனந்த அழைப்பு, அவளை முற்றிலுமாக நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. 

"அம்மா.. அம்ம்ம்மா எப்டி இருக்கேன் நான்?" நீல நிற பட்டு சட்டையும் வெள்ளை பேன்ட்டும் அணிந்துக்கொண்டு, அவன், இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டே அன்னையின் முன் நிற்க, "சும்மா ராஜா மாதிரி இருக்க டா ரக்ஷவ். ரொம்ப அழகா இருக்கு இந்த டிரஸ் உனக்கு." கண்ணிலிருந்து மையை எடுத்து அவன் காதின் பின் வைத்துவிடும் சாக்கில், தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள், அவள்.

"ம்ம்ம்ம்!!! ராஜா ரக்ஷவன், உலகப் பாதுகாப்பிற்காய் புறப்பட்டுவிட்டார்!!!" இரு கைகளையும் மடக்கி வைத்து, தலையை கர்வமாய் மேல் நோக்கி நிமிர்த்திக்கொண்டு அவன் சொல்ல... தேவயாசினியின் கண்ணிலோ பெரும் பூரிப்பு. உண்மையாகவே உலக பாதுகாப்பிற்காய் பிறந்தவன் தானே இவன்!

"ம்ம்... புறப்படலாம், புறப்படலாம். அதுக்கு முன்னாடி, ராஜா, சாப்புட்டு புறப்படலாம்" அவனை இழுத்து அருகில் அமரச் செய்தவள், பாயாசத்தை ஊட்டிவிட, "ராஜமாதா கட்டளையே சாசணம்" என்றபடி அதை பெற்றுக்கொண்டான் அவன். 

"ம்ம்ம்ம்ம்.. ச்சோஓஓ ஸ்வீட் ம்மா! நீ சாப்டியா? இந்தா, நான் ஊட்டி விடுறேன் உனக்கு" தன் கரத்தால் பாயாசத்தை எடுத்துத் தன் தாய்க்கும் அவன் ஊட்டிவிட, "போதும்டா ரக்ஷவ், நான் உனக்கு தான் செஞ்சேன். நீ சாப்புடு இப்போ. நாம வெளிய போய்ட்டு வரவும் நான் சாப்புட்டுக்குறேன்" தன் ஊட்டிவிடும் வேலையை ஆசைதீரத் தொடர்ந்தாள், அவள்.

"ஆமா! எங்க போறோம்?"

"அது சஸ்பன்ஸ்"

"ம்மா.. சஸ்பன்ஸ்லாம் வேணாம், சொல்லு ம்மா."

"ம்ம்ஹூம்,"

"அட்லீஸ்ட் ஒரு க்ளூ?"

"க்ளூ.... மலை பக்கமா ஒரு அழகான புது இடம்"

"இந்த மலைல எனக்கு தெரியாத இடமா? வாய்ப்பே இல்ல'ம்மா. நீங்க இல்லாதப்போ நான் மலையவே தான் சுத்திட்டு இருக்கேன். எனக்கு தெரியாத எடம்லாம் இருக்க ச்சான்ஸே இல்ல"

"அதெல்லாம் இருக்குதுங்க மகாராஜா! போகவும் பாக்கதானே போறீங்க. அதுக்கு முன்னாடி, இப்போ நீங்க நல்லா சாப்புடுங்க" பாயாசத்துடன் சேர்த்து, மகனுக்கான காலை உணவையும் அவளே ஊட்டிவிட்டாள். 

✨✨✨


"எங்க அவளுங்க? ஹான், எங்க?" இளவரசிகள் இங்குதான் இருக்கிறார்கள் என தகவல் சொல்லி முழுதாக ஐந்து இமிடம் ஆகவில்லை, அவளுக்கு  பக்கவாட்டில் ஒரு மாயவாயிலை திறந்துக்கொண்டு அவ்விடம் வந்திருந்தான், அபிஜித். 

"நான் உங்கட்ட பேசி முடிக்கிறதுக்குள்ள ஜன்னல் வழியா குதிச்சு எங்கேயோ ஓடிட்டாளுங்க மாமா!"

"நெனச்சேன்," தீரா குறிபிட்ட அந்த ஜன்னல் வழியே எட்டி பார்த்தபடி தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டவன், "திரும்ப இங்கதானே வந்தாகனும். வரட்டும் கவனிச்சுக்குறேன்." தங்கைகளை திட்டிக்கொண்டே கூடத்திற்கு வந்தான். 

"சரி மாமா, வரவும் நான் சொல்லுறேன். நீங்க போய் அத்தைய சமாளிங்க"

"இனி எங்க வீட்டுக்கு போறது! அம்மாட்ட இருந்து தப்பிச்சு வந்துருக்கேன். ஒரு பத்து பதினஞ்சு நாள் அந்தபக்கம் போறதா ஐடியாவே இல்ல."

"ரைட்டு, வாங்க குடும்பத்தோட மிஷனுக்கு போலாம்"

"மிஷன்? - ஆமால!  நீ வேற ஏதோ சொல்லிட்டு இருந்தல்ல, ரட்சகன காப்பாத்தனும் பாதுகாக்கனும்ன்னு? வா வா, அவன பாக்க போலாம்"

"எங்க போக? அந்தா... அந்த வீட்டுல தான் இருக்கான். இன்னும் வெளிய வரல" என, வாயிலுக்கு பக்கத்தில் உள்ள ஜன்னலை அவள் சுட்டிக் காட்டும்போதே அபி எழுந்து அங்கு சென்றிருக்க... சரியாக, அவள் குறிபிட்ட அந்த வீட்டின் வாயிலிலிருந்து வெளிவந்த தேவயாசினியை தொடந்து, குதித்துக்கொண்டே வந்தான், அவர்களின் ராட்சகனான ரக்ஷவன்.

"அந்த பையனா?"

"ஆமா, மாமா"

"பையன் க்யூட்டா இருக்கான்!" அபியின் இதழோரம் ஒரு புன்முறுவல், அவனது வீட்டிலிருந்து சாலைவரையில் இருக்கும் படிகளில், முயல்குட்டி போல் குதித்து குதித்து இறங்கிடும் ரட்சகனைக் கண்டு. 

"ஆமா, ஆமா. எவ்ளோக்கு எவ்ளோ க்யூட்டா இருக்கானோ அவ்ளோக்கு அவ்ளோ சேட்டையும் தான்"

"ஹ்ம்ம், தெரியுது தெரியுது. .... .. ..... கவசம் ரொம்ப வீக்கா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம்தான் தாக்குபுடிக்கும் போலவே!"

"ம்ம். ஆமா மாமா."

"இப்போ என்ன? அவங்கள ஃபாலோ பண்ணனுமா நாம?"

"அஃப்கோர்ஸ், மாமா!" 


❣️ ✨ சாகச பயணங்கள் சளைக்காமல் வரும் ✨ ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro