அவன் மனம்...
~ வழக்கமான நேரத்தைவிட இன்று ஏன் சீக்கிரமாக தங்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என தங்களின் ஆங்கில ஆசிரியரை பற்றி பேசியபடி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த ரக்ஷவன் மற்றும் மயூவை கவனித்தவாறு ரவியும் வீரும் அவர்களுக்கு சற்று தூரமாக நடந்து வந்துக் கொண்டிருக்க... அள்நடமாட்டம் இல்லாத அந்த ஒத்தையடி பாதையில் அவர்கள் வளைந்த நேரம் தீடீரென எங்கிருந்தோ வந்து ரக்ஷவனுக்கு முன்பாக தொபுகடீரென குதித்தான், ஷேனா.
திடுமென தலைக்கு மேலிருந்து குதித்தவனை கண்டு திகிலடைந்த ரக்ஷவன் மற்றும் மயூரி சடன்-பிரேக் போட்டு, நின்ற இடத்திலேயே நின்று விட.. ஷேனாவை போலவே அவனுக்கு அருகே குதித்த சமாரா, "ஷேனா, நான் சொன்ன மாதிரியே செய்.." மிரண்டிருக்கும் ரட்சகனை பார்த்தபடி ஏளனமாக சிரித்த நேரம் அவளை வேறு ஏதோ ஒன்று திசை திருப்பிட.. பார்வையை திசைமயற்றியவள் கண்ணில் சிக்கினார்கள், ரவி மற்றும் வீர்.
புதிதாக வந்த இருவரின் தோற்றத்தையும் கண்டு, தீரா குறிப்பிட்டிருப்பது இவர்களாக தான் இருக்கும் என நொடி பொழுதில் சுதாரித்துக்கொண்ட ரவியும் வீரும் அவர்களை நோக்கி ஓடி வரும்போதே அவர்களுக்குள் இருக்கும் மாயசக்திகள் சமாராவை ஈர்க்க.. ரட்சகனை அப்படியே விட்டுவிட்டு தூரத்தில் ஓடிவரும் இருவரையும் நோக்கி நடக்கத் தொடங்கினாள் அவள். தன் அருகில் இருந்தவள் நகர்வதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத ஷேனா, ரட்சகன் மீது தன் நிலையான பார்வையை பதித்து வைத்தபடி முதுகிலிருந்துத் தன் இரு வாள்களையும் உருவி எடுக்க... எச்சிலை கூட்டி விழுங்கிய ரக்ஷவன், மயூரியை தன் கைக்கு பின்னால் நிற்க வைத்தபடியே பின்னுக்கு நகரத் தொடங்கினான்.
"மயூ"
"ம்ம்"
"இது அவன் தானே?"
"அவனே தான்"
"அக்கா.. சவுண்ட் பார்ட்டி அக்கா.. பக்கத்துல இருக்கீங்களா?" ஒரு கண்ணை ஷேனாவின் மீது வைத்தபடியும் மறு கண்ணை எங்கோ வைத்தபடியும் அவன் உளறுவதை கண்ட மயூ, "எரும.. யார டா கூப்புடுற?" அவன் கையில் கிள்ளிவிட, "வேற யாரு.. நேத்து வந்த பேய் அக்கா-" அவள் கிள்ளியதற்கெல்லாம் சொரனையே இல்லாமல் பின்னோக்கி நடந்தவன், "ஆவ்வ்வ்.....சாமிமி பொறுமை பொறுமை" ஷேனா, சாதாரனமாக வாளை சுழற்றியபடி முன்னுக்கு இரண்டடி நடந்ததற்கு அலறினான்.
அவன் நடவடிக்கையையெல்லாம் ஓரங்கட்டிய ஷேனா, இறுகிய முகத்துடன், தன் வலது கையில் மின்னும் மரகத நிற ஆத்ம வாளை அவனை நோக்கி உயர்த்திப் பிடித்தபடி நெருங்கி வர... தங்க நிறம் கொண்டு மெல்ல ஜொலிக்கத் தொடங்கிடும் அந்த பெரிய பச்சை வாளை கண்டு மேலும் பீதியாகினான் ரக்ஷவன்.
"ஹேய்.. நான் உனக்கென்னடா துரோகம் பண்ணுனே.. எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம். நோ வைலன்ஸ்.. என்ன தான் டா பிரச்சன உனக்கும் எனக்கும்?" அவன் கண்கள், வாளையும் ஷேனாவையும் மாற்றி மாற்றி பார்த்தது.
"நீ உயிரோட இருக்குறதே எனக்கு பிரச்சன தான்" தன் அடிக்குரலில் கூறிய ஷேனா, இப்போது முழுதாக பொன்நிறத்தில் மின்னும் தன் ஆத்ம-வாளுடன் சேர்த்து தங்க நிற வாளையும் மெல்லமாக சுழற்றியபடியே ரட்சகனை மேலும் நெருங்க, "எதே.. நான் உயிரோட இருந்தா உனக்கென்னடா பிரச்சன? நான் பாட்டுக்கு ஒரு ஓரமா உயிரோட இருந்துட்டு போறேனே.." அவனின் ஒவ்வொரு அடிக்கும் இங்கு கதிகலங்கி பின்னால் நகர்ந்தார்கள் ரக்ஷவன் மற்றும் மயூரி. அவன் வாளை வைத்து வித்தை காட்டுவதை கண்டு மேலும் மேலும் ரக்ஷவனுக்கு உதறலெடுக்க, 'அய்யோ அந்த அக்காவ வேற காணோமே.. நெஜமாவே இங்க இல்லையா... இல்ல, நேத்து பேசுன பேச்சுக்கு பழி வாங்குதான்னு வேற தெரியலையே' ஒருபக்கம் மனதுக்குள் கதறிக் கொண்டிருந்தான்.
"அடேய் பேசீட்டே இருக்காம ஏதாச்சும் செய் டா " ஷேனாவின் மிரட்டலான தோற்றத்தால் ஏற்கனவே பயந்துபோய் இருந்த மயூரி, இவன் இப்படி தொனத்தொனவென பேசிக்கொண்டிருப்பதை கண்டு காண்டாகி அவன் முதுகில் சுறீரென ஒரு அடியை வைக்க, "அடியேய் என்னை என்ன டி செய்ய சொல்- வோவ்வ்வ் ." அவளுக்கு பதிலை கொடுக்கும் முன்பாக, தனக்கு முன் நிற்பவனின் மரகத வாளில் இருந்து புறப்பட்ட பொன்னிற கதிர் நேராக தன்னை நோக்கி வருவதை கவனித்தவன் தற்காப்பாகத் தன் ஒரு கையால் மயூரியை தனக்குப் பின்னால் மறைத்தபடியே மறு கையை வேகமாக இழுத்துத் தன் முகத்தினருகில் கொண்டுவந்த நேரம், ஷேனாவின் சக்தி நேராக வந்து அவன் மணிக்கட்டில் இருக்கும் வாளின் மீது விழ.. அந்த சக்தியை தடுத்து, அதை தகர்த்தபடி வெண்ணிறத்தில் மின்னியது , ரட்சகனின் குட்டி ஆத்ம-வாள். இதை எதிர்பார்க்காமல், மின்சாரம் பாய்ந்தது போல் திடுக்கிட்ட ஷேனா, தன் ஆத்ம வாளை தவற விட.. ரட்சகன் சக்தியால் தாக்கப்பட்டதால் நான்கடி தள்ளிப்போய் விழுந்தது அது.
ஷேனாவின் கண்கள், தன் கையை விட்டு பிரிந்துபோன ஆத்ம வாளின் மேல் பதிந்த நொடி,"வாவ்!.. மயூ!! நீ பாத்தியா?" தன் கை செய்த மாயத்தை தன்னாலேயே நம்ப முடியாமல் வாயை பிளந்தபடி தன் கையில் மின்னும் மினியேச்சர் வாளை திகைத்து நோக்கினான் ரக்ஷவன்.
"நேத்தும் இப்டி தான் டா செஞ்ச" நினைத்த அளவுக்கு பெரிதாக எதுவும் நடவாதது போல் மயூ தோளை குழுக்கிக் கொள்ள.. ஆனால் ரக்ஷவனின் கால் தான் தரையில் இல்லை, "இப்டியா செஞ்சேன்?! ஹாஹ்ஹ்!! வாவ்..... இது சூப்பரா இருக்கு மயூ" தினமும் பார்க்கும் அனிமி பொம்மைகள் செய்வதுபோல் செய்துவிட்ட குஷியில், நின்ற இடத்திலேயே உற்சாகத்தில் பறக்கத் தொடங்கினான் அவன்.
ஷேனாவிடம் சமாரா சொல்லி அனுப்பியது, ரட்சகனுக்குள் இருக்கும் இருள்-வாரிசின் ஆத்மசக்தியை வெளியே கொண்டுவர தான். ஆனால், இவன் என்னவென்றால் இவனின் ஆத்ம சக்திகளை கையாள பழகிக் கொண்டிருக்கிறான். மேலும், தன் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தி தன்னுடைய ஆத்மவாளையே தன் கையை விட்டு பிரித்துவிட்டான். அதை எண்ணி வெறியாகிய ஷேனா, பல்லை கடித்தபடியே தூரத்தில் கிடக்கும் தன் ஆத்ம வாளின் மீதிருந்த பார்வையை ரட்சகனை நோக்கி மீண்டும் திருப்பிய நொடி மாறாமல் அவனை வந்து தாக்கியது, ரட்சகனின் காற்று சக்தி.
கைவழியே மீண்டும் அந்த வெள்ளை ஒளி வரும் என எதிர்பார்த்து, பவர்ரெஞ்சர்ஸ் ரேஞ்சுக்கு கை கால்களை ஆட்டிக் கொண்டிருந்தவன், தன் அனிமி ஹீரோக்களின் சண்டை காட்சிகளை மனதில் நிறுத்தியபடி என்னென்னவோ செய்து இறுதியாக ஏதோ ஒரு முயற்சியில் தவறுதலாக, தனக்குள் இருந்து சக்தியை வெளிக்கொணரும் வழியை கண்டுபிடித்துவிட.. ஆனால், வெள்ளை ஒளிக்கு பதிலாக இம்முறை சூரைக்காற்று சுழன்றடிப்பதை கண்டு, "வாவ்வ்வ்.." தை கைகளையே நம்பாமல் பார்த்துக் கொண்டவன், வீடியோ-கேம் பொம்மைக்கு புது அப்கிரேட் கிடைத்ததாகக் குதிக்கத் தொடங்கினான்.
"இப்போ பாரு டா என் ஆட்டத்த.... ஹே இந்தா.. இந்தா.. புடிச்சுக்கோ.. இந்தா வச்சுக்கோ" முதல் தாக்குதலில் கீழே விழுந்த ஷேனா மீண்டும் எழும்முன் , ரக்ஷவன், அடுத்தடுத்து தன் தாக்குதலை அவன்மேல் செலுத்தத் தொடங்கிவிட.. அந்த தாக்குதல்கள் அவ்வளவாக வலிமை இல்லாவிட்டாலும் ஷேனா எழுந்து நிற்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் தடுத்து அவன் எரிச்சலை இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தது. கடுப்பை கட்டுப்படுத்த மறந்தவன், கிடைத்த கேப்பில் சுதாரித்துத் தன் தங்க நிற வாளை கொண்டு ஒரு வீச்சு தான் வீசினான்.. தன்னை நோக்கி அடுத்ததாக வந்த ரட்சகனின் காற்றை இரண்டாகக் கிழித்து இருவேறு திசைக்கு அனுப்பியது ஷேனாவின் வாள்வீச்சு.
"அச்சச்சோ.." தன் தாக்குதல் தவறியதாலும், தனக்கு பின்னால் இரு பக்கமும் இருந்த அப்பாவி புற்கள் அந்த காற்றின் தாக்கத்தால் தலை குனிந்து கிடப்பதாலும் தனக்குத்தானே பறிதாபம் சொல்லிக்கொண்ட ரட்சகன், புற்களின் மீதிருந்த பார்வையை மாற்றாமல் தன் கையில் ஒரு காற்று பந்தை உருவாக்கியபடி, "இப்போ பாரு..." என ஷேனாவை நோக்கிட, "ஹே.. ஹேய்.. என்ன நெருப்பு வச்சுலாம் வித்த காட்டுற" அந்த காற்று புஸ்சென போய்விட்டது, தீ பற்றி எரியும் தங்க வாளுடன் வெறிக்கொண்ட வேங்கையாய் எழுந்து நிற்கும் ஷேனாவை கண்டு.
ரக்ஷவனின் விளையாட்டை கண்டு தலையில் அடித்துக் கொண்டிருந்த மயூ, நெருப்பு என்றதும் அதிர்ந்து பார்க்க.. மயூரியை தனக்குப் பின்னால் நகர்த்திக்கொண்டவன், "நான் சின்ன பையன்...நெருப்பு வச்சுலாம் வெளையாட கூடா-- ஹேய்ய்ய்..." தன் பேச்சை முடிக்கும் முன்பே ஷேனாவின் வாளிலிருந்து வந்த நெருப்பு ரட்சகனை நோக்கி விரைய, அவன் தன்னால் முடிந்த அளவு தன் சக்தியை கையால முயற்சித்து அந்த நெருப்பை கட்டுபடுத்த முயன்ற நேரம் ஷேனாவின் வலிமை அதற்கு அனுமதிக்கவில்லை; விரைவாகவே ரட்சகனை உள்வாங்கத் தொடங்கிய நெருப்பினுள் மெல்ல மெல்ல தன் சுயநினைவை இழக்கத் தொடங்கிய நேரம் சூழலின் நிலை மாற்றம் கொள்ள.. காற்றும் நெருப்பும் சூழ நிலத்தை விட்டு உயரே எழும்பிய ரட்சகன் தன்னை தாக்க முனையும் சக்தியை மொத்தமாகத் தகர்த்தெறிந்தான் ~
"சரியா அப்போ தான் நீ என்ட்ரி குடுத்த" ஹர்ஷன் மித்ராவிற்கும் சேர்த்து கதை சொல்லியிருந்த வீர், தீராவை நோக்கினான்.
"ஆமா, ஆமா... மண்ன கவ்வுற என்ட்ரி" அவள் சலித்துக்கொள்ள... அதைகண்டு வாய்மூடி சிரித்தார்கள் மற்ற அனைவரும்.
"அதுசரி, நான் வரைல அந்த பிசாச புடிச்சுட்டு என்ன டா பண்ணிட்டு இருந்தீங்க ரெண்டு பேரும்?" தீராவின் கேள்வியால் ரவியும் வீரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள.... இருவர் முகத்திலும் சிறு குழப்பம் தெரிந்தாலும் அவளுக்கு விளக்கத் தொடங்கினான், வீர்.
"நாங்க ரக்ஷவ் கிட்ட போகைலயே அந்த பிசாசு எங்க கிட்ட வந்துச்சு" தீராவின் பாணியிலேயே ஆரம்பித்தவன், "அக்ச்சுவலி அது பிசாசு கெடையாது.. மனித வௌவாள். அண்ட், அது மனுஷி ரூபத்துல இல்லாம வௌவாளா மாறுற நேரம் யாரையாச்சும் புடிச்சு வச்சுருக்குதுன்னா அவங்க உயிர் போக போதுன்னு அர்த்தம்."
"எதே! நல்லா தானே டா இருக்கீங்க ரெண்ட் பேரும்? எதுவும் ஆகலையே? ஏதாச்சும் ஆச்சுன்னா உங்க பொண்டாட்டி புள்ளைங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது டா.. என்ன தோள உரிச்சு தொங்க விட்டுருவாளுங்க" ஒரு எமோஷனல் ஃப்லோவில் கத்தியவளை, "அடியேய் அடியேய் எங்கள பாத்தா எப்டி தெரியுது? நல்லா தானே டி இருக்கோம்" பிடித்து நிதானமாக்கினான் ரவி.
"இப்போ அவன் தானே டா சொன்னான், உயிர் போயிரும்ன்னு"
"ஆமா.. உயிர் போகவும் தான் இப்டி உன் முன்னாடி உக்காந்து பேசீட்டு இருக்கோம் பாரு.. ஒழுங்கா அமைதியா முழுசா கேளு. அது ஒரு வசிய கலை... அதுல இருந்து விடுபட தெரியலைனா தான் உயிர் போய்ரும். ஆனா.." என சற்று நிறுத்தியவன், "நாங்க அத பத்தி படிச்சுருக்கோம்." என குழப்பமாக சொல்ல, "படிச்சுருக்கீங்களா? ஆதிலோகத்துல உள்ள பிசாச பத்தி நீங்க எங்க படிச்சீங்க?" தீராவும் சேர்ந்து குழம்பிட.. தெளிவான தமிழிலேயே இவர்கள் பேசினாலும் எதுவுமே புரியாமல் முகத்தை-முகத்தை பார்த்தார்கள் ஹர்ஷனும் மித்ராவும்.
"அது.. ஒரு புக்ல.. எங்களுக்கு கீழ கெடந்து கெடச்சுது.. ஆனா இப்போ இல்ல.. உன்னலாம் நாங்க மீட் பண்றதுக்கு கொஞ்ச வருஷம் முன்னாடியே"
"ஆனா, அது ஆதிலோகத்த சேந்ததுன்னு இப்போதான் தெரியுது. அண்ட், அந்த மாதிரி ஒரு உயிரினம் மொத்தமா அழிஞ்சிட்டதா தான் அந்த புக்ல போட்டுருந்துச்சு. அப்போ அத நம்பல.. ஆனா இப்போ அத நேர்லயே பாத்துருக்கோம்... ஃபர்ஸ்ட் டைம்." வீரை தொடர்ந்து தன் கருத்தை விளக்கினான், ரவி.
"அது வௌவால் ரூபத்துல இருக்கைல அதோட கண்ண பாத்தா மட்டும் தா அதால மத்தவங்கள கட்டுபடுத்த முடியும்.. ஒருவேள, பாதிலையே டிஸ்ட்ரேக்ட் ஆகீட்டா.... அது அப்டியே ப்ராஸஸ்ச பாஸ் பண்ணி வச்ச மாதிரி ஆகீரும்.. எப்போ வேணும்னாலும் கண்ட்டின்யூ ஆகலாம்" வீர் சொல்ல, "இப்போ எனக்கு நடந்த மாதிரி" அவன் சொல்லை முடித்து வைத்தான் ரவி.
"என்ன டா சொல்ற." தீராவின் முகத்தில் தெளிவான அதிர்ச்சி தென்படுவதை கண்டு புன்னகைத்த ரவி, "டோன்ட் வர்றி, மறுபடியும் அதோட கண்ண நேருக்கு நேரா பாத்தா மட்டும் தான் அதால என்ன கட்டுப்படுத்த முடியும். ஆனா, அது கண்ண பாக்காமலே எங்களால அத கன்ட்ரோல் பண்ண முடியும். எல்லாமே அந்த புக்ல இருந்துச்சு. அதவச்சு தான் இப்போ அத சமாளிச்சுருக்கோம்" அவளை நிதானமாக்கிட, "சோ, மறுபடியும் வந்தாலும் ஈஸியா சமாளிச்சுரலாம்." வீரும் ஒருபக்கம் அவளுக்கு சமாதானம் சொல்லினான்.
"ஏதேதோ புதுசு புதுசா சொல்றீங்க டா... எனக்கு தான் நாளுக்கு நாள் பயம் அதிகமாகீட்டே போகுது." இரு சகோதரன்களையும் அப்பாவியாக பார்த்தாள் தீரா.
✨✨✨
'எவ்வளவு நேரம் கண்களை மூடி இருந்தோம்' என சிந்தித்துக்கொண்டே தலையை பிடித்தபடியும் கண்களை கசக்கியபடியும் எழுந்த சமாரா, சற்று தள்ளி இருக்கும் நீரோடையை பார்த்தபடி தனக்கு முதுகை காட்டி நிற்பவனை கண்டுகொண்டாள். ஆடையில் தூசி தட்டிக்கொண்டே எழுந்தவள், "ஷேனா, எனக்கு ஒன்னும் இல்ல, வா போலாம்.." என ஒரு மாயவாயிலை திறந்துவைத்து முன்னால் நடக்க, ஷேனாவிடம் ஒரு அசைவும் தென்படாமல் இருப்பதை கண்டு அப்படியே தன் நடையை நிறுத்திவிட்டுஅவனை நோக்கித் திரும்பினாள்.
"ஷேனா.." ம்ம்ஹும்.. ஒரு அசைவும் இல்லை அவனிடம். ஆனால் நன்றாக நிமிர்ந்து நிற்கிறான், அந்த ஓடையின் நீரோட்டத்தை பார்த்துக்கொண்டு.
"என்னாச்சு உனக்கு? வா போலாம்ன்னு சொன்னேன்" நின்ற இடத்தில் நின்றபடியே தன் குரலில் சற்று அழுத்தத்தை அதிகறித்தவள், அவன் பதிலை எதிர்நோக்க, "எனக்கென்னமோ நான் தப்பு பன்னுறேன்னு தோனுது" ஐந்து நொடிகள் கடந்து வந்தது அவனின் அமைதியான பதில். நெற்றி சுருங்க அவனை பார்த்தவள், முழுதாக அவன் புறம் திரும்பி, "எத பத்தி சொல்ற நீ?" மெல்ல அவனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
"ரட்சகன ஏன் நாம தாக்கனும்? அவன் ஒளியோட வாரிசு.. அவன் சக்திகளோட மோதுறது நமக்கு தான் அழிவு"
"ஷேனா என்னாச்சு உனக்கு? என்ன பேசுற நீ? திடீர்ன்னு என்னாச்சு உனக்கு?" அவனை முழுதாக நெருங்கிவிட்டவள், அவன் தோளை தொட்டு தன்னை நோக்கி திருப்பி அவன் கண்களை பார்த்து கேட்க, "தெரியல.. என் மனசுக்குள்ள திடீர்ன்னு நெறைய கேள்விகள் வருது" அமைதியாக அவன் பதில் கொடுத்த நேரம், "கேள்வியா?" குழப்பமாக அவனை பார்த்தாள் சமாரா.
"ஷேனா, அந்த இளவரசி உன் அம்மாவ கொல்ல யோசிக்கல.. இப்போ நீ ஏன் யோசிக்கிற?" அவள் கேள்வியை அடுத்து அவன் கண்களில் கருமை படர்ந்து மின்னி ஜொலிக்க, "ரட்சகன் அவன் முழு சக்திகளோட ஆதிலோகம் வந்து அவங்க கூட சேந்துட்டா அவனோட அடுத்த குறி நம்ம ராஜ்யம் தான். ஒரு இளவரசனா இது உன் கடமை. ரட்சகன புடிச்சு நம்ம ராஜ்யத்துக்காக பலி குடுக்க வேண்டியது உன் கடமை நீ உன் கடமைய செஞ்சுதான் ஆகனும்." மெல்ல மெல்ல அவன் காதுக்குள் ஓதினாள், சமாரா.
✨✨✨
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro