சுவாசம் 2
சுவாசம் 2
முழுக்கை ஜாக்கெட்டும் இளஞ்சிவப்பு நிற பிளான் சேலையும் அணிந்து ஹீல்ஸ் இல்லாத செருப்பு போட்டு தன் தோளில் ஹாண்ட் பாக்கை சுமந்தபடி கம்பீரமாய் நுழைந்தாள் அவள்.
அனுபவம் அவளுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தியிருந்தது. அதில் ஒன்று இந்த கம்பீரம். இரும்பை அடிக்க அடிக்க உறுதியாவது போல். அவளுக்கு காலம் கற்றுத்தந்த பாடங்கள் அவளை அசையா பெண்ணாய் மாற்றியிருந்தது.
அந்த ஏழடுக்கு கட்டிடத்தில் ஐந்தாவது தளத்தில் அவள் வேலையகம் அமைந்திருந்தது. முன்னாள் கடந்தவர்கள் சிலரின் வாழ்த்துக்கு சிநேக சிரிப்பும் சிலரிடம் மென்மையான தலையாட்டலுமென்று சென்றவள் மின்தூக்கியினுள் ஏறிக்கொள்ள மூடிக் கொள்ளப்பார்த்த கதவுகளை தடுத்து நிறுத்தியது ஒரு கை. உள்ளே வந்தவனை கண்டு அவள் முகம் ஒரு நொடி ஆச்சர்யம் காட்டி அடுத்த நிமிடம் கோபத்தில் சிவக்க தொடங்கியது.
அவள் இறங்க வேண்டிய தளத்தை அம் மின் தூக்கி அடைய அவள் இறங்கும் முன்
" ஒரு நிமிடம் ரதி "
என்ற அந்த குரலின் சொந்தக்காரனை திரும்பி என்ன என்பது போல் பார்க்க
"விஷ் யூ ஹாப்பி பர்த்டே ரதி "
என்றான் அவன். அவன் கையில் பூங்கொத்தோன்று காத்துக்கிடந்தது என்னை ஏற்றுக்கொள் என்று சொல்வது போல.
அவனை உணர்ச்சியற்று பார்த்தவள் திரும்பி தன் கேபின் நோக்கி நடக்க தொடங்கினாள். என்ன தோன்றியதோ திரும்பி அவனை பார்த்து
"என்னை இனி ரதி என்று கூப்பிடாதீர்கள்.... அடுத்தவர் என்னை அப்படி கூப்பிடுவது எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் மறுபடி மறுபடி அதே பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அது என் கார்த்திக் மட்டும் கூப்பிட்டது அவனுக்கு மட்டுமானது "
என்று சற்று நிறுத்தி மீண்டும்
" நானும் நீங்களும் ஒரே அலுவலகத்தில் வேளை செய்பவர்களாக இருக்கலாம் ஆனால் அடிக்கடி இந்த தளத்தில் வந்து நிற்கின்ற வேலையும் வேண்டாம். எனக்கு தெரியும் இந்த அலுவலகத்தில் வேளை செய்பவருக்கு எங்கு வேண்டும் என்றாலும் போக முடியும் ஆனால் தேவை இல்லாமல், வேளை இல்லாமல் வந்து நிற்காதீர்கள். அடிக்கடி இப்படி அடுத்தவருக்கு நாம் காட்சிப்பொருளாக தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதே போல் என் வீட்டிட்கும். எப்படி என் பெயர் கார்த்திக்கு மட்டும் சொந்தமோ அதே போல நானும் எப்பவும் என் கார்த்திக்கு மட்டுமே சொந்தம்"
என்றவள் திரும்பி நடந்தாள்.
என் தேவை ஆசை வாழ்க்கை எல்லாமே நீயாய் இருக்க நான் இங்கே வராமல் எங்கே போவது மௌனமாய் கேள்வி கேட்டது அவன் மனம்.
ஆமாம் இல்லாத கார்த்திக்காய் இருக்கும் ஆரவ்வையும் நோகடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அன்று அவளின் இருபத்தி எட்டாவது பிறந்த நாள். ஆரவ் அவளை சந்தித்த பின் அவளது ஐந்தாவது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இப்படித்தான் அவன் அவளுக்கு வாழ்த்துச்சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்கிறான்.
போகும் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் வேலைக்கு நேரமாவதை உணர்ந்து திரும்பிச் செல்ல, இன்றும் தன் காதல் மறுக்கப்பட்டதை எண்ணி அவன் மனம் சோர்ந்து போயிருந்தது.
லிப்ட்டை விட்டு கீழே வந்து தன் கேபினுக்கு சென்று சிஸ்டமை ஓபன் செய்தவனுக்கு வேளையில் மனம் ஓடாமல் இருக்க தலையை கைகளில் வைத்து மேசையில் சாய்ந்து கொண்டான் அவன். அவன் மனம் அவளை முதன் முதலில் சந்தித்த கணத்தை நினைத்து பார்த்தது.
*********************************************
ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த இன்டெர்வியூவில் தேர்வு செய்யப்பட்ட புதிய வேலையாட்கள் வேலைக்கு சேரும் நாள் இன்று.
அவள் இளநீல நிற பின்னணியில் வெள்ளை பூ போட்ட சேலை கட்டியிருந்தாள். வேறு அலங்காரங்கள் ஏதுமில்லை. நெற்றியில் போட்டு இல்லை.தலையில் பூ இல்லை. காதில் ஒரு சின்ன தோடு தவிர வேறு எந்த அணிகலனும் இல்லை. கூந்தலை இழுத்து வாரி கொண்டையாய் முடிந்து இருந்தாள். பவுடர் கூட காணாமல் இருந்தது அவள் முகம். இருபத்தி மூன்று வயதில் ஒரு பெண் இப்படி இருந்தாள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அன்று நடந்த நேர்முக தேர்வில் அவளும் தேர்வாகி இருக்க அவர்களுக்கான அறிமுகம் நடந்தது. ஆரவ் வேளை செய்து கொண்டிருந்தது மென்பொருளியல் பிரிவில். அலுவலகத்தில் இருந்த எல்லோரிடமும் போல இவனிடமும் அறிமுகம் செய்யப்பட இயல்பாய் தலையாட்டினானே தவிர அப்போது இவனுக்குள் எதுவும் தோன்றவில்லை. பார்த்தாள் சின்ன வயது போல இருக்கிறாள். பின் எதற்கு இப்படி ஒரு தோற்றம் இவளுக்கு அது மட்டுமே மனதில் ஓடியது.
ஒரு மாதம் கழிந்திருக்கும். மதிய உணவு இடைவேளையில் சிற்றுண்டிச்சாலையில் அமர்ந்து உணவை கொறித்தவண்ணம் அரட்டை அடித்தபடி அமர்ந்திருந்த நேரம் அது.
தூரத்தில் தன் லஞ்ச் போஸ் சகிதம் வந்து கொண்டிருந்தாள் அவள். அப்போதும் அவனுக்கு மாறாமல் அதுவே நினைவில் வந்தது. இத்தனை சின்ன வயதில் என்ன சோகம். அவள் முகத்தில் எத்தனை மறைக்க முயன்றும் சோகத்தின் சாயல் தெரிந்தது. கண்களை சுற்றி கருவளையம் இருக்க மீண்டும் அவன் மனம் கேட்டது என்ன தான் சோகம் இவளுக்கு என்று. அவள் உணர்வுகள மறைக்க பொய்யாய் ஒரு புன்னகையை பூசியிருந்தாள்.
கருநீல நிற முழுக்கை ஜக்கெட்க்கு அதே நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். அந்த நிற சேலையில் அவளின் இளமஞ்சள் நிறம் வெட்டிக் காட்டியது அவளை. எண்ணெய் வழிய வழிய கொண்டை போட்டிருந்ததால் கொஞ்சம் எண்ணெய் கரை நெற்றியோரமாய் மிச்சமிருந்தது.
சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்தவள் மூலையில் தனியாய் இருந்த ஒரு மேசையில் போய் உட்கார்ந்தாள். அது அவளுக்கென்றே எழுதி வைத்தது போல் வந்த நாளிருந்து அந்த இடத்தை மாற்றவில்லை அவள்.
அவள் சாப்பாட்டு பெட்டியை திறந்த கனமிருந்து பார்த்திருந்தான் ஆரவ். மேசை விளிம்பை வெறித்து பார்த்திருந்தவள் அவள் உண்டு முடிக்கும் வரை அந்த பார்வையை மாற்றவேயில்லை. இடைக்கிடை அவள் கண் கலங்க அதை யாருமறியாமல் அடிக்கடி துடைத்துக் கொண்டாள். அவள் ஒரு கவளம் சோற்றை சாப்பிட்டு முடிக்க ஒரு நிமிடமாவது எடுத்தது. சோற்றுக்கு வலிக்குமோ பல்லுக்கு வலிக்குமோ அத்தனை மெதுவாக மென்று விழுங்கினாள்.
அவள் ஸ்டாபில் யாரோ அவளை தட்டி பேச அதுவரை தன்னுள் மூழ்கி இருந்தவள் அப்போது தான் தன் யோசனையில் இருந்து வெளியே வந்தாள்.
தன்னோடு கதைத்துக்கொண்டு இருந்தவரோடு பேசியபடியே பார்வையை சுழற்றியவள் பார்வை இவன் பார்வையில் தேங்கி மீண்டது. யதார்த்தமான இயல்பான பார்வை தான். அதில் மேலதிக ஆர்வத்திற்கு வாய்ப்பேயில்லை. ஏனென்றால் அந்த கரும் கபில நிற கண்களில் ஒரு திரை போட்டிருந்தாள் அவள்.
கதைத்த வண்ணமே அவள் சென்று மறைய அவள் பிரிவில் இருந்த ஒரு நண்பனிடம் மெதுவாய் பேச்சுக்கொடுத்தான் இவன்.
"டேய் யார்டா அது... உங்க செக்ஷன்ல புதுசா வேலைக்கு சேர்ந்து இருப்பது. "
என்ற இவன் கேள்விக்கு
"ஓ அதுவா ரதிப்ரியா.. ரதிப்ரியா கார்த்திக்... அப்படி தான் அவங்க சொன்னாங்க. ரொம்ப சின்ன வயசு தான் போல... யார் கூடவும் அவ்வளவாக பேசுறதில்லை. அவங்கலாயிற்று அவங்க வேலையாயிற்று. தேவை இருந்தால் பேசுவாங்க...ஆண்கள் மட்டும் என்றில்லை பெண்களோடு கூட அளவான பேச்சு தான். பட்டும் படாமலும் பழகுவாங்க. ஆனால் சிடுமூஞ்சி என்றில்லை... என்ன கஷ்டமோ அடிக்கடி சோகம் தெரியும் அவங்க முகத்துல. சில நேரம் அழுத போலயும் இருக்கும்.. பாவம்"
என்றான் அந்த நண்பன். இவன்
"கல்யாணம் ஆனவளா "
என்க.
"தெரியவில்லை... கணவன் இருந்தால் இப்படியா இருப்பார்கள். ஆனால் கழுத்தில் கையில் ஒன்றும் இல்லாமல் பொட்டு கூட இல்லாமல் திரிகிறாள். என்ன கஷ்டமோ "
என்றவன் வேலையிருப்பதாய் சொல்லி சென்றுவிட எதேச்சையாய் ஆரவ் பார்வையை நிமிர்த்தி பார்க்க நாகேஷின் கேள்வி தாங்கிய குறுகுறு பார்வையை சந்திக்க நேர்ந்தது.
"என்னடா அப்படி பார்க்கிறாய்... ஏதோ புதியதாய் பார்ப்பதை போல"
என்ற ஆரவின் கேள்விக்கு
"ஆமாம் மச்சான் புதியதாய் தான் தெரிகிறாய். என் மச்சான் தலையை சுற்றி ஒளிவட்டம் தெரிகிறதே. காதலால் வந்த ஒளிவட்டமோ. "
என்றபடி தன் ஒற்றை விரலால் ஆரவின் தலையை சுற்றி வட்டம் வரைந்து காட்டினான் நாகேஷ்.
"டேய் என்னடா லூசு போல என்னென்னமோ சொல்கிறாய். "
என்று கேட்டவனின் குரலில் என்னாச்சி இவனுக்கு என்ற சந்தேகம் கொஞ்சம் இருந்ததோ.
"ஆமாமாம் நான் தான் லூசாகிட்டேன்.... போடா பச்சை தண்ணீரில் வடை பொரிக்காமல் "
என்ற நாகேஷிற்கு
"சொல்வதை உருப்படியாய் விளக்கமாய் தான் சொல்லித் தொலையெண்டா... இப்படி புதிர் போடாமல்"
கொஞ்சம் எரிச்சல் கலந்து வந்தது ஆரவின் குரல்.
"மச்சி உன் அம்மாவும் உனக்கு இரண்டு வருடமாய் பெண் பார்க்கிறார். ஒருத்தரையும் வேண்டாம் என்று விட்டாய். சில பெண்களுக்கு போட்டோவிற்கே ஆயிரம் குறை. சரிதான் என்று பொண்ணை பார்க்க இழுத்து கொண்டு போனால் பொண்ணை பார்த்து விட்டு அவள் என்ன தான் உருப்படியாய் இருந்தாலும் ஏதாவது ஒரு குறை. ஒரு பெண்ணுக்கு மூக்கு நீட்டமென்பாய் இன்னொருவளுக்கு முகத்தில் மூக்கையே காணவில்லை என்பாய். முகமெல்லாம் கண் என்பாய். இல்லையென்றால் சீனாக்காரன் கண் என்பாய். கடைசியாய் பார்க்க போன பொண்ணுக்கு என்ன சொன்னாய்...ஆஹ்... பஜ்ஜியில் எண்ணெய் வடிகிறது... இப்படி சாப்பிட்டால் முப்பத்தைந்தில் ஹார்ட் அட்டாக்கில் போய் சேர வேண்டுமென்றாய் "
ஆயாசமாய் கண்ணை சுழற்றிய ஆரவ். "இப்பெதற்கு இத்தனை பெரிய சொட்பொலிவு நடத்துகிறாய்... நேரே விஷயத்திற்கு வாடா"
என்க
"அது தான் மச்சி அப்படி பெண்கள் என்றாலே வேண்டாம் என்றவன் யாரோ ஒரு ஒரு பெண். அதுவும் கண்டு கொஞ்ச நாளே ஆன பெண்ணை பற்றி இவ்வளவு விசாரிக்கிறாயே" என்றான் நாகேஷ்.
யாரோ ஒரு பெண்ணை பற்றி ஏன் இத்தனை ஆர்வம். என்ற நாகேஷின் சந்தேகத்திற்கு
"ஒரு பெண்ணை பற்றி விசாரித்தால் அது காதலாக தான் இருக்க வேண்டுமா... ஏனோ அந்த பெண்ணை பார்த்தாள் பாவமாய் என்னமோ கஷ்டம் போல இருந்தது அதனால் கேட்டேன். வேறொன்றும் இல்லை. மற்றது என் அம்மா ஒரு விதவை. அவருக்கு என்னை விட்டால் யார் இருக்கிறார்கள். எங்கே நான் கல்யாணம் பண்ணிவிட்டாள் வருபவள் என்னையும் அம்மாவையும் பிரித்துவிடுவாளோ என்று தான் கல்யாணம் வேண்டாம் என்கிறேன். இல்லாமல் பெண்கள் மேலெல்லாம் வெறுப்பில்லை. இன்னும் ஒரு விதவையின் கஷ்டங்கள் தெரிந்தவன் நான்... அதனால் ஒரு விதவையை கல்யாணம் பண்ண வேண்டுமென்று இருக்கிறேன். இதில் காதலாவது வேறேதாவது. "
என்றவன்
"அம்மாவிடம் போய் உளறிவிடாதே நான் விதவையை கட்டுவேன் என்று சொன்னதை. "
என்று சொல்லிவிட்டு சென்றான் ஆரவ்.
அன்றிரவு இரவுணவை சாப்பிட்டு வந்து கட்டில் சாய்ந்துகொண்டு போன் நோண்டி கொண்டிருந்த நேரமது.
கையில் பால்கோப்பையுடன் வந்தாள் மஹாலட்சுமி. ஆரவ் தீரனின் தாய். ஐம்பத்தைந்து வயதை நெருங்கி இருந்தவர் கொஞ்சம் சதைப்போட்டிருக்க முன்னேற்றி முடியோடு கொஞ்சம் நரை கொண்டிருந்தவர்.
பாலை அவன் கையில் கொடுத்தவர் அவனருகே அமர்ந்து அவன் தலையை தடவியவாறே
"கண்ணா இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே இருக்க போற. எனக்கும் வயசாகுறது. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்த்து என் பேரப்பிள்ளைகளை கொஞ்சனும் என்று ஆசைகள் இருக்காதா... இதுவரை பார்த்த பொண்ணுங்க வேணாம் இன்னைக்கு தரகர் வந்திருந்தார். நிறைய பொண்ணுங்க போட்டோ குடுத்திட்டு போனார். அவற்றை பாரு. பிடிச்சிருந்தால் பார்க்க போகலாம் கண்ணா...இல்லை உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணு யாரவது இருந்தா சொல்லு போய் பாக்கலாம்."
என்க பாலை பருகியபடி கேட்டுக்கொண்டு இருந்தவன் கண்ணில் காரணம் இன்றி மின்னி மறைந்தாள் ரதிப்ப்ரியா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro