9
பழைய நினைவுகள் மனதில் அசைப்போட துவங்கின..அந்த நினைவுகள் எல்லாம் அவள் மறக்க நினைத்தவை, ரவிக்குமார் என்றதும் அந்த நினைவுகள் எட்டிப்பார்த்தன..
அது ஒரு அழகான மாலைப்பொழுது பெண்பார்க்க வருகின்றனர் என்ற செய்தி பரவவே தமிழ்ச்செல்வியை அலங்கரித்து விட்டு காத்துக்கிடந்தனர்.தலையில் பூச்சூடி கழுத்தில் மாலையேரும் தருணம் தன்னை நெருங்கிவிட்டதோ என்ற ஆனந்தம் அவள் மனதில் கமழ ஆரம்பித்து சில நொடிகளில் சுக்குநூறாய் உடைந்தது.
"எங்களுக்கு,உங்கள் இளைய பொண்ணு கலையைத் தான் பிடித்திருக்கிறது. அவளை தான் பெண்பார்க்க வந்திருக்கிறோம் என்று கூறிய அடுத்த கணமே அவளுடைய அந்த கல்யாண கனவு சுக்குநூறாய் போனது. அக்காள் இருக்கும் போது தங்கையை பிடித்திருக்கிறது என்று கூறுவது எவ்வளவு பெரிய வலி ,அதை அனுபவிக்கும் மனதிற்கு அல்லவா தெரியும்..
தமிழ்ச்செல்வி மட்டுமல்ல வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ந்தே போனர். அவர்கள் கூறிய அடுத்தநொடி தமிழ்ச்செல்வி வீடடு அறையினுள் புகுந்து தாழிட்டு அழத்துவங்கினாள். தங்கை கலையரசியோ எதுவும் புரியாமல் "எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் நான் படிக்கனும் இன்னும் "என்று கூறிவிட்டு தாயின் பின்னே பவ்வியமாக நின்றுக்கொண்டாள்.
"அப்படினா உங்கள் இளைய மகளுக்கு படிப்பு முடிந்த உடனே சம்மந்தம் பேசிக்கலாம் அப்ப நாங்க வருகிறோம் என்று ரவிக்குமார் குடும்பம் விடைபெற்று சென்றனர்"
"அக்கா.." என்ற குரலில் தெளிந்தவளாய் "சொல்லு டி கலை உனக்கு கல்யாணத்தில் சம்மந்தம் தானே"? என்று வினவ..
"அக்கா..எனக்கு மாப்பிள்ளை யை பிடித்திருக்கு என்றாலும் சில வருடங்களுக்கு முன்பு உன்னை வேண்டானு சொன்னவங்களை எப்படிக்கா நான் வேணும் என்று சொல்வது"என்று அக்காவின் கரங்களை பிடித்தவாறு கூற..
"அடிப்போடி மக்கு, அவங்களுக்கு உன்னை பிடித்துபோயிருக்கு,அதுக்கு தான் என்னை வேண்டாம்னு சொன்னாங்க..அப்படியிருக்க உன்னை நல்லா பாத்துப்பாங்க,நீ தான் வேண்டும் என்று நம்ப வீட்டை தேடி வந்து பொண்ணு கேட்டுருக்காங்க அப்பவே புரியலை அவங்களுக்கு நீ தான் வேண்டும் என்று" என சொல்லத்துவங்கியவள் தனது தங்கையின் கைகளை இருகப்பற்றிக்கொண்டு "எதுவும் யோசிக்காத தைரியமா கல்யாணம் பண்ணிக்கோ" என்று சின்ன புன்முறுவலுடன் கூற இதை கவனித்த அமுதன் இவர்களை குறுக்கிட்டு "என்ன ரொம்ப எமோஷனல் சீன் ஓடுது போல" என்று கிண்டலடிக்க "அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா,ஆங்..சொல்ல மறந்துட்டேன் நாளைக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணணும் அக்காவை இங்க விட்டுவிட்டு போங்க மாமா..ப்ளீஸ்"என்று தன் மாமனிடம் கெஞ்சும் தோரணையில் கூற அதற்கு ஒப்புக்கொண்டு சரி என்று அவனும் தலையசைக்க அன்று தமிழ் அங்கேயே தங்கிவிட்டாள்.
அவளை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் ரங்கநாயகி"எங்கடா தமிழை காணோம் என்று கேட்க" நடந்ததை சொல்லிவிட்டு இரவு தன் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தபடி எதையோ சிந்திக்கலானான்.
"அம்முலு உன் மனசுக்குள் நிறைய வேதனை இருக்கும் போல,பெண்பார்க்க விஷயத்தில் இருந்து இன்று மகப்பேறு வரை அனைத்திலும் உன்னுடைய வேதனை உன்னுடன் பயணிக்கிறது" என்று வருந்தியவாறு வலது பக்கம் திரும்பினான்.
அங்கு ஒரு நாவல் புத்தகம் இருந்ததை கண்டு அதை கையில் எடுத்து பார்த்தான் "என் கணவன்" என்ற தலைப்பில் ஒரு கதை அதை எழுதியவர் எவருமில்லை நம்முடைய தமிழ்ச்செல்வி தான் என்பதை உணர்ந்தவன்.
'தமிழு உனக்கு கதை எல்லாம் கூட எழுத வருமா" என்று நினைத்து அந்த புத்தகத்தை புரட்டி பார்க்க மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களை அவளுடைய கற்பனையுடன் கலந்திருப்பதை கண்டு புன்முறுலிட்டான்.
'இவளுடைய திறமை முடங்கி போகக்கூடாது எதாவது பண்ணணுமே..ம்ம்ம் என்ன பண்ணலாம் என்று யோசிக்க அப்போது தான் நினைவுக்கு வந்தது ஒரு தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுத ரைட்டர் தேவை என்பதை தன் நண்பன் கூறியது நினைவுக்கு வந்தது...உடனே தொலைபேசி மூலம் நண்பனை தொடர்புக்கொண்டு பேசினான்.
"ஆமாம் அமுதன் உன் மனைவியை அழைச்சிட்டு எங்க சேனலுக்கு நேரில் வா, மத்தது விவரமாக பேசிக்கலாம்"என்று போனை வைக்க அவனுக்கு மனைவியை மகிழ்வைக்க இதை விட வேற வாய்ப்பு கிட்டாது அதனால் வர திங்கள் கிழமை அவளை அழைச்சிட்டு சேனலுக்கு போயிடனும்.என்று நினைத்தவாறு படுத்து உறங்கினான்.
மறுநாள் காலை விடிந்ததும், அக்கா தங்கை இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு ஷாப்பிங் செய்ய புரப்பட்டனர் வெகு நாட்களுக்கு பிறகு அந்த தி.நகர் பனகல் பார்க்கில் காலடி எடுத்து வைத்தனர்
"ரொம்ப நாள் ஆச்சு டி கலை..நம்ப இங்க வந்து" என்றாள் தமிழ்.
"ஆமாம் கா உனக்கு நியாபகம் இருக்கா நீ காலேஜ் படிக்கிறப்ப வாரத்தில் ஒருமுறையாவது இங்கு வந்து செல்வோமே " என்று பழைய நினைவுகளை நினைவுக்கூறியபடி இருவரும் துணிக்கடையினுள் நுழைந்தனர்.
ஏனோ இவர்களை யாரோ பின் தொடர்வது போல ஓர் உணர்வு தமிழ்ச்செல்வி க்கு தோன்றியது ஆனால் பெரிது படுத்திக்கொள்ளவில்லை...
"அக்கா என்ன ஆச்சு? திடிரென ஒரு மாதரி ஆயிட்ட"என்று வினவ
"ஒன்றுமில்லை சும்மா தான்"
"இல்லையே ஏதோ போல இருக்கே"
"அட நீ வேற ஏண்டி...நம்பள யாரோ ஃபாலோ பண்றாங்க என்று தோனுது"என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல..
"ம்ம்ம் அது சரி இனி நம்பள ஃபாலோ பண்ணணும்னா,ஒன்று அமுதன் மாமாவா இருக்கனும் இல்லை என்றால் மிஸ்டர் ரவிக்குமாரா இருக்கனும் வேற யாருக்கா நம்பள பின்தொடர போறாங்க என்று நகைக்க"
"ஒரு பலத்த சிறிப்புடனும் ஏதோ தெளிவு வந்த உணர்வோடும் ஆமாம் ல நான் ஒரு லூசு எதையோ நினைச்சு பயப்படுறன்"என்று தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டு தங்கையுடன் வாங்கும் படலத்தில் கலந்து கொண்டு அந்த கடையில் இருக்கும் மொத்த புடவையையும் அலசிவிட்டனர்.
"கலை நான் அந்த செக்ஷனில் புது டிசைன் இருக்கா என்று பார்த்து விட்டு வருகிறேன். "என்று தமிழ்ச்செல்வி விடைபெற்று செல்ல மறுநொடியே கலையரசியை நெருங்கிய ஒருவன் பின்னால் இருந்து தோளை தட்டிவிட்டு மறைய..
'ம்ம்ம் யாராக இருக்கும்' என்று நினைக்க..சுற்றி முட்டி பார்த்தாள் ஆனால் யாரும் தென்படவேயில்லை..
மறுபடியும் அவள் கவனம் சேலையில் சென்றது மீண்டும் அந்த நபர் அவள் தோளை தட்டிவிட்டு மறைந்து கொள்ள'அச்சோ அக்கா சொன்ன மாதிரி யாரா இருக்கும்' என்று நகத்தை கடித்தவாறே யோசிக்க..
"மேடம் இந்த சாரி ஓகேவா பில் போட அனுப்பவா " என்று விற்பனையாளன் குரல் கொடுக்க "சரி போடுங்கள்" என்று ஒப்புதல் அளித்துவிட்டு அதே இடத்தில் எதையோ யோசித்தபடி நின்றிருக்க..
"எக்ஸ்கியூஸ் மி" என்று ஒரு குரல் அவளைத் திரும்பி பார்க்க வைத்தது..
அவர்..
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro