4
அந்த குடுகுடுப்புக்காரனின் பேச்சை தன் செவிகளில் வாங்ஙியப்படி குளிர்சாதன பெட்டியில் இருக்கும் தண்ணீரை எடுத்து பருகலானாள்.
என்னவோ சொன்னாரே "அதற்கான காலம் இன்னும் வரவில்லை" என்று அப்படியானால் காலம் கைக்கூடும்போது நான் தாய்மை அடைவேனா?"என்பது போல் மனதிற்குள் வினா எழுப்பியப்படி அமர்ந்தாள்..
தூக்கத்தில் பக்கத்தில் இருக்கும் தன் மனைவி மீது கைபோட நேர்ந்தபோது தான் தெரிந்தது அவள் எழுந்துவிட்டாள் என்று கண்களை கசக்கியபடி சுற்றிமுற்றி பார்த்தான்.
"அம்முலு" என்றழைக்க அவனுடைய குரலில் தெளிந்தவள் "இதோ தண்ணீர் குடிக்க எழுந்தேங்க வந்திடுறன்" என்றபடி விருவிருவென நடந்தாள்.
"என்ன ஆச்சு நல்லா தானே தூங்கிட்டு இருந்த?" என்றான் அமுதன்.
"குடுகுடுப்புக்காரனின் சத்தம் விழிப்பை ஏற்படுத்தியது அதான் எழுந்து தண்ணீர் பருகிவிட்டு படுக்கலாமேனு" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற அவனும் கிளிகிளித்தவாறே "சரி சரி தூங்கு, நீ சட்டென்று காணோம் னு பதறிட்டேன்" என்று சொல்லி முடித்துவிட்டு அவனும் படுத்தான். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கை போட்டப்படி உறங்கினர்.
பொழுது விடிந்ததும் நம்முடைய கதாநாயகி தமிழ்ச்செல்வி எழுந்து வீட்டுவாசலில் தண்ணீர் தெலித்து கோலமிட கோலமாவை எடுக்க வந்தபோது குமரனின் காலை தெரியாமல் மிதித்து விட "அய்யோ அண்ணி என் காலு" என்று கத்த "சாரி டா குமரா"என்றுரைக்க.. குமரனின் கத்தலில் அமுதன் எழுந்துவிட வெடுக்கென்று எழுந்து தலையனையை எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்று மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.
இவள் கோலமிடும் போது பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியும் வெளியே பெரியதாக கோலமிட்டுக்கொண்டிருக்க அதை கண்டவள் "என்ன மாமி இன்னைக்கு கோலம் நீண்டலாக இருக்கு"என்று பேச்சை துவங்க "அதான் சொன்னேனே டி மா,மகளுக்கு வலைகாப்பு னு"என்று சொல்லி முடிக்க..
"ஐயோ ஆமா ! இன்னைக்கு இதுக்கு வேற போகனுமே" என்று யோசித்தவள். வேகவேகமாக அமுதனுக்கு சாப்பாடு கட்டிகொடுத்துவிட்டு குமரனை கல்லூரி விஷயமாக வெளியே அனுப்பி விட்டு தர்மலிங்கத்தை அழைத்துக்கொண்டு அந்த விழாவுக்கு சென்றாள்.
விழாவில் அவளை வரவேற்றவர்கள் அவளை பங்கஜம் மாமியிடம் அனுப்பி வைக்க..பங்கஜம் மாமி அவளுக்கும் தலைநிறைய பூச்சூடி தன் மகளின் அருகில் அமரவைத்து நிலங்கு வைக்க தமிழுக்கு ஒரே ஆச்சரியம்
"மாமி என்ன இதெல்லாம்"என்று வினவினாள்.
"ஒன்றுமில்லடி மா இது ஒரு சம்பிரதாய நம்பிக்கை.. வலைகாப்பு செய்பவரின் அருகில் அமரவைத்து நிலங்கு வைத்தாள். அந்த நேர்மறை அதிர்வுகள் குழந்தையில்லா அந்த பெண்ணிற்கு ஏற்படட்டு விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று"என விளக்க தமிழுக்கு ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி.
"அப்படியா மாமி" என்று வியப்பானாள்.
"ஆமாம் தமிழ்" என்று ஆசையாக அவள் கண்ணத்தை கிள்ள அந்த கண்கொள்ளா காட்சியை பார்த்ததும் தர்மலிங்கத்திற்கு கண்ணீரே வந்துவிட்டது. தன் மருமகளும் மாசமானால் இதைப்போல் சிறப்பாக வலைகாப்பு நடத்திவிட வேண்டும் என்று மனதிற்குள் ஓர் கற்பனை கோட்டையை கட்டினார்.
அன்று மாலை தமிழும் அமுதனும் ரிப்போர்ட் வாங்க மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவமனையில் கூட்டம் சற்று குறைவாக இருக்கவே மருத்துவரையும் சந்தித்து விட்டு போகலாம் என்று மருத்துவரின் அறையினுள் சென்றனர்.
"வாங்க தமிழ் .."என்று மருத்துவர் புன்னகையிக்க.."குட் ஈவ்னிங் மேடம்"என்று கூறிவிட்டு நாற்காலியில் அமர்ந்தாள். அமுதனும் உடன் அமர மருத்துவர் அந்த ரிப்போர்ட் வாங்கி பார்த்து விட்டு.
"ம்ம்ம் எல்லாம் சரியாகத்தான் இருக்கு.சரி எதுக்கும் வைட்டமின் மாத்திரைகள் தருகிறேன்,மிஸ்டர் அமுதன் உங்களுக்கு சில மாத்திரைகள் தரேன் இரண்டு பேரும் தொடர்ந்து மாத்திரையை சாப்பிட்டு வாருங்கள்.. நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கோங்க அப்றம் வாரத்தில் இரண்டு முறை நீங்கள் இருவரும் ஒன்றாக இருத்தல் அவசியம். என்று அறிவுரையை கூறிவிட்டு"அனுப்பி வைக்க...
வெளியே வந்த நம்ப தமிழ் "என்னங்க எந்த பிரச்சனையும் இல்லை அப்படிங்கிறாங்க நிஜமாவே ஒன்றுமில்லை போலருக்கு"என்று சந்தேகமாய் கேட்க அவனும் சிரித்து விட்டு "பிரச்சினை இருக்கோ இல்லையோ இப்போதைக்கு டாக்டர் சொன்ன அறிவுரையின் படி நடந்துகொள்வோம் தமிழ்" என்று ஆறுதலாய் தோள்மீது கைவைத்தபடி கூற..அவளும் சற்று தெளிந்தவளாய் அங்கிருந்து இருவரும் வீட்டுக்கு வந்தடைந்தனர்.
இப்படியே நாட்களும் நகர்ந்துகொண்டே போனது. பகுதிநேர படிப்பிற்கான நாட்களும் வந்தது. அவளுக்கென தனி ஆட்டோவை பேசி அனுப்பி வைத்தான் அமுதான். மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை வகுப்பு. காலையில் வழக்கம் போல குமரன் தன்னுடைய கல்லூரிக்கு சென்று வந்திடுவான். அவன் வருவதற்கும் இவள் கிளம்புவதற்கும் சரியாக இருக்கும். இரவு உணவை தினமும் தர்மலிங்கம் செய்துவிடுவார். ஏதோ தட்டு தடுமாறி சப்பாத்தியோ இட்லியோ செய்து வைத்துவிடுவார்.
முதல் நாள் வகுப்பன்று தமிழ்ச்செல்வி உள்ளே நுழைய ஆண்கள் பெண்கள் என வேறுபாடு இல்லாது அனைவரும் அவரவர் தெரிந்தவர் பக்கத்தில் அமர்ந்தனர். இவளுக்கு எங்கு அமர்வது என்று தெரியவில்லை...
"மிஸஸ் தமிழ் வாங்க இங்க வந்து உக்காரலாமே" என்றது உதயனின் குரல்.
"உ..தயா நீயா? நீ எப்போடா இங்கே இன்ஜினியரிங் சேர்ந்த ?என்று பழைய நண்பனான உதயனிடம் கேள்வியை அடுக்கிக்கொண்டே போக அவனும் "நான் பதவி உயர்வு வேண்டி இன்ஜினியரிங் வந்தேன்" என்று பேச ஆரம்பிக்க டிப்ளமோவின் போது ஏற்பட்ட நட்பு மீண்டும் புதுபிக்கப்பட்டது.இப்படியே இவர்களின் நட்பும் தொடர்ந்தது.
உதயனின் நட்பும் பிறகு மாணவி என்கிற பட்டமும் அவளுக்கு மகுடம் சூட்டியது போல இருந்தது. தினமும் கல்லூரி வரும் அந்த இரண்டு மணி நேரமும் ஒரு புதிய உலகிற்குள் செல்வது போல உணர்ந்தாள். இப்படியே அவளுடைய கல்வி வாழ்க்கையும் தொடர்ந்தது. உதயனும் நிச்சயமானவன் ,இவளும் திருமணமானவள் எனவே இவர்களின் நட்பில் சற்று இடைவேளி இருக்கத்தான் செய்தது.
வீட்டில் அவ்வப்போது உதயனின் பேச்சு எடுபடவே அமுதனின் எண்ணம் சற்று தடுமாறியது. "என்ன இந்த திடிர் ஆண்நண்பன்? டிப்ளமோ நட்பாகவே இருந்தாலும் திருமணமானவளுக்கு எதுக்கு இப்படி ஓர் நட்பு" என்று அவனுக்குள் எழ அன்று பட்டென்று போட்டு உடைத்தான்.
"தமிழு...அந்த உதயா" என்று ஆரம்பிக்க ..
"என்னங்க உங்களுக்கு உதயா பற்றி எதாவது தெரிஞ்சிக்கனுமா"என்று தடுமாறி கேட்க.. அவள் கைகளை மெல்ல பற்றியவன் "கொஞ்சம் பார்த்து நடந்துக்க யாராவது தப்பா எதாவது சொல்லிட்டாங்க என்றால் என்னால் தாங்க முடியாது" என்றுரைக்க அவளுக்கு கோபமே எழுந்தது.
"ஏங்க ஏன் இப்படி நினைக்கிறிங்க? எங்கள் நட்பை தப்பா சொல்ல என்ன இருக்கிறது? நாங்கள் அப்படி எதுவும் நடந்துக்கவே இல்லையே "என்று கோபத்தின் வெளிப்பாட்டில் அவள் உரைக்க அவளை சமாதானம் செய்ய அவள் கண்ணத்தை தன் கரங்களால் ஏந்தியபடி "இல்லை அம்முலு அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று முன் எச்சரிக்கையா இரு அப்படினு சொல்ல வந்தேன்" என்று சொல்லி முடிக்க அவளோ கோபத்தை மறந்தவளாய் "இனி இருக்கும் கொஞ்சம் நெஞ்சம் நட்பிலும் மேலும் இடைவேளி கொள்வோம்" என்று மனதில் நினைத்தவாறு அவன் தோளில் சாய்ந்தாள்.
உண்மையில் அவனுக்கு அவள் மீது சந்தேகம் இல்லை ஆனால் சுற்றி நடக்கும் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளை பார்க்கும் போது ஏனோ ஓர் பயம். தன் என்னவள் தனக்காகவே மட்டும் என்று பொஸஸிவ் வேறு இவையெல்லாம் சேர்த்து தான் அவனை அப்படி பேசவைத்தது. அவனுடைய பயம் நியாயமானது என்று கூறவும் முடியாது அதை சமயம் தேவையற்றது என்றும் சொல்ல முடியாது.
வழக்கம் போல் உதயனின் பக்கத்தில் அமருபவளும் சற்று இடைவேளி விட்டு அமர்ந்தாள். எப்போதும் அவனுடன் எதாவது பேசிக்கொண்டு இருப்பவள் ஆம்,ம்ம்ம், இல்லை போன்ற ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.
"என் மேல எதாவது தப்பு இருக்கா தமிழ் ஏன் விலகி போற " என்ற கேள்விக்கு அவளால் பதிலளிக்க முடியவில்லை. அவளுடைய பதில் எதுவாக இருப்பினும் பரவாயில்லை என எண்ணிக்கொண்டவன்
அவள் கையில் தனது அழைப்பிதழை திணித்தான் அதில் உதயா வெட்ஸ் வீணா என இருக்க அதை ஒரு கணம் பார்த்தவள் உதயாவின் கை குலுக்கி "கங்க்ராட்ஸ்"என தெரிவிக்க அவனோ நன்றி தெரிவித்து விட்டு"சரி சரி கல்யாணத்துக்கு கண்டிப்பாக வரனும் உன் குடும்பத்தோட"என்று கூறிவிட்டு பைக்கை முறுக்கியபடி கிளம்பினான்.
அவனுடைய திருமணத்திற்கு அவளால் போக இயலுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro