2
பொறுமை நம்பிக்கை இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒருமுறை அவள் உச்சரித்து பார்த்த பின்பு தான் புரிந்தது இவ்வளவு நாட்கள் அதை இழந்துவிட்டோம் என்று..
"தமிழ்" என்ற அழைப்பில் தெளிந்தவள் தனது காலணியை அணிந்துக்கொண்டு அவனுடன் பைக்கில் ஏறினாள்.
அந்த குப்பைகிடங்கை மீண்டும் கடக்க நேரிட்டது,எதர்ச்சையாக அதை நோட்டமிடும்போது தான் அங்கு ஒரு 50வயது மதிக்கதக்க ஒருவர் எதையோ தேடிக்கொண்டு இருப்பதை உணர்ந்தாள் தமிழ்ச்செல்வி.
"யார் இவர் ,இரண்டு நாட்களா நானும் பார்க்கிறேன் எதையோ தொலைத்துவிட்டதுபோல் அல்லவா தேடுகிறார்" என்று அவளுக்குள் முனுமுனுக்க..
"அம்முலு.. என்னடா யாரை பற்றி சொல்ற என்று அமுதன் கேட்க"
"இல்லைங்க,அதோ அந்த ஆளு இரண்டு நாளா ஏதோ தேடிட்டு இருக்கிற மாதிரியே தெரிது அதான். இங்கே அப்படி என்ன இருக்கு என்று புரியவில்லை"என்று அவள் கூற அதற்கு அமுதன் சிரித்துக்கொண்டே "தமிழ் அதெல்லாம் உனக்கு எதுக்கு. அவருக்கு என்னவோ யாருக்கு தெரியும்.. இப்படி மத்தவங்க என்ன பன்றாங்கனு கவனம் செலுத்த ஆரம்பிச்சினா நீ நிம்மதியாவே இருக்க முடியாது"என்று அவளிடம் எதார்த்தமான தோரணையில் கூற அதை அவள் மனதில் உள்வாங்காதவாறு மறுபடியும் அந்த நபரை கவனித்தவாறே இருந்தாள். எப்படியோ அந்த இடத்தை கடந்தபின்பு சிறிது தூரத்தில் வீடு வந்தே சேர்ந்தனர்.
வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மாமனார் தர்மலிங்கம்"என்ன மருமவளே கோவில் போயிட்டு நிம்மதியை தேடிட்டு வருவேனு பார்த்தால் எதையோ யோசிச்சிட்டு வர"என்று கேட்க அதைக்கேட்டு சிரித்த அமுதன் "நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க அப்பா,இப்படித்தான் இவள் எதையாவது யாரைபற்றியாவது சிந்தித்து கொண்டே தனது நிம்மதியை இழக்கிறாள்"என்று வெடுக்கென்று கூற..
"போதும் போதும் வாங்க உள்ள" என்று சிரித்துக்கொண்டே தமிழ் உள்ளே சென்று இரவு உணவை தயார் செய்ய துவங்கினாள்.
"மாமா கேழ்வரகு ரொட்டி பன்னவா?"என்று ஒருமுறை அவரிடம் அபிப்பிராயம் கேட்க தர்மலிங்கம் சரி என்பது போல் தலையசைக்க கேழ்வரகு ரொட்டிக்கு தேவையான பொருட்களை எடுத்து மேஜைமேல் வைக்கவும் சமையலறையினுள் அமுதன் நுழையவும் சரியாக இருந்தது.
"அம்முலு நான் உதவி பன்னவா"
"வேண்டாம்"என்று அவள் வெடுக்கென்று பதிலளிக்க..
"நீ ஏன் இப்படி இருக்க? ச்ச எனக்கே கஷ்டமா இருக்கு தமிழ்,பலநேரங்களில் கோபமாவும் வருது நீ பன்ற செயல்"என்று அவன் விவரிக்க..
"இப்ப நான் என்னங்க பன்னிட்டேன்"என்று அவனை எதிர்நோக்கி கேட்க அவனோ எதுவும் பேசாமல் சமையலறையை விட்டு வெளியே வந்து தாழ்வாரத்தில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்தான்.வாழ்க்கையில் பிடிமானமே இல்லாது போல் இருக்கும் தன் மனைவியை நினைத்து வருந்தினான்.
திருமணம் முடிந்து எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று நினைத்தோமோ அப்படியெல்லாம் அமையவில்லையே,என் நண்பர்கள் எல்லாம் அவரவர் மனைவியுடன் கொஞ்சி குழாவுவதும்,செல்பி எடுத்து முகநூலில் போடுவதும் இதையெல்லாம் பார்க்கிறப்ப எனக்கு மட்டும் ஆசையிருக்காதா என்ன... இவள் எப்ப பாரு தேமேனு தான் உண்டு தான் வேலையுண்டு என்று இருப்பதும்,எப்ப பாரு யாரைபற்றியாவது சிந்தித்து கொண்டு கவலையை வளர்த்துக்கொள்வதும் நல்லாவா இருக்கு,என்று மனதிற்குள் வெதும்பினான்.
இரவு உணவு உண்டபின் வழக்கம் போல் அறைக்கு சென்று சிறிது நேரம் அங்கிருக்கும் பால்கனியில் நின்றபடி நிலாவை ரசித்துக்கொண்டிருந்தான். தனது வேலையை வேகமாக முடித்த தமிழ்ச்செல்வி அறையினுள் நுழைந்தபடியே "என்னங்க வழக்கம் போல இன்றைக்கு உறக்கம் வரவில்லையோ" என்று கூறியபடி புன்னகையிக்க அவனோ திரும்பி ஒரு ஏலனப்பார்வையை செலுத்தியவன்
"உன்கிட்ட கொஞ்சம் பேசனும் தமிழ். அதான் நீ வரவரைக்கும் தூங்காமல் காத்துக்கிடந்தேன்"
"சொல்லுங்கள் என்ன விஷயம்"என்று புருவத்தை உயர்த்தினாள்.
இருவரும் அந்த பால்கனியில் நின்றபடி பேச்சை துவங்கினர்.
"அம்முலு..நீ ஏன்டா இப்படி இருக்க?விருப்பம் கொண்டு தானே திருமணம் செய்து கொண்ட அப்படியிருக்க நம்முடைய தனிபட்ட சந்தோஷத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவே மாட்டேங்குற"என்று வினவ அவளோ அவனது கேள்வியை புரிந்து கொண்டு
"தனிபட்ட விருப்பம் என்றால் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுப்பதும், இரவில் தனியே நிலாநடை மேற்கொள்வதா?"என்று மறுபடியும் அவனிடமே கேள்வியை செலுத்த அவனோ தலையசைத்தபடி "கிட்டத்தட்ட அப்படி தான்.. இங்கே பாரு தமிழ் மறுபடியும் கேள்வியை என்னிடம் கேட்காமல் நீயே பதில் சொல்லு"என்றான்.
"என் மனசுல இருக்கிறதை இப்ப உங்கள் கிட்ட நேரடியாக சொல்லிவிடுகிறேன். இங்க பாருங்க அமுதன் நமக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆயிடுச்சு இன்னும் குழந்தை இல்லை.. வெளியே நாலு இடங்களில் சந்திக்கும் போது இன்னும் தித்திக்கும் செய்தி எதுவும் இல்லையா என்று சமுதாயம் என் மீது அம்பு போல் கேள்வியை பாய்க்கும் போது என்னால் என்ன பதில் கூற முடியும்.. இல்லை இல்லை என்று எத்தனை நாட்கள் சொல்வது. என்னங்க நம்ப செயற்கை முறை கருத்தரிப்பு பன்னிக்கலாமா?"என்று தன் மனதில் பட்ட ஆசையை பட்டென்று அவள் போட்டு உடைக்க..
"என்ன? செயற்கை முறை கருத்தரிப்பா..எது இந்த ஐ.யு.ஐ, ஐ.வி.எப் என்று சொல்வார்களே அதுவா? போடி பைத்தியம் அதெல்லாம் செய்ய வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை இன்னும் காலம் இருக்கிறது. திருமணம் ஆகி மூன்று வருடத்திலேயே இப்படி யாராவது போவார்களா? நாம் எடுக்கும் ஹோமியோபதி சிகிச்சையில் முன்னேற்றம் இருக்கிறது தானே கொஞ்சம் பொறு பிறவு மேற்கொண்டு யோசிப்போம்" என்று கூற.
"அமுதன் ப்ளீஸ் கருத்தரிப்பு மையத்தில் ஒருமுறை பேசிட்டு தான் வருவோமே ஒரு தெளிவு கிடைக்கும் அல்லவா?"என்று அவனிடம் கெஞ்ச அவனோ தன் மனைவியின் பிடிவாதத்தை புரிந்து கொண்டு "சரி போகலாம்"என்று சம்மதித்தான்.
அவன் சம்மதம் சொன்ன மறுகணமே அவளுக்கு முகம் மலர்ந்தது. அந்த மலர்ச்சி இதுவரை அமுதன் காணாத ஒன்று. மணி 10.30 ஆக இருவரும் படுக்கையில் தலைசாய்ந்தனர். படுத்த சிலநொடிகளிலே கண் அசர்ந்தான் அமுதன். ஆனால் அவளோ நாளை எந்த கருத்தரிப்பு மையத்திற்கு போவது எந்த மருத்துவரை சந்திப்பது போன்ற தகவல்களை கூகுள் மூலம் தேடிக்கொண்டு இருந்தாள். ஒருகட்டத்தில் முடிவு எடுத்தவள் அந்த பி. எம். சி கருத்தரிப்பு மையத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்து தன் கைபேசியை வைத்துவிட்டு உறக்கத்திற்கு சென்றாள்.
இவள் உறங்கிய சிலமணி நேரத்தில் அமுதனுக்கு விழிப்பு வந்தது. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு அவள் உறங்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.
"அம்முலு குழந்தை இல்லாத குறையினால் தான் என்னிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தாயா வெளியிடங்களுக்கு வராமல் தவிர்த்தாயா. உன் நிம்மதி அதில் இருக்கிறது என்றால் அதற்கு நிச்சயம் துணையாக இருப்பேனடி செல்லமே என்று அவள் நெற்றியில் முத்தம் பதித்து விட்டு மீண்டும் உறங்ச்சென்றான்"
மறுநாள் பொழுது விடிந்தது.
குளியலறையில் அவள் நீராடும் சத்தம் கேட்டது.. இன்று மருத்துவமனை செல்லவிருப்பதால் சீக்கிரமே எழுந்து குளிக்கச்சென்று விட்டால். குளியலை முடித்து ஒரு நல்ல புடவையை உடுத்திக்கொண்டு கிளம்பினாள்.
"என்னங்க.. இந்த புடவையில் நான் எப்படி இருக்கேன்" என்று வினவ அவனுக்கு சிரிப்பே வந்துவிட்டது ஏனெனில் மற்ற இடங்களுக்கு செல்லும்போது கூட இப்படி கேள்வி கேட்காதவள் இப்போது மருத்துவமனை செல்ல இவ்வளவு ஆர்வமா என்று வியந்தான். உண்மையில் ஆர்வம் மருத்துவமனையில் இல்லை..குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ளது என்பதை புரிந்து கொண்டவன் தானும் தயாராகி பைக்கை கிளப்பினான் .அவர்கள் வரவேண்டிய மருத்துவமனையை நெருங்கினான்.
"தமிழ் இறங்கு நான் பைக்கை பார்க் பன்னிட்டு வரேன்." என்று கூறி முடித்தவுடன் இவள் விருவிவென உள்ளே நுழைந்து வரவேற்பரையில் டோக்கன் வாங்கிக்கொண்டு அமர்ந்தாள். அவளுக்கு முன்னே 20 டோக்கன் இருக்க...எப்படா நாம டாக்டரை பார்ப்போம் என்று யோசித்துக்கொண்டே சுற்றி முற்றி பார்த்தாள். அங்கு ஏக்கங்கள் நிறைந்த மனங்களும்,வாடிய முகங்களும் காணப்பட்டன
"ச்ச இந்த கடவுளுக்கு கண் இல்லையோ என்னைப்போல் இத்தனை பேரை வாடவைக்கிறாரே,ஒரே ஒரு குழந்தையை மடியில் தவழ விட்டால் தான் என்ன" என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருக்க அமுதன் உள்ளே நுழைந்தான்.
சிறிது நேரத்தில் "மிஸஸ். தமிழ்ச்செல்வி" என்று நர்ஸ் கூப்பிட இருவருமாக உள்ளே சென்றனர்.
மருத்துவர் இவர்களிடம் எல்லாம் விசாரித்துவிட்டு தமிழ்ச்செல்வி க்கு செய்யும் அடிப்படை பரிசோதனை செய்துவிட்டு கையை அலம்பியவாறே..
"மிஸ்டர் அமுதன் பயப்படுற மாதிரி ஒன்னுமில்லை ,தமிழ்ச்செல்வி க்கு கொஞ்சம் கர்ப்பப்பை வாய் சின்னதாக இருக்கு,எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்துருங்க அப்றம் கருக்குழாய் பரிசோதனை யும் எடுத்துருங்க...நீங்களும் செமன் அனாலிஸஸ் டெஸ்ட் எடுத்துருங்க எல்லா ரிப்போர்ட்டும் வரட்டும் வந்தவுடன் மேற்கொண்டு என்ன செய்றதுனு யோசிப்போம்" என்று கூறிவிட இருவரும் வெளியே வந்து எல்லா பரிசோதனையையும் மேற்கொண்டு அதற்கான கட்டணத்தையும் செலுத்திவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.
வீட்டுக்கு வந்ததும் மருத்துவமனையிலிருந்து வந்த களைப்பால் எதுவும் வேலை செய்ய மனமில்லாமல் போய் தன் அறையில் புகுந்துக்கொண்டாள் தமிழ்.
"அம்முலு ஒன்னும் பிரச்சினை இல்லை நீ ரெஸ்ட் எடு இன்னைக்கு நம்ப ஹோட்டலில் வாங்கிப்போம்"என்று கூறிவிட்டு அவள் தலையை கோதிவிட்டு தனது அலுவலகத்திற்கு தயாரானான்.
"அப்பா...நீங்க உங்களுக்கும் தமிழுக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்திடுங்க..நான் எங்க ஆபிஸ் கேண்டினில் வாங்கிப்பேன்" என்று கூறிவிட்டு புறப்பட்டான்.
அவளோ ஓய்வு எடுத்தபடி எதையோ சிந்தித்து கொண்டிருக்க அவளுடைய கைப்பேசியிலிருந்து அழைப்பு வந்தது அதை எடுத்து பேசத்துவங்கினாள். எதிர்முனையில்....
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro