1
மெழுகுவர்த்தி போல் உருகிக்கொண்டிருக்கும் அவளது மனதை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டு அவளுடைய கணவன் பலமுறை தோற்றுப்போனாலும்,இன்று எப்படியாவது அவளது மனதை தேற்றிவிடவேண்டும்,எப்படியேனும் அவள் தன் சோகத்தை மறந்து தன் இயல்பான நிலைக்கு வரவேண்டும் என்று எண்ணிய அமுதன் தன் மனைவியை வழுமையாய் கூப்பிடும் செல்ல பெயரையிட்டு அழைத்தான்.
"அம்முலு..."
அந்த அழகான உச்சரிப்பில் சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த அமுதனின் மனைவி தமிழ்ச்செல்வி ஓடிவந்து "என்னங்க கூப்பிட்டிங்களா"என்று கேட்க
"ம்ம்ம் உன்னை தான் கூப்பிட்டேன்,ஒன்னுல இன்னைக்கு சாயந்திரம் சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து வந்துவிடுவேன்,நம்ப இரண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வருவோம்..என்ன சரியா?"என்று கேட்ட அந்த நொடி ,மனதிற்குள் கடவுளை அவ்வப்போது கோபித்துக்கொண்டாலும் அமுதன் அழைத்த ஒரே காரணத்திற்காக அவனுடன் சென்று வர அந்த நொடியில் சம்மதித்தாள்.
அவளுடைய சம்மதத்தை உணர்ந்தவன் அவளருகே சென்று "தமிழ் எனக்கு தெரியும் நீ இந்த கடவுள்,கோவில் இதை சார்ந்த நம்பிக்கையை தொலைத்து பல நாட்கள் ஆகின்றது ஆனால் என்று அவன் பேச்சை இழுக்க அவளோ அவன் வாயை தன் வலது உள்ளங்கையால் பொத்தி "நீங்க எதும் சொல்லவேண்டாம்,நீங்க கூப்பிட்டிங்க நான் வரேன் அவ்வளவு தான்"என்று வெடுக்கென்று கூறிவிட்டு மீண்டும் சமையலறை நோக்கி நடக்க..
"அம்மாடி கொஞ்சம் காபி கலந்து எடுத்து வா தாயி" என்ற மாமனாரின் குரலில் பரபரப்பாக காபி தயாரிக்க பாலை காய்ச்சினாள். "சரி அம்முலு நான் கிளம்புறன் ஆபிஸ்க்கு"என்று புறப்பட்டான் அமுதன். வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்த பைக்கை கிளப்ப எத்தனிக்கும் போது ஓடிவந்த தமிழ்ச்செல்வி "என்னங்க உங்க லஞ்ச் பாக்ஸ் மறந்துட்டிங்க"என்று இன்முகத்துடன் அதை அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கி பையில் திணித்து கொண்டு தலையசைத்துவிட்டு உர்ரென்று பைக்கை முறுக்கி கிளம்பினான்.
"அச்சோ பால் காயவச்சது பொங்கிடுச்சே" என்று பதபதைத்து சட்டென்று பாலை இறக்கி ஒருபக்கம் வைத்துவிட்டு உடனே அடுப்பை சுத்தம் செய்தவள்,தனது அடுமணையின் அலமாரியில் இருக்கும் காபிதூள் டப்பாவை எக்கி எடுத்து அதை பாலுடன் சக்கரையும் சேர்த்து ஆத்தியபடியே தன் மாமனார் தர்மலிங்கம் இருக்கும் அறையை நோக்கி நடந்தாள்.
"இந்தாங்க மாமா காபி,சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு"என்று புன்னகையிக்க.. அவரோ இரும்பிக்கொண்டே "பரவாயில்லை தாயி நீயும் ஒத்தைல எவ்வளவு வேலைதான் இழுத்துப்போட்டு செய்யுவ,உன் கஷ்டம் எனக்கும் புரியும் மா,அந்த சண்டாலி உன் கூட இருந்தால் தான் என்னவான் கோபக்காரி கோபித்துக்கொண்டு கிராமதிற்கே சென்றுவிட்டாள்" என்று தன் மனைவி ரங்கநாயகியை வசைப்பாடியவாறே அந்த காபியை வாங்கி பருகலானார்.
"விடுங்க மாமா அத்தையோட குணம் எனக்கு தெரியாதா என்ன"என்று சொல்லிவிட்டு வாஷிங் மெஷினில் போட்ட துணிகளை உலர்த்திவிட்டு அப்படியே மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவள்,ரொம்ப நாட்கள் கழிந்து செடியில் மலராந்திருக்கும் அந்த ரோஜா மொட்டினை ரசித்தாள்.."வாவ் அழகா இருக்கு" என்று ஒரு நொடி அதை பாராட்டி விட்டு கீழே இறங்கி வந்தாள்.
வீட்டு வேலைகளை எல்லாம் செய்து முடித்தவளுக்கு களைப்பு முகத்தை வாட்டியது "என்ன செய்யலாம்" என்று யோசித்தவளுக்கு சட்டென பீரோவில் இருக்கும் தனது ப்ளைன் நீலநிறப்புடவை நியாபகத்திற்கு வந்தது.
"இந்த புடவைக்கு எம்ராய்டரி போட்டு வைப்போம். சாயந்திரம் கோவிலுக்கு போறப்போ இதை கட்டிட்டு போவோம்"என்று அந்த புடவையை எடுத்து எம்ராய்டரி வொர்க் செய்ய ஆரம்பித்தாள்.
"அக்கா...கேஸ் என்று சிலிண்டர் காரன் வாசலில் கத்துவதை கேட்டவள் புடவையை ஓரம் போட்டுவிட்டு கேஸ் புக்கினை எடுத்துக்கொண்டு கையில் காசும் எடுத்துக்கொண்டு அவனிடம் அந்த கேஸ் புத்தகத்தில் கையெழுத்து இட்டு வாங்கியவாறு"தம்பி சிலிண்டர் அந்த பக்கம் வச்சிருங்க"என்று கூறினாள்.
"அக்கா....கொஞ்சம் தண்ணீர் தாங்களேன்" என்று கேட்டு தண்ணீர் வாங்கி குடித்தவன் "ரொம்ப தாங்க்ஸ் கா,எத்தனையோ வீட்டில் சிலிண்டர் சப்ளை பன்றோம் ஆனால் யாருமே ஒரு சொம்பு தண்ணீர் கூட கொடுப்பதில்லை ஆனால் நீங்க உங்கள் வீட்டில் ஒருத்தனா மதிச்சு வீட்டின் முற்றம் வரைக்கும் அனுமதிக்கிறிங்க என்று அவளை ஒரு கணம் பாரிட்டிவிட்டு சென்றான்.
பல நேரங்களில் இந்த மாதிரியான பாராட்டுக்கள் அவளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மீண்டும் வேலையை உற்சாகமாக செய்வாள். அந்த எம்ராய்டரி வொர்க் மிகவேகமாக செய்து முடித்தவள் அந்த புடவையை மடித்து பீரோவில் வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க படுக்கையில் சாய்ந்தாள்.
படுத்தவளுக்கு உறக்கம் என்று பெரியதாக எதுவும் வரவில்லை ஆனால் அசதியில் பாதிகண்ணில் ஒரு குட்டி தூக்கம் போட்டாள். பிறகு மதியநேர உணவினை மாமனாருக்கு பரிமாறியபின்பு தானும் உண்டுவிட்டு மீண்டும் தன் அறையில் புகுந்து கொண்டிள் நேரம் கடந்துக்கொண்டே இருந்தது. மணி ஐந்து இருக்கும் ,அரக்கபரக்க மாடியிலிருந்து துணிகளை மடித்து எடுத்து வந்து மீண்டும் மாலைநேர காபியை தயாரித்து ஒருகப் அவளுக்கும் இன்னொரு கப் தர்மலிங்கத்திற்கும் தந்து மெல்ல அந்த காபின் சுவையை உணர்ந்து கொண்டிருக்கும்போது கணவன் அமுதன் வந்ததை கண்டவள் அவன் கையிலிருந்த பையை வாங்கி வைத்துவிட்டு அவனுக்கு ஒரு காபியை கலந்து எடுத்துவந்து தர அதை வாங்கி பருகியவாறே "சீக்கிரம் ரெடி ஆகிடு அம்முலு" என்றுரைக்க அவளோ வேகவேகமாக காபியை குடித்து முடித்துவிட்டு தனது அறையில் எடுத்து வைத்து தயார் நிலையில் இருந்த அந்த நீல நிறப்புடவை யை உடுத்திக்கொண்டாள்,வழக்கம் போல் சிம்பிளான ஒரு தலைபின்னல் அதில் ஒரு கால்முழம் பூ. நெற்றியில் ஒரு மெருன் நிறப்பொட்டு வைத்துவிட்டு "என்னங்க நான் ரெடி"
"ஃபைன்...வா போலாம். அப்பா நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம்"என்று சொல்லிவிட்டு இருவரும் பைக்கில் கோவிலுக்கு சென்றனர்.
இவர்கள் வீடு அமைந்திருக்கும் அந்த பிரதான சாலையை கடந்து சென்றால் அங்கு ஒரு குப்பை கிடங்கு இருக்கும். அதில் துப்புரவு பணியாற்கள் சிலர் குப்பையை பிரித்தெடுக்கும் பணியை மேற்கொள்வர். ஒருபுறம் குப்பையை சீர்படுத்தி அதை எறிக்கும் நாற்றமும் வீசும். அந்த இடத்தை கடந்து சென்றால் தான் மெயின்ரோட் வந்தடையமுடியும். வழக்கம் போல் இருவரும் அந்த சாலையை கடந்தனர்.
"ஏங்க... குப்பையை இப்படி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில தான் வந்து கொட்டனுமா என்ன?"என்று ஆதங்கபட்டாள் தமிழ்ச்செல்வி.
"என்ன பன்றது தமிழ், மாநகராட்சி என்னதான் பன்னும். எங்க பாரு காலியிடங்களை கூட ப்ளாட் போட்டு வித்துடுறானுங்க..காலி இடம் தேடி இந்த சென்னை ல தேடுனா எங்கேயும் கிடைக்காது அதான் கிடைச்ச இடத்துல குப்பை கிடங்கா ஆக்கிடுறாங்க என்று சலிப்புடன் கூறிவிட்டு வண்டியை நகர்த்தினான்"
"உண்மை தாங்க ஒருவேளை குப்பை கிடங்கு இருக்கும் இடத்தில் தான் நாம எல்லாம் வசிக்கிறோம் போல"என்று கூறிக்கொண்டவள்
"ஆமா எந்த கோவிலுக்கு போறோம் நீங்க எதுவுமே சொல்லவில்லையே?"என்று கணவனிடம் வினவ அவனோ சர்ப்ரைஸ் என்று ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க கோவில் வந்து இறங்கினர்.
அது புதிதாய் அந்த பகுதியில் திறந்த சாய்பாபா கோவில். அதுவும் அன்று வியாழக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வரிசையில் நகர்ந்தபடியே வழிபட்டனர்.பிறகு பிரசாதம் தரும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி கொண்டு ஒரு மூலையில் அமர்ந்தனர்.
"என்னங்க இந்த கோவில் புதுசா ஆரம்பித்தது போல ,பாருங்களேன் மார்பிள் டைல்ஸ் எல்லாம் போட்டு எவ்வளவு நல்லாருக்கு." என்று வியந்தாள்.
"ம்ம்ம் திடிரென உன்னை இங்கே கூட்டிட்டு வரனும்னு தோனுச்சு அதான் இங்க அழைச்சிட்டு வந்தேன்" என்றான் அமுதன்.
ஒரு சின்ன புன்னகையுடன் "பரவாயில்லைங்க..உங்களுக்குகாக தான் நான் இப்ப கோவிலுக்கே வந்தேன்"என்று கூற ..
"சரி சரி சாமி சன்னதி கிட்ட இரண்டு சொற்கள் இருந்ததே கவனித்தாயா"என்று அமுதன் கேட்க குழம்பியவள் "என்ன சொற்கள்"என்று மீண்டும் அவனிடமே கேட்க..
"பொறுமை..நம்பிக்கை இந்த இரண்டு வார்த்தைகள் தான் அங்க இருந்தது. இங்க பாரு டா அம்முலு நீ எந்த அளவு பொறுமையா இருக்கியோ அந்த அளவு எல்லாம் நல்லதே நடக்கும். நம்ப நினைக்கிறது கூடிய சீக்கிரமே நடக்கும் ஓகேவா"என்று அவள் கண்களை எதிர்நோக்கி கூற...அவள் மனதில் ஒரு புதிய நம்பிக்கையே வந்தது.
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro