பாகம் 45
Date published: 23 February 2024
Word count:1075
பெரியவர்களின் கலந்தாலோசனை முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. கோகிலாவை அழைத்தாள் பூரணி.
"அம்மா எனக்கு வீட்டு சாவி வேணும். Counselling appointment இருக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல..."
"இரு வரேன்.."
அவசரமாய் கைபேசியை வைத்துவிட்டு எழுந்தார் கோகிலா.
"ஒரு நிமிஷம் சாவியை பூரணிகிட்ட குடுத்திட்டு வரேன்.."
"இரு தங்கச்சி நீ ஏன் சிரமப்படுற? சுகந்தி இங்க வா.." சுரேஷ் குரல் கொடுக்க,
"அப்பா.. இதோ ரெண்டு நிமிஷத்துல"
"நீ சாவியை வாங்கிட்டு கிளம்பு. மீதி வேலையை அம்மா பாத்துக்கட்டும்.."
சுகந்தி சாவியை வாங்கிக்கொண்டு மாடியேறி வரவும் பூரணியின் கைபேசியில் மூர்த்தியின் குரல் கேட்டது.
"நல்ல வேலை செஞ்ச சுரேஷ் மருமவள வச்சிட்டு எப்படி பேசுறதுன்னு யோசிச்சேன்..."
சுகந்தியை ஜாடை காட்டி அமைதியாக இருக்கும்படி சொன்ன பூரணி ஸ்பீக்கரை இயக்கினாள்.
"என்ன தான் சாமி பரிகாரம் சொன்னாலும் கொஞ்சம் கவலையா இருக்கே மூர்த்தி.. எங்க பொண்ணு வாழ்க்கை.." பரந்தாமனின் வருத்தம் தோய்ந்த குரல்.
"டேய் பரமு... சாமி சொல்லி இதுவரைக்கும் எதுவுமே தவறினது இல்லை. தீர்வு இருக்குன்னு தானே சொல்லியிருக்காரு.
எந்த ஒரு சாபமுமே ஒரு ஏழு தலைமுறையை தான் பாதிக்குமாம். அதுக்கு பிறகு அந்த வம்சத்துலயே மாற்றம் ஏற்படும், அதாவது genetic changes ஏற்படுவதால எட்டாவதா வர தலைமுறையை பாதிக்காதாம்..."
"நீ சொல்லற விளக்கம் எல்லாம் சரி பா.. ஆனா பெண் சாபத்தால தான் இந்த குடும்பத்துல பெண் பிள்ளைகள் இல்லைனும் தலைமுறைக்கு ஒரு ஆண் வாரிசு சாமியாராகுதுன்னும் சொன்னா எந்த தகப்பன் டா நிம்மதியா இருப்பான்? இந்த விஷயம் தெரிஞ்சு உன்னால நிம்மதியா இருக்கமுடியுதா சுரேஷ்?"
கண்கள் விரிய பீதியில் சுகந்தியை ஏறிட்டாள் பூரணி.
"நம்ம எல்லாருக்குமே சுகந்தி, பூரணி, அர்ஜுன் விஷ்வா எல்லாம் வேற வேற இல்லயே.. எல்லாம் நம்ம வீட்டு பிள்ளைங்க தான? அப்படி தான வளந்துருக்கு இதுங்க? நாமளும் அப்படி தான டா பாக்கறோம்.. அர்ஜுன் இல்லை விஷ்வா இவங்கள்ள யாராச்சும் ஒருத்தர் சந்நியாசியா போக வாய்ப்பிருக்குனு சொன்னா எப்... எப்படி டா மனசை தேத்திக்குறது?"
பூரணிக்கு காலடியிலிருந்து நிலம் நழுவியது. அவள் கையிலிருந்து கைபேசி நழுவி கீழே விழுந்து நொறுங்கும் முன் சுகந்தியால் காப்பாற்றபட்டது.
பூரணி வீட்டின் கதவை திறந்து அவளை உள்ளே அழைத்துச்சென்று அமர வைத்தாள்.
மனம் வேகமாக கணக்கு போட்டது. இதோ இன்னும் மூன்று மாதங்களில் அர்ஜுன் சுகந்தி திருமணம். அப்படியென்றால்? விஷ்வா சந்நியாசியா? தங்கள் இருவரது வாழ்க்கை?
'நாங்க ஒண்ணு சேரணும்னா? அர்ஜுன் அண்ணா... ஐயோ அப்படி நினைக்கிறது கூட பாவம்! அவங்க கல்யாணம் நடந்தா.. நாங்க பிரிவோமா...'
"கடவுளே! இது என்ன தண்டனை? ஏன் இப்படி?" தலையை பிடித்துகொண்டு அரற்றினாள்.
"பூகுட்டி ஏய்" அவளை பிடித்து உலுக்கினாள் சுகந்தி. பித்து பிடித்தது போல விழித்த தோழியை பார்த்ததும் அவளது நெஞ்சம் கலங்கியது "என்னடி?"
"யாரும் பிரிய கூடாது சுகு.. நீங்க.. நாங்க.. எல்லா.. எல்லா எல்லாரு...ஹுக் ஹுக்"
மேலே பேசமுடியாமல் விக்கி விக்கி அழ அவளது சுவாசம் வேகமெடுத்தது, உடல் விதிர்விதித்து நடுங்கியது. அடுத்த கட்டம் அவளுக்கு panic attack என்பதை உணர்ந்தாள் சுகந்தி. அவளை சட்டென அணைத்து முதுகை நீவிவிட்டும் தட்டிகொடுத்தும் தேற்றினாள்.
"இங்க பாரு மொத கொஞ்சம் அமைதியாகு, எதையும் யோசிக்காத. ஒண்ணுமில்லை.. ஒண்ணுமில்லை டா ஓகே? ஷ்... ஷ்ஷ்..ஷ்ஷ் just calm down Poorani. "
அவளது கண்களும் கரித்தது ஆனால் தான் கலங்க இது நேரமில்லை என்று அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தாள் சுகந்தி.
அவளை தன்னிடமிருந்து விலக்கி படுக்கை மீது அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தாள். அவள் எதிரே உட்கார்ந்து இருவரது விரல்களையும் கோர்த்துகொண்டு,
"சென்னா கேளு calm down பூகுட்டி" வலுக்கட்டாயமாக அவளது கவனத்தை தன்மீது செலுத்த வைத்து "இங்க பாரு உன் சுகு சொன்ன கேட்ப தான?" கண்களில் கண்ணீர் ததும்ப ஆமோதித்தாள்
"இப்ப நல்லா ஆழ்ந்து மூச்செடு." செயல் முறையாக அவளும் செய்து காட்டி "இப்ப Breathing மட்டுமே உன்னுடைய focus. சுவாசம் உள்வாங்கி வெளியேற்றுவது மட்டுமே பிரதானம். Breathe in... breathe out... வெரி குட், அப்படி தான். இப்ப மெதுவா கண்ணை மூடு. நான் எங்கையும் போகலை கண்ணை மூடி breathing continue பண்ணு."
சில நிமிடங்கள் கடக்க, பூரணி சற்றே அமைதியடைவதை உணர்ந்தாள்.
"உடலும், மனசும், மூளையும் அமைதி அடைஞ்சா தான் ஒரே நேர்கோட்டுல வேலை செய்யும், தெளிவு பிறக்கும். Keep going..."
அவளை அமைதியடைய செய்து மனதை ஒரு நிலையில் நிறுத்த இருவருமாக சேர்ந்து தியான பயிற்சி மேற்கொண்டனர். அரைமணி நேரத்திற்கு பிறகு பூரணி கண்விழித்தாள்.
"Are you feeling better?"
"ம்ம்ம்..."
"போ முகத்தை கழுவிட்டு, டிரஸ் மாத்து நான் காபி போட்டுட்டு வரேன்"
சூடான பானம் சற்றே பூரணிக்கு புத்துணர்ச்சி அளித்தது. சீப்பை எடுத்து பூரணிக்கு தலை சீவியபடியே பேச்சைத் தொடர்ந்தாள் சுகந்தி.
"மாமா பேசினது முழுசும் நீ கேக்கலை அதான் குழம்பிட்ட. சித்தர் சாமி இந்த தலைமுறையில அந்த சாபம் விலக வாய்ப்பு இருக்குனு தான் சொல்லியிருக்காரு கவலை படாத."
"ஆனா அப்பா.."
"பெத்தவங்களுக்கு பயம் இருக்கும்ல டி? சரி நீ என்ன முடிவெடுத்திருக்க?"
"அவன் கிட்ட பேசணும், மன்னிப்பு கேக்கணும். அவசரப்பட்டு அவனை தப்பா நினைச்சிட்டேன். அவனை ரொம்ப நோகடிச்சிட்டேன்"
அவள் முடிவில் தீர்மானமாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள் சுகந்தி.
"மாமா ஊருக்கு போனதுக்கு காரணம் அண்ணாவுக்கு வேற இடத்துலேருந்து சம்மந்தம் வந்திருக்கு, அங்க போய் சாமி கிட்ட இதை சொல்லி உத்தரவு கேட்க தான் போயிருக்காரு. பெரிய அத்தை உங்க விஷயத்தை சாமி முன்னிலைல சொல்லிட்டாங்க".
பூரணி திகைத்தாள் "அப்ப பெரிய மாமாவுக்கு.."
"ஊருக்கு போக முன்னாடியே உங்க மேட்டர் தெரியும். உன் ஆளு மாமாவை எதிர்த்து பேசி கட்டுனா பூரணியை தான் கட்டுவேன் இல்லைனா கல்யாணமே வேணாம்னு சொல்லியிருக்காரு."
"மாமாவுக்கு நான்.. என்னை புடிக்கலையா?"
"அடியே மக்கு மகளே!" அவள் தலையில் செல்லமாக தட்டி, "மகளா நினைக்கிற பொண்ணை எப்படி மருமகளா ஏத்துக்குறதுன்னு தான் குழப்பம். அர்ஜுனும் அவங்க அப்பாகிட்ட உங்க ரெண்டுபேருக்காகவும் சண்டை போட்டுருக்கான். சரியான பைசா வசூல் emotional performanceனு அத்தை சொன்னாங்க."
"என்னால சண்டையாயிடுச்சா?"
"யாரு டி இவ.. இவன் மட்டும் சப்போர்ட் பண்ணி பேசியிருக்கலைன்னா நானே அவனை அடிச்சிருப்பேன். ஏன் எங்களுக்காக நீ மாமாகிட்ட எத்தனை திட்டும் பனிஷ்மெண்டும் வாங்கியிருக்க?"
இருவரும் லேசாக புன்னகைத்தனர். "சரி சரி எங்க விட்டேன்? ஆங்ங்.. சித்தர் சாமி அப்பதான் இந்த குடும்பத்துல இருக்கற அந்த சாபத்தை பத்தி சொல்லி ஏதோ பரிகாரம் பண்ண சொல்லியிருக்காரு அதனால தான் கோவிலுக்கெல்லாம் போய்ட்டு வந்திருக்காங்க.
நீ கொஞ்சம் யோசிச்சு பாரு டி. இவ்வளவு தடைகளை தாண்டி நீயும் அண்ணாவும் திரும்ப ஒண்ணு சேர்ந்தது சும்மா எதோ தற்செயல்னு நினைக்கிறியா? மெமரி லாஸ் ஆன நேரத்துல கூட உன் உள் உணர்வு அவரை தான் தேடிட்டு இருந்திருக்குன்னு நீ சொன்னியே. அப்ப இது சாதாரணமா கடந்து வந்துட கூடிய தொடர்பா? Is it a passing cloud or an affair?" ஆழ்ந்து தீர்கமாய் அவளை நோக்கினாள் சுகந்தி.
"Affair ஆ?" திகைத்தாள் பூரணி.
"மக்கு கொச்சை படுத்தலை. It was meant to be. You both are meant to be together! புரியுதா?"
அமைதியாய் தலையசைத்து சுகந்தி சொன்ன அனைத்தையும் நிதானமாக யோசிக்க தொடங்கினாள். "சரி உன்னுடைய counselling க்கு டைம் ஆயிடுச்சு மேம் கால் பண்ணுவாங்களா?"
"ஆமாம் அவங்களே கால் பண்றேன்னு சொன்னாங்க.."
"சரி முடிச்சிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு. By the way.. இவங்க எல்லாரும் கொடைக்கானல் போகலை.. இங்க மகாபலிபுரத்துல தான் இருக்காங்க. Weather forecast பாத்துட்டு சந்தீப் அண்ணா எல்லாத்தையும் கான்சல் பண்ணிட்டாரு. இன்னிக்கு நைட் ரிடர்ன் ஆகிடுவாங்க."
பூரணியின் முகம் பிரகாசமானது.
வாயிற் கதவை நெருங்கிய சுகந்தி
" அடியே! அடுத்த வாரம் ஷம்முக்கா கல்யணம் இந்த சோகத்துல packing பண்ணாம இருந்துடாத டி. அப்புறம் ஹிந்தி பஞ்சாபி எல்லாத்துலையும் திட்டு விழும்."
"அம்மா டிரஸ்லாம் எடுத்துவச்சிட்டாங்க.."
இரண்டு வாரங்கள் கழித்து தோழியின் முகத்தில் பூத்த புன்னகையை பார்த்து திருஷ்டி கழித்தாள் சுகந்தி.
⚜️⚜️⚜️⚜️⚜️
விஷ்வாவிற்கு அழைத்து பார்த்தாள் பல முறை அவளது அழைப்பை அவன் ஏற்கவில்லை. அவனது கோபம் நியாயமானது தானே? அனுப்பிய மெசேஜையும் அவன் பார்க்கவில்லை.
கார்த்தி சமீபத்தில் ஒரு கிரிக்கெட் போட்டியில் பெஸ்ட் ஆல்ரௌண்டர் கோப்பையை வென்றுவிட்டு வந்தபோது அவனோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சுவற்றில் தொங்கியது. அதை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பூரணி.
அவனது லட்சியத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக முன்னேறி கொண்டிருந்தான் கார்த்திக் உறுதியாக. இன்னும் சில மாதங்களில் ரஞ்சி கோப்பை போட்டிக்கான செலக்ஷன் தொடங்க இருந்தது. கடந்த வாரம் தேர்வுகள் முடிந்து பயிற்சி முகாமிற்கு புறப்படும் முன், அவளை சந்தித்துவிட்டு போனான்.
"ஹாய் பூரிக்கா"
"கார்த்தி? வாடா" கட்டிலில் தன்னருகே இடம் ஒதுக்கி பாடப் புத்தகங்களை நகர்த்தினாள்.
"கோச்சிங்க் கேம்ப்க்கு கிளம்பறேன். சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்.
"சூப்பர் டா வெல்லக்கட்டி! என்ஜாய் பண்ணு. உன் இலக்கை நோக்கி நீ நடந்துட்டே இரு நாங்க எல்லாரும் உனக்காக இங்க மனசார பிரார்த்தனை பண்றோம். சியர் பண்றோம். ஓகே?" தம்பியை அரவணைத்து வாழ்த்து கூறினாள் பூரணி.
"இந்தா" சாக்லெட் பார் ஒன்றை அவளிடம் நீட்டினான்.
"பூரி கா." சற்றே தயங்கி "ஆர் யூ ஹாப்பி?"
"நீயுமா கார்த்தி?" என்றாள் பூரணி சற்றே சோர்வாக
"நீ வேற" சிரித்து கொண்டே "நமக்கு மாத்ஸ், சயின்ஸே வராது இதுல எங்கேர்ந்து ரிலேஷன்ஷிப் அட்வைஸு..." தலையை தாழ்த்தி சற்றே தயங்கினான்.
"உனக்கும் பெரிய மாம்ஸுக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியாது. அது உன் தனிப்பட்ட விஷயம்.
நீ என்ன முடிவு எடுத்தாலும் சரி உனக்கு நான் blind support. ஆனா ஒண்ணே ஒண்ணு. அந்த முடிவு எடுத்தபிறகு உள்ளுக்குள்ள அதே பழைய பூரணியா ஹாப்பியா எனர்ஜடிக்கா உணர முடியுதான்னு பாரு.
எனக்கு நீ சுகந்தி க்கா ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்கணும் அவ்வளவு தான் தெரியும்."
நீண்ட பெருமூச்செறிந்தான். "டேக் கேர் பூரி கா" அவள் கன்னங்களில் தடம் பதித்த கண்ணீர் கோடுகளை சுவடில்லாமல் துடைத்தெடுத்தான்.
⚜️⚜️⚜️
மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தும் விஷ்வா அவளது அழைப்பை ஏற்கவில்லை. அவனிடம் எப்படியும் பேசிவிட வேண்டும் என காத்திருந்த பூரணி அவனை சந்திக்காமலேயே உறங்கிப் போனாள். பலத்த மழை காரணமாக அவர்கள் மகாபலிபுரத்திலிருந்து வருவதற்குள் இரவு வெகு நேரமாகிவிட்டிருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro