பாகம் 43
Date published: 8 Jan 2024
Word count: 3522
⚜️⚜️⚜️
"ஆக்சுவலி நாளைக்கு தான் உனக்கு காமிக்கணும்னு நினைச்சேன். கண்ணை மூடு".
அறை வாயிலில் நிறுத்தி வைத்து அவள் செய்தது போல கண்ணை கட்டி விட்டான். பீரோவை திறப்பதும் மூடுவதும் என ஏதேதோ சத்தம் கேட்டது. மீண்டும் வந்து அவளை பின்னிருந்து தள்ளி நடத்தி கொண்டு போனான்.
"இப்ப பாரு" என கண் கட்டை அவிழ்க்க, அவள் கண் முன்னே கண்ட காட்சி அவளை பேசா மடந்தையாக்கியது.
ஓவியங்கள்!
அறை முழுவதும் ஓவியங்கள்! அவளை ஓவியமாக தீட்டியிருந்தான். மிக தத்ரூபமாக. நம்ப முடியாமல் சிலையாக நின்றிருந்தாள்.
ஆர்வமாய் தன் ஓவியத்தை தொட்டு பார்ப்பதும், அதிசயித்து அவனை திரும்பி பார்ப்பதுமாய் இருந்தாள். ஒவ்வொரு ஓவியமும் அத்தனை நேர்த்தி.
பள்ளி சீருடையில், பதின் பருவத்து பாவாடை சட்டையில், பரதநாட்டிய வகுப்பில், அர்ஜுன் சுகந்தி நிச்சய தேதி குறித்த அன்று அணிந்திருந்த பாவாடை தாவணியில், கல்லூரி நடன போட்டியன்று உடுத்தியிருந்த சேலையில்.
"இது... இது எப்ப சிவா?" காட்டன் சுடிதாரில் நடனம் ஆடுவதற்கு ஏற்றாற்போல் துப்பட்டாவை கட்டியிருந்தாள், காதோரம் வியர்வை வழிவதை கூட துல்லியமாக வரைந்திருந்தான்.
"நான் ஊர்லேருந்து வந்தப்புறம் நீயும் நானும் முதல் முறை மீட் பண்ணது. சுகந்தி வீட்டுல நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடினிங்களே".
குல தெய்வ பூஜை முடிந்து குழந்தைகளுடன் அவள் விளையாடுகையில்,
அடுத்து மாலை நிச்சயதார்த்த நேரம் சேலையில்.
"நீ ஸ்டேஜ்ல நிக்கும் போது" பின்னிருந்து அவளை இடையோடு அணைத்து கொண்டு தோளில் தன் தாடையை பதித்தான்.
"என்னை பாத்து செம்மையா சைட் அடிச்சியே ஜானு" கவனம் முழுதும் ஓவியத்தில் இருந்தாலும், அவனது நெருக்கத்தில் உடல் அனிச்சையாக சிலிர்த்தது.
"எப்படி மாமா இவ்வளவு அட்டகாசமா வரையற? ஐயோ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை."
தன்னை ஓவியமாக வரையும் அளவிற்கு ரசித்திருக்கிறான் என்ற ஆனந்தம், அந்த அன்பு தரும் பெருமை.
தான் உண்மையில் இவ்வளவு அழகாகவா இருக்கிறோம் என்ற ஆச்சரியம்.
குரல் கம்ம, "தாங்க்ஸ்" என்றாள் கன்னத்தோடு கன்னம் ஒட்டி.
"உன் தாங்கஸை நீயே வச்சிக்கோ பேபி" காது மடலில் அவன் மீசை குறுகுறுக்க, இடையில் அவன் கைகள் இறுக்கியது. கை சிறையிலிருந்து விடுபட்டு அவள் நழுவ, சட்டென இழுத்து இதழ் சிறையில் பூட்டி கொண்டான்.
இதுவரை கண்டிராத புது வெள்ளமாய் ஆர்பரித்தான் அவளுள். அவன் வேகம் தாளாமல் அவள் துவள, இறுக்கி அணைத்து தன் உயரத்திற்கு அவளை தூக்கி கொண்டான். இதழுக்கு விடுதலை கொடுத்தாலும், முகத்திற்கு கீழே தொடர்ந்தது அவனது இதழ் வன்முறை.
மீசை ரோமங்களால் காயத்தை கொடுத்து, இதழ் ஒற்றி மருந்திட்டான் சங்கு கழுத்திலும் தோள் வளைவிலும்.
"ஜானு, என் ஜானு" என அரற்றி பச்சை குத்தபட்ட இடத்தில் அவள் ஆடையின் மேலே முத்தமிட்டான்.
நிமிர்ந்து கண்களில் கண்ணீரோடு அவளை பார்த்தான் "என்னை விட்டு போய்டாத டீ, நீ இல்லைனா செத்..."
அவனுக்கு வாய்ப்பூட்டு போடும் முறை அவளுடையதானது. மிக நீண்ட முத்த போருக்கு பின் களைத்து ஓய்ந்தனர் இருவரும். ஒருவர் தோளில் ஒருவர் தலை சாய்த்து இளைபார, ஆதூரமாக முதுகை வருடி அணைத்து கொண்டனர்.
அவளை மடியில் இருத்தி, கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அங்கு எப்படி வந்தனர் என்பது இருவருக்குமே புதிர் தான்.
மணி பன்னிரண்டு என்பதை அறிவித்தது கடிகாரம்.
"இங்கேயே இரு" என்று எழுந்து சமையலறைக்கு சென்றாள்.
சற்று நேரத்தில் ஒரு தட்டில் சிறிய கேக்கை எடுத்து வந்தாள். அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு, "உனக்கு ப்ளம் கேக் (plum cake) பிடிக்கும் தானே?"
"ஆமா உனக்கு.."
"அர்ஜுன் சொன்னான், ஸாரி எனக்கு மறந்திருச்சு. நானே வீட்டுல கேக் செய்ய கத்துகிட்டேன். குக்கர்ல டிரை பண்ணேன். யூ ட்யூப்ல, நெட்ல பார்த்து. ஒரு வாரமா இது தான் வேலை. நேத்து ஷம்மு கா அவங்க வீட்டு oven யூஸ் பண்ண சொல்லி குடுத்தாங்க. வா வா சீக்கிரம் கட் பண்ணு".
குழந்தை தனமாய் தோள்களை குலுக்கி, கண் சிமிட்டினாள்.
அவன் கையைப் பற்றி மேஜை அருகே அழைத்துச் சென்றாள்.
"என்னடி பொண்டாட்டி இப்படி அசத்துற? கேம் ஆர்கனைஸ் பண்ணி... எனக்காக கேக் செஞ்சு. இவ்வளவு ஏற்பாடெல்லாம் பண்ணி பிறந்தநாளை கொண்டாடுற. உனக்கு எதாச்சும் ஸ்பெஷலா.." என நெருங்கியவனை மார்பில் கை வைத்து நிறுத்தினாள்.
"டேய் வேணாம் நீ போற ஸ்பீடுக்கு உன் பிறந்தநாள் கொண்டாட்டத்துல ஆரம்பிச்சு நம்ம பாப்பா பிறந்தநாளுல போய் நிக்கும் போல. மரியாதையா அடங்கு அனகோன்டா!"
அவனை மிரட்டலாக தள்ளிவிடவும் அவன் அடக்கமாட்டாது சிரித்து கொண்டிருந்தான்.
"பல்லை காட்டுனது போதும் இங்க வா, இந்த மெழுகு வத்தியை ஏத்து"
அவளை மீண்டும் கையைணைப்பில் வைத்து கொண்டான். நறுக்கென அவனை கிள்ளி,
"பிறந்தநாள் கொண்டாடத்தில் காதலியின் கையால் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் கிடக்கும் ஆடவன் அப்படீன்னு நாளைக் காலை தலைப்பு செய்தியாயிடுவ, ஜாக்கிரதை!
டோர் க்ளோஸ் பண்ணிட்டு நில்லு மரியாதையா!"
அவனை அதட்டிவிட்டு, மெழுகுவத்தியை ஏற்ற தீப்பெட்டியை அவனிடம் கொடுத்தாள். இருவரும் சேர்ந்து அந்த மெழுகுவர்த்தியை ஏற்றினர்.
"வழக்கமா எல்லாரும் அணைச்சு.."
ஒர் வினாடி நிறுத்தி அவனை ஒரக்கண்ணால் பார்த்து,
"வேணாம் இது ஏற்கனவே ஒரு மார்க்கமா சுத்துது..
வழக்கமா மெழுகுவத்தியை ஊதி அணைச்சு தான் எல்லாரும் செலிபிரேட் பண்ணுவாங்க.
நாம ஆரம்பிக்க இருக்கற வாழக்கை எப்போதும் எல்லா வகையிலும் நேர்மறை விஷயங்கள் நிறைஞ்சு இருக்கணும்னு வேண்டிப்போம், இந்த தீப ஒளி மாதிரி. ஏன்னா நம்ம கூட நம்ம குடும்பங்களும் இதுல சம்மந்தபட்டிருக்கு".
அவளை பெருமை பசங்க பார்த்தான்.
"இப்ப கேக் மட்டும் கட் பண்ணு".
அவன் அவளுக்கு ஒரு துண்டு ஊட்டி விட, "ஹாப்பி பர்த்டே சிவா" என அவனுக்கும் ஊட்டிவிட்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
⚜️⚜️
🎶🎶
அழகி உன் புன்னகை
அரை டஜன் பௌர்ணமி
ஆசையா பேசுடி
மனசுல மார்கழி
ராணி காளி எசமானி
பார்வை பார்த்தாலே
மாமன் உள்ளார பூமாரி
லேசா மொறைச்சாலே
மூச்சு தடுமாறி
நாடி நரம்பெல்லாம் முக்காடுதே
உனக்கும் மேல ஊருல
எனக்குனு யாரடி
அடிச்சு நான் சொல்லுவேன்
உனக்கு நான் காலணி🎶🎶
⚜️⚜️
"தாங்க்ஸ் ஜானு"
விடை பெற மனமில்லை எனினும் இதற்கு மேல் இங்கு இருப்பது முறையல்ல என்பதால் புறப்பட எத்தனித்தாள்.
"நாளைக்கு ஒன்பது மணிக்கு ரெடியா இரு செல்லம்மா"
"ஆமா கவி மா, பெரிய அம்மு எல்லாரும் எப்ப வராங்க?"
"நாளை மறுநாள் வருவாங்கன்னு தோணுது."
அவள் வாசல் கதவை திறக்க போக, "பேபி குட் நைட் கிஸ் டீ..." அவள் மீது சாய்வது போல் பாசாங்கு செய்து வம்பிழுத்தான்.
"ஏய் தள்ளி போ" அவன் மார்பில் கை வைத்து தடுத்தாள்.
"தள்ளிபோகாதே எனையும் தள்ளி போக செல்லாதே.." அவன் பாடத் துவங்க..
வினோதமாக அவனை பார்த்தாள்.
"டேய் சரக்கு எதும் அடிச்சிட்டியா? போதையில உளறிட்டு சுத்தற?"
"போதை தரும் இந்த மாது என் அருகில் இருக்கையில் எனக்கெதற்க்கு மதுவெல்லாம்?"
கிறக்கமாக அவளை நெருங்கி வந்தான்.
முகத்தை அஷ்ட கோணலாக்கி, "உவ்வே குமட்டுது டா சிவா முடியலை உன்னுடைய இந்த
ரோமான்ஸ்..."
"ஓகே ஒரே ஒரு குட் நைட் கிஸ் குடுத்துரு நான் டயலாக் அடிக்கலை.. ப்ராமிஸ்!"
"ஆளை பாரு! குட் நைட், குட் மார்னிங்க்னு என்ன ஸ்கூலாடா நடத்துற?"
பதிலை அவள் காதில் சொன்னதும், திகைத்து முகம் சிவந்தாள் நாணத்தில்.
"அடப்பாவி இப்படியெல்லாமா பேசுவ? ரொம்ப கெட்ட பையன் சிவா நீ"
சிரித்து கொண்டிருந்தவனுக்கு ரெண்டு அடி பட்டென விழுந்தது.
"ஏண்டி புருஷன் பொண்டாட்டிகுள்ள பேசிகிட்டா என்னடி தப்பு? உன் கிட்ட தான பேபி பேசினேன்" என மீண்டும் குழைந்து அருகில் வர...
"நீ சரி இல்லை. நான் கிளம்பறேன்"
கதவை திறந்து கொண்டு சிட்டாக பறந்தாள்.
⚜️⚜️⚜️⚜️
முதன் முறையாக தன் துணையுடன் பொது இடத்திற்கு போவது என்பது ஒரு அழகான அனுபவம்.
அதுவும் திருமணத்திற்கு முன் போவது ஒரு இனம் புரியாத இன்பம். கள்ளத்தனம் செய்வது போல அடி நெஞ்சு படபடக்கும், யாரும் பார்த்துவிட்டால் என பதைபதைக்கும். அவனின் அருகாமையில் ஒரு இதம், நெருங்கி நடக்கும் போதும் அமரும் போதும் ஒரு சிலிர்ப்பு, நாணம். இவன் என்னவன் என்ற கர்வம்.
அவனின் ஒவ்வொரு அசைவு மட்டுமே மைய புள்ளியாகவும், சுற்றி நடக்கும் மற்ற இயக்கங்கள் எல்லாம் மங்கலாக நினைவில் பதியாமலும் போகும். பூரணிக்கு இவை அனைத்துமே புதிய அனுபவமாக இருந்தது.
காலையில் புறப்பட்டு முதலில் கோவிலுக்கு சென்றுவிட்டு அருகிலேயே ஒரு விடுதியில் காலை உணவை முடித்து கொண்டனர். இப்போது பைக்கில் இரண்டு பக்கமும் காலை போட்டு உட்கார்ந்து அவன் தோளை பிடித்து கொண்டாள்.
"அது என்ன செல்லம்மா காலைல அப்படி தள்ளி உட்கார்ந்துட்டு வந்தே?"
"அது... காலைல கோவில் போகும் போது இப்படிலாம் போகவேண்டாம்னு தான்"
"என்னை தொட்டா ஷாக் அடிக்குதா?"
அவள் உதட்டில் நாணப் புன்னகை அவனை சுண்டி இழுத்தது.
"சொல்லு ஜானு"
பெண் நாணம் கொள்ளும் போது சீண்டி பார்ப்பதில் ஆண்களுக்கு தனி சந்தோஷம்.
"மண்ணாங்கட்டி. நீ கிளம்பு" அவனோடு ஒட்டி உரசியபடி கோவிலுக்கு போக கூச்சமாக இருந்தது. நெருக்கத்தில் உடலெங்கும் பரவும் உணர்வலைகள், பல்வேறு எண்ணங்கள், இந்த சிந்தனைகளோடு கோவிலுக்கு போவது உத்தமம் அல்ல என அவளுக்கு தோன்றியது. அவனிடம் இதை எப்படி சொல்வது?
வாகனத்தை உயிர்பித்து பக்கவாட்டில் திரும்பி ஹெல்மெட்டை அவளிடம் கொடுத்தான்.
"இப்ப தான் சாமி கும்பிட்டாச்சுல? கிட்ட வந்து உட்காருடீ பொண்டாட்டி"
அவள் மனப்போக்கை புரிந்து கொண்டதை அவளுக்கும் தெரியபடுத்த. அவள் நெருங்கி உட்கார்ந்த பிறகே வாகனம் நகர்ந்தது.
'எந்த இடத்துக்கு போறோம்னு முன்கூட்டியே சொல்ல மாட்டேன் ஃபுல் டேவும் உனக்கு சர்பிரைஸ் தான்' என காலையில் புறப்படும்போது சொல்லிவிட்டான்.
அவளும் போகும் இடம் பற்றி கவலை இல்லை அவனோடு செலவிடும் தருணங்கள் தான் முக்கியம் என்ற தீர்மானத்தில் இருந்தாள்.
அடுத்து அவன் சென்றது நகை கடைக்கு.
"இங்க எதுக்கு சிவா?"
"ம்ம்ம்.. இருட்டு கடை அல்வா விக்கிறாங்களாம் ஒரு கிலோ வாங்கலாம்னு... பேசாம வா" உள்ளே போனதும் வெள்ளி நகைகள் பகுதிக்கு சென்றான். "கொலுசு காமிங்க"
"ஐயோ சிவா வேண்டாம். சும்மா செலவு..."
"முதல் சம்பளம் வாங்கி எல்லாருக்கும் கிஃப்ட் வாங்கி குடுத்துட்டேன். உனக்கும் எதாச்சும் வாங்கணும்னு ஆசை. வேண்டாம்னு சொல்லாத ஜானு"
மறுப்பு தெரிவிக்க இயலவில்லை. அலசி ஆராய்ந்து இருவருக்கும் பிடித்த வடிவில் கொலுசு தேர்வு செய்து பணத்தை செலுத்தினான்.
"இப்பவே போட்டுக்க செல்லம்மா" அணிந்து கொள்ள உதவி செய்தான்.
"கொலுசு பிடிச்சிருக்கா ஜானு?" மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்க மின்தூக்கிக்காக காத்திருந்தனர்.
"ம்ம் ரொம்ப.."
"ஆமா எப்படி அது விக் வச்சிருக்கேனானு கிண்டல் பண்ற இல்லை காலைல?"
களுக்கென சிரித்து
"ஆமா ஹெல்மட் கழட்டுனா கூட தலை கலையலை அதானல கேட்டேன். நீ ஜெல் போடுறன்னு எனக்கு எப்படி தெரியும்"
"சிரி ஜானு சிரி. இருக்கு உனக்கு எல்லாத்துக்கும் சேத்து வச்சு ஈவ்னிங்க் இருக்கு".
"போடா! நேத்து நீ பண்ண வேலைக்கு, அடுத்த பத்து நாள் லீவு"
மின் தூக்கியினுள் நுழைந்தனர்.
"ம்ம்ம்?"
பக்கவாட்டில் திரும்பி பார்த்து லேசாக முறுவலித்தான்.
"அப்ப நான் சொன்னது கரெக்டு தான்" கேள்வியுடன் நோக்கியவளை "இல்லை நேத்து ஸ்கூல் நடத்துறேனானு நீ கேட்டதுக்கு நான் பதில் சொன்னேன்ல. இப்ப பத்து நாள் லீவுனு சொல்லி நீயே கன்ஃபர்ம் பண்ற பாரு."
வெட்கத்தில் வாய் பேச மறுத்தது.
பிடித்த பாடலை முணுமுணுத்தபடியே வண்டியை ஸ்டார்ட் செய்து செலுத்தினான். அவ்வப்போது அவளை பக்கவாட்டு கண்ணாடியில் ரசித்தவாறு.
வழியில் செல்கையில் அவன் கூறியது அனைத்தையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து பார்த்து அர்த்தம் விளங்கியதும், தங்கள் உறவின் அடுத்த கட்ட பரிணாமம் விளங்க, நாணம் பெண்ணுக்கு வாய் பூட்டு போட்டது. நேற்றய அவனின் வேகம், அந்த முத்த பரிமாற்றம் சொன்ன சேதி, அவன் விழிகளின் தாக்கம் இவையெல்லாம் ஒரு வித படபடப்பையும் புது உணர்வையும் ஏற்படுத்த, கிண்டலும் கேலியுமாக பேச்சை கடத்தி வீட்டிற்கு புறப்பட்டு விட்டாள்.
அவன் செயலின் விளைவாக அவளின் பெண்மை புதுவிதமாக தன்னை தானே அவளுக்கு கோடிட்டு காட்ட தொடங்க உறக்கம் தொலைத்திருந்தாள் முந்தைய இரவு.
சட்டென்று சாலையோரம் வாகனத்தை நிறுத்தி, "ஜானு, என்ன உட்காந்தே தூங்கறியா?"
"ம்ம்ம்?" என மலங்க மலங்க விழித்தவளை பார்த்து, சிரித்துகொண்டே தலைகவசத்தை கழற்றி வைத்து விட்டு
"என்ன யோசனை? இளநீர் வாங்கட்டுமானு கேட்டேன்" இருவரும் கீழே இறங்கி கடையை நோக்கி நடந்தனர்.
"வாங்க தம்பி இப்படி உக்காருங்க"
ஒரு மர பெஞ்சை கை காட்டினார் கடைக்காரர். சாலையோர வேப்பமர நிழலில் கடை. வானொலி ஒலித்து கொண்டிருந்தது இளநீர் குவியலுக்கு நடுவிலிருந்து.
🎶🎶புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்?
என் வெட்கத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி 🎶🎶
இளநீர் அருந்தியபடி தலைசாய்த்து அவளை பார்த்திருந்தவனின் பார்வை தாக்கம் தாளாமல் அவள் தவித்ததை ஆசை தீர ரசித்தான். தனி உலகில் லயித்து மெய் மறந்திருந்தவர்களை சாலையில் கடந்து சென்ற வாகன இரைச்சல் கலைத்தது.
"சிவா ஒரு நிமிஷம் இரு மறந்தே போய்ட்டேன். இந்த பாட்டை கேட்டதும் நினைவு வந்துச்சு" தன் கைபேசியை அவனிடம் நீட்டினாள்.
நீ தீட்டிய என் ஓவியம்..
இவ்வளவு அழகா நான்?
கண்ணாடியும் காட்டியதில்லை,
நிழற்படத்திலும் பதியவில்லை,
உன் கண்களை கண்டேன்
ரகசியம் அறிந்தேன்.
உன் விழி வீச்சில் விழுந்தவளை
உன் காதல் வர்ணம் பூசி
ஆசை எனும் தூரிகையால்
இதய ஏட்டில் தீட்டியதாலே
நானும் பேரழகி ஆனேன் போலும்!
"இதை எப்ப எழுதுன ஜானு"?
"நேத்து நைட்டு தூக்கமே வரலையா..."
"ஏன் செல்லம்மா தூங்கலை"?
பரஸ்பரம் உறக்கத்தை களவாடி விட்டு என்ன சந்தேகம் இது? பதில் அவள் உடல் மொழியில் தெளிவாக கிட்ட, ஆனந்த கூத்தாடியது அவன் உள்ளம்.
⚜️⚜️⚜️⚜️⚜️
"சிவா யாரு வீடு இது?"
அவனுடைய பைக் நின்றது ஒரு சிறிய பங்களா போன்ற ஒரு தனி வீட்டின் முன்பு. வாயிலில் போலீஸ் காவலர்.
கேட்டின் மீது
Amandeep Singh IPS
IGP Crime Branch, Tamilnadu
என்ற தங்க நிற எழுத்துக்கள் பொறிக்கபட்ட கருப்பு நிற பெயர் பலகை கண்ணைக் கவர்ந்தது.
"அமன்தீப் வீணா வீடு இது"
சந்தீப்பின் அண்ணனை எதற்கு சந்திக்க வந்திருக்கிறோம் என்ற கேள்வி எழுந்தது பூரணியின் மனதில்.
"யாரு நீங்க?" சென்ட்ரி அவர்களை எதிர்கொண்டார்.
"அமன் சாரை பாக்கணும் சார். நான் விஸ்வநாதன், இவங்க பூரணி"
"ஓ நீங்க தானா சார்? அட என்னை போய் ஏன் சார்னு சொல்லிட்டு? IGP ஐயா சொன்னாங்க, அவரு சிநேகிதரு தானே நீங்க?"
இன்டர்காமில் அழைத்து இவர்கள் வந்த விவரத்தை அறிவித்து கேட்டையும் திறந்துவிட்டார்.
வாயிற்படியில் அவர்களை வரவேற்க நின்றிருந்தார் ஷர்மிளாவின் அண்ணி வீணா.
"Hello Vishwanath, Hello Poorni, welcome! Sorry I still cannot speak Tamil."
தான் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பதாய் கூறினார்.
மூவரும் பொதுவாய் சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
'பிறந்தநாள் அன்னிக்கு அமன் அண்ணாவை மீட் பண்ற அளவுக்கு என்ன விஷயம் இருக்கும்? ஒரு வேளை அந்த சைட் பிரச்சனை சம்மந்தமா எதுவும் தகவல் இருக்குமோ? இல்லை சிவாவை அட்டாக் பண்ண ஆளு தப்பிச்சுட்டானோ? ஐயோ! அப்ப சிவாவுக்கு ஆபத்தா? எதுக்கு அண்ணா...'
தன்னை யாரோ உலுக்குவதை உணர்ந்து யோசனையை கைவிட்டாள் பூரணி.
விஷ்வாவும் வீணா அண்ணியும் அவளை வினோதமாக பார்த்து கொண்டிருந்தனர்.
"என்.. ன்ன ஆச்சு?"
"அதை நீ சொல்லு செல்லம்மா. என்ன தீவிர யோசனை? அண்ணி டீ காபி எதாச்சும் குடிக்கிறியான்னு நாலு தரம் கேட்டாங்க.."
"ஹீ... ஸாரி அண்ணி! Anything is fine" அவர் சிரித்தபடி உள்ளே சென்றதும் விஷ்வா பிடித்து கொண்டான்.
"ஜானு ஆர் யூ ஓகே? காலைல கூட இப்படித்தான் எதோ யோசிச்சிட்டு zone out ஆயிட்ட. அடிக்கடி ஆகுதா இந்த மாதிரி? டாக்டர் பாக்கணுமா? சொல்லு ஜானு" அவன் அதீத கவலையோடு கேட்டான்.
"ஏன் விஷ்வா யோசிச்சா கூட மென்டல் டிஸ் ஆர்டர்னு சொல்லுவீங்களா டா?"
"ஹேய்! First of all நான்
டிஸ் ஆர்டர்னு சொல்லலை. 2nd நார்மலா யோசிச்சா பரவாயில்லை, நீ மனசுக்குள்ள பேசறதா நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்க.. காலைலகூட அப்படிதான்..."
"ஐயோ நிஜமாவா" தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து என்ன பேசினோம் என அவள் ஆராய, அவன் களுக்கென சிரிக்கும் சப்தம் கேட்டது.
"டேய்.. நீ பொய் சொன்னியா?"
பல்லைக் கடித்துகொண்டு அவள் மிரட்ட ஆயத்தமானாள்.
அதற்குள் வீணா வரவே "அண்ணி புண்ணியத்துல உன் தலை தப்பிச்சுது மவனே!"
மூவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்க வாயிலில் வண்டி வரும் சப்தம் கேடது.
"Aman has come" என்றபடி எழுந்து வாசலுக்கு சென்றார் வீணா.
"சிவா இங்க எதுக்கு டா வந்திருக்கோம்?"
"இரு ஜானு அமன் மீட் பண்ணிட்டு கிளம்பலாம்"
உள்ளே வந்த அமனுடன் ஒரு சிறிய பெண் குழந்தை, நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும். பரிச்சயமான முகமாக தோன்றியது பூரணிக்கு.
'அமன் அண்ணாவுக்கு ரீசெண்டா தானே மேரேஜ் ஆச்சு'.
சட்டென பொறி தட்டவும் அவள் விஷ்வாவின் புறம் திரும்பவும் அவன் முட்டி போட்டு தரையில் அமர்ந்து கைகளை நீட்டி அந்த பெண் குழந்தை அழைத்தான்.
"விஷு பா..." அந்த குழந்தையின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, வேகமாக ஓடி வந்து அவனிடம் தஞ்சம் புகுந்தது.
விஷ்வா தத்து எடுத்துக் கொள்வதாக முடிவெடுத்திருந்த பவித்ரா பாப்பாவே தான் அது.
பூரணியும் அவன் அருகே அமர்ந்து ஆதரவாக தோணுது அவனை அரவணைத்து, வலது கையால் அந்த குழந்தையின் தலையை வருடினாள். பவித்ரா பேசுவது புரியவில்லை எனினும் அவளது கேவல் அந்த குழந்தையின் தனிமையையும் வேதனையையும் உணர்த்தியது.
⚜️⚜️⚜️⚜️
சோபாவில் பவித்ராவின் ஒரு புறம் விஷ்வாவும் மறுபுறம் பூரணியும் அமர்ந்திருந்தனர்.
"விஷு பா, இது யாரு?"
"இது பூரணி. நான் இவங்களை தான் கல்யாணம் செஞ்சுக்க போறேன்."
திருமணம் என்றால் என்னவென்று புரியுமா? அப்படி புரிந்தாலும் தன்னை அந்த குழந்தை ஏற்றுக்கொள்வாளா என்ற கேள்விகள் பூரணியின் மனதில் நிறைந்திருந்தன.
கோலி குண்டு கண்களால் அவளை ஆராய்ந்தாள் பவித்ரா.
"உனக்கு ஆச்சியை புடிக்குமா?"
கேள்வி புரியாமல் பூரணி திகைக்க,
"அம்மாவை ஆச்சினு தான் கூப்பிடுவா பவி"
"ம்ம்... எனக்கு உங்க ஆச்சியை ரொம்ப பிடிக்கும்".
"ஆச்சிக்கு நிறைய ஃபீவர் வரும்னு அம்மா சொல்லும். நீ ஆச்சியை பாத்துக்குவியா?"
காவேரிக்கு ஏற்படும் டிப்ரெஷன் குறித்தே அவள் பேசுகிறாள் என்பது புரிந்தது.
"இப்ப அம்மாவுக்கும் ஃபீவர் தெரியுமா? ஹாஸ்பிடல்ல இருக்காங்க. அங்க இருந்தா எனக்கும் ஃபீவர் வந்துரும்னு டாக்டர் சொன்னாரு..."
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவள் அன்னை மிகவும் பலவீனமான நிலையில் இருந்ததால் அரசு காப்பகத்தில் இருந்தாள் பவித்ரா கடந்த சில வருடங்களாக.
பவித்ராவுக்கு வர்ணம் தீட்டும் புத்தகமும், கலர் பென்சில்களையும் கொடுத்து பக்கத்து அறையில் அமரச்செய்தான் விஷ்வா.
"Vishwa I respect Veena's sentiments. Our families also gave no objection. பவித்ராவை அடாப்ட் பண்ண நாங்க ஆர்வமா இருக்கோம். For time being அவங்க அம்மா கேட்டுகிட்டதால எங்களை லீகல் கார்டியன் ஆக்க அப்ரூவல் கொடுத்திருக்காங்க கோர்ட்ல. அவ எங்களை பேரண்ட்ஸா அக்ஸப்ட் பண்ணுவாளா? அவ உன்கிட்ட ரொம்ப அட்டாச்டா இருக்கா"
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வீணா ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினாள்.
"விஷ்வநாத் நீங்க அவளுக்காக ரொம்ப கேர் பண்றீங்க, ஹெல்ப் பண்யிருக்கீங்க, ஸோ உங்களுக்கு தான் பவி மேல உரிமை ஜாஸ்தி. ஸோ நாங்க லிஸ்ட்ல ரெண்டாவது தான்".
பூரணியும் வீணாவிற்கும் புரியும் வகையில் ஆங்கிலத்திலேயே பதிலளித்தாள். "எங்க லவ் பத்தி இன்னும் ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தெரியாது I mean Arjun's parents.
எங்க கல்யாணம் எப்போன்னு தெரியலை. கல்யாணம் ஆனா தான் பவித்ராவை நாங்க அடாப்ட் பண்ண முடியும். அது வரைக்கும் அவளை அப்படி ஹோம்ல விடறது சரியா வருமா? இத்தனை பேர் இருந்தும் தனியா இருக்கோமேன்னு ஏங்கி போயிட மாட்டாளா?"
நிதர்சனம் விளங்க அனைவருக்கும் ஒரு தவிப்பு.
"அமன் அண்ணா ஒரு டௌட்! இப்ப நீங்க லீகல் கார்டியனா இருந்து பின்னால நாங்க அவளை தத்து எடுக்கணும்னா முடியுமா.. அதாவது லீகல் பாஸிபிளிட்டி இருக்கா?"
"அமெரிக்கா மாதிரி நாடுகள்ள Foster care அப்படிங்கற சிஸ்டம் இருக்கு. அதாவது, ஒரு சிலர் இந்த மாதிரி குழந்தைகளை சில காலம் அவங்க வீட்டுல வளர்ப்பு குழந்தைகளா வச்சிருப்பாங்க. சில கேஸ்ல அந்த பசங்களுக்கோ Foster parentsக்கோ ஒத்து வரலைன்னா இல்லை அவங்க பராமரிப்பு சரியில்லேனா அரசாங்கம் அந்த பசங்களை வேற Foster care க்கு மாத்திடும். இந்தியாவுல அந்த மாதிரி இருக்கறதா தெரியலை. என்கொயர் பண்றேன்".
சற்று நேரத்தில் அவர்கள் அனைவரும் சேர்ந்து உணவருந்திவிட்டு பவித்ராவை அரசு காப்பகத்தில் விட சென்றனர்.
அமன், அந்த காப்பகத்தின் தலைவியிடம் விஷ்வா பூரணி இருவரையும் அறிமுகப் படுத்தி அவர்கள் பவித்ராவை சந்திக்க விருப்பபட்டால் அனுமதிக்க ஒப்புதல் பெற்றான். புறப்படுகையில் விஷ்வாவின் கழுத்தைக் கட்டிகொண்டு கேவினாள் பவித்ரா. வார இறுதியில் அவளை சந்திக்க வருவதாக வாக்கு கொடுத்ததும் சமாதானம் அடைந்தாள்.
"ரொம்ப ரொம்ப ஹாப்பி டா சிவா. சரி சரி வா வீட்டுக்கு கிளம்பலாம்"
அமன் வீணா புறப்பட்ட பிறகு விஷ்வாவும் பூரணியும் பைக் பார்க்கிங்க் நோக்கி நடந்தனர்.
"நோ ஜானு.. இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு".
" வாட்? ஓரே நாள்ள இப்படி போட்டு படுத்தற டா சிவா. மீ பாவம் நோ?" உதடு குவித்து பாவமாக அவனை பார்த்து கெஞ்ச
"என் பைக் கூட பாவம் தான் ஜானு. உனக்காக இத்தனை வருஷம் இதோட பில்லியன் ஸீட் கூட மாட்டாம, சீட் கூட சிங்கிளா இருந்தது," அவள் கையை கொக்கி போட்டு கோர்த்து கொண்டு நடந்தான்
"உன்னை ராணி மாதிரி என் ராயல் என்பீல்டு பைக்ல கூட்டிட்டு சுத்தணும்னு என்னோட தவம் டார்லிங்க். கிடைச்ச சான்ஸை விட நான் என்ன மடையனா?" பேசிக்கொண்டே அவளுக்கு தலைக்கவசத்தை மாட்டிவிட்டான்.
⚜️⚜️⚜️⚜️⚜️
நகரின் மிக பரபரப்பான பகுதி. பல பிரபல பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் நிறைந்திருக்கும் பகுதி. அதில் ஒரு பல மாடி கட்டிடத்தின் வளாகத்தின் உள்ளே அவன் வாகனம் நுழைந்தது.
அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் மிக நேர்த்தியாக வடிவமைக்கபட்ட வரவேற்ப்பு பகுதி. அங்கிருந்த பெண் ஊழியரிடம் விஷ்வா எதோ பேசியதும் எழுந்து நின்று மரியாதையாக பதில் சொல்லி, இருவரையும் எதிரே சோபாவில் அமர சொன்னாள். யாரையோ தொலைபேசியில் அழைத்து விஷயம் பேசினாள்.
"ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கு. யாரோட ஆபிஸ் சிவா?"
"பொறுத்தார் பூமி ஆள்வார்".
அதீத ஆர்வம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அந்த அலுவலகத்தை அமைதியாக நோட்டம் விட்டாள் பூரணி.
"ரிசெப்ஷன்ல இந்த பொண்ணுக்கே நல்ல சம்பளம் இருக்கும்ல? எனக்கும் இந்த மாதிரி... வேணாம் ரொம்ப பேராசையெல்லாம் வேணாம், ஒரு நல்ல கம்பெனில வேலை கிடைச்சா போதும். அம்மா அப்பாவோட டென்ஷன்லாம் குறையும். கிடைக்குமா?"
இயல்பான நடுத்தர வர்க்கத்து மக்களுக்கே உரித்தான அடுத்தடுத்த கவலைகள் திட்டங்கள் என எண்ணத் தாவல்கள் சிந்தனையை ஆக்கிரமித்தன.
கண நேரத்தில் வியப்பு, யோசனை, கவலை என அத்தனை முக மாற்றங்களை காட்டினாள். இன்னும் அவள் கவலையில் ஆழ்ந்து ஏதேதோ பேசி கொண்டிருக்க எதுவும் காதில் விழவில்லை அனகோன்டாவிற்கு. கண்ணிமைக்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
ரகசிய குரலில், "பேபி, உன்னை அப்படியே கடிச்சிர போறேன் ஒரு நாள் பாத்துக்க. சுழிச்சு சுழிச்சு பேசற உதடும், மாம்பழம் மாதிரி கன்னமும்... டார்ச்சர் பண்றடீ திருடி! கல்யாணம் ஆகட்டும் உனக்கு இருக்கு.."
அவன் பேசி முடித்து எதுவும் நடக்காதது போல் பத்திரிக்கை வாசிக்க தொடங்கினான், பூரணி திகைப்பில் உரைந்திருக்க "ஷாக்கை குறை டி பொண்டாட்டி".
அந்த பெண் மீண்டும் வந்து அழைத்துச் சென்றாள் .
"Fourth floor, sir" என்றபடி
மின் தூக்கியில் நுழைந்ததும் பொத்தானை அழுத்திவிட்டு விடைப்பெற்றாள். நாலாவது மாடியில் நின்றது மின்தூக்கி.
கதவு திறந்ததும் பிரகாஷ் நின்றிருந்தான்.
"ஸாரி விஷ்வா. ஸாரி பூரணி, ஒரு போன் கால் அதான் கீழே வரலை."
"பிரகாஷ் சார் இது உங்க ஆபிஸா?" பிரமித்தாள்!
"ஆமா பூரணி. வாங்க" புன்னகையுடன் வரவேற்றான்.
மின்தூக்கியின் எதிரே இருந்த சுவற்றில் ஜே. என் குழுமங்கள் என்ற கம்பீரமான பெயர் பலகை அதன் கீழே உட்பிரிவு நிறுவனங்களின் பெயர் பட்டியல்.
'நேர்ல எவ்வளவு சிம்பிளா இருக்காங்க? எவ்வளவு ஹெல்ப் பணணாரு பந்தாவே இல்லாம. இவ்வளவு கம்பெனிகளோட ஓனரா இவரு? ஆபிஸ் மட்டுமே ஒரு மாடர்ன் டிஸ்னி அரண்மனை மாதிரி இருக்கு.'
அவனின் பிரத்யேக அலுவல் அறையில் ஏதோ மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
"ஆக்சுவலா இது தான் என்னோட கேபின், இப்ப கொஞ்சம் வேலை நடக்குது அதனால அந்த பக்கம் வேற ஒரு கேபினுக்கு மாறியிருக்கேன்."
வேலை நடக்கும் இடத்தில் உள்ளே நுழைந்து ஏதோ பேச தொடங்கினர் ஆண்கள் இருவரும். பூரணி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். இடையில் வேலை செய்பவர்களோடு பேசினர். தமக்குள் விவாதித்தனர்.
'சிவா ஆர்கிடெக்ட் ல அதனால சார் எதோ டௌட் கேப்பாரு போல'.
சற்று நேரத்தில் அவன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தனர் மூவரும் கையில் காபி கோப்பையுடன்.
"சார் எனக்கு ஒரு டௌட். கேக்கலாமா?"
"பூரணி நம்ம அக்ரீமெண்ட் என்ன ஆச்சு? எப்படி நீ அக்ரீமெண்ட்டை மீறலாம்?"
"அக்ரீமெண்ட்டா?" திருதிருவென விழித்தாள்.
"அண்ணானு கூப்பிட சொன்னேன். அதை சொல்றேன்" நினைவுபடுத்தவும், நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"ஹப்பா.. B A இங்கிலீஷ் கோர்ஸையே ஸ்காலர்ஷிப்ல படிச்சிட்டு இருக்கேன். என்கிட்ட போய் மல்டி மில்லியனர் நீங்க என்ன அக்ரீமெண்ட் போட்டீங்கன்னு யோசிச்சேன்."
சிரித்துகொண்டே அவள் பேசி முடிக்க. பிரகாஷின் முகம் இருண்டது.
'கடவுளே! இந்த கம்பனியோட Board of Directorsல ஒருத்தி... என் தங்கச்சி... இவ ஸ்காலர்ஷிப்ல...."
சட்டென அவனது சிந்தனையை கலைத்தது விஷ்வா பூரணியின் சம்பாஷணை.
"By the way, ப்ளட் பிரதர்! நீங்க நேர்ல பழகும் போது ரொம்ப சிம்பிளா இருக்கீங்க. ஆனா இவ்வ்வளோ" இரண்டு கைகளையும் அகல விரித்து அளவு காட்டி "பெரிய ஆளுன்னு கெஸ் பண்ணவே முடியாது. எப்படி இப்படி humble ஆக இருக்கீங்க?"
"செல்லம்மா அது என்ன பிளட் பிரதர்? எதோ டப்பிங்க் சினிமா பாக்கற மாதிரி இருக்குடீ."
"அண்ணா எனக்கு ப்ளட் குடுத்து காப்பாத்தினாருல அதான் ப்ளட் பிரதர் சிவா, ராக்கி பிரதர் மாதிரி. எப்படி? சூப்பரா?" பெருமிதம் பொங்க புன்னகைத்தாள்.
சிரித்து கொண்டிருந்தான் பிரகாஷ் தங்கையை பார்த்து, "விஷ்வா அனேகமா சைல்டு மேரேஜ் பண்ணினதா நீ கம்பி எண்ண போற"
"ஏண்டா உன் திரு வாயை வச்சிக்கிட்டு.." கடுப்பானான் விஷ்வா.
"சிவா என்ன நீ? அவரை போய் டா போட்டு பேசிட்டு?" பதட்டமானாள் பூரணி.
"பூரணி அந்த ஃபார்மாலிட்டிலாம் ஒண்ணும் தேவையில்லை. We are friends now. அந்த சைட் புராஜெக்ட் முடிஞ்சப்பவே எங்க professional ரிலேஷன்ஷிப் முடிஞ்சாச்சு."
"ஆமா.. ஆமா.. இப்ப நாங்க மாப்பிள்ளை மச்சான் ஆயிட்டோம்ல"
"என்னமோ இருந்துட்டு போங்க. இந்த மீட்டிங்க் என்ன உங்க ரிலேஷன்ஷிப் அறிவிக்கவா?" காலணியை கழற்றிவிட்டு சம்மணங்கால் போட்டு சோபாவில் அமர்ந்திருந்தாள்.
"மேடம் உங்களுக்கு இவன் விஷயத்தை சொல்லலையா? என்னோட ஆபிஸ் கேபின் கம்ப்ளீட்டா ரீமாடல் பண்ணி கட்டுறது இவனோட ப்ளான் வச்சு தான்."
அவனது வரைப்படங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை பூரிணியின் முன் வைத்தான். அதை ஆர்வத்தோடு பார்த்தாள்.
"முதல்ல வீட்டுல ஒரு சின்ன சேஞ்சு பண்ணவேண்டியது இருந்தது. அப்ப அவன் சொன்ன ஐடியா புடிச்சுது. அது நல்லா வர்க் அவுட் ஆச்சு.
ஸோ என்னோட ஆபிஸுக்கும் இன்டீரியர் பண்ண சொன்னேன். ஏண்டா சிஸ்டர் கிட்ட சொல்லலை விஷ்வா?"
"ஸர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான். இன்னிக்கு டைர்க்டா கூட்டிட்டு வந்து காமிச்சேன்.
இவன் ஒரு ப்ரபோஸல் குடுத்தான் செல்லம்மா. ஒரு இன்டீரியர் டிஸைனிங்க் அண்டு ஆர்கிடெக்ட் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ண சொல்லி. ஷம்முவும் நானும் வர்கிங்க் பார்ட்னர்ஸ் - இவரு இன்வெஸ்டர். மிச்ச ஆட்களை வேலைக்கு எடுக்குற மாதிரி ப்ளான்."
"நீ என்ன சொன்ன?"
பிரகாஷ் பதிலளித்தான்.
"முடியாதாம். நான் இனவெஸ்ட் பண்றது பிடிக்கலைனா லோன் மாதிரி எடுத்துக்கன்னு சொன்னேன். இப்ப இவன் பண்ற வேலைக்கே என்னால பேமண்ட் குடுக்க முடியலை."
பூரணி திடுக்கிட்டாள்.
"அவன் கம்பெனி கான்ட்ர்க்ட் படி அவன் வெளியே எங்கேயும் சம்பளத்துக்கு இதே துறையில வேலை செய்ய கூடாதுன்னு ஒரு clause இருக்கு. அதனால அவனுக்கு பேமண்ட் கிரெடிட் பண்ண முடியலை" பிரகாஷ் தெளிவு படுத்தினான்.
"பிரகாஷ் ஒரு துறையில அனுபவம் ரொம்ப முக்கியம். மார்க்கெட் நிலவரம் தெரியணும், இங்க உள்ள வர்க்கிங்க் ஸ்டைல், நல்ல ஒர்க்கர்ஸ் தேவை. எல்லாம் இருந்தும் ஸக்ஸஸ் ஆகணும். அது இன்னும் முக்கியம்.
இதை நம்பி வேலையை விட்டுட்டேன்னு வை அப்புறம் தகராறு தான்.
லாபம் இல்லைனா போட்ட காசு வேஸ்ட். பணம் காசுனு வரும் போது உறவு பாழாகும். நீ இதுக்கு எனக்கு பணம் குடுக்கலைனா பரவாயில்லைனு சொன்னேனே. என் நண்பனுக்கு ஹெல்ப் பண்றதா நினைச்சு செய்யறேன்".
"போடா...இவனே! சிஸ்டர் இருக்கானு கன்ட்ரோல் பண்றேன் இல்லைனா அசிங்கமா எதாச்சும் திட்டிடுவேன். மார்க்கெட்டுல என்ன ரேட் வாங்கறான் தெரியுமா இந்த வேலைக்கு? ஒரு சின்ன டிசைனுக்கே லட்ச கணக்குல வாங்கறான். அதுவும் கார்ப்பரேட் கம்பெனினா சொரண்டிருவான்."
"சொன்னா கேளு விஷ்வா, கம்பெனிலேயிருந்து வேணாம். என்னோட பர்சனல் சேவிங்க்ஸ்லேருந்து பே பண்றேன்டா. எனக்கு மட்டும் உன் கிட்ட ஃப்ரீயா வேலை வாங்கினா கில்டியா இருக்காதா?"
"அது வேணாம் பிரகாஷ் அது இல்லீகல் ஆகிடும்".
ஒரு மனுஷனோட உழைப்பை திருடுற மாதிரி இருக்கு விஷ்வா"
சற்று சலிப்போடு பூரணியிடம்
"நீயாச்சும் புத்தி சொல்லுமா"
பூரணி சற்று தயக்கத்திறகு பிறகு பேசலானாள்.
"நான் ஒரு விஷயம் சொல்லலாமா? ஒர்க்அவுட் ஆகுமானு தெரியலை... தப்பு இருந்தாலும் சொல்லுங்க. எனக்கு பிஸினஸ்லாம் தெரியாது.
பிரகாஷ் அண்ணா உங்க கம்பெனியோட ஒரு டிவிஷனாவே இதை ஆரம்பிச்சா என்ன? அதாவது.
ஜே.என். குரூப் ஆப் கம்பெனீஸ் கீழே ஆர்க்கிடெக்சர் அண்ட் இன்டீரியர் டிசைனஸ் டிவிஷன்.
அப்ப உங்களுக்கு அறிமுகமனவங்களே உங்க பிராண்ட் மேல இருக்கற நம்பிக்கைல கான்ட்ராக்ட் குடுக்க முன் வருவாங்க.
இப்ப உங்க ஆபிஸுக்கு வரவங்க இந்த வர்க் முடிஞ்சபிறகு இது பிடிச்சிருந்தா இதை பத்தி கண்டிப்பா கேப்பாங்க.
சிவா நீ இப்ப பண்ற மாதிரி ஃப்ரீ டைம்ல கான்ட்ராக்ட் வந்தா பாத்துக்குறது, டிசைனிங்க் எல்லாம் பண்ணு. ஷம்மு அக்கா மட்டும் வர்க்கிங்க் பார்ட்னரா இருக்கட்டும்.
உங்க கம்பெனிங்கறதால வேலைக்கு தரமான ஆட்கள் கிடைப்பாங்க. ஒரு அளவுக்கு கம்பெனி நல்லா பிக் அப் ஆச்சுன்னா, உன்னை வர்க்கிங்க் பார்ட்னரா அந்த டைம்ல சேத்துக்க முடியும்ன்னா நீ ரிசைன் பண்ணலாம் சிவா. ஓரு வேளை வொர்க் அவுட் ஆகலைன்னா parent கம்பனியிலிருந்து போட்ட முதல் வீணாகாது.
இவன் சம்பளமும் கம்பெனி அக்கவுண்ட்ல ஒரு தொகை வரவு வச்சிட்டு, அவன் ஜாயின் பண்ணபிறகு அதை கிரெடிட் பண்ணிக்கலாம்".
அமைதியாய் அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தனர் இருவரும்.
"ஸாரி! ரொம்ப அபத்தமா இருக்கோ?" முட்டாள்தனமாக பேசிவிட்டோமோ என தன்னை தானே கடிந்துகொண்டாள்.
மெச்சுதலாய் பார்த்தான் பிரகாஷ் ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல், 'சும்மா சொல்ல கூடாது சித்தப்பாவோட பொண்ணாச்சே! அந்த சமயோசித புத்தி அந்த ஷார்ப்னெஸ் அப்படியே இருக்கு'.
"நாட் பேட் பூரணி! லீகலா இது எந்த அளவுக்கு செயல் படுத்த முடியும் என்ன மாற்றங்கள் செய்யணும்னு பாக்கலாம். பேசிக் ப்ளான் நல்லா தான் இருக்கு. என்னடா?"
விஷ்வா அமைதியாக இருந்தான்.
"சிவா ஸாரி... உனக்கு இதுல விருப்பம் இல்லைனா வேண்டாம். நான் பாட்டுக்கு உன்னை கேக்காம ஏதோ ஆர்வ கோளாறுல சொல்லிட்டேன். நீ உன் விருப்படி செய். பணத்துக்காக சத்தியமா சொல்லலை டா, உன்னோட டேலண்ட் பத்தி அண்ணா அவ்வளவு சொன்னபிறகு ஏன் அதை வேஸ்ட் பண்ணணும்னு தோணுச்சு".
"ஜானு ரிலாக்ஸ்! ஒரு விஷயம் பேசும்போது உன்னுடைய கருத்தை, ஐடியாவை பகிர்ந்துகிட்ட இதுல தப்பு என்ன இருக்கு? அப்படி பகிர்ந்துக்க எந்த தடையும் இல்லை."
அவளது கையைப் பற்றிக்கொண்டு சாந்தமாக அவன் பேசுவதை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.
"ஜானு உடனே எந்த முடிவுக்கும் வர முடியாது. வீட்டுல எல்லார்கிட்டேயும் கலந்து பேசணும். முக்கியமா நம்ம கல்யாணம்னு வரும்போது நான் வேலையை விட்டுட்டு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியுமா? இதெல்லாம் யோசிக்கணும். ஏன்னா நாளைக்கு அத்தை மாமாவோட பொறுப்பும் என்னோடது இல்லையா? இப்ப நானும் அம்மாவும் தான், செலவு கம்மி. நாளைக்கு நம்ம குடும்பம் பெருசாயிடும் அப்ப செலவுகள் அதிகம். அந்த நேரத்துல ரிஸ்க் எடுக்கலாமானு யோசிச்சுதான் செயல் படுத்த முடியும். ஓகே? நீ ஐடியா குடுத்ததுல தப்பு எதுவும் இல்லை. யோசிச்சு செய்யலாம்" பொறுமையாய் விளக்கினான். நிம்மதி அடைந்தாள்.
"வாவ்! ஒரு ரொமான்ஸ் மூவி லைவ்ல பாத்த ஃபீல்.." என்று கன்னங்களில் கைவைத்து கண்சிமிட்டி கிண்டலடித்தான் பிரகாஷ்.
"பொறாமைல பொசுங்காதீங்க ப்ரோ. நீங்க வேணா அண்ணிகூட ரொமான்ஸ் பண்ணுங்க'.
அடுத்ததாக தான் கேட்க நினைத்ததை கேட்டு விட்டான் விஷ்வா.
"ஆமா சேலை கட்டிய தாஜ்மஹால் எப்படி இருக்கு?"
புறையேறியது பிரகாஷிற்கு. "டேய் நடிக்காத, ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து ஃப்ரீஸ் ஆனதும் தெரியும்.
அண்ணலும் நோக்கி,
அவளும் நோக்கினதும் தெரியும். சரி சொல்லு எதாச்சும் முயற்சி எடுத்தியா?"
"சிவா என்ன சொல்ற?
"ஆங்... இந்த கூல் கேப்டன் ஆடுன காதல் கிரிக்கெட் பத்தி"
"அண்ணா யூ ஆர் சிங்கிள்?" அதிர்ச்சியில் உண்மையில் வாய் பிளந்தாள் பூரணி.
"ப்ச்ச்.. விடுறா வயசு முப்பது ஆக போகுது..இப்ப போய் என்ன டூயட் பாடணுமா?" பெருமூச்செறிந்தான்.
"முப்பது தான்டா ஆகுது. அறுவதாகியும் அவனவன் செகண்டு இன்னிங்க்ஸ் போடுறான். அப்ரோச் பண்ணா தான் டூயட் பாட வாய்ப்பு இருக்கா இல்லையானு தெரியும். கேட்டதுக்கு பதில் சொல்லு மச்சி".
"சிவா.. யாரு டா சொல்லு. அண்ணா நீங்களாவது சொல்லுங்க".
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro