பாகம் 37
(மேலே கொடுக்கபட்டுள்ள Arshi image oru reference ku dhan 😁) *
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்க
பூரணி சில தினங்கள் முழூ ஓய்வெடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார் மருத்துவர்.
பூரணி யமுனாவுடன் கீழ் வீட்டில் இருப்பது தான் நல்லது என முடிவானது, அவளது உடமைகள் அனைத்தும் தற்காலிகமாக அங்கு கொண்டு வரப்பட அவளையும் கோகிலாவையும் வற்புறுத்தி இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ள வைத்திருந்தனர்.
கோகிலாவுக்கு மருத்துவமனையில் விடுப்பு எடுக்க முடியாத சூழல்.
"அன்னம்" மகளின் தலையை வருடியபடி கோகிலா கண்கலங்கினார். "ஸாரி டா. உனக்கு அடிபட்டிருக்கப்ப கூட என்னால பக்கத்துல இருந்து கவனிக்க முடியலை. எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு".
அவரின் கண்களை துடைத்த பூரணி.
"மா பக்கத்துல இருந்து சோறு ஊட்டி, தும்மல் வந்தா பதட்டமாகி, இதெல்லாம் மட்டும் தான் தாய்மையோட அடையாளமா?
நீங்க ஒய்வு இல்லாம, சுயநலமில்லாம கிட்ட தட்ட இருபத்தி இரண்டு வருஷமா உழைக்கிறதுனால தான் நான் இன்னைக்கு படிக்க முடியுதுன்னும், இந்த அளவுக்கு நாம கண்ணியமா வாழ முடியுதுன்னும் எனக்கு தெரியும். நான் எதையும் தப்பா எடுத்துக்க மாட்டேன்".
தன்னருகே நின்றிருந்த அன்னையின் இடுப்பை கட்டிகொண்டு வெளிப்பட்ட அழுகையை அடக்கிக் கொண்டாள்.
"அப்பாவுக்கு deaddiction treatment கூட டாக்டர் அங்கிள் இலவசமா பண்றாங்கன்னு எனக்கு தெரியும். எத்தனையோ விதத்துல அவருக்கு நாம நன்றி கடன் பட்டிருக்கோம். அந்த உதவிக்கு பிரதிபலனா நீங்க லீவ் எடுக்காம வேலைக்கு போறீங்கன்னும் தெரியும். என்னைப்பத்தி கவலை படாதீங்க மா, அம்மு இருக்காங்க பாத்துக்க. சொல்லப்போனா உங்க ஹெல்த் நினைச்சா தான் கவலையா இருக்கு. ஸாரி மா என்னால ரொம்ப தொல்லை உங்களுக்கு" அன்னையின் கரங்களை பற்றி முத்தமிட்டாள் பூரணி.
பற்பல நடுத்தர குடும்பங்களின் நிதர்சனம் இது. ஆடம்பர வாழ்க்கைக்காக அல்ல, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே பெற்றோர் இருவரும் நேரம் காலம் பாராமல் உழைக்கவேண்டிய தேவை இருக்கிறது. பெற்றோரின் சிரமங்களை பிள்ளைகள் புரிந்து கொண்டு விட்டாலே அவர்களின் மனபாரம் பாதி குறைந்துவிடும்.
-----
'வீட்டுல இருக்கிறதுக்கு காலேஜே பரவாயில்லை'
சலித்து கொண்டாள் பூரணி. தவர விட நேர்ந்த பாடங்களை தோழிகளின் நோட்ஸ் வாங்கி எழுதிக் கொண்டிருந்தாள். யமுனா அவள் எடுத்து கொள்ளவேண்டிய மாத்திரையை மேஜை மீது வைத்தார்.
"அம்மு நீங்க மெடிசன் சாப்பிட்டீங்களா?"
கல்லூரி பாடத்தை தொடர்ந்தபடி அவள் கேள்வியெழுப்ப.
"ஆச்சு டி. ரொம்ப நேரம் கால் தொங்கப் போட்டு உக்காராத, வீங்கிட போகுது. நான் அக்காவை பாத்துட்டு வரேன். எதாவது வேணுமா? நான் இல்லாதப்ப சடக்குனு எந்திரிச்சுராத."
சரியென தலையை ஆட்டிவிட்டு பறக்கும் முத்தம் இரண்டு முறை கொடுத்தாள்.
"உங்களுக்கு ஒண்ணு, கவிம்மாவுக்கு ஒண்ணு. நல்ல புள்ளையாட்டம், சண்டை போடாம ஷேர் பண்ணிக்குவீங்களாம்" என்றாள் கண்சிமிட்டி.
"சரியான போக்கிரி" என சலித்து கொண்டு "என் அக்கா என்ன பாடு பட போறாளோ இந்த மங்கம்மா கிட்ட அபிராமி!" என முனகினார்.
"ஹய் பெரிய அம்மு அப்ப எனக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துட்டீங்களா?"
விழிகளை அகல விரித்து உற்சாகமும் ஆச்சரியமும் வெளிப்படுத்தினாள்.
"ம்க்கும்... எந்த கலர் சிக்னலா இருந்தாலும் உன் பெரிய மாமா தான் குடுக்கணும். தைரியம் இருந்தா நீயே கேட்டுக்க நல்லா குடுப்பாரு கலர் கலரா" நக்கலாக பதிலளித்துவிட்டு காவேரியை கவனிக்க சென்றார்.
~~~~~~
கைபேசியின் தூது வழி அவள் படிப்புக்கு இடைவெளி விழுந்தது.
சி: ஹாய் ஜானு! லஞ்ச் சாப்பிட்டியா? மருந்து சாப்பிட்டியா? வலி குறைஞ்சிருக்கா செல்லம்மா? ரொம்ப ஸ்டிரெய்ன் பண்ணாத, தூங்கி ரெஸ்ட் எடு."
வரிசையாய் அன்பொழுகும் குறுந்தகவல்கள் அவனிடமிருந்து வந்து சேர, முகம் சந்தோஷத்தில் பூத்திருந்தாலும் கடந்த சில நாட்களாய் தனித்து சந்திக்க முடியாத குறை இருவரிடமிருந்தும் ஏக்க பெருமூச்சாய் வெளிபட்டது.
அவனை விரும்புவதாக ஒப்புக்கொண்டதும், இந்த பிணைப்பு அது ஏற்படுத்திய சிந்தனைகள், அதன் தாக்கம் இவை அனைத்தும் புதிதாக இருந்தது. நினைவு தெளிந்தபின் அவன் மீது இருந்த அன்பின் அளவு இன்னும் ஆழமாகிவிட்டதாய் தோன்றியது.
பூ: சாப்பிட்டேன். நீ சாப்பிட்டியா?
சி: இல்ல டா, இனிமே தான். இப்ப தான் டிஸ்கஷன் முடிஞ்சது
பூ: மிஸ் யூ அனகோன்டா! எப்படா மீட் பண்ணுறது? :(
அவளது பதிலை வாசித்ததும், வேலையில் இருந்த இம்மியளவு கவனமும் சிதறி போனது.
பூ: இன்னிக்கு ஈவ்னிங்க் செக் அப் போகணும், பெரிய அம்மு கூட...
சி: சரி, மறக்காம physiotherapy பண்ணணுமா. மெடிசன் கண்டின்யூ பண்ணணுமா எல்லாம் கேட்டுக்க..
யமுனா திரும்ப உள்ளே வர, அந்த உரையாடலுக்கும் தடை விழுந்தது. யமுனா முறைத்தார்.
"ஒண்ணுமில்லை அம்மு, ரஞ்சி அக்கா ஒரு ப்ரோக்ராம் பத்தின டிஸ்கஷன் ஆரம்பிச்சிருக்காங்க. அதான்."
"சரி நான் கொஞ்ச நேரம் படுக்கறேன். நீயும் படுத்து ரெஸ்ட் எடு, இதை அங்கிட்டு வை"
கைபேசியை பிடுங்கி சற்று எட்ட இருந்த தொலைக்காட்சி பெட்டி அருகே வைத்தார்.
பூரணி பழிப்பு காட்ட,
"இடிச்சேன்னு வை ஒட்டி கிடிக்குற கன்னம் இட்லி மாதிரி வீங்கிடும் பாத்துக்க. படு டி". அவளை அதட்டிவிட்டு அவள் புத்தகங்களையும் எடுத்து வைத்துவிட்டு கீழே பாய் விரித்து படுத்தார்.
படுக்கையில் படுத்து விட்டத்தை (ceiling) பார்த்து கொண்டிருந்தாள் பூரணி.
அர்ஜுன் வீட்டில் இருக்கும் நேரம் பெரியவர்கள் புடை சூழ தான் இருக்க நேர்ந்தது. நேருக்கு நேராய் பார்த்து/) கொள்ள கூட முடியவில்லை இருவராலும். விஷயம் தெரிந்ததால் யமுனாவும் பத்மாவும் கூடுதல் கவனம் செலுத்தினர். இருவரும் ஞாயிறு இரவு கிடைத்த தனிமை பொழுதை நினைத்து மனதை ஆற்றி கொண்டிருந்தனர் கடந்த நான்கு நாட்களாய்.
❤️❤️❤️❤️
Flashback
நிச்சயதார்த்ததிற்கு வந்த தன் கல்லூரி தோழிகளை கண்டதும் உற்சாகத்தில் அரட்டையும் கேலியும் களைகட்ட, வலி மறந்தாள் பூரணி. அவளை நலம் விசாரித்த அனைவரிடமும் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக கூறி சமாளித்தனர்.
நிச்சயதார்த்தம் முடிந்து உறவினர், நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டு கிளம்பும் தருவாயில் பூரணிக்கு கையில் தையல் போட்ட இடத்தில் வலி தொடங்கியது.
"சொன்னா கேட்க மாட்டேங்கற பாப்பா நீ. ரூம்ல ரெஸ்ட் எடுன்னு சொன்னேன் அப்பவே." கவலையோடு அவள் காயம் பட்ட கையை நீவி விட்டான் அர்ஜுன்.
"ஃபிரண்ட்ஸ் கூட ஒரே இடத்துல உக்காந்து பேசிட்டு தான் இருந்தேன் அர்ச்சுணா, ஸ்டிரெயின் பண்ணலை" பிடிவாதமாய் பூரணி பதிலளித்ததும் அர்ஜுன் அவள் கையைப்பற்றி ஆராய்ந்தான்.
"ஆமா அவளுங்களுக்கு பேசுறதுக்கு என்ன? அதை விட்டா வேற பொழப்பு கிடையாது. இப்ப நீ தான வலிக்குதுன்னு அவஸ்தை பட்ற. சாயந்திரம் இருந்ததுக்கு இப்ப வீங்கியிருக்கா டா விச்சு?"
அண்ணனை பார்த்தான் கவலையோடு.
"டேய் உட்காந்து பேசிட்டு இருந்தா கை வலிக்குமா? ஏன்டா உசிர வாங்கற? சிவா நீயாச்சு சொல்லு..."
"எப்படி வலிக்கிது?"
அவள் புரியாமல் விழிக்க, "pain describe பண்ணு. ஊசி குத்துற மாதிரி சுள்ளுன்னு வலிக்கிதா இல்லை இடிச்சுகிட்டா வலிக்குமே அப்படியா?"
"உன்னை போய் கேட்டேன் பார்.."
அவன் முறைத்தும் "ம்ம்ம் லேசா குத்துற மாதிரி"
"தையல் போட்டது ஒரு வேளை பிரிஞ்சிரிக்குமா டா விச்சு?"
அதே நேரம் லேசாக ரத்தம் கசிய தொடங்கி பேண்டேஜ் கரையானது.
இருவரும் திடுக்கிட்டு அவளை பாரத்து நீண்ட நெடியதொரு சொற்பொழிவை தொடங்கினர்.
"டேய் இம்சை பண்ணாதீங்க டா, கை வலியே பரவாயில்லை உங்க தொல்லைக்கு..." அழுகையை கட்டுபடுத்தியபடி புலம்பினாள்.
பெரியவர்கள் மண்டபத்தை காலி செய்யும் வேலையில் மூழ்கி இருந்தனர்.
"அப்பா பூரணிக்கு கை வலிக்குதுனு சொல்றா, லைட்டா பிளட் வேற வருது" என்றான் உண்மையான கவலையோடு அர்ஜுன், "டாக்டர்கிட்ட காமிச்சுட்டு வந்தா பரவாயில்லை.."
"ஆதர்ஷ் இல்லை?" மூர்த்தி கவலையாய் வினவ
"அவனுக்கு டியுட்டி இருக்குன்னு கிளம்பிட்டான்."
"ம்ம்ம். நீ இங்கிருந்து அப்படியே கிளம்ப முடியாது, எதும் சாங்கியம் சடங்குனு உங்க பெரியம்மா வருத்தபடுவாங்க. நீ இரு ஷர்மிளாவை அழைச்சிட்டு போக சொல்லு."
மூவரும் புறப்பட்டு சென்று டாக்டரை சந்தித்தனர். பரிசோதித்துவிட்டு பயப்பட ஒன்றுமில்லை என்று தெளிவுபடுத்தினார். வாக்கர் உபயோகிக்கும் நேரம் கையில் தையல் போடப்பட்ட இடத்தில் அழுத்தம் ஏற்பட்டு ரத்தம் கசிந்திருந்தது. வாக்கர் அதிகமாக உபயோகிக்க வேண்டாம் அறிவுறுத்தி அனுப்பினார்.
"சொன்னேன் இல்ல, பயப்பட ஒண்ணும் இல்லைனு. இப்ப டாக்டர் சொன்னதுக்கு பூம்பூம் மாடு மாதிரி மண்டையை ஆட்டுற. சும்மா காசு வேஸ்ட்டு சிவா" என பூரணி சலித்து கொள்ள அவன் பேச மறுத்தான்.
"அச்சச்சோ! இவன் வையலண்ட் ஆனா கூட பரவால்ல, சைல்ண்ட் ஆனா தான் டேஞ்சர், மிலி கா ஹெல்ப் ப்ளீஸ்! இந்த முரட்டு சிங்கிளை சமாளிக்க டிப்ஸ் ப்ளீஸ்..."
"அதுக்கு என் புது பிளவுஸை சொரண்டி கிழிக்காத சைத்தான். புருஷன் பொண்டாட்டி சண்டையில நான் தலையிடல மா. ஆளை விடு டி"
பெரிய கும்பிடு போட்டு நகர்ந்துவிட்டாள்.
அவனை சமாதானப்படுத்தும் வழியை யோசித்தபடி காரில் பயணித்த பூரணி டாக்சி வீட்டை அடைந்தது கண்டு குழம்பினாள்.
பூங்கா காலனியை எட்டியதும் டாக்சியிலிருந்து இறங்கி கைதாங்கலாக அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். மாடிப்படி விளக்கு அணைக்கபட்டிருந்தது.
"பிரதர்.. நீ உன் படத்தை ஓட்டு. Bye love birds" ஷம்மு தன் வீட்டை நோக்கி நடந்தாள், பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி.
🎶ரகசியமாய் ரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?
அதிசயமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ? 🎶
தனிமையில் விடப்பட்டதும் ஏனோ பூரணியின் இதயம் படபடத்தது.
"செல்லம்மா நீ டான்ஸ் காம்படிஷன் முடிஞ்சு உடம்பு முடியாம தள்ளாடி வந்தியே ஆடிட்டோரியத்திலேருந்து அன்னிக்கே உன்னை பத்திரமா தூக்கிட்டு வந்து வீட்டுல விடணும்னு தவிச்சேன்"
அவள் உயரத்திற்கு குனிந்து அவளது வலது கையை தன் தோள் மீது படரவிட்டான் ஒரு கணம் திகைத்து அவனை நிமிர்ந்து நோக்க அடுத்து வினாடி அவளை கரங்களில் ஏந்திக்கொண்டான்.*
(ARSHI photo reference idhuku dhan😁)
"அதுவும் இன்னிக்கு நீயே கேட்டு நான் செய்யாம இருக்கமுடியுமா? Your wish is my command ஜானு".
நாடி நரம்புகள் அனைத்திலும் ஒரு வித அதிர்வலை ஓடி பரவியது. இதயம் பட்டாம்பூச்சியாய் படபடத்தது அவனது அருகாமையாலா? ஆராய விருப்பமில்லை அவன் கைகளிலிருந்து விலக மனமுமில்லை.
தன்னிச்சையாய் அவளது இடது கரம் அவனது கன்னத்தை வருட, அதில் மெல்லிய முத்தம் பதித்தான். தனது வீட்டிற்குள் நுழைந்ததை கூட உணராமல் அவன் பார்வையிலும் காதலிலும் கட்டுண்டு கிடந்தாள்.
அவளை இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, மின் விசிறியை போட்டுவிட்டு அவன் திரும்ப அவனது வலது புஜத்தில் இருந்த தழும்பு கண்ணில் பட்டது.
"ஐயோ! உன் கை!" அதிர்ச்சியில் எழப்போனவளை பாய்ந்து கையமர்த்தினான்.
"இதை எப்படி நான் மறந்தேன்? ஸாரி சிவா. இப்ப எப்படி இருக்கு? ஸாரி ஸாரி ஸாரி நான் வேற உன்னை கஷ்டபடுத்திட்டேன். எவ்வளோ பெரிய இடியட் நான். அச்சோ வலிக்குமே! நீயாச்சும் யோசிக்க கூடாதா? ஏன்டா இப்படி இருக்க?"
காயம் பட்ட இடத்தை ஆராய்ந்து, "வலிக்குதா?"
கண நேரத்தில் கண்ணில் குளம் கட்டி அவளது முகம் வாடியது கண்டு அவன் வருந்தினான்.
"ஒண்ணும் இல்லை ஜானு இப்ப சரியாகிடுச்சு" சமாதானம் எடுபடாமல் மீண்டும் தன்னை தானே சாடினாள்.
"நீ இப்ப புலம்புறதை நிறுத்தறியா இல்லை நான் வீட்டுக்கு போகவா? எனக்கு ஒண்ணுமில்லைனு சொல்றேன்ல"
அவன் உறுதியாக கூறி அருகில் உட்கார்ந்தான்.
அவனை பொய் கோபத்தோடு முறைத்து
"அதான, யாரு நீங்க ஹல்க் ஆச்சே! என்ன காயம் ஆனாலும் என் உடம்பு தாங்கும் னு எத்தனை காலத்துக்கு டா ஆம்பிளைங்க சீன் போட்டுட்டு இருக்க போறீங்க" என அவனை பழிப்பு காட்டி முகம் சுழிக்க, அவன் சிரிப்பை அடக்கி கொண்டான்.
"ஏன்டா என்னை தூக்கிட்டு கஷ்டப்பட்டு மாடியேறி வந்த உங்க வீட்டுலயே இருந்திருக்கலாமே" என்றவளை பார்த்து சற்றே யோசித்துவிட்டு அமைதியானான்.
"என்ன ஒரு டைப்பா லுக் விடுற?"
"ம்ஹும்.. வேற விஷயம்"
"டேய்... ஃப்ராடு! என்னை எதோ சொல்ல வந்துட்டு மழுப்புற.. சொல்லு திட்ட தான போற?"
பதில் சொல்வான் என எதிர்பார்க்க, அவனோ கைபேசியை திறந்து எதையோ ஆராய்ந்தபடி இருந்தான். அவன் செய்கையை நம்ப முடியாமல் பார்த்தவளுக்கு கோபம் வந்தது.
"நான் இல்லாத இத்தனை வருஷமும் என்னையே நினைச்சிட்டு இருந்தேன் ஒரு போங்கு பார்ட்டி ரீல் விட்டுச்சு" பூரணி சடைத்துக் கொள்ள அவன் கைபேசியை பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு அவளை நோக்கி திரும்பினான்.
"ஒரு டவுட் ஜானு அதான் அதை உறுதிபடுத்திக்கிட்டேன்..." அவள் ஓர்க்கண்ணால் முறைக்க அவனே தொடர்ந்தான் அவளது காதோரம் கிசுகிசுப்பாய்.
"அது...பேபி! ஒரு சிலரோட வழக்கப்படி, கல்யாணம் முடிஞ்சி ஃப்ர்ஸ்ட் நைட் அப்போ மணமகன் தன் மனைவியை வீட்டுக்கு இல்லைனா முதலிரவு அறைக்கு இப்படி தூக்கிட்டு போவானாம். எப்படி வசதி? தூக்கிட்டு போகவா 'நம்ம வீட்டுக்கு'? நீ வேற புடவை, மல்லிகை பூ சகிதம் பாக்க செம்ம கிக்கா இருக்க" என அவன் கண்ணடிக்க.
"அடப்பாவி!"
அவன் தோளில் அடித்து "அதெப்படி டா மூஞ்சிய யோக்கிய சிகாமணி மாதிரி வச்சிட்டு பேசுறதுலாம் காதல் மன்னன் ரேஞ்சுக்கு பேசுற?"
அவளை கட்டியிழுக்கும் காந்த புன்னகை ஒன்றை இதழில் தவழவிட்டவன் "அது பேபி! நான் ஊருக்கெல்லாம் யோக்கிய சிகாமணி, என் பேபிக்கு மட்டும் காதல் மன்னன்".

அவளது முகத்தை கையில் ஏந்திக்கொண்டு நெற்றியில் முத்தம் பதித்தான்.
"லவ் யூ செல்லம்மா, என்னை ஏத்துகிட்டதுக்கும், என் வாழ்க்கையில திரும்பவும் சந்தோஷத்தை கொண்டுவந்ததுக்கும்... தாங்க்ஸ்"
உணர்ச்சி பெருக்கில் குரல் உடைந்தது.
"சிவா..."
பேசவேண்டாம் என்பதாய் தலையை இடம்வலமாக அசைத்தான். அவளது நெற்றியோடு நெற்றி ஒட்டி நெடிய பெருமூச்செறிந்தான். அவளுமே அந்த கணங்களை கண்மூடி உள்வாங்கினாள்.
பின் அவளது முகம் நோக்கியபடி பேச்சை தொடர்ந்தான்.
"அம்மா இப்ப நல்லாயிட்டு வராங்க, இங்க எல்லார் கூடவும் இருந்து நல்லா மன மாறுதல் ஏற்படுது. உன்னை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்ப சித்தப்பா கிட்டேயும் உங்க வீட்டுலேயும் கல்யாணத்தை பத்தி பேசலாம்ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க."
அவன் நெற்றியில் கலைந்து விழுந்த கேசத்தை ஒதுக்கிவிட்ட அவளது விரல் பற்றி தன் கைகளுள் பொதிந்து கொண்டான்.
"தனிமையும், அப்பாவோட அன்பும், கவனிப்பும் இல்லாததும், அவரோட பிரிவும் தான் ஜானு எங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கையில பெரிய ஏமாற்றம்.
ம்ம்ம்... வெற்றிடம்னு சொல்லுவோம்ல அப்படி...
அந்த இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அது கடந்த காலம். ஆனா அதை மறக்க, கடந்து வர முயற்சிக்கலாம். நான் முயற்சிக்கறேன். அதுக்கு எனக்கு உன் துணை, அன்பு தேவை டா. எந்தவொரு ஊன்றுகோலும் இல்லாம நானும் அப்ப அப்ப உடைஞ்சு தான் போனேன் ஜானு."
வெளிப்படையாக தனது பலவீனத்தை அவன் ஒப்புக்கொண்டவனை பரிவோடு நோக்கினாள்.
"இத்தனை வருஷமா இயந்திரத்தனமா வாழ்ந்துட்டு இருந்தேன்.இப்ப மறுபடி உன் கிட்ட பேசி பழக ஆரம்பிச்சதுலேருந்து எல்லாத்துலேயும் அதிக ஈடுபாடு, சந்தோஷம். சொல்லப்போனா வாழ்க்கை மேல நம்பிக்கை வந்திருக்கு. வாழணும்னு ஆசை வந்திருக்கு. இறுக்கம், கோவம் இதுலேருந்து கொஞ்சம் விடுபட முயற்சி பண்றேன்..." அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே தொடர்ந்தான்.
"ஏன்னா நீ என் வாழ்க்கையில திரும்ப வந்துட்ட, எனக்காக நீ இருக்கனு ஒரு சந்தோஷம், நிறைவு, நிம்மதி. உன் கிட்ட தான் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாம இருக்க தோணுது... மத்தவங்க முன்னாடி என் பலவீனத்தை காட்ட நான் விருப்ப படலை. ஆனா நீ.. உன் கிட்ட நான் நானா இருக்க முடியுது. அப்படி இருக்க தான் பிரியபடுறேன்."
ஒரு பெருமூச்சோடு தலை கவிழ்ந்தான்
"சில நேரங்கள்ள அர்ஜுன், ஷம்மு கிட்ட கூட நான் உண்மையான உணர்வுகளை காட்டிகிறது இல்ல. ஈகோ காரணம் அல்லது அவங்க வருத்தப்பட கூடாதுன்னு.
ஆனா உன்கிட்ட எதையும் மறைக்க விரும்பலை. ஒரு வேளை நான் தப்பு செஞ்சா என்னை கண்டிக்கிற, தண்டிக்கிற உரிமை உனக்கு உண்டு." அவள் கையைப்பற்றி கொண்டான் "இது நான் உனக்கு கொடுக்கற வாக்கு."
நீ சொன்ன மாதிரி ஏழு ஜென்மம் இருக்கானு தெரியலை அப்படி இருந்தா எனக்கு இந்த அழகு ராட்சசி தான் அத்தனை பிறவியிலேயும் பொண்டாட்டியா வேணும். அப்படி இல்லைனா ஏழு ஜென்மத்தோட மொத்த லவ்வும், உன் செல்ல இம்சையும், உன்னை பார்த்துக்கற பாக்கியம், உன்னோட சேந்து வாழற சந்தோஷம் மொத்தமும் எனக்கு இந்த ஜென்மத்துலேயே வேணும்".
பேச்சற்று போய் அவனை அணைத்து கொண்டு விசும்பினாள் பூரணி, அவனும் கண்கலங்கிய வண்ணம், இறைவனுக்கு நன்றி கூறினான்.
அணைப்பிலிருந்து விலக மனமில்லாமல் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அவளை தன்னிடமிருந்து விலக்கி மீண்டும் பேச தொடங்கினான்.
"உன்னோட ஃப்யூச்சர் பத்தி என்ன யோசிச்சிருக்க ஜானு? படிப்பு, வேலை இதைப்பத்தி?"
இந்த கேள்வி எதற்கு இப்போது என ஒரு கணம் தோன்றினாலும், அவனிடம் அது பற்றி பேச அவளே எண்ணியிருந்தாள்.
"முதல்ல வேற ப்ளான்ல இருந்தேன் சிவா, மேல படிச்சிட்டே, வேலைக்கு போகணும். அம்மா அப்பாவை பாத்துக்கணும்னு.. இப்ப..."
"இப்ப என்ன?"
அவன் கையோடு கை கோர்த்து தோளில் சாய்ந்தாள்.
"எதாவது ஒரு சந்தர்ப்பம் சூழ்நிலை நம்மளை பிரிக்கிற மாதிரி அமையுது திரும்ப திரும்ப.. மறுபடியும் பிரியற மாதிரி வந்தா....நினைக்கவே முடியலை சிவா. இன்னிக்கு கூட பாரு..."
அவள் மேலே பேச முடியாமல் குரல் உடைய. அவன் மனதிலும் அதே பயம் இருந்ததால் அவனால் சட்டென்று சமாதானம் சொல்ல முடியவில்லை. அவளை தோளோடு அரவணைத்தான்.
"மேல சொல்லு"
"அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க. அவங்களை நல்லா பாத்துக்கணும், உட்கார வச்சு நல்லா ஓய்வு எடுக்க வைக்கணும். நாம உடனே கல்யாணம் பண்ணினா அதெல்லாம் செய்ய முடியுமா?
ஏன்னா கல்யாணத்துக்கு பின்னாடி இங்கேயும் எனக்கு கடமை இருக்குல"
அவளது முகத்தை தன்னை நோக்கி திருப்பி
"உன்னோட கவலை குழப்பம் நியாயமானது தான். படிப்பு வேலை - எதை நீ தேர்ந்தெடுத்தாலும் ஐ வில் சப்போர்ட்.
அதே போல நான் சொன்னதையும் மறக்காத. அத்தை மாமாவை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உனக்கு மட்டும் இல்லை எனக்கும் சேத்து தான். இது நம்ம குடும்பம், இவங்க நம்மை பெத்தவங்க. எல்லா பொறுப்புகளையும் நாம பகிர்ந்து தான் வாழ போறோம்."
சற்று இடைவெளி விட்டு, "என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா செல்லம்மா?"
வெள்ளைத் தாமரையை மொய்க்கும் கருவண்டாய் அவளது விழிகள் பரவசத்தில் அலைபாய
"சித்திக்கு இப்போ விஷயம் தெரியும், கண்டிப்பா கொஞ்ச நாளுல சித்தப்பாகிட்ட பேச்சை எடுப்பாங்க. உன் முடிவு தெரியாம நான் எதுவும் அவங்களுக்கு பதில் சொல்ல முடியாது.
ஒருவேளை அவங்க அர்ஜுன் சுகந்தி கல்யாணத்தோடவே வைக்கணுமுன்னு சொல்றாங்கனு வை...."
அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது
"உனக்கு கொஞ்சம் டைம் வேணும்னா அதுக்கு தகுந்த மாதிரி நான் சித்தப்பாவ சமாளிப்பேன்".
அவள் யோசிக்கையில், " ஏய்! அதுக்குன்னு மாமாவை ரொம்ப காக்க விட்டுடாத டா, ஏற்கனவே ரொம்ப காஞ்சு போயிருக்கேன் பேபி!"
"சீ போடா" என்று அவன் தோளில் நாணத்தோடு முகத்தை மறைத்தாள்.
சட்டென்று அவன் கன்னத்தில் இதழ்பதிப்பின் மூலம் சம்மதத்தை தெரியபடுத்திவிட்டு நாணத்தில் மீண்டும் முகம் மறைத்தாள்.
"ஜானு"
"ம்ம்ம்"
"ஜானூ"
இரண்டு முறை அழைத்தும் அவள் நிமிராததால் "தூங்கிட்டியா ஜானு?"
"ஹும்ம்..."
"நமக்கு கல்யாணம் ஆனபிறகு நீ இந்த மாதிரி டெய்லி தூங்கு டா. நான் கவலை படலை ஆனா இப்ப டேஞ்சர் எல்லாரும் மண்டபத்துலேருந்து கிளம்பிட்டாங்களாம். ஷம்மு மெஸேஜ்.." கைபேசியை சுட்டிகாட்டினான்.
"ப்ச்ச்.. போடா" முகம் சுளித்து "இப்ப தான் புரியுது இந்த அர்ச்சுணாவும் சுகுவும் ஏன் அப்ப அப்ப தனியா ஓடிடுறாங்கனு."
அவளை ஒரு தினுசாக பார்த்து "என்ன பேபி புரிஞ்சுது?"
"அதுவா... உன்னை விட்டு தள்ளி இருக்க மனசே வர மாட்டேங்குது டா.. உன்கூட இருந்தா.. ஆங்ங்.... எப்படி சொல்றது...
I feel complete now Shiva. மறுபடியும் அந்த பழைய பரிதவிப்பு வேணாம். நீ இல்லாததால ஒரு வெறுமை - வெற்றிடம் நானும் உணர்ந்தேன் நாம பிரிஞ்சப்ப. அந்த வெற்றிடம் உன்னால நிறைஞ்சிருக்கு."
உள்ளத்தை நிறைத்த காதலின் உந்துதலால் அவளை அள்ளி மடியில் இருத்திக்கொண்டு காதலின் தாக்கத்தையும் ஆழத்தையும் புரியவைக்க அவளிடம் அனுமதி பெற்று கொண்டான்.
விளைவு!
அவளது அனகோன்டாவிற்கு முத்தப் பிசாசு என பெயர் சூட்டும் படி ஆனது.
விஷ்வாவின் கைபேசி ஓயாது ஒலித்து அவர்களை இயல்பு நிலைக்கு இழுத்துவந்தது.
"நான் டிரெஸ் மாத்திட்டு வரேன்"
"பாத்து மெதுவா நட" அவளை உள் அறைக்கு அழைத்து கொண்டு போனான். "நான் கிளம்பறேன்"
"Bye"
பூரணி கதவை தாழிடும் முன்
"எனி ஹெல்ப் பேபி?" குறும்பாக கண்ணடித்தவனை நோக்கி தலையணை பறந்து வந்தது. பலமாக சிரித்துவிட்டு அடுத்து வேறு ஆபத்து வரும் முன் வெளியே ஓடினான்.
❤️❤️❤️❤️
Flashback ends
❤️❤️❤️❤️
மாலை மருத்துவமனைக்கு புறப்படும் முன் காவிரிக்கு உடல் அசதி ஏற்படவே யமுனா ஷர்மிளா அவளை அழைத்து போக வந்தாள்.
"ஆன்டி நீங்க இருங்க நான் இவளை கூட்டிட்டு போறேன். எப்படியும் கோகிலா ஆன்டி அங்க தான இருக்காங்க நான் மேனேஜ் பண்றேன்."
சுகந்தி கல்லூரியிலிருந்து வர அவளும் அவர்களுடன் புறப்பட்டாள். மூவரின் அரட்டை களை கட்டியது போகும் வழியில்.
கோகிலா அவர்களை வரவேற்பறேயில் சந்தித்து, மருத்துவர் வர ஒரு மணி நேரம் ஆகும் அதற்குள்ளாக தனது பணிகளை முடித்துவிட்டு வருவதாக கூறிச் சென்றார்.
இரண்டு நாட்கள் மருத்துவர் விடுப்பில் இருந்ததால் கூட்டம் அலைமோதியது.
அங்கிருந்த அறிமுகமான நர்ஸ் ஒருவர் இவர்களை காலியாக இருந்த ஒரு உள் அறையில் உட்கார வைத்தார்.
"இங்க உட்காருங்க. அங்க கூட்டத்துல யாராச்சும் பூரணி காலை மிதிச்சிடுவாங்க. டாக்டருக்கு இன்னைக்கு நான் தான் அஸிஸ்டெண்ட், உன் நம்பர் வரும் போது கூப்பிடுறேன்" என்றுவிட்டு போனார். சிறிது நேரம் ஷர்மிளாவின் கல்யாண ஏற்பாடுகள் பற்றி பேச்சு தொடர்ந்தது.
"ஏய் வாட்டர் பாட்டில் இருக்கா டீ சைத்தானஸ்?" தொண்டை கமறியது ஷம்முவிற்கு, இல்லை என புரிந்ததும் "மக்கு பசங்களா. இரு கேன்டீன்ல வாங்கிட்டு வரேன்" என எழுந்தாள்.
"அக்கா நானும் வரேன் காலேஜ்லேந்து வந்து உடனே கிளம்பிட்டேனா, பசிக்குது. பூ குட்டி உனக்கு எதாச்சும் வாங்கிட்டு வரவா? இல்லை நம்ம மாமியார் கையால ஃபுல் கட்டு கட்டுனியா?" என கண்சிமிட்டி சிரித்தாள்.
"சீ போ லூஸு! ஏய் என்ன என்னை தனியா விட்டுட்டு போறீங்க?"
"ஆமா டி உன்னை கொத்திட்டு போக ராவணன் வரான். ஸ்டிரெய்ன் பண்ணாம உக்காரு ஒரு இடத்துல.
அவர்கள் போனதும் கைபேசியில் பாட்டு கேட்டபடி உட்கார்ந்திருந்தாள். கதவை ஒரு முறை தட்டும் ஓசை கேட்டது, ஒரு வினாடி இடைவெளியில் கதவை திறந்து உள்ளே வந்தான் விஷ்வா. அவனை முற்றிலும் எதிர்பாராத பூரணிக்கு இன்ப அதிர்ச்சி. கதவை தாழிட்டு உள்ளே நேராக வந்தவன் அவளை தன் உயரத்திற்கு தூக்கிக் கொண்டு ஒரு சுற்று சுற்றினான்.
"ஹாய் ஜானு"
"ஹய் சிவா..."
"நீ எப்படிடா ஹாஸ்பிடல்ல? அதுவும் இந்த நேரத்துக்கு?
ஐயோ யாராச்சும் பாத்தா?
ஆமா ஆபிஸ்?"
கண நேரத்தில் கேள்வி கணைகளை அவள் அடுக்க, காதல் கணைகளை இருவரது விழிகளும் தொடுத்தது.
"ரொம்ப பேசுற பேபி" முத்த பிசாசு அவளை ஆட்கொண்டது. "Missed you baby" என மூச்செடுக்க இடைவெளி விட்டு, மீண்டும் அவள் பூவிதழ்களை குறி வைத்தான்.
"இதே வேலையா போச்சு டா" என சடைத்துகொண்டாள் மூச்சிறைக்க. அவளை கீழே இறக்கிவிட்டு நாற்காலியில் அமர செய்தான். கதவு தாழ்ப்பாளை நீக்கினான்.
"உன்னை மீட் பண்ண என்னலாம் ப்ளான்... நான் எவ்வளவு முயற்சி எடுக்கறேன் நீ என்னடான்னா ஒரு முத்ததுக்கு சலிச்சுக்குற? என் அம்மாலேருந்து ஆரம்பிச்சு, ஷம்ஸ், சுகந்தி, உன் ஊசி போன அண்ணன் எல்லாரும்..." அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி.
"அட பாவிகளா இத்தனை பேருமா? அப்ப அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு..." அவன் அசட்டு சிரிப்பு சிரித்ததும்
"பொய்யா?"
அவனை பட்டென்று தொடையில் அடித்து "இந்த விஷயத்துல பொய் சொல்லுவாங்கள டா? பைத்தியகாரா! பெரிய அம்மு கூட பயந்துட்டாங்க தெரியுமா? ஒரு சமயம் போல இருக்காது சிவா."
"ஏய் ஒண்ணுமில்லை, சும்மா தலைவலின்னு தான் சொன்னாங்க.
ஹ்ஹூம்...என் அம்மா மேல இருக்குற அக்கறைகூட என் மேல இல்லை என் பொண்டாட்டிக்கு" என உள்ளூர சந்தோஷப்பட்டு, பொய்யாய் முகத்தை தூக்கி வைத்து கொண்டான்.
களுக்கென சிரித்து விட்டு "மிஸ்டர் ஃப்ராடு, உங்க தில்லாலங்கடியெல்லாம் தெரியும். நான் உன்னை சமாதானம் பண்ண முயற்சி பண்ணுவேன் உடனே நீ அனகோன்டா அவதாரம் எடுப்ப...நம்ம இருக்குறது ஹாஸ்பிடல், நம்ம வீட்டு பெட்ரூம் இல்லை"
என மிக சரியாக உளறி தன் வாயாலேயே சிக்கி கொண்டாள்.
அவன் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்ததும், 'பார்வை சரியில்லையே! என்ன பேசுனோம்'? என அவள் யோசிக்கையில்...
"ஞாயிற்றுகிழமையோட போதை இன்னும் இறங்கலை போல பேபி! பெட்ரூம்லாம் மைண்ட்ல ஓடுது.." என்று கன்னத்தில் வருடினான்.
"ஐயோ வாயை மூடு சிவா யாராவது கேட்டா மானம் போயிடும்"
தலையில் அடித்து கொண்டு "ஓ! காட்! பூரணி பாப்பா பாவம்ல, எதுக்கு இப்படி ஒரு அனகோன்டாவுக்கு ஜோடி ஆக்கிவிட்டுருக்கீங்க.." மேலே பார்த்து தனக்கு தானே புலம்பியவளை பார்த்து சிரித்தான்.
கதவை திறந்து கொண்டு வந்தனர் அர்ஜுன், ஷர்மிளா, சுகந்தி அனைவரும்.
"என்னடா அண்ணா வந்த இடத்துல படம் ஓட்டுற போல."
"மூட்றா...இவரு ரொம்ப யோக்கியம்" என்று அங்கிருந்த ஒரு வாரபத்திரிக்கையை அவன் மீது சுருட்டி எரிந்தான் விஷ்வா.
சிறிது நேரத்தில் மகளை அழைத்து போக வந்த கோகிலா, "ஐய்யயோ...என்ன இது எல்லாரும்?" என அத்தனை பேரையும் பார்த்து மலைத்து போனார்.
"உங்க மாப்பிள்ளை வேலை தான் ஆன்டி அவன் திருட்டு தனமா உங்க பொண்ணை மீட் பண்ண எங்க எல்லாரையும் இழுத்து விட்டுட்டான்" என ஷம்மு நண்பனை வார, அனைவரும் சிரித்தனர்.
❤️❤️❤️
மருத்துவர் சந்த்திப்பின் பொழுது, பூரணியின் கால் கட்டு அவிழ்க்கபட்டு பரிசோதனை நடந்தது. காயம் முழுதாக ஆறயிருக்கவில்லை என்பதால் கட்டு மட்டும் மாற்றப்பட்டது.
மன்றாடி கல்லூரி போக அனுமதி வாங்கினாள் பூரணி.
"காலேஜ் போங்க, உங்க க்ளாஸ்ரூம் கீழ தானே? நோ ப்ராப்ளம்.
ஆனா பஸ்ல வேண்டாம், ஆட்டோவுல போக முடிஞ்சா போங்க. மாடிப்படி ஏறி ரொம்ப ஸ்டிரைன் பண்ணவேண்டாம். வீட்டுக்கு போனா சும்மா மாடி ஏறி இறங்கிட்டு இருக்க கூடாது. கை காயம் நல்லா ஆறிட்டு வருது. மெடிசன் கண்டின்யூ பண்ணுங்க."
அறிவுறைகள் கூறி அனுப்பினார்.
மற்றவர்கள் வரவேறப்பறையில் காத்திருந்தனர்.
"அத்தை நான் டாக்ஸி புக் பண்றேன் நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க. எனக்கு பக்கத்துல ஒரு வேலை இருக்கு முடிச்சுட்டு நானும் அர்ஜுனும் வந்துடுறோம்".
"ஒரு பத்து நிமிஷம். Files, cash எல்லாம் ஹாண்டோவர் பண்ணிட்டு வரேன்".
"சிவா..."
கைபேசி செயலியில் டாக்சிக்கு பதிவு செய்துக் கொண்டிருந்தான் மும்முரமாய்.
"ம்ம்.."
"ஷி..வா..."
"ம்ம்ம்ம்"
"சும்மா சொல்லக்கூடாது ஃபார்மல் ஷர்ட், டை கட்டி கன்னாபின்னானு ஸ்மார்ட்டா இருக்க மாமா.. போறவ வர்றவலாம் உன்னை சைட் அடிக்கிறாளுங்க. என் புருஷனை பாத்தீங்கடி கண்ணை நோண்டிடுவேன்னு திட்டணும்னு தோணுது. நேசன் அங்கிள் ஹாஸ்பிடல் ஆச்சா அதான் சும்மா இருக்கேன்."
அவள் முகத்தை சுருக்கி உரிமை கொண்டாடிய விதம் சிரிப்பை வரவழைத்தது. "தாங்க்ஸ மாமா, ஹாஸ்பிடல்க்கு வந்ததுக்கு".
"நான் தான் செல்லம்மா அத்தைக்கு தாங்கஸ் சொல்லணும். டாக்டர் அப்பாயிண்ட்மெனட் இருக்குனு தெரிஞ்சு என்னால நிம்மதியா இருக்கமுடியலை, வரேன்னு சொன்னேன் ஒத்துக்கிட்டாங்க. அப்படியே உன்னை பாக்கற சான்ஸும் கிடைக்கும்" மீண்டும் கைபேசியில் கவனம் போனது.
அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஜானு..."
"ம்ம்.."
"இந்த தாங்கஸ் எல்லாம் ஒத்துக்க முடியாது, எனக்கு என் ஸ்டைல் தாங்க்ஸ் தான் வேணும். அதுவும் நான் கேட்கும் போது, கணக்கு வச்சிக்கோ.."
என்றான் சர்வ சாதாரணமாக.
"முத்த பிசாசுனு உனக்கு பேர் வச்சது கரெக்ட் தான்டா, சரியான வேம்பையர்! " என்றாள் முகம் சிவக்க.
தூரத்தில் நண்பர்கள் வருவதை பார்த்தவன் அவளை கைத்தாங்கலாய் அழைத்து வாயில் நோக்கி நடந்தான்.
"ஜானு... அடுத்து நாம மீட் பண்ற வரை இந்த பாட்டை கேட்டுட்டு இரு." அவனை கேள்வியாக பார்க்க
"பாரதியார் பாட்டு... இது நமக்கான பாட்டு... லிங்க் ஷேர் பண்ணியிருக்கேன். ஓகே! Bye ஜானு"
🎶🎶🎶
எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ, சிறு கள்ளி!
இந்தநேரத்தி லேமலை வாரத்தி லே நதியோரத்தி லேயுனைக் கூடி
நின்றன்வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி - குழல் பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை யோரத்திலே அன்பு சூடி - நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து மொழிவது கண்டாய் - ஒளிக் கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினி லேயொன்று பட்டு - நின்றன் பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்
பின்ன மறச் செல்லவிட்டு - அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே!
நினைச் சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)
🎶🎶🎶
Word count: 2928
Date published: 10 April 2023
AN:வணக்கம் மக்களே!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
NO violence, please!
Me ரொம்ப பாவம்😌😁
குடும்ப இஸ்திரின்னா சும்மாவா?🙈
செம்ம டென்ஷன்🤕
வீட்டுல ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உடம்பு முடியாம ஆயிடுச்சு.
எனக்கும் வலது கையில ஒரு பிரச்சனை. Severe pain, endha medicine eduthum effect illa. Rheumatism ah irukumnu sandhegapadranga doctor. Xray, blood test etc ellam edukanumam...
Thanks for waiting patiently for the update 🫶🫶🫶
and meendum sorry🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro