Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 36

பூரணி சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, அவளை பார்க்கையில் நெஞ்சம் கனத்தது சுகந்திக்கும் ஷர்மிளாவிற்கும்.

சுகந்தி ஒரு பரிசு பொருளை அவளிடம் கொடுத்து, "advanced happy birthday பூகுட்டி. இது என்னோட, அர்ஜுனோட கிஃப்ட் உன் பிறந்த நாளுக்கு. இதை நீ இன்னிக்கு கட்டிக்கணும்னு விருப்ப பட்டோம். ஆனா உன்னை கம்பல் பண்ணலை... ஒரு நிமிஷம் நினைச்சு பாக்கவே பயமா இருக்குடா."

அவளை அணைத்துக்கொண்டு கண்கலங்கினாள் சுகந்தி. மீண்டும் அதைப்பற்றி நினைத்துப் பார்க்ககூட வலுவில்லை பூரணியின் மனதில். பெரியோர்கள் கூற்று படி, நடந்தவை நன்மைக்கே என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவை என்ற எண்ணம் உதித்தது.

"உண்மையா எனக்கு மறுஜென்மம் தான் சுகி. ஏன் தெரியுமா?" அணைப்பிலிருந்து தோழியை விடுவித்து "உன் எங்கேஜ்மெண்ட்ல chief guest நான் இல்லாம எப்படி? அதான் அந்த எம தர்மராஜா கூட சண்டை போட்டு ஓடிவந்திட்டேன்" கண்சிமிட்டி சிரித்து அவளை உற்சாகப்படுத்த முயற்சித்தாள்.

முகத்தை சுழித்த சுகந்தி அவள் கன்னத்தில் இடித்து, "அண்ணன் தங்கச்சி ரெண்டும் ஒண்ணா நம்பர் மென்டல்."

"சரி சரி சைத்தான்ஸ். நம்ம performanceக்கு யாரும் ஆவார்ட் குடுக்கபோறது இல்லை. ரெடி ஆகுங்க கமான் கமான்" ஷம்மு விரட்டினாள்.

மயில் கழுத்து நீலம் பச்சை இரண்டும் கலந்த டபுள் ஷேட் பட்டு புடவை, தோதாக கல் பதித்த நகைகள் அணிந்திருந்த சுகந்திக்கு கூந்தலை கர்லிங்க் செய்து முடித்தாள் ஷர்மிளா.


"அக்கா சூப்பர்! professional beautician மாதிரி பண்றீங்க."

"நல்லா இருக்கா டி பூகுட்டி? இந்த ஸ்டைல் சூட் ஆகுதா?" கண்ணாடி வழியாக பூரணியை பார்த்து கேட்டபடி கையில் கண்ணாடி வளையல்களை அடுக்கிக் கொண்டாள் சுகந்தி.

பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்து அவளது கருத்தை தெரிவித்தாள் பூரணி.

வெட்க புன்னகை இதழில் படர
"அது.. அர்ஜுன் எப்பவும் சொல்லிட்டே இருக்கானா... அதான் கொஞ்சம் வேற மாதிரி ஸ்டைல் பண்ண சொன்னேன் அக்காவை. Beautician கூப்பிட கொஞ்சம் தயக்கமா இருந்தது. அவங்க இஷ்டத்துக்கு எதையாவது செஞ்சுட்டு இதுதான் மேடம் சூட் ஆகுதுன்னு சொல்லிடுவாங்க."

காதல் கொண்டவனின் கண்ணும் மனமும் தன்னையே சுற்றி வரவேண்டும், அவன் மட்டும் ரசிக்கவே தன்னை அலங்கரித்து கொள்ள வேண்டும் என நினைப்பது பெண்களின் இயல்புதானே?

"இதுல என்ன சந்தேகம்? என் சுகு குட்டி பேரழகி தான்.
பெரிய அம்மு ஸ்டைல்ல சொன்னா நல்லா விக்ரகம் மாதிரி இருக்க" அவரை போலவே திருஷ்டி சொடுக்கினாள்.

"என் மாமியாரை கிண்டல் பண்ணாதடி பூகுட்டி" முகம் சுருக்கி பொய் கோபம் காட்டினாள் சுகந்தி.

"ஐய்ய தோ டா! மாமியரை சொன்னா இந்தம்மாக்கு கோவத்தை பாரேன்"

"ஏய் லூஸ் ஃப்ளவர் பேபி! நீ ப்ரோவை கல்யாணம் பண்ணினா, அவங்க உனக்கும் மாமியார் தான்."

சுகந்தியை எழுந்து நிற்க சொல்லி அலங்காரத்தை சரி பாரத்து திருப்தி பட்டுகொண்டாள் ஷம்மு.

"நீ இங்க வா" அவளது சக்கர நாற்காலியை ஜன்னலருகே நிறுத்தி "இந்த window பிடிச்சிட்டு எழுந்து நின்னு டிரஸ் மாத்து. ஸாரி மட்டும் நான் கட்டிவிடுறேன். ஓகே? கால்ல பெயின் ரொம்ப இருக்காடா? நிக்க முடியுமா?"

"அதான் இன்ஜெக்ஷன் போட்ருக்காங்களே..."

அறையின் குறுக்கே துணி உலர்த்த கட்டப்பட்டிருந்த கயிற்றில் ஒரு போர்வையை பிரித்து போட்டு மறைவு ஏற்படுத்தி கொடுத்தாள் ஷம்மு.

"சேஞ்ச் பண்ணிட்டு சொல்லு அதுக்குள்ள i will get ready."

அடுத்த பத்து நிமிடத்தில் ஷர்மிளா மிக எளிமையாக ஆனால் நளினமாக வெந்தய மஞ்சள் நிற டிசைனர் புடவையில் தயாராகியிருந்தாள்.


"எப்படி கா இப்படி மின்னல் வேகத்துல தேவதை மாதிரி வந்து நிக்கறீங்க? என் அழகு மிலி கா" சுகந்தி அவளை மெச்சியபடி புகைப்படம் எடுத்தாள்.

"What to do my dear shaitaan? இன்னிக்கு எனக்கு பேபிசிட்டிங்க் வேலையோட சேத்து பியூட்டிஷியன் வேலை ஆல்ஸோ. இருங்க டி என் கல்யாணத்துல உங்க ரெண்டு பேர் இடுப்பையும் உடைக்கறேன்"

கடைசியில் பூரணி தயாராகும் முறை வந்ததும், "ஏய் பூ குட்டி இன்னிக்கு நீ வாயை மூடிட்டு இருக்க. உன்னை பாத்துட்டு அண்ணா விழுந்தடிச்சு ஓடி என் மாமனார் கிட்ட உங்க லவ்வை சொல்லிடணும். என்ன மிலி கா?"

மெல்ல வாக்கர் பிடித்து நின்றபடி சிரமப்பட்டு தோழிகளின் உதவியோடு புடவையை கட்டி கொண்டாள்.

"என்ன சுகு இது ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போல? ஏன் இப்படி பண்றீங்க ரெண்டுபேரும்?" புடவையை பார்த்ததும் பூரணிக்கு சற்றே வருத்தமாக இருந்தது.

"ஆமா ஃப்ளவர் பேபி இதோட விலை one lakh rupees, ப்ப்ச்ச்ச்... அர்ஜுன் அவனோட சேவிங்க்ஸ் எல்லாம் செலவு பண்ணிட்டான், உன்னால. பாவம்!"
புடவையில் மடிப்பு எடுத்தபடி ஷர்மிளா கிண்டலடித்தாள்.

"அக்கா" சிணுங்கினாள் அவள்.

"மவளே சென்டி சீன் போட்ட safety pin வச்சு குத்திருவேன். சுப்"

பன்னீர் ரோஜா நிறத்தில் இளஞ்சாம்பல் நிற பார்டர், அதில் வெள்ளி நிற சரிகை வேலைபாடுகள் அமைந்த சில்க் காட்டன் சேலை, டிசைனர் பிளவுஸ்.

மேலும் தொடர்ந்தது அவர்களின் கிண்டல் பேச்சுக்கள். தன்னவனுக்காக அவளுமே அன்று அதிக ஆர்வமாய் தயாரானாள். சோதனைகளை கடந்து நிலைத்து நின்ற அவர்களது அன்பும் பிணைப்பும் அவளுக்கு தனி உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்தது.

"ரொம்ப தான் ஓட்டுறீங்க ரெண்டு பேரும்! ஆமா நிச்சயம் உனக்கா எனக்கா டீ சுகந்தி? மணி கணக்கா எனக்கு அலங்காரம் பண்ணுறீங்க" அவளின் செல்ல சிணுங்கலை செவி சாய்க்க வில்லை அவர்கள்.

அலங்காரத்தை முடித்து விட்டு கடைசியில் தான் அவளை கண்ணாடி பார்க்க அனுமதித்தனர். அறை கதவை திறக்கவும் யமுனா, கோகிலா, பத்மா, காவேரி அனைவரும் வரவும் சரியாக இருந்தது.

அன்னையரின் கண்கள் பனித்தது. "மூணு பேரும் அழகா இருக்கீங்க டா" என கன்னத்தில் மூவருக்கும் சிறிதாக திருஷ்டி பொட்டு வைத்தார் பத்மா. காவேரி அவர்களை வாஞ்சையாக கொஞ்சிவிட்டு ஆசிர்வதித்தார்.

கோகிலா மகளை பார்த்து ஆச்சரியபட்டு அருகே மண்டியிட்டு அமர்ந்து உச்சி முகர்ந்தார்.

"அன்னம்...எவ்வளவு அழகா இருக்க டா. அப்பா பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க" கண்கள் பனிக்க.
"ஆமா இந்த சாரி..?"

"அர்ச்சுணா அண்ட் இந்த அதிகபிரசங்கியோட பர்த்டே கிஃப்ட்" தோழியை மெல்ல கிள்ளுவது போல பாவனை செய்து "இன்னிக்கு ஸ்பெஷல் டே அதனால தப்பிச்ச நீ"

"அச்சோ! என் அழகு அம்மு!" அவர் கன்னங்களை கிள்ளி கொஞ்சி, "மாம்பழ மஞ்சள்ல ரெட் பார்டர் பட்டு சாரி, வாவ்! அப்பா ஏன் இப்படி கலா மா, கலா மான்னு உருகி உருகி டாவடிச்சாங்கனு இப்ப புரியுது." குறும்பாய் கண்சிமிட்டினாள்.
"அடிக்கடி இப்படி டிரஸ் பண்ணுங்கமா நல்லா இருக்கு" என அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அனைவரும் சிரிக்க, கோகிலா வெட்கபட்டார், "போடி வாயாடி".

"பத்மா நீயும் ஷர்மிளாவும் சுகந்தியை கூட்டிட்டு மேடைக்கு பக்கத்துல அந்த ரூம்ல போய் இருங்க ஐயர் கூப்பிட்டதும் வந்தா போதும்."
காவேரி அவர்களோடு பேசியபடி அழைத்துச் சென்றார்.

"கோகி, நீ இந்த தாம்பாளத்தை கொஞ்சம் எடுத்துக்க.. நான் ரூமை பூட்டிட்டு வரேன்" யமுனா அறையை ஒரு முறை பார்த்துவிட்டு பூட்ட, பூரணி அவருக்காக காத்திருந்தாள்.

"என்ன பெரிய அம்மு ஒண்ணுமே சொல்லலை என்னை பாத்து? நல்லா இருக்கா அண்ணவோட கிஃப்ட்?"

"நான் கேட்டதுக்கு நீ கூட தான் பதில் சொல்லலை..."
செல்ல கோபத்தோடு நொடித்துக் கொண்டார்.

அவள் சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வர அவளுக்கு ஈடாக மெல்ல நடந்தார்.

"புரியலை அம்மு"
நடை மேலும் நிதானித்து இருவரும் ஒரு இடத்தில் நின்றனர்.

"காலைல கேட்டேனே டி? கல்யாணத்தை பத்தி... வெளியூரு மாப்பிள்ளைனா பண்ணிக்குவியானு கேட்டேன். இப்ப பதில் சொல்லு" என்றவர் அவளை ஆழ்ந்து நோக்கினார்.

செய்வதறியாது அவள் மௌனம் சாதித்தாள்.

"உங்க அப்பாவுக்கு வாக்கு குடுத்தியாமே கல்யாணம் பண்ணிக்கறேன்னு, கோகி சொன்னா. நழுவ பாக்காத. உங்க மாமாவோட பால்ய நண்பர், அவரு பையன் இங்க மெட்ராஸ்ல படிச்சிட்டு பாம்பேல வேலையா இருக்கான் அவனுக்கு பேசலாம்னு இருக்காரு உன்னை உன் மாமா. என்ன சொல்ற? இன்னிக்கு வர்றாங்க ஃபங்ஷனுக்கு".

அவர் கேள்வியிலும் தொனியிலும் அழுத்தத்தை உணர்ந்தாள்.

"அப்பாட்ட ரெண்டு வருஷம் டைம் கேட்ருக்கேன். அதோட உங்க எல்லாரையும் விட்டு இருக்க முடியாது பெரிய அம்மு. என் அம்மா அப்பா மாதிரி தான் நீங்க எல்லாரும் எனக்கு. வெளியூரெல்லாம் பண்ணிக்க முடியாது" சுருதி இறங்கிய குரலில்.

அமைதியாய் அவளை உற்று நோக்கினார் யமுனா, பூரணி செய்வதறியாது தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

"அப்ப இந்த உள்ளூர் மாப்பிள்ளை ஓகே வா"?

அவள் முகத்தை நிமிர்த்தி எதிர்புறம் திருப்ப, அங்கே விஷ்வா நின்றிருந்தான் காவேரியோடு ஏதோ பேசியபடி.

பட்டான் சூட் (Pathan suit) எனப்படும் பாணியில் வெள்ளை நிறத்தில் லக்னவி குர்தியும், சாம்பல் நிறத்தில் பட்டியாலா பேண்டும் அணிந்திருந்த விஷ்வாவை பார்த்து சொக்கி போனாள் பூரணி. மீண்டும் அவளை தன் புறம் திருப்பினார் யமுனா. அவனின் மாயையில் கட்டுண்டவள் கண்கள் யமுனாவின் மீது ஆனால் கருத்தும் கவனமும் அவளவன் மீது!


"ஏன் பூரணி லவ் பண்றியாடீ என் புள்ளையை?"

ஜிவ்வென்று கன்னம் சூடேற, பயத்தில் இதயம் புல்லட் ரயில் வேகம் எடுத்தது பூரணிக்கு. செய்வதறியாமல் மருள மருள விழித்தாள்.

"அவனுமா?"

அவள் முக பாவமே அவரின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தது.

"விஷ்வா"! அவனை அருகே அழைத்தார்.

"சொல்லுங்க சித்தி" என்றபடி அருகே வந்தான்.

"இப்ப பதில் சொல்றியா இல்லையா?" பூரணியிடம் கண்டிப்புடன் ஒலித்தது யமுனாவின் குரல்.
"உக்காரு டா இப்படி".

இருவரையும் பார்த்து சற்று கோபமாக,
"கொஞ்ச நாளாவே உங்க ரெண்டு பேரையும் கவனிச்சுட்டு தான் இருக்கேன். இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் மதியம் மாடியிலேருந்து இறங்கி வந்தப்ப ஊர்ஜிதம் ஆச்சு. சொல்லு டா விஷ்வா, நீ பொறுப்பானவன்னு நம்பறேன். என் அக்காவுக்கு கெட்ட பேர் வாங்கி வச்சிடாத".

"சித்து..." விஷயத்தை புரிந்து கொண்ட விஷ்வா பேச ஆரம்பித்தான்.

"நாங்க லவ் பண்றோம், சின்ன வயசுலேருந்தே. அவ வீட்ல தெரியும். அம்மாவுக்கும் தெரியும். அவளோட மெமரி லாஸ்னால அவ என்னை மறந்துட்டா. அதானல யார்கிட்டேயும் சொல்ற நிலைமை இல்ல. உங்களுக்கே தெரியுமே, கம்பல் பண்ணி நினைவுக்கு கொண்டு வர முடியாத நிலை. நான் ஊர்லேருந்து வந்தபிறகு அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு வந்தது.

நம்ம வீட்டுக்கு போன பிறகு இன்னும் விவரமா பேசலாம் சித்தி. அர்ஜுன் சுகந்திக்கு கூட இப்ப தான் சமீபத்துல எங்க விஷயம் தெரியும்."

"எத்தனை நாள் மறைக்கறதா ப்ளான்? அர்ஜுன் சுகந்தி விஷயத்துல இவரு எவ்வளவு கோவப்பட்டாரு நினைவு இருக்கா?"

"சித்தப்பா எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னு தான் பயம் எனக்கு."

"எனக்கும் ரெண்டு மூணு நாளா அந்த பயம் தான் அம்மு.."

குரல் தழுதழுக்க பூரணி பேச தொடங்கியதும் அவனை போக சொன்னார்.

"சித்து.." என தயங்கினான்.

" போ டா... சித்தப்பா இங்க தான் வராங்க" பல்லை கடித்து முணுமுணுப்பாக பேசினார்.

"என்ன மா நடக்குது? என்ன சொல்றாங்க ரெண்டு பேரும்?" முதுகுக்கு பின்னால் கேட்ட அவர் குரல் இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஒண்ணுமில்லைங்க, பூரணியை பத்தி டாக்டர் என்ன சொன்னாருனு இப்ப தான் கேட்டேன் நீங்களும் வந்துட்டீங்க... ஹஹஹ..
சொல்லு டா என்ன சொன்னாங்க டாக்டர்?"

அவன் மளமளவென எல்லாவற்றையும் ஒப்பித்து விட்டு எழுந்து ஓட முயற்சிக்க, அவனை கையமர்த்தினார் மூர்த்தி.

"இரு தம்பி. ஆமா காலுல அடிபட்டிருக்கு மா புள்ளை எப்படி மாடி ஏறுவா? கீழ் வீடா இருந்தாலும் பிரச்சினை இல்லை, நம்ம காலனில லிஃப்ட்டும் கிடையாது...ம்ம்ம் "
மூர்த்தி யோசனையாக கண்மூடி முன் நெற்றியை தடவி கொண்டிருந்தார்.

"ம்ம்ம்...யாராச்சும் உங்க பொண்ணை தூக்கிட்டு போக வேண்டியது தான்"

யமுனா இருவரையும் பார்த்து உதட்டை சுழித்து நக்கலாக சிரித்தார். அதிர்ந்து விழித்தனர் இருவரும்.

பலமாக சிரித்த மூர்த்தி, "ஏன்மா அவளை பாப்பானு கூப்பிடுறோங்குறதுக்காக அவளை தூக்கிட்டு போக முடியுமா? "

அவர் யோசனையில் இருக்க, அவர் மொபைல் ஒலித்தது. "உன்னை கூப்பிட வந்துட்டு நான் பாட்ல பேசிட்டு இருக்கேன். வா போகலாம்."

"தம்பி அவளை அழைச்சுட்டு வா டா"
யமுனா சத்தமாக கூறிவிட்டு, அவர்களுக்கு மட்டும் கேட்கும் படி,
"கூமுட்டைங்களா, என்கிட்டயே இப்படி பயந்தா அவர்ட்ட என்ன பண்ண போறீங்களோ? வந்து தொலைங்க"
ஓட்டமும் நடையுமாக கணவன் பின்னே சென்றார்.

"நான் கூட பெரிய அம்மு நிஜமா கோவிச்சுகிட்டாங்கனு நினைச்சேன்.."

"போலாமா ஜானு" சக்கர நாற்காலியை தள்ள தயாரானான் விஷ்வா.

"என்னை தூக்கிட்டு போறியா மாமா" என்று ரகசியமாய் கேட்டு கண்ணடித்து விட்டு சக்கர நாற்காலியை தானே உருட்டிகொண்டு போனாள்.

விஷ்வா பே வென்று விழித்து நிற்க, "பெரிய மாமஸ் என்ன நின்னுட்டே டீரீம்ஸா?" கார்த்தி அவனை உசுப்ப. "வாங்க உங்களை அர்ஜுன் மாமா தேடுறாங்க".

~~~~

மேடையில் சுரேஷ் பத்மா சுகந்தி ஒருபுறம் அமர்ந்திருக்க, அவர்கள் பக்கம் பத்மா மற்றும் சுரேஷ் குடும்பத்தின் முக்கியஸ்த்தர்கள்.

மறுபுறம் மூர்த்தி, யமுனா, அர்ஜுன். அவர்கள் அருகே ஆதர்ஷ், காவேரி ஆகியோர் இருந்தனர் இவர்களோடு விஷ்வாவும் இணைந்து கொண்டான்.

நிச்சயதார்த்த விழா தொடங்க, அவ்வப்பொழுது இருவரின் பார்வையும் சந்தித்து கொள்வதும், விலகுவதுமாக இருந்தது. அவளை மேடைக்கு வருமாறு அர்ஜுன் சைகை காட்ட; கார்த்தி, ஷர்மிளா ஆதர்ஷ் மூவரும் அவளை கைத் தாங்கலாக பிடித்து மேடையேற்றினர்.

அப்பொழுது தான் அவள் புடவையில் இருப்பதை கவனித்தான். ஷம்முவிடமும் ஆதர்ஷிடமும் எதையோ பேசியபடி நின்றவளை அணு அணுவாக ரசித்து கொண்டிருந்தான்.

கார்த்தி ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து அவளை மேடையில் உட்கார சொல்ல, அவனை கன்னம் கிள்ளி கொஞ்சி அவள் நன்றி கூறியதும், இங்கே வெந்து புகைந்தான்.

"ஏன் டா அண்ணா, life boat அரேஞ்ச் பண்ணணுமா?" அவன் விழிக்க, "இல்ல.. ஜொள்ளு ரொம்ப ஓவரா ஊத்துது, வேட்டியெல்லாம் நனைஞ்சு போச்சுடா.. அதான் வெள்ளம் வந்தா...ஸ்ஸ்ஸ் ஆ அம்மா..."

அர்ஜுன் பேசிக் கொண்டிருக்கையில் தொடையில் கிள்ளினான் விஷ்வா.

"அடக்கி வாசி டா அரை டிக்கெட்டு. நியாயப்படி நானும் அவளும் இங்க உக்காந்திருக்கணும். எதோ நீ சீனியர் மாதிரி நினைப்பு வேணாம் தம்பி."

சத்தமில்லாமல் தம்பியை மிரட்டிவிட்டு தன் வேலையை மீண்டும் தொடர்ந்தான்.

புடவையின் நிறத்திற்கு தோதாய் கை நிறைய கண்ணாடி வளையல், காதிலும் கழுத்திலும் black metal set, கூந்தலை தளர்வாக பின்னி மல்லிகை சரத்தை சூடியிருந்தாள். அவளிடம் ஏதோ ஒன்று வித்தியாசமாக பட, உற்று கவனித்தான்.

'கண் மை, பொட்டு எல்லாம் எப்போதும் வைக்கிறது தான்...ம்ம்ம் வேற'
யோசித்தவனை அவள் சுகந்தியிடம் பேசி கலகலத்து சிரித்தது ஈர்த்தது.

'ராட்சசி... லிப்ஸ்டிக் போட்டுருக்கா. லிப்ஸ்டிக் போடுற பழக்கம் இல்லையே, வேணும்னே போட்டுருக்காளா?' என்ற சிந்தனை அந்த பூவிதழ்களை மீண்டும் ஸ்பரிசிக்கும் ஆர்வத்தை தூண்டியது.

ஒவ்வொரு முறையும் அவனை பார்க்கும் போதும் பூரணிக்கு மனம் சிறகடித்து பறக்க, இதயம் தனி தாள லயத்தில் துள்ளி ஆட, சுவாசம் அவன் கண்ணசைவின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் உணர்வு.

தன்னையும் மீறி, இருக்கும் சூழலையும் மறந்து தனது கவனமும் சிந்தனையும் அவனையே சுற்றி வந்ததை அவளால் கட்டுபடுத்த இயலவில்லை.

இந்த காலத்து இளைஞர்கள் பலரும் மது அருந்துவதையும் புகைப்பதையும், பல பெண்களோடு நெருக்கமாக பழகுவதையெல்லாம் பெருமையாகவும், நாகரீக வாழ்க்கை முறையென்றும் நினைத்திருக்க. அவன் இந்த சஞ்சலங்களுக்கு ஆளாகமல், ஒழக்கமாக இத்தனை வருடங்கள் தனக்காகவே காத்திருந்ததை எண்ணி பெருமை பொங்கியது.

'ஸ்டிரெஸ், கெட்ட பழக்கம், தப்பான ஃபிரண்ட்ஸ் இதெல்லாம் தவிர்க்க அவன் ஓய்வு நேரத்துல பாஸ்கெட் பால் கோச்சிங்க் குடுத்துட்டு இருந்திருக்கான் அங்கே ஒரு, குழந்தைங்க ஆசிரமத்துல. அப்புறம் ஆன்டியை கேர் பண்றது, ஜிம் போறது இதுதான் டெல்லியில அவனோட லைஃப்'
ஷம்மு முன்பு சொன்னது நினைவிலாடியது.

இன்று அவன் அணிந்திருந்த குர்தா அவனது கச்சிதமான உடற்கட்டை தெளிவாக பறைசாற்றி அவளது கவன சிதறலுக்கு காரணமானது.

'சொக்க தங்கமா இப்படி ஒரு குணம்.. செதுக்கி வச்ச கிரேக்க சிற்பம் மாதிரி...கொல்லுற டா சிவா...அப்படியே உன்னை..'

தன் எண்ண ஓட்டங்கள் போன திசையை நினைத்து கன்னத்தில் பூத்த வெட்க சாயல் அவனது கண்களுக்கு தப்பவில்லை.

உள்ளுணர்வின் உந்துதலால் அவள் பக்கம் திரும்பியவன், அவள் தன்னை மெய் மறந்து பார்ப்பதை தெரிந்து கொண்டான். கண்களாலேயே அவளை நலம் விசாரித்துவிட்டு, மெச்சுதலாய் அவளையே சில வினாடிகள் பார்த்திருந்தான். அவள் நாணத்தோடு பார்வையை தவிர்த்தாள். ஆனால் மனம் எனும் சண்டி குதிரை கண்களையும் சேர்த்து அவனிடமே மீண்டும் கட்டி இழுத்து போனது.

"சும்மா சொல்ல கூடாது பேபி, ஹவூஸ்ஃபுல்லா லைவ் ஆடியன்ஸ் வெச்சுக்கிட்டே நல்லா கண்களால் காதல் செய்றீங்க டீ ரெண்டு பேரும்" கிண்டலடித்தாள் ஷர்மிளா.

அங்கே பிரகாஷும் அவனை வாரி கொண்டிருந்தான்.

"அக்கா பிரகாஷ் சார் எப்ப வந்தாங்க நான் கவனிக்கவேயில்லை?" குழப்பமாய் அவளை கேள்வி கேட்டதும்

"அது பேபி... நீ தீவிரமா சைட் அடிச்சிட்டு அர்ஜுன் எங்கேஜ்மெண்டை மிஸ் பண்ணிட்ட. இது அவன் குழந்தையோட காது குத்து" ஷர்மிளா அவளை கலாய்க்க, அவள் திடுக்கிட்டு மேடையை பார்த்து ஊர்ஜித படுத்திகொண்டு, ஷர்மிளாவை முறைத்தாள்.

ஐயர் லக்ன பத்திரிக்கை வாசிக்க தொடங்கினார். விழாவில் இருந்த இளையவர்களின் கரகோஷ ஒலி காதை பிளக்க மாலை மாற்றி மோதிரம் அணிவித்து இனிதே நிறைவடைந்தது விழா.

உறவினர்கள், நண்பர்கள் என வாழ்த்தும் ஆசியும் வழங்க அனைவரும் மேடையை சூழ்ந்து கொள்ள போட்டோகிராபர் அவர்களை வரிசையில் நின்று வருமாறு கூறிக் கொண்டிருந்தார்.

விஷ்வாவின் கைபேசி ஒலித்து அடங்கியது அவளிடமிருந்து வந்த குறுஞ் செய்தியை அறிவித்து,

உன் காதல் போதையில்
கட்டுண்டு கிடக்கிறேனடா
மீள விருப்பமில்லை!

இதன் விலையாக
எதையும் கொடுக்க சம்மதம்.

இந்த போதையின் அடிமையாய் இருக்க விடு
காலம் முழுவதும்.

ஏழு ஜென்மங்கள்
என்பது பொய்யோ
மெய்யோ அறியேன்!

ஆனால், ஏழு ஜென்மத்தின்
காதலையும் இப்பிறவியில்
பகிர்ந்திட காத்திருக்கிறேன்
உனக்காக மட்டும்!

⚜️⚜️⚜️

Date published: 2 Dec 2022

Word count: 1794

AN:
வணக்கம் மக்களே! கதையை வாசித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏🙏❤️❤️❤️

Small updatenu ஃபீல் பண்றீங்களா? எனக்கும் தோணுச்சு ஆனா பூரணியோட அந்த கவிதைக்கு பிறகு எதை எழுதுனாலும் அந்த moment spoil ஆனா மாதிரி இருக்கும்.

உங்க ஆதரவுக்கு உளமார்ந்த நனறிகள்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro