பாகம் 33
காலை சந்திப்பிற்கு பின், ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் போதும், நேருக்கு நேர் சந்திக்கும் போதும் பார்வை பரிமாற்றங்களும், ரகசிய புன்னகைகளும், சங்கேத மொழிகளும், காணாத நேரம் அலைப்புறும் பார்வையுமாய் தனி உலகில் விஷ்வாவும் பூரணியும் சஞ்சரித்தனர். மீண்டும் தனிமையில் சந்திக்கும் வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருந்தது இரண்டு மனங்களும்.
இரண்டு குடும்பங்களின் உறவினர்களும் சில நெருங்கிய நண்பர்களும் வர தொடங்கியிருந்தனர். பூரணியிடம் தனியே பேசும் வாய்ப்பு கிடைக்காததால், சுகந்தியும் ஷம்முவும் உடை மாற்றும் சாக்கில் அவளை விசாரித்து, ஆசை தீர அவளை கேலி செய்து, சந்தோஷத்தில் பூரித்து பின் உடை மாற்றி வெளியே வந்தனர்.
⚜⚜⚜
அர்ஜுன் அவளிடம் காபி எடுத்து வருமாறு கேட்டு கொண்டான். ஆதர்ஷுக்கும் சேர்த்து இரண்டு காகித கோப்பைகளில் காபியோடு சென்றாள்.
"ஏன் பூரி எனக்கு ஒரு டௌட்டு..." என சீரியஸாக அர்ஜுன் ஆரம்பிக்க
"ம் சொல்லு அர்ச்சுணா..."
"நான் இனிமே உன்னை அண்ணினு கூப்பிடணுமா?" என்றான் சிரிப்பை அடக்கி கொண்டு கடை கண்ணால் அவளை கவனித்தான்.
முதலில் யோசித்தவள் பின்னர் புரிந்ததும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென விழிக்க.
"ஏன் டீ ஆடு திருடின மாதிரி முழிக்கிற, நீ என் அண்ணன் ஹார்ட்டை தான டீ திருடின?"
திகைப்பிலிருந்து மீளாமல் ஆதர்ஷையும் அர்ஜுனையும் மாறி மாறி பார்த்தபடி மென்று விழுங்கினாள்.
"உங்க திருட்டுதனம் எல்லாம் பப்ளிசிட்டி ஆயிடுச்சு மேடம்" ஆதர்ஷும் சேர்ந்து கொண்டான்.
"தர்ஷுண்ணா..."
"ஹேய்.. டோன்ட் வொரி! வாழ்த்துக்கள் மா! அந்த குரங்கு பையனை சமாளிக்க ஹெல்ப் வேணும்னா என்னை கூப்பிடு, நான் உன் சைடு தான். ஓகே!"
பின்னர் அவனிடம் தனது தந்தையின் ஆரோக்கியம் குறித்து சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்தாள்.
'ஐயோ இவங்கலாம் கேள்வி கேட்கறதே இவ்வளவு டென்ஷனா இருக்கே. இன்னும் மூர்த்தி மாமா சுரேஷ் மாமவை எப்படி சமாளிக்கிறது?'
நகம் கடித்து கொண்டே கவனமில்லாமல் நடக்க, யார் மீதோ மோதி கொள்ள இருந்து கடைசி வினாடியில் சுதாரித்தாள்.
"Watch out" என்ற குரலிலேயே புரிந்தது ஷ்ரவன் என்று.
அவன் அவளது புஜத்தை பற்றி நிறுத்தினான். கையை விடுத்து கொண்டாள், அவன் அருகாமையும் தொடுகையும் அருவருத்தது, "ஸாரி" என்றபடி விலகி நடந்தாள்.
அவன் அரை மனதாய் கையை விடுத்து, "hey wait I want to talk you Poorani" என்று அவளை தொடர்ந்தான்.
"என்ன" விட்டேத்தியாக வந்து விழுந்தன வார்த்தைகள். சாப்பாட்டு அறையை நோக்கி நடந்தாள் விஷ்வாவை தேடி.
"You look beautiful" அவளை வழிமறிப்பது போல முன்னே வந்து நின்றான். பதில் பேச விருப்பமில்லாமல் அவனை ஏறிட்டாள்.
"நான் உன் கூட லஞ்ச் சாப்பிடலாமா? I mean, உன் பக்கத்துல உக்காரலாமா? எனக்கு உன் கூட பேசணும்."
"இல்லை. என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப நாளைக்கு பிறகு சேர்ந்து சாப்பிட போறோம்..."
அவளை இடைமறித்து,
"நீ அவங்களை டெய்லி மீட் பண்ற. The same old friends. What is new about that?" அசட்டையாய் தோளை குலுக்கினான்.
அவர்களது நட்பை அவன் துச்சமாக பேசியது எரிச்சலை ஏற்படுத்தியது பூரணிக்கு.
"ஷ்ரவன் நாங்க நாலு, அஞ்சு வயசுலேருந்து நண்பர்கள். நாங்க ஒண்ணா இருக்கும் போது எங்க வீட்டு பெரியவங்க கூட அதுல தலையிட மாட்டாங்க. நான் திரும்பவும் சொல்றேன், நீ உன்னோட லிமிட் தாண்டாத. உனக்கு இது லாஸ்ட் வார்னிங்க்".
டைனிங்க் ஹால் கதவருகே நின்றிருந்தார்கள் இருவரும், கை கழுவும் இடத்தை தாண்டி பெண்கள் ஓய்வறை பூரணியின் கண்ணில் பட, வேகமாக அந்த திசையில் நடந்தாள். அவனும் வேறு வழியில்லாமல் அமைதியாக சென்றுவிட்டான். ஷ்ரவனின் செயல்பாடுகளை பற்றி, அதுவும் அன்று காலையிலிருந்து தனித்து சந்திக்க முயல்வது பற்றியும் யாரிடமும் சொல்லாமல் விட்டது தவறு என்று உணர போகிறாள், காலம் தாழ்ந்து.
⚜⚜⚜
பூரணியை ஷம்மு தேடி வந்த போது, விழாவுக்கு வந்திருந்த உறவினர் வீட்டு பிள்ளைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர் அவளும் சங்கீதாவும்.
"ஐயோ நர்ஸரில படிக்கற பாப்பா மாதிரி, உருண்டு விளையாடிட்டு இருக்கா பாரு டா வி. ப்ரோ நீ ரொம்ப பாவம்!"
ஷம்முவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் பூரணி. விஷ்வா பதில் ஏதும் சொல்லாமல் புன்னகையோடு அவளையே பார்த்து கொண்டிருந்தான். ஷம்மு சிரமப்பட்டு அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு, சாப்பிட அனுப்பி வைத்தாள் சங்கீதாவோடு. அவன் பார்வை விலகவே இல்லை அவன் ஜானுவிடமிருந்து.
"ஜானு என் கண்டிஷன் என்னாச்சு?" என்றான் கண்ணடித்து அவளிடம். ஷம்முவின் முன் கேட்டதும் செய்வதறியாமல் அவள் விழிக்க.
இருவரையும் மாறி மாறி பார்த்த ஷர்மிளா "டேய் என்ன கண்டிஷன் டா அவ இந்த முழி முழிக்கறா?"
தலைமுடியை கோதியபடி
நமுட்டு சிரிப்பு சிரித்தவன், "கோவப்படாம இருக்கணும்னா ரெண்டு கண்டிஷனுக்கு ஒத்துக்க சொன்னேன். என்னன்னு அவளையே கேளு" உதட்டில் விஷம புன்னகை விரிய, புருவம் உயர்த்தி அவளது தவிப்பை ரசித்திருந்தான்.
அவனது எண்ணபோக்கு புரிந்தவள்,
"மிலி கா, அது ஒண்ணுமில்லை, நான் அவனை மாமான்னு கூப்பிடணுமாம். அப்பறம்..." அவள் இழுத்து நிறுத்தி அவனை பார்த்தாள்.
'ஃப்ராடு மாமா இரு என்னையா மாட்டி விட ப்ளான் போடுற?'
அவனும் அசராமல் "ரெண்டாவது கண்டிஷனை சொல்லு செல்லம்மா." அத்தனை துணிச்சலாக சொல்லிவிடுவாளா என ஆர்வமாக பார்த்திருந்தான்.
"அது.. அது... அவன்.. வந்து"
"ஹட் சைத்தான்! சொல்லித் தொலை டி!"
"உங்களை வம்புல மாட்டிவிட ஐடியா கேட்டான்".
ஒரே மூச்சாக சொல்லிவிட்டு படக்கென ஷர்மிளாவின் முதுக்குபின் ஒளிந்து அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு அங்கிருந்து ஓட்டமெடுத்தாள்.
ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து செவியில் சங்கு ஊதும் சப்தம் மட்டுமே கேட்டது விஷ்வாவிற்கு. அவனும் சிரித்து விட்டு,
"சரி டி ஷம்ஸ் போதுமா? திட்டியாச்சா? ஹாப்பியா? ஊர்லேருந்து வந்துட்டு நான் உன்னை கண்டுக்காம இருந்த கணக்கு தீர்ந்துருச்சு. ஓகே?" அவள் மீண்டும் பேச வர,
"ஏய் குள்ளி அடங்கு. உன் கோட்டா முடிஞ்சது. இதுக்கு மேல பேசின, அப்புறம் நான் உன் ஸ்டோரியை புக் போட்டு வித்துருவேன். ஜாக்கிரதை! எந்த ஸ்டோரினு யோசிக்கிறியா? நீ டெல்லில சந்தீப்போட பப்புக்கு (pub) போனது, காலேஜ்ல ஒரு கழிசடைகூட ஊர் சுத்தபோய் அந்த பொண்ணு குடிச்சிட்டு கார் ஓட்டினதால கேஸ்ல மாட்டிக்க இருந்து அமன் காப்பாத்தினது..."
"ஹஹஹ... brotheeeerrrrr..."அசடு வழிய சிரித்து சமாளிபிஃகேஷன் மோடுக்கு தாவினாள் ஷர்மிளா.
"மூரத்தி அங்கிள் caterer, hall decoration ரெண்டும் உன்னை மேனேஜ் பண்ண சொன்னாங்க இல்லை நீ போய் அந்த வேலையை பாரு ப்ரோ. Very responsible boy! நான் உனக்கு ஸ்டிராங்கா ஒரு காபி கொண்டு வரேன்".
அசடு வழிய அவன் சட்டையில் இல்லாத தூசியை தட்டிவிட்டு நல்லபிள்ளையாய் புன்னகைக்க.
"புலி பசிச்சாலும் புல்லை தின்னாதுன்னு எவன் சொன்னான்? இந்த புலியை பாரு, இப்ப சொன்னா தண்ணி ஊத்தின பழைய சோறே தின்னும்."
அர்ஜுன் பின்னாலிருந்து நக்கலடிக்க, ஷர்மிளா பொங்கி வந்த கோபத்தை அடக்கினாள்.
"டேய் சும்மா இருங்கடா. எப்ப பாரு அவளை சீண்டிட்டு... நீ போ ஷம்ஸ்" ஆதர்ஷ் அவளுக்கு ஆதரவாக பேசியதும்
"தாங்கஸ் டா தர்ஷா நீ தான் குட் பாய். இந்த ரெண்டு தடிமாடுங்களையும் அப்பறம் கவனிச்சுக்கறேன்".
⚜⚜⚜⚜
பதினோரு மணியளவில் உணவு உண்டு முடித்து அனைவரும் ஓய்வாக அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தனர். விஷ்வா ஆதர்ஷ் இருவரும் கலந்தாலோசித்து மண்டப அலங்கார வேலைகளை மேற்பார்வை பார்த்திருந்தனர்.
இங்கு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் பூரணியையே சுற்றி வந்தது அவனது கவனம்.
அதை கண்டுகொண்ட ஆதர்ஷ்,
"விஸ்வநாதா, உன் கல்யாணத்துக்கு என்ன மாதிரி டெகரேஷன் எதிர் பார்க்கிறன்னு சொல்லிடு நானும் அர்ஜுனும் பொறுப்பு."
ஆதர்ஷின் பேச்சு காற்றோடு கலந்தது, விஷ்வாவின் செவியில் ஏறினால் தானே?
ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவளை காணவில்லை என்றதும் அவள் சென்ற திசையில் தேடி போனான், அங்கே ஒரு அறையில் சுகந்தி வீட்டு உறவினர் பிள்ளைகளை சுற்றி அமர வைத்து கதை சொல்லி கொண்டிருந்தாள் பூரணி. நேரே குட்டீஸ்களிடம் சென்று, மதியம் உறங்கி ஓய்வெடுப்பவர்களுக்கு மாலை ஐஸ்கிரீம் கிடைக்கும் என்று வாக்களித்து மழலை பட்டாளத்தை கிளப்பினான் விஷ்வா.
"என்ன சிவா? ஏன் அவங்களை அனுப்பின? அவங்க அம்மா எல்லாரும் பாவம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு கூட்டிட்டு வந்தேன்".
சிறு பிள்ளைதனமாய் சலித்து கொண்டு. குவிந்து விரிந்த அவளது அதரங்களில் நிலைத்தது அவன் சித்தம்.
'நாமளே நல்லவனா இருந்தாகூட பொண்டாட்டி விட மாட்டா போலயே'!
தடுமாறும் மனதை அதட்டி அடக்கினான்.
"நீ வாயேன் கொஞ்சம்" என இறுகிய முகத்துடன் அவளை இழுத்து சென்றான், யார் கண்ணிலும் படாமல் காலையில் அவர்கள் சந்தித்த இடத்திற்கு. அவன் முக பாவத்தை கண்டதும் கொஞ்சம் பயந்து தான் போனாள்.
"என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?" என்றான் இறுகிய முகத்தோடு.
"நீ எதுக்கு இப்ப கோவப்படற?" என்றாள் முகம் சுருக்கி.
சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவன் "என்ன பண்ண? என் பொண்டாட்டிக்கு அவளை பத்தியும் அக்கறை இல்லை என்னை பத்தியும் அக்கறை இல்லை. ரொம்ப டென்ஷன் பண்றா"
பொய்யாய் சலித்து கொண்டு அவளை வளைத்து கையணைப்பில் கொண்டு வந்தான்.
"ரெண்டு தரம் அந்த பில்லர்ல இடிச்சுக்க இருந்த, ஒரு தரம் வழுக்கி விழ தெரிஞ்ச, குட்டி பசங்களோட சரியா ஓடி விளையாடுற. பேபினு கூப்பிட்டா நெஜமாவே குட்டி பாப்பா மாதிரியா நடந்துக்குவே? ஏற்கனவே ரெண்டு நாளா பட்டினி இருந்திருக்க, உடம்பு வீக்கா இருக்கும், கொஞ்சம் ரெஸ்பான்ஸிபிளா இருடி ராட்சசி".
பேசிகொண்டே அவள் முகத்திலும் கழுத்திலும் பூத்திருந்த வியர்வையை தன் கைகுட்டையால் ஒற்றி எடுத்தான். அவள் உள்ளம் அவன் அக்கறையில் பூரித்து போனது.
வெளியே காட்டாமல், "டேய் ஹல்க்! என் பர்மிஷன் இல்லாம தொட மாட்டேன்னு சொன்ன. என்னது இது?"
இருவரிடையேயும் குறைந்திருந்த இடைவெளியை சுட்டிகாட்டி கேள்வி எழுப்பியவாறு, அவன் மார்பில் கை ஊன்றி பின்நோக்கி சாய்ந்தாள் அவன் முகம் காண ஏதுவாக. அவனும் கைப்பிடியை தளர்த்தினான்.
"ஹய்! இதுகூட நல்லாயிருக்கு சிவா" அவளை அழகாய் தாலாட்டுவது போல இடம் வலமாக ஆட்ட கிட்டதட்ட இரண்டு நிமிடம் அவனது கையில் ஒய்யாரமாய் சாய்ந்து ஊஞ்சல் ஆடினாள். சந்தோஷத்தில் பூரித்த அவளது முகம் அவனுக்கு அத்தனை பேரின்பத்தை அளித்தது.
"அதுவா செல்லம்மா, மாமா னு கூப்பிடாததுக்கு ரிமைண்டர்"
அவள் ஏற்படுத்திய இடைவெளியை குறைத்து சட்டென அவளை தன்னருகே இழுத்து கொண்டான்.
"ஓ! ஓகே ஓகே! ஸாரி மாமா, மறந்துட்டேன் மாமா, இப்ப நான் போகட்டா மாமா?" என விடுவித்து கொள்ள முயல, நடக்கவில்லை.
"ம்ம்ஹும்" மறுப்பாய் தலையசைத்து மேலும் அணைப்பை இறுக்கினான், முகத்திலிருந்து விழி அகற்றாமல்.
"சரியான அனகோன்டா, விடு சிவா" என முகம் சுழித்து திமிற, அவளின் ஒவ்வொரு செய்கையையும் அவன் ரசிக்கவே செய்தான்.
"அதென்ன பேரு செல்லம்மா அனகோன்டா?" புருவம் நெறித்து, தலை சாய்த்து அவன் வினவ, தடுமாறிக் கொண்டிருந்த பெண் மனம், மையல் கொண்டது.
"ம்ம்ம்.. எலும்பெல்லாம் நொறுங்கற மாதிரி கட்டி பிடிச்சிருக்கியே அதுக்கு தான்" முகத்தில் வெட்கமும், பொய் கோபமும் போட்டியிட்டன.
"நான் மட்டும் உன்னை அழகழகா பேரு வச்சு கூப்பிடுவேனாம், நீ எனக்கு அனிமல்ஸ் பேரா வைப்பியாம். என்ன அநியாயம் ஜானு இது? Buddy bear, angry bird இப்ப Anaconda..."
அவள் அழைக்கும் செல்லப் பெயரையெல்லாம் பட்டியலிட்டதும் அவள் கிளுக்கி சிரித்தாள்.
"ஓ buddy bearனு பேரு வச்சதால தான் கரடி மாதிரி தாடி வளர்த்திருக்கியா சிவா?" அவன் தாடையை வருடினாள்.
"ஓ! கிண்டலூ... இந்த கிண்டலுக்கும் அனிமல்ஸ் பெட் நேம் வச்சதுக்கும் இப்ப பனிஷ்மெண்டு குடுத்தே ஆகணுமே. நல்லா வாட்டமா கைகுள்ள வேற இருக்க.." சுற்று முற்றும் பார்த்தான் "இங்கேயும் ஈ காக்கா இல்லை.. ஸோ..."
அவன் பார்வை அவளை ஊடுருவ, லேசாக படபடத்தது அவள் இதயம், வாய் தந்தி அடித்தது.
"என்ன... என்ன பனிஷ்... பனிஷ்..."
அவள் முகம் முழுவதும் கண்களால் அளந்தவனின் பார்வை அப்பட்டமாக இதழில் வந்து தேங்கியது. இதழ் நோக்கி அவன் மெல்ல குனிய, இனிமையான தவிப்பும், தயக்கமும் முரண்பாடாக அவளை வாட்ட,
மைவிழிகள் தானாய் மூடியது.
"One selfie please" என்றான் ரகசியமாய் காதருகில்.
சட்டென விழி திறந்தவளுக்கு அவனது சேட்டை புரிந்ததும், நாணத்தில் சிவந்த முகத்தை வேறு புறமாக திருப்பி கொண்டாள். வெட்கத்தில் முகம் சிவந்து நின்றவளை பார்த்தவனுக்கு செவ்வல்லி பூவோடு ஒப்பிட்டு பார்க்கவே தோன்றியது.
அதை வெகுவாய் ரசித்தான்,
"ஏன் பேபி? எப்ப பாரு இந்த traffic signal on பண்ணிவிடுறியே எதுக்கு?" அவள் சிவந்த கன்னத்தை ஒற்றை விரலால் வருடிவிட்டு தட்டினான்.
"ஸ்டாப் எல்லை தாண்டாதேனு சொல்றதுக்கா இல்லை..."
"ம்ம்ம்.. மாமா உன் மேல எனக்கு கன்னாபின்னானு லவ்ஸு டா னு சொல்றதுக்கு" கண்சிமிட்டி அவள் பேசிய கொஞ்சல் மொழியில் கிறங்கினான்.
"ஆஹான்!" தோரணையாய் ஒற்றை புருவம் உயர்த்தி, "எனக்கு என்ன தோணுது தெரியுமா?" ஆவலாய் அலைபாய்ந்தது அவள் கண்கள் "விஷ்வா நீ எவ்வளவு லக்கிடா னு சொல்றதா தோணுது."
அவள் நெற்றியோடு நெற்றி ஒட்டி, கண்களை மூடினான்.
அன்பின் மிகுதியால் சில நேரங்களில் பேச்சற்ற நிலையை எட்டி விடுவது சாத்தியம். அப்படிபட்ட மோன நிலையில் சஞ்சரித்தனர் இருவரும். நேசம் கொண்டவர்களின் மனதை எடுத்துரைக்கையில் சில சமயங்களில், மனிதன் கண்டுபிடித்த மொழியோ அதன் வார்த்தைகளோ நியாயம் செய்வதாய் தெரியவில்லை.
காதல் உணர்வுபூர்வமானது அல்லவா? செயல்களாலும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தினாலும் அந்த அன்பு உண்மையாக உணரப்படும் போது அர்த்தமுள்ள மௌனமே போதுமானதாக ஆகிவிடுகிறது.
அவன் மார்பில் தஞ்சமடைந்தாள். காற்று புகாத அளவு அவனை இறுக்கி அணைந்திருந்த போதிலும் அந்த அணைப்பில் வேறு உணர்வுகள் தூண்டபடவில்லை.
உனக்கு நான் எனக்கு நீ என்னும் அன்பும், புரிந்துணர்வும், உறுதியும், நம்பிக்கையும் தான் இருந்தது. இருவருமே கண் கலங்கி நிற்க, விஷ்வா அவள் உச்சியில் முத்தமிட்டு தனக்குள் அவளை பொத்தி வைத்து காத்துவிட துடித்தான். கைவிலக்கினால் மீண்டும் அவளை பிரிய நேரிடுமோ என்ற ஒரு பதட்டம் அவனுள் மெல்லிய கோடாய் உயிர்ப்போடு ஓடியது.
சில நிமிட அமைதிக்கு பின் விலகினர் இருவரும். தனது சட்டை பையிலிருந்து கைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
வாட்ஸ்ஆப் புலனத்தில் அமன்தீப்பிற்கும் அவனுக்கும் நடந்த உரையாடல்.
"நீ கொடுத்த ஐடியா! அமன்தீப்பும் அவன் வைஃப்பும் பவித்ராவுக்கு கார்டியனா இருக்க சம்மதிச்சிருக்காங்க. அவன் ஏற்பாட்டுல பவித்ராவும் அவங்க அம்மாவும் சென்னைக்கு வராங்க. அவனே ஒரு கவர்ன்மெண்ட் ஹோம் பார்த்து சொல்லியிருக்கான்."
முகம் கொள்ளா சந்தோஷத்துடன் அவனையும் கைபேசியையும் மாறி மாறி பார்த்தாள். கண்களில் கண்ணீர் துளிர்க்க உள்ளம் நெகிழ்ந்தது அந்த குழந்தை அனாதை ஆவதிலிருந்து காப்பாற்றப்பட்டதில். அவன் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் துளிர்க்க, லேசான விசும்பலோடு அவனை அணைத்துக்கொண்டாள்.
"இப்போ பாப்பா safe தான் இல்லை?"
"ம்ம்ம்... இன்னும் சொல்லப் போனா அமன் மனைவி பவித்ராவை தத்து எடுக்க தயார்னு சொல்றாங்க. அவங்க சிஸ்டர் adopted child, அதனால அவங்க பேரண்ட்ஸ் மாதிரி இவங்க இதை ஒரு லட்சியமா வச்சிருக்காங்க."
"கீழ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு செல்லம்மா" என்றான். அவள் நகர்வதாய் இல்லை. "ஜானு வா யாராவது தேட போறாங்க உன்னை" என்று தன்னிடமிருந்து அவளை விலக்கினான்.
நிமிர்ந்து அவன் முகத்தை கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.
பின் தன் கை கொண்டு அவன் கண்களை முட, "ஏய் என்ன பண்ற"? என்று சிரித்தான். அதுவும் அவளை சோதிக்க அவன் வாய் மீது இன்னொரு கை கொண்டு மூட, சட்டென அவள் உள்ளங்கையில் முத்தமிட்டான்.
"போடா ஃப்ராடு" என செல்லமாக கடிந்து கைகளை விலக்கினாள்.
"எதுக்கு இப்படி பண்ணின? என் மூஞ்சி அவ்வளவு பயங்கரமாவா இருக்கு?"
"ம்ம்ம்..மேக்னட் மாதிரி இழுக்குது உன் கண்ணும், ஸ்மைலும் என்னால உன்னை விட்டு போக முடியலை" என்றாள் அவன் சட்டையின் முன் பகுதியை பற்றியவாறு "வேட்டி டார்க் கிரீன் ஷர்ட்ல அழகா இருக்க டா" முகத்தில் நாணம் குடி கொள்ள.
சட்டென அவள் முகம் பிரகாசமானது.
"அந்த பாட்டு கேட்டுருக்கியா மாமா? காந்த கண்ணழகா... அப்புறம் ஏதோ வரும்.. முத்து பல்லழகா..அது உண்மை தான் உன் விஷயத்துல" ஏதோ அறிவியல் சாதனையாளர் போல் பெருமிதம் பொங்க. அவனுக்கு அவளை ரசித்து முடிக்க நேரம் போதாது என தோன்றியது.
"அப்படியா பேபி? ஆர் யூ ஷ்யூர்?" என்றான் புருவம் உயர்த்தி "எங்க அதை ஃபுல்லா பாடு" என்றதும்
'சிக்கிட்டோமோ?' என சிந்தித்து அவள் பதட்டமாக பாட்டை மனதில் பாடி பார்த்தாள்.
"நான் வேணா ஹெல்ப் பண்ணவா பேபி?" என்று அந்த பாட்டின் வரிகளை தேடி பிடித்தான் மொபைலில் அவளை அணைப்பிலிருந்து விடாமல்.
"சத்தமா படி பேபி" அவளிடம் நீட்டினான்
'காந்த கண்ணழகா,
டக்குனு தான் தட்டி தூக்கும்
முத்து பல்லழகா
முத்தம் ஒண்ணு தா டா'
படித்து முடித்ததும் பக்கென்று இருந்தது அவளுக்கு.
குனிந்து காதருகே கிசுகிசுத்தான்.
"படிச்சிட்டியா பேபி? எனக்கு பொண்டாட்டி சொல்லே வேதவாக்கு பேபி. நீ சொன்ன மீதியும் உண்மையிக்கிடவா?"
🎶🎶
வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்
நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூ வாசம் போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் சேராதோ..
ஹே... வெண் முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம்
பொன் காலடி படும் போதிலே பூந்தென்றல் பாடும்
பார்வை பட்ட காயம் பாவை தொட்டு காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம்
என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம்
கண்டாடும் என் நெஞ்சம்
🎶🎶
மிகவும் சிரமப்பட்டு தன் காந்த கண்ணனிடமிருந்து தன்னை பிரித்து கொண்டு வந்தாள்.
'ஒழுங்கா பவி பாப்பா பத்தி சொன்னானா கேட்டோமானு போயிருக்கலாம். அதை விட்டுட்டு, நானே என் வாயாலையே சிக்கிடுறேன். பர்மிஷன் இல்லாம தொட மாட்டேன்னான் அப்பவே இவ்வளவு கேடி வேலை பண்றான், என்னமோ மயக்கறான் ஃப்ராடு.'
தனக்கு தானே பேசியபடி இறங்கி வந்தவள், அவன் செய்கையை நினைத்து முகம் சிவக்க; அவளை வெகு நேரமாக தேடி கொண்டிருந்த நபரின் கண்ணில் இவளின் பூரிப்பு தெளிவாக பதிந்தது அதே போல சற்று முன் விஷ்வாவும் அதே வழியாக இறங்கி போனதையும் பார்த்திருந்தார் அந்த நபர்.
Word count: 1848
Date published: 31 July 2022
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro