Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 31

கோவிலை சுற்றி வர துணை வேண்டும் என்ற சாக்கில் பூரணியை அழைத்து போன காவேரி அவள் விரதம் இருப்பதை மகன் மூலம் அறிந்ததால் யாரும் அறியாமல் வேறு சந்நிதியில் பரிகாரம் செய்ய வைத்தார்.

அவளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார், "ஒரு அம்மாவா நான் எப்படி உணருறேன்னு சொல்லி புரிய வைக்க முடியுமானு தெரியலை. நீ இல்லாம அவன் எப்படி இருந்தான் இத்தனை வருஷமும், இப்ப அவன் எப்படி இருக்கான் இந்த வித்தியாசத்தை கண்கூடா பார்க்கிறேன். நீங்க எப்போவோ ஒண்ணு சேந்திருக்கலாம். நான் மட்டும்.." என்றார் குற்ற உணர்வில் கண்களில் கண்ணீர் மல்க.

"நீங்க எந்த தப்பும் பண்ணலை, வீணா கில்டியா ஃபீல் பண்ணாதீங்க. மாமா மேல நீங்க அவ்வளவு அன்பு வெச்சிருந்தீங்க அதனால அவரோட பிரிவு உங்களை அப்படி பாதிச்சிருக்கு. என் அம்மா எனக்கு எப்பவுமே இனஸ்பிரேஷன். அப்பா இப்படி ஒரு பழக்கத்துக்கு அடிமை ஆனப்புறம் கூட அவங்க உறுதியா நின்னு அவரை திருத்தவும், குடும்பம் உடையாம காப்பாத்திட்டு வந்திருக்காங்க. இப்ப எனக்கு நீங்களும் ஒரு உதாரணம்"

குழப்பமாக பார்த்தார் காவேரி.
"மாமா குடும்ப வாழ்க்கையில ஈடுபாடு இல்லைன்னதும் நீங்க அவரை விட்டுட்டு போகலையே, கடைசி வரை உங்க அன்பால் அவர் மனசை மாத்த தான முயற்சி பண்ணீங்க. அதனால தான் சொல்றேன் அன்பாலயும், பொறுமையாலயும் சாதிக்க முடியாதது எதுவும் இல்லைனு நீங்க ரெண்டு பேரும் புரிய வைக்கறீங்க" என்றாள் ஆறுதலாய் அவர் கை பற்றி.


காவேரி மூழுதாய் ஆறுதல் அடையவில்லை, முகத்தில் ஒரு வருத்த முறுவல் படர்ந்திருந்தது.

"உங்க பையனுக்கு இந்த குணம் உங்ககிட்டேந்து தானே வந்திருக்கு? தன்னோட உண்மையான அன்பு மேல வச்சிருக்கற நம்பிக்கை, விரும்பினவளை விட்டு குடுக்க கூடாதுங்கற உறுதி..
இதெல்லாம் உங்க குணாதிசயம் தானே? என்னை பொறுத்த வரை என் அத்தம்மா ஒரு இன்ஸ்பையரிங்க் அம்மா தான். ஸோ இனிமே நீங்க எதை நினைச்சும் அழ கூடாது" என்று அவர் கண்ணீரை துடைத்தாள். "உங்களை நான் அத்தமானு கூப்பிடலாம் தானே?" என்றாள் தயங்கி.
சந்தோஷமாக சிரித்து கொண்டே தலையாட்டினார்.

பரிகரத்தை முடித்து விட்டு குடும்பத்தினர் இருந்த இடத்திற்கு சென்றனர்.

"என்ன கா எங்க போன இவ்வளவு நேரம்? நடக்க கஷ்டமா இருக்கும் வீட்டுலேயே இருன்னு சொன்னேன்" யமுனா கவலையோடு பார்த்தார்.

"அதுவா பெரிய அம்மு, உங்க அக்கா வந்த அன்னைக்கு நீங்க அவங்களுக்கு செல்ல பேர் வைக்க சொன்னீங்களா, நான் மறந்துட்டேன். இப்ப கூடி ஆலோசனை பண்ணி மங்களகரமா சாமி சந்நிதியில அவங்களுக்கு பெயர் சுட்டு விழா நடத்திட்டு வரோம்" என்றாள் பூரணி குறும்பாக அவர்கள் கவனத்தை திசை திருப்பி.

"பெரிய ஐ.நா. சபை ஆலோசனை! அப்படி என்னடி பேரு வச்ச என் அக்காவுக்கு?"

"மிக நீண்ட நெடிய ஆலோசனைக்கு பிறகு..."என அவள் வளர்க்க, யமுனாவின் முகத்தை பார்த்து விட்டு
"கவி மா" என்றாள் காவேரியை பக்கவாட்டில் அணைத்தபடி.

"அதென்னடி அவங்களை கவி மா, என்னை பெரிய்ய்ய அம்மு?" முகம் சுருக்கினார்.

"கோவிச்சுகாதீங்க பெரிய அம்மு" என அவரை கட்டி கொண்டு கன்னத்தில் முத்தமிட.

"அடி போக்கிரி கழுதை கோவில்ல.." என சலித்து கொண்டாலும் அவரின் சந்தோஷத்தை மறைக்க முடியவில்லை.

"ஹய்ய் இந்த வெட்க புன்னகைல தான் பெரிய மாமா ஃப்ளாட் ஆயிட்டாரு போல. உங்களை பெரிய அம்முனு கூப்பிட்டா அவங்களை என்ன பெரிய பெரிய அம்முனா கூப்பிட முடியும்? அதே சமயம் பேரு சொல்லியும் கூப்பிட முடியாது, அதான் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கவி மா"

அவள் விளக்கி முடிக்க, சுரேஷ் அவள் தலையில் செல்லமாக தட்டினார்.

"சரியான FM radio... சம்மந்தி மா இவளை பேச விட்டீங்க, நாளைக்கு பூஜையையும் சேர்த்து முடிச்சுட்டு தான் கிளம்புவேம். வாங்க" என்றார் சிரித்து கொண்டே.

~~~~

வீட்டிற்கு திரும்புகையில் கார்த்தி அனுப்பிய மெஸேஜால் தான் சங்கீதாவை தனியே விட்டு போனது தவறு என்று உணர்ந்தனர் சுகந்தியும், பூரணியும்.

எட்டு மணியளவில் சங்கீதாவை ஷம்முவின் வீட்டிலிருந்து அழைத்து வந்த கார்த்தி கொதித்து போயிருந்தான். கோச்சிங்க் க்ளாசிலிருந்து அவன் திரும்பிய சமயம் மாடி படியில் உட்கார்ந்து சங்கீதா அழுது கொண்டிருந்தாள். கன்னத்தில் கைவிரல்கள் பதிந்து போயிருந்தது. ஷ்ரவனுக்கும் அவளுக்கும் ஏதோ சண்டை ஏற்பட ஆத்திரத்தில் அவளை அடித்திருந்தான். இவ்வளவு மோசமாக பெண்களை யாரும் நடத்தி கார்த்தி பார்த்ததில்லை. அதுவும் இவர்கள் நாகரீகத்திற்கு பேர் போன அமெரிக்கா வாசிகள்.

அவளிடம் மன்னிப்பு கேட்டனர் இருவரும், சுகந்தி அவளை அணைத்து கொண்டு ஆறுதல் கூற,
"அண்ணி டோண்ட் ஃபீல் பேட் (bad). ஷ்ரவ் எப்பவும் இப்படி தா. சண்ட போட சான்ஸ் கிடைச்சா நான் அழற வரை விட மாட்டான். கார்த்திக் என்னை ரேஷ்மா வீட்டுக்கு கூட்டி போனா. நாங்க போர்ட் கேமஸ் விளையாடினோம். ஷர்மிளா அக்கா ரொம்ப நல்ல அக்கா எனக்கும் மெஹந்தி போடுறேன்னு சொன்னா நாளைக்கு" என சிறு பிள்ளையாய் கோலி குண்டு கண்கள் மின்ன நொடி நேரத்தில் ஷ்ரவன் தன்னை அடித்து அழ வைத்ததையும் மறந்து சந்தோஷமானாள். கள்ளங்கபடமற்ற அந்த பெண்ணை இருவருக்கும் பிடித்து போனது. சுகந்தி யமுனாவிற்கு தகவல் அனுப்பி சங்கீதாவை தன்னோடு இரவு தங்க வைத்து கொண்டாள்.

~~~~

இரவு திக்கி திணறி, மறைக்க இயலாது அன்னையிடம் தான் விஷ்வாவை விரும்புவது, பழைய நினைவுகள் என எல்லாவற்றையும் பாதி அழுகையும் பாதி குற்ற உணர்வோடும் சொல்லி முடித்தாள் பூரணி.

பதில் பேசாமல் இருந்த கோகிலா வை அணைத்து கொண்டு "அம்மா நீங்களும் அப்பாவும் விருப்ப படலைனா, நான் விட்டுடறேன் மா" என விசும்பலோடு கூறிய மகளின் முகம் நிமிர்த்தி ஆழ்ந்து நோக்கினார் கோகிலா.

"அப்ப அவ்வளவு தானா நீ அவன் மேல வெச்சிருக்கிற லவ்? இல்லை அவனோட அன்புக்கும் தியாகத்துக்கும் அவ்வளவு தான் மரியாதையா?" என்றார். புரியாமல் விழித்த மகளை பார்த்து புன்னகைத்தார் கோகிலா.

"நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தப்ப விஷ்வா எல்லாத்தையும் சொல்லிட்டான். இத்தனை வருஷமா டெல்லியில இருந்தப்பவும் என் கிட்ட பேசிட்டு தான் இருந்தான். உன்னை பத்தி விசாரிப்பான், என்னோட கவலைகள், நம்ம குடும்ப பிரச்சினை எல்லாமே பேசுவோம். அவன் எனக்கு அட்வைஸ் பண்ணுவான், நான் அவனுக்கு அட்வைஸ் பண்ணுவேன. இப்ப கிட்ட தட்ட விஷ்வா எனக்கும் அப்பாவுக்கும் பிள்ளை மாதிரி ஆயிட்டான் டா" விழி விரித்து அதிர்ச்சியாக பார்த்திருந்த மகளை பார்த்து சிரித்தார்.

"அப்பா கிட்ட கொஞ்ச நாளா தான் பேச ஆரம்பிச்சிருக்கான். உன்னோட மெமரி லாஸ் தீருமா தீராதானு யாருக்கும் தெரியாது. நீ வேற நடுவுல திடீர்னு கல்யாணமே வேண்டாம்னு குண்டை தூக்கி போட்ட. நீ அவனை ஏத்துப்பியானு தெரியாது. அதனால எல்லாருமே குழப்பத்துல இருந்தோம். ஆனா அவன் தீர்மானமா வாழ்க்கை துணைனா அது உங்க பொண்ணு மட்டும் தான் அத்தை, அவ என்னை ஏத்துக்கலைனா அவளை கட்டாய படுத்த கூடாதுனு தீர்மானமா சொல்லிட்டான்."

"அன்பு, காதல் இது ரெண்டும் தானா வரணும் இல்லையா அன்னம்? இதை நீ நம்புறியா?"

ஆமோதித்து தலையசைத்தாள்.
"இப்ப அவன் மேல உனக்கு இருக்கிறது உண்மையான அன்பா இல்லை அந்த பழைய நினைவுகளால ஏற்பட்டு இருக்கிற கட்டாயமா?"

வேகமாக இல்லை என தலையாட்டினாள், "உண்மையாவே பிடிச்சிருக்கு மா" என்றாள் பார்வை தாழ்த்தி "ஏன்னு சொல்ல தெரியலை... சைட்டுல நடந்தததை உங்க கிட்ட சொன்னானா?" அவர் தெரியும் என உணர்த்த.
"அர்ஜுன் அண்ணாவுக்கு ஆபத்து இல்லைனு சந்தோஷபடுறதா இல்லை இவனுக்கு காயம் ஆனதை நினைச்சு பதட்டபடுறதானு தெரியலை. கேள்விபட்டதும் உசிரு போற மாதிரி ஃபீல் ஆச்சு மா. அதெப்படிமா ஒரு கணத்துல எல்லாம் மாறிடுது? இத்தனை நாள் வரைக்கும் அவனை பத்தி நினைவு கூட இல்லை. ஆனா அவனை பாத்த உடனே என்னமோ அவனை தாண்டி உலக்த்துல எதுவுமே முக்கியம் இல்லைனு ஆயிடுச்சு".

கண்களில் கண்ணீரை தேக்கி, மனதின் குழப்பத்தை முகத்தில் காட்டி கேள்வியாய் நிற்கும் பெண்ணிடம் என்னவென்று சொல்லி புரிய வைக்க இந்த காதலின் சக்தியை என யோசித்தார்.

பிறகு தான் விரதம் இருப்பதையும் கோவிலுக்கு சென்று காவேரியின் சொல் படி பரிகாரம் செய்ததையும் தயங்கி தயங்கி சொல்லி முடிக்க,

"அம்மாவுக்கு தெரியாம இன்னும் என்னலாம் திருட்டு வேலை பண்ற?" என விளையாட்டாய் அவள் காதை திருகினார். "சரி வா நீ சாப்பிடுற மாதிரி தான் டிபன் செஞ்சிருக்கேன்".

"அப்பா சாப்பிட வாங்க" படுக்கையில் படுத்திருந்தார் பரந்தாமன். "பா என்ன ஆச்சு? ஏன் படுத்திருக்கீங்க?" பதட்டமாய் அவர் அருகே சென்று அமர்ந்தாள்.

"ஒண்ணுமில்லை அம்முலு.. லேசா அசதியா இருக்கு மா. அவ்வளவு தான்."

முத்து முத்தாய் வியர்த்திருந்தது அவர் முகம் முழுவதும், சுவாசிக்க திணறுவது போல் இருந்தது. அவரது மேல் சட்டை பொத்தானை தளர்த்திவிட்டு துண்டால் அவர் முகம் துடைத்தாள். "பா டாக்டர் பாக்க போகலாம் பா. உங்க முகமே சரியில்லை." பரந்தாமன் முகம் மெல்ல வெளிற தொடங்கியது.

குரல் உடைந்து இதயத் துடிப்பு அதிகரித்து பூரணிக்கு.
"ம்மா...மா.. அப்பாவை பாருங்க மா.." அவள் குரல் உயர்த்தி அழைக்க கோகிலா பதறியடித்து ஓடிவந்தார். மகளின் முகத்தை கண்டவுடன் கணவன் பக்கம் திரும்பினார் அவரின் நிலையை கண்டதும் மிரண்டு போனார் கோகிலா.

பரந்தாமன் சுவாசிக்க திணறுவது வெளிப்படையாக தெரிந்தது. நா வரண்டு பேச்சு எழ மறுத்தது கோகிலாவிற்கு.

"மா... பயமா இருக்கு மா.. அப்பா என்ன பா செய்யிது?" இருவரையும் மாறி மாறி பார்த்து அழத் தொடங்கினாள் பூரணி. ஸ்தம்பித்து நின்ற அன்னையை உலுக்கினாள். திகைத்து மீண்ட கோகிலா மிரட்சியோடு அவளை பார்த்தார்.

"அப்பாவை பாத்துக்கோங்க நான் மாமாவை கூட்டிட்டு வரேன்." பதிலுக்காக காத்திராமல் வெளியே ஓடினாள்.

வாழ்க்கை கண்முன்னே ஊசலாட தொடங்கியது கோகிலாவிற்கு, கண்ணை இருட்டியது. வாழ்வின் ஆதாரமாகவும், ஆணிவேராகவும் எல்லாமாகவும் இருக்கும் கணவனை அந்நிலையில் பார்த்ததும் அனைத்தும் சூன்யமாக தோன்றியது.

"கலா... கலா மா" ஹீன ஸ்வரத்தில் பரந்தாமன் அவளை அழைக்க சட்டென தெளிந்தார்.

"என்னங்க?" அவர் கை பற்றி அருகே அமர்ந்தார் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.

"டாக்... டாக்... சிவநேசன்"

"டாக்டர் சிவநேசனா?" பயத்தில் மூளை இயங்க மறுத்தது கோகிலாவிற்கு. வாழ்க்கையின் அத்தனை ஏற்ற இறக்கங்களையும் பார்த்து, போராடி, திடமாய் நின்று குடும்பத்தை முன்னேற்றியவர் இன்று கணவன் உயிருக்கு போராடுவதை கண்டு உறைந்து போனார்.

"பரமு, கோகிலா.." மூர்த்தியின் குரல் கேட்டது அவரோடு சுரேஷும் உள்ளே நுழைந்தார்.

"தங்கச்சி பயப்படாத. நாங்க இருக்கோம் தைரியமா இரு மா. அவனோட ட்ரீட்மெண்ட் சம்பந்தமான பைல் எங்க இருக்கு? அதை எடுத்துக்க, அவனோட துணிமணி இதெல்லாம் எடுத்து வை. உங்க ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணியாச்சு. இப்ப..."

சுரேஷ் பேசி கொண்டிருக்க ஆதர்ஷ் பூரணியோடு உள்ளே நுழைந்தான். மூர்த்திக்கு தகவல் தெரிவித்ததும் பூரணிக்கு ஆதர்ஷின் நினைவு வர அவனை உடனே அழைத்தாள். ட்யூட்டி முடிந்து அப்போது தான் வீடு திரும்பியிருந்தான்.

"கொஞ்சம் தள்ளிக்கோங்க அங்கிள்"

பரந்தாமனை பரிசோதித்து விட்டு, அவரது சிகிச்சை பற்றிய குறிப்புகளை கேட்டு தெரிந்து கொண்டான் பூரணியிடம்.

கோகிலா பிரமை பிடித்தவர் போல நின்றிருந்தார். சுரேஷ் பத்மாவை அழைத்து வந்து அவரை கவனித்துகொள்ள சொன்னார். பத்மா வலுக்கட்டாயமாக அவரை அழைத்து சென்று அவரது வீட்டில் அமர செய்தார்.

"பூரணி உங்க அம்மா ஒரு வித அதிர்ச்சியில இருக்காங்க. ஒரு குவிக் ரெமிடியா ஸ்ட்ராங்க் காபி ஆர் டீ ஷுகர் தூக்கலா போட்டு குடு. நல்ல சூடா. சர்க்கரை, caffeine ரெண்டும் மூளையை ஆக்டிவேட் பண்ணும்." பேசியபடி பரந்தாமனுக்கு சில பரிசோதனைகளை செய்தான் ஆதர்ஷ்.

சற்று நேரத்தில் ஆம்புலனஸ் வந்தது. உடன் வந்த மருத்துவரிடம் பேசி விபரங்கள் கூறிவிட்டு அவரை ஆம்புலன்ஸில் ஏற்றினர். பதறியபடி கோகிலாவும் பூரணியும் வெளியே வர,

"பூரணி, ஆன்டி கூட நீ இங்க இரு. பயப்பட ஒண்ணும் இல்லை இது de addiction treatment பண்ணும்போது நடக்குறது தான். Withdrawl symptoms அப்படீன்னு சொல்லுவாங்க. நான் இவங்க கூட ஹாஸ்பிடல் போறேன். நான் பாத்துக்கறேன்".

"அண்ணா எப்படி... அப்பாவை விட்டுட்டு நிம்மதியா இருக்க முடியும்?" பூரணி கண்ணீர் சிந்த,

"ஆதர்ஷ்" கீழிருந்து விஷ்வாவின் குரல் கேட்டது.
"நீ வரியா நேரம் ஆகுது. நானும் உன் கூட வரேன். சீக்கிரம் வாடா".

தான் உதவிக்கு இருப்பதை அவளுக்கு உணர்த்தினான் விஷ்வா.

"சித்தப்பா நீங்க எல்லாரும் வீட்டுல இருங்க. ஆன்டியும் பூரணியும் தனியா விட வேண்டாம் யாராச்சும் துணைக்கு இருங்க..." பூரணிக்கு மறைமுகமாக பதிலளித்து கொண்டிருந்தான்.
இதற்குள் அக்கம் பக்கத்தினர் சிலர் வெளியே வந்திருந்தனர்.

ஆம்புலனஸ் புறப்பட தயாராக, "இல்லை... நானும் வரேன். அவரை விட்டு என்னால இருக்க முடியாது"
பதட்டமாக கோகிலா வெளியே வந்தார் பூரணி அவரை தடுக்க முனைந்தாள், மகளை தாண்டி வேகமாக படிகளில் ஓடினார்.

"மூர்த்தி அண்ணே இருங்க..." வேகமாய் ஆம்புலன்ஸை நோக்கி ஓடினார். விஷ்வா மருத்துவரோடு ஆம்புலன்ஸில் ஏறி கொண்டதும் அது புறப்பட்டது.

ஆதர்ஷும் அர்ஜுனும் கோகிலாவை சமாதானம் செய்து காரில் அழைத்து சென்றனர்.

பூரணி இடிந்து போய் படியில் அமர்ந்திருக்க, அவளை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்து சென்றார் பத்மா. சுகந்தியும் கார்த்தியும் ஆளுக்கொரு பக்கமாய் அவளுக்கு துணையாய் அமர்ந்திருந்தனர்.

நேரம் நள்ளிரவை கடந்திருக்க, பூரணியின் கைபேசி ஒலித்தது.

"ஹலோ சிவா..."

"செல்லம்மா... மாமா நல்லா இருக்காரு டா, பயப்படாத. டிரிப்ஸ் போட்டிருக்கு, மெடிசன் குடுத்திருக்காங்க. தூங்குறாரு".

ஒரு நிம்மதி பெருமூச்சு வெளியேற, உடைந்து அழத் தொடங்கினாள் பூரணி உடலின் நடுக்கம் அப்போதும் நிற்கவில்லை. கார்த்தியும் சுகந்தியும் உறங்கி விட்டிருந்தனர்.

"சிவா.. அம்மா..."

"அத்தையும் நல்லா இருக்காங்க. மாமா கூட தான் இருக்காங்க. செல்லம்மா அழாத டா ப்ளீஸ். ஒண்ணுமில்லைன்னு சொல்றேன்ல. நான் இருக்கேன் அவங்களை பாத்துக்க, நீ தூங்கு உடம்பை கெடுத்துக்காத ஏற்கனவே விரதம் இருந்திட்டு இருக்க. உடம்பு பலவீனமா ஆயிடும்."

"எப்படி சிவா நிம்மதியா தூங்க முடியும்?" கேவினாள்.

"நான் தான் பயப்பட ஒண்ணமில்லைனு சொல்றேனே டா. ஆதர்ஷ் கூட இங்க தான் இருக்கான். சிவநேசன் டாக்டரோட ஹாஸ்பிடல், உங்க அம்மா வேலை செய்ற இடம். அவங்களை விஐபி மாதிரி பாத்துக்குவாங்க ஸ்டாப் எல்லாம். ஸோ நீ உன் புருஷன் சொல் கேட்டு நல்ல பொண்ணா தூங்குவியாம். ஒகே? காலைல அவங்களை பாக்கலாம். என்ன?" அறை வாயிலில் நின்று எட்டி பார்த்தான். அசதியில் கோகிலாவும் கண் அயர தொடங்கினார் நாற்காலியில் அமர்ந்தபடி. "அத்தையும் தூங்க ஆரம்பிச்சுட்டாங்க. போதுமா?

"ம்ம்ம்... சிவா.. தாங்க்ஸ்"

"போடி மக்கு பொண்டாட்டி. தூங்கு டி".

போன் இணைப்பை துண்டித்துவிட்டு கதவோரம் சாய்ந்து நின்றான் ஆயாசமாக. ஆம்புலனஸில் ஏற்றியதும் பர்ந்தாமனுக்கு ஆக்ஸிஜன் பொருத்தபட்டது. விபரம் அறிந்ததும் முதன்மை மருத்துவர் ஒருவரை உடனடியாக அனுப்பியிருந்தார் டாக்டர் சிவநேசன்.

"இது de addiction treatmentல சகஜம். சிலருக்கு fits வரலாம். நல்லவேளை இவருக்கு அப்படி எதும் ஏற்படலை. பிளட் பிரஷர் கொஞ்சம் அதிகமா இருக்கு. காலைல ஃபுல் பாடி செக் அப் பண்ணிடலாம். பயப்படாதீங்க கோகிலா மேடம். ஆபத்து எதுவும் இல்லை. ஒரு ரெண்டு நாள் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும். டாக்டர் வந்ததும் அடுத்து என்ன ஸ்டெப்னு முடிவு பண்ணுவோம்".
மருத்துவர் கூறிய பிறகே சற்று நிம்மதி அடைந்தனர் அனைவரும்.

தோளில் தொடுதலை உணர்ந்த விஷ்வா திரும்பி பார்த்தான். "விச்சு சாப்பிடு வா" அர்ஜுனும் ஆதர்ஷும் நின்றிருந்தனர்.

"அத்... ஆன்டி.." கோகிலாவும் உண்ணவில்லை என்பதால் தயங்கினான்.

"ம்ம்ம்.. உன் மாமியாருக்கு ஜூஸ் வாங்கி கம்பல் பண்ணி குடிக்க வச்சிட்டேன். நீ வாடா மாப்பிள்ளை." ஆகாஷ் நக்கலாக கூறியதும் திடுக்கிட்டான் விஷ்வா. அர்ஜுன் நானில்லை என்பது போல தலையசைத்தான்.

"ஆர்வகோளாறுல நீ தான் உளறின, அவனை முறைக்காத. எத்தனை நாளா டா நடக்குது இந்த அக்கிரமம்? ப்ராடு கம்மனாட்டி! எங்கிட்ட மறைச்சிட்டீல்ல?" கைகைளை மார்பின் குறுக்கே கட்டி முறைத்தான் நண்பனை.

"சாரி டா மச்சி..." விஷ்வா சங்கடமாக தலைசொறிந்தான்.

"உனக்கு கச்சேரி வைக்கிறேன் அப்புறமா. இப்ப வேண்டாம். சாப்பிட வா". ஹாஸ்பிடல் கேன்டீனில் கிடைத்த எதோ உணவை சாப்பிட்டு விட்டு பரந்தாமன் அறையில் மூவரும் மாறி மாறி கண்விழித்து காவல் இருந்தனர்.

~~~~

காலை ட்யூட்டி டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு பரந்தாமனின் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். கட்டாயபடுத்தி கோகிலாவை ஆதர்ஷோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

குளித்துவிட்டு தனக்கும் பரந்தாமனுக்கும் தேவையானயாவற்றை எடுத்து கொண்டு புறப்பட்டார் கோகிலா.

"அன்னம் நீ சுகந்திக்கு துணையா இரு. இப்ப இருக்கிற சூழல்ல நான் நாளைக்கு வர முடியாது.." சற்றே தயங்கியவர் ஒரு பையை எடுத்து மகளிடம் கொடுத்தார்.

"இது அர்ஜுனுக்கும் சுகந்திக்கும் நம்ம சார்பா பரிசு.."

மணமக்களுக்கு ஜோடியாக அணிவிக்கும் கைகடிகாரங்கள் ஒரு பெட்டியில் இருந்தது. "இதை நீ அவங்களுக்கு போட்டுவிடு. இந்த புடவை, அர்ஜுனுக்கு டிரஸ் இதையெல்லாம் சீர் வைக்கிற தட்டுல வச்சு முறையா கொடுக்கணும்."
சீர் தட்டில் வைக்க வேண்டியவற்றை எடுத்து கூறினார்.

"நீங்க ரெண்டு பேரும் இல்லாம எப்படி மா.." துக்கம் தொண்டையை அடைத்தது பூரணிக்கு.

"இங்க பாரு, சுகந்தியும் நீயும் வேற வேற இல்லை. எனக்கு கூட பொறந்தவ இருந்தா எப்படி இருப்பாளோ அது மாதிரி தான் பத்மா எனக்கு. நான் இல்லாத இடத்துல நீ தான் பொறுப்பு எடுத்து செய்யணும். செய்வியா?" அவள் கைபிடித்து நட்பை தாண்டி இந்த குடும்பங்களுக்கு இடையே இருக்கும் உறவையும் சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் அதை கௌரவப் படுத்துவதன் முக்கியத்துவத்தை தெரியபடுத்தினார்.

~~~~

சுகந்தி, பூரணி, சங்கீதா மூவரும் தனியே இருக்க பிரியபட, ஒட்டுண்ணி போல ஒட்டிகொண்டிருந்தான் ஷ்ரவன். அதுவும் அவன் பூரணியிடம் நெருங்க முயற்சி செய்து கொண்டிருந்தது அவளுக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் பூரணி, "ஷ்ரவன் நீ ஏன் எங்க கூடவே இருக்க? நாங்க கேர்ள்ஸ் தனியா இருக்க பிரியபடுறோம்" என்று அவள் பட்டென கூறிவிட

"ஐ நோ, பட் நான் என்ன பண்ண, விஷ்வாக்கு என்னை பிடிக்காது, ஐ மீன் என் ஃபேமிலிலயை பிடிக்காது ஸோ நான் அவன் கூட இருக்க முடியாது, வேற பெரியவங்க தான் இருக்காங்க வீட்டுல அது செம போர். What will I do? கார்த்தி கோச்சிங்க் போய்ட்டான். I'm Suganthi அண்ணி's in-laws family so you have to respect me" என்றான் படு தெனாவெட்டாய்.

"ஓகே பட் ப்ளீஸ் இந்த மாதிரி பக்கத்துல வந்து பேசுறது, தொடுறது இதெல்லாம் பண்ணாத. இது உன்னோட அமெரிக்கா இல்லை" என்றாள் முகத்தில் கடுமை காட்டி.

"என் காலேஜ் ஃபிரண்ட்ஸ் கூடவும் இப்படி பேசுவேன் அவங்களும் இந்தியன் பொண்ணுங்க தான், அவங்க ஒண்ணும் சொல்லுறது இல்லையே" என்றான் பிடிவாதமாக.

"எனக்கு பிடிக்கலை, டோண்ட் டூ இட்" கோவமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் சொல்லிவிட்டு எழுந்து போக.

"ஓகே! ஸாரி நான் நினைவு வெச்சிக்கிறேன். கோவப்படாத அன்னம்" என்று அவள் கையை பிடித்தான்.

"ஸ்டாப் இட்!" என கோவமாய் அவன் கையை உதறினாள். "நான் உன்கிட்ட சொன்னேன் அந்த பேரு என் அம்மா மட்டும் தான் கூப்பிடலாம். வேற யாருக்கும் ரைட்ஸ் கிடையாது. உனக்கு கண்டிப்பா நான் அந்த உரிமையை குடுக்கலை. Call me Poorni"
என்று பழைய பூரணியாக சீறிவிட்டு வெளியேற, உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டனர் சுகந்தியும் சங்கீதாவும்.

'டோண்ட் வொரி ஹனி! அந்த உரிமை மட்டும் இல்லை அதைவிட அதிகமாக எனக்கு கிடைக்கும் சீக்கிரம்' என்ற அவனது எண்ண ஓட்டம் யாரும் அறியவில்லை. பின் அவளிடம் சென்று மன்னிப்பு கேட்டு, அவனே அவளை அழைத்து வந்தான். ஏனெனில் அவளிடம் எப்படியும் நல்ல அபிப்ராயம் ஏற்படுத்த வேண்டும் என முயன்று கொண்டிருந்தான்.


மாலை கோவிலுக்கு போய்விட்டு வந்ததும், ஷம்மு வந்தாள் மெஹந்தி வைப்பதற்காக.

"என் செல்ல பேபீஸ்! இந்தாங்கடா புக்,மெஹந்தி டிசைன் பாருங்க. நான் அதுக்குள்ள என்னோட நியூ ஃபேவரிட் கீத்து பேபிக்கு போட்டு விடுறேன். நீ வா டா" என அவளை கொஞ்சி விட்டு அவளுக்கு மருதாணி வைக்க ஆரம்பித்தாள்.

நால்வரும் ஹாலில் அமர்ந்திருக்க; பத்மா, யமுனா, காவேரி, கார்த்தி ஆகியோர் தாம்பூல பை போட்டு கொண்டிருந்தனர். சுரேஷ் அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்தார் அவரது அறையில்.

பேச்சும் கலகலப்புமாய் நேரம் ஓட, வார்த்தை விளையாட்டு விளையாடி கொண்டு வேலை செய்தனர் எல்லோரும். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கேட்டு மனனம் செய்து கொண்டாள் சங்கீதா.

"கீது பேபி, இந்த கல்யாணம் முடியுறதுக்குள்ள நீ தமிழ் புலவர் ஆயிடபோற. சூப்பர்!" என்றாள் பூரணி.

"புலவர் மீன்ஸ் poet ரைட்? வாவ்!" என்று கண் சிமிட்டி சிரிக்க. "அண்ணா அண்ணி கல்யாணம் எப்போ?" என்றாள்.

"இன்னும் நாலு மாசம் இருக்கு, ஸோ! நீ தமிழ்ல கிராஷ் கோர்ஸ் பண்ணிடலாம்" என்றாள் பூரணி சிரித்துகொண்டே.
கீது ஏதோ பலத்த யோசனையில் இருந்தாள். அவள் முகத்தருகே விரலை சொடுக்கிய யமுனா என்ன என்று ஜாடையால் வினவ.

"ஒரு டௌட் ஆன்டி! அர்ஜுன் அண்ணா சுகந்தி அண்ணி, கல்யாணம் பண்றா. அப்ப விஷ்வா அண்ணாவை யாரு கல்யாணம் பண்றா பூரணியா?" என மிக முக்கியமான கேள்வியை கேட்க, வீடு முழுதும் நிசப்தம்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல இருந்தது சிலருக்கு.

அனைத்து தலைகளும், நிமிர்ந்து ஒரே திக்கில் நோக்க. அவளோ தலை நிமிர முடியாது, செய்வதறியாது அமைதி காத்தாள், அத்தனை பேர் மத்தியில் இந்த கேள்வி அவளை சங்கடதிற்க்கு ஆளாக்க, அதே நேரம் இயற்கையான நாணமும் கை கோர்த்தது, எத்தனை முயன்றும் அவள் கன்னங்கள் பூசிய சிவப்பை மறைக்க இயலவில்லை.

மருதாணி இட்டு கொண்டிருந்த ஷர்மிளா விழியை மட்டும் உயர்த்தி அவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு ஜாடை காட்ட, கூர்ந்து தன் உள்ளங்கையை பார்த்தாள் பூரணி.
அவள் பார்க்கையில் அழகாக ஏ. வி என ஆங்கிலத்தில் அவளுக்கு புரியும் படி ஆனால் மற்றவர் பார்த்தால் டிசைன் போல தெரியும் படி எழுதிவிட்டு கண்ணடிக்க அவள் செய்வதறியாது உட்கார்ந்திருந்தாள்.

"என் கேள்விக்கு பதில் சொல்லுங்க யமுனா ஆன்டி. அர்ஜுன் சுகந்தி childhood friends, இப்ப லவ் பண்ணி, இப்ப கல்யாணம் பண்றாங்க. அப்ப விஷ்வா பூரணியும் childhood friends தான, ஸோ அவங்களும் கல்யாணம் பண்ணுவாங்களா?"

யமுனா வைத்த கண் வாங்காமல் மகளாக நினைக்கும் பெண்ணை புது கோணத்தில் பார்த்திருந்தார். ஏற்கனவே அவர் மனதில் தோன்றிய சில விஷயங்களை பத்மாவிடம் பகிர்ந்து பூரணியை கவனிக்க சொல்லியிருந்தார். இப்போது பூரணியின் உடல் மொழி மேலும் அவர் சந்தேகத்தை அதிகரிப்பது போல் இருந்தது.

"அதை பூரணியும் அவ பேரண்ட்ஸும் தான் டிசைட் பண்ணணும் மா" என்ற சுரேஷின் குரல் கேட்டதும் இதயம் நின்றே விட்டது பூரணிக்கு.

'ஐயோ சுரேஷ் மாமா உள்ள இருக்குறது நினைவில்லாம நான் வேற கொஞ்சம் ஃபீலிங்கஸ் ஆயிட்டேனே. பய புள்ள மாட்டிவிட்டுடுச்சே! போன வாட்டி சுகு அர்ஜுன் லவ்வுக்கே நமக்கு பரேட் நடந்துச்சு. இப்ப நம்ம தான் ஹீரோயின் ...அவன் வேற என்னை செல்லம்மா செல்லம்மானு, கோத்து விட்டுட்டு ஹிந்தி சினிமா பாத்து ஜொள்ளு விட்டுட்டு உக்காந்திருக்கான். கடவுளே! ப்ளீஸ் காப்பாத்து, பூரணி பாப்பா பாவம், ஆல் அலோனா (all alone), ஒரே ரூம்ல மூணு சிங்கத்தோட சிக்க வச்சிட்டீங்களே!' என வேண்டுதலை முடிக்கவும்

"என்னத்த டிசைட் பண்ணணும் சுரேஷ்?" என மூர்த்தியின் குரல் வாயிலில் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

'ஆத்தி! மூணு சிங்கத்துக்கிட்டேந்து காப்பாத்த சொன்னா இவரு ஆல்ஃபா மேல் (Alpha male) சிங்கத்தையும் சேத்து அனுப்புறாரே, ஒ காட் வொய் திஸ் கொலைவெறி?' என எச்சில் கூட்டி விழுங்க. 'பயத்துல குலதெய்வம் பேரு கூட ஞாபகம் வர மாட்டேங்குதே' என நடுங்கி கொண்டிருந்தாள்.

"என்ன பாப்பா உன் பெத்தவங்க என்ன முடிவு பண்ணணும்ங்கறான் உன் மாமா" என அவளையே கேட்க. அவளோ பயத்தில் உடல் வியர்த்து, நா வறண்டு, முகம் வெளிறி போய் இருந்தாள்.

"கேள்வி நா கேட்டேன் அங்கிள்" என தொடங்கிய சங்கீதா கிளி பிள்ளை போல நடந்ததை ஒப்பித்து விட்டு பதில் வருமா என அவரை பாரத்தாள். இப்போது மொத்த குடும்பத்துக்கும் வியர்த்து போயிருந்தது. சிறிது நேரம் அசாத்திய அமைதி நிலவ, அவர் போன் ஒலித்ததில் கவனம் கலைந்தார்.

அவர் உறவினரின் அழைப்பில் அவரது கவனம் திசை திரும்பியிருக்க, பூரணி ஷர்மிளாவின் உதவியை நாடினாள்.

"ஷம்மு கா எதாச்சும் பண்ணி என்னை காப்பாத்துங்க, இல்லை அனாவசியமா ஒரு உயிர் பலி விழும்."

மெஹந்தி போட்டு முடித்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என உள்ளறைக்கு சென்றுவிட்டனர்.

ஷர்மிளா செய்வதறியாது திகைத்திருக்க. "அடியே சுகந்தி உன் எங்கேஜ்மென்ட் நல்லபடியா நடக்கணும்னா என்னை உன் மாமனார் கிட்டேயிருந்து காப்பாத்து. இது நம் நட்பின் மீது ஆணை!" என கண்ணை உருட்டி அவளை  மிரட்டினாள்.

"அம்மாடி நீங்க தாம்பூல பை போட்டு முடிச்சிட்டீங்களா?" மூர்த்தியின் கவனம் யமுனாவிடம் திரும்பியது.

"இதோ முடிஞ்சிடுச்சுங்க. எத்தனை பை இருக்குன்னு எண்ணி எடுத்து அட்டை பெட்டியில போடணும்."

"சரி எண்ணி முடிச்சாச்சுனா அந்த வேன் டிரைவரை கூப்பிட்டு வண்டியில ஏத்திரலாம்" பேசியபடி அவரும் சுரேஷும் கீழே இறங்கி விட்டனர். மற்றவர்கள் மீதம் இருந்த வேலையில் மூழ்கிவிட, கூட்டு களவாணிகள் மூவரும் பூரணி வீட்டிற்கு நழுவி விட்டனர்.

Word count: 2630
Date published: 26 June, 2022

Sneak peak:
"ம்ம்ம்..மேக்னட் மாதிரி இழுக்குது உன் கண்ணும், ஸ்மைலும் என்னால உன்னை விட்டு போக முடியலை" என்றாள் அவன் சட்டையின் முன் பகுதியை பற்றியவாறு "வேட்டி டார்க் கிரீன் ஷர்ட்ல அழகா இருக்க டா" அவள் முகத்தில் நாணம் குடி கொண்டது.

சட்டென அவள் முகம் பிரகாசமாக,
"அந்த பாட்டு கேட்டுருக்கியா மாமா? காந்த கண்ணழகா...அப்புறம் ஏதோ வரும்.. முத்து பல்லழகா..அது உண்மை தான் உன் விஷயத்துல" ஏதோ அறிவியல் சாதனையாளர் போல் பெருமிதம் பொங்க. அவனுக்கோ அவளை ரசித்து முடிக்க நேரம் போதாது என தோன்றியது.

"அப்படியா பேபி? ஆர் யூ ஷ்யூர்?" என்றான் புருவம் உயர்த்தி "எங்க அதை ஃபுல்லா பாடு" வில்லங்கமான புன்சிரிப்பொன்று அவன் இதழில் படர்ந்தது.

⚜⚜⚜⚜

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro