பாகம் 30
அடுத்த நாள் பொழுது புலர்ந்தது எதிர்பாராத சில திருப்புமுனைகளோடு.
காலை எழுந்தவுடன் இளையவர்களுக்கு காத்திருந்தது முதல் அதிர்ச்சி செய்தி.
"அர்ஜுனுக்கு ஆபத்து வந்து விலகினதால நிச்சயதார்த்ததுக்கு முன்னாடி, காலையில ரெண்டு வீட்டு குல தெய்வத்துக்கும் பரிகார பூஜை பண்ண சொல்லியிருக்காரு ஜோசியர். அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காம இருக்கணுமாம். அதனால் சுகந்தி நீ கீழே போகாத. பூரணி வந்தா கூட இங்கேயே இருங்க. வெளியே எங்கேயும் போக வேண்டாம். இப்ப காலேஜுக்கு கிளம்புங்க நானே உங்களை கொண்டு விடுறேன்"
சுரேஷ் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
சுகந்திக்கு காபி கொடுத்த பத்மா.
"சுகந்தி நீ ரெண்டு நாள் நான் சொல்ற மாதிரி குளிச்சிட்டு விரதம் இருந்து பூஜை பண்ணணும், கோவிலுக்கும் போகணும். பட்டினியோட காலேஜுக்கு போகவேண்டாம் மா" கவலையோடு அவள் கன்னம் வருடினார் பத்மா.
"இல்லை மா, ஒரு முக்கியமான அஸைன்மெண்ட் இன்னிக்கு குடுத்தே ஆகணும். அதோட செமினார் ஒண்ணு வருது அதைபத்தியும் இன்னிக்கு டிஸ்கஷன் இருக்கும். நிறைய க்ளாஸ் மிஸ் பண்ணினா எக்ஸாம் எழுத முடியாது. நாளைக்கு லீவு தானே. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்."
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பூரணி அவளை கைபேசியில் அழைக்க, அவளிடம் விவரத்தை கூறிவிட்டு கல்லூரிக்கு புறப்பட்டுவிட்டாள்.
~~~~
"டேய் மரியாதையா ஆபீஸுக்கு கிளம்பு. இங்க இருந்தா நீ எதாவது தில்லாலங்கடி பண்ணி சுகந்தியை பார்க்க போவ. இல்லை பேசாம உன் ஃபிரண்டு யார் வீட்டுக்காச்சும் போய் இருடா" என்றபடி சமையலை பார்க்க உள்ளே சென்றார் யமுனா.
"மா என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வேலைக்கு போறவங்க மா.." சலித்துகொண்டான் அர்ஜுன் செய்தி தாளை மடித்து வைத்துவிட்டு.
"அர்ஜுன் ஆபீஸுக்கு கிளம்பு. ஸ்கூல் பையன் மாதிரி லீவு போட காரணம் தேடாத டா"
விஷ்வா கண்டிப்புடன் கூறியதும் அர்ஜுன் கடுப்படித்தான்.
"அண்ணனாடா நீ? ஜுனியர் எம்டன்" என்று அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு "நான் கோவிச்சுட்டு ஷம்மு வீட்டுக்கு போறேன்" என்றவன் அறைக்கதவை சாத்திக்கொண்டான்.
"டேய் வெட்டி! அவளே ஏகப்பட்ட கண்டிஷன் போட்டுட்டு இன்னைக்கு இன்டர்வியூ போறா, எதையாவது பேசி அவளை குழப்பின... கொன்னுடுவேன்" விஷ்வா அவனை குரல் உயர்த்தி அதட்டி விட்டு, சித்தியை பார்த்து சிரித்து கண்சிமிட்டினான்.
யமுனா, "தம்பி இன்னிக்கு எண்ணை கத்திரிக்காய் குழம்பு சேம்பு ரோஸ்ட். ஸ்டீபனுக்கும் பிடிக்கும், ஒரு டப்பா எக்ஸ்ட்ரா வைக்கிறேன். அவன்கிட்ட குடு. என்ன?" என்றார் ரகசிய குரலில்.
"கண்டிப்பா" என அவர் கன்னத்தை கிள்ளி கொஞ்சி
"நீ அழகு டீ யம்மு. பேசாம நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கறேன்" என்றுவிட்டு அவர் அடிக்கும் முன் ஓடிவிட்டான்.
"நான் பெத்தது தான் மென்டல்னு நினைச்சேன், எங்க அக்கா பெத்ததும் மென்டல் தான் போல! அபிராமி இதுகளை கட்டிக்க போறவளுங்க என்ன பாடு பட போறாளோ?"
~~~~~
யாரும் எதிர்பாராத திருப்புமுனையாக, அதிர்ச்சி நம்பர் இரண்டாக கல்யாணி அத்தை இரண்டு நாள் தன் பேர பிள்ளைகளுடன் மூர்த்தி வீட்டில் வந்து தங்குவதாக தொலைபேசி வாயிலாக முன் அறிவிப்பு கொடுத்தார்.
"அவங்க மகனும் மருமகளும் அவங்களோட பிஸினஸ் விஷயமா பெங்களூர் போயிருக்காங்களாம். பசங்களை தனியா சமாளிக்க முடியலைன்னாங்களாம். இவரு சரின்னிட்டாரு. எனக்கும் மறுத்து பேச முடியலை பத்மா" என்றார் யமுனா சங்கடமாக. இருவரும் டெய்லர் கடைக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர்.
"சரி ரெண்டு நாள் தான யமுனா பாத்துக்கலாம். கார்த்தி, பூரணி, சுகந்தி எல்லாரும் பசங்களை பாத்துக்க இருக்காங்க. கடவுள் மேல பாரத்தை போடு. கவலை படாத, விஷ்வா தம்பியை சமாளிச்சுக்கலாம்" என பத்மா சமாதானம் சொன்னார்.
ஆயிரம் சமாதானம் சொன்னாலும் எல்லோருக்கும் உள்ளுக்குள்ளே, காவேரி மற்றும் விஷ்வாவை பற்றிய கவலை இருந்தது. இப்போதும் அத்தைக்கு அவர்கள் உறவினர் மத்தியிலும் அவர்கள் ஊரிலும் செல்வாக்கு அதிகம், காரணம் அவர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்பட்ட நபர் அத்தையின் கணவர். அவர் உயிரோடு இல்லையென்றாலும் அவர்கள் குடும்பத்திற்கு அந்த கௌரவம் இருந்தது.
"அம்மா அபிராமி! ஏன் என்னை இப்படி சோதிக்கிற? என் புள்ளை உசிரு பொழச்சி வந்திருக்கான். இந்த நிச்சயதார்த்தம் நல்லபடியா நடக்கணும், அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணோட நல்லா வாழணும்னு நான் ஆயிரம் கவலையை மனசுல சுமந்துட்டு இருக்கேன். இந்த நேரத்துல இவங்க வேற வரேன்னு சொல்றாங்க. அவங்க வர்றதால விஷ்வா நிச்சயத்துல கலந்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா நான் என்ன செய்வேன்? என் பெரிய புள்ளை இல்லாம சின்னவனுக்கு எப்படி நல்லது நடத்துவேன்?"
கண்களில் நீர் நிறைந்து இருக்க, முகத்திலும் மனதிலும் வேதனை தேங்கியிருக்க யமுனா புலம்பினார். பத்மா அவரை ஆறுதல் படுத்த வார்த்தையின்றி தவித்தார். இத்தனை இக்கட்டுகளை தாண்டி தனது மகளின் வாழ்வு நல்லபடியாக அமைய வேண்டுமே என அந்த தாய் உள்ளம் பதறி கொண்டிருந்தது.
~~~~
'கல்யாணி அத்தையா கொக்கா' என்பது போல வரும்போதே ஒரு வில்லங்கத்தை டாக்சி ஏற்றி அழைத்து வந்தார்.
அவரை வரவேற்க வெளியே வந்த மூர்த்தி, யமுனா, பத்மாவுக்கும் டாக்ஸியில் இருந்து இறங்கிய இருபது இரண்டு வயது இளைஞனை கண்டதும் குழப்பம்.
உள்ளே வந்து பரஸ்பர நலன் விசாரிப்புகள் முடிந்ததும், "எங்க மா உன் மருமக? சுகந்தி தானே..."
"காலேஜுக்கு போயிருக்கா அத்தை. வந்ததும் உங்களை வந்து பார்க்க சொல்றேன்" யமுனா சொல்லி முடித்துவிட்டு தன்னை வருத்தி கொண்டிருந்த கேள்வியை கேட்டார் "அத்தை இந்த தம்பி யாருன்னு.."
"இது என் பேரன் ஷ்ரவன் எம்.பி.ஏ ஃபர்ஸ்ட் இயர் பண்றான்" என சொல்லி, அறிமுகபடுத்தி அதிர்ச்சி நம்பர் இரண்டை இறக்கினார். "இது என் பேத்தி சங்கீதா, ப்ளஸ் ஒன் படிக்கிறா".
சங்கீதா அழகாக புன்னகைத்து கை கூப்ப, ஷ்ரவன் ஹாய் ஆன்டி, அங்கிள் என்றான். அனைவரும் பயத்தை விழுங்கியவாறு சகஜமாய் பேசிக் கொண்டிருக்கையில், சுகந்தி, பூரணி இருவரும் கல்லூரியிலிருந்து வந்தனர்.
சுகந்தியை முகம் கழுவி உடை மாற்றிகொண்டு அத்தையை சந்திக்கும்படி பத்மா கூற, முதலில் அவள் மறுத்தாள்.
"போ மா, அவங்களை கண்டாலே பிடிக்கலை. அந்த பாட்டி வந்தால் பிரச்சனை தான். அவங்க கால்ல விழுந்து வேற கும்பிடணுமா?"
"அப்படி மரியாதை குறைவா பேசாத சுகந்தி. சொன்னதை செய். இல்லைனா யமுனாவுக்கு தான் சங்கடம். உன் மாமியார் பாவம் இல்ல? அவளுக்காக செய் மா" என்றதும் அரை மனதாக ஒப்பு கொண்டாள்.
"வா சுகந்தி" கல்யாணி அத்தை அவளை வரவேற்றார்.
"ஷ்ரவன், சங்கீதா இது அர்ஜுனோட fiance சுகந்தி. அதாவது உங்களுக்கு அண்ணி. ஷ்ரவன் அவ வயசுல சின்னவனாலும் நீ அண்ணினு தான் கூப்பிடணும்".
அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு அவளை தன்னருகில் அமர்த்தி பேசிகொண்டிருந்தார்.
"ஆமா அவ எங்க மா உன் சிநேகிதி? பேரு கூட.." என யோசித்தார்.
சுகந்திக்கு பயம் பிடித்து கொண்டது. சொல்லவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் அனைவரும் விழித்தனர்.
மூர்த்திக்கு போதாத வேளை போலும், "அன்னபூரணி அத்தை. மருமவளே உன் சிநேகிதியை கூப்பிடு மா" என்றுவிட்டு மனைவி தன்னை முறைக்கும் காரணம் புரியாமல் முழித்தார்.
பூரணி வந்ததும் அனைவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர்.
"அவங்க ரெண்டு பேரும் ஊர்ல இல்லை மூர்த்தி. பையன் பெங்களூர்ல ஒரு பிரான்ச் ஆரம்பிக்கிறான். எனக்கு வயசாயிடுச்சு இவங்களை தனியா சமாளிக்க முடியலை நான் ஹார்ட் பேஷன்ட் வேற" என அங்கலாய்த்தார்.
'நீங்க கிளம்புறதுக்குள்ள யாரையெல்லாம் பேஷன்டாக்க போறீங்களோ' என நினைத்தாள் பூரணி.
"அன்னிக்கு நீயே சொன்னியா... அதான் சரி சன்டே வரதை ரெண்டு நாள் முன்னாடியே வந்துறலாம்னு, இவங்களையும் கூட்டிட்டு வந்துட்டேன்" என்றார்.
கார்த்தி வரும் ஓசை கேட்டதும் சுகந்தி வெளியே சென்று அவனை அழைத்து வந்து அறிமுகம் செய்தாள்.
"பாட்டி என் தம்பி கார்த்திக்கேயன், ப்ளஸ் டூ படிக்கிறான்".
"யு ப்ளே கிரிக்கெட்?" என்றான் ஷ்ரவன் அவனின் cricket kit பார்த்துவிட்டு. "I like soccer. USல அது தான் craze. கிரிக்கெட் நிறைய பேருக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை".
"ஒன் மினிட்" அவனை இடைமறித்த கார்த்தி தன் பையிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து அன்னையிடம் கொடுத்தான். "அம்மா, டிவிஷன் பி டீம்முக்கு செலக்ட் ஆயிட்டேன். அஃபீஷியலி லெட்டர் இன்னிக்கு தான் வந்தது. இதுல நல்லா பர்ஃபார்ம் பண்ணா, டிவிஷன் ஏ, அதுக்கு அடுத்து ஸ்டேட் ஸெலெக்ஷன் தான். மேட்ச் உன் கல்யாணத்துக்கு அப்புறம் தான் அக்கா, ஆனா ப்ராக்டிஸ் கணணடிப்பா டெய்லி உண்டு" என சந்தோஷ செய்தியை சொல்லிவிட்டு மூர்த்தி, யமுனா, பத்மா இவர்கள் காலில் விழுந்து வணங்கிவிட்டு கல்யாணி அத்தையின் காலை தொட்டும் தொடாமலும் வணங்கினான்.
"Congrats man!" என எழுந்து கார்த்திக்கின் அருகில் வந்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த ஷ்ரவன் அவர்களிடம் பொது படையாக ஏதோ பேசி கொண்டிருந்தான். பெரியவர்கள் கல்யாண ஏற்பாடு பற்றி பேசி கொண்டிருந்தனர்.
"பூரணிக்கா எனக்கு கொஞ்சம் ஹெல்ப் வேணும் மன்டே டெஸ்ட் இருக்கு வாயேன்" என்றான் கார்த்தி.
"பாட்டி நான் அக்காவை கூட்டிட்டு போறேன் தப்பா நினைக்காதீங்க" என்றுவிட்டு பதிலுக்கு காத்திராமல் அவளை இழுத்துக் கொண்டு போய்விட்டான்.
"பாட்டி நான் தம்பிக்கு டிபன் குடுத்துட்டு வரேன். அவன் கோச்சிங்க் கிளம்பிடுவான்" என சுகந்தியும் நழுவி விட்டாள்.
வீட்டிற்கு வந்தவள் கதவை சாத்தி விட்டு, அவனுக்கு மாலை டிபன் எடுத்து வந்தாள்.
"என்னடா அப்பு என்ன டெஸ்ட் மன்டே?" என்றாள்.
பூரணி மடியில் தலை வைத்து ஒய்யாரமாய் படுத்திருந்தவன் அரை கண்ணை திறந்து, "ஒரு வெண்ணையும் இல்லை சும்மா தான் சொன்னேன்."
திகைத்த சுகந்தி, இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தான்.
"லூஸாடா அப்பு நீ ஏன் அப்படி பொய் சொன்ன?"
"ஆளு வளந்துருக்க, ஆனா இன்னும் வெகுளியாவே இரு கா நீ. பூரி நீ எங்கேயும் போக வேணாம். ஒண்ணு இங்க இரு இல்லை கோகிமா இருந்தா, வீட்டுக்கு போ" என்றான் அவள் கையை இறுகப் பற்றி கொண்டு.
"ஏய் அப்பு.." என மிகவும் முனைந்து மிரட்டும் குரலில் சுகந்தி அழைக்க.
விருட்டென எழுந்தமர்ந்தான், "அந்த அமெரிக்கா பீட்டர்.. அவன் பூரிக்காவை செம்மையா லுக்கு விட்டுட்டு இருக்கான் நீயும் இவ பக்கத்துல தான இருந்த பாக்கலை? அத்தனை பேர், அதுவும் உன் மாமானார் இருக்கும் போதே அந்த மாதிரி சைட் அடிக்கறான். எனக்கு பிடிக்கலை. அதான் கூட்டிட்டு வந்தேன்" என்று முகத்தை கடுகடு வென்று வைத்து கொண்டு, மீண்டும் அவள் மடியில் படுத்து கொண்டான்.
சுகந்தி அதிர்ச்சியாக பூரணியை பார்க்க, ஆம் என தலையாட்டினாள். பாட்டியின் வருகையால் மிரண்டு போயிருந்த சுகந்தி, இதை கவனித்திருக்க வில்லை.
"அடேய்! பெரிய மனுஷா விளையாடும் போது உனக்கு அடிபடாம நான் காவல் காத்துட்டு ஒடுன காலம் போய் நீ எனக்கு காவலா?" என அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள் பூரணி. ஆனால் இருவருக்கும் தம்பியை நினைத்து பெருமையாக இருந்தது.
"அச்சோ என் வெல்லகட்டி பிக் பாய் ஆயிடுச்சு" என கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.
"நான் இப்ப ப்ராக்டிஸ்க்கு போகணும், ஷம்மு அக்காவை உங்க கூட இருக்க சொல்லுங்க. இல்லை நீங்க அங்க போங்க" என்றான் பெரிய மனிதன் தோரணையில்.
"ஏன் அப்பு, உன் பூரிக்காவுக்கு எப்படியும் கல்யாணம் பண்ணிதான ஆகணும், அந்த ஷ்ரவன் சைட் அடிச்சா என்ன, அர்ஜுன் கஸின் தான டா.." என சுகந்தி அவனை வம்பிழுக்க.
"கல்யாணம் பண்ணணும் சரி அதுக்கு யாரை வேணாலும் பண்ண முடியுமா? அவன்லாம் இவளுக்கு மேட்ச் இல்லை" என்றான் அசட்டையாக.
"ஹை! வந்துட்டான் டா மேட்ச்மேக்கர்! அவனை இப்ப தான பாத்தோம் அதுக்குள்ள எப்படி ஜட்ஜ் பண்ற? ஆளு பாக்க நல்லா தான இருக்கான்?" என்றாள் சுகந்தி.
"ஆளு பாக்க நல்லா இருந்தா போதுமா கேரக்டர் முக்கியம். நாங்க பாய்ஸ் பாடி லாங்வேஜ்ல ஜட்ஜ் பண்ணிடுவோம். இங்க தான இருப்பான் ரெண்டு நாள் பாத்து தெரிஞ்சுக்க. அவனுக்கு அமெரிக்காலேருந்து வந்துருக்கோம்னு அந்த திமிரு இருக்கு, தற்பெருமை அடிச்சுக்குற டைப், அதுவும் இல்லாம அவன் parlour, branded clothes, பணம், பகட்டுன்னு அதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறவன். என் அக்கா organic beauty. அவளுக்கு அவளை மாதிரி குணத்துக்கும், உறவுகளுக்கும், முக்கியத்துவம் கொடுக்கிற ஆளு தான் சரி" என்றான் கோச்சிங்கிற்கு கிளம்பியவாறு.
கல்யாணி அம்மாள் இளையவர்கள் எல்லாரும் சேர்ந்து இருங்கள் என கூறி, சங்கீதாவையும, ஷ்ரவனையும் சுகந்தி வீட்டிற்கு அனுப்பி விட்டார். முதலில் அமைதியாக இருந்த சங்கீதா சற்று நேரத்திற்கெல்லாம் தயக்கமில்லாமல் பழகினாள். கார்த்தியின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என நிரூபிப்பது போல ஷ்ரவனின் பேச்சும் நடவடிக்கையும் இருந்தது. கூடுதலாக அவன் ஆணாதிக்க சுபாவம் நிறைந்தவன் என்பதை அவன் பதினேழு வயது சங்கீதாவை நடத்திய விதத்தில் புரிந்து கொண்டனர் தோழிகள் இருவரும். மொத்ததில் கல்யாணி பாட்டியின் ஆண் வடிவமாக இருந்தான். அவனை தவிர்க்க, கல்லூரி பாடங்களை எடுத்து வைத்து கொண்டனர்.
"கெஸ்ட் இருக்கும் போதுகூட காலேஜ் வர்க்... are you both so studious or just show off?" என அலட்சியமாக உதடு சுழித்தான்.
"முக்கியமான வர்க் இருக்கு நெக்ஸ்ட் வீக் சப்மிட் பண்ணனும்" சுகந்தி பொறுமையாக பதில் கூறியதும்,
"Come on.. Annam it is just English. How hard it is..."
அவன் பேசி முடிக்கும் முன்னரே இடைமறித்தாள் பூரணி.
"ஷ்ரவன்! First, என்னை அப்படி கூப்பிடாத. Second, what we study and how we study is our choice. You need not comment on that."
பூரணி முகத்தில் அறைந்தாற் போல பதிலளித்ததும் அவன் மன்னிப்பு கேட்டுவிட்டு கீழே சென்றுவிட்டான்.
சங்கீதா அவர்களோடு ஒட்டி கொண்டாள்.
"அண்ணி உங்களை நான் டிஸ்டர்ப் பண்ணலை நான் ஸ்கூல் வர்க் பண்றே. But, நான் அண்ணா கூட போலே. அவன் கூட போனா சண்டை வரும், and அம்மா சொன்னா ரிலேடிவ்ஸ் வீட்டுல don't embarrass us. She said you both seem like nice people.
(நீங்க ரெண்டு பேரும் பாக்க நல்லவங்க மாதிரி இருக்கீங்க). "சண்டை வந்தா பாட்டி அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. Please can I stay with you? I will not distrub, I promise. இல்லை இங்க உக்காந்து என் ஸ்கூல் வர்க் பண்றேன்"
பாதி ஆங்கிலத்திலும் கொஞ்சம் தமிழை மழலை போல பேசிய பெண்ணை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அவள் ஒரு பக்கம் தன் பள்ளி பாடங்களை படிக்க துவங்க, இவர்களும் கல்லூரி பாடங்களில் மூழ்கிபோயினர்.
⚜⚜⚜
யமுனாவிடம் ஏதோ பேச வந்த காவேரி, கல்யாணி அத்தையை கண்டும் காணாமல் இருந்து விட, "என்ன காவேரி மாமியார் ஸ்தானத்தில இருக்குறவ உட்கார்ந்திருக்கேன்னு கூட நினைப்பு இல்லாம அப்படியே போற?" என்றார்.
காவேரி, "நீங்க யமுனா வீட்டுக்கு மாமியார் உரிமையில வந்துருக்கீங்கன்னா அது அவ கிட்ட மட்டும், இந்த வீட்டோட மட்டும். நான் என் தங்கச்சி வீட்டுக்கு வந்திருக்கேன். எனக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லை" என்று அவர் எப்போதும் போல் சாந்தமாக பதில் பேச, அத்தைக்கு அவரின் கௌரவ பிரச்சினை ஆகி போனது.
"என்னது உறவு இல்லையா? நான் உன் புருஷனோட அத்தை" என உரிமையை நிலை நாட்ட .
"என் புருஷனே எனக்கு இல்லைனு ஆனப்புறம் ஏங்கேந்து மாமனார், மாமியார், அத்தை எல்லாம். உங்க குடும்பத்தோட பந்தம் அவரால ஏற்பட்டது அந்த உறவே இல்லைனு ஆனப்புறம் மத்த சொந்தங்கள் எங்கிருந்து?" என்று மிக நிதானமாக, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அவர் பதில் கொடுத்ததை பெருமையோடு அதிசயித்து பார்த்தனர், யமுனாவும் மூர்த்தியும்.
"யமுனா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவரை உள்ளறைக்கு அழைத்து போய் கதவை தாழிட்டு கொண்டார் காவேரி. கல்யாணி அத்தை அவரை வறுத்து தாளித்து கொண்டிருக்க, மூர்த்தி தர்மசங்கடத்தில் நெளிந்தார்.
⚜⚜⚜
'ஹாய்! ஹாண்ட்ஸம் ஆங்க்ரி பேர்ட்' என்ற மெஸேஜை பார்த்து லேசான புன்னகை மலர்ந்தது விஷ்வாவின் முகத்தில்.
அவனிடமிருந்து பதில் இல்லாததால், 'என் கோவக்கார புருஷா, நான் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சு. நீ எங்க இருக்க' அவன் வீட்டில் இல்லாததால் அவன் உடல் மற்றும் மன நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள மெஸேஜ் அனுப்பி கொண்டிருந்தாள்.
'காலேஜ் எப்படி போச்சு? செமஸ்டர் ஷெட்யூல் குடுத்துட்டாங்களா?' என்று பதில் அனுப்பினான்.
'எப்படி வித விதமா காம்ப்ளிமெண்ட் பண்ணி, ஆசையா செல்ல பேரு வச்சு கூப்பிடுறேன். உருப்படியா பதில் சொல்றியா நீ? சுத்த வேஸ்ட்!' என சலித்து கொள்ள.
'நிச்சயதார்த்த ஏற்பாடு பாக்கி இருக்கு டா அதை முடிக்க வெளிய போயிட்டு இருக்கேன். வீட்டுக்கு வந்துட்டு பேசவா?'
'சரி அவசரம் இல்லை. வந்தப்புறம் பேசு. உன் கை காயம் எப்படி இருக்கு?''
என்று அவனிடம் கூறினாலும் கொஞ்சம் முகம் வாடி தான் போனது.
'ம்ம்ம்... பெட்டர்! நீ குடுக்க வேண்டியதை குடுத்தா இன்னும் வேகமா குணமாயிடும்'.
'ஓ! என் ஆசிகள் தானே அது நிறைய இருக்கு, நீ சீக்கிரமாவே குணமாயிடுவ' பதில் அனுப்பிவிட்டு பெருமையாக சிரித்து கொண்டாள்.
'கேடி மாட்டி விடவா ப்ளான் போடுற? நான் யாரு?' என இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டாள்.
அர்ஜுன் வாகனத்தை ஒரு கடை வாயிலில் நிறுத்தி விட்டு அவனை காரில் இருக்குமாறு கூறி சென்றதும் அவளை அழைத்தான். ஆவலாக அவன் அழைப்பை ஏற்றவளின் பேச்சு ஹலோவோடு தடைபட்டது.
"ஹலோ மை ஹாட் பொண்டாட்டி" என்ற அவனின் கொஞ்சல் அழைப்பில் பேசாமடந்தையாகி போனாள்.
....
மேலும் அவளை சீண்டும் நோக்கில்,
"என்ன ஜானு ஒரே சைலன்ஸ்? ஓயாம வாய் அடிச்சிட்டு இருப்ப, இப்ப என்ன சத்ததையே காணோம்?"
....
"பேசுடீ என் அழகு ராட்சசி" என கொஞ்சினான் அப்பொழுதும் அமைதி.
கிரங்கிய குரலில், "பேபி அந்த வாய் மூடுறது ஒரே ஒரு ரீஸன்ல தான் இருக்கணும்" என்றான் உள் அர்த்ததோடு.
'பூரி உஷார்! என்னமோ உள் குத்தோட சொல்றான் ஆனா என்னனு தான் புரியலை' என்று யோசித்தாள்.
"என்ன செல்லம்மா, நானும் காம்ப்ளிமெண்ட் தான பண்ணேன், நீயும் தான் பதில் சொல்ல மாட்டேங்குற" என்று ஏக்கம் நிறைந்த குரலில் கூறினான்.
கொஞ்சம் சுதாரித்தவள், "இதெல்லாம் காம்ப்ளிமெண்டா சிவா?" என்றாள் சுருதி இறங்கிய குரலில்.
"இல்லையா பின்ன? நீ ஹாண்ட்ஸம், கோவக்கார புருஷான்னு கூப்பிட்ட உன் கண்ணுல அதான் பட்டுச்சு. நான் என் கண்ணுல பட்டதை சொன்னேன்" என்றான் சர்வ சாதாரணமாக தான் 'ஹாட் பொண்டாட்டி' என அழைத்ததை மனதில் வைத்து.
"என்னை பாத்தா ராட்சசி மாதிரி இருக்கா டா உனக்கு?" என்றாள் பரிதாபமாக.
பெரிதாக சிரித்து விட்டு, "செல்லம் நீ செம ஸ்வீட் டீ" என்றான்.
'ஹாட் பொண்டாட்டினு சொன்னதை வச்சு சண்டை போடுவானு பாத்தா, ராட்சசி னு சொன்னதுக்கு வருத்த படுறா. இவளை...' என மனதில் நினைத்து ரசித்து, உரக்க சிரித்தான்.
அவன் இதுவரை இப்படி சத்தமாக சிரித்து கேட்டிராத பூரணிக்கு அதிசயமாக இருந்தது. அதுவும் அவன் இப்போது கோவமாக இருப்பான் என்று எண்ணிய நேரத்தில் அவன் மனம் விட்டு சிரித்ததில் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. இருவருமே சில நிமிடங்கள் அமைதி காக்க.
"சிவா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... நீ எப்படி ரியாக்ட் பண்ணுவ தெரியலை.."
"சொல்லு ஜானு, நேத்தி மொட்டை மாடி மீட்டிங்க் ரிப்பீட் பண்ணணுமா?" என்றான் குதூகலமாய்.
"டேய்! உதை வாங்க போற நீ." எச்சரித்துவிட்டு, "நடுவுல பேசாத நான் சொல்றதை முழூசா கேளு. கோவப்பட கூடாது.."
"ஓகே கோவ படலை"
"முதல்ல நீ எனக்கு சத்தியம் பண்ணி குடு யார்கிட்டேயும் கோப பட மாட்டேன்னு" என்றாள்.
"உன் கிட்ட சொன்னா சொன்னது தான். அது சத்தியம் பண்றதுக்கு சமம். மீற மாட்டேன் " என்ற குரலில் உறுதி தெரிய.
"வந்து...எனக்கு தெரியும் கல்யாணி பாட்டி அவங்க ஃபேமிலி இங்க இருக்குறதுல நீ அப்ஸெட்டா இருப்ப. போன வாட்டி அவங்க வந்தப்ப...
இப்ப அந்த மாதிரி எதுவும் பண்ணாத சிவா ப்ளீஸ். சுகந்தியும் அர்ச்சுணாவும் நீ இல்லாம எங்கேஜ்மென்ட் பண்ணிக்க மாட்டாங்க. பெரிய அம்முவும் நீ எங்கேஜ்மென்ட்க்கு வராம போயிடுவியோனு பயப்படுறாங்க. என் பெரியவன் இல்லாம சின்னவனுக்கு எப்படி நிச்சயம் பண்ணுவேன்னு அழுதாங்களாம்.
இந்த ஒரு வாட்டி சிவா, நீ எல்லாத்தையும் ஒதுக்கி வை - அர்ஜுன் சுகந்திக்காக. ஏற்கனவே இதுங்க ரெண்டும் என்னால கல்யாணத்தை தள்ளி போட்டு, எனக்கு ஒரே கில்டியா இருக்கு, இப்ப அந்த பழி உன் மேலயும் வேண்டாம் டா ப்ளீஸ்" என அழாத குறையாக கெஞ்சினாள்.
சற்று நேரம் அமைதி காத்தான் விஷ்வா அவன் பதில் கூற எடுத்துக்கொண்ட நேரத்தில் பூரணியின் இதயத் துடிப்பு எகிறி கொண்டிருந்தது.
"நான் கண்டிப்பா எங்கேஜ்மென்டுக்கு வருவேன். யாருக்காகவும் நான் என் தம்பியையும் என் குடும்பத்தையும் விட்டு குடுக்க மாட்டேன். ஓகேவா? ஹாப்பியா? நான் ஆல்ரெடி டிசைட் பண்ணது தான். இதுக்கா இவ்வளவு பில்ட் அப்? இல்லையே வேற ஏதோ இருக்கே?" என்றான்.
" ஹி...ஹி..ஹி... அது எப்படி கரெக்டா நான் சொல்லாம தெரிஞ்சு கிட்ட?" என அசடு வழிந்து,
"ஒண்ணுமில்லை... கொஞ்சம் உனக்குள்ள இருக்கிற மிஸ்டர் ஹல்குக்கு ரெண்டு நாள் லீவு குடேன். அவங்க இங்க தான் இருக்காங்க நேருக்கு நேர் பாக்கற மாதிரி இருக்கும்; பங்ஷன்ல, வீட்டுல.. அப்படி பாக்கும்போது எதுவும்..." முடிக்க முடியாமல் மென்று விழுங்கினாள்.
அவன் அமைதியாக இருக்க, "ஸாரி சிவா நான் ரொம்ப உரிமை எடுத்துக்கறேனோ" என கொஞ்சம் குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.
"கொஞ்சம் கஷ்டம், ஆனா உனக்காக டிரை பண்றேன்" மிகவும் பெருந்தன்மையோடு "ஆனா.." என கொக்கி போட்டு நிறுத்தினான். "ஒரு கண்டிஷன் செல்லம்மா, நான் சொல்றதுக்கு நீ ஒத்துகிட்டா நீ சொல்றதை நான் கேப்பேன். சரியா?"
"என்ன்ன கண்டிஷன்?" என்றாள் பதட்டமும், சந்தேகமுமாய்.
"இன்னிலேந்து ஆரம்பிச்சு, சன்டே நைட் வரை, நீ என்னை நேர்ல பார்த்தாலும், போன்ல பேசினாலும் மாமா னு தான் கூப்பிடணும். அப்புறம் நான் நேர்ல பாக்கும் போது கேட்டது...அதுவும், நான் கேட்கும் போதெல்லாம் குடுக்கணும்" என விஷமமாக சிரித்த படி கூற அவள் விழி பிதுங்கி நின்றாள்.
"ஐயோ இது ரொம்ப ஓவர்! நான் மாட்டேன்" என பதற
"ஏன்டீ நான் உன்னை ஆசையா ஜானு, செல்லம்மானு வாய் நிறைய கூப்பிடுறேன்ல அப்படி கூப்பிடுறது பிடிச்சிருக்கா இல்லையா?" என்றான் பதில் தெரிந்து கொண்டே.
"ம்ம்ம்..பிடிச்சிருக்கு.." என்று நாணத்தோடு உண்மையை ஒத்துகொள்ள.
"அப்ப நீயும் என்னை ஆசையா மாமானு கூப்பிடு ஜானு, எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என் பொண்டாட்டி ரொமான்டிக்கா பேசணும்னு? ஹுஹும்ம்ம்... இதெல்லாம் பக்கத்துல இருந்து உன் அழகு முகத்தை பாத்துகிட்டு பேசணும். நீ சிரிக்கிறது, வெட்கபடுறது, கோவப்படுறது, குழந்தை மாதிரி மூஞ்சிய வச்சிட்டு பிடிவாதம் பிடிப்பியே இதை எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்து பேச வேண்டிய விஷயம், இப்படி போன்ல conference call மாதிரி பேசிட்டு இருக்கோம்" என்றான் ஏக்கமாக.
அந்த மாயவன் வீசிய காதல் வலையில் சிக்கினாள், ஒரு முறை மனதில் அழைத்து பார்த்து விட்டு, "சரி மாமா" என்று சொல்லிவிட்டு சட்டென தன் முகத்தை ஒரு கையால் மூடிகொள்ள.
"Ooofff... ஜிவ்வுனு இருக்கு ஜானு கேட்கும் போதே" பூரித்து போனான்.
"ஆமா வெட்க படுறியா ஜானு? சரி... இரண்டாவது கண்டிஷன்?" என்ற கொக்கியை வீச
"ஐயோ அதுல ஒரு சின்ன சேஞ்ஜ் மட்டும் அப்ளை பண்ணு. நேர்ல்ல பாக்குறப்ப எல்லாம் இல்லை, ஒரு தடவை மட்டும். ஓகே?"
"இந்த போங்கு ஆட்டம்லாம் செல்லாது. அன்னிக்கு பேசும் போது நேர்ல பாக்கும்போது நீ சொல்றதை கேக்கறேன் னு ஒத்துகிட்ட, உன் மெஸேஜை படி. நீ ரெண்டு கண்டிஷனுக்கும் ஒத்துகிட்டா ஓகே. இல்லைனா..."
சுகந்தி கதவை தட்டி எட்டி பார்த்து, "உன்னை அம்மா கூப்பிடுறாங்க டீ" என்றாள் ரகசிய குரலில்.
இரு என சைகை காட்டிவிட்டு
"அத்தை கூப்பிடுறாங்க, ப்ளீஸ் சிவா..." என மன்றாடினாள். காதல் மனம் மெல்ல அவன் பக்கம் சரிந்தாலும் பெண் உள்ளம் சற்றே பதறியது.
"பாரு மாமா னு கூட சொல்ல மாட்டேங்கற. சீக்கிரம் அர்ஜுன் வேற வரான். நீ ஒத்துகிட்டா சரி இல்லைனா ஆங்கிரி பேர்ட் தான்.. என்ன?" என அவசரப்படுத்தவும்.
"சரி மாமா, ஆனா மத்தவங்க முன்னாடி எப்படி மாமானு கூப்பிட? நீயும் நானும் தனியா இருக்கும் போது மட்டும் தான் மாமானு கூப்பிடுவேன். சரியா?" என அவள் வெகுளியாய் கூற.
"சரி போனா போகுது, ஒத்துக்கறேன்" என்றான் சிரித்தபடி.
"சரி ஈவ்னிங் ஷம்மு வீட்டுக்கு வா டா செலலம்மா, உன்னை பாக்கணும் போல இருக்கு" என்றான்.
"ஐயோ சன்டே பூஜை முடியும் வரைக்கும் முடியாது மாமா".
"ஏய் அது அர்ஜுனுக்கும் சுகந்திக்கும் தான? நமக்கு என்ன?"
"ஜோசியர் உனக்கும் ஆபத்து ஏற்பட்டு தப்பிச்சதால உனக்கும் சேர்த்து வேண்டிக்க சொல்லி சொன்னாராம். சன்டே பூஜை உனக்கும் சேர்த்து தான். அத்தை உனக்காக விரதம் இருக்க முடியாது சுகர் இருக்குறதாலன்னு அம்மு ஃபீல் பண்ணாங்க. அதனால நான் விரதம் இருக்கேன். ஆனா சுகந்தியை தவிர வேற யாருக்கும் தெரியாது. இப்ப கூட கோவிலுக்கு போக தான் சுகு கூப்பிடுறா. நான் போட்டா மாமா?"
அவள் சாதாரணமாக சொல்லி முடிக்க அவன் மனதில் பெரும் பாரம் ஏறியது.
"விரதம்னா, என்ன சாப்பிட்ட நீ?"
"அதுவா அரிசி சேர்ந்தது எதுவும் சாப்பிட கூடாதாம். அதனால காலேஜுக்கு ஃப்ருட்ஸ் எடுத்துட்டு போனோம். நைட்டும் நாளைக்கும் அம்மாவுக்கு தெரியாம எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை. சரி நான் கோவிலுக்கு கிளம்பறேன். நீ பத்திரமா வீட்டுக்கு வந்துரு. லவ் யு மாமா" என்று விட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டாள்.
கண் கலங்கி உட்காரந்திருந்தவனை அர்ஜுன் உலுக்கினான்.
"விச்சு என்ன ஆச்சு?"
"எனக்கும் சேர்த்து பரிகாரம் பண்ணணும்னு ஜோசியர் சொன்னாராம். அம்மாவால விரதம் இருக்க முடியாதுன்னு இவ இருக்கா டா" என்றான்.
"பூரியா?"
தலையை மட்டும் அசைத்தான் விஷ்வா.
"இந்த பொண்ணுங்க என்ன ஒரு ஸ்பெஷல் க்ரியேஷன் டா!"
அர்ஜுன் மனதில் அன்னையும் சுகந்தியும் நிழலாடினர்.
பெற்றோர், உடன்பிறப்புகள், கணவன், அவர் குடும்பம், பின் பிள்ளைகள், பேரன் பேத்தி என எல்லாரையும் இணைத்து இதயத்தில் வைத்து அன்பு பாராட்டி ஒவ்வொரு நொடியிலும் அவர்களுக்காக வாழ்ந்து, எங்கிருந்து தான் இவ்வளவு அன்பு சுரக்கிறதோ அவர்களுக்கு? பெண்கள் மன ஆழம் கண்டுபிடிக்க இயலாது என கூறியது இதனால் தான் போலும், கொடுத்து கொடுத்து வற்றாத அட்சயபாத்திரம் போல் அவர்களிடம் அன்பு குறைவதே இல்லை.
பத்மா சுகந்தி மற்றும் பூரணியை அழைத்து கொண்டு கீழே வர, காவேரி இரண்டு பெண்களையும் கண் கொட்டாமல் புன்னகையோடு பார்த்தவர் "தங்கம் ரெண்டும்" என கன்னம் வழித்து கொஞ்சினார்.
கல்யாணியும் வெளியே வந்தார். இரண்டு பெண்களையும் ஏற இறங்க பார்த்தவர் "கோவிலுக்கு தானே என் பேர பசங்களையும் கூட்டிட்டு போங்க" என்றார். அனைவரும் செய்வது அறியாமல் விழித்தனர்.
"அம்மா முன்னாடியே சொல்லியிருந்தா நான் டாக்ஸி புக் பண்ணியிருப்பேன். என் கார் சின்னது. சௌகரியமா உட்கார முடியாது. நாளைக்கும் வேண்டுதல் இருக்கு. நான் டாக்ஸி புக் பண்ணிடுறேன், வீட்டுக்கு பெரியவங்க நீங்களும் வாங்க" சுரேஷ் பணிவாகவும் அதே நேரம் அவரை உயர்த்தி பேசவும் உள்ளம் குளிர்ந்த கல்யாணி அம்மாள்.
"நீங்க சொல்றதால ஒத்துக்கறேன் சம்மந்தி. நல்லபடியா போய்ட்டு வாங்க" என சமாதானமாக உள்ளே சென்றார்.
இது புயலுக்கு முன் அமைதியா அல்லது உண்மையிலேயே கல்யாணி திருந்திவிட்டாரா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
Word count: 2770
Date Published: June 23, 2022
〰️〰️〰️〰️
வணக்கம் தோழமைகளே!
அப்டேட் லேட் ஆனதுக்கு மன்னிக்கணும் 🙏
ஏறத்தாழ ஒரு மாதம் அல்லது அதற்கும் மேல இந்த பக்கம் வர முடியாத சூழல்.
நம்ம எல்லாருக்கும் பர்சனல் லைப் தானே முதன்மை அந்த காரணம் தான் வாட்பேட் பக்கம் வராததுக்கு. பொறுமையா காத்திருந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. 🙏❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro