Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 29

Date published: 10 April 2022
Word count: 2730

✴✴✴✴

அர்ஜுன்" என்ற மூர்த்தியின் குரலை கேட்டு அனைவரும் அவரை பார்க்க.

"மருமக ரொம்ப பயந்துட்டா போல இருக்கு. சமாதானம் பண்ண முடியலைப்பா. நானும் பேசி பாத்துட்டேன், சாப்பிடவும் மாட்டேங்குறா. நீ கொஞ்சம் போய் பேசி, சமாதானம் பண்ணு டா. ஓயாம அழுது உடம்புக்கு எதாவது ஆகிட போகுது" என்றார் தவிப்புடன். அர்ஜுன் சட்டென எழுந்து வெளியேறினான். "அர்ஜுன்" அவர் மீண்டும் அழைக்க "மன்னிச்சிரு டா". தளர்வாய் நடந்து ஸோபவில் அமர்ந்தார்.

"அப்பா! என்ன பா... நீங்க ஏன் பா..." என குரல் தழுதழுக்க அருகே வந்து அவர் கையை பிடித்து கொண்டான். தன்னிச்சையாக அன்னையின் புரம் அவன் கண்கள் திரும்ப அவரும் கண்கலங்கி நின்றிருந்தார்.


"இல்லைடா, நான் இன்னும் கூட கேர்ஃபுல்லா இருந்திருக்கணும். உன் ஜாதகத்துல இப்படி ஒரு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் நான் இதை லைட்டா எடுத்திருக்க கூடாது. ஸாரி அர்ஜுன்!" என்றார் மகனின் கண் பார்த்து பேச முடியாமல் தலையை தாழ்த்தினார்.


கம்பீரமாகவே பார்த்த தந்தை தலை குனிந்து இருப்பதை பார்க்க வேதனையாக இருந்தது. சரேலென அவரை அணைத்து கொண்டான் அர்ஜுன்,
"பா ப்ளீஸ் நீங்க இப்படி இருக்காதீங்க பா. யாரோ பண்ண தப்புக்கு நீங்க என்ன செய்வீங்க? அது தான் விபரீதம் எதுவும் நடக்கலையே. ஏன் கில்டியா ஃபீல் பண்றீங்க? நேர்மையாகவும் உண்மையாவும் நடக்க உங்க கிட்டேந்து தான பா கத்துக்கிட்டேன். கம்பெனி டைரக்டர்ல இருந்து எல்லாரும் என்னை அவ்வளவு பாராட்டுனாங்க அந்த பெருமை உங்களை தான் பா சேரும். சுகந்தி கொஞ்சம் பயந்த சுபாவம், ஆனா புரிஞ்சுக்குவா, நான் பேசறேன். நீங்க கில்டியா ஃபீல் பண்ணாதீங்க. விச்சு.." என்று அவனை அழைக்க.

நீ போ என சைகை காட்டி அவர் அருகே உட்கார்ந்தான் விஷ்வா.

மாடிக்கு சென்ற அர்ஜுன், "மாமா.. " என தயங்கி வாயிலில் நின்றான்.

"அர்ஜுன்" எழுந்து வந்து அவனை ஆரத் தழுவிகொண்டார் சுரேஷ். 
"ஆர் யூ ஓகே?" ஆமோதிப்பாய் தலையசைத்தான். பத்மாவும் அழுதிருந்தார் என்பது பார்த்தவுடன் புரிந்தது. இருவரிடமிருந்தும் நிம்மதி
பெருமூச்சு வெளியேறியது.

அவர்கள் குல தெய்வகோவில் பிரசாதம் என திருநீறு பூசிவிட்டார் பத்மா அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி கூறியபடி.

"என்னை மன்னிச்சிடுங்க. தப்பு நடக்கும் போது பாத்துட்டு பேசாம இருக்க முடியலை. நேர்மையான மனுஷனா வளர்த்துட்டாரு அப்பா இன்னைக்கு நடந்தது அதுக்கான விளைவு" என்றான்.

கார்த்தி அவனை அணைத்துகொண்டு "மாம்ஸ் யூ ஆர் மை ஹீரோ, ரியல் லைப் ஹீரோ நீங்க ரெண்டு பேரும். உங்களுக்கு ஒண்ணும் ஆகாதுன்னு தெரியும் மாம்ஸ்".


"பத்திரிக்கை துறையும் இது மாதிரி தானப்பா. ஆரம்ப காலத்துல நானும் இது மாதிரி நிறைய ஃபேஸ் பண்ணியிருக்கேன். ஆனா பொண்ணோட வாழ்க்கைனு வந்தவுடனே என்னமோ உடம்புல இருக்கற தைரியம், தெம்பு எல்லாம் வத்தி போன மாதிரி ஆயிடுச்சு. எனிவே கொஞ்சம் கவனமா இரு" என்றார் சுரேஷ் அவன் கை பற்றி.

"சுகந்தி உள்ள இருக்கா அர்ஜுன். போய் பேசு" என்றார் சுரேஷ்.

"சரி மாமா. அத்தை சாப்பாடு போட்டு குடுங்க தட்டுல. நான் அவளை சாப்பிட வைக்கிறேன்" அவர் உடனே உள்ளே சென்று எடுத்து வந்தார்.
"நீங்க எல்லாரும் சாப்பிடுங்க" என்றவன் உள்ளே சென்றான்.

ஜன்னல் அருகே நின்றிருந்தாள் சுகந்தி.
தட்டை மேஜை மீது வைத்து விட்டு அவள் அருகே சென்றான். அவளை தன் பக்கம் திருப்பி அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தினான். அழுகையின் மிச்சம் விசும்பலாய் இன்னும் இருந்தது, கண்கள் சிவந்து வீங்கி, முகமெல்லாம் வாடி, வலித்தது அவளை பார்க்கையில். அவள் கண்கள் அலைபாய்ந்தது, அவன் நலமாக இருப்பதை பார்த்து தெளிந்து கொண்டவுடன் பயமும் நிம்மதியும் போட்டி போட்டு அழுத்த அவன் மார்பில் சாய்ந்து அழுதாள். விட்டால் காணாமல் விடுவானோ என்ற பரிதவிப்பிலும் பயத்திலும் அவன்  சட்டையை இறுக பற்றிகொண்டாள்.

நான்கு வயது குட்டி பெண்ணாக இந்த வீட்டிற்கு அவள் வந்தபோது சில நாட்களில் இவன் பள்ளியிலேயே சேர்த்துவிட பட்டாள். மிரண்ட பார்வையும், கண்ணில் தேங்கிய கண்ணீரும், குழிவிழும் கன்னங்களும், படிய வாரிய ரெட்டை குடுமியுமாக அவளை முதன் முதலில் பள்ளி சீருடையில் பார்த்தபோது புதிய சூழலில் பரிச்சையமான முகமாக அவன் மட்டும் இருக்க அர்ஜுன் என அழைக்க வராமல் மழலையாய் அஜ்ஜு என்று அவன் கையை பற்றி கொண்ட அந்த குட்டி பெண்ணாக தான் இப்போதும் அவன்  கண்ணுக்கு தெரிந்தாள்.

"அழகிமா! ஏன் டா? கஷ்டமா இருக்கு அழாத டீ." மற்றவர்களுக்கு சமாதானம் கூறினாலும் தான் எப்படி பட்ட பேராபத்திலிருந்து தப்பித்திருக்கிறோம் என்பதை உணராமல் இல்லை அவன். இன்று விபரீதம் நேர்ந்திருந்தால், இவளை பிரிய நேர்ந்திருக்குமே என்ற பயம் பிடித்துகொண்டது.

"ஏன் டீ இந்த அரை லூஸு பையனை லவ் பண்ண? உன்னை அழாத பாத்துக்கறேன்னு சொல்லிட்டு நீ அழ நானே காரணமாயிட்டேன் இல்ல?"  மிக சிரமப்பட்டு தடுத்த கண்ணீர் அவன் குரலை கேட்டதும் தன்னிச்சையாக மீண்டும் இருப்பை காட்டியது. விரலால் வருடி அதை துடைத்தவன்,

"நான் போடுற மொக்கைக்கு எல்லாம் சளைக்காம சிரிக்குற, இருபத்தி அஞ்சு வயசாகுது இன்னும் சீரியஸ்னெஸ் இல்லாம இப்பவும் ஸ்கூல் பையன் மாதிரி விளையாட்டு தனமா இருக்கிறவனை எப்படி நம்பறே? இப்ப கூட உன்னையோ உன்னை பெத்தவங்களையோ என்ன சொல்லி சமாதானம் பண்ணுறதுனு தெரியலை, இப்படி ஒரு மக்கை எதுக்கு டீ லவ் பண்ண?"

அவன் இதயத்தின் பாரம் ஏற, அவன் கன்னத்திலும் கண்ணீர் உருண்டோடியது.
"உண்மையாவே நான் உனக்கு தகுதியானவனானு பயமா இருக்கு அழகிமா. என்னால உன் லைப் பாழாகிடுமோன்னு..." அவள் கண்களில் தொலைந்து பேசும் சக்தியை இழந்தான்.  "அழகிமா ஸாரி.." குரல் கரகரத்தது.

"உலகத்துலயே ரொம்ப தூய்மையான ஒரு ஜீவனை என்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க உன்னை எப்படி பாதுகாக்க போறேன். உன் பெத்தவங்க அளவு என்னால அன்பு செலுத்த முடியுமா? உன்னை சந்தோஷமா வச்சிக்க முடியுமா?" என கவலையும் கேள்விகளும் அவனை சூழ்ந்து கொண்டு பயமுறுத்த அதை வெளிப்படையாகவே அவளிடம் கொட்டித்தீர்த்தான்.

சில வினாடி கண்கொட்டாமல் அவனை பார்த்த சுகந்தி  தன் துப்பட்டாவை கொண்டு அவனது கண்ணீரை துடைத்தாள்.

"ஆம்பிளைங்கிற ஈகோ இல்லாம இவ்வளவு இயல்பா உன்னோட நிறை, குறை எல்லாத்தையும் ஓப்பனா பகிர்ந்துக்குற பாரு. இந்த குணம் எத்தனை பேருட்ட அஜ்ஜு இருக்கு?" அண்ணாந்து அவன் முகத்தை பார்த்து

"நீ போடுறது மொக்கையா இருந்தாலும் உன் இன்டென்ஷன் உண்மையானது. எல்லாரையும் எப்பவும் சிரிக்க வெச்சு பாக்கணும். உனக்கு பொறுப்பு இல்லைனு என்கிட்ட சொல்லாத. நம்ம ரெண்டு ஃபேமிலிக்காக நீ என்ன வருங்கால ப்ளான் வச்சிருக்கனு எனக்கு தெரியாதா? பூரணியை தங்கச்சியா நினைச்சிருக்குறது மட்டுமில்லை அவளுக்கு ஸ்கூல் டேஸ்லேந்து  நீ  சேவிங்க்ஸ் போட்டுட்டு வரதும் எனக்கு தெரியும்.

என் கஸின் சொன்னான், கார்த்தி சொன்னானாம் லவ் பண்ணா அர்ஜுன் மாமா மாதிரி இருக்கணும், சின்சியரா அக்காவை லவ் பண்ணாரு, பெரியவங்க பர்மிஷன் வாங்கி,  நல்ல வேலைல சேர்ந்து தன்னை தகுதியானவனா நிரூபிச்சி அக்காவை கல்யாணம் பண்றாரு அப்படீன்னு" நிமிர்ந்து அவன் கண்களை பாரத்தவள் "அண்ணா இதை எங்க ரிலேஷன்ஸ் மத்தியில சொல்லும் போது எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா?"
அவள் கண்களில் சந்தோஷமும் பெருமையும் மின்னியது.

"குடும்பத்துல எல்லார் மேலையும் ஒரே மாதிரி பாசம் வெச்சிருக்க. நண்பர்களோ, குடும்பமோ அவங்க சந்தோஷத்துக்காக எதையும் செய்வ. இந்த மாதிரி மனசு எத்தனை பேருக்கு டா இருக்கு? இப்படி ஒருத்தனை நான் லவ் பண்ணாம இருந்தா தான்டா ஆச்சரியம். ஏன்னா நான் என் வாழ்க்கை துணையா எதிர்பார்த்ததும் இந்த மாதிரி ஒருத்தனை தான். நீ எனக்கே எனக்காக ஸ்பெஷலி மேட் பீஸ் டா அழகா"
என்று அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, இன்ப அதிர்ச்சியில் உறைந்தான் அர்ஜுன்.

வழக்கமாக நெருக்கமான தருணங்களை அவன் கோரும் போது தயங்குபவளே இன்று முதல் அடியை எடுத்து வைக்க, "உன்னோட ரைட்ஸை பதிவு பண்றியா டீ அழகி?" என அவன் கண்ணடித்து அணைப்பை இன்னும் இறுக்கினான்.

"எனி அப்ஜெக்ஷன்  டார்லிங்க்?" என்று கேட்டு அவனுக்கு அதிர்ச்சி அளித்தவள்,
"ஐ லவ் யு அஜ்ஜு" என்று மேலும் அதிர்ச்சி அளித்து பின் இதழ் முற்றுகையால் பேரின்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினாள். மூச்சிறைத்து இருவரும் பிரிய,

"நான் அழுது நீ இப்படிலாம் சமாதானம் பண்றதா இருந்தா நான் மெகா சீரியல் பாத்து கூட அழ தயார் டீ" மீண்டும் அவளை நோக்கி குனிந்தான்.

"போடா" வெட்கம் தாளாமல் அவன் தோளில் முகம் புதைத்தாள்.

"ஏய் ஐயோ கதவு!" என்றான் போலி பதட்டத்தில்.

"டேய் கேடி! நீ வந்தவுடனே கதவு பூட்டினது எனக்கு தெரியாதுனு  நினைச்சியா?" என்ற படி போய் கை கழுவி விட்டு சாப்பாடு தட்டை எடுத்து வந்தாள். "நீ சாப்பிடலை இல்ல அஜ்ஜு?"

அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.
"முதல்ல எனக்கு பதில் சொல்லு. ஏன் இவ்வளவு அழுத?" என்றான். அவள் இடையை வளைத்து மடியில் இருத்தி கொண்டு சாப்பாடு தட்டை வாங்கி மேஜையில் வைத்தான்.

பெருமூச்செறிந்தவள், "நாம பூரணிக்காக கல்யாணத்தை தள்ளி போடுறதுனு யோசிச்சோம், அதுவும் அந்த பிடிவாதத்தை ஆரம்பிச்சது நான். அதுல ஸ்ட்ராங்காவும் இருந்தேன். உனக்கு ஜாதகத்துல கண்டம் இருக்குனு சொல்லியும் நான் பிடிவாதம் பிடிச்சது  தப்பு தான். எனக்கு நீங்க ரெண்டு பேரும் முக்கியம். இன்னிக்கு நடந்ததை பாத்தா எனக்கு உன்னை நினைச்சு கவலையா இருக்கு அஜ்ஜு. நீயா அவளானு யோசிச்சு பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சு. கடைசியில நீ தான்டா ஜெயிச்ச. அப்பா கிட்ட கல்யாணத்தை வேணா இன்னும் சீக்கிரமா வைக்க சொல்லி கேக்கவா?"  கண்களில் மீண்டும் கண்ணீர் கோர்த்து வேதனை ததும்ப நின்றவளை பார்க்கவே வலித்தது அர்ஜுனுக்கு.

"அதை அப்புறம் பாக்கலாம் முதல்ல சாப்பிடு" அவளை படுக்கையில் உட்கார வைத்து ஒரு கவளம் எடுத்து அவளுக்கு ஊட்டினான், அவளும் அவனுக்கு ஊட்ட, அமைதியாக சாப்பிட்டு முடித்தனர். 

"இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரவா அஜ்ஜு? கொஞ்சம் தான சாப்பிட்ட, காலைலேருந்து சாப்பிடலை வேற" அவன் கை கழுவி கொண்டிருக்கையில்.

இல்லை என தலையசைத்தான்
அதிசயமாக பார்த்தபடி,   அம்மாவும் சரியாக கணித்திருந்தார். 'எப்படி தான் இவர்களுக்கு புரிந்து விடுகிறது சொல்லாமலேயே சில விஷயங்கள்? '

உள்ளம் பூரித்தது தன்னவளை நினைத்து. வைத்த கண் வாங்காமல் அவளையே  பார்த்திருந்தான். தன் துப்பட்டாவால் அவன் முகம் துடைத்து அவன் கேசத்தை செல்லமாக கலைத்து "என்ன" என்றாள் அழகாக சிரித்து கொண்டே.

அவளை இழுத்து அணைத்து கழுத்து வளைவில் முகம் புதைத்தான், "நான் ரொம்ப லக்கி டீ அழகி".

"நான் தான் ரொம்ப ஜாஸ்தி லக்கி. இப்படி அழகா, குணமா இன்னசென்டா ஒருத்தன் கிடைக்க" என்றாள்.

"நான் இன்னசென்டன்னு சொன்ன முதல் ஜீவன் நீ தான்டீ"

"அதுல என்னடா சந்தேகம்?"

"நான் இன்னசென்ட் இல்லைனு ப்ரூவ் பண்ணவா" என குறும்பாக அவள் இடது காதில் கிசு கிசுத்தான்.

அவள் கழுத்து வளைவில், தோளில் என தன் மீசையால் மயில்தோகையாய் வருட, அவள் கிறங்கினாள். பின் இடது காதோரம் தொடங்கி, தாடையில், வலது காதோரம், கழுத்து வளைவு, தோள் என முத்தகங்களால் தடயத்தை பதிக்க; கைகள் ஒரு புறம் அவனின் அழகியை அளவெடுக்க தொடங்கியிருந்தது. அவள் தலையை பின் புறமாய் சாய்த்து அவள் தாடையிலிருந்து கீழ்நோக்கி பயணித்து தொண்டை குழியில் ஒரு மெல்லிய முத்தம் கொடுக்க, அவளுக்கு சுவாசம் அங்கேயே சிக்கிக்கொண்டது. உடலில் ஏதேதோ மாற்றங்கள் தோன்றியதும் செய்வதறியாது இன்ப வேதனை கொடுத்தவனையே பற்றுகோலாக பற்றிகொண்டாள். இயற்கையாக ஏற்பட்ட அவளின் உடலின் மாறுதல்கள் அவனுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்க, அவள் இதழை சிறையெடுத்தான். மென்மையான அவனின் இதழ் தீண்டலும், மேனியில் அவன் கைகளின் லீலையும் அவளை பித்தாக்கி கொண்டிருந்தது.

சட்டென தன்னிலை உணர்ந்தவள் அவனை விலக்க முயல, அவன் விலகுவதாய் இல்லை. மிகவும் முனைந்து அவன் கைகளை தன்னிடமிருந்து விலக்கி அவன் மார்பில் கை வைத்து தள்ள, அவன் முகத்தில் இருந்த மாறுதல் இதுவரை அவள் கண்டிறாதது. சட்டென குளியலறையில் புகுந்து முகம் கழுவி தன்னை சரி செய்து கொண்டான் அர்ஜுன்.

வெளியே வந்ததும் முகம் சிவந்து, மூச்சிறைக்க, இன்னும் சிலையென நிற்கும் தன்னவளை பார்த்து,
"இது சும்மா அ னா, ஆவன்னா தான்... இதுக்கே இப்படி இருந்தா கல்யாணம் பண்ணிட்டு எப்படி படிப்ப எக்ஸாமுக்கு?" என்றான் விஷமமாய்.

அர்த்தம் புரிந்து அவள் மேலும் வெட்கத்தில் சிவக்க, கலைந்திருந்த அவள் தலையை கோதி, துப்பட்டாவையும் சரி செய்து விட்டு, "முகத்தை கழுவிட்டு வா டா, நான் கிளம்பறேன். குட் நைட்!" என நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.

விடைபெறும்போது அவள் பெற்றோரிடம் அவன் பேசியது கேட்டது.

"சாப்பிட்டா அத்தை. கொஞ்சம் அப்ஸெட்டா தான் இருக்கா. தூங்கி எழுந்தா சரியாகிடுவானு நினைக்கிறேன். என் மேல இருக்குற அக்கறைல, பயத்துல கல்யாணத்தை சீக்கிரம் வெச்சிரலாம்னு சொல்றா. அவ அப்படி ஏதும் சொன்னா ஒத்துக்காதீங்க மாமா. அவ படிக்கணும். குறிச்ச தேதியிலேயே கல்யாணம் நடக்கட்டும். எக்ஸாம் நேரத்துல அவ எவ்வளவு ஸ்டிரெஸ் ஆவான்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அதுல இந்த கவலையை வேற சேர்க்க வேண்டாம். நான் வரேன்".

✴✴✴✴

"அன்னம்! அது உன் லிட்ரேச்சர் புக் இல்ல டா, எஸ்ஸே எழுதி வைக்காத"
பூரணி  நிமிர்ந்து அன்னையை வெறுமையாய் ஒரு பார்வை பார்த்தாள்.  "இல்ல படிக்கும் போது ஒரு டிரேட் மார்க் கொண்டை போடுவியே அதை வேற போட்டு இருக்கியா மளிகை சாமான் லிஸ்டை வேற உன்கிட்ட குடுத்திட்டேன்..." மாலையிலிருந்து மௌன விரதம் இருக்கும் மகள் வாய் திறக்க ஏதேதோ செய்து பார்த்து பலனில்லாமல் நேரம் தான் கடந்து கொண்டிருந்தது. அவளின் அந்த அமைதிக்கு காரணம் என்னவென்று தெரியாமல் கவலைகொண்டார் கோகிலா.

"நான் ஷர்மிளா அவங்க அம்மாவை பாத்திட்டு வந்திடுறேன்." அதற்கும் பதில் இல்லை, "ஈபி கார்டும், அக்ரீமெண்டு காப்பியும் வாங்கிட்டு வரணும் அப்ப தான் எனக்கு ரெண்டல் அலவன்ஸுக்கு அப்ளை பண்ணமுடியும்". அமைதி!

தொலைகாட்சியை உயிர்பித்து பாடல்கள் ஒளிபரப்பாகும் ஏதோ ஒரு சானல் ஒன்றில் நிறுத்தி, அருகில் இருந்த கதை புத்தகத்தை எடுத்தாள். இரண்டு  பக்கங்கள் கூட வாசிக்க முடியவில்லை, ஏதோ ஒன்று அவளை வருத்த, புத்தகத்தை மூடி வைத்தாள். தொலைக்காட்சியில் பத்மினி சிவாஜியின் கை காயத்தை பார்த்து கண்ணீர் மல்க நலம் தானா என்று துடித்தார், அவரும் கையில் ரத்தம் வடிய ஆம் என தலையசைக்க,  பற்றிக்கொண்டு வந்தது பூரணிக்கு.

வேறு சானலுக்கு மாறினாள், அங்கு வேறு ஏதோ பாடல் ஒலிக்க, எழுந்து ஓய்வறைக்கு சென்று திரும்பியவளுக்கு

'தொட தொட மலர்ந்ததென்ன பூவே  தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன..'

என அரவிந்தசாமி பாடிகொண்டிருக்க திரையிலிருந்து கண் விலக்கமுடியாமல் உட்கார்ந்தாள். 'Situation song..' என மனசாட்சி அவளை பார்த்து சிரித்தது.

அந்த இள வயதில்
ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம்
யார் அழித்தார்
நந்தவன கரையில்
நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை
யார் பறித்தார்

கடந்த கால வாழ்க்கையின் நினைவுகள் அழிந்து போனதன் வலி தலைதூக்கியது.

கோகிலா திரும்ப வரவும் நினைவு கலைந்து, சட்டென எழுந்து குளியலறையில் புகுந்து கொண்டாள்.

இரவு வெகு நேரமாகியும் உறக்கம் வரவில்லை பூரணிக்கு. புது வீட்டில் இரண்டு படுக்கையறைகள். அவளுக்கொன்றும் பெற்றோருக்கு ஒன்றும். பல வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு தனிமை கிட்டியதில் அவளுக்கு சந்தோஷமே. ஆனால் மாலை கேள்விபட்ட செய்தி அவளை வருத்தி கொண்டிருந்தது. அர்ஜுனை இருமுறை அழைத்திருந்தாள் ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது. சைட்டில் நடந்த அசம்பாவிதத்தில் மொபைல் உடைந்திருக்க கூடும் என நினைத்தாள்.

'சிவா எப்படி இருக்கான்னு தெரியலையே.. என்ன பண்றது? யாரை கேட்க?' பேச ஆசை ஆனால் தயக்கம் தடுத்தது.

கைபேசி திரையில் Arjun calling என ஒளிர்ந்தது.

"பூரி? என்ன பேச மாட்டேங்கற?"

"ஒண்ணுமில்லை அர்ச்சு ணா நீ எப்படி இருக்கனு கேக்க தான் போன் பண்ணேன். சைட்டுல நடந்தததை மிலி அக்கா சொன்னாங்க. டாக்டரை பாத்தியா?"

"எனக்கு ஒண்ணுமில்லை டா. விஷ்வா என்னை காப்பாத்திட்டான். அவனுக்கு தான்.."
மீண்டும் அதை கேட்க திராணி அற்றவளாய்.

"சரி உனக்கு ஆபத்து இல்லையே அது கேட்க தான் போன் பண்ணேன். தூங்கி ரெஸ்ட் எடு. நான் வைக்கிறேன்"
புரிந்தது அர்ஜுனுக்கு.

"பாப்பா ஒரு நிமிஷம்!" அவனின் பாசமான அழைப்பு அவளுக்கு தடை போட்டது.

"அவன் எப்படி இருக்கான்னு கேக்க மாட்டியா?"

"யாரு உங்க அண்ணாவா? அவரை பத்தி எனக்கு என்ன? நான் ஏன் கேக்கணும்?"
குரல் கம்ம தொடங்கியது, சிரமப்பட்டு கட்டுபடுத்தி கொண்டாள்.

"அப்போ அவன் போன் பண்ணாலும் பேச மாட்டியா?" என்று சீண்டினான்.

"அவங்க ஏன் எனக்கு போன் பண்ணனும்? என்கிட்ட பேச என்ன இருக்கு? உன் கிட்டயே பேச கூடாதுனு இருந்தேன். ஜஸ்ட் நீ ஸேஃபா இருக்கியானு தெரிஞ்சுக்க ஆசைபட்டேன் அவ்வளவு தான். இதுக்கு மேல எதுவும் இல்லை. இதுக்கு மேல யார்கிட்டயும் பேச விருப்பம் இல்லை. ஆள் ஆளுக்கு அவங்க மனசுல தோணுறதை தான செய்யறீங்க. அவ என்னடானா நான் மென்டல் ஆயிட்டேன்னு தன்னோட கல்யாணத்தை தள்ளி வைக்கணும்னு முடிவு பண்ணுவாளாம் இந்த துரையும் முட்டாள் மாதிரி ஓகே சொல்லுவாராம். பைத்தியமாடா நீங்கள்ளாம்? அப்படியே அடிச்சு மூஞ்சிய பேத்தா என்ன உங்களையெல்லாம்? உன் உயிருக்கு ஆபத்துனு தெரிஞ்சும் ஏன் டா? உனக்கு ஏதா ஆச்சுனா அது என்னால தான், அவ வாழ்க்கை பாழானதும் என்னால தான்னு அந்த குற்ற உணர்ச்சியே என்ன கொன்னுடாதா டா? இல்ல அப்படி நான் குற்ற உணர்ச்சியில சாகணும்னு தான் ஆசையோ உங்களுக்கு?" 

அழுது கொண்டே மடை திறந்த வெள்ளமாய் மனதில் இருந்ததை கொட்டி தீர்த்து கொண்டிருந்தாள்.

"இந்த சம்பவத்துக்கு பிறகு நான் எப்படி எல்லாரையும் ஃபேஸ் பண்ணுவேன்? எத்தனை பேரோட வாழ்க்கைய பாழ் பண்ணுன கில்ட் என் மேல ஏத்துக்க நான்? என்னை சுத்தி இருக்குறவங்க அத்தனை பேரோட வாழ்க்கையும் என்னால எப்படியெல்லாம் பாதிச்சிருக்கு இத்தனை வருஷத்துல?" விஷ்வின் முகம் மனதில் வியாபித்து நின்றது 

"இதுக்கு பேசாம நான் ஆறு வருஷத்துக்கு முன்னாடி கண் முழிக்காமயே இருந்திருக்கலாம்".

"செல்லம்மா.." எனும் வலி நிறைந்த அலறல் அவள் செவியின் வழி புகுந்து இதயம் வரை எதிரொலித்தது. உறைந்து  போனாள்.

கடைசி முறையாக இதே தொனியில் அந்த அழைப்பை அவள் கேட்ட வினாடிகள் நினைவலைகளின் ஆழத்திலிருந்து எதிரொலித்தது.

"சி...சிவா" தொய்ந்து ஒலித்தது
அவள் குரல்.

அவளை அழைத்து ஸ்பீக்கரில் போட்டிருந்தான் அர்ஜுன், விஷ்வாவை வற்புறுத்தி மொட்டை மாடிக்கு அழைத்து போயிருந்தான். அவள் கோபத்தின் உச்சத்திற்கு போனதும் போனை அவனிடம் கொடுத்துவிட்டான்.

"சி..சி..சிவா.." தான் கேட்டது அவன் குரல் தானா என்ற சந்தேகமும் அவனுக்கு தீங்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லையே என்ற ஆர்வமும் மேலோங்கியது.

"நான் என் போன்லேருந்து கூப்பிடுறேன்" என்றவன் இணைப்பை துண்டித்து படிகட்டில் உட்காரந்திருந்த அர்ஜுனிடம் போனை கொடுத்தான். விஷ்வாவின் அழைப்பை ஏற்க மறுத்தாள்.

'பூரி அவன் நீ கால் அடெண்ட் பண்ணலைன்னா பைக் எடுத்துட்டு வெளிய போறேன்னு சொல்றான். ப்ளீஸ் பேசுடீ'

அர்ஜுனின் வாட்ஸ்அப் மெஸேஜை தொடர்ந்து விஷ்வா பைக்கில் அமர்ந்திருக்கும் போட்டோவும் வந்தது. பதறியடித்து அவனை அழைத்தாள்.

அவள் அழைப்பை பார்த்ததும் "ஹாய் ஜானு!" என்று கொஞ்சியபடி ஸ்டைலாக பைக்கில் இருந்து இறங்கி சாவியை தம்பியிடம் வீசி எறிந்து விட்டு உள்ளே போனான்.

"அவ என்னவோ கழுவி தான் ஊத்தபோறா அதுக்கு இவன் என்ன பெரிய டூயட் பாடறா மாதிரி ஸ்லோ மோஷன்ல இறங்கி ஓடுறான்? ஹுஹும்ம்....எல்லாம் நாமளும் பண்ணினது தானே" என வீட்டிற்குள் போய்விட்டான் அர்ஜுன்.

"அறிவு இருக்கா உனக்கு ஒரு கையில கட்டு போட்டுட்டு பைக் எடுக்கற? ஏதா ஆச்சுனா என்ன பண்ணுறது?" என்றாள் ஆத்திரமும் அழுகையும் கலந்து கலந்த குரலில்.

"என்ன அடிபட்டிருக்கும். என்ன இப்ப?"

"சிவா..ப்ளீஸ்.. உன்னை மறுபடியும் இழக்க முடியாது ..." அதற்கு மேல் பேச முடியாமல் அவள் விம்ம...

"ஸாரி செல்லம்மா! ப்ளீஸ், ப்ளீஸ்  ரொம்ப ரொம்ப ஸாரி"  என கெஞ்ச. அவள் அழுதுகொண்டு தான் இருந்தாள்.

"ஜானு! சொல்றதை கேளு"
அவள் விடாமல் அழ. "நீ அழுகையை நிறுத்தலை வீட்டுக்கு வந்துருவேன் இப்ப" என்றான் அதட்டலாக.

"இல்லை. நான் நிறுத்திட்டேன்"

"நீ பேசினது எனக்கு ஹர்ட் ஆகாதா சொல்லு? நீ ரெண்டு நாள் கண்ணு முழிக்கலைன்னு கேள்விபட்டப்போ எவ்வளவு வேதனையா இருந்தது தெரியுமா? நானே செத்து போயிடலாம்னு தோணுச்சு டீ. கோவத்துல என்ன பேசுற?" அவனும் உணர்ச்சிவசப்பட.

"ஸாரி சிவா" விசும்பினாள். "எனக்கு இப்பவே உன்னை பாக்கணும் போல இருக்கு சிவா. ஏன் டா இவ்வளவு லவ் பண்ற என்னை?" அவள் தேம்ப, அவள் உள்ளத்தின் வலி அப்பட்டமாய் தெரிந்தது.

"ஐயோ! செல்லம் இந்த மாதிரி கேட்டா நான் சத்தியமா இப்பவே உன் வீட்டுக்கு வந்துருவேன். சென்னை வந்தப்புறம் உன்னை பக்கத்திலேயே வச்சிட்டு, பாக்காம இருக்க முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு. மொட்டைமாடிக்கு வரியா ஜானு எனக்கும் உன்னை பாக்கணும்".

"அச்சோ அம்மா அப்பா முழிச்சுகிட்டா பிராப்ளம்" பதைபதைத்தாலும் ஒரு ஓரமாக ஆசையாக தான் இருந்தது.

"ப்ளீஸ் மா.. கொஞ்சம் எனக்காக டிரை பண்ணு பேபி. நான் பாவம் தான பேபி" அவனது கெஞ்சல் அவளை கரைக்க தொடங்கியது.

"நீ வரலைன்னா நான் என் மாமனாருக்கு போன் பண்ணி பர்மிஷன் கேட்கறேன்".

"ஐயோ" என அலறினாள்.

"அப்ப மாடிக்கு வா, கொஞ்ச நேரம் பேசிட்டு போ. அன்னிக்கு ப்ராமிஸ் பண்ணது நினைவு இருக்கா? லவ் ப்ரொசிஜர் எல்லாம் ஃபாலோ பண்றதா சொல்லியிருக்க."

'ஐயோ சிக்கிட்டியே டீ பூரி' என நகம் கடித்தாள்.

"என்ன பேபி ஒரே சைலன்ஸ்? வரியா இல்லை மாமனாரை கூப்பிடவா? மிஸ்டர் பரந்தாமன் மிஸ்டர் பரந்தாமன்" என உரக்க அழைப்பது போல பாவனை செய்ததும்.

"டேய் மனசுல பெரிய மௌனராகம் கார்த்திக் னு நினைப்பு. பேசாம இரு டா. ரௌசு தாங்கலை!" பல்லைகடித்து கொண்டு தலையில் கைவைத்தபடி உட்கார்ந்தாள்.

"அப்ப நீ வரேன்னு சொல்லு பேபி.. ரைட் ஹேண்டுல கட்டு போட்ருக்கா ஒரே கைல ரொம்ப நேரமா போன் பிடிச்சுட்டு கை வலிக்குது பேபி அதனால தான் கேட்டேன். சரி.. விடு.." பரிதாபமாய் அவன் கூறியதும் தனது தவறை உணர்ந்தாள்.

"அச்சோ ஸாரி சிவா. ஒரு அஞ்சு நிமிஷம் நான் மாடிக்கு வரேன் இரு."

"எனக்காகவா பேபி நிஜமா? தாங்க்யூ"

அவள் இணைப்பை துண்டித்ததும் குதூகலமாய் சீட்டி அடித்தபடி மொட்டை மாடி சுவற்றில் சாய்ந்து நின்றான், அவள் வரவை எதிர்நோக்கி.

ஓசையெழுப்பாமல் மெல்ல வாயிற் கதவை திறந்து வீட்டை விட்டு வெளியேறினாள் பூரணி.

'ஐயோ இவனுக்காக என்னலாம் பண்ண வேண்டியிருக்கு. பேபி பேபின்னு குழைஞ்சு கவுக்குறான் கேடி' சிணுங்கலாக தனக்குள் புலம்பியபடி மாடியேறினாள் பூரணி.

மங்கிய வெளிச்சத்தில் அவன் கையில் இருந்த கட்டு முதலில் அவள் கண்ணில் பட, வேதனை தாளாமல் கண்ணீர் உகுத்தவள் சரேலென ஓடி வந்து "சிவா" என அணைத்துகொண்டாள், அவன் திக்குமுக்காடி போனான்.

அவனிடமிருந்து சிறிது விலகி, கையை தொட்டு பார்த்தவள், "ரொம்ப வலிக்குதா? சின்ன காயம் தான்னு சொன்னான் அர்ஜுன். இல்லன்னா ஏன் இவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்கு? அவனை என்ன பண்ணாங்க? நீ எதும் அடி உதைன்னு சண்டைக்கு போகலையே.." என அவனை பேச விடாமல் தேம்பி அழ.  அவன் விழி அகலாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்.

"சிவா பதில் சொல்லு" என்றாள்.

உள்ளுக்குள் அவள் அன்பில் உருகி கரைந்து போயிருந்தாலும் மெல்ல நினைவுக்கு மீண்டவன், "லவ் யு செல்லம்மா".

அவள் வேகமாக தலையை ஆட்டி "செல்லாது ஒத்துக்க மாட்டேன்" என்றவளை குழப்பமாக பார்த்தான்.

மெல்ல தன் கையை அவன் முகத்தருகே நீட்டி, பாரு என்பதாய் ஜாடை காட்ட மூடியிருந்த அவள் கை விரல்களை பிரித்தான். அவன் பரிசளித்த செயின் மின்விளக்கின் வெளிச்சத்தில் மின்னியது.

திகைத்து நின்றிருந்தான் விஷ்வா. "இது... இது ஜானு..."

"நீயே போட்டுவிடு நான் அப்பறம் சொல்றேன்"

அவன் ஒரு கையால் அணிவிக்க சிரமப்பட்டதும், செயினின் ஒரு முனையை அவள் பிடித்து கொள்ள, அவனை கொக்கி மட்டும் மாட்டிவிட கூறினாள். அவள் கழுத்தில் அந்த செயினை அணிவித்ததும் அவன் முகத்தை ஏறிட்டு "நான் இப்ப உனக்கு யாரு சிவா?"

"என் உசிரு டீ, என் செல்லம்மா, என் ஜானு, என் பொண்டாட்டி டீ.. என்னை விட்டு போகாதடீ ப்ளீஸ்" என அவன் உடைந்து அழுதான்.


"உன் கேள்விக்கு பதில், என்னோட பழைய டைரி கிடைச்சுது. நம்ம கடந்த காலம், நான் மறந்த நம்ம வாழ்க்கையை, நம்ம உறவை பத்தி அதுல எழுதியிருந்தேன். அப்ப தான் இதுவும் கிடைச்சது.  எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரியணும் சிவா... அந்த சம்பவம்.. அதைபத்தி உனக்கு தெரியுமா?"

அவன் எதிர்பார்த்தது தான் அந்த கேள்வி. நடந்தை அவளிடம் விவரித்தான்.

"மெமரி லாஸ் ஆனப்புறம், ஏதோ என் வாழ்க்கையில ஒரு பெரிய பகுதி, உடம்புல ஒரு முக்கியமான அங்கம் பறி போன மாதிரி இருந்தது மாமா, என்னனு எனக்கு புரியலை. எவ்வளவு வேதனை பட்டேன் தெரியுமா?

வேற யாரையும் புருஷனா நினைக்க முடியலை, ஆழ் மனசுல நீ தான் இருந்திருக்க ஆனா அதை உணர முடியாம கல்யாணத்து மேல வெறுப்புனு சொல்லியிருக்கேன். ஏன்னா அன்னிக்கு ஊர்லேருந்து வந்தப்புறம் உன்னை பாத்தேனே அன்னைக்கே நான் விழுந்துட்டேன் டா.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா..."

என நாணத்தில் மெல்ல தலை கவிழ, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள், அவனும் அவள் அணைப்பில் திளைத்திருக்க. அவனின் இதயதுடிப்பும், சீரான சுவாச ஓட்டத்தின் சப்தமும், அவனின் பிரத்யேகமான வாசமும், ஒவ்வொரு நொடியும் மேலும் இறுகும் அவன் அணைப்பும்... அவளை தன் வசமாக்கி கொண்டது. "லவ் யு மாமா".

அவன் சற்று பின்னோக்கி வளைந்து அவள் முகத்தை பார்த்து, "என்னை பாத்து சொல்லு ஜானு" என்றான்.

எப்போதும் சிவகாசி பட்டாசாய் பொரிந்து தள்ளுபவள் இப்போது நிமிர மறுத்து இல்லை என தலையசைக்க. அவள் முகத்தை கையிலேந்தி தன்னை நோக்கி நிமிர்த்தனான்.

"பேபி ப்ளீஸ்..." அந்த குரலில் என்ன தான் மாயமோ நிமிர்ந்து அவன் கண்ணை பார்த்தவள் முழுவதுமாய் தன்னை தொலைத்தாள்.

"லவ் யு மாமா"
சட்டென அவன் சட்டையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட, விஷ்வா இன்பமாக அதிர்ந்தான்.

அவனை விடுத்து விலக போனவளை இடையை பற்றி தன்னிடம் இழுத்தான். அவன் கரம் தீண்டியதும் மின்சாரம் பாய்ந்ததை போல் உணர்ந்தாள். அவனின் அருகாமை அவளை கிறங்கடித்தது.

"பேபி இப்ப நான் குடுக்கவா" என்ற கேள்வியில் சொக்கி போனாள், இமைகள் தானாய் மூட, அவன் தோள்களில் தன் கைகளை மாலையாக்கி நெருங்க, அவள் சம்மதத்தோடு இதழில் தன் முத்திரையை பதிக்க தொடங்கினான். பிரிவின் வலி, அன்பின் ஆழம் என அனைத்தையும் சொல்லிவிட துடிக்கும் வேகம் அவனிடம் இருந்தாலும், அவளை காயப்படுத்தாமல் மென்மையாகவே அவளுக்கு காதல் பாடம் நடத்தினான். மெல்ல அவளை இதழ் சிறையிலிருந்து விடுவிக்க, இன்னும் விழி திறவாமல் மூச்சிறைக்க நின்றிருந்தாள், கண்களின் ஓரம் இருவருக்குமே உவர்நீர் கசிந்த சுவடு.



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro